- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 32 comments and to commentநீங்களே கேளுங்க சார் இந்த நியாயத்த...நம்ம கஷ்டப்பட்டோம்...படிச்சோம்...வேலைக்கு வந்தோம்...சம்பாரிச்சோம்..நம்ம அம்மா அப்பாவ சந்தோசமா வெச்சு பார்த்துக்கறோம்...ஆனா இந்த ஆள் யாருங்க இடைல...இவருக்கும் நமக்கும் என்னங்க சம்பந்தம்...இவர நம்ம எதுக்குங்க சந்தோசமா வெச்சு பார்த்துக்கணும்...விட கூடாதுங்க...கேள்வி கேக்க ஆளு இல்லைன்னு காலம் காலமா இந்த கொடும நடந்துகிட்ருக்கு...தடுக்க வந்துட்டான் இந்த வெளியூர்காரன்...


மேட்டருக்கு வர்றேன்...வந்தமா பொண்ண கட்டி குடுத்தமா,பீல் பண்ணமா,கண்ண துடைச்சிக்கிட்டு போனமான்னு இருக்கணும்...அதான ஒரு பெரிய மனுஷனுக்கு அழகு...அத விட்டுட்டு வந்து இருந்து தங்கி முணங்கிட்டு போலாம்னு நெனைக்கறது என்னங்க நியாயம்...


எனக்கு இன்னும் பொண்ணே பார்க்கல...ஆனா,பாருங்க அதுக்குள்ளயே எனக்கு என் மாமனார புடிக்கல...ஏன்னு கேளுங்க...எல்லாத்துக்கும் ராவா ஒரு காரணம் வெச்சுருபான் இந்த வெளியூர்க்காரன்..


சிங்கபூர்ல பொண்டாட்டி புள்ளைகளோட ஷாப்பிங் வர்ற ஆம்பள பசங்கள பார்த்துருக்கேன்...அவங்க கூடவே ரெண்டு பழைய பீசுங்க பப்பரக்கானு வேடிக்க பார்த்துகிட்டு பேக்கு மாதிரி வரும்..விசாரிச்சு பார்தீங்கன்னா அது அந்த புள்ளயோட அம்மா அப்பாவா இருக்கும்...கொட்டம்பட்டிலேர்ந்து புளியோதரைய கட்டிக்கிட்டு பொண்ண பார்த்துட்டு போவ வந்துருபாங்கே...அதும் அந்த பய காசுல...இத படிக்கும்போதே உங்களுக்கு எவ்ளோ காண்டாகுது..(ஆகுதுல்ல..ஆகலேன்னா ஆக்கிக்கங்க..என்னா நம்மல்லாம் ஆம்பளைங்க...)நம்ம அப்பனாத்தால மெட்ராஸ் மெரினா பீச்சையே சுத்தி காமிச்சிருக்க மாட்டோம்..இவங்க என்னடான்ன பிளைட் புடிச்சு சிங்கப்பூர் வந்து சுத்தி பார்கறாங்கே..அதுவும் இந்த பய செலவுல...இதுக்கு மூலகாரணம் என்னென்னு யோசிச்சு பார்தீங்கன்னா...அந்த புள்ள மைல்ட் வாய்ஸ்ல நைட் 12.26 க்கு காதுகிட்ட மூச்ச விட்டுகிட்டே ரொமான்டிக்கா கேட்ருக்கும்..என்னங்க என்னங்க...எங்க அப்பா அம்மாவை அழைச்சிகிட்டு வந்து கொஞ்ச நாள் வெச்சுக்கலாமன்னு..நம்ப ஆளும் எதோ பிஸில கான்சென்ட்ட்ரேசன் மிஸ் ஆக கூடாதேன்னு கேள்விய கவனிக்காம ஓகே ஓகேன்னு தலையாட்டிருபான்...


நீங்க பெரிய மனுஷன்...நல்லா நேர்மைய நடுநிலைமையா யோசிச்சு பாருங்க..அவங்கேலுக்கும் நமக்கும் என்னங்க சம்பந்தம்..அவர் பெத்த பொண்ணோட நாம வாழ போறோம்..அவ்ளோதானா...இதுக்கு என் நம்ம இந்த ஆளுக்கு காலம் புல்லா மரியாத கொடுத்துகிட்டு,பார்க்கும்போதெல்லாம் பம்மிகிட்டு...ச்சே...


