- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 85 comments and to comment


இனிமே எந்த தமிழ் படத்துலயும் பஞ்ச் டயலாக் இருக்காது...கைய முறுக்குனா நரம்பு ஏறாது, ஒரே பாட்ல ஹீரோ பணக்காரன் ஆக மாட்டாரு,மொத்ததுல இனி வரும் தமிழ் படங்கள்ல அடுத்த தளத்த எதிர்பார்க்கலாம்....ஏன்னா இதுக்கு மேல உதைக்க முடியாதுங்க தமிழ் படங்கள்ல...படம் நாசமா இருக்கு...கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்...ஆனா இந்த படத்துக்கு போகும்போது நெறைய சினிமா பார்க்கற நண்பர்களோட  போங்க..அப்பத்தான் யார கலாய்க்கறாங்கன்னு புரியும்...எனக்கு பின் சீட்ல ஒரு பொண்ணு உக்காந்து அவங்கம்மாக்கு சொல்லிட்டே இருந்தா..படத்த விட அது நல்லா இருந்துச்சு.. யிஷுன் தியேட்டர்ல...அந்த புள்ளைக்கு ஒரு தேங்க்ஸ்.   

தமிழ் படத்த போட தமிழ் படம் வந்தா மாதிரி...தமிழ் ப்ளாக போட இதோ வந்துடுச்சு தமிழ் ப்ளாகு...இத படிச்சிட்டு கோவம் வர்றவங்க என்ன உங்க தம்பியா நெனைச்சு மன்னிச்சிட்டு தயவு செஞ்சு போய் நல்ல கயிரா வாங்கி தூக்குல தொங்கிடுங்க...ஏன்னா இதுல உங்கள பத்திதான் எழுதிருக்கேன்...கோவம் வராத மாதிரி நடிச்சிட்டு மாப்ள சூப்பர்டா பின்னிட்டேன்னு பின்னூட்டம் போடறவங்க வீட்டுக்கு போய் யாருக்கும் தெரியாம நடுமண்டைல குட்டிக்கங்க ..இப்ப சம்பவத்துக்கு போவோம்..

பதிவுலகத்த விட்டு விலக போறேன்னு அறிவிக்கறது...
இந்த கூட்டத்துல சில வெங்காயங்க ஆ ஊன்னா உடனே அவன் என்ன திட்டிட்டான்.. இவன் என்ன பத்தி தப்ப எழுதிட்டான்....அதனால நான் பதிவுலகத்த விட்டு விலக போறேன்னு விறைப்பா நிக்கறதும்,உடனே அந்த கூமுட்டைய போய் நாலு நாசமா போனவங்கே சமாதானபடுத்தி கூட்டிட்டு வர்றதும் ஒரு வாடிக்கையாவே நடந்துகிட்டுருக்கு...ஏன்யா இப்டி பண்றியே...மனுசன்தான நீங்கல்லாம்...அண்ணாச்சியே விருப்பபட்டு போறேன் இனிமே எழுதமாட்டேன்னு சொல்லும்போது நீங்க ஏன்யா குறுக்க பூந்து கொழப்பறீங்க...போய் தொலையுது எழவெடுத்த சனியன்னு தலமுழுகிட்டு  அடுத்த பதிவ போய் படிக்க வேண்டியதுதான..அதெல்லாம் பதிவெழுதி என்னத்த சாதிச்சு கிழிக்க போகுது.... எஸ்.ராமகிருஷ்ணன் வீட்டு கத்திரிக்கா ரேஞ்சுக்கு சலம்ப வேண்டியது..சரக்கு இருக்கறவன் சலம்ப மாட்டான்யா...இனிமே எவனாச்சும் போறேன்னு அறிவிச்சா உடனே போடா நாயேன்னு துரத்தி விட்ருங்க...

பின்னூட்ட கொசுங்க...
போறேன்னு சொல்ற சைக்கோவ கூட மன்னிச்சு விட்டர்லாம்..லூசு தாழ்வு மனப்பான்மைல உளருதுன்னு..ஆனா இந்த மொக்கையா பின்னூட்டம் போடறாங்கே பாருங்க...அவங்கெல எல்லாம் மவுண்ட் ரோட்ல ஜட்டியோட ஓட விட்டு முட்டிக்கு கீழ குறி வெச்சு தப்பு தப்பா கண்ட எடத்துல சுடனும்....படிச்சு பாரு..புடிச்சிருந்த புடிச்சிருக்குன்னு எழுது...புடிக்கலேன்னா இழுத்து போட்டு உதை...அதென்ன கழுதை பார்மாலிட்டி பண்றது...அவன் போன்ற மொக்கைக்கு இவன் போய் அருமை அற்புதம் அழகு மயிறு மட்டைன்னு பின்னூட்டம் போடவேண்டியது...இவனுக்கு அவன் வந்து பார்மாலிட்டி பண்றது..பதிவுலகத்துல நெஜமாவே நல்லா எழுதற எழுத்தாளர்கள் வெளில தெரியாம போறதுக்கு காரணம்...இந்த நான்சென்சுங்க கெளப்பற நாயிஸ்தான்..எலேய்..இந்த பார்மாலிட்டி பண்ற நோன்னைங்களுக்கு ஒன்னு சொல்லிக்கறேன்..பூமா தேவி கூடிய சீக்கிரம் சிரிக்க போறா...நீங்கல்லாம் உள்ள போக போறீங்க..அப்ப உங்களையெல்லாம் பார்த்து வாயால சிரிக்கமாட்டேன்டி  மாப்ளைங்களா... 

சினிமா விமர்சனம் பண்றது....
சினிமா விமர்சனம்ங்கர பேர்ல இவங்கே பண்ற அக்கப்போரு..அய்யோயோ... இதுல ஒரு அண்ணாச்சி ஒரு விளம்பர படம் எடுத்து கூட நான் பார்த்ததில்ல..ஆனா பெரிய நோன்னையாட்டமா படத்த அலசுவாக.இது நொட்டை..அது நொட்டைன்னு..ஏன்யா இந்த விளம்பரம்.இதுல மானம் கெட்டுபோய் மொதோ ஷோவ வேற கடன் வாங்கி டிக்கெட் எடுத்து பார்க்கவேண்டியது...கேட்டா கலா ரசிகர்களாம்..மொதொல்ல போய் குளிங்கடா...அப்பறம் வந்து விமர்சனம் எழுதலாம்....

வோட்டு போட சொல்லி கெஞ்சறது....
வோட்டு போட சொல்லி கெஞ்சறது...பதிவோட கடைசீல மறக்காம வோட்ட போட்டுட்டு போங்கன்னு ஒரு கட் அவுட்டே வெச்சுருபாங்கே...நான் என்ன சொல்றேன்...இந்த பொழைப்பு பொழைக்கரதுக்கு மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்ல போய் துண்ட வாங்கி விரிச்சு பிச்சை எடுக்கலாம்..ஒரு பதிவு எழுதறியா...வோட்டு பட்டன வை...படிச்சிட்டு புடிகறவன் வோட்டு போட போறான்..புடிகாதவன் உன்ன கெட்ட வார்த்தைல மனசுக்குள்ள திட்டிட்டு வெளில போக போறான்..ஏன்யா மானம் கேட்டு போய் எல்லார்கிட்டயும் கெஞ்சற...

