- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 38 comments and to comment
காலைல மணக்க மணக்க மல்லிப்பூ  இட்லி புதினா சட்னி..ஸ்டாலின் அண்ணன் வீட்லேர்ந்து...மதியத்துக்கு நண்டு கொழம்பும் கத்திரிக்காய் தொக்கும் அழகிரி அண்ணன் வீட்லேர்ந்து...ராத்திரிக்கு கெட்டி தயிர் சாதமும் மாவடும் தயாநிதி அண்ணன் வீட்லேர்ந்து...இப்டி டிசைன் டிசைனா விதவிதமா அறுசுவை உணவுகள் உங்க வீட்டுக்கு வந்து இறங்கும்...ராஜ மரியாதையோட...அதுவும் டெய்லி...பாசத்தோட வரும்...இருங்க மேடம் இதுக்கே வாய போளக்காதீங்க...இன்னும் நெறைய இருக்கு எங்க ஆபர் லெட்டர்ல...அதுக்கு முன்னாடி நான் யாருன்னு சொல்லிக்கறேன்...வணக்கம்..நான் உங்க எதிர்க்கட்சிக்காரன்..ஆனா நீங்களும் என் தலைவரும் மெரினா பீச்ல உக்கார்ந்து குழந்தைகளாட்டம் கிச்சு கிச்சு தாம்பாளம் விளையாடிக்கிட்டே சந்தோசமா சிரிச்சு பேசிக்கனும்னு ஆசைபடற ஒரு எதிர்கட்சிக்காரன்..அந்த நிகழ்வ ஜெயா டிவியும் கலைஞர் டிவியும் ஒரே கேமரால வீடியோ எடுத்து பாதி பாதிய டெலிகாஸ்ட் பண்றத அறிவாலயத்துல உக்காந்து பார்க்கனும்னு ஆசைபடற ஒரு நல்ல மனசுக்காரன்...அதோட முதல் படிதான் உங்களுக்கு இந்த ஆபர் லெட்டர்.... உங்களோட அரசியல் மறுமலர்ச்சிக்கு ஒரு மிகபெரிய வாய்ப்பாவும் திருப்பமாவும் இந்த லெட்டர் அமையப்போகுதுங்கரத வரலாறு சொல்லும்...அதிமுகவுக்கு தமிழ்நாட்லயும் ,பிஜேபிக்கு இந்திய அரசியல்லயும் அரசியல் எதிர்காலம் இல்லைங்கறது தெள்ளதெளிவா என் பக்கத்துக்கு வீட்டு பாப்புக்கு கூட  தெரிஞ்சு போச்சு மேடம்... இதுக்கப்புறமும் நீங்க ஓ. பண்ணீர்செல்வத்த பொதுபணிதுறை அமைச்சராகிட்லாம்னு பகல் கனவு கண்டீங்கன்னா அது வடிகட்ன சசிகலாதனம்..அதனால சாட்சிக்காரன் கால புடிக்கறத விட சண்டைக்காரன் கால புடிக்கறத உத்தமம்னு உங்களுக்கு நான் சொல்ல வேண்டியது இல்ல..நீங்க படிச்சவங்க..மொள்ளமாரி எவனா இருந்தாலும் சரின்னு பாரபட்சம் இல்லாம அந்த உத்தமர் சங்கராச்சார்யாரையே புடிச்சு உள்ள தூக்கி போட்டு மிதிச்ச சூரப்புலி நீங்க...நல்லது கேட்டது உங்களுக்கு தெரியாதது இல்ல...ஒரு திருவாருர்காறன சரிகட்ட இன்னொரு திருவாருர்காரனலதான் மேடம் முடியும்...மன்னார்குடிகாரங்கள லெப்ட்ல விடுங்க...அவங்க கத்துக்குட்டி அரசியல தப்புதப்பா சொல்லி குடுகறாங்கே உங்களுக்கு..அவங்க பேச்சை இனிமேயும் கேட்டீங்கன்னா மசால் வடை கூட சுட்டு வியாபாரம் பண்ண முடியாது தமிழ்நாட்ல...அதனால இன்னும் கொஞ்ச நாள் இந்த வெளியூர்க்காரன் சொல்ற பேச்சை கேளுங்க.... மொதல்ல இந்த வைகோவ கயட்டி விடுங்க.தனிப்பட்ட முறைல நான் நிறைய மரியாதை வெச்சுருக்கற அரசியல்வாதி அவரு...நல்ல பேச்சு தெறமை நல்ல மனிதர்...ஆனா ஒரு கட்சிக்கு தலைவங்கர முறைல அந்த மனுஷனுக்கு நாக்குல சனி...எழவு எத செஞ்சாலும் தரித்திரமா முடியும்..அவரு யாரோட கூட்டணி வெச்சாலும் அவங்க கொடநாட்டுக்கு போக வேண்டியதுதான்...நாங்க அவர எங்க கட்சிய விட்டு அனுப்பறதுக்கு எவ்ளோ தலைகீழ நின்னு தண்ணி குடிச்சோம்கறது எங்களுக்குத்தான் தெரியும்...சொந்த தொகுதிலையே தோத்து போன வெக்கம் கெட்ட மனுசன இன்னும் ஏன் கூட்டணில  வெச்சுருகீங்க..அத்து விடுங்க அவங்கே உறவை...இன்னிக்கே அன்னோன்ச்ஸ் பண்ணுங்க..சகோதரி கிகோதரின்னு எவனாச்சும் போயேஸ் கார்டன் பக்கம் வந்தா பிஞ்ச செருப்பாலேயே அடிப்பேன்னு அறிக்கைல சொல்லுங்க..நாஞ்சில் சம்பத்த மட்டும் கொஞ்சம் ஐஸ் வெச்சுக்கங்க...மதிமுக அவனுகளும் வளர மாட்டானுக..அடுத்தவனையும் வாழவிட மாட்டானுக..அடுத்தது இந்த ராமதாசு..வைகோவாச்சும் மனுஷ கூட்டம்...இந்த ஆள் என்ன டைப்புன்னு இவருக்கே தெரியாது...ரெண்டு மினிஸ்டர் போஸ்ட்டும் ரெண்டு டாட்டா சுமோ காரும் குடுத்தா போதும்...இவரு டி.