எங்கப்பா அவர் மாமனார் கால் உடைஞ்சதுக்கு தெருவுல உள்ள எல்லாருக்கும் மெது வடையும் மசாலா பாலும் வாங்கி குடுத்து அந்தர் பண்ணாருன்னா  பார்த்துக்கங்க...எவ்ளோ காண்டுன்னு...நம்பல்ல நெறைய பேர் வெளில சொல்லிக்க முடியாம இருக்காங்கே...இனிமே யாரும் வருத்தபடாதீங்க...வெளியூர்க்காரன் வந்துட்டான்...மாமனாரை சட்னியாகி மெண்டலாய் மாற்றுவோர் சங்கம்னு ஆரம்பிக்கறோம்...உலக அளவுல மாமனரால பாதிக்கப்பட்ட தமிழர்கள ஒன்னு திரட்றோம்..அவங்கே இல்லாத ஒரு புது உலகத்த படைக்கறோம்...


இப்ப என்ன எடுத்துக்கங்க..நான்லாம் ரெண்டே ரெண்டு தடவதான் என் மாமனார பத்தி பேசுவேன்..அது கூட அந்த ஆள்ட்ட இல்ல..என் பொண்டாட்டிக்கிட்ட...மொதோ வாட்டி,கல்யாணம் முடிஞ்சு அடுத்த நாள் "ஏய் நான் கேளம்பறேன்னு ஒப்பண்ட சொல்லிடு..",,,ரெண்டாவது வாட்டி. ஒரு பத்து வருஷம் கழிச்சு....."நல்ல மனுசண்டி.பாவம்..போய் சேர்ந்துட்டாரு" ...அவ்ளோதான்...இதுக்கு மேல அவர பத்தி பேச என்னங்க இருக்கு...


நான் பரவால்லைங்க...என் பொண்டாட்டி ரெண்டு நாள் சோறு போடாம செருப்பால அடிச்சான்னா கண்ணா பின்னானு கோவம் வந்து என் மாமனாருக்கு கால் அமுக்க ஆரம்பிச்சுடுவேன்...ஆனா என் மாப்ள ரியாத் ரிவால்வர் ப்ரியமுடன் வசந்த் அப்டி இல்ல..மானஸ்தன்..போன வாரம் போதைல எனக்கு போன் போட்டு சொன்னான்..அவன் மாமனார் யார இருந்தாலும்...ஒரு நாள் தண்ணி வாங்கி குடுத்து முட்டி போட வெச்சு தலைல ஏறி உக்கார்ந்து நங்கு நங்குன்னு ரெத்தம் வர்ற வரைக்கும் குட்டி சொட்ட மண்டைய உடைக்காம விட மாட்டேன் மச்சின்னு...இது கண்டிப்பா நடக்கும்னு அங்காளம்மன் மேல சத்தியம் வேற பண்ணிருகான்..என் மாப்ள சிங்கம்...சொன்னா செய்வான்..ஆமாம் மச்சி..உனக்கு எதோ பொண்ணு பார்க்கறதா சொன்னியே என்னாச்சுடா.....


மாமனார கூட பரவால்ல சார்..அழகான மச்சினிச்சிக்காக  மன்னிச்சு விட்ரலாம்..ஆனா இந்த மச்சானுவோ பண்ற தொந்தரவு இருக்கு பாருங்க...ச்சே ச்சே ச்சே ...வேலை தேடறேன்னு பேர்வழினு நம்ம வீட்ல வந்து தங்கி டேரா போட்டு ஊற சுத்தரதுலேர்ந்து இவனுக டோட்டல் டார்ச்சர்...2098ல விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தோன்ன இந்த மச்சானுவள நம்ம நாட்ட விட்டு ஒழிக்க சொல்லணும்...அவர் மச்சான்கிட்ட சொல்லி... 


ஒரு நிமிஷம்...எதோ புகையற வாசன வருது...ஒ...எனதருமை தாய்க்குல மேடம்ங்களா...


