- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 40 comments and to comment


கொஞ்ச நேரம் சும்மா இருடா டேய்..ஐயோ எழுத விடுறா எருமைமாடு...இவன் எப்பவுமே இப்டிதாங்க...சரியான அறுந்த வாலு.. சும்மாவே இருக்க மாட்டான் பன்டி ...! சரி நான் விசயத்துக்கு வர்றேன்..என் பேரு சைந்தவி..சிபியோட வொயிப்  ..இல்லை இல்லை...சிபியோட செல்ல காதலி..ஆமாம்..நாங்க ரெண்டு பெரும் இப்பவும் லவ் பண்ணிகிட்ருக்கோம்..எனக்கு இந்த உலகத்துல ரொம்ப புடிச்ச விஷயம் நாலுங்க...மொதோ ரெண்டு விஷயம் என் சிபிய உயிருக்குயிரா காதலிக்கறது, மூணாவது விஷயம் இவன பத்தியே நெனைச்சிகிட்ருக்கறது ...நாலாவது இவன பத்தி எதாச்சும் என் டைரில எழுதி வெக்கறது... லைப்ல இருக்கற ரொம்ப அழகான விசயங்கள்ல ஒன்னு மனசுக்கு புடிச்சவங்கள பத்தி டைரில எழுதி வெச்சு, கொஞ்ச நாள் கழிச்சு  தனியா உக்காந்து ரசிச்சு படிக்கறது.! நல்ல அடைமழை நேரத்துல நைட்ல வீட்டு ஜன்னல் ஓரமா நின்னு மழைய வேடிக்க பார்த்துகிட்ருக்கற  லவ்வர பின்னாடிலேர்ந்து கட்டிபுடிச்சு சூடா ஐ லவ் யு சொல்றமாடி ஒரு ஜில் பீலிங் அது.. !


என் டைரிய இதுவரைக்கும் என் சிபியே படிச்சது கெடயாது..நீங்க படிக்க போறீங்க...நான் அவன்கிட்ட படிக்க சொல்லி  குடுக்கவும் மாட்டேன்...குடுத்தா அதையும் கன்னாபின்னான்னு கிண்டல் பண்ணி சிரிப்பான் பொருக்கி..என் டைரில நான் என்னென்னமோ கிறுக்கி வெச்சிருப்பேன்..ஆனா, எல்லா கிறுக்கல்லையும் என் சிபி இருப்பான்..என் செல்ல புருஷன்.. இவன ஸ்வீட் ராஸ்கல்னு சொன்னா பத்தாதுங்க..இவன் அதுக்கும் மேல..அதுக்காக இவன சினிமால வர்ற ரொமண்டிக் ஹீரோ மாதிரின்னு நெனைச்சிடாதீங்க..நான் ஐ லவ் யூ சொன்னா திரும்ப ஐ லவ் யூ சொல்லனும்னு கூட தெரியாம ஓகே ஓகே தேங்க்ஸ்ன்னு சொல்ற மடையன் இவன்..யாரையாச்சும் கிண்டல் பண்ணனும்னா மட்டும் இவனுக்கு வாய் வங்காளம் முட்டும் விரியும்...ஆனா ஒழுங்கா ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம ஒரு ஐ லவ் யூ சொல்ல வராது...ஏண்டா ஒரு தடவ கூட ஐ லவ் யூ சொல்ல மாட்டேங்கறேன்னு கேட்டா வெக்கமா இருக்குடின்னு சொல்லி வழிவான்..!


