- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 22 comments and to comment


என்னை படிச்சவங்களுக்கும்....


என்னைய புடிச்சவங்களுக்கும்...


எனக்கு புடிச்சவங்களுக்கும்...

மற்றும் உங்க எல்லாத்துக்கும்....

முக்கியமா உனக்கும்...!

2012 ஆம் ஆண்டின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

வெளியூர்க்காரன். 

Posted by Veliyoorkaran - - 17 comments and to comment

ஓவரா சிகரெட் அடிக்காதீங்க தம்பி...மெடிடேசன் யோகால்லாம் பண்ணுங்க..இந்த பழக்கத்த அடியோட விட்டர்லாம்னு போன வாரம் அட்வைஸ் பண்ண பக்கத்துக்கு வீட்டு கேசவன் சார நேத்து புல் டைட்ல சிகெரெட்டோட  லிப்டுகிட்ட பார்த்துட்டு, என்ன சார் ஆபிஸ் பார்ட்டியான்னு கேட்டதுக்கு அவர் சிரிச்சுகிட்டே சொன்ன பதில்....இல்ல தம்பி என் பொண்டாட்டி ஊருக்கு போயிருக்கா...! 

எல்லா ஆம்பளைங்களுக்குமே பொண்ணுங்கங்கற ஒரு விசயத்த தாண்டி ரசிச்சு அனுபவிக்கரதுக்கு குட்டி குட்டியான விஷயங்கள் நெறைய இருக்குங்க...யாருக்கும் தெரியாம திருட்டு தம்மு, பிட்டு படம், பைக்ல திருகிகிட்டு பறக்கறது , நைட் ஷோ சினிமா , பசங்களோட விடிய விடிய தண்ணியடிச்சுட்டு புல் டைட்ல கதைபேசிகிட்டே வாந்தி எடுத்துட்டு அதுலயே குப்புற படுத்து மட்டையாகறது...இப்டி நெறைய..நல்லா கவனிச்சு பார்த்தீங்கன்னா இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோசங்கள் எல்லாமே அவங்க கல்யாணத்துக்கு முன்னாடி அனுபவிச்சதா இருக்கும்...! கல்யாணத்துக்கு அப்பறம் எதுக்குன்னே தெரியாம பல விசயங்கள காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டு மத்தவங்களுக்காக வாழ ஆரம்பிச்சுடறான்...!

அந்த ஐஸ்க்ரீம் வினாடிகள் கல்யாணத்துக்கு அப்பறம் எங்க போச்சு...? அது திரும்ப கெடைக்குமா.. ஏன்  கெடைக்காது பாஸ்..கண்டிப்பா கெடைக்கும்..தங்கச்சி கல்யாணம், தம்பிக்கு நிச்சயதார்த்தம், அம்மாவுக்கு உடம்பு சரி இல்ல, அப்பாவுக்கு ஹார்ட் சர்ஜரி இப்டி எதாச்சும் ஒரு ரீசன்க்காக டிக்கெட்லாம் போட்டுட்டு ,ஊர்ல காலைல பஸ் ஸ்டாண்டுக்கு அவங்க தம்பிய கார் எடுத்துட்டு வர சொல்லிட்டு , அப்பாவுக்கு சென்ட்டு பாட்டில்லேர்ந்து உளுத்தம் பருப்பு வரைக்கும் அவங்க குடும்பத்துக்கு தேவையான எல்லாத்தையும் வாங்கி அழகா பேக்கிங்க்லாம் முடிச்சிட்டு உங்ககிட்ட வந்து பவ்யமா கேப்பாங்க..."என்னங்க..ஊருக்கு போயிட்டு ஒரு பத்து நாள் இருந்துட்டு வரட்டுங்கலான்னு...!" அப்போ தேவை இல்லாம ஓவர் ஆக்ட் பண்ணி அடி வாங்காம அவங்கள அன்போட பஸ் ஏத்திவிட்டு வாங்க...!

பஸ் ஏத்திவிட்டுட்டு அப்டியே கண்ணை மூடி யோசிச்சு பாருங்க..கிராபிக்ஸ்ல உங்க கைல போட்ருந்த விலங்க உடைச்சு , அவங்க போற பஸ்ஸ ஓட்டிகிட்டு போற டிரைவர் உங்கள  ஜெயில்லேர்ந்து ரிலீஸ் பண்ற மாதிரியே இருக்கும்..அடுத்த பத்து நாளைக்கு நீங்க ஒரு சுதந்திர பறவை..இந்த மாதிரி வாய்ப்பு அடிக்கடி கெடைக்காதும் ஓய்..! ஒரு செகேன்ட் கூட மிஸ் பண்ணாம நீ அனுபவிக்கரதுலதான்காணும் இருக்கு உம்ம சமர்த்து...!


வாழ்க்கைய உங்களுக்கு புடிச்ச மாதிரி கொஞ்ச நாள் வாழுங்க...மனசுக்கு புடிச்சத செய்றவந்தான் ஓய் மனுஷன்...பிரெண்ட்ஸ வீட்டுக்கு கூப்ட்டு புல்லா தண்ணியடிச்சிட்டு. சிகரெட்ட ஊதி தள்ளிகிட்டு விடிய விடிய கதை பேசிட்டு விடியகாலைல நல்லா திக்கா ஒரு நாத்த வாந்தி எடுத்துட்டு அதுலயே குப்புற விழுந்து தூங்குவிங்க தெரியுமா....அதுல சாந்தி அடையும்யா ஒரு ஆம்பளையோட ஆத்மா... அதான் ஓய் ஜாலி..உனக்கு தண்ணியடிக்கற  பழக்கம் இல்லையா..அடிக்க கத்துகிட்டு வாந்தி எடு...வயறு வலிக்க வாந்திய எடுத்து அனுபவிச்சாதான்யா தெரியும் அந்த சொகம்..! இதத்தான்  திருவள்ளுவர் அப்பவே சொன்னாரு..


"வாந்தி எடுத்து வாழ்வாரே வாழ்வார், மற்றோரெல்லாம்,"

" வயறு வீங்கி சாவார்" ன்னு...! 


எல்லா ஆம்பளைங்களும் இப்புடிதானா...ஒருத்தன் கூட நல்ல புருஷன் இல்லையான்னு தாய்குலங்கள் பதர்றது எனக்கு புரியுது....ஒபாமாலேர்ந்து நம்ம எதிர்க்கட்சி தலைவர் வரைக்கும் இந்த உலகத்துல இருக்கற ஆம்பளைங்களும் எல்லாருமே இப்புடித்தான்..ஒரே ஒருத்தன தவிர..!


“எவன் ஒருத்தன் பொண்டாட்டிய ட்ரைன் ஏத்திவிட்டுட்டு, அந்த பிரிவு தாங்க முடியாம அந்த ட்ரைன் போன தண்டவாளத்த கட்டி புடிச்சு அழுவறானோ “,”எவன் ஒருத்தன் பொண்டாட்டிய ஊருக்கு அனுப்பிட்டு டெய்லி நைட் எட்டு மணிக்கு கால் பண்ணி சாப்ட்டியாடா தங்கம்னு கன் மாதிரி கேட்டு பாசத்த கொட்ரானோ”,(எட்ரைக்கு கால் பண்ண வாய் கொளரும்..) “எவன் ஒருத்தன் பொண்டாட்டி பக்கத்துல இல்லாத ஒவ்வொரு நொடியும் வேதனைலையும் பிரிவுலயும் துடி துடிச்சு போய் எப்பவுமே பொண்டாட்டி நெனைப்பாவே இருக்கானோ...! அவன் மட்டும்தாங்க நல்ல புருஷன்..!” அப்டிபட்டவன் இந்த பூமிலேயே ஒரே ஒருத்தன்தான் இருக்கான்..!


அவன் வேற யாரும் இல்லைங்க...!


உங்கள் அன்பு தம்பி வெளியூர்க்காரன்தான் ...!


(டேய் டேய் டேய்...ராஸ்கல்ஸ்.இதுகெல்லாம் கைதட்டகூடாது ஆமாம்..)


மொத்தத்துல இந்த உலகத்துல வெளியூர்க்காரன் மட்டும்தாங்க கட்டுப்பாடான , கட்டுசிட்டான பாசமுள்ள புருஷன்..அவன தவிர எல்லா ஆம்பளைங்களும் பொண்டாட்டி எப்படா ஊருக்கு போவா... பாட்டில எப்ப ஒப்பன் பண்ணுவோம்னு வெயிட் பண்ற நாதாரிங்கதான் .!


@ஆல் ஆம்பளைங்க ...