தாய்க்குலங்களே இருங்க இருங்க அவசரபடாதீங்க...இந்தோ வந்துட்டான் பெண்களின் காவலன் வெளியூர்க்காரன்...
உங்களுக்காக ராத்திரி பகல் பார்க்காம உழைச்சு ஓடா தேஞ்சி ரெத்தத்த சோறாக்கி,வளையல் வாங்கி குடுத்து,சுடிதார் வாங்கி குடுத்து,நம்ம புள்ளயாசும் நம்மள மாதிரி இல்லாம அழகா இருக்கட்டுமேன்னு லிப்ஸ்டிக் எல்லாம் வாங்கி குடுத்த உங்க அப்பாவ..இவங்க மதிக்க மாட்டாங்கெலாம்.சோறு போடா மாட்டாங்கெலாம்...இது கூட பரவால்ல..தலைலே ஏறி சொட்ட மண்டைல நங்கு நங்குன்னு கொட்டுவாங்கேலாம்..அதுவும் ரெத்தம் வர்ற வரைக்கும்...இத கேட்டு எனக்கே கண்ணெல்லாம் கலங்குது...உங்களுக்கு எவ்ளோ கோவம் வரும்...விடாதீங்க...தாய்க்குலம் எல்லாரும் சேர்ந்து மாமனார் வீட்டை மசுரா மதிப்போர் சங்கம்னு ஒன்னு ஆரம்பிங்க...உங்க மாமனார் தூங்கும்போது மூக்குக்குள்ள மூஞ்சுருவ புடிச்சு விடுங்க..மாமியார் கண்னசரும்போது காத கரண்டி வெச்சுடுங்க..மச்சினன் மாமான்னு அவங்க சைடு சொந்தகாரங்க வந்த சொத்துல உப்பை அள்ளி கொட்டுங்க...அவங்க உஸ் பண்ற டூத் பேஸ்ட்ல இச் கார்ட பில் பண்ணி வைங்க..சீப்புல பேன் புடிச்சு விடுங்க.. மண்டயனுக சொரிஞ்சே சாவட்டும்..ஒரு பயல அண்ட விடாதீங்க...அது எப்டிங்க உங்க அப்பாவ அவங்க இப்டி பேசலாம்..உங்க அப்பா யாரு..தெய்வத்துக்கு சமமான உங்கப்பவ அசிங்கபடுதுவங்கே குடும்பத்த எப்டிங்க உங்களால வீட்டுக்குள்ள விட முடியும்...உங்களுக்கும் சூடு சொரன எல்லாம் இருக்குன்னு நீங்க காட்ட வேணாமா...அத்து விடுங்க எல்லா பயலுகளையும்..
அப்பாடா வந்த வேலை முடிஞ்சிடுச்சு...
ங்கொய்யா...நான் மட்டும் தலவானிய கட்டிபுடிசிகிட்டு தனியா தூங்கறேன்..நீங்கல்லாம் மட்டும் எப்டி புருஷன் பொண்டாட்டிய சந்தோசமா இருக்கலாம்..ஒரு பய சந்தோசமா வாழக்கூடாது....ஒன்னு எல்லாம் சேர்ந்து நல்ல தேவர் வீட்டு பொண்ணா பார்த்து எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க...இல்ல புருஷன் பொண்டாட்டி  எல்லாம் தனி தனியா படுத்து தூங்குங்க...அது வரைக்கும் இந்த சமுதாய சீர்திருத்த பணிய வெறித்தனமா தொடருவான் இந்த வெளியூர்க்காரன்...


சில வருடங்களுக்கு பின் வெளியூர்க்காரன்...
புஜ்ஜுமா உங்க அப்பா வாய் கொப்புளிக்க ஆலிவ் ஆயில் கேட்டதா சொன்னீல்ல..பிரான்ஸ் லேர்ந்து இம்போர்ட் பண்ணி வாங்கி வெச்சுருக்கேன்..நாளைக்கு மாமாகிட்ட குடுத்துரு....பாவம் அது இல்லாம ரொம்ப கஷ்டபடுவாறு..அவர் மனசு கஷ்டபட்டா என்னால தாங்கிக்க முடியாது...(ஆமாம் சார்...எனக்கும் கல்யாணம் ஆய்டுச்சு..)