ஆனா நல்லவன்...சரியான வாலு..இப்போ ரூம்ல உள்ள தூங்கிகிட்ருக்கான் ..திடீர்னு ஒருநாள் என் வாழ்க்கைக்குள்ள  வந்து அதே வேகத்துல என் வாழ்க்கையாகி போனவன்.  எனக்கு கலைஞர் அடுத்த எலெக்சன்ல ஜெயிக்கிறாரா, எந்திரன் படம் ஓடுமா,சச்சின் எப்போ  அடுத்த செஞ்சுரி அடிப்பாரு இது எத பத்தியும் கவலை இல்ல..எனக்கு என் சிபி ஆபிஸ் முடிஞ்சு சீக்கிரம் வீட்டுக்கு வந்துரனும், என் கூடவே இருக்கணும், அது போதும்..அவனோட விளையாண்டுகிட்டே அவன் அடிக்கற ஜோக்குக்கு சிரிச்சுகிட்டே அடுத்த நாள் அவன ஆபிஸ்க்கு அனுப்பனும்.அனுப்பிட்டு எப்படா அஞ்சு மணி வரும் என் சிபி வருவான்னு வெயிட் பண்ணனும்..இதுதான் என் சந்தோசம், என் ஆசை, என் வாழ்க்கை, எல்லாமே...!

இவன பேச விட்டா பேசிகிட்டே இருப்பான்..ஒரு நாளைக்கு முப்பது ஜோக் சொல்லுவான்..எங்கதான் இவனுக்கு இவ்ளோ ஜோக் கெடைக்குதோ தெரியாது..என்கிட்டே உனக்கு என்னடா புடிச்சிருக்குன்னு கேட்டா நீ கோவத்துல சொல்ற மயிறுதாண்டின்னு சொல்லி சிரிப்பான்.ஒரே ஒரு சிகரெட் அடிக்கறதுக்கு என்கிட்டே பெர்மிசன் வாங்க கூச்சமே இல்லாம என் காலுல விழுந்து கெஞ்சி சிரிக்க வெச்சிருவான்......நைட் மூணு மணிக்கு எந்திருச்சு உக்காந்து என் முகத்தையே பார்த்து ரசிச்சிட்ருப்பான் ..அது தூங்கற உனக்கு  எப்டி தெரியும்னு கேக்காதீங்க..எனக்கு தெரியும்..என் சிபி எப்போ என்ன பண்ணாலும் எனக்கு தெரியும்..!


அயோயோ சொல்ல மறந்துட்டனே என் குடும்பத்துல இவன் வாய்ல விழாத ஆளே கெடயாதுங்க...எல்லாரையும் நாராசமா கலாய்ப்பான்..அதுவும் எங்கப்பான்னா இவனுக்கு அவ்ளோ புடிக்கும்..ரசிச்சு ஒட்டுவான்...எங்கப்பா போட்டோவ பார்த்தாலே இவனுக்கு சிரிப்பு வந்துரும்..டேய் பாவம்டா வயசானவர் விட்ருடான்னு சொன்னாலும் கேக்கமாட்டான்..உங்கப்பன கிட்டத்துல பார்த்தா பூர்ணம் விஸ்வநாதனுக்கே உங்கப்பன கலாய்க்கனும்னு தோணும்டின்னு சொல்லி  ஓட்ட ஆரம்பிச்சிருவான்.ஐயோ எவ்ளோ கெஞ்சினாலும் விடமாட்டான்...பாவி...!


ஒரு நிமிஷம் இருங்க..எரும இப்போ  என்ன எழுதவிடாம அரைதூக்கத்துல  ஏதேதோ பேச ஆரம்பிச்சிருச்சு..ஏய் சொல்ல மறந்துட்டனே..இவன் பேச ஆரம்பிச்சிட்டா என்ன சொன்னாலும் இவன் வாய மூட முடியாது.ஆனா ஒரு விரல வாய்ல வெச்சு பச்சபுள்ளைங்கள  மெரட்ற மாதிரி ஒரு வார்த்தை சொன்னா மட்டும் அப்டியே முயல்குட்டி மாதிரி திருதிருன்னு முழிச்சிட்டு அப்டியே தூங்கிருவான்.இருங்க சொல்லிட்டு வந்துடறேன்...!


ஏய் சிபி...