அண்ணன் அப்டி ஓரமா பாட்ஷா ரஜினிகாந்த் சார் மாதிரி ஸ்டூல் போட்டு உக்காந்துக்கறேன்...இப்டி ஒரு விசயத்த எழுதுன புண்ணியத்துக்கு நீ ஜானிவாக்கரும் கிங்ஸுமா நல்லா இருப்படா தம்பின்னு கண்ணீர் விட்டு பாராட்ட விரும்பற அன்பர்கள் அப்டியே கைல முத்தம் குடுத்துட்டு அப்பீட் ஆய்ட்டு அப்பாலிக்கா வருமாறு அன்போடு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்...பாராட்டும் நோக்கில் உணர்ச்சிவசப்பட்டு கம்மெண்ட் போடும் ஆர்வகோளாறு அன்பர்கள் ஏதும் உளறாமல் இருக்கவும் தங்கள் காலை பிடித்து அன்போடு கதறி கேட்டுகொள்ளபடுகிறீர்கள்...!


இவ்ளோ நேரம் நல்லா க்ரிப்பாதான பேசுனான் ..திடீர்னு ஏன்  இப்டி கவுந்தடிக்ரான்னு தோணுதா....?

யோவ்.,இத ஊருக்கு போயிருக்கர ஏன் பொண்டாட்டி படிச்சாலும் படிப்பாயா..! 


தயவு செஞ்சு போயிருயா..! 


வெளியூர்க்காரன்    

Posted by Veliyoorkaran - - 30 comments and to comment

தேவி தியேட்டர்ல சென்னை-600028 படம் பார்த்துட்டு வெளில வந்தப்போ எனக்கு இருந்த பீலிங் இதுதான்..நான் கஷ்டப்பட்டு சம்பாரிச்ச காச உங்ககிட்ட குடுத்துட்டு சந்தோசமா வெளில போறேன் வெங்கட்பிரபு..நீங்க நல்லா இருக்கணும்...நெறைய நல்ல படம் எடுக்கணும்....! என்னை பொருத்தவரைக்கும் ஒரு  நல்ல படம் ரசிகனோட காச ஜஸ்டிபை பண்ணனும்..அப்டி வாங்கற காசுக்கு நேர்மை செய்ற இயக்குனர்கள் கண்டிப்பா இன்னும்  இருக்கத்தான் செய்றாங்க..


உதாரணத்துக்கு கற்றது தமிழ் ராம்...மாஸ் ஹீரோக்களோட ஒப்பனிங் சீன்ல மயங்கி கெடந்த தமிழ் ரசிகர்களோட பொறடில அடிச்சு எழுப்பிவிட்ட படம்..பிராபகர் இன்னும் என் கண் முன்னாடி தெரியுறான்..அவன் கோவம் இன்னும் என் தூக்கத்த கலைக்குது...! என்னை கேட்டா இயக்குனர் ராம்  இனிமே சினிமாவே எடுக்க வேணாம்..! இந்த ஒரு படம் போதும் அவர் கேரியருக்கு....! 


அதே மாதிரி அமீர்...ஒரு தடவ ஆனந்த விகடன்ல எழுதிருந்தீங்க..உங்க சினிமா வாழ்க்கைல எப்போ ஜெய்ச்சிட்டதா உணர்ந்தீங்கன்னு கேட்ட கேள்விக்கு, 2008ல பிலிம் பேர் அவார்ட் வாங்கறப்போ யாரோ ஒருத்தன் தலைவான்னு கத்துனான்...எனக்கு நல்லா தெரியும்..அவன் தலைவன்னு சொன்னது என்னதான்...அந்த செகண்ட் தோணுச்சு...நான் சினிமால ஜெய்ச்சிட்டேன்னு...! அத படிச்சப்போ ரொம்ப சந்தோசமா இருந்துச்சு...ஏன்னா அன்னிக்கு நேரு ஆடிட்டோரியத்துல உங்க பேர அன்னவுன்ஸ் பண்ணப்போ, நீங்க எந்திருக்கரதுக்கு முன்னாடி தலைவான்னு கத்துனது நான்தான்...நான் மட்டும்தான்...! உனக்கு கத்தலாம் தலைவா..நீ எடுத்தது படம் இல்ல...சரி விடு...பருத்திவீரன் எப்டிப்பட்ட படம்னு எழுதரதுகேல்லாம் நான் வொர்த் இல்ல...! (ஆனா ஒன்னு , அந்த படத்துல ப்ரியாமணியும் கார்த்தியும் பண்ணது நடிப்பு இல்ல...அதுக்கும் மேல..நியாயப்படி இந்திய அரசாங்கமே அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணத்த பண்ணி வெச்சு, ரெண்டு பேரையுமே இந்திய ஜனாபதியாக்கி அழகு பார்த்துருக்கணும்...ஆனா, ப்ரியாமணிக்கும் மட்டும் தேசிய விருது குடுத்து ஏமாத்திட்டாணுக..! விடு..கார்த்திக்கு இன்னும் சான்சஸ் இருக்கு..!)


இப்டி பல இயக்குனர்கள் தமிழ் சினிமால இருக்காங்க...சில பேர் சந்தொசபடுத்துவாங்க, சில பேர் யோசிக்க வெய்ப்பாங்க...சில பேர் வாழ்க்கையோட புரிதல உணர்த்துவாங்க.. பிதாமகன் பாலா .மொழி ராதாமோகன் ,வாரணம் ஆயிரம் கவ்தம் மேனன் ,பொல்லாதவன் வெற்றிமாறன்,வெயில் வசந்தபாலன் ,மதராசபட்டினம் விஜய்..இப்டி பல நல்ல இயக்குனர்கள்...! குடுத்த காசுக்கு நேர்மை செஞ்சு அனுப்பற இயக்குனர்கள்...  

இவங்க எல்லாத்துக்கும் மேல ஒருத்தன் இருக்கான்..!


எல்லாரும் விஜய் படத்துக்கும் அஜித் படத்துக்கும் வெயிட் பண்ணுவாங்க...! 
ஆனா, வெளியூர்க்காரன் இந்த டைரெக்டரோட  படத்துக்காக வெயிட் பண்ணுவான்..!


யாருன்னு கேக்றீங்களா..!


வலிய விசுவலா காமிச்ச ஒரே இயக்குனர்..ஒரு ரசிகன அழுக வெச்சிடலாம்..ஆனா,அவனுக்கு வலிக்க வெக்கறது ரொம்ப கஷ்டம்..எனக்கு வலிச்சுது. நல்லாவே வலிச்சுது ..சொன்ன நம்பமாட்டீங்க..அழுகரதுக்காகவே தனியா ஒருதடவ சங்கம் தியேட்டர்ல இந்த படத்த பார்த்தேன்..என்னை பொருத்தவரைக்கும் 7G-ரெயின்போ காலனி மாதிரி ஒரு படத்த எவனாலயும் எந்தகாலத்துளையும்  எடுக்கமுடியாது...செல்வராகவன தவிர...! அன்னிக்கு சிந்திய கண்ணீர் துளிகள் வெளியூர்க்காரன்ங்கற ஒரு கடைகோடி ரசிகன் செல்வராகவனுக்கு குடுத்த தேசிய விருது...! புதுப்பேட்டை , ஆயிரத்தில் ஒருவன், காதல் கொண்டேன் , இப்டி எந்த படத்த எடுத்துகிட்டாலும் தன்னோட படத்த ஆர்வமா பார்க்க வர்ற நேர்மையான தமிழ் சினிமா ரசிகன கவுரவப்படுத்தி திரும்ப சந்தோசமா அனுப்பற தமிழ் திரை உலகத்தின்  ஒரே இயக்குனர்...!


“தி கிரேட் செல்வராகவன்.” 


“யு ஆர் மை எவர்க்ரீன் டைரெக்டர் செல்வா...!


“Very curious to watch “Mayakkam enna….”


Release it soon..


A Veliyoorkaran article.

Posted by Veliyoorkaran - - 36 comments and to comment


பொண்ணுங்களே அழகுதாங்க..அதுவும் கனகாம்பர பூ வெச்சுகிட்டு செகப்பு தாவணி போட்டுக்கிட்டு ஓரகண்ணால பார்த்துட்டு போற புள்ளைக இன்னும் அழகு...ச்சே ச்சே..நான் என் கொழுந்தியாவ பத்தி சொல்லல..பொதுவா சொல்றேன்...! அப்டிபட்ட அழகான பொண்ணுங்க சொல்ற பொய் மட்டும் எப்டிங்க அழகா இல்லாம இருக்கும்...! அதான் அழகு பொண்ணுங்களும் கியூட்டான பொண்ணுங்களும் செகேன்ட் பார்ட்ட வெளியூர்க்காரன் அப்பாவி ஆம்பளைங்களுக்காக இதோ அர்ப்பணிக்கறான்..ரெண்டு வருசத்துக்கு முன்னாடி எழுதப்பட்ட முதல் பகுதியை படிக்காத பக்கிக அத படிச்சிட்டு (அழகு பொண்ணுங்களும், கியுட்டான பொய்களும்) அதுக்கப்றம் இத படிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்ளபடுகிறார்கள்...ஏன்னா அப்டி படிச்சாதான் எழுதுன எனக்கே இது புரியும்...!