ராஜேந்தரோட லட்சிய திமுகல கூட போய் சந்தோசமா சேருவாறு..இந்த ஆளுக்குன்னு தனியா கொள்கை கோட்பாடு எதுவும் கெடயாது...இவரும் இவரு புள்ளையும் அரசியல் வியாபாரிங்க...தேசிய கட்சியா இருந்து போன எலெக்சன்ல மாநில கட்சியா ப்ரோமோசன் வாங்குன சூரப்புலிங்க..இவங்கேல ஏன் தலைவர் டீல் பண்ற மாதிரி டீல் பண்ணுங்க...அறுத்தும் விடாதீங்க தொடர்பும் வெச்சுகாதீங்க..அரசியல் வார்த்தைல சொல்லனும்னா இப்ப விட்ட மாதிரியே நட்டாத்துல மெய்ண்டைன்  பண்ணுங்க இவங்கேல...இப்போ உங்க கட்சியா நீங்க விட்டீங்கள்ள அந்த மாதிரி.கொழம்பி போய் அரசியல் அனாதை ஆய்டுவாங்கே..கம்யுனிஸ்ட் கட்சிகள பத்தி பத்தி நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்ல..அவுட் ஆப் சிலபஸ் ஆன ஒரு சித்தாந்தத்த வெச்சுகிட்டு இன்னும் மக்களுக்கு நல்லது செஞ்சிரலாம்னு திராவிட கட்சிகள எதிர்த்து போராடிகிட்ருக்க பழைய காலத்து நல்லவங்க..பாட்டாளி வர்க்கம்..போராட பொறந்தவங்க....இந்தா மினிஸ்டர் போஸ்ட்...இத வெச்சுக்கிட்டு மக்களுக்கு எதாச்சும் நல்லது பண்ணுன்னு இவங்ககிட்ட கூப்டு குடுத்தீங்கன்னா...அத ஏத்துக்காம ரோட்ல மறுபடியும் போய் நின்னுகிட்டு நீ செஞ்சு குடு நான் மக்களோட நின்னு போராட்றேன்னு சொல்ற தியாகிங்க...ஏன்னா அவங்களுக்கு போராட மட்டும்தான் தெரியும்...ஆட்சி பண்ண தெரியாது...அவங்கள ஒன்னும் பண்ணாதீங்க ..அப்டியே விட்ருங்க...கத்திட்டு போகட்டும்....டிஎம்டிகே...என் தலைவர் வாழ்க்கைளையே பண்ண ஒரே தப்பு விஜயகாந்தோட கேள்விகளுக்கு முரசொலில பதில் சொன்னது....அதும் அரை பக்கத்துக்கு...எங்கள அறியாம நாங்க வளர்த்து விட்ட கள்ளி செடி இது...இத நாங்க பார்த்துக்கறோம்..இத இப்டியே விட்டா ஒவ்வொரு எலேக்சன்லையும் உள்ள பூந்து வோட்ட பிரிச்சு கொழப்பிகிட்டு இருக்கும்..கூடிய சீக்கிரம் இத முடிச்சிருவோம்...அதனால இத பத்தி நீங்க கவலைபடாதீங்க...ஆப்பு ரெடி பண்ணிகிற்றுக்கோம் கூடிய சீக்கிரம் சொருகிடுவோம்....காங்கிரஸ் பொறுத்த வரைக்கும் சோனியா காந்தி இந்தியர் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை அப்டீன்னு மட்டும் அறிவிங்க...அதுக்கு மேல எந்த பெர்பார்மன்சும் பண்ண முயற்சி பண்ண வேண்டாம்...அதுக்கெல்லாம் நாங்க இருக்கோம்...நீங்க நான் சொல்றத மட்டும் செய்ங்க...கடுகளவு கூட எக்ஸ்ட்ரா பெர்பார்மன்ஸ் பண்ணக்கூடாது...சரத்குமாரோட சமுக, டி.ராஜெந்தரோட லதிமுக அப்பறம் கார்த்திக்கோட கட்சி  இதெல்லாம் பத்தி நான் உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்ல...டாயிலெட் பேப்பர என்ன பண்ணனும்னு உங்களுக்கே தெரியும்...இது எல்லாம் முடிஞ்சோன்ன சசிகலா இனிமே என் சகோதரி இல்லைன்னு மீடியாவ கூப்டு கண்ணீரோட அறிவிச்சுடுங்க..கடைசியா ஒரு புன்னாக்குக்கும்  உதவாத உங்க கட்சியா கலைச்சிட்டு அண்ணா அறிவாலயம் வந்து என் தலைவர் முன்னிலைல மிச்சம் இருக்கற உங்க கட்சிகாரங்களோட திமுகல சேருங்க.....அடுத்த நாளே ஓ பண்ணீர்செல்வத்த ஜே.கே.ரித்திஸ்க்கு துணை மந்திரி ஆக்கறோம்...ஓ எஸ் மணியன ஸ்டாலினோட பயண திட்டங்கள தயார் பண்ற சிறப்பு மேலாளர நியமிக்கறோம்....எஸ் எஸ் சந்திரன மு க அழகிரி அண்ணன் வீட்டுக்கு வாரம் ஒரு தடவை போய் அவரு பேர புள்ளைங்க முன்னாடி நின்னு ஸ்டான்ட் அப் காமெடி பண்ணி சிரிக்க வெக்கற அரசவை விகடகவிங்கற ஒரு புது பதவில உக்கார வெச்சு அழகு பார்க்கறோம்..செம்மலைய   துரைமுருகன் போற எடத்துக்கெல்லாம் கூடவே துண்டு எடுத்துட்டு போற துண்டுதாங்கிங்கற பதவிய அளிக்கறோம்..(உங்க காலுல மட்டும் அந்த ஆள் விழலாம்...எங்களுக்கு துண்டு தூக்க கூடாதா....)..சேகர் பாபுவ,பரிதி இளம்வழுதி அண்ணன்கிட்ட ஜுராசிக் பார்க்ல டைனோசருக்கு சாப்பாடா மாட்ட ஏறக்கர மாதிரி அப்டியே துண்டா ஒப்படைக்கறோம்...