உஷ் பேசாத...! தூங்கு.!


தொடரும்....! 
------------------------------------------------------------------------------------------------------------------------

சைந்தவி - சிபி காதல் ஜோடியின் அறிமுகம் இல்லாத நண்பர்கள் ரெண்டு விஷயம் பண்ணுங்க..பர்ஸ்ட் கீழ இருக்கற இந்த இந்த மூணு லிங்கயும் படிங்க..ரெண்டாவது உடனே உங்க மனசுக்கு புடிச்சவங்களுக்கு போன் பண்ணி சும்மா உன் குரலை கேக்கணும் போல இருந்துச்சு அதான் போன் பண்ணேன்னு சொல்லி அவங்க எதிர்பார்க்காதப்போ சர்ப்ரைசா ஒரு ஐ லவ் யூ சொல்லுங்க...அது நைட் மூணு மணியா இருந்தாலும் சரி.. ஏன்னா  காதலுக்கு வாட்ச் கட்ட தெரியாது சார்...நம்ம இஷ்டத்துக்கு எப்போ வேணா காதலிக்கலாம்...!
------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு சின்ன இன்ட்ரோ., 

இப்டி ஒரு பொண்ணு நமக்கு கெடைக்காதான்னு எல்லா பசங்களையும் ஏங்க வெக்கற ட்ரீம் கேர்ல் நம்ம சைந்தவி...ச்சே செம பையன்ப்பா சிபி.. சைந்தவி செம லக்கினு அத்தன பிகருங்களையும் பொறாமைப்பட  வெக்கற சாக்லேட் பையன் சிபி..கியூட் ரொமாண்டிக் கப்புள்ஸ்..இவங்க ரெண்டு பேரும்தான் சார் நம்ம கதைக்கு ஹீரோ ஹீரோயின்...இந்த கதைய தொடரா நானும் ரெட்டைவால்சும் கொஞ்ச நாளைக்கு முன்னாடி  எழுதுனோம்..எல்லாரும் சேர்ந்து எங்க ரெண்டு பேரையும் வாரி அணைச்சு கண்ணுல ஒத்திகிட்டீங்க..எங்க எழுதுக்கள நீங்க இன்னும் ரசிக்கறீங்கங்கறதுக்கு   ஒரு உதாரணம் ஒரு வருசத்துக்கு முன்னாடி எழுதுன பதிவுகளுக்கு முந்தாநேத்து வரைக்கும் வந்துகிட்ருக்க ரசனையான கமெண்ட்ஸ்..அதான் ஒரு சின்ன ஆசை...செகேன்ட் ரவுன்ட் ட்ரை பண்ணலாமேன்னு...அதுக்கு முன்னாடி  இதையும் படிச்சு பாருங்க.. படிச்சிட்டு சொல்லுங்க...!


------------------------------------------------------------------------------------------------------------------------
வெளியூர்க்காரன் 

40 Responses so far.

 1. ஐ செம ஜாலியா எழுதியிருக்கடா மச்சான்...!

  //.யாரையாச்சும் கிண்டல் பண்ணனும்னா மட்டும் இவனுக்கு வாய் வங்காளம் முட்டும் விரியும்...ஆனா ஒழுங்கா ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம ஒரு ஐ லவ் யூ சொல்ல வராது//

  ;))))))))))

  பன்டின்னா என்னடா?

 2. மேரேஜ் ஆயிடுச்சுன்னு கேள்வி பட்டேன் வாழ்த்துக்கள்டா மச்சான்

  சொல்லவே இல்ல :(

 3. மறுபடியும் லவ் ஜூஸ் பிழிய ஆரம்பிச்சுட்டே...

  சைந்தவியோட எழுத்து இன்னும் க்யூட்!