அவார்டு குடுத்துக்கறது....
மல்லாக்க படுத்து விட்டத்த பார்க்கும்போது மேல என்னென பூச்சி தெரியுதோ அந்த பூச்சி பேர்ல எல்லாம் அவார்டு குடுத்துக்க வேண்டியது...கரப்பான் பூச்சி அவார்டு,மூட்ட பூச்சி அவார்டு,கம்பளி பூச்சி அவார்டுன்னு...பதிலுக்கு அவுக இவுகளுக்கு தேங்க்ஸ் தெரிவிச்சு ஒரு எட்டுகால் பூச்சி அவார்டு குடுப்பாக..மாத்தி மாத்தி பாராடிக்குவாங்கே...நன்றி சொல்லிக்குவாங்கே..இந்த கருமத்த நம்ப படிக்கணும்....இவனுக தூங்கும்போது மூக்குக்குள்ள பூரான புடிச்சு விடனும்..அப்பத்தான் திருந்துவாங்கே....

கவிதை எழுதறது..
உனக்கென்ன வருதோ அத நீ ஒழுங்கா செய்யணும்...வினுச்சக்கரவர்த்தி பஞ்ச் டையலாக் அடிச்சா நீ ஒத்துக்குவியா...காந்திமதி கிளாமர் காமிச்சா...ஒதுக்கமாட்டேள்ள..அந்த மாதிரிதான எங்களுக்கும்..என் உனக்கு வராத ஏரியால உள்ள பூந்து வாந்தி எடுத்து வெக்கற...கவிதை எழுத வரலேன்னா விட்டு தொலையேண்டா எழவெடுத்தவனே...இதெல்லாம் எழுதுனாதான் உன்ன மிக பெரிய பதிவர்னு ஒத்துக்குவோம்னு  உன்ட்ட   யாராச்சும் சொன்னங்கேலா...இல்லைல..அப்பறம் ஏன்டா சுத்தி இருகவன சாவடிக்கற நாதாரி...

பொண்ணுங்களோட பதிவுக்கு போய் ஜொள்ளு விடறது...
ஒரு நாதாரி சிறுக்கி பெண்ணுரிமைன்கர பேர்ல எதெதையோ வாமிட் பண்ணி வெச்சுருக்கா.. ஆணுரிமைய பறிக்கரதுதான் பெண்ணுரிமைன்கர மாதிரி ஏதேதோ செக்ஸ பத்தியெல்லாம் எழுதி  பினாத்தி வெச்சுருக்கா..அதுல நம்ம சொட்ட மண்டை பதிவர் போய் பின்னூட்டம் போட்ருகாறு..சகோதரி உங்க உணர்வுகள் எனக்கு புரியுது...அதே நேரத்துல எங்க உணர்வுகளுக்கும் நீங்க மரியாதை குடுக்கணும்..தங்கள் எழுத்துக்கள் அருமை...தொடர்ந்து சேவை ஆற்றுங்கன்னு...அவ எழுத்துல நீ என்னத்த அருமைய கண்டுட்ட..என் உணர்வுக்கு மரியாதை குடுன்னு நீ ஏன் அவகிட்ட போய் கெஞ்சற..சும்மா எதாச்சும் எழுதனுமேன்னு உளறி வெக்கறது...அந்த சிறுக்கி இன்னும் ஓவரா எழுதுவா...எனக்கு தெரிஞ்சு சில பதிவர்கள் நெஜமாவே ரொம்ப அருமையா எழுதறாங்க..தரமா எழுதறாங்க.அவங்கள போய் பாராட்டு..அவங்க வளரட்டும்..அவங்க வளரனும்...ஏன் மொக்க பதிவுக்கெல்லாம் பின்னூட்டம் போட்டு உங்க வேல்யுவ குறைச்சுகறீங்க..

கேங்கு வெச்சுக்கறது...
டேய் க்ரூப் சேர்த்துகிட்டு அலையற நோன்னைகளா..ஏடிஎம்கேவே அட்ரஸ் இல்லாமா போச்சுடா..போங்கடா...போய் புள்ள குட்டிகள படிக்க வைங்கடா...நீங்க பெரிய எழுத்தாள முட்டகோசு. உங்க சத்துக்கு நாலு வெத்து கோழிங்கள குரூப் சேர்த்துகிட்டு  பெரிய சாகித்ய அகாடமி ரேஞ்சுக்கு விவாதம் பண்ண வேண்டியது...நீங்கல்லாம் கொசு கடிச்சுதாண்டா சாவ போறீங்க...

பதிவுலகே கதின்னு கெடக்கற நண்பர்களுக்கு ஒரு வார்த்தை..

அண்ணேன் போய் தூங்குன்னேன்...!!!  

கடைசியா ஒரு வார்த்தை...
ஹி..ஹி..எப்டி சொல்றதுன்னு தெரில...ஹி..ஹி..படிச்சிட்டு உங்க கருத்த இங்க பின்னூட்டத்துல போட்டுட்டு போங்கன்னேன்..ஹி..ஹி...கடைசியா இன்னொரு விஷயம்...ஹி..ஹி..அப்படியே....ஹி..ஹி.. மறந்துடாம அப்டியே வோட்ட போட்டுட்டு போயடுங்கன்னேன்...ஹி..ஹி...

(யோவ் பட்டாபட்டி..கயறு வாங்கி அனுப்புயா...நான் மானஸ்தன்...)

வெளியூர்க்காரன்..  85 Responses so far.

 1. அப்பு.. மப்பு கொஞ்சம் ஓவரோ.. இருங்க ..
  இருங்க ...

  முழுவதும் படிச்சிட்டு 'நானே.... மீண்டும் வருவேனே.......'

 2. ஆகா.. என்னை விட மாட்டீர் போல..

  ரைட்டு..
  கயிறேன்ன...உடுங்க அப்பு..
  ங்கொய்யாலே..
  எல்லாத்தையும் போட்டு தள்ளிட்டு ,
  நாம மட்டும் எழுதலாம்...

  படிக்கலைன என்ன பண்றதா?..
  .
  .
  வள்ளுவருகிட்ட சொல்லி , 1 ஆம் கிளாஸ் தமிழ் பாட புத்தகத்தில, கட்டாய பாடமா சேர்க்கச் சொல்லிடலாம்..

 3. அண்ணே.. அந்த Font.......
  .
  .
  .
  நானும் சொல்லிட்டேயிருக்கேன்.. கொஞ்சம் பெருசா போடுங்கனு..( சுமார் ரெண்டு மாதமா )

  உகூம்..அப்புறம் நிசமாவே கயிற அனுப்பிடுவேன்..

 4. அடப்பாவி தமிழ்படம் வந்ததும் நினைச்சேன் இதுமாதிரி ஒரு பதிவாது வரும்ண்ணு கிழிச்சிட்டே...

