- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 27 comments and to comment


அம்மாவும் அப்பாவும் இன்விடேசன் குடுக்க ஊருக்கு போயிருக்காங்க...திரும்ப வர்றதுக்கு நைட் எட்டு மணி ஆகும்...இவன் காலைல ஒம்பது மணிகெல்லாம் வீட்டுக்கு வந்துடறேன்னு சொன்னவன், இப்போ டைம் எட்டர ஆகுது..இன்னும் காணோம்..இப்டிதான் ஒவ்வொருதடவையும் லேட் பண்ணுவான் இடியட்..!

என்ன பண்ணலாம் சிபிக்கு ,என்னடா  சமைச்சு வெக்க என் தங்ககுட்டிக்குன்னு கேட்டா, கோழி சுக்காவும் ஆட்டு கால் பாயாவும்னு முனியாண்டி விலாஸ்ல ஆர்டர் பண்ற மாதிரி சொல்லுவான் வாலு...


கல்யாணத்துக்கு முன்னாடி லவ்வர்சா தனியா மீட் பண்றதுல ஒரு த்ரில் இருக்கதாங்க செய்யுது...வாழ்க்கைல யாருமே மிஸ் பண்ண கூடாத ஒரு த்ரில் அது..தப்பே இல்லாத ஒரு தப்பு அது..!


சிபியோட இன்னிக்கு புல்லா தனியா இருக்கபோறேன்..மனசு அப்டியே ஜிவ்வுன்னு இருந்துச்சு...இவன் வாலாச்சே..ஒழுங்கா இருப்பானா..? இல்லைனா கூட பரவால்ல..வாலா இல்லைனாதான் பிரச்சனை.என் சிபிகிட்ட எனக்கென்ன பயம்..!


அவன் போன வாரம் எடுத்து குடுத்த சாக்லேட் கலர் சுடிதார்ல, லேசா மேக் அப் போட்டுட்டு முப்பத்தி ஆறாவது தடவையா டிரெஸ்ஸிங் டேபிள் முன்னாடி நின்னப்ப தோணுச்சு...ஷால் வேணாம்னு...!


மேடம் கொரியர்...காலிங் பெல்..சிவபூஜைல கரடியான்னு கதவ தொறந்தவளுக்கு ஷாக்..!


வெளில சிபி கைல ஒரு ரோஜாபூவ வெச்சுகிட்டு அழகா சிரிச்சிட்ருந்தான்  ...அந்த ரோஜா பூ மாதிரியே...!வீட்ல யாரும் இல்ல...போயிட்டு...., சொல்லி முடிக்கறதுக்குள்ள போய் சோபால உக்காந்து டிவிய ஆன் பண்ணிட்ருந்தான்..  


அப்பறம்., இந்த மீசைய கழுத்து வரைக்கும் ஒழுக விட்ருப்பானே...அந்த ஆள் எங்க..?.வீட்ல இல்ல.?.எங்க அந்த ஆளோட பிகரு...? வரு...எங்கடி இருக்க ...?


பொருக்கி...எங்க அம்மாவ வாடி போடின்னு  சொல்லி கூப்ட்ட தொலைச்சிருவேன்..அப்பாவ நேர்ல பார்த்தா மட்டும் உளறி கொட்றது..வீட்ல இல்லைன்னு தெரிஞ்சா பெரிய ரௌடி மாதிரி கலாய்க்கறது...இருடா உன்ன ஒரு நாள் வசமா மாட்டிவிட்றேன்...!


ஏய் சிபி நீ எடுத்து குடுத்த டிரஸ் எப்டி இருக்குன்னு சொல்லேன்...?

அவன் முன்னாடி போய் நின்னு சுத்தி சுத்தி காமிச்சேன்..


சுப்பரா இருக்கு குண்டூஸ்..உனக்கு என்னடி என் ராஜாத்தி...!


ஏய்..நான் ஒன்னும் குண்டு இல்ல..ஜஸ்ட் பிப்டி த்ரீதான்...!


அடிபாவி..இப்டி பொய் சொல்ற..உன் நெஞ்ச தொட்டு சொல்லு நீ குண்டு இல்லைன்னு...!


