- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 54 comments and to comment


தியேட்டர்ல   சீட் நுனில உக்காந்து உங்க பிகர் நெறைய சீன்ல, பாப்கார்ன கீழ கொட்டிகிட்டே உங்க கைய இருக்கமா கட்டிபுடிச்சுகிட்டு படம் பார்க்கற  பரமசுகத்த எப்டியாவது அனுபவிக்கனும்னு ஆசைபடற அன்பர்கள் தாராளமா இந்த படத்துக்கு அந்த டிக்கட்ட தூக்கிகினு போலாம்... ஆனா, என்ன ஒன்னு..நீங்க எந்த சைட் உக்கான்துருக்கீங்கரத கிளியரா சொல்லிருங்க.. பாவம் என் பக்கத்துல உக்காந்துருந்த பொண்ணு படம் பார்க்கற டென்சன்ல  அவ பாய் பிரெண்டுன்னு நெனைச்சு ,சரி அத விடுங்க நம்ம படத்துக்கு போவோம்... !


நடு தண்டவாளத்துல நின்னு நம்ம விஜயகாந்த் குறுகுறுன்னு  முறைச்சு பார்த்து செய்ற வேலைய நம்ம டென்சல் வாஷிங்க்டன் ரொம்ப கஷ்டப்பட்டு உடம்ப வருத்தி செஞ்சிருக்காரு...எது என்னா வேலையா...அதாங்க மணிக்கு எழுவது கிலோமீட்டர் வேகத்துல போற டிரைவர் இல்லாத ட்ரைன நிப்பாட்றது..தலைவர் பட்டாசு பண்ணிருக்காரு..டென்சல் ரசிகர்களுக்கு இந்த படம் செம ட்ரீட்...அதும் கேப்ல கலாய்க்கற சீன்லாம் ங்கொய்யான்னு  இருக்கு..!


ஆனா பாருங்க தமிழ் ரசிகர்களுக்கு இந்த படம்லாம் ரொம்ப சப்ப மேட்டரு...நம்ம பரவால்ல...தெலுங்கு  பட ரசிகர்களுக்கு இது மேட்டரே இல்ல...அவங்கே பாலகிருஷ்ணா ட்ரைன நிப்பாட்ட வந்துகிட்ருக்காருன்னு தெரிஞ்சா ட்ரைன் தானா எஞ்சின ஸ்டாப் பண்ணிட்டு எறங்கி தம் அடிக்க போயிரும்..தக்காளி அவன் வந்தா டயலாக் அடிச்சே கொல்லுவான்னு..அவேங்கல்லாம் வானத்துல பறந்துகிட்ருக்கற ராக்கெட்ட ஆட்டோல கூட்டமா போய் மடக்கரவங்கே . இந்த படம் அவெங்களுக்கு பிசாத்து....!


ரொம்ப நல்ல த்ரில்லர் படம்..டென்சல்க்காக கண்டிப்பா ஒருதடவ பார்க்கலாம்..இந்த படம் எப்புடி இருக்குன்னு இலுமினாட்டி  இன்னும் நாலு வருஷம் கழிச்சு பரபரப்பா ஒரு விமர்சனம் போடுவான்..படிச்சு பார்த்து தெரிஞ்சுக்கங்க...


மொத்தத்துல இந்த படம் ஒரு ரியல் எண்ட்டர்டெய்னர்..!

மிஸ் பண்ணிடாதீங்க...!


வெளியூர்க்காரன்  


Posted by Veliyoorkaran - - 35 comments and to commentபொண்ணு பார்த்த கதை . 

எனக்கு மூச்சு பேச்சே வரல, எல்லார்கிட்டயும் இவ்ளோ நல்லா பேசறவன் என்கிட்டே என்ன பேச போறானோன்னு ஒரே நடுக்கம்.


ஆனா, இன்னும் கொஞ்ச நாள்ல இவன தூங்க விடாம விடிய விடிய பேசபோறோம்னு மட்டும் உள்மனசு அடிச்சு சொன்னுச்சு..!


தோட்டத்துக்கு வந்தோம்,


அப்போதாங்க அவன முழுசா பார்த்தேன்,


கொஞ்சம் க்ளோஸ் அப்ள அவன பார்த்ததும், மனசுக்குள்ள ஏதேதோ ஜப்பானீஸ் எழுத்தெல்லாம் குறுக்க நெடுக்க ஓடுனுச்சு... அத தமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணி பார்த்தப்போ வெக்கம்னு வந்துச்சு..! 


"என்ன ரொம்ப வெட்கப்பட வைக்கரிங்கன்னு" அவன் காதுக்குள்ள சொல்லனும்போல இருந்துச்சு..