 5. பட்டாப்பட்டி...நீ எழுதும் ஒய்...நான் படிக்கறேன்..உமக்கு என்ன வருதோ அத கரெக்டா பண்றீரு...நக்கல் எல்லாருக்கும் வராது...நீங்க யாருக்கும் பார்மாலிட்டி பண்ணி நான் பார்த்ததில்ல...நீரு பெரிய மனுஷன் ஒய்...இத நான் போதைலைலாம் எழுதல..ரொம்ப நாலா சொல்லனும்னு மனசுல இருந்த விஷயம்..இந்த படத்த சாக்கா வெச்சு வந்துருச்சு...வசந்த கால பறவைன்னு ஒரு ப்ளாக் இருக்கு போய் படிச்சு பாருங்க சாமி..ஒரு மனுஷன் இப்டியெல்லாம் காதலிக்க முடியுமான்னு வாயபோளந்துருவீங்க...ஆனா அந்த மனுஷன் ஒரு வோட்டு பட்டன் கூட வெச்சுக்க மாட்டாரு...இப்டி வெளியே தெரியாம நெறைய நல்ல எழுத்தாளர்கள் இருக்காங்க..அவங்கல்லாம் வளரனும்...இந்த வெத்து குதிரைங்களோட சத்தம் கொஞ்சம் குறைஞ்சா போதும்... அவங்க வெளில தெரிய ஆரம்பிச்சுடுவாங்க...என்னோட வேதனை என்னென்ன சில நல்ல எழுத்தாளர்களும் இந்த பார்மாலிட்டி கூட்டத்துல சிக்கிருக்காங்க..அவங்ககிட ஒன்னே ஒன்னு கேட்டுகறேன்...தயவு செஞ்சு வெளில வந்துடுங்க...ப்ளீஸ்...

 6. ஹா ஹா ஹா...ஹி ஹி ஹி...ஹு ஹு ஹு...ஹெ ஹெ ஹே...ஓ மஹஸீயா நாக்க முக்க ஷகலக்க முஹலாய்...ஸாம்ப ஸம்பாலே...ஹலோ மிஸ்டர் வெளியூர்காரன்! நாம ரெண்டு பேரும் டெல்லில மீட் பண்ணிருக்கறோம்...

 7. பிரியமுடன்...வசந்த் said...@///

  மச்சி...எப்டிடா இருக்க..கிழிக்கனும்லாம் கிழிக்கலாடா...அவ்ளோ ஆதங்கம் மச்சி...தமிழ்படம் பார்த்துட்டியா...எப்டி இருந்துச்சு...?

 8. மாப்ள அந்த வசந்தகாலபறவை லிங் இருந்தா கொடேன்...

 9. ரெட்டைவால் ' ஸ் said...@///
  மாப்ள...நான் உன்ட்ட சரண்டர்...வெளியூர்காரன பத்தி என்னத்த எழுதி வெச்சுரிகியோன்னு தெரியாம பக்கு பக்குங்குது...நீ காலைல அனுபிச்ச மூணு வரிக்கே எனக்கு தூக்கம் வரமாட்டேன்குது..பத்து நிமிசத்துக்கு ஒருதடவ ரெட்டைவால்ச ஓபன் பண்ணி பார்த்துட்ருக்கேன்....மாப்ள்ள...உன் அடிமைடா நான்..பார்த்து செய்டா செல்லம்... :)

 10. பிரியமுடன்...வசந்த் said...@///
  http://siva-manjunathan.blogspot.com,
  மச்சி இந்த வலைப்பூ ஒரு உதாரணம் மட்டும்தாண்டா..இந்த மாதிரி நிறைய எழுத்தாளர்கள் இருக்காங்க..ஆனா நான் பார்த்த வரைக்கும் இது போன்ற தரமான எழுத்தாளர்களுக்கு பின்னோக்கி போன்ற ஒரு சில நல்ல தரமான பதிவர்கள் மட்டும்தான் ஆதரவா இருக்காங்க.
  ரசிக்கறாங்க..நல்ல எழுத்துக்கள் எல்லார்கிட்டயும் போய் சேரனும் .நீ எனக்கு பின்னூட்டம் போட்டாதான் நான் உனக்கு பின்னூட்டம் போடுவேங்கர எண்ணமே தப்பு மச்சி..நல்ல எழுத்துக்கள நாம கொண்டாட வேண்டாமா....நாம கொண்டாடலேன்னா எப்டிடா அவங்க வளருவாங்க...

 11. அண்ணாமலையான் said.தூள்.....@////
  அண்ணாமலையான் சார் .இப்டி கேக்கறதுக்கு மன்னிக்கணும்.....இது பார்மாலிட்டி இல்லிங்களே..நெஜமாவே நல்லா இருக்குங்களா...(ஹி..ஹி...இது சும்மா திருவாரூர்காரன் குசும்பு வாத்யாரே...)

 12. மாப்ள முதல்ல பின்னூட்டத்துக்காக எழுதுறதுன்றதே தப்புடா... தவம் மாதிரி எழுதணும் அடுத்தவன் வருவான் படிப்பான் அப்பிடின்றதுக்காக எழுதக்கூடாது.. சரியா பொறவு பதில் பின்னூட்டம்ன்றதுக்காக யாரும் பின்னூட்டம் போடுறதில்லடா இதுவந்து ஒரு ஃப்ரண்ட்ஸ் உலகம்ன்னு வச்சுக்கோயேன் இதுல இப்போ நீ ஒரு இடத்துல இருக்க நான் ஒரு இடத்துல இருக்கேன் ரெண்டு பேரும் பேசிக்கிற மாதிரியிருக்கும் இப்போ நீ என்ன கிண்டல் பண்ணுனா நான் உன்ன கிண்டல் பண்ணுவேன்... நேரா கிடைக்காத ஃப்ரண்ட்ஸ் இண்டெர்நெட் மூலமா கிடைக்குறாங்க அவங்களோட ரசனையும் நம்ம ரசனையும் ஒத்து போகும்போது நம்ம எழுதுறதை ரசிக்கிறாங்கன்னு வச்சுக்கோயேன்... நீ சொல்லியிருக்குற இந்த மேட்டர்ல ஒண்ணுலயோ ரெண்டுலயோ நானும் சம்பந்தப்பட்டிருந்தாலும் எனக்கு கோபம் வரல ஏன்னு தெரியுமா நீ என்னோட ஃப்ரண்ட் உன்னோட ப்ளாக்ல நீ உன்னோட கருத்தை பதிவு செஞ்சுருக்க... இது உன்னை பொருத்தளவு சரியா இருக்கலாம் பலருக்கு பிடிக்காம போகலாம் அதுக்காக இதை சொல்லியே காரணம் காட்டி குத்தம் சொல்லிட்டே இருந்தோம்ன்னா நாம ம்ஹ்ஹும்... சரி விடு நானும் உன்னை மாதிரிதான் முதல் முதல் எழுதும்போது பத்து பதினைஞ்சு பேர் இப்போ நான் போய் அவங்களுக்கு கமெண்ட் போடாமலே எனக்கு வந்து கமெண்ட் போடறாங்க அப்படிப்பட்டவங்களும் இருக்காங்க மாப்ள நீ சொல்ற நல்லா எழுதுற பதிவர்களோட வலைபத்தி தெரிஞ்சிருக்காது மாப்ள எழுதி எழுதி பொத்தி பொத்தி வச்சுகிட்டா எப்பிடி அடுத்தவங்களுக்கு தெரியும்?