ஏய் ச்சீ..அசிங்கமா பேசாத...! - சைந்தவி 


அடிப்பாவி..இப்போ அசிங்கமா பேசறது நீனா நானா...இப்டிதாண்டி அப்பாவி ஆம்பளைங்கள வில்லனாக்கறீங்க...!


அப்போ சிரிக்க ஆரம்பிச்சேன்..அதுக்கப்றம், சிரிச்சிக்கிட்டு மட்டும்தான் இருந்தேன்..


நெறைய பேசுனான்...அழகா பேசுனான்..பேசிட்டே இருந்தான்..என் அப்பா மாதிரியே பேசி மிமிக்ரி பண்ணி காமிச்சான்...என்ன ஹால்ல உக்கார வெச்சுட்டு அவனே காபி போட்டு கொண்டு வந்தான்...காதுகிட்ட ஐ லவ் யு சொன்னான்...என் புருவம் எவ்ளோ அழகா இருக்குன்னு அவ்ளோ அழகா சொன்னான்..இன்னொரு தடவ சொல்ல மாட்டானான்னு இருந்துச்சு...ரெண்டு தடவ பின்னாடிலேர்ந்து கட்டிபுடிச்சான்...


இவனோட இருக்கும்போது மட்டும் ஏன் என் வாழ்க்கை இவ்ளோ அழகா இருக்கு..?


சிரிக்க சிரிக்க உப்பு மூட்டை தூக்குனான்..தூக்கிட்டு முதுகுல என்னமோ குத்துதுடி என்னன்னு பாருன்னு சொல்லிட்டு சிரிச்சான்...பொருக்கி..!


ஆறு மாசத்துக்கு முன்னாடி சிபின்னு ஒருத்தன் இந்த உலகத்துல இருக்கறதே எனக்கு தெரியாது...இப்போ இவன தவிர என் உலகத்துல வேற யாரும் இருக்கறதா எனக்கு தோணல...பொம்மைய தொலைச்ச கொழந்த மாதிரி இவன் இல்லைனா எனக்கு அழுக வருது...நான் எப்ப குழந்தையானேன்...எனக்கு என்னாச்சு..என்னை என்ன பண்ணிட்ருக்கான் இவன்..?


இதுக்கு என்னை பேர்னு கூட எனக்கு தெரில..,என்னை பேர் வேணா இருந்துட்டு போகட்டும்...!


சிபி எனக்கு வேணும்..என்கூடவே இருக்கணும் .அவ்ளோதான்..


எப்பவும் சிபிதான் என்கிட்டே கேட்டு கெஞ்சுவான்..


இன்னிக்கு நான்..,


"ஏய் சிபி...வந்து..வந்து...எனக்கு...எனக்கு...,"நான் சொல்லி முடிக்கறதுக்கு.....!


A Veliyoorkaran Article.

Posted by Veliyoorkaran - - 33 comments and to comment
அம்மா நூறு டெசிபலில் கத்தினாள்.

"சைந்தவீ...ஃபோன் அடிக்குது பாரு..."

சைந்தவி எரிச்சலாக வந்தாள். அப்பாவுக்கான ஃபோனா இருக்கும்.
இன்னும் எல்லார்ட்டையும் லேன்ட்லைன் நம்பர் கொடுக்கற புண்ணியவான்.

'ஹலோ.."
"சைந்தவிஇருக்காங்களா..?"
"நீங்க..?"

"நாங்க ஆர்டிஓ  ஆஃபீஸ்ல இருந்து பேசறோம்..இன்னும் இந்த வருஷம் நீங்க டாக்ஸ் ஃபைல் பண்ணலை.இது சட்டப்படி குற்றம்.இதுக்கு எகனாமிக் அஃபன்ஸ் ஆக்ட் 568 சி படி எவ்வளோ அபராதம் தெரி..."

"ஆர்டிஓ ஆஃபீஸ்ல இருந்து டேக்ஸா...ஹேய் ஹேய்...இரு...!
யார் இது...?
யேய்சிபி..நீதான...!"