 4. @@@ப்ரியமுடன் வசந்த் said...
  பன்டின்னா என்னடா?///

  பிகருங்க செல்லமா திட்ற வார்த்தைடா அது..! தக்காளி இது தெரியாம நீ என்னத்த கல்யாணம் பண்ணி, புள்ள பெத்து, அத படிக்க வெச்சு, அதுக்கு கல்யாணம் பண்ணி குடுத்து, அதுக்கு பொறக்கற புள்ளைய படிக்க வெச்சு..!...என்னமோ போ...! :)

 5. @@ப்ரியமுடன் வசந்த் said...
  மேரேஜ் ஆயிடுச்சுன்னு கேள்வி பட்டேன் வாழ்த்துக்கள்டா மச்சான்

  சொல்லவே இல்ல :(/////

  எனக்கு கல்யாணம் ஆனத எனக்கே யாரும் சொல்லலையேடா ..நான் எப்டி உன்கிட்ட சொல்லுவேன்...! :)

  நிச்சயம் முடிஞ்சிருச்சு மச்சி...ஜனவரி மாசம் கல்யாணம்...டிசெம்பர் ஊருக்கு போறேன்..இன்னும் நேர்ல பார்க்கல என் சைந்தவிய...கடலைல ஓடிகிட்ருக்கு வாழ்க்கை...! :)

 6. @@Rettaival's said...
  மறுபடியும் லவ் ஜூஸ் பிழிய ஆரம்பிச்சுட்டே...
  சைந்தவியோட எழுத்து இன்னும் க்யூட்!//

  மச்சி வாடா அடுத்த ரவுண்ட் ஆரம்பிப்போம்...! :)

  உன்னோட அகல்யா லெட்டெர படிச்சொன்னதான் எனக்கு இத எழுதற மூடே வந்துச்சு...! அடுத்த லேட்டர நீ எழுது..! நேயர் விருப்பம் ..! :)

 7. //ஏய் சிபி...

  உஷ் பேசாத...! தூங்கு.!//

  அடங்கொப்பரானே..!! இவ்வளோ அப்பாவியா..!!

  ஆனாலும் சூப்பர் டைரி..

 8. அது தூங்கற உனக்கு எப்டி தெரியும்னு கேக்காதீங்க..எனக்கு தெரியும்..என் சிபி எப்போ என்ன பண்ணாலும் எனக்கு தெரியும்..!]]


  காதல் காதல் காதல்

  இந்த இடம் தாங்க சங்ஸ் டைரில ரொம்ப பிடிச்ச இடம்

  ஜமாய்ங்க

 9. ஆடுத்தவங்க டைரி படிக்கறது தனி சுகம்தான்.அதுவும் சைந்தவி டைரி சூப்பர்....

 10. செம கலக்கல்..

  இத படிக்கும் போதே கல்யாணம் பண்ண ஆசை வருதே...

  ஆனா என்ன பண்றது .. எங்கப்பன் இருக்கானே பயலுக்கு 27 வயசு ஆகுதே.. ஒரு கல்யாணத்த பண்ணி வைப்பமேன்னு ஒரு அக்கறை இல்லாம இருக்காரு..

  என் செல்ல ராசாக்களா.. சைந்தவி மாத்ரி உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணு இருந்தா சொல்லுங்கப்பா.. நான் ரெடி இப்பவே...

 11. பாஸ் நிறைய எழுதுங்க நாங்களும் உங்க எழுத்தை நேசித்து வாசித்துக் கொண்டு தானிருக்கிறோம்.

  //எனக்கு கல்யாணம் ஆனத எனக்கே யாரும் சொல்லலையேடா ..நான் எப்டி உன்கிட்ட சொல்லுவேன்...! //

  ஹா..ஹா.. ஹா.. அருமை!

 12. அனு says:

  சிபி, சைந்தவி ரெண்டு பேருமே மிகவும் ரசிக்கப்பட்டு மனதில் அழுத்தமாக பதிந்த கரெக்ட்டர்ஸ்..