 13. பிரியமுடன்...வசந்த் said...@///
  மாப்ள மன்னிக்கணும்...என் வார்த்தைகள் உன்ன காயப்படுதிருந்தா உன் நண்பனா இல்ல, சக பதிவரா உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்..நீ என்னோட ஒரு பதிவுல வந்து எனக்கு இது புடிக்கலைன்னு எழுதிட்டு போயிருக்க.இன்னும் சொல்ல போனா இவ்ளோ நாள்ல நீ மட்டும்தான் அப்டி எழுதிருக்க..நீ என் செல்லம்டா......நீ என்னோட லிஸ்ட்லையே இல்ல மச்சி..ஆனா பாரு வாண்டடா வந்து இப்போ மாட்டிகிட்ட..அதனால வேற வழியில்லாம உனக்கு பதில் சொல்றேன்...நீ பின்னூட்டங்கள பத்தி மட்டும் சொல்லிருக்க..அதனால அதுக்கு மட்டும் பதில் சொல்றேன்..அழகான பாராட்டுக்களுக்கும் பின்னூட்டங்களுக்கும் எந்த ஒரு எழுத்தாளனுமே அடிமை...அதுக்குதான சாமி கண்ணு முழிச்சு எழுதறது.அது கண்டிப்பா இருக்கணும்...அதனால நண்பர்கள் வட்டம் வளரனும்.கருத்து பரிமாற்றங்களும் இருக்கணும்....அது ரொம்ப நல்ல விஷயம்..... ..நான் கலாசுனது வேற ஒரு கூட்டத்த...யாரன்னு உனக்கே தெரியும்..அவேங்கள கலாசுனதுக்கு நான் மன்னிப்பு கேக்க மாட்டேன்...என்ன மன்னிச்சிடு மச்சி...

 14. சரி வுடுடா இப்போ வா ஓல்ட் மங் ராவா அடிக்கலாம் ரொம்ப நாளாச்சு...

 15. நல்லா எழுதியிருக்கேன்னுதான் இத என்னோட பேர்ல தமிழ் மணத்தில இணைச்சுட்டுத்தான் உனக்கு பின்னூட்டமே போட்டேன்...

 16. எல்லாஞ்சரி யார்டா அந்த சொட்ட?

 17. பிரியமுடன்...வசந்த் said...@///
  மச்சி என்னடா என்ன போய்..ச்சே..என்னடா மச்சான் அசிங்கபடுத்திட்ட...என்ன போய் சரக்கடிக்க கூப்ட்டு..அயோயோ..என்னால தாங்க முடிலைடா...நான் குடிக்கறத விட்டு மூணு நாள் ஆச்சுடா...ப்ளீஸ்...தயவு செஞ்சு என்ன போர்ஸ் பண்ணாத..டேய்...டேய்...வேணாம்டா...ஓபன் பண்ணாதடா..அய்யோயோ கை நடுக்குதே..மச்சான் சொன்னா கேளு..வேணாம்..நான் குடிக்க மாட்டேன்..குடிக்க மாட்டேன்...குடிக்க மாட்டேன்....!!!..என்ன சரக்குடா மச்சான் இது...ஓ..ஓல்ட் மங்க்...நல்லாருக்குமே இது..ஆமாம் சிகரெட் பாக்கெட் எங்கடா வெச்ச...ஆப் பாயில் இருக்குதா.....?..

 18. பிரியமுடன்...வசந்த் said...@///எல்லாஞ்சரி யார்டா அந்த சொட்ட?///
  மாமாவுக்கு சரக்கு வாங்கி குடுத்து போதைல இருக்கும்போது மேட்டர வாங்க பார்க்கற...நாங்கல்லாம் தண்ணியடிச்சிட்டு மவுண்ட் ரோட்ல நைட் மூணு மணிக்கு வண்டி ஒட்னவங்கேடி மச்சி..இருந்தாலும் போதையில இருக்கும்போது கொஞ்சம் கூட உளறேலன்னா அப்பறம் இந்த பய ஓல்ட் மன்குக்கு என்ன மரியாதை.. ஆமாம் என்னா கேட்ட நீ..சிங்கபூர்ல மணி என்னாவா...இப்போ கரெக்டா மணி 2.35 டா மச்சான்...போதுமா..சந்தோசமா...)

 19. இது சாதாரண பதிவர் எழுதின பதிவு இல்ல.
  நாடி, நரம்பு ,எலும்பு, தோல், முடி எல்லாத்திலும் குசும்பு, பகடி கொலை வெறி உள்ள ஒரு பதிவர்தான் இப்படியாப்பட்ட பதிவ எழுதமுடியும்னு பிரபல பதிவர்கள் எல்லாம் பேசிக்கிறாங்களாம்!

  வாழ்த்துக்கள் திரு வெளியூர்காரன்!

 20. வெற்றி said.:)))))..@///
  இங்க பார்ரா ...சிரிக்கறத...

 21. யூர்கன் க்ருகியர் said.....@///
  மெய்யாலுமா சொல்றீங்க..நான் வேற மாதிரி கேள்விபட்டேன்..பெரிய பெரிய நோன்னைங்கல்லாம் கோவமா இருக்கறதா...எதோ என்ன கலாய்ச்சு மூச்சு விடாம நாலஞ்சு பேரு பதிவு எழுதிகிட்டு இருக்காங்கேலாம்..எதிர்த்து பதிவு எழுதற எல்லா பயலுக்கும் அடி உண்டுன்னு சொல்லி வைங்க..(அநியாயத்த தட்டி கேக்கற எல்லாருக்கும் இப்டிதான் எதிர்ப்பு வரும்...அத இந்த ஹீரோ சமாளிப்பான்...நன்றி...தமிழ்படம்...)

 22. மெய்யாலும்தான்.. பட்டய கெளப்புங்க..

 23. அண்ணாமலையான் said../மெய்யாலும்தான்.. பட்டய கெளப்புங்க...@/////
  ஆகா நான் அடிச்ச பன்ச் டயலாக மக்கள் ஏத்துகிட்டாங்க.இனிமே நானும் ஹீரோதான்....டேய் வில்லனுகளா...சண்டைக்கு எவனாச்சும் வாங்கடா...டேய் வாங்கடா டேய்..வாங்கடா...வந்து ஒத்தைக்கு ஒத்த சண்டை போட்டு பாருங்கடா..இந்த தமிழ் பட ஹீரோகிட்ட..என் பேருதாண்டா வெளியூர்காரன்..ஆனா நான் எல்லா ஊருக்கும் உள்ளூர்காரண்டா ..(அண்ணாமலை சார்...இந்த பஞ்ச் டயலாக் எப்டி இருக்கு...)

 24. Siva says:

  ♀♪♂◙♫¶#◄ ► → ← ∟ ↔ ▲ ▼
  §Ä- τ?╓ ☺ ☻♥ ♦ • ◘ ○ Φ
  ³ ´ ¾ ¼ ² ½ Û è √ ~ `
  *%}{() _ + = '",:;/@ []
  இது "ஓ மஹசியா" ரீமிக்ஸ் பாடலின் பல்லவி என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நீங்கள் நம்மாளு இல்ல.(நாங்களும் யோசிப்போமுல்ல).

 25. Siva said.@..(நாங்களும் யோசிப்போமுல்ல).///...
  एना वाथ्यारे सोल्लिरुक्का..एनाक्कू ओंनुमे पुरियालाये...சாரிபா..உங்க கேள்விக்கு நான் பதில் சொல்லிட்டேன்..ஆனா கூகிள் இன்டிக்ள டைப் பண்ணும்போது தமிழ்னு மாத்த மறந்துட்டேன்..(எப்பப்பா...எவ்ளோ தொழில் நேக்கா தப்பிக்க வேண்டியதா இருக்கு இவங்கேகிட்ட...)