"ஹா..ஹா...கண்டுபுடிச்சுட்டியா...எனக்கு குடுக்க வேண்டியதை குடுத்திருந்தா நான் ஏன் உன் வீட்டுக்கு  ஃபோன் பண்ணி கேக்கப்போறேன்"

"அடப் பாவி...அதுக்காக உன்னை யாரு லேண்ட் லைனுக்கு பண்ண சொன்னது?அம்மாவுக்குத் தெரிஞ்சா...!
சரி எங்க வரணும் சொல்லு வந்து குடுத்துத் தொலைக்கிறேன்"

"சரியா அரை மணி நேரத்துல உங்க வீட்டுப் பக்கத்துல இருக்கிற பஸ் ஸ்டாப்ல வந்து நில்லு..நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்...!"

யாருடி அது ஃபோன்ல...?
ரிசீவரைப் பொத்தி..."உனக்குதான்மா...!
ரிசீவரை அம்மா கையில் கொடுத்தாள்.

"ஹலோ யாரு.."

சிபி உஷாரானான்.
"இந்த டியூனை காப்பி பண்ணனும்னா ஸ்டார் மற்றும் ஒன்பதைஅழுத்துங்க.
வேண்டாம்னா வீட்ல டேப் ரிக்கார்டர்ல போட்டு கேளுங்க.." 
ஃபோனை டக்கென வைத்துப் பெருமூச்சு விட்டான்.
ராட்சசி...!

சரியாக அரைமணியில் சைந்தவி பச்சை சல்வாரில் பஸ் ஸ்டாப்பை அடைந்திருந்தாள். கண்ணுக்கெட்டின தூரம் வரையில் யாரும் வரவில்லை ஒரே ஒரு நகர பேருந்தை தவிர. எங்க போய் தொலைஞ்சான் இந்த சிபி என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே பஸ்ஸினுள் இருந்து குரல் கேட்டது...

சைந்தவி..வா ஏறு...!
ராஸ்கலே தான்.
"வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்னு சொன்ன...!" - சைந்தவி.
"ஆமா அதான் பிக்கப் பண்ணிட்டேன்ல..பஸ்லன்னு சொல்ல மறந்துட்டேன்...!"

அடக்கடவுளே இவனோட எப்படி லைஃப் முழுக்க ..என்று யோசித்த படியே சிபியோடு பின் சீட்டில் அமர்ந்தாள்.

சரி இப்பக் குடு - சிபி
"அய்யோ பஸ்லயா...என்ன விளையாடறியா?"

"சரி! அடுத்த ஸ்டாப்ல ஒரு பார்க் வரும்..யாரும் இருக்க மாட்டாங்க!"

சிபி ... உனக்கு விவஸ்தையே கிடையாது!

சரி இறங்கினவுடனே குடு!

சிபி...நீ அடங்க மாட்ட! முதல்ல என்னை வீட்ல கொண்டு போய் விடு. அம்மா தேடுவாங்க!

அடிப்பாவி! நேத்து அப்படி கொஞ்சினே!

"ம்ம்..அது ஃபோன்ல..போர்வையை ஃபுல்லா போர்த்திட்டு ஒரு தைரியத்துல சொல்லிட்டேன்.அதுக்காக இப்படியா பப்ளிக்ல..! உன்னை ரெண்டு நாள் காயப்போட்டாதான் சரிப்படுவ!"

"அப்போ இன்னைக்கு கிடையாதா?"

"இன்னிக்கு அதுக்கு சண்டேடா செல்லம்....இப்போ சமர்த்தா என்னை வீட்ல கொண்டு போய் விடுவியாம்..இல்லைன்னா...இந்த வாரம் முழுக்க சண்டே தான்..!"

சே..என்றிருந்தது சிபிக்கு. எவ்வளவு ஆசையாக வந்தோம். -ஜஸ்ட் ஒன்னு கூட கிடைக்கலையே என வெறுப்பு உச்சந்தலையில் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தது.

ம்ஹ்ம்...ஓகே! வா உங்க வீட்டுக்குப் போகலாம்!

"வீட்டுக்கு உன் கூடவா...அவ்வளோதான் அம்மா தலைலயே ரெண்டு வைப்பா... இதே பஸ்ல ரிடர்ன் போயிக்கலாம்...ஸ்டாப்ல இறங்கி என் வீட்டுக்குப் போக எனக்குத் தெரியும். சார் கவலைப்படாதீங்க...!"

"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்! வா " என்று முதலில் சைந்தவியை அனுப்பி வைத்து விட்டு சற்று நேரம் கழித்து சிபி சைந்தவி வீட்டுக்கு வந்தான்.