இந்த பதிவ படிக்கறதுக்கு முன்னாடி , இது எந்த மாதிரி ஆண்களுக்காக எழுதுனதுங்கரத முன்னாடியே சொல்லிடறேன்...பதிவ படிச்சிட்டு..."டேய் வெளியூரு,என்னா மச்சான் பேத்தர..கூரை மேல சோற வீசுனா நூறு காக்காடா நண்பா"ன்னு கெத்து பறக்க விடற பசங்களுக்கு என்னோட பதில்...மச்சி..இது உனக்கு எழுதுனது இல்ல..நீ வா நாம தண்ணியடிக்கலாம்...!   அதே மாதிரி "என்னது பொண்ணுங்களுக்கும் நம்மள மாதிரியே உணர்சிகள்ளாம் இருக்கா..? அவங்களும் ஆம்பளைங்கள மாதிரி சைட்டல்லாம் அடிப்பாங்களா..?"ன்னு ஆச்சர்யம் காட்ற அன்பர்கள் ஆபிஸ் பிரிண்டர்ல இந்த பதிவ பிரிண்ட் அவுட் எடுத்து, வீட்டு செவுத்துல அழகா மாட்டி மனப்பாடம் செய்யுமாறு அறிவுறுத்தபடுகிறார்கள்...!

பார்ட் IIவின், டாப் த்ரீ  கியூட் பொய்கள்..!

எங்கடா தேடிகிட்ருக்க மரமண்ட..அது இங்க இருக்குன்னு சொல்லி குடுக்கற மாதிரியே இருக்கும்...பசங்கள க்ராஸ் பண்ற பொண்ணுங்க சுடி ஷால சரி பண்ணும்போது...அவுக அத சரி பண்றத பார்த்தோன்னதான் இந்த கூமாங்குக்கு ஒரு அபிப்ராயமே வரும்...அட இத நம்ம பார்க்கனும்ல அப்டீன்னு...அப்டி ஒரு அந்தர் பெர்பார்மன்சா இருக்கும் பொண்ணுக சைட்லேர்ந்து...ஆனா அவுகள நீங்க பார்த்துடீங்க...நீங்க காலி...கூட நின்னுகிட்டு ஷால சரிபண்ணியும் பசங்களோட அபிப்ராயத்த பெற முடியாத அட்டு டிக்கட்டுகிட்ட கொந்தளிப்பாங்க..பொருக்கி பய..எப்டி பார்க்கறான் பாரு..எல்டர் சிஸ்டர், எங்கர் சிஸ்டரோட  பொறந்ததுள்ள  போலருக்குன்னு...! ஆனா மனசுக்குள்ள இப்டி ஓடிகிட்ருக்கும்..எப்டி பார்க்காம இருப்பான்..கெளம்பும்போது ஒரு மணி நேரம்ல மேக் அப்பொட சேர்த்து தேவையான அரெஞ்மண்ட்ஸ்லாம்  பண்ணோம்னு...! அதுக்கு பக்கத்துல உள்ள அட்டும் கொதிச்சு பொய் கருத்து சொல்லும்..அதுவும் கட்டம் போட்ட சட்ட போட்டுக்கிட்டு, தூக்கி சீவிருக்கற பையன் ரொம்ப மோசம்.உன்னையே வெறிச்சு பார்க்கறான்டி ..சரியான பொம்பள பொறுக்கியா இருப்பான் போலன்னு... ஆனா அதோட பிஞ்சு மனசுல இப்டி ஓடிற்றுக்கும்...எனக்குதான் இருக்கு...ஹ்ம்ம்...என்னமோ போ...!  

கொஞ்ச நாள் பேசி பழகுன பொண்ணுகிட்ட அழகா இருக்கீங்கன்னு சொல்லி பாருங்க...ரொம்ப கேசுவலா ஓ..அப்டியா அப்டீன்னு சொல்லிட்டு அடுத்த விசயத்த பத்தி பேச ஆரம்பிச்சுருவாங்க...ஆனா அதே பீசு வீட்டுக்கு போயிட்டு அழகா இருந்தேன்னு சொன்னானே அவன் எத சொன்னான் ன்னு விடிய விடிய கண்ணாடி முன்னாடி நின்னுகிட்டு சுத்தி சுத்தி பார்த்து தனக்குதானே தன்ன ரசிச்சு கொழம்பிகிட்ருப்பாங்க ...கருத்து என்னன்னா..பொண்ணுங்களுக்கு டீட்டைல்ஸ் ரொம்ப முக்கியம் தலைவரே...அழகா இருக்கீங்கன்னு பொதுவா சொல்லாதீங்க...உங்க மனசுல அந்த புள்ளைகிட்ட எந்த கருமம் அழகா தோணுச்சோ அத அழகா ஒரு பிட்டாக்கி அப்டியே பேசும்போது அங்கன்ங்க அங்கன்ங்க தூவி விடுங்க...! லைக்..

எல்லாரும் சிரிச்சு பார்த்துருக்கேன்...ஆனா நீங்க சிரிக்கும்போது மட்டும் சிரிப்பும் சேர்ந்து சிரிக்குது...! கியூட் டு ஸீ...!..கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி லேட்டா வந்ததுக்கு உதட்ட சுளிச்சு என்னமோ செஞ்சீங்கள்ள..ப்ச்..அப்போ உங்க லிப்ஸ் அப்டித்தாங்க இருந்துச்சு..நீங்க ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் குடிக்கும்போது உங்க பேச பார்த்தா, ஸ்ட்ராபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் குடிக்கற மாதிரி இருக்கு... இப்டி மனச கல்லாக்கிட்டு பிட்டு பிட்டா போட்டு பாருங்க...! அந்த ஒரு வரில அவுக மனசு சந்தோசத்துல குதிச்சு கொந்தளிச்சு , செத்துப்போன அவுக தாத்தாவோட சாத்மா ஆந்தி அடைஞ்சிரும்னா பார்த்துக்கங்க...! ஆனா அவுககிட்டேர்ந்து, அய்யனார் சத்தியமா இப்டி ஒரு ரியாக்சன்தான் வெளில வரும்.அழகா சிரிச்சுகிட்டே, லேசா தலைய சாய்ச்சுகிட்டே கியூட்டா சொல்லுவாங்க...

போடா ஜொள்ளு..ஓவரா வழியாத...!

கடைசியா சொன்னாலும் ரொம்ப முக்கியமான பாய்ண்ட் தம்பி...கவனமா கேட்டுக்கோ...உஷார் பண்ணிகிட்ட்ருக்கற பிகரோ..இல்ல லவ்விக்கிட்ருக்கற பிகரோ...இல்ல கல்யாணம் கட்டிகிட்ட பிகரோ..எல்லா பிகருங்களும் ஈகோங்கற ஒரே குட்டைல ஊருண, வேற வேற கட்டைங்கதாங்க்ரத மனசுல வெச்சுக்க.! வாழ்க்கைல எதாச்சும் பிரச்சன வர்றப்போ இந்த வரி வந்தா மட்டும், அடுத்த செகென்ட் உஷார் ஆய்று...!

ஏம்ப்பா டல்லா இருக்க..? ஏதும் பிரச்சனையா...? இது நீ.

ச்சே ச்சே...அதெல்லாம் ஒன்னும் இல்ல...! இது அவுக...

மச்சான் சத்தியமா சொல்றேன்.எழுதி வெச்சுக்கோ..பீசு மனசுக்குள்ள பெருசா எதையோ போட்டு கொழப்பிகினு செம காண்டுல இருக்குன்னு அர்த்தம்...நீ அத புரிஞ்சுக்காம அதான் அவளே ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டாளேன்னு நெனைச்சுகிட்டு, முட்டிய மடக்கிகினு, குஷி மூட்ல, வெளியூர்க்கானன்னு ஒருத்தன் ப்ளாக் எழுதுராண்டி..ஐயோ சாமி... அப்டீன்னு மொக்கைய ஆரம்பிச்சிராத...! தேவை இல்லாம அந்த புள்ள மனசுக்குள்ள என்ன திட்டும்..நாசமா போறவன்..வெளியூர்கார கம்னாட்டின்னு...! 

அந்த மாதிரி சூழ்நிலையில ஆம்பள சிங்கங்களாகிய நாம, நம்ம உசுரையும் வாழ்க்கையையும் காப்பாதிக்கரதுக்கு கண்டி நடிச்சே ஆக வேண்டிய அபாக்ய கட்டாயத்துல இருக்கொம்ங்க்ரத மனசுல வெய்ச்சுக்க.. நேரா பாத்ரூமுக்கு போ..மூக்க நல்லா சிந்து...உன் பிகரோட அப்பாவ மனசுல நெனைச்சு நல்லா காரி வாஷ் பேசின்ல துப்பு..மூஞ்ச கழுவு..பிரெஷ் ஆகிக்க..வக்காளி தோக்கடிக்கரண்டா சிவாஜி கணேசனன்னு மனசுல நெனைச்சுகிட்டு நேரா போ அந்த பிகருகிட்ட...மூஞ்ச அப்பாவிய மாத்து..கீழ உள்ள டயலாக செண்டிமெண்டா அடி...!