  அவங்கள வச்சு இன்னொரு தொடர் போட்டா அது அந்த அழுத்தத்தை கொஞ்சம் dilute பண்ணிடுமோன்னு ஒரு சின்ன உறுத்தல்..

  பாப்பு & விஷ்வா-வை வச்சு continue பண்ணியிருக்கலாமோ??

  [ என்ன இருந்தாலும் சைந்தவி மாதிரி வருமா-ன்னு நீங்க கேக்குறது புரியுது.. :) ]

 13. KANA VARO says:

  மறுபடியுமா "திரு" வெளியூரு?

  நீங்களெல்லாம் இப்ப பெரிய மனுசங்க... இனி "திரு" "மிஸ்டர்" எல்லாம் போட்டு தான் கூப்பிடனும். (பிரபல பதிவர் ஆயிட்டீங்க எல்லோ!

  வெளியூரு,
  உங்க எழுத்துக்கு என்னைக்குமே தனி ரசிகர் பட்டாளம் இருக்கும். உங்க எழுத்து தான் என்னை முன் பின் அறிமுகம் இல்லாத உங்க கிட்ட கூட்டியாந்திச்சு.

  சைந்தவி தொடருக்காக வெய்டிங்.....

  கலக்குங்க பாஸ்....

 14. Jey says:

  அடுத்த ரவுண்டா...ஆடுங்க.. ஆடுங்க...

 15. KANA VARO says:

  சொல்ல மறந்துட்டன் அண்ணாச்சி, நம்ம விஜய் இருக்கிறார் எல்லோ! (எந்த விஜயா? அட பாவி அதுக்குள்ளே மறந்திட்டியா?)

  அவரு இப்ப "காவல் காதல்" "வேலாயுதம்" "திரீ இடியட்ஸ்" பெயர் வைக்காத பத்து பதினைஞ்சு படத்தில நடிக்கிறார். அது பற்றியும் எதாவாது ஒரு பதிவு சுவாரசியமா போடுங்களேன்.

 16. @@@அனு said...
  சிபி, சைந்தவி ரெண்டு பேருமே மிகவும் ரசிக்கப்பட்டு மனதில் அழுத்தமாக பதிந்த கரெக்ட்டர்ஸ்.. அவங்கள வச்சு இன்னொரு தொடர் போட்டா அது அந்த அழுத்தத்தை கொஞ்சம் dilute பண்ணிடுமோன்னு ஒரு சின்ன உறுத்தல்..//

  Yep..still I too have the same doubt..! :)
  விடுங்க...யாமிருக்க பயமேன்...அப்டியெல்லாம் டைளியுட் ஆக விட மாட்டோம் ...சொதப்பற மாதிரி தெரிஞ்சா வந்து சொல்லுங்க...அப்டியே தொடர டிராப் பண்ணிடுவோம்..!
  Becoz,We respect the feelings of "Sainthavi Fans Club"..! :)

 17. @@@@KANA VARO said...
  வெளியூரு,
  உங்க எழுத்துக்கு என்னைக்குமே தனி ரசிகர் பட்டாளம் இருக்கும்.///

  இலங்கை பதிவர்கள் சில மாதங்களுக்கு முன்னாடி, வெளியூர்க்காரன தலைல தூக்கி வெச்சு கொண்டாடுனதுக்கு காரணம், நீங்களும் திரு புல்லட் அண்ணாச்சியும்தான்...! அந்த அன்புக்கு என்றென்றைக்கும் நான் நன்றிகடன்பட்ருக்கேன்...அந்த அன்பும் , ரசிகர் பட்டாளமும் எனக்கு இல்ல வரோ...அது சைந்தவிக்கு...! விடுங்க செகேன்ட் ரவுண்ட்ல ஒரு கை பார்த்துடுவோம்...!