பரிதி அண்ணனுக்கு என்ன புடிக்குதோ  அத அவரு செஞ்சிக்கட்டும்...பயபடாதீங்க வீட்டு வேலையெல்லாம் குடுக்க மாட்டாரு..என்ன டென்சன் ஆனா பொளேர் பொளேர்னு அடிச்சு தான் கோவத்த தீத்துக்குவாறு அவ்ளோதான்...(வெளிநடப்பாடா   பண்றீங்க சட்டமன்றத்துல .என் தலைவன் பேசும்போது...எதிர்த்து சவுண்ட் குடுத்த அன்னிக்கே உங்க வாய கிழிச்சு  விட்ருக்கனும்டா....)அது மட்டும் இல்லாம அதிமுகவோட அடிமட்ட தொண்டர்களுக்கு ஒரு சிறப்பு பரிசு காத்துகிட்ருக்கு .நீங்க எங்க கழகத்துல இணைஞ்ச அடுத்த நாள் தமிழகம் பூரா இருக்கற அனைத்து ரெத்தத்தின் ரெத்தங்களையும் அந்தந்த பகுதில இருக்கற திமுக அமைப்பு செயலாளர்களோட வீட்டுக்கு போய் ரேசன் கார்ட சரண்டர் பண்ணிட்டு வெத்து பத்திரத்துல கையெழுத்து போட்டு கொடுத்துட்டு ஆளுக்கொரு வேஷ்டியும் துண்டும் இலவசமா வாங்கிட்டு போக சொல்லுங்க...இதுக்கு மேல என்ன மரியாதை வேணும் உங்க தொண்டர்களுக்கு..அப்பறம் ஜெயா டிவில இருக்கற எல்லா கேமரா லொட்டு லொசுக்கு எல்லாத்தையும் கத்திபாரா பாலத்துக்கு கீழ போட்டு கேரசீன் ஊத்தி கொளுத்திட்டு  ரபி பெர்னார்ட் தலைமைல அறிவாலயத்துக்கு டெய்லி விடியகாலைல வந்து வயத்துல ஈர துணிய கட்டிக்கிட்டு பாவமா நிக்க சொல்லுங்க...கூடிய சீக்கிரம் பணி வழங்க ஆவண செய்றோம்... கடைசியா மிச்சம் இருக்கறது நீங்க மட்டும்தான்...இந்திய அளவுல புகழ் பெற்ற ஒரு தேசிய தலைவர்ங்கரத விட்டு தள்ளுங்க...ஒரு வயசானவர  நாகரீகமா எப்டி நடத்தனும்கறது கூட தெரியாம அடிச்சு இழுத்துட்டு போய் ஜெயில்ல அடைச்சு அநாகரீகமா அரசியல் பண்ண ஒரே அரசியல் தலைவர் நீங்க மட்டும்தாங்கறது உலகத்துக்கே தெரியும்...வருசமான மறக்கறதுக்கு இதென்ன கேர்ள் பிரெண்டோட மொபைல் நம்பரா மேடம்..ரணம் .எல்லா திமுககாரன் மனசுலயும் ஆழமா பதிஞ்சிருக்கற ரணம்.ஜூன் 30 அன்னிக்கு எத்தன பேர் வீட்ல டிவி உடைஞ்சதுன்னு உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லைதான்.....எங்களுக்கு இத மனசுலையே வெச்சுகிட்டு நேரம் அமையரப்ப பழிவாங்கற பழக்கமெல்லாம் கெடயாது...நாங்க அண்ணாவோட வாரிசுங்க...ஆனா பாருங்க இப்பன்னு பார்த்து உங்களுக்கு குடுக்கறதுக்கு எந்த பதவியும் காலியா இல்ல மேடம்...ஏன்னா இது பாரம்பரியம் மிக்க பெரிய கட்சி..யாரையும் ஏமாத்தி புடுங்குன கட்சி இல்ல..கலைஞரும் அண்ணாவும் ரெத்தம் சிந்தி வளர்த்த கட்சி.இங்க இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைவர்களே எக்கச்சக்கம் பேரு இருக்காங்க...முதலமைச்சர் வேட்பாளர்களே மூணு பேர் இருக்காங்க...அது மட்டும் இல்லாம கட்சில சேர்ந்த உடனே பெரிய பதவி கெடைக்கறதுக்கு இது உங்க கட்சி மாதிரி கெடயாது...கேப்ல போஸ்டிங் வாங்க முடியாது...அதனால சீர்காழி பக்கத்துல ஒரு கிராமத்துல பஞ்சாயத் போர்டு தலைவி பதவி நிரப்பபடாம இருக்கு..அத வேணா நான் வாங்கி தரேன்...நீங்க நிரப்புங்க..அவ்ளோ பெரிய பொறுப்ப உங்களுக்கு குடுக்க கட்சி பொதுக்குழு ஒத்துகாதுதான்..ஆனா நான் எப்டியாச்சும் பேசி உங்க முன் அனுபவத்த எல்லாம் சொல்லி போராடி வாங்கி குடுக்கறேன்...மக்களுக்காக களப்பணி ஆற்றுங்க...என்ன சொல்றீங்க...தலைவர்கிட்ட பேசவா....?(இந்த லெட்டர எந்த அட்ரசுக்கு அனுப்பறதுன்னு தெரில மேடம்..ஏன்னா நீங்க இப்போ எங்க இருக்கீங்கன்னு உங்க ரெத்தத்தின் ரெத்தங்களுக்கே தெரில. .... அதனால இத நகலெடுத்து கோடநாடுக்கு ஒன்னு..தோட்டத்துக்கு ஒன்னு,ராயபேட்டா ஆபிஸ்க்கு ஒன்னு,ஹைதராபாத்க்கு ஒன்னு,உங்க சொந்த ஊருக்கு ஒன்னுன்னு அனுப்பி வெக்கறேன்..எங்க இருக்கீங்களோ அங்க பிரிச்சு படிச்சு பாருங்க...பட்,சீக்கிரம் பதில சொல்லுங்க..எலெக்சன் வர போகுது எங்களுக்கு நிறைய வேலை கெடக்கு...இன்னும் ரெண்டு மூணு கட்சியா வேற கலைக்கனும்....)வெளியூர்க்காரன்