"வாங்க மாப்ப்ள...அப்பா எதுவும் தகவல் சொல்லி விட்டாரா! திடு திப்புன்னு வந்துருக்கீங்க...ம்மா சைந்தவி... அம்மாட்ட சொல்லி காஃபி போட சொல்லு!"

"இல்லை மாமா வந்து, அப்பா அட்வான்சுக்கு மண்டபம் குடுத்துடீங்கலான்னு கேக்க சொன்னார்...இல்லை இல்லை.. மண்டபத்துக்கு அட்வான்ஸ்......."

சைந்தவி அப்பாவோட மீசையை பார்த்து, சிபி நாக்கு பயத்துல உளறி கொட்ட ஆரம்பித்தது... ஆறாங்கிளாஸ் பயாலஜி டீச்சரைத் தவிர சிபி இப்படி தடுமாறி அவனே பார்த்ததில்லை.

" ஹா ஹா புரியுது மாப்ள  ..நீங்க சைந்தவிட்ட பேசிட்டு இருங்க..நான் இதோ வந்துடறேன்!"

மீசை வைத்த கதர் துண்டு பார்ட்டியானாலும் மேன்மக்கள் மேன்மக்களே.

ஹாலில் யாருமில்லை. சைந்தவி அம்மா வர அம்பது  வினாடிகளாவது ஆகும். சடாரென சைந்தவியை இடுப்போடு அணைத்து சத்தமே இல்லாமல்  சைந்தவிக்கு காது மூக்கு கண் எல்லாம் சிவக்க ரெண்டு முத்தங்கள் கொடுத்தான் சிபி.சைந்தவியால் திமிறக்கூட முடியவில்லை...அட்ரினலின் உச்சத்தில் இருந்தது.

ராட்சஸன்...சாதிச்சுட்டான் என நினைத்து உதட்டை துடைத்து கொள்ளவும், அம்மா  காஃபி கொண்டு வரவும் சரியாக இருந்தது.

"என்னடி பேந்த பேந்த முழிச்சுட்டு இருக்க...மாப்ளக்கு காஃபியை கொடு...

சைந்தவீ....மாப்ளைக்கு ஸ்வீட் கொடுத்தியா"

ரெண்டு ஸ்வீட் அவனே..ஸாரி! அவரே எடுத்துக்கிட்டாரும்மா ...!

என்னடி உளர்ற...?

உள்ளே இருந்து சவுண்ட் வந்தது... சைந்தவி அப்பாதான்...

"ஏய்...அவங்க மாத்தி மாத்தி உளறிக்கட்டும்...நீ விட்ரு!"

A article by Rettaivals.

Posted by Veliyoorkaran - - 20 comments and to comment


சைந்தவி சிபி...

இந்த பேர படிச்ச உடனே கார்னேட்டோ ஐஸ்க்ரீம காதல்ல கரைச்சு இதயத்துக்குள்ள ஊத்துன மாதிரி இருக்கா..அப்போ நீங்களும் சிபி சைந்தவி ஜோடிய காதலிக்கற காதலர்கள்..உள்ள வாங்க பாஸ்...சிபியையும் சைந்தவியையும் உங்கள்ளுக்கும் எனக்கும்  மட்டும் இல்ல...காதல்னா காரி துப்புர கம்னாட்டிங்களுக்குகூட இந்த காதல் ஜோடிய புடிக்கும்.. ஒரு சின்ன இடைவெளிக்கு பிறகு இவங்க ரெண்டு பெரும் அடிக்க போற ஜாலி கலாட்டகள நீங்க மறுபடியும் ரசிக்க போறீங்க...இந்த பதிவ புதுசா படிக்கறவங்களுக்கு சைந்தவி சிபியா பத்தின ஒரு சின்ன அறிமுகம்..


