- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 85 comments and to comment


இனிமே எந்த தமிழ் படத்துலயும் பஞ்ச் டயலாக் இருக்காது...கைய முறுக்குனா நரம்பு ஏறாது, ஒரே பாட்ல ஹீரோ பணக்காரன் ஆக மாட்டாரு,மொத்ததுல இனி வரும் தமிழ் படங்கள்ல அடுத்த தளத்த எதிர்பார்க்கலாம்....ஏன்னா இதுக்கு மேல உதைக்க முடியாதுங்க தமிழ் படங்கள்ல...படம் நாசமா இருக்கு...கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்...ஆனா இந்த படத்துக்கு போகும்போது நெறைய சினிமா பார்க்கற நண்பர்களோட  போங்க..அப்பத்தான் யார கலாய்க்கறாங்கன்னு புரியும்...எனக்கு பின் சீட்ல ஒரு பொண்ணு உக்காந்து அவங்கம்மாக்கு சொல்லிட்டே இருந்தா..படத்த விட அது நல்லா இருந்துச்சு.. யிஷுன் தியேட்டர்ல...அந்த புள்ளைக்கு ஒரு தேங்க்ஸ்.   

தமிழ் படத்த போட தமிழ் படம் வந்தா மாதிரி...தமிழ் ப்ளாக போட இதோ வந்துடுச்சு தமிழ் ப்ளாகு...இத படிச்சிட்டு கோவம் வர்றவங்க என்ன உங்க தம்பியா நெனைச்சு மன்னிச்சிட்டு தயவு செஞ்சு போய் நல்ல கயிரா வாங்கி தூக்குல தொங்கிடுங்க...ஏன்னா இதுல உங்கள பத்திதான் எழுதிருக்கேன்...கோவம் வராத மாதிரி நடிச்சிட்டு மாப்ள சூப்பர்டா பின்னிட்டேன்னு பின்னூட்டம் போடறவங்க வீட்டுக்கு போய் யாருக்கும் தெரியாம நடுமண்டைல குட்டிக்கங்க ..இப்ப சம்பவத்துக்கு போவோம்..

பதிவுலகத்த விட்டு விலக போறேன்னு அறிவிக்கறது...
இந்த கூட்டத்துல சில வெங்காயங்க ஆ ஊன்னா உடனே அவன் என்ன திட்டிட்டான்.. இவன் என்ன பத்தி தப்ப எழுதிட்டான்....அதனால நான் பதிவுலகத்த விட்டு விலக போறேன்னு விறைப்பா நிக்கறதும்,உடனே அந்த கூமுட்டைய போய் நாலு நாசமா போனவங்கே சமாதானபடுத்தி கூட்டிட்டு வர்றதும் ஒரு வாடிக்கையாவே நடந்துகிட்டுருக்கு...ஏன்யா இப்டி பண்றியே...மனுசன்தான நீங்கல்லாம்...அண்ணாச்சியே விருப்பபட்டு போறேன் இனிமே எழுதமாட்டேன்னு சொல்லும்போது நீங்க ஏன்யா குறுக்க பூந்து கொழப்பறீங்க...போய் தொலையுது எழவெடுத்த சனியன்னு தலமுழுகிட்டு  அடுத்த பதிவ போய் படிக்க வேண்டியதுதான..அதெல்லாம் பதிவெழுதி என்னத்த சாதிச்சு கிழிக்க போகுது.... எஸ்.ராமகிருஷ்ணன் வீட்டு கத்திரிக்கா ரேஞ்சுக்கு சலம்ப வேண்டியது..சரக்கு இருக்கறவன் சலம்ப மாட்டான்யா...இனிமே எவனாச்சும் போறேன்னு அறிவிச்சா உடனே போடா நாயேன்னு துரத்தி விட்ருங்க...

