- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 21 comments and to comment


காலேஜ்ல டூர் போனப்போ பஸ்ல விடியகாலைல அஞ்சு மணிக்கு என் கூட படிச்ச டொக்கு பிகர் ஒன்னு ,யாரும் பார்கலைன்னு நெனைச்சுகிட்டு கோணவாய ஒரு மாதிரியா கோணிகிட்டு கொடூரமா ஒரு கொட்டாவி விட்டுச்சு....ங்கொய்யா பயபுள்ள...அன்னிக்கு முடிவு பண்ணேன்...கல்யாணம் பண்ணா தமிழ்நாட்டு புள்ளைய பண்ணகூடாது...கொட்டாவியே  விட தெரியாத ஒரு வெள்ளகார குட்டியா பார்த்து கட்டிக்கிட்டு இங்கிலிஷ்காரன் ஆய்டனும்னு...

அப்டி ஒரு வீர லட்சியத்தோட வாழ்ந்துகிட்டு இருந்தப்போதான் மின்னலே படம் பார்த்தேன்...கல்யாணம்னு ஒன்னு பண்ணுனா ரீமா சென்ன பண்ணனும்...இல்லேன்னா காலம் புல்லா வேற ஒரு நச்சு பிகர கட்டிக்கிட்டு சொகுசா வாழணும்னு மனசுக்குள்ள வைராக்கியமே வந்துச்சு..(எது நடந்தாலும் நமக்கு லாஸ் இருக்க கூடாது ப்ரதர்..) 

ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்...இந்த பாட்டுல ரீமா குடுக்கற எக்ஸ்ப்ரேசன்காகவே இந்த படத்த பட்டுகோட்டை அருண் தியேட்டர்ல மட்டும் அஞ்சு தடவ பார்த்தேன்...ரீமா கவிதைங்க...அதும் ஹைக்கூ கவிதை...கவிதைய பேப்பர்ல எழுதி படிக்கலாம்...இல்ல தோட்டத்துல ரோஜா செடி பக்கத்துல வெச்சு போட்டோ எடுக்கலாம்..ஆனா அதென்ன சைக்கோதனம்...சரித்திர படம்ங்கற பேர்ல யூரின் போக சொல்லி வீடியோ எடுக்கறது...செல்வா சார்...நீங்க ஆண்ட்ரியாவையே உஷார் பண்ணிட்டீங்க..உங்களுக்கு இருக்கு ஒத்துகறேன்...ஆனா உங்களுக்கு மட்டும்தான் இருக்குன்னு நெனைச்சுகிட்டு படம் எடுக்காதீங்க...(யோவ் பட்டாபட்டி...சிரிக்காதையா...நான் மூளைய சொன்னேன்...)

நான் சொல்ல வந்த மேட்டருக்கு வரேன்...

இன்னிக்கு தஞ்சோங் பகர் எம்.ஆர்.ட்டில ஒரு சைனா பிகர பார்த்தப்போ என் மனசுக்குள்ள வந்த சமுதாய அக்கறையுள்ள கேள்வி இது...எந்த ஊரு பிகருங்க ராவான அழகுன்னு...ஒரு பொண்ணு அழகா இருந்து பார்த்துருபீங்க..ஆனா அம்பது கிலோ அழகு ஒரு பொண்ணா இருந்து பார்த்துருகீங்க்லா...நான் இன்னிக்கு பார்த்த புள்ள அவ்ளோ அழகுங்க....அந்த சீனாகார குட்டியோட குட்டி லிப்ஸ பார்தொன்ன, என்னோட ஒத்தை தலைவலி சரியாய்டுசுன்னா பார்த்துக்கங்க...அயோயோ என்னோட கி போர்ட்லையே வார்த்தை இல்ல சாமி...அந்த புள்ள எவ்ளோ அழகுன்னு சொல்ல...எனக்கு அந்த பிகர பார்தோன்னதான் கடவுள் நம்பிக்கையே வந்துச்சின்னா பார்த்துகங்களேன்...(கம்பியூட்டரால இவ்ளோ அழகா டிசைன் பண்ண முடியாது வாத்யாரே...)அந்த புள்ளைய டிசைன் பண்ண ஹென் லீ சியுவ் (சீனாகார பிரம்மா..) எடுத்துக்கிட்ட டைம்ல ஒரு ரெண்டு நிமிஷம் எனக்கு ஒதிக்கிருந்தா என்னோட அம்பதாவது படம் விண்ணை தாண்டி வருவாயாவுக்கு போட்டியா தமிழ்நாட்ல ரிலீஸ் ஆய்ருக்கும்...  ஆனது ஆச்சு.., சரிதான் கழுதய காதல அந்த புள்ளைக்கிட்ட சொல்லிருவோம்னு முடிவு பண்ணேன்..ஆனா இந்த நாதாரி பயலுக சிங்கப்பூர் போலீசு என்ன கொத்தா அமுக்கி விசா அட்டைல ஓட்டைய போட்டு ரெண்ட நாளாக்கி ஊருக்கு அனுப்பிடுவாணுகலேங்கற ஒரே காரணத்துனால மூடிகிட்டு பார்த்துக்கிட்டு மட்டும் இருந்தேன்..