ஆனா சொல்லல...!


அன்னிக்கு சிபி என்கிட்டே என்ன பேசுனான்னு நான் ஆயிரம் க்ளு குடுத்தா அதுல நீங்க அஞ்சத்தான் கரெக்டா கண்டுபுடிப்பீங்க...!


பேச ஆரம்பிச்சான்..,


சிபி : என்ன நிக் நேம் வைக்க போறீங்க? 


நான்: நான் எதுக்கு நிக் நேம் வெக்கணும்..? 

சிபி: இல்ல கல்யாணத்துக்கு அப்பறம் ஒரிஜினல் பேர் வெச்சு கூப்ட்டா ஒரு கிக் இருக்காது..அதான் கேட்டேன்..!


எனக்கு லேசா கிர்ருன்னு ஆய்டுச்சு.. அட பாவி ...நான் இன்னும் உன்ன புடிச்சிருக்குன்னு சொல்லவே இல்லையேடா என் செல்ல போருக்கின்னு சொல்ல உதடு துடிச்சுது..என் கண்ண பார்த்து என் மனச படிக்க ஆரம்பிச்சிருந்தான் என் மக்கு குட்டி..!


 ம்ம்ம்..இன்னும் 5 நாள்ல சொல்றேன்னு சொன்னேன்..!


அழகா சிரிச்சான்...!


அஞ்சு நிமிஷம் எதுவுமே பேசாம இருந்தோம்..எதுவுமே பேசாம என் கண் வழியா நைசா எறங்கி என் மனச திருடிகிட்ருந்தான்..என் கண்ணு முன்னாடியே...!


என்னால எதுவுமே பண்ண முடியல..பண்ணவும் தோணல..

அது அவனோடதுதான...!


அடுத்து என்ன கேட்ருப்பான்னு நெனைக்கறீங்க..


ஒரு ரோஜாவ பூவ என் முன்னாடி மண்டி போட்டு இங்கிலீஷ் பட ஹீரோ மாதிரி ரொமாண்டிக்கா ஐ லவ் யு சொல்லி குடுத்துருபான்னுதான நெனைக்கறீங்க...அதான் இல்ல..!


Phone நம்பருக்கு பதில் Pan நம்பர் குடுங்கன்னு கேட்டான்...

அப்போதான் புரிஞ்சுது பார்ட்டி  உள்ள  பயத்தை மறைச்சு வச்சுகிட்டு இவ்ளோ நேரம் க்ரிப்பா  பேசிக்கிட்டு இருக்குதுன்னு.. அப்போதான் கொஞ்சம் எனக்கும் தைரியம் வந்துச்சு..


போன் நம்பர் குடுத்தேன்..


நான் வேணாம் வேணாம்னு சொல்ல சொல்ல என் நாக்கு அவனுக்கு தேங்க்ஸ் சொல்லி தொலைச்சிடுச்சு...


எனக்கு தேங்க்ஸ்-எல்லாம் வேணாம் வேற வேனும்ம்னு அவன் சொன்னதும்..

மறுபடியும் பயம், எங்க வீட்டு வெள்ளை கலர் உச்சிமாங்காளி (பூனைக்குட்டி ) மாதிரி  வந்து கால சுத்திக்கிச்சு..


ஒரு வழியா தைரியத்தை வரவழைச்சுகிட்டு என்ன வேணும்ன்னு கேட்டேன்..


அப்புறமா சொல்லறேன்னு சொல்லிட்டான்...அட பாவி சொல்லிதொலைடா..எதா இருந்தாலும் சத்தியமா தரேன்னு நான் எப்டி அவன்கிட்ட சொல்ல.!

ஆனா அப்போ அவன் கேக்கல..


என்ன கேட்டு இருப்பான்னு கெஸ் பண்ணி வைங்க.. அத  கடைசில சொல்றேன்...


நேத்து ட்ராவல் பண்ணதுல ரொம்ப டயர்டா இருக்குமே உங்களுக்கு ...இது நான்.

ஆமாம்ங்க..ஆனா இங்க எதோ ஒன்னு என்னை ரொம்ப சந்தோசமா எனேர்ஜெடிக்கா வெச்சிருக்கு..டயர்ட்னேஸ் தெரியல..! பொருக்கி..என்னைதான் சொன்னான்... !


வெக்கப்பட்டு நிமிர்றதுக்குள்ள  உங்ககிட்ட வத்திபெட்டி  இருக்கான்னு கேட்டான்..