 26. கவர மட்டும் மறக்காம அனுப்பி வெச்சுருங்க அப்பு...

  http://pattapatti.blogspot.com/2010/02/blog-post.html

 27. பட்டாபட்டி.. said...///@யோவ் பட்டாபட்டி...கவர் அனுப்பறத அப்பறம் பார்த்துக்கலாம்..மொதல்ல நாம ரெண்டு பெரும் இங்குண எதாச்சும் ஒரு டீ கடையா பார்த்து ஒரு தேயோவ குடிச்சுபுட்டு, சிங்கப்பூரில் பதிவர்கள் திருவிழா...கோலாகலம்...அமர்க்களம்..சிங்கப்பூர் கூட்டத்தில் தத்தளித்தது அப்டி இப்டின்னு பில்ட் அப்ப குடுத்து ஆளுக்கு ஒரு பதிவ போட்ருவோம்.நீ என்னை பாராட்டு...நான் உன்ன பாராட்டறேன்.அப்டியே பிக் அப் பண்ணி வலை உலகத்தின் மிக புகழ் பெற்ற பதிவர்கல்னு நம்மள நாமலே அறிவிச்சுக்குவோம்....என்னா சொல்றீக...(வரும்போது மறக்காம டீக்கு காசு எடுத்துட்டு வந்துடு..திடீர்னு மூணு வெள்ளிய என்னால புரட்ட முடியாது...பெரிய அமௌன்ட்டு...).உம்..உம்....வேலைகள் ஆரம்பமாகட்டும்...பதிவர் திருவிழா கோலாகலமாக தொடங்கட்டும்....

 28. சரிங்க .. வெளியூர்காரரே..
  உங்க ஊரு மாரியம்மன் கோவிலு திருவிழா,
  எப்பனு சொல்லுங்க...வந்து கம்பம் சுத்தி ஆடிட்டு தேத்தண்ணி
  குடிக்கலாம்...

  அத போட்டோ வேற எடுத்து ,
  New paper , Makkan paper ,
  மேலும் அந்த துடைக்கர பேப்பரு எல்லாத்திலும்
  முதல் பக்கம் செய்தியா , வர மாறி செய்திடலாம்...

  நம்ம கூட்டணி வாழ்க..தொண்டர்களே.. பொறுமையாக இருங்கள்..

 29. henry J says:

  Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof

 30. யோவ்..என்னயா அரசியல்வாதி நீ...நான் ஒரு தேசிய கட்சிய சேர்ந்தவன்...என்ன உன் கட்சில சேர்க்க பார்க்கற..நீ வேணா உன் கட்சி பமுகவ கலைச்சிட்டு என் கழகத்துல வந்து சேர்ந்துடு...சிங்கபூர் இளைங்கரணி தலைவர் போஸ்டிங் வாங்கி தரேன்...(யோவ் பட்டாபட்டி..நாம ரெண்டு பெரும் அடிச்சுகுவோம்யா..எவ்ளோ வரண்டிளுத்தாலும் இங்குட்டு ஒரு பயலும் சண்டைக்கு வரமாட்டேன்க்ராங்கே..போர் அடிக்குது...என்னா சொல்றீக...டீலா...நோ டீலா...).

 31. henry J said...
  Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof///@
  எலேய் அயோக்ய படுவா...என்னாதிது சின்னபுள்ள தனமா... பெரிய மனுசங்கே கோவமாவும் கொடூரமாவும் புழங்கற எடத்துல வந்து கடைய விரிச்சுகிட்டு..எல்லாத்தையும் மூட்ட கட்ரியா இல்ல...இப்போ அண்ணன் அருவாளோட ஸ்பாட்ல ஏறங்கவா...யோவ் பட்டாபட்டி என்னயா இதெல்லாம்...சொல்லி வையா..கொஞ்சம் கூட மதிக்க மாட்டேன்க்ராங்கே...

 32. @henry J said...
  Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof///

  ஆகா... கோழி மாட்டிருச்சு தல..
  தீ-குளிக்க ஆள் தேட வேண்டியதில்லை..

  $5.5 க்கு வந்து ஒப்பாரி வைக்கறானுகோ..
  ஏம்பா. கோடிஸ்வரனுககிட்ட பேசர பேச்ச இது...

  ஓ.கே.. ஸ்டார்ட் மிஜிக்...

 33. யோவ் பட்டாபட்டி...என்னயா நீ அரசியல்வாதி..கோழி சிக்கிருக்குன்னு சும்மா சொல்லிக்கிட்டுருக்க..புடிச்சு கொளுத்தி விடுயா அந்த டுபுக்க..யாரோட ஏரியான்னு தெரியாம தலைய விட்ருக்கு..சென்னைக்கு புதுபேட்டை மாதிரி..ப்ளாகுக்கு வெளியூர்காரன்...ங்கோயாள.இங்க ரெத்தம், கொலை ,உயிரோட எரிக்கறது இந்த மாதிரி வன்முறைகள் மட்டும்தான் நடக்கும்...மக்களை பத்தி கவலைபடாத ஒய்.....இவங்ககிட்ட செண்டிமெண்டா பேசி வோட்ட நான் வாங்கறேன்...

 34. அப்பு.. நீரு இப்படியெல்லாம் , அடாவடி அரசியல் பண்ணக்கூடாது வோய்..
  கொளுத்தி விட்டா, ரெண்டு நிமிஷ நியூஸ்..

  நாம் யாரு... என்ன..

  பொசுக்குனு தீ வெச்ச , பிரச்சனை எப்படிவோய் பெருசாகும்..?

  முதல சொல்லனும்.. பய பயந்துட்டு ஓடிம்போது , பின்னாடி பத்தவெக்கனும் ..

 35. பட்டாபட்டி.. said...@//இப்போ என்ன பன்னலாம்ன்க்ரா ஒய் அந்த பயல..எனகென்னமோ அவன இப்பவே இழுத்து போட்டு மனச விட்டு கொளுத்தனும் போல ஆசை ஆசையா இருக்கு..நீ என்ன சொல்ற...இப்பவே எரிச்சர்லாமா...இல்ல பயமுறுத்தி ஓட விட்டு அப்பறம் ஸ்லோ மோசன்ல கொளுத்துவமா ..ஆனா ஒன்னு இந்த பயல நாம போடற போட்ல இனி ஒரு பய வந்து கடை விரிக்ககூடது...பயம்...பயம் இருக்கணும் எல்லா பய மனசுலயும்..அந்த மாதிரி எதாச்சும் பண்ணுவோம்..(யோவ் பட்டு...நாம கொஞ்சம் ஓவராத்தான் போய்கிற்றுக்கமோ...போவோம் போவோம்...போய்தான் பாப்போம்..)

 36. அட.. ஒண்ணு ஓடுவாங்க.. இல்ல கடைய நம்ம கிட்ட கொடுத்துடுவானுக..
  ஆனா அப்பு.. கடைசியில நாமதான் வின்னரு....

 37. Anonymous says:

  Hey, Nalla polanthu kadedinka Sir!!!!!!
  * High Hells rouls kaareyai kesathu super...
  Naanum oru ponnu than ,but aval eluthurathu enkay avamanamai eruku.., enyavathu puththi varutha parkalam?.

 38. VARO says:

  அண்ணே!
  சூப்பரன்னே! நான் பொதுவா நினைக்கிற விஷயத்தையெல்லாம் காமெடி என்ற பேர்ல போட்டு தாக்கிட்டீங்க. இனி நானும் எழுதினா கொப்பியாயிடும், அனுமதி தந்தா ஒரு லின்ங் குடுத்துவிடுறன்.

 39. அமெரிக்காவுல ஆறு பேரு தேடறாங்கோ

  ஆப்பிரிக்காவுல அஞ்சு பேரு கூவுறாங்கோ

  அட அவ்வளவு ஏன்.....