என்னடா பிரச்சன என் கண்ணுகுட்டிக்கு...? என் டல்லா இருக்க...? சொல்லு அம்மு..என்ட்ட சொல்லாம யார்கிட்ட சொல்லபோற..! சொல்லு குட்டி...!

பீசு குடம் குடமா கொட்டும்..மொக்கயாதான் இருக்கும்..இருந்தாலும் கேட்டுக்க....உன் பிரச்சனை ஓவர்...நீ அன்னிக்கு நிம்மதியா தூங்கலாம்...!

வக்காளி அஞ்சு தடவ பொறுமையா கேட்டும் பதில் சொல்லாத ஆங்காரம் பிடித்த அடங்காபிடாரி பிகர்  வாய்க்கபெற்ற   அன்பர்கள், கீழே உள்ள வரிகளை மனப்பாடம் செய்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்ளபடுகிறார்கள்...!

“திரும்ப திரும்ப கேக்றேன்ல...சொல்லி தொலைடி எருமைமாட்டு முண்டம்...சோத்த திங்க்ரியா இல்ல…இல்ல உங்கப்பன மாதிரி  ..!”

Life is all about fun..It will never ends. J

Third part ….Coming soon.

A Veliyoorkaran article.

Posted by Veliyoorkaran - - 42 comments and to comment


நானும் பொறுத்து பொறுத்து பார்த்தேன்....அசிங்கபடுத்துனீங்க..கேவலபடுத்துனீங்க...அப்பறம் எங்கள பார்க்கற எடத்துல எல்லாம் வெரட்டி வெரட்டி கொம்மட்டுலையே குத்துனீங்க...அப்ப கூட எங்களுக்கு சூடு சொரணை அவ்ளவா இல்லாததனால அதையும் பொறுத்துகிட்டோம்...ஆனா, எப்போ மெட்ராஸ்ல துணி கடை இருந்தாதான உன் தலைவன் தங்கச்சி கல்யாணத்துக்கு துணி எடுக்க வந்துட்டு வில்லனுகள அழிப்பான்னு, அஜித் பேன்ஸ் எல்லாம் சேர்ந்து அரசாங்கத்துகிட்ட சொல்லி இருக்கற துணி கடைய பூராத்தையும் மூடுனீங்களோ...இனிமே பொறுத்துக்க மாட்டேன்..வந்து ஸ்பாட்ல எறங்கிட்டான் இந்த வெளியூர்க்காரன்..என் தங்க தளபதி விஜய்க்க்காகவும், மண்டைல மூளை இல்லன்னாலும் மனசு பூரா பாசத்தோட இருக்கற என் பங்காளிக விஜய் ரசிகர்களுக்காகவும் அடுக்கடுக்கான பாய்ன்ட்டுகளோட அற்புதமா களமிரங்கிட்டாண்டா இந்த முரட்டு காளை..!  ( விடு விடு..எங்க கூட்டமே இப்டிதான்...முட்டுசந்துல ஒன்னுக்கடிக்கரதுக்கு கூட எதுனா பஞ்ச் டயலாக் அடிச்சிகினேதான்  போவோம்..நீ கண்டுக்காம அடுத்த பேராவுக்கு போ...)


உங்கள எங்களுக்கு புடிக்காதுதான்..இருந்தாலும் மங்காத்தா படத்துல உன் தல சொன்ன ஒரே வார்த்தைக்கு கண்டி, இதுநாள் வரை நான் அத பாலோ பண்ணிகினுகிறேன்...! (ரெண்டு சரக்க மிக்ஸ் பண்ணி குடிக்காதன்னு...) அந்த பெரிய மனுசத்தனம் உங்கள்ட்ட ஏண்டா இல்ல..அதென்னடா எங்க போனாலும் அடிக்கறீங்க...எத்தன பேர்ரா  இருக்கீங்க நீங்க...? விஜய் ரசிகனா இருக்கறது அவ்ளோ பெரிய குத்தமாடா...?


ஆ ஊன்னா ஒரே கதைல எத்தன படத்துலடா நடிப்பான் உன் தலைவன்னு எகத்தாளம் வேற பேசுறீங்க..நான் உங்கள்ட்ட ஒன்னு கேக்குறேன்..நீங்கல்லாம் ஒரே கம்பெனில பத்து வருஷம் வேலை பார்க்கறதில்ல..அதே மாதிரிதாண்டா இதுவும்...! கடந்த பத்தாண்டு காலமா ஊர்னாட்லேர்ந்து கெளம்பி வந்து மெட்ராஸ் வில்லனுகள அழிக்கரதுன்னா சும்மா இல்லடா தம்பி...பஸ் சீசன் டிக்கெட் எடுத்தே சொத்து அழிஞ்சிரும்...இருந்தும் என் தலைவன் அதையே  காலகாலமா  அலுத்துக்காம செஞ்சுக்கிட்டுருக்கான்...நீ அதுக்கே அவன கோவில் கட்டி கும்புடணும்...இப்பல்லாம் என் தலைவன் எந்த ஊர்ல பஸ்ல ஏறுனாலும்  கண்டக்டர் கேக்குறாராம்...என்ன சார் ஊருக்கு போறீங்க போலருக்கு...என்ன வில்லன அழிக்கவான்னு....அந்த அளவுக்கு உலகமெங்கும் பரவிருக்கற என் தலைவனோட புகழ் உனக்கு புரியலையேங்கரதுதாண்டா எனக்கு ரொம்ப சங்கட்டமா இருக்கு..!  


அப்பறம் கேக்கனும்னு நெனச்சேன்...அதென்னடா என் தலைவன இண்டர்நெட்ல பிச்சைகாரன் மாதிரி போட்டோஷாப்ள போட்டு கேவலபடுத்துறீங்க..உங்களுகெல்லாம் மனசாட்சியே இல்லையா...என் தலைவன சைட் போஸ்ல ஒருக்களிச்சு நிக்க சொல்லி உக்காந்துகிட்டு பாருங்கடா...சும்மாவே அப்டித்தாண்டா இருப்பாரு என் தங்க தளபதி...அவர போய் போட்டோஷாப்ள எல்லாம் போட்டு போட்டோஷாப்ப அசிங்கபடுத்துரீங்களே., நீங்கல்லாம் மனுசன்தானா...? என்னை விடு...இந்த போட்டோவ ஒரு பிச்சகாரனோ இல்ல சந்து அங்கிளோ பார்த்தா எவ்ளோ பீல் பண்ணுவாங்க...பிச்சகாரன்னா அவ்ளோ கேவலமா போச்சா உங்களுக்கு...? இத நிறுத்திக்கங்க மொதல்ல.. !


வெரைட்டி வெரைட்டிங்கறீங்க..பொறந்ததுலேர்ந்து இட்லிக்கு மொளகா பொடிதானடா தொட்டுகிட்டு திங்கறீங்க...வெரைட்டியா இருக்கட்டுமேன்னு எவனாச்சும் மூக்கு பொடிய தொட்டு தின்னு பாருங்களேன்...! முடியாதுள்ள...அந்த மாதிரிதாண்டா என் தலைவனுக்கும்...நீ நக்கல் அடிக்கலாம்...எல்லாரும் வெரைட்டியா நடிக்கறாங்க...ஆனா, உன் தளபதி மட்டும் என் ஹேர் ஸ்டைல கூட மாத்தாம நடிச்சு உசுர எடுக்கராருன்னு..உன்ன பார்த்து நான் ஒன்னு கேக்குறேன்..தெய்வ திருமகன்ல விக்ரம் பண்ண ரோல என் தளபதி பண்ணி அத வீட்ல உக்காந்து குடும்பத்தோட  டிவில பார்த்தா எத்தன புள்ளைகளுக்கு மூளைக்காய்ச்சல் வரும்..எத்தன பேர் வீட்ல பிக்சர் டியுப் வெடிக்கும்..இதெல்லாம் யோசிச்சியா நீ..? பிரெண்ட்ஸ் பட க்ளைமாக்ஸ்ல விஜயோட ஆக்டிங் பார்த்துட்டு என் பிரெண்ட் மூணு நாள் ஆபிசுக்கு லீவ் போட்டுட்டு சிரிச்சிகிட்ருந்தாண்டா...அவ்ளோ பெரிய நடிப்பு சக்கரவர்த்தி ரிஸ்க் எடுக்காம இருக்கறது உங்கள காப்பாத்ததான்னு ஏண்டா புரிஞ்சுக்க மாட்றீங்க...!