வத்திபெட்டியா...எதுக்கு கேக்குறான்..பழைய தமிழ் சினிமால வர்ற சாம்பார் ஹீரோஸ் மாதிரி எங்க வீட்டுக்கு வெளக்கேத்த இப்பவே ரெடியா இருக்கீங்களான்னு மொக்கத்தனமா கேட்டு சத்தமா சிரிப்பானோ...பார்த்தா அப்டி தெரியலையே...ஒரு வேலை தம் அடிப்பானோ..அப்டி அடிச்சாலும் பொண்ணு பார்க்க வந்த எடத்துல அடிக்கமாட்டானே...வேற என்னவா இருக்கும்...எதுக்கு இப்போ கேக்குறான்...!


எதுக்கு கேக்குறீங்க...?


அதுக்கு அவன்...,

"ஒண்ணும்ல...இன்னிக்கு என் ராசி பலன்ல தொல்லைன்னு போட்டுருந்துச்சு , அதான்..வீட்டுக்கு போனோன்னோ, எங்க வீட்டு காலன்டர கொளுத்தரதுக்கு கேட்டேன்..!”


லிப்ஸ் கிஸ் எப்டி இருக்கும்னு மனசு யோசிச்சு பார்க்க ஆரம்பிச்சுது....!


எதுக்கு ரெண்டு மோதிரம் போட்ருக்கீங்கன்னு கேட்டான்..

எப்போ பார்த்தீங்க..? இது நான்..

வந்துதுல இருந்து ஷாக் அடிக்கற உங்க கண்ணை மட்டும்தான் பார்த்துகிட்ருக்கேன்...ஆனா, உங்க கண்னை பார்க்க முடியாம என் கண்ணு தவிக்கற நேரத்துல என்னை என்ன பண்ண சொல்றீங்க..அதான் மொதிரத்த பார்த்தேன்..


இவன்கிட்ட பேசி தோத்துபோக யாருக்குதாங்க பிடிக்காது...?


டேய் மக்கு குட்டி..உன்ன எனக்கு ரொம்ப புடிச்சிருக்குடான்னு  நான் மனசுக்குள்ள சொல்றத..எங்க வீட்டு ரோஜா செடி ஒட்டு கேட்டுட்டு அவன்கிட்ட சொல்லிடாதான்னு  இருந்துச்சு.


சரி நான் கெளம்பறேங்கன்னு  சொன்னவ்ன்கிட்ட, தேங்க்ஸ்க்கு  பதிலா எதோ வேணும்னு கேட்டீங்கலேன்னு வெட்கத்த விட்டு கேட்டேன்...


ஆமாம்.. என் புருசன்ட்ட எனக்கு என்ன வெக்கம்..


அவன் சொன்ன பதில்:

.............................................................................................

பொருக்கி எதோ பொடி வெச்சுதான் என்கிட்ட அந்த கேள்விய என்கிட்ட கேட்டான்னு எனக்கு தெரியும்..அதனால அவன் கேட்டது எனக்கு புரியாத மாதிரியே நடிச்சிட்டு , எனக்கு அந்தளவுக்கு யோசிக்க தெரியாது, நீங்களே சொல்லிடுங்கலேன்னு கேட்டேன்...!


"நானும் உங்கள  பாத்ததுல இருந்து யோசிச்சுகிட்டுதான் இருக்கேன். ஒன்னும் புரியல...நீங்களும் யோசிங்க...வர்ற வெள்ளிகிழமைக்குள்ள சொல்லுங்க சொல்லுங்க, அப்படியும் முடியலன்னா, வெள்ளிகிழமை ஈவினிங் வாங்க...நம்ம காந்தி பார்க்குக்கு போய் உக்காந்து ரெண்டு பெரும் ஐஸ் க்ரீம் சாப்ட்டுகிட்டே யோசிக்கலாம்..அப்பவும் பதில் கெடைக்கலைனா பார்க்குக்கு ஆப்போசிட்ல ஒரு முருகன் கோவில் இருக்கு...சர்க்கரை பொங்கல் நல்லா இருக்கும்...அத வாங்கி சாப்ட்டுட்டு அங்கேயே உக்காந்து ரெண்டு பெரும் திருதிருன்னு முழிக்கலாம்..!”


சிரிச்சிட்டு போய்ட்டான்...


அவன என்கிட்ட விட்டுட்டு...!
----------------------------------------------------------------------------

வெளியூர்காரனுக்கு..,

முடிவில்லா நம் நட்பின் தொடக்கம் போல், 

அன்னியாயகாதலில்  ஆரம்பிக்கட்டும் உங்கள் மன வாழ்வு...!

வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,

சிவா.

------------------------------------------------------------------------------------------

There was an error in this gadget