பின்னூட்ட கொசுங்க...
போறேன்னு சொல்ற சைக்கோவ கூட மன்னிச்சு விட்டர்லாம்..லூசு தாழ்வு மனப்பான்மைல உளருதுன்னு..ஆனா இந்த மொக்கையா பின்னூட்டம் போடறாங்கே பாருங்க...அவங்கெல எல்லாம் மவுண்ட் ரோட்ல ஜட்டியோட ஓட விட்டு முட்டிக்கு கீழ குறி வெச்சு தப்பு தப்பா கண்ட எடத்துல சுடனும்....படிச்சு பாரு..புடிச்சிருந்த புடிச்சிருக்குன்னு எழுது...புடிக்கலேன்னா இழுத்து போட்டு உதை...அதென்ன கழுதை பார்மாலிட்டி பண்றது...அவன் போன்ற மொக்கைக்கு இவன் போய் அருமை அற்புதம் அழகு மயிறு மட்டைன்னு பின்னூட்டம் போடவேண்டியது...இவனுக்கு அவன் வந்து பார்மாலிட்டி பண்றது..பதிவுலகத்துல நெஜமாவே நல்லா எழுதற எழுத்தாளர்கள் வெளில தெரியாம போறதுக்கு காரணம்...இந்த நான்சென்சுங்க கெளப்பற நாயிஸ்தான்..எலேய்..இந்த பார்மாலிட்டி பண்ற நோன்னைங்களுக்கு ஒன்னு சொல்லிக்கறேன்..பூமா தேவி கூடிய சீக்கிரம் சிரிக்க போறா...நீங்கல்லாம் உள்ள போக போறீங்க..அப்ப உங்களையெல்லாம் பார்த்து வாயால சிரிக்கமாட்டேன்டி  மாப்ளைங்களா... 

சினிமா விமர்சனம் பண்றது....
சினிமா விமர்சனம்ங்கர பேர்ல இவங்கே பண்ற அக்கப்போரு..அய்யோயோ... இதுல ஒரு அண்ணாச்சி ஒரு விளம்பர படம் எடுத்து கூட நான் பார்த்ததில்ல..ஆனா பெரிய நோன்னையாட்டமா படத்த அலசுவாக.இது நொட்டை..அது நொட்டைன்னு..ஏன்யா இந்த விளம்பரம்.இதுல மானம் கெட்டுபோய் மொதோ ஷோவ வேற கடன் வாங்கி டிக்கெட் எடுத்து பார்க்கவேண்டியது...கேட்டா கலா ரசிகர்களாம்..மொதொல்ல போய் குளிங்கடா...அப்பறம் வந்து விமர்சனம் எழுதலாம்....

வோட்டு போட சொல்லி கெஞ்சறது....
வோட்டு போட சொல்லி கெஞ்சறது...பதிவோட கடைசீல மறக்காம வோட்ட போட்டுட்டு போங்கன்னு ஒரு கட் அவுட்டே வெச்சுருபாங்கே...நான் என்ன சொல்றேன்...இந்த பொழைப்பு பொழைக்கரதுக்கு மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்ல போய் துண்ட வாங்கி விரிச்சு பிச்சை எடுக்கலாம்..ஒரு பதிவு எழுதறியா...வோட்டு பட்டன வை...படிச்சிட்டு புடிகறவன் வோட்டு போட போறான்..புடிகாதவன் உன்ன கெட்ட வார்த்தைல மனசுக்குள்ள திட்டிட்டு வெளில போக போறான்..ஏன்யா மானம் கேட்டு போய் எல்லார்கிட்டயும் கெஞ்சற...

அவார்டு குடுத்துக்கறது....
மல்லாக்க படுத்து விட்டத்த பார்க்கும்போது மேல என்னென பூச்சி தெரியுதோ அந்த பூச்சி பேர்ல எல்லாம் அவார்டு குடுத்துக்க வேண்டியது...கரப்பான் பூச்சி அவார்டு,மூட்ட பூச்சி அவார்டு,கம்பளி பூச்சி அவார்டுன்னு...பதிலுக்கு அவுக இவுகளுக்கு தேங்க்ஸ் தெரிவிச்சு ஒரு எட்டுகால் பூச்சி அவார்டு குடுப்பாக..மாத்தி மாத்தி பாராடிக்குவாங்கே...நன்றி சொல்லிக்குவாங்கே..இந்த கருமத்த நம்ப படிக்கணும்....இவனுக தூங்கும்போது மூக்குக்குள்ள பூரான புடிச்சு விடனும்..அப்பத்தான் திருந்துவாங்கே....

கவிதை எழுதறது..
உனக்கென்ன வருதோ அத நீ ஒழுங்கா செய்யணும்...வினுச்சக்கரவர்த்தி பஞ்ச் டையலாக் அடிச்சா நீ ஒத்துக்குவியா...காந்திமதி கிளாமர் காமிச்சா...ஒதுக்கமாட்டேள்ள..அந்த மாதிரிதான எங்களுக்கும்..என் உனக்கு வராத ஏரியால உள்ள பூந்து வாந்தி எடுத்து வெக்கற...கவிதை எழுத வரலேன்னா விட்டு தொலையேண்டா எழவெடுத்தவனே...இதெல்லாம் எழுதுனாதான் உன்ன மிக பெரிய பதிவர்னு ஒத்துக்குவோம்னு  உன்ட்ட   யாராச்சும் சொன்னங்கேலா...இல்லைல..அப்பறம் ஏன்டா சுத்தி இருகவன சாவடிக்கற நாதாரி...