பார்த்துகிட்டே இருந்தப்போ திடீர்னு உதட்ட சுளிச்சு என்னவோ பண்ணுச்சு...பதறித்தான் பொய்ட்டேன்..என் தங்கத்துக்கு என்னவோ ஏதோன்னு...அப்பறம்தான் தெரிஞ்சுது...நாமெல்லாம் கைய தூக்கி கம்மகொட்ட வழியா நாராசமா வெளியேத்துற அலுப்ப,அந்த புள்ள உதட்ட சுளிச்சு வெளியாக்கிருக்குன்னு...நான் மட்டும் அந்த அலுப்பா இருந்துருந்தன்னா கண்டிப்பா அந்த பிகர விட்டுட்டு போயிருந்திருக்க மாட்டேன்... 

ஆனா பாருங்க அப்பன்னு பார்த்து ஒரு ஆஸ்ட்ரேலியன் பீசு என் பக்கத்துல வந்து வாண்டடா உக்காந்துச்சு...அது மனசுலயும் என் மேல இல்தக்கசையா இருக்கும் போலருக்குன்னு பெரிய மனசு பண்ணி விட்டுட்டேன்...சும்மா சொல்ல கூடாதுங்க.பார்த்துக்கிட்டே இருக்கலாம்...சூப்பரா இருந்துச்சு...கொஞ்ச நேரம் கழிச்சு மூஞ்சிய பார்த்தேன்...உத்து பார்த்தா என் மூஞ்சி தெரியுது அந்த புள்ள முகத்துல...அம்பூட்டு கலரு...என்னையெல்லாம் கேட்டா அந்த சீனா சிறுக்கிக்கு இந்த புள்ள கால் அமுக்க கூட தகுதி இல்லைனுதான் சொல்லுவேன்...ஆனா எவ்ளோ நேரம் சார் அந்த வெல்ல உளுவைய பார்க்கறது...அலுத்து போய் நிமிர்ந்து பார்த்தேன்...எதிர் சீட்ல ஒரு நார்த் இந்தியன் சக்காளத்தி பைய   மடில வெச்சுகிட்டு உக்கார்ந்திருந்தா...எனகென்னவோ அவ்ளவா புடிக்கல..என்னையெல்லாம் அந்த புள்ளைக்கு கல்யாணம் பண்ணி வெச்சா அம்பது வருசத்துக்கு மேல ஒரு நாள் கூட அவகூட வாழமாட்டேன்....

அப்போ திடீர்னு மனசு கெடந்து படபடன்னு அடிச்சுகிச்சு...ஐயோ என்னதிதுன்னு பதட்டம திரும்பி வாசல பார்த்தேன்...நம்ம ஊரு டொக்கு பிகரு ஒன்னு, டொய்யான் மாதிரி ஏறுனுச்சு...பாருங்களேன் இந்த மானம்கெட்ட பரதேசி பய ஹார்மோன் என்னோட சபதத்த மறந்துட்டு உசுர குடுத்து ஜெட் வேகத்துல வேலை செய்ய ஆரம்பிச்சுட்டான்... ஸ்பென்சர்ல உலக அழகிய எல்லாம் சப்ப பிகர்டா மச்சான்னு ஆணவமா கமெண்ட் அடிச்சிட்டு கிராஸ் பண்ண என் கண்ணு அந்த சப்ப பிகர வெச்ச கண்ணு வாங்காம பார்த்துகிட்டு இருந்துச்சு...( சிங்கப்பூர் வந்து ரொம்ப காஞ்சி போய் கெடக்கறேன் போல...)

எனகென்னவோ அழகா தெரியறது நம்ம ஊர்நாட்டு பீசுங்கதான்...சுமார்தான்...ஆனா ராவா இருப்பாளுக...