அடுத்தது கவ்தம் மேனன் படத்துல மட்டும் என்ன கதைன்னு நெனைக்கற...அமெரிக்கால நடக்கற ஒபாமா தங்கச்சியோட கல்யாணத்துக்கு துணி எடுக்கறதுக்காக நியூயார்க் போறாரு என் தளபதி...அப்போ நியூயார்க்ல இருக்கற வில்லன் ஒபாமா தங்கச்சிய கைய புடிச்சு இழுத்தர்றான்..!.ஒபாமா தங்கச்சிய எவனோ ஒருத்தன் கைய புடிச்சு இழுக்கரதுக்கும் உன் தளபதிக்கும் என்னாடா சம்பந்தம் நார பயலேன்னுதான கேக்க வர்ற...! போடா லூசு...இதுவரைக்கும் எந்த படத்துலடா  நாங்க லாஜிக்கொட படம் எடுத்துருக்கோம்...கேக்றான் பாரு கேள்வி.கேனயாட்டம் ..கதைய மேல கேள்றா பன்னாட..கைய புடிச்சு இழுத்த அடுத்த செகேன்ட் வெக்கிறோம் ஒரு பஞ்ச் டயலாக...தங்கச்சி யாரோடதுங்கறது முக்கியம் இல்ல..கைய புடிச்சு இழுக்கரதுதான் முக்கியம்னு சொல்லிட்டு கலிபோர்னியால இருக்கற ஒரு டீ கடைல வெச்சு வில்லன வெளு வெளுன்னு  வெளுத்து......டேய் டேய் டேய்..ஏண்டா இப்ப கொட்டாவி விட்ரா...இருடா படம் வரட்டும்..அப்பறம் விட்டுக்கலாம்....!


கடைசியா ஒரு விஷயம் உன்ட்ட வெக்கத்த விட்டுட்டு சொல்றேன்...எங்களுக்கு இதான் வரும்...வெச்சுக்கிட்டு வஞ்சகம் இல்ல...நடிக்க தெரிஞ்சா நடிச்சிருவோம்..வரல..அதனால வில்லனுகள அழிச்சு வியாபாரம் பண்ணிக்கிட்டுருக்கோம்..!


வேணா என் தலைவன்ட்ட சொல்லி அடுத்த படத்துல மெட்ராஸ்லேர்ந்து  கெளம்பி போய் கொட்டாம்பட்டில இருக்கற பண்ணையார் வில்லன அழிக்க சொல்றேன்..!


ஆனா ஒரு கண்டிசன்...!


"நீங்க மொதொள்ள மெட்ராஸ்ல மூட சொன்ன துணி கடை எல்லாத்தையும் தொறந்து விட சொல்லுங்க...!"


வெளியூர்க்காரன் 

           

Posted by Veliyoorkaran - - 62 comments and to comment


நாளைலேர்ந்து மூணாவது வருசத்துல அடி எடுத்து வெய்க்கிறான் வெளியூர்க்காரன்..இந்த ரெண்டு வருசத்துல சமுதாயத்துக்கு பயனுள்ள மாதிரி எதாச்சும் எழுதி மக்களை திருத்திருக்கமான்னு யோசிச்சு பார்த்தா ஒரு குந்தானியும் எழுதலங்கறது தெளிவா தெரியுது...!

இந்த லெட்சனத்துல நான் என்னத்த எழுதி கிழிச்சேன்னு தெரியல...எனக்கு முன்னூறு பாலோவர்ஸ் வேற..அவெங்கே எதுக்கு எனக்கு பாலோவர்சா சேர்ந்தாங்கேன்னு  எனக்கும் தெரியல,சேர்ந்த அவெங்கேலுக்கும்  தெரியாது...ஆனா சேர்ந்துருக்காங்கே..அந்த அன்பு நண்பர்கள்ட்ட ஒன்னே ஒன்னு மனச தொறந்து கேக்கணும்.. யோவ் எதுக்குயா என் ப்ளாகுக்கு பாலோவர்சா சேர்ந்தீங்க...தயவு செஞ்சு சொல்லுங்கையா...ஒரே மண்டை கொழப்பமா இருக்கு...நானே எனக்கு பாலோவரா சேர மாட்டேன்...! நீங்க ஏன்யா சேர்ந்தீங்க ..?

இவங்கெல மாதிரியே இன்னொரு க்ரூப் இருக்காங்கே...வெளியூர்க்காரன்ல ஒரு பதிவு படிச்சேன்...அப்டியே பின்னாடியே படிச்சிட்டு போய் உங்க எல்லா பதிவுகளையும் படிசிட்டேன்னு கமெண்ட்ல வந்து போடுவாங்கே...அவெங்கல்ட்டையும் ஒரு கேள்வி...யோவ் என் பதிவ நானே படிக்க மாட்டேன்...நீங்க ஏன்யா விழுந்து விழுந்து படிக்கிறீங்க...? என்ன பிரச்சன உங்களுகெல்லாம்...?


மத்தபடி வெளியூர்க்காரனோட சாதனை என்னன்னு யோசிச்சு பார்த்தா இந்த பய எழுதுன 90 சதவிகித பதிவுகளுக்கு ஆறு வோட்டுக்கு மேல விழுந்ததே இல்ல...அதுல ஒரு வோட்டு இவனோடது..ஒரு பதிவுக்கு அஞ்சு வோட்டுக்கு மேல இவன் வாங்குனதே இல்ல..அந்த ஒரே சந்தோசம்தான் இவனுக்கு...பார்மாலிட்டி கும்பல்ல மாட்டி சீரழியாம, வோட்டு பிச்சை வாங்காம, அடுத்தவனுக்கு ஜிஞ்சா அடிக்காம தமிழ் பதிவுலகத்துல எவானாச்சும் ஒருத்தென் இருக்கான்னான்னு எவனாச்சும் கேட்டா., அவென் தலைல தட்டி கெத்தா சொல்லுங்க..இருக்கான்டா என் மாப்ள வெளியூர்க்காரன்னு...! (அப்பாடா பஞ்ச டயலாக் பேசிட்டேன்...)


இது நான் எழுதுன பதிவுடான்னு பெருமையா சொல்லி காலர தூக்கி விட்டுக்கர மாதிரியான பதிவ நான் இன்னும் எழுதலைன்னு நெனைக்கறேன்...இந்த வருஷம் எழுத முயற்ச்சி பண்றேன்...


மத்தபடி ஒன்னும் இல்ல... இந்த வருசமும் நான் வழக்கம் போல எதையாச்சும் எழுதறேன்...நீங்க கெக்கே புக்கேன்னு சிரிச்சிட்டு போய் வேலைய பாருங்க..சந்தோசமா வாழ்க்கைய ஓட்டுவோம்...


அப்பறம் வணக்கம் சொல்றதுக்கு முன்னாடி, வெளியூர்க்காரனை அறிமுகபடுத்திய திரு தமிழ்குமார் அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்..


இந்த ரெண்டு வருசத்துல என்னை நெறைய சிரிக்க வெச்ச , ரசிக்க வெச்ச, உருக வெச்ச முகம்தெரியா அன்பு நண்பர்கள் அனைவருக்கும்.,


என் அன்பும் வாழ்த்தும்..


வெளியூர்க்காரன் 

Posted by Veliyoorkaran - - 31 comments and to commentயேய் சிபி..ஒருவேளை நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்காம போச்சுன்னா நீ வேற கல்யாணம் பண்ணிப்பியாடா...?

ஈவினிங் ஆறு மணி...பீச் காத்து...பக்கத்துல வேற யாரும் இல்ல..ஏண்டி இப்டி அபத்தமா பேசற....காலம் காலமா இந்த மாதிரி சிட்டுவேசன்ல லவ்வர்ஸ் என்ன பண்ணுவாங்களோ அத மட்டும் பண்ணுவோம் நாம...குட்டி.,குட்டி.. நேத்து பார்த்த இங்க்லீஷ் படத்துல ஒரு நச்ச் கிஸ் சீன் வந்துச்சுன்னு சொன்னேன்ல..அத எப்டி இருந்துச்சுன்னு நடிச்சு காட்டவா...?

அவன் கண்ணை பார்த்து மறுபடியும் கேட்டா..! நீ பர்ஸ்ட் இதுக்கு பதில் சொல்லு.. ஒரு வேலை நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கலைனா, நீ வேற கல்யாணம் பண்ணிபியா மாட்டியா...?

ஆங்..வெல்..ஹவ் டு சே தட் ...! குட்டி சொக்கா இருந்தா...அப்டியே உஷார் பண்ணி கல்யாணத்த பண்ணிட்டு டார்ஜிலிங், சிம்லான்னு ஒரு ரவுண்ட் சூடா  போயிட்டு போயிட்டுரலாம்தான்..விடு மச்சி...அதுக்கெல்லாம் குடுத்து வெச்சிருக்கணும்...எனக்கு அதிர்ஷ்ட்டம் இல்ல..சொல்லிட்டு சிரிச்சுகிட்டே  ஓரக்கண்ணால சைந்தவிய நக்கலா பார்த்தான் சிபி... 