பொண்ணுங்களோட பதிவுக்கு போய் ஜொள்ளு விடறது...
ஒரு நாதாரி சிறுக்கி பெண்ணுரிமைன்கர பேர்ல எதெதையோ வாமிட் பண்ணி வெச்சுருக்கா.. ஆணுரிமைய பறிக்கரதுதான் பெண்ணுரிமைன்கர மாதிரி ஏதேதோ செக்ஸ பத்தியெல்லாம் எழுதி  பினாத்தி வெச்சுருக்கா..அதுல நம்ம சொட்ட மண்டை பதிவர் போய் பின்னூட்டம் போட்ருகாறு..சகோதரி உங்க உணர்வுகள் எனக்கு புரியுது...அதே நேரத்துல எங்க உணர்வுகளுக்கும் நீங்க மரியாதை குடுக்கணும்..தங்கள் எழுத்துக்கள் அருமை...தொடர்ந்து சேவை ஆற்றுங்கன்னு...அவ எழுத்துல நீ என்னத்த அருமைய கண்டுட்ட..என் உணர்வுக்கு மரியாதை குடுன்னு நீ ஏன் அவகிட்ட போய் கெஞ்சற..சும்மா எதாச்சும் எழுதனுமேன்னு உளறி வெக்கறது...அந்த சிறுக்கி இன்னும் ஓவரா எழுதுவா...எனக்கு தெரிஞ்சு சில பதிவர்கள் நெஜமாவே ரொம்ப அருமையா எழுதறாங்க..தரமா எழுதறாங்க.அவங்கள போய் பாராட்டு..அவங்க வளரட்டும்..அவங்க வளரனும்...ஏன் மொக்க பதிவுக்கெல்லாம் பின்னூட்டம் போட்டு உங்க வேல்யுவ குறைச்சுகறீங்க..

கேங்கு வெச்சுக்கறது...
டேய் க்ரூப் சேர்த்துகிட்டு அலையற நோன்னைகளா..ஏடிஎம்கேவே அட்ரஸ் இல்லாமா போச்சுடா..போங்கடா...போய் புள்ள குட்டிகள படிக்க வைங்கடா...நீங்க பெரிய எழுத்தாள முட்டகோசு. உங்க சத்துக்கு நாலு வெத்து கோழிங்கள குரூப் சேர்த்துகிட்டு  பெரிய சாகித்ய அகாடமி ரேஞ்சுக்கு விவாதம் பண்ண வேண்டியது...நீங்கல்லாம் கொசு கடிச்சுதாண்டா சாவ போறீங்க...

பதிவுலகே கதின்னு கெடக்கற நண்பர்களுக்கு ஒரு வார்த்தை..

அண்ணேன் போய் தூங்குன்னேன்...!!!  

கடைசியா ஒரு வார்த்தை...
ஹி..ஹி..எப்டி சொல்றதுன்னு தெரில...ஹி..ஹி..படிச்சிட்டு உங்க கருத்த இங்க பின்னூட்டத்துல போட்டுட்டு போங்கன்னேன்..ஹி..ஹி...கடைசியா இன்னொரு விஷயம்...ஹி..ஹி..அப்படியே....ஹி..ஹி.. மறந்துடாம அப்டியே வோட்ட போட்டுட்டு போயடுங்கன்னேன்...ஹி..ஹி...

(யோவ் பட்டாபட்டி..கயறு வாங்கி அனுப்புயா...நான் மானஸ்தன்...)

வெளியூர்க்காரன்..  Posted by Veliyoorkaran - - 21 comments and to comment


காலேஜ்ல டூர் போனப்போ பஸ்ல விடியகாலைல அஞ்சு மணிக்கு என் கூட படிச்ச டொக்கு பிகர் ஒன்னு ,யாரும் பார்கலைன்னு நெனைச்சுகிட்டு கோணவாய ஒரு மாதிரியா கோணிகிட்டு கொடூரமா ஒரு கொட்டாவி விட்டுச்சு....ங்கொய்யா பயபுள்ள...அன்னிக்கு முடிவு பண்ணேன்...கல்யாணம் பண்ணா தமிழ்நாட்டு புள்ளைய பண்ணகூடாது...கொட்டாவியே  விட தெரியாத ஒரு வெள்ளகார குட்டியா பார்த்து கட்டிக்கிட்டு இங்கிலிஷ்காரன் ஆய்டனும்னு...