வெளியூர்க்காரன்.

Posted by Veliyoorkaran - - 27 comments and to comment


வடிவேலுவோட காமெடிய கூட சீரியசா மூஞ்ச வெச்சுகிட்டு கோவமா பார்க்கற என் அப்பா,நீ பேசுன பேச்சுல விழுந்து விழுந்து சிரிச்சப்பதாண்ட உன்ன  நான் நிமிர்ந்து பார்த்தேன்.ப்ளூ கலர் செக்டு ஷர்ட், ப்ளாக் கலர் ஜீன்ஸ் போட்டுகிட்டு என்ன பொண்ணு பார்க்க வந்துருந்த..ரொம்ப சுப்பர்லாம் இல்ல...பட்,நல்லா இருந்த...மறுபடியும் ஒரு தடவ நிமிர்ந்து பார்க்க வெக்கற அளவுக்கு...அப்ப நான் சத்தியமா நெனைக்கல,நமக்கு கல்யாணம் ஆகி ஏழு வருஷம் கழிச்சு உனக்கு நான் இப்டி ஒரு லவ் லெட்டர் எழுதுவேன்னு...


உலகத்துலேயே எனக்கு ரொம்ப புடிச்சது எங்க அப்பாவ...ஆனா,கல்யாணம் ஆகி ரெண்டே மாசத்துல எங்கப்பா  பொறந்த நாள் கூட மறக்க வெச்சுடியேடா பாவி...நான் அடுத்த நாள்  எங்கப்பாவுக்கு  போன் பண்ணி  எவ்ளோ அழுதேன் தெரியுமா..என்ன என்னமோ பண்ணிட்ட நீ... !


என்னோட காலேஜ் பிரண்ட்ஸ் எல்லாரையும் வெச்சுகிட்டு கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம நீ எங்கிட்ட ஐ லவ் யூ சொன்னப்ப எனக்கு வந்த கோவத்துக்கு உன் கழுத்த புடிச்சு உள்ள ரூமுக்குள்ள இழுத்துகிட்டு போய் கதவ சாதிக்கணும் போல இருந்துச்சு...எதுகுன்லாம் கேக்காத...


நம்ம ஹனி மூன் போனது,அங்க நீ எனக்கு தம் அடிக்க கத்து குடுத்தது..என்ன போட்டு பாடா படுத்தினது...என் பர்த்டே பிரசன்ட்னு நீ குடுத்த அந்த கிப்ட்..(அசிங்கம் புடிச்சவன்டா  நீ..எப்டி அதெல்லாம் யோசிச்ச....!) உனக்கு மட்டும் எப்டி தோணுது .இப்டியெல்லாம் குறும்பு பண்ண... வாலு பயலே .இந்த ஏழு வருசத்துல என்னவெல்லாம் பண்ணிருக்க....


எங்கம்மா என்ன தொட்டு பேசுனா கூட எனக்கு புடிக்காது...பாவி பயலே..கல்யாணம் முடிஞ்சு மூணு மாசத்துல என்ன என்னேனல்லாம் பண்ண...அப்போல்லாம்,என்ன கண்ணாடில பார்க்க எனக்கே எவ்ளோ கூச்சமா இருந்துச்சு தெரியுமா...


எங்கப்பா என்ன பார்க்க ப்ளைட்ல  வந்தப்போ,"ஒப்பன் வந்துட்டான் போல..இவ்ளோ நேரம் அழகா இருந்த ஏர்போர்ட் திடீர்னு சூனியம் புடிச்ச மாதிரி இருக்குனு சொல்லி என்ன நீ சிரிச்சுகிட்டே அழ வெச்சது..."உன்னால மட்டும் ஒரு நாளைக்கு 25 மணி நேரம் ஜோக் அடிக்க எப்டிடா முடியுது.. யார்கிட்டடா கத்துகிட்ட..இப்டி காமெடி பண்ணியே என்ன கவுக்கற வித்தைய....