  இனிமே ட்ரீம் கேர்ள்னு சொன்னா உடனே எல்லாருக்கும் சைந்தவி பேர்தான் நினைவுக்கு வரணும்....:)

 18. @ All..//

  கூடிய விரைவில் ரெட்டைவால்ஸின் எழுத்தில் சைந்தவியின் சாக்லேட் பக்கங்கள் அடுத்த பகுதி...! :)

 19. பயங்கரமா ரசிச்சு எழுதி இருக்கறீங்க வெளியூரு. ஆரம்பத்துல இருந்து பதிவு முடியற வரைக்கும், சைந்தவி ரசிச்சு ரசிச்சு எழுதி இருக்காங்க.

 20. Jey says:

  //அருண் பிரசாத் said...
  பயங்கரமா ரசிச்சு எழுதி இருக்கறீங்க வெளியூரு. ஆரம்பத்துல இருந்து பதிவு முடியற வரைக்கும், சைந்தவி ரசிச்சு ரசிச்சு எழுதி இருக்காங்க.//

  அருண் ஏத்திவிடு...., இன்னும் நல்லா...

 21. //லைப்ல இருக்கற ரொம்ப அழகான விசயங்கள்ல ஒன்னு மனசுக்கு புடிச்சவங்கள பத்தி டைரில எழுதி வெச்சு, கொஞ்ச நாள் கழிச்சு தனியா உக்காந்து ரசிச்சு படிக்கறது.!

  குடுத்தா அதையும் கன்னாபின்னான்னு கிண்டல் பண்ணி சிரிப்பான் பொருக்கி.

  நான் ஐ லவ் யூ சொன்னா திரும்ப ஐ லவ் யூ சொல்லனும்னு கூட தெரியாம ஓகே ஓகே தேங்க்ஸ்ன்னு சொல்ற மடையன் இவன்..

  ஆனா ஒழுங்கா ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம ஒரு ஐ லவ் யூ சொல்ல வராது...

  அது தூங்கற உனக்கு எப்டி தெரியும்னு கேக்காதீங்க..எனக்கு தெரியும்..என் சிபி எப்போ என்ன பண்ணாலும் எனக்கு தெரியும்..!

  அப்டியே முயல்குட்டி மாதிரி திருதிருன்னு முழிச்சிட்டு அப்டியே தூங்கிருவான்.//

  Filled with the cute romance and lovable pranks.... :)
  நல்லா இருக்கு மச்சி !

  //அருண் ஏத்திவிடு...., இன்னும் நல்லா...//

  Veli would not oblige to this,but he is worth it !

 22. நல்லாயிருக்குனு சொன்னா..செருப்புல அடிப்பே..
  நல்லாயில்லேனு சொன்னா.. பட்டாபட்டிய கிழிப்ப..
  இப்ப நான் என்ன பண்றது?..


  கலக்கல்.. நல்லாயிருக்கு..

  யோவ்.. பண்டி.. browsing center-ல வந்து கமென்ஸ் எல்லாம் போட்டிருக்கேன்.. பார்த்து கவனிச்சுக்க..ஹி..ஹி

 23. Murali says:

  சார்!! மனைவி அப்படினு ஒருத்தி வந்தா. இப்படிதான் வரனும் என்ன ஏங்க வச்சதே உங்க சைந்தவி. ஒரு பெண்ணின் உணர்வுகளை ஒரு ஆண் எழுத்தர் இவ்வளே அழகா சொல்ல முடியுமா?? முடியும் காட்டி இருக்கிங்க. ஐ சலியுட்!!!

 24. //நிச்சயம் முடிஞ்சிருச்சு மச்சி...ஜனவரி மாசம் கல்யாணம்//

  அப்போ திரிசாவோட வாழ்க்கை ?!

 25. தேசாந்திரி-பழமை விரும்பி said...
  //நிச்சயம் முடிஞ்சிருச்சு மச்சி...ஜனவரி மாசம் கல்யாணம்//

  அப்போ திரிசாவோட வாழ்க்கை ?
  ///////////////////

  வெறித்தனம்.

