- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 34 comments and to comment


துடைச்சு வெச்ச ஐபோன் மாதிரி ஸ்ருதி...ஸ்க்ராச் ஆன நோக்கியா போன் மாதிரி தனுஷ்..!! என்னடா இது ஜோடி பொருத்தம் சரக்குல மோர மிக்ஸ் பண்ண மாதிரி மிக்சிங் சரியில்லேன்னு ஒரு டவுட்டோடதான் போய் உக்காந்தேன்...!! பயபுள்ளைக இது ரெண்டுக்கும் இடைல நெட்வொர்க் அப்புடித்தான் எடுத்துருக்கு...இந்த கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரிம்பாங்களே...இது ரெண்டுக்கும் அதுல ஆரம்பிச்சு மைக்ரோபயலாஜி வரைக்கும் வொர்க்அவுட் ஆய்ருக்கு...ஆனா ஒன்னு சொல்றேன் சார்...ரஜினி சார் பொண்ணு ஸ்டார்ட் ஆக்சன் சொல்லகமல் சார் பொண்ண அலேக்கா மடில தூக்கி வெச்சு தாவன்கொட்டைல முத்தம் குடுக்கற அதிர்ஷ்டம்லாம் நம்ப தனுஷுக்கு மட்டும்தான் சார் கெடைக்கும்...ஷூட்டிங் முடிஞ்சோன்ன ரஜினி பொண்ணையும் போய் கட்டிபுடிச்சுக்கலாம்.அது தனி கதை...எல்லாருக்கும் உடம்புல மச்சம் இருக்கும்..ஆனாஉனக்கு மச்சத்துல உடம்பு இருக்கு வாத்யாரே...நீ வாழு மச்சி..இதே சிச்சுவேசன்ல நான் இருந்து என் பொண்டாட்டி டைரெக்டரா இருந்து ஸ்ருதிகிட்ட இவ்ளோ பீல் பண்ணி நான் நடிச்சாஅடுத்த செகேன்ட் ஷூட்டிங்க கேன்சல் பண்ணிட்டு என்ன தரதரன்னு வீட்டுக்கு இழுத்துட்டு போயி செருப்ப பிச்சு தாவன்கொட்டைலையே ரெத்தம் வர்ற வரைக்கும் அடிப்பா...! என்னமோ போங்க..மனைவி அமைவதெல்லாம் ரஜினி சார் குடுத்த வரம்...!!

தனுஷ்...படத்த தூக்கி தோளுல வெச்சுகிட்டு அசால்ட்டா நடிச்சிட்டு போய்கிட்டே இருக்காப்டி இந்த படத்துல...! நடிப்பு ராட்சஷன்..! கார் பார்க்கிங்கள இவர ரவுடி பசங்க சேர்ந்து அடிக்கும்போது மனசு கெடந்து பதருனுச்சு...டேய் அவன விட்டுட்டு ஓடிருங்கடா...அவென் சைக்கோ...எந்திரிச்சான்னா காட்டுமிராண்டிதனமா அடிப்பான்னு...!! புதுபேட்டை பார்த்துட்டு இவரு மேல வந்த பயம் இன்னும் போகல போலருக்கு எனக்கு .!! இவ்ளோ நாள் சூப்பர் ஸ்டார் மருமகன் டைரெக்டர் செல்வா தம்பிதேசிய விருது வாங்குன நடிகர்,...இனிமே இயக்குனர் ஐஸ்வர்யாவோட புருஷங்கற பேரும் சாருக்கு சேர்ந்துக்கும்...! நீ ஜெய்ச்சுகிட்டே இருக்க மச்சி...! அடிச்சு ஆடு...!!  

ஐஸ்வர்யா தனுஷ்...இந்த படத்த கிழிச்சு தொங்க போட நூறு விஷயம் இருக்கு..ஆனா நான் அப்டி செய்ய மாட்டேன்...ஏன்னா உங்கப்பா இந்தியாவுலையே பெரிய சூப்பர் ஸ்டார்...ஆனா எங்கப்பாவுக்கு என் சொந்த ஊர்ல இருக்கற ஸ்டார் சைக்கிள் கம்பெனில ஒரு அரை மணி நேரத்துக்கு வாடகை சைக்கிள் கூட குடுக்க மாட்டாங்கே...! யாரும் உள்ளூர்ல தெர்ஞ்சவங்க இருந்தா சொல்ல சொல்லிட்டு எடுத்துட்டு போங்கன்ருவாங்கே...! அதனால உங்கள கலாய்க்கரதுக்கு எனக்கு மட்டும் இல்ல..என் தலைமுறைக்கே வொர்த் கெடயாது...! செல்வராகவன் இந்த படத்துல ஹெல்ப் பண்ணிருக்காத பட்சத்தில இது ஒரு நல்ல முயற்சி...!அடிச்சு சாத்துங்க...! 

ஸ்ருதி..வழக்கமா இவங்க அப்பா படத்துல தான் கூட நடிக்கிற நடிகைங்கள எல்லாம் பிரிச்சு மேயுவாப்டி...இந்த பொண்ணு தனுஷ மேஞ்சிட்டு பிரிச்சிருக்கு...! எம்மாடி...என்னா நடிப்பு...! அதுவும் இந்த புள்ள அழுவும்போது வருத்தபடாத ஆயி...அங்காளம்மன் புண்ணியத்துல உன் புருஷன் கண்டிப்பா நல்லபடியா வந்துருவான்னு தலைய தடவி குடுத்து சொல்லணும் போலவே இருந்துச்சு...ஆனா என் பொண்டாட்டி ஞாபகம் திடீர்னு வந்துட்டதால அந்த ஆசைய கட்டுபடுத்திகிட்டேன்..!இல்லாட்டின மட்டும் பண்ணி கிழிச்சிருவன்னு அன்போடு சொல்ற அண்ணங்கல்லாம் அகம்பாவத்த குறைச்சுகிட்டு அடுத்த பேராவுக்கு போங்க...!!

மொத்தத்துல ராம் ஜனனி காதல நம்பி அனுபவிச்சு பார்க்கறவங்களுக்கு இந்த படம் ஒரு கவிதை...!

நம்பாத கழிசடைங்களுக்கு  அடிச்சு கிழிச்சு தொங்க விட இந்த படம் சமர்ப்பணம்...!!

ஆனா ஒரு அஞ்சு வருஷம் கழிச்சு இந்த படத்த பார்க்குற காலேஜ் பிகருங்கல்லாம் கண்டிப்பா இப்டி பேசிக்கும்..!

"ஏய்..பாருடி...சிவகார்த்திகேயன் அப்போல்லாம் சைட் ரோல்ல காமெடி ஆர்டிஸ்ட்டா வந்துருக்காரு"...!!!

"சிவா....மங்காத்தா ஆரம்பிச்சிருசுடி உனக்கு"...!! 

"கெளப்புரா கெளப்புரா கெளப்புரா தம்பி"....!!!

வெளியூர்க்காரன்

There was an error in this gadget