எவ்ளோ தண்ணியடிச்சிட்டு மட்டையானாலும் என் அப்பாவ கிண்டல் பண்றப்ப மட்டும் உடனே தெளிவா பேசுறியே எப்டிடா அது...இனிமேவாச்சும், எங்கப்பாவ அவன் இவன்னு சொல்லாதடா ப்ளீஸ்..


நமக்கு குழந்த பொறந்தப்போ நீ உங்கம்மா கைய புடிச்சிகிட்டு தேம்பி தேம்பி அழுதியாமே...எங்க அத்த சொன்னங்க...அத கேட்டோன்ன, எனக்கும் அழுக வந்துடுச்சு தெரியுமா..என்ன உனக்கு அவ்ளோ புடிக்குமாடா...?


ம்..சொல்ல மறந்துட்டனே...நம்ம கல்யாணத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி நீ எங்க வீட்டுக்கு வந்தப்போ,ஒரு கிஸ் குடுக்கறதுக்கு வேர்த்து விட்டு  ,உளறி கொட்டி ,பயந்து நடுங்குன நீ,இப்ப எப்டியெல்லாம் மாறிட்ட..ராட்சஷா..(நீ அன்னிக்கு கிஸ் கொடுப்பேன்னு நான் எவ்ளோ எதிர்பார்த்தேன் தெரியுமா...நீ பாட்டுக்கும் பெரிய மயிர் மாதிரி நல்லவனாட்டம் போய்ட்ட...ச்சே,உன்னோட சேர்ந்து சேர்ந்து எனக்கும் கேட்ட வார்த்தையெல்லாம்  வருது...)


உன்கிட்ட எனக்கு புடிக்காதது ஒன்னே ஒண்ணுதாண்டா..கோவம் வந்தா வெளில காமிக்காம உள்ளேயே வெச்சுக்கறது..இப்போ உன் மகளும் அப்டியேதான் பண்றா...உன்கூட ஒருதடவையாவது கண்ணா பின்னான்னு சண்ட போடணும்னு ரொம்ப ஆசையா இருக்கு...கொஞ்சம் கோவப்படேன்...


ஆனா உன் பொண்ணு வந்தோன்ன என்ன நீ முன்னாடி மாதிரி கவனிக்க மாட்ரடா..ஜாடமாடையா கேட்டா,இது நான் பெத்த பொண்ணு,கொஞ்சறேன்.எவன் பெத்த பொண்ணையோ நான் எதுக்கு கொஞ்சனும்னு நக்கல் வேற..அவ வர்றதுக்கு முன்னாடி தெரிலையா நான் எவன் பெத்த போன்னொன்னு... இரு என்னிக்காச்சும் கெஞ்சுவ அன்னிக்கு வெச்சுகறேன்..


ஆனா இதுவரைக்கும் யாரையும் நான் லவ் பண்ணதில்லன்னு நீ சொல்றததான் என்னால நம்பவே முடிலடா...நீ பேசுற பேச்சுக்கு கண்டிப்பா மாட்டிருபாளுகளே....


ஆமாம்,எப்போதுமே ஜோக் அடிச்சிட்டு இருக்கற நீ இப்பல்லாம் அப்டி இல்லையே ஏன்டா..ஒரு வேலை,நமக்கும் வயசாவுதோ...


உன்னோட வாழ்ந்த இந்த வாழ்க்கைய மறுபடியும் ஒரு தடவ வாழணும்னு ஆசையா இருக்குடா...முத்திக்குட்டி...ப்ளீஸ்டா...என்ன மறுபடியும் ஒரு தடவ பொண்ணு பார்க்க வர்றியா...


I love you-by Sainthavi.

எழுதுன லெட்டர மனசுக்குள்ள ஒரு தடவ படிச்சு பார்த்து சிரிச்சிட்டு ,பக்கத்துல அவன் பெத்த பொண்ண கட்டிபுடிச்சு தூங்கிட்டிருந்த சிபிய ஓரக்கண்ணால ரசிச்சிகிட்டே,எப்டி ரொமாண்டிக்கா இந்த லெட்டர இவன்ட்ட குடுக்கலாம்னு யோசிக்க ஆரம்பிச்சா சைந்தவி..மணி 3.47னு வெளில இருட்டுகிட்ட கடலை போட ஆரம்பிச்சது நிலா....சைந்தவி புருசனோட பதில் காதல் கடிதம்...