 26. Ananth says:

  இப்ப தான் தெரியுது திரிஷா ஏன் கோகெய்ன் எடுத்தாங்கன்னு.

 27. Ananth says:

  சாரி மக்களே. சைந்தவின்னு ஒரு பொண்ணு, வெளியூர்க்கிட்ட மாட்டிகிட்டு ,
  கஷ்டப்படப் போகுதேன்னு தான்னு தான் திரிஷா கோகெய்ன் எடுத்ததா இப்ப தான் BBC ல சொன்னாங்க.

  அது எப்படிங்க யாருமே நக்கலா கமெண்ட் போடலைன்ன இந்த பிளாக்குக்கே மதிப்பில்லையே. அதுனால தான் இது.

  மற்றபடி, , இதைப் படிக்குற பொண்ணுங்க வீட்டுல... நீயும் இருக்கியேன்னு, புருஷங்களுக்கு செருப்படி இருக்கு.

  நல்லாருப்பா. நல்லயிருக்கு உங்க டீடெய்லு

 28. Ananth says:

  In the prev post(July), one "Zero to Infinity" updated as you got married. Is it So?

 29. //காதலுக்கு வாட்ச் கட்ட தெரியாது சார்...நம்ம இஷ்டத்துக்கு எப்போ வேணா காதலிக்கலாம்...!//

  Super....

 30. வாய்யா வெளியூரு, எல்லாத்தையும் படிச்சிட்டு வர்ரேன்! ஆமா காவல்காரன் எப்போ ரிலீசாம்?

 31. தல கேரக்டர் பேருகள மாத்திடுங்க தல, சைந்தவி பதிவ நாங்க மறக்க விரும்பல, அது அப்பிடியே இருக்கட்டும், இதுக்கு வேற ஏதாவது பேரு வெச்சி கன்டினியூ பண்ணுங்க!

 32. that was an feather touching narration

 33. Selvamani says:

  ந‌ன்றி.

  திரு.வெளியூர்கார‌ன் அவ‌ர்க‌ளே.

 34. செமையா இருக்கு.. கலக்கல் வெளியூர்காரன். ரசனையான ஆளா இருக்கீங்க.

 35. சூப்பரா இருக்குங்க..

 36. சரியான காக்டெயில் மச்சி... ஜிவ்வுன்னு இருக்கு

 37. geeyar says:

  யாருடைய பிளாக்கில் வெளியூர்காரனின் கமெண்ட் வந்தாலும் வெளியூர்காரன் என்ற பெயரைப்பார்த்த உடனே எனக்கு சைந்தவி, சாக்லேட், காதல் இவைகள் தான் நினைவுக்கு வருகின்றன. ரொம்ப நல்லா இருக்கு சார். முதலில் காப்பி ரைட் எடுத்திடுங்க சார், அப்புறம் ஹாரி பார்ட்டர் ரேஞ்சுக்கு போனாலும் எங்களுக்கு எல்லாம் இலவசமா புத்தகம் தரணும் சார். ரொம்ம ரொம்ம ரொம்ப எனக்கு பிடிச்ச தொடர்.....

 38. geeyar says:

  யாருடைய பிளாக்கில் வெளியூர்காரனின் கமெண்ட் வந்தாலும் வெளியூர்காரன் என்ற பெயரைப்பார்த்த உடனே எனக்கு சைந்தவி, சாக்லேட், காதல் இவைகள் தான் நினைவுக்கு வருகின்றன. ரொம்ப நல்லா இருக்கு சார். முதலில் காப்பி ரைட் எடுத்திடுங்க சார், அப்புறம் ஹாரி பார்ட்டர் ரேஞ்சுக்கு போனாலும் எங்களுக்கு எல்லாம் இலவசமா புத்தகம் தரணும் சார். ரொம்ம ரொம்ம ரொம்ப எனக்கு பிடிச்ச தொடர்.....