Posted by Veliyoorkaran - - 18 comments and to comment


அழகான பொண்ணுங்க சொல்ற பொய் கூட அழகுதாங்க.. அந்த பொய் கியூட்டா இருந்தா அது இன்னும் அழகு..

அந்த மாதிரி வெளியூர்க்காரன் ரசிச்ச பல அழகு பொய்களின் கியுட்டான டாப் த்ரீ கலெக்சன் இதோ...

லவ் பண்றப்போ சில சேஞ்சஸ் வரும் தெரியுமா பொண்ணுங்கக்கிட்ட .கவனிச்சு பார்த்தீங்கன்னா தெரியும்....ஒருத்தன் தன்ன லவ் பண்றான்னு அவங்களுக்கு தெரிஞ்சிடுச்சின்னா போதும்...அவங்க நடையே மாறிடும்...அப்டி இப்டி போறது...திடீர்னு இப்டி அப்டி போக ஆரம்பிக்கும்...கண்ணுல அழகு கூடும்...அவன் பேர கேட்டா இவுகளுக்கு கன்னம் செவக்கும்..தாவணிய அடிக்கடி சரி பண்ணிக்க சொல்லும்...(நாம பார்த்துடக்கூடாதான் .).இப்டி கன்னாபின்னா லவ்ஸ்ல இருக்கற நேரத்துல, தான் லவ்வரோட இருக்கப்போ இன்னொரு அழகான பொண்ணு வந்தா அப்போ சொல்லுவாங்க பாருங்க ஒரு சூப்பர் பொய்யி ....!

என்னென்னு கேக்குறீங்களா...அது என்னன்னு சொல்றதுக்கு முன்னாடி,பொண்ணுங்கள பத்தி ஒரு செம மேட்டர் இருக்கு சொல்றேன் கேளுங்க...அவங்களால ஒரே நேரத்துல பிரெண்டுகிட்ட போன்ல பேசிகிட்டு,ஒரு  கைல மொபைல்ல மெசேஜ் அனுப்பிகிட்டு ,இன்னொரு கைல காலுக்கு நெயில் பாலிஸ் போட்டுகிட்டே டிவில ஓடற மெகா சீரியல பார்த்து அழுதுகிட்டே தோசைய திருப்பி போட முடியும்...ஆனா பசங்க பாடு பாவம்க..ஒரு பையன்கிட்ட அவன்  டீ குடிக்கரப்ப, மணி என்னடா மச்சான்னு கேட்டு பாருங்களேன்....கன்னாபின்னான்னு கன்பியுஸ் ஆய்டுவான்..ஆம்பளைங்களால ஒரு நேரத்துல ஒரு வேலையத்தான் செய்ய முடியும்....மனுஷன் உடம்போட இன்ஜினியரிங் அப்டி...ஆனா இவ்ளோ வேலைய செய்ற பொண்ணுங்க ஒரே ஒரு எடத்துல மட்டும்தான் ஒரே ஒரு வேலைய மட்டும் செய்வாங்க... எப்போ தெரியுமா அவங்க தான் பாய் பிரெண்டோட இருக்கும்போது இன்னொரு அழகான பொண்ணு வந்துட்டா...

அந்த பொண்ணு மேல இவங்க பார்வை நிலைகுத்தி ஒரு வெறி கலந்த பொறாமை தெரியும்.. அய்யோயோ நம்பள விட அழகா இருக்காளேன்னு...மூஞ்சிக்கு என் இவ்ளோ பவுடர் போட்ருக்கா..ச்சே கேரக்டர் சரியில்லாத பொண்ண இருக்கும்னு மனசுக்குள்ளயே நெனைச்சுகிட்டு கொஞ்சம் கீழ வருவாங்க...ஒரு செகண்ட் அத உத்து பார்த்துட்டு (நம்மாலே அத அப்டி பார்த்துருக்க மாட்டோம்..) . ஒரு வேலை பொய்யா இருக்குமோன்னு மனசுக்குள்ளயே கணக்கு போடுவாங்க...    நல்லா கவனிசீங்கன்னா உங்க காதுக்கு கேக்கும் அவங்க மனசுக்குள்ள கணக்கு போடறது...இதேப்டி இங்க. அது இப்டி இருக்கு..அப்டியில்ல இருக்கணும்னு ஏதேதோ செக் பண்ணிட்டு ரொம்ப நேரம் கழிச்சு ச்சே இவளுக்கும் பொய்தான்னு மனசுக்குள்ள ஒரு திருப்தி வந்தோன்ன பார்வை இன்னும் கொஞ்சம் கீழ இறங்கும்...உதடு மைல்டா சிரிக்கும்..ச்சே...நம்ப அளவுக்கெல்லாம் இல்லைன்னு..நம்ப பையன் நம்பள விட்டு போகமாட்டான்னு ஒரு முடிவுக்கு வந்தோன்னதான் அவங்க சுயநினைவுக்கே வருவாங்க...அப்போ அவங்ககிட்ட ஏண்டி அந்த பொண்ண இப்டி பார்க்கரன்னு கேட்டீங்கன்னா வரும் பாருங்க அந்த சூப்பர் பொய்..ச்சி....நான் எங்க பார்த்தேன்...?

ப்ளூ பிலிம் பார்த்துருகியாடின்னு பாய் பிரெண்ட் கேக்கற கேள்விக்கு ஜாதி மதம் இனம் பேதம் இல்லாம எல்லா ஊரு குட்டிகளும் பட்டுன்னு சொல்ற ஒரே பொய் இதாதாங்க இருக்கும்..சீ சீ அசிங்கம் அதெல்லாம் நான் பார்த்ததில்லப்பா...ஆனா என் பிரெண்ட்செல்லாம் பார்ப்பாளுக..எனக்கு புடிக்காதுப்பா ..குமட்டிகிட்டு வரும்னு ஆன்சர் வரும்.ஏண்டி நீ பார்க்கலேன்னு கேட்டீங்கன்னா ...ச்சே ச்சே நான் அது எல்லாத்தையும் என் புருசன்கிட்டதான் கத்துப்பேன்னு கன்னமெல்லாம் கூசி போய் கூசாம போய் சொல்லுவாளுக...கொஞ்சம் பேச விட்டு கேட்டீங்கன்னா உண்மை குடம் குடமா கொட்டும்...பீசு விடிய விடிய பிரெண்ட்சொட சேர்ந்து கண்ணுகிழிய  ப்ளூ பிலிம் பார்த்துட்டு குளிர்ஜுரம் வந்து கெடந்த கதை...இந்த லட்சணத்துல அவுக புருஷன் சார்ட்டதான் எல்லாத்தையும் கத்துபான்கலாம்...எதோ நம்மல்லாம் நயன்தாராகிட்டையும் த்ரிஷாகிட்டயும் போய் ஒன் வீக் கோர்ஸ் கட்டிப்புடிக்கறது எப்டின்னு கத்துகிட்டு வர்ற மாதிரி...

இது எல்லாத்துக்கும் மேல டாப்பான பொய் ஒன்னு இருக்குங்க...பீச் காத்துல, காதுகிட்ட லேசா  மூச்ச விட்டுகிட்டு காலோடகால உரசிகிட்டு இளஞ்சூடான குரல்ல முனகலாட்டமா சொல்லுவாங்க அந்த பொய்ய....

ச்சீ...அசிங்கம்...எனக்கு கிஸ் குடுக்கறதெல்லாம் புடிக்காதுடா..!