வெளியூர்காரன்  

(நாங்களும் சிறுகதை எழுதுவோமுள்ள...)

Posted by Veliyoorkaran - - 10 comments and to comment


ச்சில் பியர் மாதிரி சென்னை...நறுக்குன்னு நாலு பிரண்ட்ஸ்...பறக்கறதுக்கு பல்சர்...சினிமா,பீச், ECR ,மாயஜால்னு வெளியூர்காரன் லைப்ல திடீர்னு உள்ள வந்து யு டேர்ன் அடிச்சு திரும்பி போன சாக்லேட் தருணங்கள்...நெனைக்கரப்பவே மனசுக்குள்ள ஜில்லுன்னு ஏசீ போட்ட மாதிரி குளிர வெக்கற அந்த ஐஸ் கிரீம் வினாடிகள்...அந்த ஐஸ் க்ரீமோட செர்ரிஸ்..வெளியூர்காரனோட கேர்ள் பிரண்ட்ஸ்..

ஆமாம்க...எல்லா பசங்களுக்கும் படியளக்கற சென்னை...எனக்கும் அளந்துச்சு...சில ஹைக்கூ கவிதைகள...மௌனராகம் கார்த்திக்கோட சந்திரமௌலி ஸ்டைல்ல கொஞ்சம்,மோகனோட ஓவர் ஆக்டிங்ல கொஞ்சம்னு ஒரு மாதிரியா கலந்து கட்டி பெர்பார்ம் பண்ணி தலைகீழ நின்னு தண்ணிகுடிச்சு குட்டிகரணம் அடிச்சு உஷார் பண்ண ஆண்டவனோட லிமிடெட் எடிசன் அவளுக...

எல்லாத்துக்கும் சிரிச்சிகிட்டே இருப்பா ஒருத்தி...எது சொன்னாலும் சிரிப்பா,ஏண்டி லூசு மாதிரி சிரிக்கிறேன்னு சொன்னா அதுக்கும் சிரிப்பா...அழகா இருக்கேன்னு சொன்னா சிரிப்பா..மழை பெஞ்சா சிரிப்பா..பைக்ல வேகமா போனா பயத்துல சிரிப்பா..அட காபி சூடா இருந்தா சிரிபான்னா பார்துகங்களேன்...மொத்ததுல சிரிப்பா..அவளுக்கு ரொம்ப புடிச்சது சிரிக்கறது..எனக்கு புடிச்சது அவ சிரிக்கறது...அவ சிரிக்கறது நெனச்சு என்ன போர்வைக்குள்ள தனியா சிரிக்க வெச்ச சிரிப்பு பட்டாம்பூச்சி அவ...அதுவும் பூ போட்ட ப்ளூ கலர் சுடிதார்ல அவ சிரிக்கற அழக பார்த்து சிரிச்சிகிட்டே செத்தர்லாம்..பயபுள்ள அவ்ளோ அழகு...

இன்னொருத்தி கண்ணாலேயே கம்பராமாயணம் பேசற பழைய பட்டுபாவடை...புத்திசாளிதனதுனால என்ன ஆச்சர்யப்பட வெச்ச க்யுட்டான பெய்ண்டிங் ..1923 போறந்துருக்க வேண்டியவ...நெறைய பேசுவா..நெறைய அட்வைஸ் பண்ணுவா..அவள பேசவிட்டு கேட்டுகிட்டே இருக்கலாம்..என்ன ஒன்னு..கேட்டுகிட்டு மட்டும்தான் இருக்கலாம்..அவளுக்கு அடுத்தவங்க பேசுன புடிக்காது..அவ்ளோ அகம் புடிச்ச அழகான கழுதை...மூக்குக்கு மேல மட்டும் இல்ல,மூக்குக்கு சைட்ல,மூக்குக்கு பக்கவாட்லனு எல்லா சைட்லயும் கோவம் பொத்துக்கிட்டு வரும்,நான் ரசிச்சு பழகுன திமிர் புடிச்ச ராட்சஷி...அந்த ராட்சசிகிட்ட புடிச்சதே அந்த திமிர்தான்..திடீர்னு ஒரு நாள்,என் ஸ்டேஷன் வந்துடுச்சு நான் ஏறங்கிக்கறேனு சொல்லி விடுவிடுன்னு விட்டுட்டு போய்ட்டா..ஏன் என்ன திடீர்னு புடிக்காம போச்சுன்னு எனக்கு இன்னிக்கு வரைக்கும் தெரியல..

