- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 115 comments and to comment

ஒரு டிக்கெட் பத்து வெள்ளி..நான் என் பிரெண்ட்ஸ் பத்து பேர என் செலவுல என் இளைய தளபதியோட அம்பதாவது படம்னு குஷில டிக்கெட் எடுத்து கூட்டிட்டு போனேன்...மொத்தம் நூறு வெள்ளி..ஊரு காசுக்கு கிட்டத்தட்ட மூவாயரத்து ஐநூறு ரூவாய்...நான் கஷ்டப்பட்டு சம்பாரிச்ச காசு...ஊர்ல ரெண்டு குடும்பம் வயறு நெறைய ஒரு மாசம் புல்லா சாப்டலாம்...அட நான் என் காசு போனத கூட பெருசா நெனைக்கல...ஆனா விஜய் மேல இவ்ளோ நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் வெச்சு படத்துக்கு ஆர்வமா வந்த ஒரு நேர்மையான  ரசிகனா விஜய்கிட்டயும் இந்த படத்தோட டைரேக்டர்கிட்டையும் சில கேள்விகள் கேக்கணும்... !


விஜய் சார்..இந்த படத்துக்கு கதை கேக்கும்போது மூளைய மண்டைல வெச்சிருன்தீங்கலா இல்ல சுருட்டி சூ...துல வெச்சிருந்தீங்களா..உங்கள நம்பி நான் குடுத்த காசுக்கு நீங்க எனக்கு திரும்பி குடுத்து என்ன தெரியுமா..ஒத்த தலைவலியும், டேய் இவன் விஜய் ரசிகன்டானு சுத்தி இருகவங்ககிட்ட அவமானமும்தான்...இப்ப சொல்றேன்..வெளியூர்க்காரன் இன்னியோட விஜய் ரசிகர் மன்றதுலேர்ந்து ராஜினாமா பண்றேன்...உங்க சங்காத்தமே வேணாம் எனக்கு...எக்கேடோ கெட்டு போங்க..நீங்கல்லாம் திருந்த வாய்ப்பே இல்ல...!


டைரெக்டர் திரு ராஜ்குமார் சார்...நீங்க மனுசனா சார்...இளைய தளபதியோட அம்பதாவது படம்..என்னை  மாதிரி விஜய் ரசிகன்லாம் இந்த படத்த  எவ்ளோ எதிர்பார்த்து வெயிட் பண்ணிருபாங்கன்னு உங்களுக்கு தெரியுமா...  என்ன சார் படத்த எடுக்க சொன்ன மயிர  புடுங்கி வெச்சிருக்கீங்க...உனக்கு  சினிமா எடுக்க வருதுன்னு எந்த நாய் சொன்னான் உங்ககிட்ட...ஏன் இப்டி படம் எடுத்து படம் பார்க்க வர்றவன் தாலிய அறுக்கறீங்க...தயவு செஞ்சு போயிருங்க...உங்களோட இன்னொரு படத்த தமிழ் சினிமா ரசிகர்கள் தாங்க மாட்டாங்க...மறுபடியும் சொல்றேன்...நீங்க சூடு சொரணை உள்ள மனுசனா இருந்தா சினிமா இண்டஸ்ட்ரிய விட்ருங்க...!


மக்களே இவ்ளோ நாள் விஜயோட எல்லா படங்களுக்கும் சப்ப கட்டு கட்னதுகாகவும் விஜய்காக வக்காலத்து வாங்கி உங்ககிட்டயெல்லாம் மல்லுக்கு நின்னதுகாகவும் வெளியூர்க்காரன் உங்க எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்டுகறான்...என்ன மன்னிச்சிருங்க...!


என்னது படம் எப்டி இருக்கா..சுறா கதையை தியாகராஜா பாகவதர்கிட்ட போய் சொல்லிருந்தா அவரு வேணாம்ப்ப இது ரொம்ப பழைய கதைன்னு சொல்லிருபாறு..ஆனா,விஜய்னா பெரிய மயிருல்ல..அதான் எடுத்து நடிசிருகாப்ள...போங்க..போய் பார்த்து நாசமா போங்க...!


நொந்து போன மனதுடன்...!


வெளியூர்க்காரன்...