சிபி :


ஒவ்வொரு வெள்ளிகிழமை காலைலயும் கல்யாணம் ஆகாத பிகருங்க கருக்கல்ல குளிச்சிட்டு ஈரத்தலையோட  சாமி முன்னாடி நின்னு மணிக்கணக்கா வேண்டறது சிபி மாதிரி ஒரு ரொமண்டிக் புருஷன் தனக்கு கெடைக்கணும்கரதுகாகதான்..அதுக்காக ரேபான் க்ளாஸ் போட்டுக்கிட்டு எல்பாசோ வாசனைல கார்ல வந்து எறங்கி இங்க்லீஸ்ல தும்முற ஹை கிளாஸ் டிக்கெட் இவன்னு தப்பா நெனைச்சிறாதீங்க... ரெண்டு கட்டிங் கூட போய்ட்டா இவன் பேசற கெட்ட வார்த்தைல பாரே நாறும்...இன்னும் ரெண்டு கட்டிங் கூட போயிட்டா ஊரையே நாரடிச்சிருவான்...அதே மாதிரி பிகருங்க இவன்கிட்ட பத்து நிமிஷம் பேசுனா போதும்...வீட்டுக்கு போய் நைட் பெட்லேர்ந்து உருண்டு கீழ விளர வரைக்கும் சிரிச்சுகிட்டே இருப்பாங்க...அவ்ளோ ஜோக் அடிப்பான் இந்த ரொமண்டிக் ராஸ்கல்...இந்த கதைய படிக்க போற பசங்களுக்கு சிபிய புடிக்குதோ இல்லையோ...பிகருங்களுக்கு கண்டிப்பா புடிக்கும்...அப்டி ஒரு ரொமாண்டிக் இடியட்...நீயும்தான் இருக்கியே மடசாம்ப்ரானின்னு பசங்க தான் கேர்ல் பிரெண்டுகிட்ட கொமட்டுகுத்து வாங்காம இருக்கணும்னா இந்த கதைய உங்க கேர்ல் பிரெண்ட்ஸ படிக்க விட்ராதீங்க...!


சைந்தவி


இந்த பேர படிச்சோன்னையே சும்மா ஜிவ்வுங்காதா...? அதான் சார் சைந்தவி..சிபிய கல்யாணம் பண்ணிருக்கற பொண்ணு...இல்ல இல்ல..சிபிய கல்யாணம் பண்ணிருக்கரதுக்காக பொறந்த பொண்ணு..இவ ரொம்ப அழகெல்லாம் இல்ல...ஆனா,ஸ்பென்சர்ல  இவ க்ராஸ் பண்ணி போனா கண்டிப்பா ஒரு தடவ திரும்பி பார்க்கலாம்..அப்டி ஒரு அழகு...நம்ம பொண்டாட்டி இப்டி இருப்பாளா அப்டி இருப்பாளான்னு தமிழ்நாட்டு பசங்க மல்லாக்க படுத்து  பைனல் எக்ஸாம்க்கு  மொதோ நாள்  யோசிச்சு வெச்ச எல்லாமாதிரியும் இருப்பா இவ...தங்கமான பொண்ணு...அதுக்காக கொத்தமல்லி சட்னியும் புதினா துவையலும் அரைச்சு வெச்சுகிட்டு புருஷன் எப்ப வருவான்னு வாசலையே பார்த்துகிட்ருக்கற சீரியல் குடும்ப பொண்ணுன்னு நெனைச்சிறாதீங்க...

வெத்தகொழம்பு எவ்ளோ நல்லா வெக்க தெரியுமோ, அத விட நல்லா குவாண்டம் பிசிக்ஸ் தெரியும்...ஹிண்டுல வர்ற க்ராஸ் வேர்ட் பஸ்ஸுல கிட்டத்தட்ட டெய்லி முடிக்கற அளவுக்கு ப்ரில்லியன்ட் பட்டாசு இவ.. வழக்கமா எல்லா ரொமான்டிக் ராஸ்கல்களுக்கும் சாஃப்டான ஒரு ஜோடி தான் கிடைக்கும்ங்கறது ஏ.வி.எம் ஆரம்பிச்ச காலத்துல இருந்து சம்பிரதாயம்! ஆனா இந்த சைந்தவி இருக்காளே... இவ மாதர் குல லஷ்கர் இ தொய்பா....! இவங்க ரெண்டு பேரோட காதல் கலாட்டாவதான் நீங்க இனிமே படிக்க போறீங்க...


இந்த வாலுங்களோட முழு கதையும் தெரியணும்னா இத படிச்சிட்டு வாங்க...Chocolate Pages from Sainthavi

1) I love you-by Sainthavi - Veliyoorkaran


"நிலம் நெருப்பு நீர் சிபி சைந்தவி

Veliyoorkaran & Rettaivals