வெளியூர்காரன்

Posted by Veliyoorkaran - - 10 comments and to comment


என்ன படிச்சவங்களுக்கும்....


என்னைய புடிச்சவங்களுக்கும்...


எனக்கு புடிச்சவங்களுக்கும்...


மற்றும் உங்க எல்லாத்துக்கும்....


முக்கியமா உனக்கும்...


2010 ஆம் ஆண்டின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...


(நாங்கல்லாம் முந்திரிகொட்டைலையே முக்கியமானவங்கே.... :)


வெளியூர்க்காரன்..  

Posted by Veliyoorkaran - - 27 comments and to commentபங்காளியலா  அவனுகளோட அக்கிரமம் கடந்த மூணு நாலா எல்லை மீறி போய்க்கிட்டுருக்கு....எல்லா தெரு முனைளையும் நின்னுகிட்டு போற வர்ற விஜய் ரசிகன் எல்லாரையும் கூப்ட்டு தலைலே அழுக வர்ற வரைக்கும் நங்கு நங்குன்னு குட்டறாங்கே....கம்பி கல்ல கையாள உடைச்சு காமிடான்னு காத புடிச்சு திருவுறாங்கே... ரோட்ல போகும்போது வாய ஒரு கையாள மூடிகிட்டே போடான்னு பெடேக்ஸ்லையே உதைக்காருனுக...எனக்கு கீழ வேலை பார்கறவன் நான் ஒரு விஜய் ரசிகங்கரத தெரிஞ்சுகிட்டு நீயெல்லாம் ஒரு மனுஷன்,உன்கிட்டயேல்லாம் நான் ரிப்போர்ட் பன்னனுமாடான்னு கேவலமா பார்க்கறான்...ரொம்ப அவமானபடுத்தறாங்கே...நமக்கு சூடு சொரணை இல்லைங்கரத எப்புடியோ தெரிஞ்சுகிட்டு முக்க கூட முடியாத அளவுக்கு வெரட்டி வெரட்டி அடிக்கறாங்கே..நேத்து அவமானம் தாங்காம மயக்கம் போட்டு விழுந்த ஒரு அப்பாவிய ஆர்குட்ல வெச்சு கருணையே இல்லாம கூட்டம் கூட்டமா சேர்ந்து உதைச்சு அராஜகம் பண்ணிருக்காங்கே...(ஆர்குட்ல அப்டி அடி வாங்குன அப்பாவி வெளியூர்க்காரன் சார்தான்...)இதெல்லாம் பார்க்கறப்போ மனசு கொதிக்குது கொந்தளிக்குது...இவ்ளோ அராஜகம் பண்ற அவங்கேல....நம்மளால இப்போதைக்கு ஒன்னியும் பண்ண முடியாது...ஏன்னா நம்ம தளபதி நல்ல படம் குடுக்க போறதே இல்ல...அதனால தல..(சாரிபா..ப்ளோல தலைன்னு வந்துடுச்சு...)..ச்சே...அந்த அஜித் ரசிகர்கள எப்டியாச்சும் நம்ம பழி வாங்கியாவனும்..அதுவும் நம்ம தளபதி ஸ்டைல்ல ..!

அஜித் ரசிகர்கள எங்க பார்த்தாலும் விடாதீங்க....ஒக்கமக்க நறுக்குன்னு அவனுக இடுப்புல கிச்சு கிச்சு மூட்டிட்டு ஓடி போய் ஒளிஞ்சுக்காங்க..அவங்க யாருன்னு தேடறத பார்த்து மனசுக்குள்ளயே விழுந்து விழுந்து சிரிங்க...சிரிப்பு சத்தம் வெளில கேட்ற வேணாம்..உங்கள கண்டுபுடிச்சிடாங்கேன்னா அடிச்சு வெளுத்து விட்ருவாணுக..அது ரிஸ்க்கு ...அதனால விஜய் ரசிகனா அடக்கம் ஒடுக்கமா பயந்த புள்ளயா இருங்க...அப்டியே மாட்டிக்கிட்டா கூட திருபாச்சி படத்துல நம்ம தளபதி அழுவற மாதிரி மூஞ்சிய சொங்கியாட்டமா வெச்சுக்கங்க...இவனெல்லாம் போய் அடிக்கனுமான்னு அஜித் ரசிகன் அசிங்கப்பட்டு விட்டுட்டு போய்டுவான்..நீங்க வேட்டைக்காரன் பட கிளைமாக்ஸ் மாதிரி புத்திசாலிதனமா தப்பிச்சுக்கலாம்..அப்பறம் ஒரு முக்கியமான விஷயம்...நம்ம தளபதியோட அழகுல பாதி கூட இல்லாத அந்த அஜித்த நம்ம சும்மா விட்ற கூடாது...

அசல் படம் எப்டி இருந்தாலும் சரி...ங்கோயல போட்டுதள்றோம்...ஒளிஞ்சிருந்து கலாயிக்கறதுல விஜய் ரசிகன எந்த கொம்பனாளையும் அடிச்சுக்க முடியாதுங்கரத நம்ம நிருபிக்கறோம்....படம் எவ்ளோ நல்லா இருந்தாலும் சரி...இவனுகள விடக்கூடாது...அதனால,அசல் படம் ஓடுற தியேட்டர் எல்லாத்துக்கும் போய் உக்காந்து அச்சக்கு அச்சக்கு அச்சக்கு அச்சக்குன்னு கத்திகிட்டே இருங்க...அவனுக கூட்டமா சேர்ந்து கண்டிப்பா அடிப்பானுங்க..அப்போ,மூணு அடி வரைக்கும் வாங்குங்க...நாலாவது அடிக்கு வெளில ஓடி வந்துடுங்க...திரும்பி மட்டும் அடிக்காதீங்க...அது நம்ம சங்க சட்டத்துல இல்ல......சண்டைல நம்ம தளபதி மட்டும்தான் திருப்பி அடிக்கலாம்..நம்ம அடிக்ககூடாது....பகவதி சொல்லிருக்காரு...