Posted by Veliyoorkaran - - 245 comments and to comment


நாலு மொழி தெரிஞ்சவன் நாலு பேருக்கு சமம்னு அவ்வையார் ஒரு பாப் ஆல்பத்துல சொல்லிருந்தத படிச்சதுலேர்ந்து வெளியூர்காரனுக்கு மொழிகள் பல கத்துகிட்டு மிகபெரிய பண்டிதனா ஆகணும்கர வெறி அதிகமாய்டுச்சு..அதனால பியுச்சர்ல சைனால வேலை கெடைச்சிட்டா மொழி தெரியாம கஷ்டப்படகூடாதேன்னு பர்ஸ்ட்  இயர் படிக்கும்போதே காலேஜ் கட் அடிச்சிட்டு சைனீஸ் படங்கள பார்க்க ஆரம்பிச்சான்..ஆனா பாருங்க படத்துல ரொம்ப ஸ்பீடா பேசுனதுனால அவனுக்கு மொழி புரியல...அதுவும் பாவம் கல்யாணம் வேற ஆகல பாருங்க அப்போ..பச்ச மண்ணு பயந்துருச்சு...அதனால சைனீஸ் வேணாம் இங்கிலீஷ் கத்துக்கலாம்னு இங்க்லீஷ் படங்கள் பார்க்க ஆரம்பிச்சான்...ஆனா மனுசனா சார் இந்த வெள்ளைகாரங்கே ..பேசறதுக்குன்னு ஒரு வரைமுறை வேணாம்..இப்புடியா கிருசகெட்டத்தனமா பேசுவாங்கே...வெளியூர்காரனுக்கு அதுலேர்ந்து  இங்க்ளிசும் சுத்தமா புடிக்காம போச்சு...அடுத்து என்ன மொழிய கத்துக்கலாம்னு ஒரு ஞான தேடலோட காலேஜ் கட் அடிச்சிட்டு  அலைஞ்சப்பதான் அந்த போஸ்டர பார்த்தேன்..அவளட ராவுகள் ன்னு ஒரு மலையாள படம்..சரி மலையாளம் கத்துக்குவமேன்னு தியேட்டருக்குள்ள நுழைஞ்ச ஒரு பச்ச மண்ணோட கதையத்தான் இப்ப நீங்க படிக்க போறீங்க... ..

எங்கப்பா கஷ்டப்பட்டு சம்பாரிச்ச காசுல என் பிரெண்ட்சுக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்துட்டேன்..உள்ள போயி என் சீட்ட கண்டுபுட்டிச்சு உக்கார்ரதுக்குள்ள எனக்கு பின்னாடி இருந்த ஒரு நாதாரிக்கு படம்  மறைச்சிடுச்சாம்..தம்பின்னு பாசமா கூப்ட்டான்..சொல்லுங்க அண்ணேன்..இது நான்..மறைக்காம உக்கார்றா பரதேசி..இது அந்த அண்ணேன்..செக்ஸ் மூட்ல இருக்கவன்ட்டையும் ,சனிகிழமை காலைல அசந்து தூங்கரவன்ட்டையும்  மட்டும் சண்டை வழிக்க கூடாது..யோசிக்காம பொளிச்சுன்னு பொறமண்டைல  போட்ருவாணுக..அதனால கொந்தளிச்சு வந்த கோவத்த வழக்கம்போல கட்டுபடுத்திக்கிட்டு என் சீட்ல உக்காந்தேன்..

படத்தோட பர்ஸ்ட் சீன்..ஹீரோயின் பேஸ் வாஷ் பண்றத வில்லன் சார் திருட்டுத்தனமா எட்டி பார்ப்பாரு...பிகர்  பேஸ் வாஸ் பண்றத திருட்டுதனமா எட்டி பார்கறதுக்கு என்ன இருக்குன்னு அனுபவசாலி அண்ணணுக ஆராய்ச்சிபூர்வமா கேக்கலாம்..அண்ணேன் அந்த பிகர் பேஸ் வாஸ் பண்ணது குளிக்கும்போது பாத்ரூம்ல...அதுவும் பப்பி சேம் ட்ரெஸ்ல..அப்போ என் பிரெண்ட் என்கிட்டே மச்சான் குட்டி நம்ம கூட படிக்கற கல்பனா மாதிரியே இருக்கால்ல அப்டீன்னான்...நான் ஒரு வெள்ளந்தி மனசோட எனகெப்டிடா  அது தெரியும்..இதோ இந்த பக்கிகிட்ட கேட்டு பாரு தெரியும்னேன்... அந்த நாதாரி எதோ அந்த சிறுக்கி கல்பனாவ உயிருக்குயிரா உண்மை காதல் பண்றானாம்..நான் சொன்னத கேட்டு கோவம் வந்து தியேட்டர்லையே எந்திரிச்சு காச்சுமூச்சுன்னு கத்துனான்...நாங்கல்லாம் பொட்டச்சிங்க காரி துப்புனாலே மூஞ்ச கூட துடைக்காம ஒரு டீ சூடா ஆர்டர் பண்ணி ரசிச்சு சாப்டர கூட்டம்...ஆம்பளைங்க திட்னா அந்த தகவல் மூளைக்கே போகாதுங்கறது  தெரியாம அந்த நாய் கோவத்துல சலம்புனுச்சு..உக்கார்ரியா இல்ல கல்பனாவ வண்டை வண்டையா கெட்ட வார்த்தைல திட்டவான்னு செல்லமா கேட்டோனோ பய பயந்து போயி உக்காந்து படம் பார்க்க ஆரம்பிச்சுட்டான்..காதல் சார். .