இன்னும் சில பொண்ணுங்க வந்து போனாங்க...சிலர் வந்த வேகத்துல போனாங்க...பார்த்த ரெண்டாவது நாளே ஏன் இன்னும் சாப்டாம இருக்கேன்னு உரிமையா இருக்றதா நெனச்சு நடிச்ச பொண்ணுங்களயெல்லாம் ஏன் புடிக்காம போனுச்சுன்னே தெரில...சட்டுன்னு புடிக்காம போய்டுச்சு...அவளுக பேர் கூட நினைவுல இல்ல..முகமும்தான்....

புடிக்குதோ புடிக்கலையோ...பொண்ணுங்க வேணும்ங்க...வாழ்க்கைய அழகாக்கறது அவங்கதான்..தலைய கோதி விட, சிகரட்ட புடிங்கி எரிய, என்ன வெச்சுகிட்டு இன்னொருத்திய சைட் அடிக்காதடா பொறுக்கின்னு இடுப்புல கிள்ள,எத்தன மணிக்குடா என்ன பார்க்க வருவேன்னு ஏக்கமா கேக்க,பீச்ல வெச்சு காதோரமா மூச்சு விட்டுகிட்டே இன்டர்நேஷனல் பொலிடிக்ஸ் பேசி மனுசன மானாவாரியா குழப்ப,பைக்ல போகும்போது பயத்துல புடிக்கற மாதிரி கட்டிபுடிசிக்க ,செல்லமா குட் நைட் செல்லம்னு மெசேஜ் அனுப்ப,குழந்தத்தனதொட க்யூட்டா ஒரு கேர்ள் பிரென்ட் கண்டிப்பா வேணும்ங்க..

எனக்கு இந்த பொண்ணுங்க மேல இருந்தது காதலா இல்ல நட்பான்னு சொல்ல தெரில...ஆனா,அவங்களுக்கு கல்யாணம்னு கேள்விப்படும்போது ஏன்னே தெரியாம அவங்கள கட்டிகப்போர பசங்க மேல கொஞ்சமா பொறாம வருது...வரக்கூடாதுதான் ஆனாலும் வருது...குடுத்து வேச்சவண்டான்னு மனசு மைல்டா பொலம்புது...

காலம் என்ன அவங்ககிடேர்ந்து பிரிக்கல...பிச்சு போட்டுடுச்சு...ரொம்ப தூரம் போய்டாங்க...இனி பார்ப்பனானு கூட தெரில...எப்பவாவது சென்னை போகும்போது எங்கயாவது பார்துடமாட்டமான்னு மனசு ஏங்கி கண்ணு கண்டிப்பா தேடும்...அடையார் சிக்னல்ல,சத்யம் தியேட்டர்ல,ஸ்பென்செர் பிளாசா சிக்னல்ல,இல்ல ஹாட் சிப்ஸ்ல...இப்டி எங்கயாவது....
கண்டிப்பா பார்க்கணும்...நான் பார்க்கறதா அவங்க பார்க்காம..

அட சொந்த கதைல சொல்ல வந்த மேட்டர சொல்ல விட்டுட்டேன் பாருங்க...லைப்ல நடந்த ஒரு சந்தோசத்த இன்னொரு சந்தோசம் மறக்கடிக்கணும்... அதான் வாழ்க்கை....

அதானால,கல்யாண மூடுக்கு வந்துட்டான் வெளியூர்க்காரன்...

டேய் சொந்தகாரனுகளா...சட்டுபுட்டுன்னு பொண்ண பாருங்கடா டேய்....

வெளியூர்காரன்..