(வெளியூர்காரனோட இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கரவங்க மேல் கோர்ட்ல அப்பீல் பண்ணலாம்.எதனால இந்த தீர்ப்புன்னு விளக்கமா விளக்கவுரை தரப்படும்...அத தயவு செய்து பெண்கள் படிக்கச் வேணாம் எனவும் தாழ்மையுடன் கேட்டுகொள்ளபடுகிறார்கள்.....)

ஆதலினால் காதல் செய்வீர்...ஊர்நாட்டு பிகருங்கள....

வெளியூர்க்காரன்

21 Responses so far.

 1. ஆகா.. இஞ்சின் Start ஆயிடுச்சு..
  ரைட்டு..

  சாப்பிட்டு வந்து வெச்சுக்கறேன் அப்பு.....

 2. இவ்வளோ நாள் கழிச்சும் எழுதுனா ஃபிகர் பத்தி தான் எழுதணும்ற உன் கொள்கையை பார்த்து பிரமிச்சுப் போயிட்டேன்டா!
  இதற்காகத்தானே காத்திருந்தாய் பட்டாபட்டி! செல்! என் நண்பனுக்கு சாகித்ய அகாடமி குடுக்கச் சொல்!
  ங்கொயால...எவனாச்சும் இவனுக்குக் கல்யாணம் பண்ணி வையுங்கடா...தொல்லை தாளலை!

 3. வெளியூர்க்காரனுக்கு.........
  முருகா.. வெளியூர்காரனுக்கு நல்ல புத்தி கொடுத்ததுக்கு ,
  தாத்தாக்கு, தை-பூசம் அன்று "அலகு குத்தி , காவடி எடுக்கசொல்றேன்" சாமி..
  .
  .
  என்னா முருகா.. எதுக்குனு என்னையே கேக்குற?
  "சாப்பிட்டுவிட்டு கவுச்சியா பேசாறானேனு கண்னக் குத்திப் போடாதீங்க முருகா.. ."
  தண்ணியூத்தி கழுவ வேண்டிய வேலைக்கு , காகிதத்தை எடுக்க உடாம பண்ணுனயே சாமி.. அதுக்குத்தான்

  ரெட்டைவால் ' ஸ் சார்..........
  " சாகித்ய அகாடமி " எதுக்கு சார்.. அன்னைக்கு நீங்களும் , நானும் ஒரு சிலைக்கு ஆர்டர் கொடுத்தமே..

  ஆங்க்.. அதுதான்..

  நம்ம வெளியூர்காரனோட சிலைக்கு வலது பக்கம் "சீனக்காறி" ....இடது பக்கம் "ஆஸ்திரேலியாகாரி" அப்புறம்
  தலை மேல "நம்ம ஊரு சப்ப பிகர் " சிலைய வைக்க சொல்லிடலாம்..
  ( என்னடா.. சீனக்காரிக்கு மட்டும் ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்0னு நினைக்காதீங்க.. அது கரெக்ட் தான்)
  என்ன சொல்றீங்க...

 4. முருகா...முடியல முருகா...தெரிஞ்சத எழுதுனேன்...கலாயிக்கபட்டேன்..எழுத தெரியலன்னு எழுதாம இருந்தேன்...அதுக்கும் தாக்கப்பட்டேன்...இப்போ வந்தத எழுதுனேன்...அதுக்கும் போடறாங்கே..இவங்களுக்கு என்னதான் வேணும்னு தெரியலையே முருகா...

 5. சும்மா டமாசுக்கு..

  நிறைய எழுதுங்க பாஸ்..

 6. சார் .. எங்கிருந்து இந்த போட்டாவைப் படிச்சீங்க..
  ( நல்ல சீனக்காரி.. வெள்ளக்காரி போட்டோ கிடைக்கிலையா?.)

  எங்க வீட்டு நாயக் காணோமுனு போலிஸ்-ல சொல்லியிருந்தேன்..
  ஆளப் புடிச்சுட்டாங்க போலிருக்கு...

  ( போட்டோவுக்கும் நாய் - பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
  என்று ப.மு.க தலைவர் BBC-க்கு பேட்டி அளித்துள்ளார்..)