  பாகிஸ்தான்ல கூட 3 பேர் ஒட்டுக் கேக்குறாங்க போங்க.

  (கடையில கொடி பிடிக்கிறவங்கள சொன்னேன்:)

 40. அடங்கொக்கமக்கா நான் யோசிச்சு வச்ச டாபிக்..:)

 41. பட்டாபட்டி.. said...@அட.. ஒண்ணு ஓடுவாங்க.. இல்ல கடைய நம்ம கிட்ட கொடுத்துடுவானுக..
  ஆனா அப்பு.. கடைசியில நாமதான் வின்னரு....//
  யோவ் பட்டு..நம்ம பண்ற அராஜகத்த இதுவரைக்கும் யாரும் எதிர்த்து கேக்கல..தக்காளி இனிமே நாமத்தான்ய ரௌடி..இனிமே எல்லா பயலும் ஒரு பதிவு போஸ்ட் பண்றதுக்கு இவ்ளோ அமௌன்ட் பணம் நமக்கு கட்டணும்னு நாளைக்கு பமுக பொதுகுழுவ கூடி அறிவிச்சிடுயா..ஒரு அமௌண்ட தேத்திகிட்டு ஊரு பக்கம் போய் சேருவோம்...இங்குண சிங்கபூர்ல ரொம்ப நாள் கல்லா கட்டமுடியாதுன்னு நெனைக்கறேன்..உனக்கு யாரையாச்சும் புடிக்கலேன்னா கூட சொல்லு...அந்த பதிவரோட லிங்க்க போட்டு ஒபனா கலாய்ப்போம்..இவனுகதான் எவ்ளோ அடிச்சாலும் தாங்கறானுகளே...!

 42. Anonymous said...@///
  கோச்சுக்காதீங்க தோழியே.....பேர போட கூட தைரியம் இல்லாத பொண்ணுக்கு பதில் சொல்லலனும்னு எனக்கு தோணல.அந்த மாதிரி பொண்ணுங்க இருக்கறதும் தப்பு..உங்கள மாதிரி இருக்கறதும் தப்பு..தயவு செஞ்சு வெளில வாங்க..எங்களுக்கு பெண்களுக்கு முழு சம உரிமை குடுக்கறதுல எந்த விதமான ஆட்சேபனையும் இல்ல..இன்னும் சொல்ல போனா நாங்க எப்பவோ குடுத்துட்டோம்...ஆனா ஒன்னு மிஸ் யூஸ் பண்றீங்க..இல்லேன்னா எடுத்துக்கவே மாட்றீங்க..இதான் உங்க தரப்போட பிரச்சனை...

 43. எதுக்கப்பு.. சிங்கப்பூரு.. இந்தியானு..
  எல்லா ஊரும் நம்மூர்தான்..

  சரி உடுங்க.. இந்த ஒபாமா பையனை
  தொரத்திட்டு!!!!!!!!
  ..
  ..
  ..
  எல்லாரும் படிக்கராங்க அப்பு..............
  அப்புறம் கம்பெனி சீக்ரெட் வெளிய வந்துரும்..

  மாரியம்மன் திருவிழாவில மீதியப் பேசிக்கலாம்.

 44. VARO said...அண்ணே!
  சூப்பரன்னே! நான் பொதுவா நினைக்கிற விஷயத்தையெல்லாம் காமெடி என்ற பேர்ல போட்டு தாக்கிட்டீங்க. இனி நானும் எழுதினா கொப்பியாயிடும், அனுமதி தந்தா ஒரு லின்ங் குடுத்துவிடுறன்.@///
  அண்ணன் என்கிட்டே நீங்க அனுமதி கேக்கற அளவுக்கெல்லாம் நான் பெரிய தில்லாலங்கடி சார் இல்லைங்க அண்ணன்...நான் கலாய்ச்ச அந்த நாதாரிங்க கூட்டத்துல நானும் ஒருத்தன்தான்..ஆனா என்ன, என் சத்தம் கொஞ்சம் கம்மியா இருக்கும்...அடுத்தவங்கள தொந்தரவு பண்ணாது..மத்தபடி அந்த வெத்து குதிரைங்க கூட்டத்துல நானும் முக்கியமான குதிரை..ஆங்...! லிங்க்கு கேட்டீங்கல்ல... .உங்களுக்கு என்னையே நான் குடுக்கேன்...வேற என்னத்த நான் புதுசா குடுக்கேன்...லின்க்குதான...கருமத்த எங்க வேணுமோ போட்டுகங்க..இதுக்கெதுக்கு பங்காளி அனுமதி எல்லாம்.. :)

 45. ராஜ நடராஜன் said......@///நான் ரசிச்சு எழுதுன முதல் பதிவுக்கு பின்னூட்டம் குடுத்ததுக்கு நன்றி..அடிக்கடி வாங்கன்னு சொல்லமாட்டேன் சார்...உங்கள அடிக்கடி நான் வரவைப்பேன்...நமக்கு நம்ம எழுத்து மேல அம்புட்டு நம்பிக்கை...ரொம்ப நன்றி வாத்யாரே....

 46. //அண்ணன் என்கிட்டே நீங்க அனுமதி கேக்கற அளவுக்கெல்லாம் நான் பெரிய தில்லாலங்கடி சார் இல்லைங்க அண்ணன்...நான் கலாய்ச்ச அந்த நாதாரிங்க கூட்டத்துல நானும் ஒருத்தன்தான்..ஆனா என்ன, என் சத்தம் கொஞ்சம் கம்மியா இருக்கும்...அடுத்தவங்கள தொந்தரவு பண்ணாது..மத்தபடி அந்த வெத்து குதிரைங்க கூட்டத்துல நானும் முக்கியமான குதிரை..ஆங்...! லிங்க்கு கேட்டீங்கல்ல... .உங்களுக்கு என்னையே நான் குடுக்கேன்...வேற என்னத்த நான் புதுசா குடுக்கேன்...லின்க்குதான...கருமத்த எங்க வேணுமோ போட்டுகங்க..இதுக்கெதுக்கு பங்காளி அனுமதி எல்லாம்.. :)
  //

  அப்பு.. முக்கியமா போட்டோ புடிச்சு வெச்சுகிடுங்க..
  பின்னாடி யூஸ் ஆனாலும் ஆகும்...

 47. வினோத்கெளதம் said...அடங்கொக்கமக்கா நான் யோசிச்சு வச்ச டாபிக்..:)@///
  எப்புடி....முந்திக்கிட்டமா இல்லையா... :)

 48. பட்டாபட்டி.. said...///@பட்டு.....என்ன பட்டு இப்டி பயந்துகிட்டு...நாமெல்லாம் அரசியல்வாதிங்கையா...நம்மள பார்த்துதான் நாலு பேரு பயப்டனும்...நாம ரெண்டு பேருமே ஒரு டுபாக்கூரு ...இதுல நமக்கு ஒரு கம்பெனி வேற...அந்த கம்பனிக்கு ஒரு சீக்ரெட் வேறயா..ஏன்யா இப்டி....மொதல்ல அடுத்த பதிவுல உம்ம போட்டாதான் சரியாய் வரும்னு நெனைக்கறேன்...(பட்டாப்பட்டி, மாரியம்மன் கோவில்ல உண்டக்கட்டி கேடைக்கும்ல...நியூ இயர் அன்னிக்கு சீனா டவுன்ல குடுக்காம ஏமாத்திபுடாங்கேயா ...)