ஆனா இது எதையுமே இப்ப பண்ண வேணாம்...ஏன்னா நம்மள மூளை கேட்டவங்கேன்னு அவங்க நேனைச்சிக்கிட்டுருகறது உண்மைங்கறது நிருபணம் ஆய்டும்....ஏன்னு கேக்குறியா..கரப்பான் பூச்சிய தேடி தேடி அடிக்கற மாதிரி அவனுக தேடி தேடி நம்மள வேட்டயாடிகிட்ட்ருகாணுக..அதனால மிச்சம் இருக்கற 587 பெரும் எங்காச்சும் ஓடி ஒளிஞ்சு இப்போதைக்கு உயிரை  காப்பாதிக்குவோம்.நமக்கு எப்போதுமே வீரம் முக்கியம் இல்ல..ஏன்னா அது நம்மள்ட்ட இல்ல...அதனால விவேகத்த வெச்சு பிக் அப் பண்ணிக்குவோம்....எல்லா பயபுள்ளைகளும் உடனே கலைஞ்சு ஒடுங்க...இன்னும் ஒரு மாசத்துக்கு விஜய் ரசிகன்னு வெளியே சொல்லிக்காதீங்க...அடி விழும்...அதுவும் பொளேர் பொளேர்னு செவுட்லையே விழும்...குதிகால் பின்னந்தலைல இடிக்கற அளவுக்கு வேகமா ஒடுங்க...ஒரு பய நிக்காதீங்க.... அசல் படம் வர்ற வரைக்கும் எல்லா விஜய் ரசிகர்களும் போய் புள்ள குட்டிய படிக்க வைங்க...அப்பா அம்மாவுக்கு நல்ல சோறு ஆக்கி போடுங்க...பொண்டாட்டிக்கு நல்ல புடவையா ஒன்னு எடுத்து குடுங்க..கொஞ்ச நாளாச்சும் குடும்பத்தோட மனுஷனா வாழுங்க...(அதாவது ரசிகனா இல்லாம...)

அசல் பட ரிலீஸ்ல ஆக்ரோசமா மீண்டும் சந்திப்போம்..
அது வரைக்கும் கொஞ்சமாச்சும் சிந்திப்போம்....

தமிழகத்தை புரட்டி போட வரும் சுறாவே வருக வருக.... 

இளைய தளபதி வாழ்க...

வெளியூர்காரன்

Posted by Veliyoorkaran - - 25 comments and to commentவேட்டைக்காரன் பார்த்து மனம் நொந்து போய் பஞ்சர் ஆன,  இளைய தளபதியின் அதிதீவிர ரசிகரான வெளியூர்காரன் அவர்கள்..தனது மானசீக தலைவரின் தொடர் மொக்கை படங்களால் வாழ்க்கையே வெறுத்து தனது கூடாரத்தை மாற்றிகொள்ளலாம் என உத்தேசித்துள்ளார்...இளைய தளபதியின் எதிர் கூடாரமான தலையின் ரசிகர்கள் தனது கடந்த கால சலம்பல்களையும் தலை எதிர்ப்பு பிரச்சாரங்களையும் நக்கல்களையும் மனதில் வைத்து கொண்டு தன்னை சேர்த்து கொள்ளாமல் செருப்பாலேயே  அடிப்பார்கள் என உறுதியாக நம்பும் வெளியூர்காரன் ,அடுத்து யார் கூடாரத்தில் சலம்பலாம் என அதிதீவிரமாக சிந்தித்து தின்க் பண்ணி வருகிறார்..


இளம் நடிகர்களுக்கு தீவிரமான ரசிகனாய் தன்னை காட்டிகொள்வதே தன்னை யூத் ஆகவும் ஸ்கூல் ஸ்டுடென்ட் ஆகவும் காட்டிகொள்ளும் ஒரு ராஜ தந்திரம் என தீவிரமாக நம்பும் சீனியர் சிட்டிசன்  திரு வெளியூர்காரன் அவர்கள் ,விஜயகாந்த் ,ரஜினிகாந்த் ,கிருஷ்ணகாந்த் மற்றும் கமலகாசன் ,சாருகாசன் ,ஆகியோர்களின் தீவிர ரசிகனாக தன்னை அறிவித்து தனது ஒரிஜினல் வயதை உலகுக்கு அறிவிக்க ப்ரியபடாததால் மற்ற எந்த இளம் நடிகரின் கொட்டகையில் டென்ட் அடிக்கலாம் என முட்டு கொடுத்து யோசித்து வருகிறார்...  


அது பின்வருமாறு...ஆர்யாவிர்க்கும்  ஜீவாவிற்கும் ரசிகன் என்று சொல்வதில் ஒரு கிரிப் இல்லாத காரணத்தால் அவர்களது கொட்டகையை வெளியூர்காரன் நிராகரித்துவிட்டார்...பருத்திவீரன் கார்த்திக் இன்னும் பந்தய ஓட்டத்திற்கு வராத காரணத்தினாலும்,திரு.சொம்பு அவர்கள் டி.ராஜேந்தரின் மகன் என்ற ஒரே காரணத்தினால் அவரையும்,பரத்தை தலைவனாக ஏற்றுகொண்டால் பரத்திற்கே மனம் குறுகுறுக்கும் என்ற காரணத்தால் அவரையும் அப்பாஸ் வினீத் போன்றவர்கள் அட்டு டாமன்கோலி பீஸ் என்ற காரணத்தால் அவர்களையும்,தனுஷ் தனது பழைய காதலியான  ஐஸ்வர்யாவை உஷார் பண்ண காரணத்தால் அவரையும்,சூர்யாவை ஏற்றுக்கொண்டு டீசெண்டாக சலம்ப விருப்பமில்லாததால்  அவரையும்    தொடர்ச்சியாக நிராகரித்து விட்டார்...


கேர்ள் ப்ரண்ட்ஸ்கிட்ட பிலிம் காட்டுவதற்கும்,நண்பர்கள்கிட்ட உதார் காட்டுவதற்கும் விஜய்யை விட்டால் தனக்கு வேறு நாதி இல்லை என்ற காரணத்தால் வேறு வழியே இல்லாமல் மனம் திருந்தி மீண்டும் விஜய் கூடாரத்திலேயே டென்ட் அடிப்பதுதான்  தனது யூத் தனத்திற்கு சேப்டி என்று உறுதியாக நம்பும் வெளியூர்க்காரன் அவர்கள் தனது பழைய தளபதியான விஜய்யை மீண்டும் இளைய தளபதியாக மனதார ஏற்றுக்கொள்ளலாம் என சுயநினைவுடன் சூடு சொரணை இல்லாமல் மானம் கெட்டுபோய் முடிவெடுத்துள்ளார்...தளபதியின் புகழ் பாடும் தொண்டனாய் கடைசி வரை இயங்க போவதாகவும் சுராவை வெற்றி படமாக்க முடிந்த வரை ஒப்பேத்தி வக்காலத்து வாங்குவேன்  என்றும் சூளுரைத்துள்ளார்...