நீ கல்யாணம் பண்ணிக்கடா...நீ சந்தோசமா இருக்கணும்...நான் இல்லைனா கூட நீ சந்தோசமா இருக்கணும்...என் சிபி வாழ்க்கை பூரா சந்தோசமா சிரிச்சுகிட்டே மட்டும் இருக்கணும்..நான்னு இல்லடா..என் சிபி எந்த பொண்ணு வந்தாலும் அவள சந்தோசமா வெச்சுப்பான்..எனக்கு தெரியும்..என் சிபிய பத்தி எனக்கு நல்லா தெரியும்...உன்ன மாதிரி ஒரு நல்ல புருஷன் ,எனக்கு கெடைக்கலங்கற ஒரே காரணத்துனால இன்னொரு பொண்ணு மிஸ் பண்ணிற கூடாது..நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ...!

யேய் ச்சீ..என்னடி லூசு மாதிரி என்னனமோ பேசற...நான் எதோ வெளாட்டுக்கு உன்ன வம்புக்கு இழுக்கறதுக்காக சொன்னேன்ப்பா...!

இல்ல சிபி.நேத்து ஏன் பிரெண்ட் அவ லவ் பெய்லியர்  பத்தி சொல்லிட்ட்ருந்தா.. அப்போலேர்ந்து ஏன் மைண்ட்ல இது மட்டும்தான் ஓடிட்ருக்கு....திடீர்னு எனக்கு எதாச்சும் ஆய்ட்டா நீ என்ன நெனைச்சுகிட்டே உன் லைப வேஸ்ட் பண்ணிற கூடாதுல்ல..அதான் இப்பவே சொல்றேன்..ஒரு வேலை நமக்கு கல்யாணம் ஆகலைனா   நீ வேற கல்யாணம் பண்ணிக்கோ...!

யேய் லூசு..என்னாச்சுடி  உனக்கு இன்னிக்கு...நமக்கு இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம்...ஞாபகம் இருக்கா இல்லையா உனக்கு..?

ஹ்ம்ம்..!

ஏன் குட்டி..,ஒரு வேலை நீ வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னை பத்தி அவகிட்ட சொல்லுவியா...?

யேய்..நான் ஏண்டி நடுராத்திரி மூணு மணிக்கு விஜய் படத்துக்கு போகபோறேன்..? ஏண்டி என்னனமோ சொல்லி என்னை இப்போ கொழப்பர ...?

இல்ல குட்டி சொல்லேன்..ஒரு வேலை உனக்கு இன்னொரு பொண்ணோட கல்யாணம் ஆகி, அவகூட வாழ்ந்துட்ருக்கும்போது அவகிட்ட சைந்தவின்னு ஒரு லூசு பொண்ணு என்னை உயிருக்குயிரா காதலிச்சான்னு சொல்லுவியா...?

சிபி சிரிச்சான்...யேய்..என்னாச்சுடி உனக்கு இன்னிக்கு...?

இல்ல நீ சொல்லேன்..நீ அவகிட்ட என்னை பத்தி சொல்லுவியா மாட்டியா...?

சரி நீயே சொல்லு...உன்னபத்தி அவகிட்ட சொல்லவா வேணாமா...?

கடல்காற்று வேகத்தை குறைத்து சைந்தவியை கவனிக்க ஆரம்பித்தது..

“சொல்லாதடா..நான் உன்ன எவ்ளோ லவ் பண்ணேன்னு தெரிஞ்சா அந்த பொண்ணால தாங்கிக்க முடியாது...!

தேம்ப ஆரம்பித்தாள் சைந்தவி...

யேய்..என்னாச்சுரி உனக்கு..ஏன் இப்டியெல்லாம் பேசற...? சைந்தவி கம் ஆன்..வாட்ஸ் ராங் வித் யூ...?

சிபி நான் ஒன்னு சொல்லுவேன் செய்வியா..?

தேம்பல் அதிகமாகி இருந்தது சைந்தவியிடம்...

சொல்லுடி...!

நான் இல்லைனா கூட நீ வேற ஒரு கல்யாணம் பண்ணிக்காதரா..ப்லீஸ்ரா...அப்பறம் நீ என்னை மறந்துருவ...அத என்னால தாங்கிக்க முடியாது...!

உடைந்து அழ ஆரம்பித்தால் சைந்தவி...

எதுவும் சொல்ல தோணாமல் அவளை கட்டியணைத்த சிபியின் கண்ணீர் சைந்தவியை நனைத்தது...!

முத்த மழை தூத்தல் போட ஆரம்பித்தது...!
*************************************************************************
பீச் காத்துல, லவ்வர்ஸ் அழுதுகிட்டே கட்டிபுடிச்சுகிட்டு குடுக்கற கிஸ்ஸ விட டேஸ்ட்டான  கிஸ் உலகத்துலேயே இருக்க முடியாதுங்க...!
  
வேணும்னா இந்த ஜோடிகிட்ட கேட்டு பாருங்களேன்...

ஊடலும், பின் கூடலும், அதன் பின் காம தேடலுமே-- "காதல்"..!
***************************************************************************
A Veliyoorkaran Article.

Posted by Veliyoorkaran - - 27 comments and to comment


அம்மாவும் அப்பாவும் இன்விடேசன் குடுக்க ஊருக்கு போயிருக்காங்க...திரும்ப வர்றதுக்கு நைட் எட்டு மணி ஆகும்...இவன் காலைல ஒம்பது மணிகெல்லாம் வீட்டுக்கு வந்துடறேன்னு சொன்னவன், இப்போ டைம் எட்டர ஆகுது..இன்னும் காணோம்..இப்டிதான் ஒவ்வொருதடவையும் லேட் பண்ணுவான் இடியட்..!

என்ன பண்ணலாம் சிபிக்கு ,என்னடா  சமைச்சு வெக்க என் தங்ககுட்டிக்குன்னு கேட்டா, கோழி சுக்காவும் ஆட்டு கால் பாயாவும்னு முனியாண்டி விலாஸ்ல ஆர்டர் பண்ற மாதிரி சொல்லுவான் வாலு...


கல்யாணத்துக்கு முன்னாடி லவ்வர்சா தனியா மீட் பண்றதுல ஒரு த்ரில் இருக்கதாங்க செய்யுது...வாழ்க்கைல யாருமே மிஸ் பண்ண கூடாத ஒரு த்ரில் அது..தப்பே இல்லாத ஒரு தப்பு அது..!


சிபியோட இன்னிக்கு புல்லா தனியா இருக்கபோறேன்..மனசு அப்டியே ஜிவ்வுன்னு இருந்துச்சு...இவன் வாலாச்சே..ஒழுங்கா இருப்பானா..? இல்லைனா கூட பரவால்ல..வாலா இல்லைனாதான் பிரச்சனை.என் சிபிகிட்ட எனக்கென்ன பயம்..!


அவன் போன வாரம் எடுத்து குடுத்த சாக்லேட் கலர் சுடிதார்ல, லேசா மேக் அப் போட்டுட்டு முப்பத்தி ஆறாவது தடவையா டிரெஸ்ஸிங் டேபிள் முன்னாடி நின்னப்ப தோணுச்சு...ஷால் வேணாம்னு...!


மேடம் கொரியர்...காலிங் பெல்..சிவபூஜைல கரடியான்னு கதவ தொறந்தவளுக்கு ஷாக்..!


வெளில சிபி கைல ஒரு ரோஜாபூவ வெச்சுகிட்டு அழகா சிரிச்சிட்ருந்தான்  ...அந்த ரோஜா பூ மாதிரியே...!வீட்ல யாரும் இல்ல...போயிட்டு...., சொல்லி முடிக்கறதுக்குள்ள போய் சோபால உக்காந்து டிவிய ஆன் பண்ணிட்ருந்தான்..  


அப்பறம்., இந்த மீசைய கழுத்து வரைக்கும் ஒழுக விட்ருப்பானே...அந்த ஆள் எங்க..?.வீட்ல இல்ல.?.எங்க அந்த ஆளோட பிகரு...? வரு...எங்கடி இருக்க ...?


பொருக்கி...எங்க அம்மாவ வாடி போடின்னு  சொல்லி கூப்ட்ட தொலைச்சிருவேன்..அப்பாவ நேர்ல பார்த்தா மட்டும் உளறி கொட்றது..வீட்ல இல்லைன்னு தெரிஞ்சா பெரிய ரௌடி மாதிரி கலாய்க்கறது...இருடா உன்ன ஒரு நாள் வசமா மாட்டிவிட்றேன்...!