அப்டி ஒரு வீர லட்சியத்தோட வாழ்ந்துகிட்டு இருந்தப்போதான் மின்னலே படம் பார்த்தேன்...கல்யாணம்னு ஒன்னு பண்ணுனா ரீமா சென்ன பண்ணனும்...இல்லேன்னா காலம் புல்லா வேற ஒரு நச்சு பிகர கட்டிக்கிட்டு சொகுசா வாழணும்னு மனசுக்குள்ள வைராக்கியமே வந்துச்சு..(எது நடந்தாலும் நமக்கு லாஸ் இருக்க கூடாது ப்ரதர்..) 

ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்...இந்த பாட்டுல ரீமா குடுக்கற எக்ஸ்ப்ரேசன்காகவே இந்த படத்த பட்டுகோட்டை அருண் தியேட்டர்ல மட்டும் அஞ்சு தடவ பார்த்தேன்...ரீமா கவிதைங்க...அதும் ஹைக்கூ கவிதை...கவிதைய பேப்பர்ல எழுதி படிக்கலாம்...இல்ல தோட்டத்துல ரோஜா செடி பக்கத்துல வெச்சு போட்டோ எடுக்கலாம்..ஆனா அதென்ன சைக்கோதனம்...சரித்திர படம்ங்கற பேர்ல யூரின் போக சொல்லி வீடியோ எடுக்கறது...செல்வா சார்...நீங்க ஆண்ட்ரியாவையே உஷார் பண்ணிட்டீங்க..உங்களுக்கு இருக்கு ஒத்துகறேன்...ஆனா உங்களுக்கு மட்டும்தான் இருக்குன்னு நெனைச்சுகிட்டு படம் எடுக்காதீங்க...(யோவ் பட்டாபட்டி...சிரிக்காதையா...நான் மூளைய சொன்னேன்...)

நான் சொல்ல வந்த மேட்டருக்கு வரேன்...

இன்னிக்கு தஞ்சோங் பகர் எம்.ஆர்.ட்டில ஒரு சைனா பிகர பார்த்தப்போ என் மனசுக்குள்ள வந்த சமுதாய அக்கறையுள்ள கேள்வி இது...எந்த ஊரு பிகருங்க ராவான அழகுன்னு...ஒரு பொண்ணு அழகா இருந்து பார்த்துருபீங்க..ஆனா அம்பது கிலோ அழகு ஒரு பொண்ணா இருந்து பார்த்துருகீங்க்லா...நான் இன்னிக்கு பார்த்த புள்ள அவ்ளோ அழகுங்க....அந்த சீனாகார குட்டியோட குட்டி லிப்ஸ பார்தொன்ன, என்னோட ஒத்தை தலைவலி சரியாய்டுசுன்னா பார்த்துக்கங்க...அயோயோ என்னோட கி போர்ட்லையே வார்த்தை இல்ல சாமி...அந்த புள்ள எவ்ளோ அழகுன்னு சொல்ல...எனக்கு அந்த பிகர பார்தோன்னதான் கடவுள் நம்பிக்கையே வந்துச்சின்னா பார்த்துகங்களேன்...(கம்பியூட்டரால இவ்ளோ அழகா டிசைன் பண்ண முடியாது வாத்யாரே...)அந்த புள்ளைய டிசைன் பண்ண ஹென் லீ சியுவ் (சீனாகார பிரம்மா..) எடுத்துக்கிட்ட டைம்ல ஒரு ரெண்டு நிமிஷம் எனக்கு ஒதிக்கிருந்தா என்னோட அம்பதாவது படம் விண்ணை தாண்டி வருவாயாவுக்கு போட்டியா தமிழ்நாட்ல ரிலீஸ் ஆய்ருக்கும்...  ஆனது ஆச்சு.., சரிதான் கழுதய காதல அந்த புள்ளைக்கிட்ட சொல்லிருவோம்னு முடிவு பண்ணேன்..ஆனா இந்த நாதாரி பயலுக சிங்கப்பூர் போலீசு என்ன கொத்தா அமுக்கி விசா அட்டைல ஓட்டைய போட்டு ரெண்ட நாளாக்கி ஊருக்கு அனுப்பிடுவாணுகலேங்கற ஒரே காரணத்துனால மூடிகிட்டு பார்த்துக்கிட்டு மட்டும் இருந்தேன்..