இந்த பொழைப்பு பொழைக்கரதுக்கு வடபழனி பஸ் ஸ்டாண்ட்ல பிச்சை எடுக்கலாம் என்று சிலரும்,நாண்டுகிட்டு வேஷம் குடிச்சு தூக்குல தொங்கி சாகலாம் என சிலரும் காரி துப்பி வாழ்த்து தெரிவித்துள்ளனர்...வெளியூர்காரனின் நண்பர்கள் சிலர் தயவு செஞ்சு ரூமை காலி பண்ணிட்டு வெளில போயிரு என்றும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்... 
இது ஒரு பி டி ஐ யின் செய்தி குறிப்பு....
வெளியூர்க்காரன்...

Posted by Veliyoorkaran - - 25 comments and to commentவேட்டைக்காரன் இளைய தளபதியின் மாட்டடி சிக்ஸர்...பால் கிரௌண்ட்க்கு வெளில போய்டுச்சு...அப்டி ஒரு அடி...படம் கொஞ்ச நஞ்ச ஹிட் இல்லப்பா...உலக ஹிட்டு...செம சூப்பர்னு சொல்றதெல்லாம் சாதாரண வார்த்தைங்க.....இது அதுக்கும் மேல...இப்போ எங்க கவலையெல்லாம் சுறாவும் ஹிட் ஆகணுமேன்னுதான்....

இளைய தளபதியோட சின்ன அய்யா ஒரு டான்ஸ் ஆடுறாருங்க....அய்யோ சாமி கண்ணெல்லாம் கலங்கிரிச்சு கத்துன கத்துல....ரெண்டு கண்ணு பத்தலபா அந்த கண் கொள்ளா காட்சிய பார்க்கறதுக்கு.....

எது படம் எப்டி இருக்கா...போங்க சார்...நாங்க விஜயோட மொக்க படத்துக்குதான் மூச்ச தம் கட்டி வக்காலத்து வாங்குவோம்....வேட்டைக்காரன் எங்க செல்லம்...எங்க ராசாத்தி...நோ வக்காலத்து...ஒன்லி வாட்சிங்...எங்க வேலைய மக்கள் செய்வாங்க....வாத்யாரே சுறாவ மட்டும் கொஞ்சம் பார்த்து பண்ணு...நீ வாடி செல்லம் நாம 2017 ல ஆட்சிய புடிக்கறோம்....

எனக்கு அடுத்த ஷோவுக்கு டைம் ஆய்டுச்சு....இந்த வாரம் மட்டும் 4 ஷோவுக்கு டிக்கெட் புக் பண்ணிருக்கேன்...இனி அடுத்த வாரம் வேற பார்க்கணும்...அனுஷ்கவா வேற சரியா பார்க்கல.....நெறைய வேலை இருக்கு...சரி நான் கெளம்பறேன்...

கெளம்பறதுக்கு முன்னாடி ஒரு வார்த்த...
பொறந்த விஜய்யா பொறக்கணும்...
இல்லேன்னா விஜய் ரசிகன பொறக்கணும்...இளைய தளபதி ராக்ஸ்....

ஹலோ யாரு ராகுல் காந்தியா...என்ன சார் நீங்க இப்டி தொந்தரவு பண்றீங்க...ஒரு தடவ சொன்ன புரியாதா....அய்யாட்ட பேச முடியாது சார் இப்போ...ஒரு மூணு வருஷம் கழிச்சு கால் பண்ணுங்க...பார்ப்போம்..

வெளியூர்க்காரன். .

Posted by Veliyoorkaran - - 13 comments and to commentஅன்றைய வேட்டைக்காரன்.....நேற்றைய முதல்வர்...”.
இன்றைய வேட்டைக்காரன்...நாளைய முதல்வன்...


"டிசம்பர் 18...வேட்டைக்காரனின் வேட்டை ஆரம்பம்..."


விஜய் ரசிகர்களுக்கு ஒரு வரி...


மாப்ளைங்களா, பங்காளியலா பூரா பேருக்கும் வணக்கம்.ஒருவழியா வந்துட்டான் நம்ம வேட்டைக்காரன்.
தக்காளி வேட்டைக்காரன் ஜுரம் கனஜோரா கல்லா கட்ட ஆரம்பிச்சுடுச்சு.மெட்ராஸ் ஆல்பர்ட் தியேட்டர்ல பூகிங் ஓபன் ஆயிருச்சு.கமலால நாலு நாளைக்கு தியேட்டர் பக்கம் வராதீங்கன்னு
சொல்லிட்டாங்கேலாம்.படுபாவிங்க.கவலைபடாத...தியகராஜால கண்டிப்பா கெடைக்கும்.மனசுல நம்பிக்கை வை...மத்த ஊர்ல இருக்கற மச்சான்கெல்லாம் சட்டுபுட்டுன்னு டிக்கெட்ட புக் பண்ணுங்க...காசு இல்லேன்னா பொண்டாட்டி தாலிய அடமானம் வைச்சாச்சும் மொதோ ஷோவ்க்கு  டிக்கெட் எடுங்க...இந்த மாதிரி நேரத்துலதான் நம்ம சூதானமா சுறுசுறுப்பா அரும்புதுரும்பா நடந்துக்கணும்...கண்ணு முழிச்சதுலேர்ந்து நைட் தூங்க போற வரைக்கும் நம்ம வேட்டைகாரண பத்தி பேசுற பேச்சு நம்ம இளைய தளபதிக்கு அங்குன நீலாங்கரைல கேக்கணும்...நாளை பின்ன நம்ம .மு. ஆட்சிய புடிக்கும்போது அந்த பதவி வேணும் இந்த பதவி வேணும்னு நம்ம அங்கிட்டு போய் மண்டைய சொறிஞ்சுகிட்டு நிக்க கூடாது...சின்னவரா பார்த்து (சஞ்சீவ் அய்யா..) கூப்டு நமக்கு குடுக்கணும்...நம்ம சலம்பல் அப்டி ஒரு கொடூரமானதா இருக்கணும்...அதனால உடனடியா எல்லாரும் ஆர்குட்ல உங்க பேர வேட்டைகாரன்னு மாத்துங்க...இளைய தளபதி போட்டோவ போடுங்க...அவங்கே கம்யுனிட்டில  போய் அந்த பயலுகள வரண்டிளுங்க...சண்டைக்கு வரலேன்னா விடாதீங்க...எவ்ளோ முடியுமோ அவ்ளோ வேருப்பெத்துங்க...பேஸ்புக்ளையும்ஆர்குட்ளையும் அல்ரெடி அவேங்களுக்கும் நமக்கும் அடிதடி ஆரம்பமாயருச்சு..அத ஊதி பெருசாகுங்க..எல்லார் பைக்லயும்  வேட்டைக்காரன் ஸ்டிக்கர் ஓட்டுங்க.. போட் லேர்ந்து நகராட்சி கக்கூஸ் வரைக்கும் வேட்டைக்காரன் பாட்ட அலறவிடுங்க..விஜய் ரசிகர்கல்ங்கறது ஒரு இயக்கம் இல்ல ..அது ஒரு மதம்ங்கறது மக்களுக்கு தெரியனும்...உயிரே போனாலும் சரி..தக்காளிமக்க..படத்த ஒட்றோம்..ங்கோயாள அது எப்டி இருந்தாலும் சரி... இளைய தளபதிக்காக உயிரையே குடுக்கற ரசிகர் கூட்டம் எல்லாரு  ஒன்னு கூட வேண்டிய நேரம் வந்துடுச்சு...நம்மல்லாம் சிங்ககூட்டம்...அதான் செதறி இருக்கோம்...வாங்க...பாசத்துக்கு பசுக்கூட்டமா மாறுவோம்..ம்ம்..ஆகட்டும்..லந்துகள் ஆரம்பமாகட்டும்...ஒவ்வொரு தெருவிலும் புலி உருமட்டும்...
Start Music.....வேட்டைகாரனை போட்டுத்தள்ள காத்திருக்கும் விஜய் எதிரிகளுக்கு ஒரு வரி....