 49. அட உடுங்கப்பு..
  உண்டகட்டி கிடைக்கலேனா,
  தலைவர உண்ணாவிரதம் இருக்கச் சொல்லுவோம்..

  என்ன இருந்தாலும் , பொண்ண கட்டி கொடுத்த ஊரு..
  கண்டிப்பா கிடைக்கும்

 50. கலக்கிட்டிங்க தல. ஆட்டோ சத்தம் கேட்குதா ? ;)

 51. வாழ்த்துகள் நண்பரே

  அவசியமான இடுகை ...

 52. மன்னாரு.. இன்னைக்கு நைட்டு , டீ - கடைய சீக்கிரம் மூடிட்டு ..
  .
  ஏன் தலை..
  .
  இல்ல .. ரெட்டை வாலுக்குக்கும் , வெளியூர்காரனுக்கும் , திருப்பவும் கட்ட பஞ்சாயத்து நடக்கப்போகுது..
  அப்புறம் , பக்கிரிகிட்ட சொல்லி கல்லாவை க்ளின் பண்ணச்சொல்லு..
  கன்பார்மா , இந்த தடவை 10,000 ரூபா வாங்கிடலாம்..
  .
  @வெளியூர்காரனுக்கு..
  அப்பவே சொன்னேன்.. இதயத்தில இடம் வேண்டாம்.. டம்மி போஸ்ட் ஏதாவது கொடுக்கலாமுனு..
  சொன்னா கேட்டுப் பழகுங்க .. அப்பு..


  @ரெட்டை வால்ஸ்
  உங்களுக்கு டெல்லி வரை செல்வாக்கு உள்ளது என தலைமைக்கு தெரிய வந்துள்ளதால் ,
  இன்றிரவு , பொதுக்குழு கூடி நல்ல முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்...

 53. Sabarinathan Arthanari said.கலக்கிட்டிங்க தல. ஆட்டோ சத்தம் கேட்குதா ? ;)..@//பங்காளி..நாங்கெல்லாம் புல்டோசரையே நெரவி தள்றவங்கே..என்னதிது சின்னபுள்ளதனமா இன்னும் ஆட்டோ அனுப்பிகிட்டு...நல்லா பெருசா ஜே சி பி ஏதும் இருந்த அத அனுப்பி வைக்க சொல்லுங்க .எனக்கு பயந்து வருதான்னு பார்ப்போம்....

 54. நிகழ்காலத்தில்... said...@//
  தேங்க்ஸ் வாத்யாரே...

 55. பின்னிட்டீரூ.....

 56. Kaipulla says:

  தில்லுயா ஒனக்கு, செருப்ப கலட்டி மூஞ்சிலேயே அடிக்கிற..இனிமேலாவது திருந்துராங்கலான்னு பார்போம்....

 57. அண்ணே கலக்கல், சூப்பர், கலக்கல், ஜமாய்ச்சிற்றீங்க போங்க.... ;)

  உங்களுக்கு கரப்பான் பூச்சி விருது குடுக்கலாம் போல இருக்கு...
  யாராவது இருக்கிறவங்க குடுங்கப்பா....

  வாக்குப் போட்டாச்சு... ஹி ஹி.... :)

 58. கன்கொன் || Kangon said...
  அண்ணே கலக்கல், சூப்பர், கலக்கல், ஜமாய்ச்சிற்றீங்க போங்க.... ;)////

  மஞ்சூர் ராசா said...
  பின்னிட்டீரூ.....////

  நிகழ்காலத்தில்... said...
  வாழ்த்துகள் நண்பரே

  அவசியமான இடுகை ...////

  யோவ் இவனே ஞாயித்துக்கிழமை தண்ணியப் போட்டு வாந்தி எடுத்து வச்சுருக்கான்...ஆ ஊன்னுட்டு...வாங்கைய்யா நம்ம மானாட மயிலாட பாப்போம்..பொது அறிவாவது வளரும்.

  அப்புறம் வெளியூர்காரா! சொன்னத சாதிச்சுட்டடா.."அந்தா அவனுகளை கலாய்க்கனும்னு சொன்னியே அந்த டாபிக் அடுத்த வாரமாடா?"

 59. //யோவ் இவனே ஞாயித்துக்கிழமை தண்ணியப் போட்டு வாந்தி எடுத்து வச்சுருக்கான்...ஆ ஊன்னுட்டு...வாங்கைய்யா நம்ம மானாட மயிலாட பாப்போம்..பொது அறிவாவது வளரும். //

  நான் செவ்வாய்க்கிழமை தண்ணியப் போட்டிற்றுத்தான் பின்னூட்டம் போட்டன்.... ;)

 60. சரி அப்பு...
  .. அடுத்து யாரு.. ?
  கை கீ- போர்ட்-ல வெயிட்டிங்க..

  ஓன். டூ.. திரி.. சொல்லிட்டு இருங்க... நான் அதுகுள்ள ஒண்ணுக்கு
  போயிட்டு வந்துடரேன்...

 61. //கடைசியா ஒரு வார்த்தை...
  ஹி..ஹி..எப்டி சொல்றதுன்னு தெரில...ஹி..ஹி..படிச்சிட்டு உங்க கருத்த இங்க பின்னூட்டத்துல போட்டுட்டு போங்கன்னேன்..ஹி..ஹி...கடைசியா இன்னொரு விஷயம்...ஹி..ஹி..அப்படியே....ஹி..ஹி.. மறந்துடாம அப்டியே வோட்ட போட்டுட்டு போயடுங்கன்னேன்...ஹி..ஹி...//

  எனக்கு உங்கள் நேர்மை பிடிச்சுது.

 62. மஞ்சூர் ராசா said..பின்னிட்டீரூ......@எத வாத்யாரே பின்னிட்டேன்... :)
  Kaipulla said...@
  தில்லுயா ஒனக்கு, செருப்ப கலட்டி மூஞ்சிலேயே அடிக்கிற..இனிமேலாவது திருந்துராங்கலான்னு பார்போம்....//யோவ் கைப்புள்ள ..அங்க கட்டதுரை ஆளுக எனக்கு கட்டம் கட்டிருப்பாணுக...வாங்க சமாளிப்போம்..
  Kangon said...@//விருத வாங்கிக்கறேன்..ஆனா மூக்க ரெடியா வைங்க..பூரானோட வர்றேன்.. :)

 63. ரெட்டைவால் ' ஸ் said...@//அப்புறம் வெளியூர்காரா! சொன்னத சாதிச்சுட்டடா.."அந்தா அவனுகளை கலாய்க்கனும்னு சொன்னியே அந்த டாபிக் அடுத்த வாரமாடா?"///
  மச்சி..மக்கள் ஆதரவ பார்த்தா உடனே போட்டு தாக்கிரலாம் போலருக்கு...

 64. @யோகன் பாரிஸ்(Johan-Paris) said...எனக்கு உங்கள் நேர்மை பிடிச்சுது.//
  அப்டியா சொல்றீங்க..சரிவிடுங்க...அதுவும்தான் இருந்துட்டு போட்டுமே..