 7. ஒரு படமே எடுத்துடலாம் போல... கலக்கல்

 8. hayyram says:

  who's in the photo? ayo paavam mathiri irukkaar.

  regards
  www.hayyram.blogspot.com

 9. கலக்குங்க.. நாலடில அலகு ஒன்னு நாக்குல குத்திட்டு முருகன மூனு சுத்து சுத்துனா டக்குனு எதாவது ’டக்’கு ஒன்னு மாட்டுனாலும் மாட்டும்.. சுத்தி வந்து பாருங்க.. (அப்டி இல்லன்னாலும் அடுத்த பதிவுக்கு ஒதவும்)

 10. அட அட அடடா ஃபிகர்கள ரசிச்சு உருகியிருக்கியளே...

  கண்ணாலமாயும் பிரமச்சாரியா வாழ்றீகளோ?

  ஜூப்ப்ப்பரா எழுதியிருக்கீக சிரிச்சேன்... தொடர்ந்து எழுதுக...

 11. பட்டாபட்டி...இவனுக்கு சிலையெல்லாம் பத்தாது...என் அடுத்த பதிவை பாருங்க..இவன் வண்டவாளத்தை ஏத்துறேன்.

 12. long lecevku apuramum kalauinga basu super

 13. director says:

  Romba nallaarukku boss, continue pannunga.
  saravanan
  singapore.

 14. hayyram said...@///who's in the photo? ayo paavam mathiri irukkaar.//
  7 G ரெயின்போ காலனில ஒரு இயக்குனர் மொதோ நாள் கூட படுத்த பொண்ண அடுத்த நாள் சாம்பலா பார்த்தா எவ்ளோ வலிக்கும்னு காமிச்சார்ல..அந்த இயக்குனர் இவருதான் சாமி..பேரு செல்வராகவன்..இப்போ ஆயிரத்தில் ஒருவன்னு ஒரு சினிமா கூட எடுத்துருக்கறதா பேசிக்கறாங்க...ஆமாம்..இவ்ளோ வெள்ளந்தியா இருக்கீகளே..அண்ணாச்சி எந்த ஊரு..சினிமாபட்டியா...

 15. யூர்கன் க்ருகியர் said.:) ..@///...
  என்கிட்டயும் ஸ்மைலி இருக்கு...நானும் போடுவனே.. :) :) :)

 16. அண்ணாமலையான் said...@///
  பிகர உஷார் பண்ண கூடவாங்க சாமி வேணும்...என்ன அண்ணாமலையாரே...பூரா சப்ப பீசுங்க .பேசுனாலே கவுந்தடிச்சு விழுந்துடுவாலுக..வெளியூர்காரன் வெயிட் பண்ணிட்ருக்கறது அவனோட கனவு தேவதைக்காக..இப்போ அவளைத்தான் எங்கம்மா ஊர்ல தேடிட்ருக்காங்க...சோ, நாம இப்போ முருகன விட்டறலாம்...என்ன சொல்றீங்க...?

 17. பிரியமுடன்...வசந்த் said...@///
  எலேய் படுவா...எனகெப்படா கல்யாணம் ஆனுச்சு..ஏன்யா புரளிய கெளப்பி விடற....மாப்ள இப்போதான் தீவிரமா பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க....கிட்டு புல்லு விளையாண்டுட்டு போய்டாதீகடா என் வாழ்க்கைல...

 18. ரெட்டைவால் ' ஸ் said...@///
  மாப்ள எங்களயெல்லாம் நடு ரோட்ல நிக்க வெச்சு செருப்பால அடிச்சாலே அடிய வாங்கிட்டு இன்னிக்கு வெயில் ரொம்ப ஜாஸ்தி மச்சான்னு ஒரு டீய வாங்கி குடிச்சிட்டு போய்கிட்டே இருப்போம்..நீ அடிக்க போறது ஒரு எருமைமாட்ட...மனசுல வெச்சுக்க பாதுகாப்பா இரு..

 19. livingston baba said...@///
  ஐயோ போங்க...எனக்கு கூச்சம் கூச்சமா வருது..குஷி குஷியாவும் வருது... :)
  director said...@//
  சரிங்க சார்...ரொம்ப நன்றி சார்... :)

 20. //எனகென்னவோ அவ்ளவா புடிக்கல..என்னையெல்லாம் அந்த புள்ளைக்கு கல்யாணம் பண்ணி வெச்சா அம்பது வருசத்துக்கு மேல ஒரு நாள் கூட அவகூட வாழமாட்டேன்....//

  ஹா ஹா, சாவுஅடி அடிக்கிறீங்க.

  அண்ணாத்த வார்த்தையே வரல்ல...