அடுத்த சீன்..அந்த புள்ள கத்திரிப்பூ கலர்ல கட்டம் போட்ட சட்டை போட்டுக்கிட்டு உக்கந்துருந்தா..கண்ண பூ போல ஒரு பட்டுதுணில கட்டிருந்தாங்க..அப்பதான் கவனிச்சு பார்த்தேன்...உருண்டையா..ஏய் சீ சீ...கருமம் புடிச்சவனே..எடுத்தொன்னையே யார்ராச்சும் அத பத்தி சொல்லுவாங்களா..இர்றா வரும்...நான் இப்ப சொன்னது கன்னத்த..நம்மள மாதிரி ஆம்பள நாய்ங்க, எந்த பகுதியாச்சும் துணியால மூடிருந்தா உடனே அதை ஊடுருவி உள்ள என்ன இருக்குன்னு ஆர்வமா  பார்ப்போம்கறது உலகத்துக்கே தெரியும்..ஆனா, நான் இப்ப சொன்னது நெஜமாவே கன்னத்ததான்.அப்போ கைல திராட்ச்ச கொத்தோட வில்லன் உள்ள வந்தான்..அவன வில்லன்னு சொல்லகூடாது..பிட்டு படத்துல எல்லாம் வில்லனுகதான் ஹீரோ.. 

செம ஸீன் ஆரம்பிக்க போறப்ப பின்னாடிலேர்ந்து ஒரு குரல்..மாப்ளைன்னு..திரும்பி பார்த்தா என் மாமா..தக்காளி இவன் எங்கடா இங்க வந்தான்னு மாமா எங்க இங்கன்னேன்...ஒண்ணும்ல மாப்ள நம்ப எருமைமாட்டுக்கு ஜட்டி வந்கிட்டுபோலாம்னு வந்தேன்னான் நாறப்பய...வக்காளி தியேட்டரே சிரிச்சிது..என்  குடும்பத்துல பூராபெரும் இப்புடித்தான் கிருதுருவமாவே பேசுவாங்கே...எதோ எனக்கு அவமானங்கள் புதுசில்லன்கரதால தொடர்ந்து படம் பார்க்க ஆரம்பிச்சேன்..

இண்டர்வெல்ல எங்க காலேஜ்ல படிக்கற ஆந்திரா பய ஒருத்தன் மாட்னான். (எங்க ஊர்ல பிட்டு படத்துக்கு இண்டர்வல் விடுவானுக...)..வெளியூர்காரனுக்கு ஒரு கெட்ட பழக்கம் என்னன்னா சிரிக்கறதுக்கு ரெண்டு பேர் கெடைச்சிட்டா எவன் சிக்குனாலும் கண்ணுமண்ணு தெரியாம கலாய்ச்சு சிதைச்சு சின்னாபின்னமாக்கிருவான்...அன்னிக்கும் அப்டிதான்...மரண கலாய் அந்த பயல..மச்சான் பய அழுதுறுவான் போல, விட்டுருன்னு என் பிரெண்டு சொன்னோன்னதான் தியேட்டருக்குல்லையே போனோம்....உள்ள போயிட்டு அண்ணேன் அண்ணேன் இவ்ளோ நேரம் என்ன நடந்துச்சு கதை சொல்லுங்கன்னு பக்கத்துல அமைதியா படம் பார்த்துகிட்ருந்த ஒரு தாத்தாகிட்ட அலப்பர  வேற..ஒரு வழியா எல்லா ஈரவெங்காயத்தையும் பார்த்துட்டு ச்சே வேஸ்ட்டு மச்சான் பொண்ணுங்கன்னு ஒரு முடிவுக்கு வந்து முன்னாடி நடந்து போய்கிட்ருந்த  பொண்ணோட நிழல வேடிக்கை பார்த்து ரசிச்சு தலையாட்டிகிட்டே நடக்க ஆரம்பிச்சோம்..

அடுத்த நாள் அதே நேரம் அதே இடம்

தேர்ட் இயர் படிக்கற சீனியர் ஆந்த்ரா பசங்க என் பிரெண்ட குமுற குமுற அடிச்சிகிட்ருந்தாணுக...நான் எங்க இருக்கேன்னு கேட்டு..

நான் தியேட்டர்ல கலாய்ச்ச பய எனக்கு சீனியராம்.. 

நீதி : கும்மாங்குத்துக்கு மொழி கெடயாது பாஸ்...!! 

வெளியூர்க்காரன்

There was an error in this gadget