பார்த்துகிட்டே இருந்தப்போ திடீர்னு உதட்ட சுளிச்சு என்னவோ பண்ணுச்சு...பதறித்தான் பொய்ட்டேன்..என் தங்கத்துக்கு என்னவோ ஏதோன்னு...அப்பறம்தான் தெரிஞ்சுது...நாமெல்லாம் கைய தூக்கி கம்மகொட்ட வழியா நாராசமா வெளியேத்துற அலுப்ப,அந்த புள்ள உதட்ட சுளிச்சு வெளியாக்கிருக்குன்னு...நான் மட்டும் அந்த அலுப்பா இருந்துருந்தன்னா கண்டிப்பா அந்த பிகர விட்டுட்டு போயிருந்திருக்க மாட்டேன்... 

ஆனா பாருங்க அப்பன்னு பார்த்து ஒரு ஆஸ்ட்ரேலியன் பீசு என் பக்கத்துல வந்து வாண்டடா உக்காந்துச்சு...அது மனசுலயும் என் மேல இல்தக்கசையா இருக்கும் போலருக்குன்னு பெரிய மனசு பண்ணி விட்டுட்டேன்...சும்மா சொல்ல கூடாதுங்க.பார்த்துக்கிட்டே இருக்கலாம்...சூப்பரா இருந்துச்சு...கொஞ்ச நேரம் கழிச்சு மூஞ்சிய பார்த்தேன்...உத்து பார்த்தா என் மூஞ்சி தெரியுது அந்த புள்ள முகத்துல...அம்பூட்டு கலரு...என்னையெல்லாம் கேட்டா அந்த சீனா சிறுக்கிக்கு இந்த புள்ள கால் அமுக்க கூட தகுதி இல்லைனுதான் சொல்லுவேன்...ஆனா எவ்ளோ நேரம் சார் அந்த வெல்ல உளுவைய பார்க்கறது...அலுத்து போய் நிமிர்ந்து பார்த்தேன்...எதிர் சீட்ல ஒரு நார்த் இந்தியன் சக்காளத்தி பைய   மடில வெச்சுகிட்டு உக்கார்ந்திருந்தா...எனகென்னவோ அவ்ளவா புடிக்கல..என்னையெல்லாம் அந்த புள்ளைக்கு கல்யாணம் பண்ணி வெச்சா அம்பது வருசத்துக்கு மேல ஒரு நாள் கூட அவகூட வாழமாட்டேன்....

அப்போ திடீர்னு மனசு கெடந்து படபடன்னு அடிச்சுகிச்சு...ஐயோ என்னதிதுன்னு பதட்டம திரும்பி வாசல பார்த்தேன்...நம்ம ஊரு டொக்கு பிகரு ஒன்னு, டொய்யான் மாதிரி ஏறுனுச்சு...பாருங்களேன் இந்த மானம்கெட்ட பரதேசி பய ஹார்மோன் என்னோட சபதத்த மறந்துட்டு உசுர குடுத்து ஜெட் வேகத்துல வேலை செய்ய ஆரம்பிச்சுட்டான்... ஸ்பென்சர்ல உலக அழகிய எல்லாம் சப்ப பிகர்டா மச்சான்னு ஆணவமா கமெண்ட் அடிச்சிட்டு கிராஸ் பண்ண என் கண்ணு அந்த சப்ப பிகர வெச்ச கண்ணு வாங்காம பார்த்துகிட்டு இருந்துச்சு...( சிங்கப்பூர் வந்து ரொம்ப காஞ்சி போய் கெடக்கறேன் போல...)

எனகென்னவோ அழகா தெரியறது நம்ம ஊர்நாட்டு பீசுங்கதான்...சுமார்தான்...ஆனா ராவா இருப்பாளுக...

(வெளியூர்காரனோட இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கரவங்க மேல் கோர்ட்ல அப்பீல் பண்ணலாம்.எதனால இந்த தீர்ப்புன்னு விளக்கமா விளக்கவுரை தரப்படும்...அத தயவு செய்து பெண்கள் படிக்கச் வேணாம் எனவும் தாழ்மையுடன் கேட்டுகொள்ளபடுகிறார்கள்.....)

ஆதலினால் காதல் செய்வீர்...ஊர்நாட்டு பிகருங்கள....

வெளியூர்க்காரன்

There was an error in this gadget