ஏய் சிபி நீ எடுத்து குடுத்த டிரஸ் எப்டி இருக்குன்னு சொல்லேன்...?

அவன் முன்னாடி போய் நின்னு சுத்தி சுத்தி காமிச்சேன்..


சுப்பரா இருக்கு குண்டூஸ்..உனக்கு என்னடி என் ராஜாத்தி...!


ஏய்..நான் ஒன்னும் குண்டு இல்ல..ஜஸ்ட் பிப்டி த்ரீதான்...!


அடிபாவி..இப்டி பொய் சொல்ற..உன் நெஞ்ச தொட்டு சொல்லு நீ குண்டு இல்லைன்னு...!


ஏய் ச்சீ..அசிங்கமா பேசாத...! - சைந்தவி 


அடிப்பாவி..இப்போ அசிங்கமா பேசறது நீனா நானா...இப்டிதாண்டி அப்பாவி ஆம்பளைங்கள வில்லனாக்கறீங்க...!


அப்போ சிரிக்க ஆரம்பிச்சேன்..அதுக்கப்றம், சிரிச்சிக்கிட்டு மட்டும்தான் இருந்தேன்..


நெறைய பேசுனான்...அழகா பேசுனான்..பேசிட்டே இருந்தான்..என் அப்பா மாதிரியே பேசி மிமிக்ரி பண்ணி காமிச்சான்...என்ன ஹால்ல உக்கார வெச்சுட்டு அவனே காபி போட்டு கொண்டு வந்தான்...காதுகிட்ட ஐ லவ் யு சொன்னான்...என் புருவம் எவ்ளோ அழகா இருக்குன்னு அவ்ளோ அழகா சொன்னான்..இன்னொரு தடவ சொல்ல மாட்டானான்னு இருந்துச்சு...ரெண்டு தடவ பின்னாடிலேர்ந்து கட்டிபுடிச்சான்...


இவனோட இருக்கும்போது மட்டும் ஏன் என் வாழ்க்கை இவ்ளோ அழகா இருக்கு..?


சிரிக்க சிரிக்க உப்பு மூட்டை தூக்குனான்..தூக்கிட்டு முதுகுல என்னமோ குத்துதுடி என்னன்னு பாருன்னு சொல்லிட்டு சிரிச்சான்...பொருக்கி..!


ஆறு மாசத்துக்கு முன்னாடி சிபின்னு ஒருத்தன் இந்த உலகத்துல இருக்கறதே எனக்கு தெரியாது...இப்போ இவன தவிர என் உலகத்துல வேற யாரும் இருக்கறதா எனக்கு தோணல...பொம்மைய தொலைச்ச கொழந்த மாதிரி இவன் இல்லைனா எனக்கு அழுக வருது...நான் எப்ப குழந்தையானேன்...எனக்கு என்னாச்சு..என்னை என்ன பண்ணிட்ருக்கான் இவன்..?


இதுக்கு என்னை பேர்னு கூட எனக்கு தெரில..,என்னை பேர் வேணா இருந்துட்டு போகட்டும்...!


சிபி எனக்கு வேணும்..என்கூடவே இருக்கணும் .அவ்ளோதான்..


எப்பவும் சிபிதான் என்கிட்டே கேட்டு கெஞ்சுவான்..


இன்னிக்கு நான்..,


"ஏய் சிபி...வந்து..வந்து...எனக்கு...எனக்கு...,"நான் சொல்லி முடிக்கறதுக்கு.....!


A Veliyoorkaran Article.

Posted by Veliyoorkaran - - 33 comments and to comment
அம்மா நூறு டெசிபலில் கத்தினாள்.

"சைந்தவீ...ஃபோன் அடிக்குது பாரு..."

சைந்தவி எரிச்சலாக வந்தாள். அப்பாவுக்கான ஃபோனா இருக்கும்.
இன்னும் எல்லார்ட்டையும் லேன்ட்லைன் நம்பர் கொடுக்கற புண்ணியவான்.

'ஹலோ.."
"சைந்தவிஇருக்காங்களா..?"
"நீங்க..?"

"நாங்க ஆர்டிஓ  ஆஃபீஸ்ல இருந்து பேசறோம்..இன்னும் இந்த வருஷம் நீங்க டாக்ஸ் ஃபைல் பண்ணலை.இது சட்டப்படி குற்றம்.இதுக்கு எகனாமிக் அஃபன்ஸ் ஆக்ட் 568 சி படி எவ்வளோ அபராதம் தெரி..."

"ஆர்டிஓ ஆஃபீஸ்ல இருந்து டேக்ஸா...ஹேய் ஹேய்...இரு...!
யார் இது...?
யேய்சிபி..நீதான...!"

"ஹா..ஹா...கண்டுபுடிச்சுட்டியா...எனக்கு குடுக்க வேண்டியதை குடுத்திருந்தா நான் ஏன் உன் வீட்டுக்கு  ஃபோன் பண்ணி கேக்கப்போறேன்"

"அடப் பாவி...அதுக்காக உன்னை யாரு லேண்ட் லைனுக்கு பண்ண சொன்னது?அம்மாவுக்குத் தெரிஞ்சா...!
சரி எங்க வரணும் சொல்லு வந்து குடுத்துத் தொலைக்கிறேன்"

"சரியா அரை மணி நேரத்துல உங்க வீட்டுப் பக்கத்துல இருக்கிற பஸ் ஸ்டாப்ல வந்து நில்லு..நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்...!"

யாருடி அது ஃபோன்ல...?
ரிசீவரைப் பொத்தி..."உனக்குதான்மா...!
ரிசீவரை அம்மா கையில் கொடுத்தாள்.

"ஹலோ யாரு.."

சிபி உஷாரானான்.
"இந்த டியூனை காப்பி பண்ணனும்னா ஸ்டார் மற்றும் ஒன்பதைஅழுத்துங்க.
வேண்டாம்னா வீட்ல டேப் ரிக்கார்டர்ல போட்டு கேளுங்க.." 
ஃபோனை டக்கென வைத்துப் பெருமூச்சு விட்டான்.
ராட்சசி...!

சரியாக அரைமணியில் சைந்தவி பச்சை சல்வாரில் பஸ் ஸ்டாப்பை அடைந்திருந்தாள். கண்ணுக்கெட்டின தூரம் வரையில் யாரும் வரவில்லை ஒரே ஒரு நகர பேருந்தை தவிர. எங்க போய் தொலைஞ்சான் இந்த சிபி என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே பஸ்ஸினுள் இருந்து குரல் கேட்டது...

சைந்தவி..வா ஏறு...!
ராஸ்கலே தான்.
"வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்னு சொன்ன...!" - சைந்தவி.
"ஆமா அதான் பிக்கப் பண்ணிட்டேன்ல..பஸ்லன்னு சொல்ல மறந்துட்டேன்...!"

அடக்கடவுளே இவனோட எப்படி லைஃப் முழுக்க ..என்று யோசித்த படியே சிபியோடு பின் சீட்டில் அமர்ந்தாள்.

சரி இப்பக் குடு - சிபி
"அய்யோ பஸ்லயா...என்ன விளையாடறியா?"

"சரி! அடுத்த ஸ்டாப்ல ஒரு பார்க் வரும்..யாரும் இருக்க மாட்டாங்க!"

சிபி ... உனக்கு விவஸ்தையே கிடையாது!

சரி இறங்கினவுடனே குடு!

சிபி...நீ அடங்க மாட்ட! முதல்ல என்னை வீட்ல கொண்டு போய் விடு. அம்மா தேடுவாங்க!

அடிப்பாவி! நேத்து அப்படி கொஞ்சினே!

"ம்ம்..அது ஃபோன்ல..போர்வையை ஃபுல்லா போர்த்திட்டு ஒரு தைரியத்துல சொல்லிட்டேன்.அதுக்காக இப்படியா பப்ளிக்ல..! உன்னை ரெண்டு நாள் காயப்போட்டாதான் சரிப்படுவ!"

"அப்போ இன்னைக்கு கிடையாதா?"

"இன்னிக்கு அதுக்கு சண்டேடா செல்லம்....இப்போ சமர்த்தா என்னை வீட்ல கொண்டு போய் விடுவியாம்..இல்லைன்னா...இந்த வாரம் முழுக்க சண்டே தான்..!"

சே..என்றிருந்தது சிபிக்கு. எவ்வளவு ஆசையாக வந்தோம். -ஜஸ்ட் ஒன்னு கூட கிடைக்கலையே என வெறுப்பு உச்சந்தலையில் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தது.

ம்ஹ்ம்...ஓகே! வா உங்க வீட்டுக்குப் போகலாம்!

"வீட்டுக்கு உன் கூடவா...அவ்வளோதான் அம்மா தலைலயே ரெண்டு வைப்பா... இதே பஸ்ல ரிடர்ன் போயிக்கலாம்...ஸ்டாப்ல இறங்கி என் வீட்டுக்குப் போக எனக்குத் தெரியும். சார் கவலைப்படாதீங்க...!"