அய்யா சாமிகளா...வணக்கமுங்க...இது உங்க அடிமை எழுதறேனுங்க...ஒரு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி என் பிரெண்ட் சண்டாலபாவி ஒருத்தன் விஜய நக்கல் அடிச்சா ஹிட்ஸ் அதிகமாவுன்னு சொன்னானுங்க... அதுக்கு ஆசைப்பட்டு அறியாபுள்ள தெரியாம என்சாமிய நக்கலடிச்சுபுட்டேனுங்க...அது எவ்ளோ பெரிய தெய்வ குத்தமுன்னு எனக்கு இப்போ தெரியுதுங்க...அந்த சாமிகுத்தம் உங்களுக்கும் வந்துரகூடாதுன்னுதான் இத சொல்றேன்..எனக்கு நல்லா தெரியும்.உங்கள்ள பாதி பேரு வேட்டைகாரனுக்கு விமர்சனம் எழுதிவெச்சிட்டு போஸ்ட்மார்டம் செய்யறதுக்கு ரிலீஸ்காக  வெயிட் பண்றீங்கன்னு....அப்டியெல்லாம் பண்ணிடாதீங்க சாமியளா...எங்களோட அரசியல் எதிர்காலமே இந்த படத்துலதான் சாமி இருக்கு...நீங்க பாட்டுக்கும் போற போக்குல படத்த கொத்து கொத்துன்னு கொத்தி  போட்டு தள்ளிட்டு போய்டாதீங்க...அப்பறம் எங்க இளைய தளபதிய இந்திய பிரதமரா பார்க்கற எங்க கனவு கனவாவே போயிரும்... உங்கள சங்கீதா அக்கா,சின்ன அய்யா சஞ்சீவ் அண்ணன்,(அம்புட்டு மரியாதை.சின்ன ஐயா மேல..)பெரிய ஐயா சந்து எல்லார் சார்புலயும் கெஞ்சி கதறி கேட்டுக்கறேன்...தயவு செஞ்சு இளைய தளபதியோட இந்த படத்துக்கு மட்டும் லீவ் குடுத்துருங்க...உங்களுக்கு புண்ணியமா போவும்...


தமிழ் சமுதாயத்துக்கு ஒரு வரி...


நான் என்னதான் கெஞ்சி கேட்டாலும்,இவங்க வேட்டைகாரண போடாம விடமாட்டேன்கேன்னு எனக்கு தெரியும்...அதனால எனதருமை தமிழ் சமூகமே...இங்க யாரு வேட்டைகாரனுக்கு விமர்சனம் எழுதுனாலும் படிக்காதீங்க...அது கேபிள் சங்கராவே இருந்தாலும் சரி...போய் படத்த பாருங்க...உங்களுக்கு புடிக்கலேன்னா தயவு செஞ்சு ஒரு கட்டிங் அடிச்சிட்டு ஒரு தூக்க மாத்தரைய சாப்டுட்டு தூங்கிடுங்க...வெளில யாருகிட்டையும் படம் நல்லா இல்லைன்னு சொல்லாதீங்க... வெக்கத்த விட்டு ஒரு விஷயம் சொல்றேன் ...கேட்டீங்கன்னா உங்களுக்கு கண்ணெல்லாம் கலங்கிரும்...ஒரு சாதாரண மேட்டர்,தம்மாதுண்டு நில பிரச்சனை..அதுல என் தளபதிய மாட்டிவிட்டு என்னா ஆட்டு ஆட்டுனாங்கே பார்த்தீங்கள்ள..வேட்டைக்காரன் ரிலீஸ்க்கே என் தளபதி கலாநிதிமாறன் கால புடிச்சு கெஞ்ச வேண்டிய சூழ்நிலை..இந்த படம் மட்டும் ஓடல.,ராகுல் காந்தி இல்ல..ஜே.கே.ரித்திஷ் கூட எங்கள மதிக்க மாட்டான்...அதனால எங்க மேல பரிதாபப்பட்டு,இந்த படத்த பார்த்துடுங்க ப்ளீஸ்...எங்க .மு. எதிர்காலம் இப்போ உங்க எல்லார் திருபாதங்கள்ள இருக்கு...பார்த்து காப்பாத்தி விடுங்க...
கடைசியா விஜய் அண்ணனுக்கு ஒரு வரி..
அண்ணேன்...உனக்காக இங்க எல்லார் கால்லயும் விழாத குறையா கெஞ்சிகதறிருக்கேன்...இதெல்லாம் எதுக்கு..நீ முதல்வர் ஆனோன்ன, என்ன பொதுப்பணித்துறை அமைச்சராக்கி அழகு பார்ப்பங்கர நம்பிக்கைலதான்...மகனே படம் மட்டும் நல்லால்ல உனக்கு சங்கு ஊதுற  மொதோ ஆள்  நாந்தாண்டிய்யேய்....!
வேட்டைகாரனுக்காகவும், டிசம்பர் 18க்காகவும் காத்திருக்கும்... 


வெளியூர்க்காரன்.