 65. பட்டாபட்டி.. said...சரி அப்பு...
  அடுத்து யாரு.. ?////
  என்ன சொல்றேள் பட்டு மாமி...நேக்கு ஒன்னும் புரிய மாட்டேங்கறது..(ங்கோயாள..மூணு லிட்டர் பெட்ரோல் ஊத்தி கொளுத்துனேன்..தக்காளி அப்படியும் மறுபடியும் வந்துடானையா இந்த பட்டாப்பட்டி.....இனிமே அரசியல்வாதிங்கள கொளுத்தும்போது ரெண்டு லிட்டர் டீசலும் சேர்த்து ஊத்தணும்...)

 66. ங்கொய்யா.. சாகாவரம் வாங்கிட்டு வந்தவனையா இந்த "'பட்டாபட்டி சக்ரவர்த்தி.'".
  ( அடுத்து எந்த போர்களம் எனச் சொல்.. என் புஜங்கள் துடிக்கிறது, )

 67. யோவ்.. அரசியல அதெல்லாம் சகஜமப்பா...
  காந்தி சாகம் போது கூட , எனக்கு மிஸ்ட் கால் கொடுத்தாருனு
  தஞ்சாவூர் கல்வெட்டுல போட்டிருக்கும் அப்பு...

 68. .. வேல்... வேல் .. வீர வேல்...
  http://pattapatti.blogspot.com/2010/02/blog-post_728.html

 69. :-)))))) பதிவு பட்டாசா இருக்கு!

 70. பதிவு அதிகம் பார்க்கிறவுங்களோட தான் இதை படிக்கணும் போல சிலவை யாரை சொல்லுறேங்கனு புரியலை. புரிந்தவரை அற்புதம்.

 71. ஏம்ப்பா...

  சம்டைம்ஸ், பதிவ விட, இந்த பின்னூட்டு லெந்த் ஆவுதே... அது எப்டீ...? .....என்கஷ்டம் பதிவ தொட்டாலே மச லெந்த் ஆவுது...
  எனிவே.. செம கிழி கிழிச்சிருக்கிங்க.. எனக்கு பயமா இருக்கு.. நானும் செஞ்ச தப்பெல்லாம் கரிக்ட் பண்ண ட்ரை பண்றேன்...
  நன்றி..

 72. கிரி said...@///
  தேங்க்ஸ் வாத்யாரே...
  நீச்சல்காரன் said...@///
  பதிவு அதிகம் பார்க்கிறவுங்களோட தான் இதை படிக்கணும் போல சிலவை யாரை சொல்லுறேங்கனு புரியலை. //
  புரியலைனா சொல்லுங்க..அடுத்த பதிவ அவங்க பேரோட போட்ருவோம்...அவங்க லிங்க்க குடுத்து ராவா கலாய்ப்போம்..ஏன்னா சொல்றீங்க...பண்ணிடலாமா..

 73. பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...@///
  என்னோட தரமான பதிவர்கள்ல லிஸ்ட்ல நீங்களும் இருக்கீங்க சாமகோடங்கி...நான் தப்பா ஏதும் எழுதிருந்தா மன்னிச்சிடுங்க.வருகைக்கு நன்றி.... :)

 74. கலக்கீடீங்க!
  எனக்கு எப்படி தான் தோணுச்சு ,எதுக்கு இப்படி வாக்கு வங்கி நடத்தறது வழக்கமான ஆட்கள் கும்மி அடிக்கறது அவார்ட் குடுக்கறது, இது என் பக்கம் உனக்கு புடிச்ச படி புடிக்லேன்னா படிக்காத !

  எது உங்க பதிவு எல்லாமே சூப்பர் !

 75. @@@Rohinisiva
  கலக்கீடீங்க!எது உங்க பதிவு எல்லாமே சூப்பர் !////

  அப்டியா சொல்றீங்க..ஏற்கனவே இங்க ஒரு பயலையும் நாங்க மதிக்கறதில்ல..இதுல நீங்க வேற இப்டி வெறி ஏத்திவிட்டீங்கன்னா என்னங்க நியாயம்...டேய் ரெட்டைவால்ஸ் தாய்க்குலம் சப்போர்ட் கெடைச்சிருச்சுடா...இனிமே யாராச்சும் கலாய்க்கனும்னா அவங்க லிங்க்க போட்டு கலாய்க்கலாம்.என்னா சொல்ற.. !! :)

 76. venkatx5 says:

  குத்துங்க எஜமான் குத்துங்க.. கும்மி அடிக்கறவங்கள கூப்பிட்டு வெச்சு கும்மி அடிச்சுருக்கீங்க.
  நல்லா இருக்குன்னா வெறி ஏத்தி விட்ட மாதிரி ஆயிடும்.. கருமத்த நல்லா இல்லைன்னு சொல்ல மனசு வரல.

  இந்த மாதிரி நிறைய எழுதுங்க மாம்ஸ்!
  "ஒரு சைனா டீ பார்சல்!"

 77. velumani1 says:

  சூப்பர் மாப்பு. இப்டி, இப்டி ஒரு பதிவைத்தான் நான் நினச்சிகிட்டே இருந்தேன். 100 சதம் உண்மைப்பா....! பத்த வச்சிட்டயே பரட்ட.....

 78. @@@Velumani1
  சூப்பர் மாப்பு. இப்டி, இப்டி ஒரு பதிவைத்தான் நான் நினச்சிகிட்டே இருந்தேன். 100 சதம் உண்மைப்பா....! பத்த வச்சிட்டயே பரட்ட.....////

  அண்ணேன்...இத பத்த வெச்சு ஆறு மாசம் ஆய்ருச்சு.நீங்க அநியாயத்துக்கு லேட்டு ...முந்தாநேத்து ஏதோ பிளைட்டு கீழ விழுந்துருச்சாம்...அத போய் பாருங்கன்னேன்..! அதான் புதுசு...!

 79. நல்ல பதிவு சார் ...
  பதிவுலகத்துல அநியாயத்துக்கு சீன் போடுறாங்க...
  போட்டு தாக்கீட்டீங்க ...

 80. ண்ணா,சூப்பர் ங்ணா,இத மாதிரி ஒரு பதிவ எதிர்பார்த்தேன் .கிளிசிட்டீங்க சில பய புள்ளைக திருந்தும்னு நம்புறேன் .அதுலயும் சினிமா விமர்சனம் ன்னு இவிங்க எழுதுற அக்கபோரு உட்டா ஆஸ்கார் கமிட்டிக்கே ஐடியா குடுப்ப்பாயங்க.நல்ல பதிவு நண்பரே வரவேற்கிறேன் ..

 81. நோ கமெண்ட்ஸ் - வெளியூர்க்காரன்

  நல்வாழ்த்துகள் வெளியூர்க்காரன்
  நட்புடன் சீனா

 82. priya says:

  //எங்களுக்கு பெண்களுக்கு முழு சம உரிமை குடுக்கறதுல எந்த விதமான ஆட்சேபனையும் இல்ல..இன்னும் சொல்ல போனா நாங்க எப்பவோ குடுத்துட்டோம்...ஆனா ஒன்னு மிஸ் யூஸ் பண்றீங்க..இல்லேன்னா எடுத்துக்கவே மாட்றீங்க..இதான் உங்க தரப்போட பிரச்சனை... //

  இது கொழுப்பு தானே ......நாங்களே ஆண்களுக்கு சம உரிமை குடுக்கலாமா வேண்டாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கோமாம்......இதுல இப்படி ஒரு buildup ஆ........இது உங்களுக்கே ஓவரா இல்ல..... :)

 83. இவ்ளோ நாளா எப்படி மிஸ் பண்ணினேன்.. ! good one! :)