"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்! வா " என்று முதலில் சைந்தவியை அனுப்பி வைத்து விட்டு சற்று நேரம் கழித்து சிபி சைந்தவி வீட்டுக்கு வந்தான்.

"வாங்க மாப்ப்ள...அப்பா எதுவும் தகவல் சொல்லி விட்டாரா! திடு திப்புன்னு வந்துருக்கீங்க...ம்மா சைந்தவி... அம்மாட்ட சொல்லி காஃபி போட சொல்லு!"

"இல்லை மாமா வந்து, அப்பா அட்வான்சுக்கு மண்டபம் குடுத்துடீங்கலான்னு கேக்க சொன்னார்...இல்லை இல்லை.. மண்டபத்துக்கு அட்வான்ஸ்......."

சைந்தவி அப்பாவோட மீசையை பார்த்து, சிபி நாக்கு பயத்துல உளறி கொட்ட ஆரம்பித்தது... ஆறாங்கிளாஸ் பயாலஜி டீச்சரைத் தவிர சிபி இப்படி தடுமாறி அவனே பார்த்ததில்லை.

" ஹா ஹா புரியுது மாப்ள  ..நீங்க சைந்தவிட்ட பேசிட்டு இருங்க..நான் இதோ வந்துடறேன்!"

மீசை வைத்த கதர் துண்டு பார்ட்டியானாலும் மேன்மக்கள் மேன்மக்களே.

ஹாலில் யாருமில்லை. சைந்தவி அம்மா வர அம்பது  வினாடிகளாவது ஆகும். சடாரென சைந்தவியை இடுப்போடு அணைத்து சத்தமே இல்லாமல்  சைந்தவிக்கு காது மூக்கு கண் எல்லாம் சிவக்க ரெண்டு முத்தங்கள் கொடுத்தான் சிபி.சைந்தவியால் திமிறக்கூட முடியவில்லை...அட்ரினலின் உச்சத்தில் இருந்தது.

ராட்சஸன்...சாதிச்சுட்டான் என நினைத்து உதட்டை துடைத்து கொள்ளவும், அம்மா  காஃபி கொண்டு வரவும் சரியாக இருந்தது.

"என்னடி பேந்த பேந்த முழிச்சுட்டு இருக்க...மாப்ளக்கு காஃபியை கொடு...

சைந்தவீ....மாப்ளைக்கு ஸ்வீட் கொடுத்தியா"

ரெண்டு ஸ்வீட் அவனே..ஸாரி! அவரே எடுத்துக்கிட்டாரும்மா ...!

என்னடி உளர்ற...?

உள்ளே இருந்து சவுண்ட் வந்தது... சைந்தவி அப்பாதான்...

"ஏய்...அவங்க மாத்தி மாத்தி உளறிக்கட்டும்...நீ விட்ரு!"

A article by Rettaivals.

Posted by Veliyoorkaran - - 20 comments and to comment


சைந்தவி சிபி...

இந்த பேர படிச்ச உடனே கார்னேட்டோ ஐஸ்க்ரீம காதல்ல கரைச்சு இதயத்துக்குள்ள ஊத்துன மாதிரி இருக்கா..அப்போ நீங்களும் சிபி சைந்தவி ஜோடிய காதலிக்கற காதலர்கள்..உள்ள வாங்க பாஸ்...சிபியையும் சைந்தவியையும் உங்கள்ளுக்கும் எனக்கும்  மட்டும் இல்ல...காதல்னா காரி துப்புர கம்னாட்டிங்களுக்குகூட இந்த காதல் ஜோடிய புடிக்கும்.. ஒரு சின்ன இடைவெளிக்கு பிறகு இவங்க ரெண்டு பெரும் அடிக்க போற ஜாலி கலாட்டகள நீங்க மறுபடியும் ரசிக்க போறீங்க...இந்த பதிவ புதுசா படிக்கறவங்களுக்கு சைந்தவி சிபியா பத்தின ஒரு சின்ன அறிமுகம்..


சிபி :


ஒவ்வொரு வெள்ளிகிழமை காலைலயும் கல்யாணம் ஆகாத பிகருங்க கருக்கல்ல குளிச்சிட்டு ஈரத்தலையோட  சாமி முன்னாடி நின்னு மணிக்கணக்கா வேண்டறது சிபி மாதிரி ஒரு ரொமண்டிக் புருஷன் தனக்கு கெடைக்கணும்கரதுகாகதான்..அதுக்காக ரேபான் க்ளாஸ் போட்டுக்கிட்டு எல்பாசோ வாசனைல கார்ல வந்து எறங்கி இங்க்லீஸ்ல தும்முற ஹை கிளாஸ் டிக்கெட் இவன்னு தப்பா நெனைச்சிறாதீங்க... ரெண்டு கட்டிங் கூட போய்ட்டா இவன் பேசற கெட்ட வார்த்தைல பாரே நாறும்...இன்னும் ரெண்டு கட்டிங் கூட போயிட்டா ஊரையே நாரடிச்சிருவான்...அதே மாதிரி பிகருங்க இவன்கிட்ட பத்து நிமிஷம் பேசுனா போதும்...வீட்டுக்கு போய் நைட் பெட்லேர்ந்து உருண்டு கீழ விளர வரைக்கும் சிரிச்சுகிட்டே இருப்பாங்க...அவ்ளோ ஜோக் அடிப்பான் இந்த ரொமண்டிக் ராஸ்கல்...இந்த கதைய படிக்க போற பசங்களுக்கு சிபிய புடிக்குதோ இல்லையோ...பிகருங்களுக்கு கண்டிப்பா புடிக்கும்...அப்டி ஒரு ரொமாண்டிக் இடியட்...நீயும்தான் இருக்கியே மடசாம்ப்ரானின்னு பசங்க தான் கேர்ல் பிரெண்டுகிட்ட கொமட்டுகுத்து வாங்காம இருக்கணும்னா இந்த கதைய உங்க கேர்ல் பிரெண்ட்ஸ படிக்க விட்ராதீங்க...!


சைந்தவி


இந்த பேர படிச்சோன்னையே சும்மா ஜிவ்வுங்காதா...? அதான் சார் சைந்தவி..சிபிய கல்யாணம் பண்ணிருக்கற பொண்ணு...இல்ல இல்ல..சிபிய கல்யாணம் பண்ணிருக்கரதுக்காக பொறந்த பொண்ணு..இவ ரொம்ப அழகெல்லாம் இல்ல...ஆனா,ஸ்பென்சர்ல  இவ க்ராஸ் பண்ணி போனா கண்டிப்பா ஒரு தடவ திரும்பி பார்க்கலாம்..அப்டி ஒரு அழகு...நம்ம பொண்டாட்டி இப்டி இருப்பாளா அப்டி இருப்பாளான்னு தமிழ்நாட்டு பசங்க மல்லாக்க படுத்து  பைனல் எக்ஸாம்க்கு  மொதோ நாள்  யோசிச்சு வெச்ச எல்லாமாதிரியும் இருப்பா இவ...தங்கமான பொண்ணு...அதுக்காக கொத்தமல்லி சட்னியும் புதினா துவையலும் அரைச்சு வெச்சுகிட்டு புருஷன் எப்ப வருவான்னு வாசலையே பார்த்துகிட்ருக்கற சீரியல் குடும்ப பொண்ணுன்னு நெனைச்சிறாதீங்க...

வெத்தகொழம்பு எவ்ளோ நல்லா வெக்க தெரியுமோ, அத விட நல்லா குவாண்டம் பிசிக்ஸ் தெரியும்...ஹிண்டுல வர்ற க்ராஸ் வேர்ட் பஸ்ஸுல கிட்டத்தட்ட டெய்லி முடிக்கற அளவுக்கு ப்ரில்லியன்ட் பட்டாசு இவ.. வழக்கமா எல்லா ரொமான்டிக் ராஸ்கல்களுக்கும் சாஃப்டான ஒரு ஜோடி தான் கிடைக்கும்ங்கறது ஏ.வி.எம் ஆரம்பிச்ச காலத்துல இருந்து சம்பிரதாயம்! ஆனா இந்த சைந்தவி இருக்காளே... இவ மாதர் குல லஷ்கர் இ தொய்பா....! இவங்க ரெண்டு பேரோட காதல் கலாட்டாவதான் நீங்க இனிமே படிக்க போறீங்க...


இந்த வாலுங்களோட முழு கதையும் தெரியணும்னா இத படிச்சிட்டு வாங்க...Chocolate Pages from Sainthavi

1) I love you-by Sainthavi - Veliyoorkaran


"நிலம் நெருப்பு நீர் சிபி சைந்தவி

Veliyoorkaran & Rettaivals

There was an error in this gadget