- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 20 comments and to comment


சைந்தவி சிபி...

இந்த பேர படிச்ச உடனே கார்னேட்டோ ஐஸ்க்ரீம காதல்ல கரைச்சு இதயத்துக்குள்ள ஊத்துன மாதிரி இருக்கா..அப்போ நீங்களும் சிபி சைந்தவி ஜோடிய காதலிக்கற காதலர்கள்..உள்ள வாங்க பாஸ்...சிபியையும் சைந்தவியையும் உங்கள்ளுக்கும் எனக்கும்  மட்டும் இல்ல...காதல்னா காரி துப்புர கம்னாட்டிங்களுக்குகூட இந்த காதல் ஜோடிய புடிக்கும்.. ஒரு சின்ன இடைவெளிக்கு பிறகு இவங்க ரெண்டு பெரும் அடிக்க போற ஜாலி கலாட்டகள நீங்க மறுபடியும் ரசிக்க போறீங்க...இந்த பதிவ புதுசா படிக்கறவங்களுக்கு சைந்தவி சிபியா பத்தின ஒரு சின்ன அறிமுகம்..


சிபி :


ஒவ்வொரு வெள்ளிகிழமை காலைலயும் கல்யாணம் ஆகாத பிகருங்க கருக்கல்ல குளிச்சிட்டு ஈரத்தலையோட  சாமி முன்னாடி நின்னு மணிக்கணக்கா வேண்டறது சிபி மாதிரி ஒரு ரொமண்டிக் புருஷன் தனக்கு கெடைக்கணும்கரதுகாகதான்..அதுக்காக ரேபான் க்ளாஸ் போட்டுக்கிட்டு எல்பாசோ வாசனைல கார்ல வந்து எறங்கி இங்க்லீஸ்ல தும்முற ஹை கிளாஸ் டிக்கெட் இவன்னு தப்பா நெனைச்சிறாதீங்க... ரெண்டு கட்டிங் கூட போய்ட்டா இவன் பேசற கெட்ட வார்த்தைல பாரே நாறும்...இன்னும் ரெண்டு கட்டிங் கூட போயிட்டா ஊரையே நாரடிச்சிருவான்...அதே மாதிரி பிகருங்க இவன்கிட்ட பத்து நிமிஷம் பேசுனா போதும்...வீட்டுக்கு போய் நைட் பெட்லேர்ந்து உருண்டு கீழ விளர வரைக்கும் சிரிச்சுகிட்டே இருப்பாங்க...அவ்ளோ ஜோக் அடிப்பான் இந்த ரொமண்டிக் ராஸ்கல்...இந்த கதைய படிக்க போற பசங்களுக்கு சிபிய புடிக்குதோ இல்லையோ...பிகருங்களுக்கு கண்டிப்பா புடிக்கும்...அப்டி ஒரு ரொமாண்டிக் இடியட்...நீயும்தான் இருக்கியே மடசாம்ப்ரானின்னு பசங்க தான் கேர்ல் பிரெண்டுகிட்ட கொமட்டுகுத்து வாங்காம இருக்கணும்னா இந்த கதைய உங்க கேர்ல் பிரெண்ட்ஸ படிக்க விட்ராதீங்க...!


சைந்தவி


இந்த பேர படிச்சோன்னையே சும்மா ஜிவ்வுங்காதா...? அதான் சார் சைந்தவி..சிபிய கல்யாணம் பண்ணிருக்கற பொண்ணு...இல்ல இல்ல..சிபிய கல்யாணம் பண்ணிருக்கரதுக்காக பொறந்த பொண்ணு..இவ ரொம்ப அழகெல்லாம் இல்ல...ஆனா,ஸ்பென்சர்ல  இவ க்ராஸ் பண்ணி போனா கண்டிப்பா ஒரு தடவ திரும்பி பார்க்கலாம்..அப்டி ஒரு அழகு...நம்ம பொண்டாட்டி இப்டி இருப்பாளா அப்டி இருப்பாளான்னு தமிழ்நாட்டு பசங்க மல்லாக்க படுத்து  பைனல் எக்ஸாம்க்கு  மொதோ நாள்  யோசிச்சு வெச்ச எல்லாமாதிரியும் இருப்பா இவ...தங்கமான பொண்ணு...அதுக்காக கொத்தமல்லி சட்னியும் புதினா துவையலும் அரைச்சு வெச்சுகிட்டு புருஷன் எப்ப வருவான்னு வாசலையே பார்த்துகிட்ருக்கற சீரியல் குடும்ப பொண்ணுன்னு நெனைச்சிறாதீங்க...

வெத்தகொழம்பு எவ்ளோ நல்லா வெக்க தெரியுமோ, அத விட நல்லா குவாண்டம் பிசிக்ஸ் தெரியும்...ஹிண்டுல வர்ற க்ராஸ் வேர்ட் பஸ்ஸுல கிட்டத்தட்ட டெய்லி முடிக்கற அளவுக்கு ப்ரில்லியன்ட் பட்டாசு இவ.. வழக்கமா எல்லா ரொமான்டிக் ராஸ்கல்களுக்கும் சாஃப்டான ஒரு ஜோடி தான் கிடைக்கும்ங்கறது ஏ.வி.எம் ஆரம்பிச்ச காலத்துல இருந்து சம்பிரதாயம்! ஆனா இந்த சைந்தவி இருக்காளே... இவ மாதர் குல லஷ்கர் இ தொய்பா....! இவங்க ரெண்டு பேரோட காதல் கலாட்டாவதான் நீங்க இனிமே படிக்க போறீங்க...


இந்த வாலுங்களோட முழு கதையும் தெரியணும்னா இத படிச்சிட்டு வாங்க...Chocolate Pages from Sainthavi

1) I love you-by Sainthavi - Veliyoorkaran


"நிலம் நெருப்பு நீர் சிபி சைந்தவி

Veliyoorkaran & Rettaivals

20 Responses so far.

 1. மாப்ள ரைட்டுய்யா!

 2. என்னா பாஸ் இப்படி ஏமாத்திட்டீங்க, தலைப்ப பார்த்துட்டு 'சைந்தவி' புது போஸ்ட்னு ஓடி வந்தா சின்ன இண்ட்ரோவோட முடிச்சீட்டீங்களே... :)

 3. //இவங்க ரெண்டு பேரோட காதல் கலாட்டாவதான் நீங்க இனிமே படிக்க போறீங்க... விரைவில்

  "நிலம் நெருப்பு நீர் சிபி சைந்தவி" - by Rettaivals.////

  மிகுந்த எதிர்பார்ப்புடன்...

 4. Anonymous says:

  மச்சி ..,வெளியூரு ..,கலைகட்டனும் உன் போஸ்ட்...,வக்காலி சைந்தவிய படிக்கும் போதே ஜிவ்வ்னு ரெண்டு 5000 விட்டா மாதிரி இருக்கியா..,
  சீக்கிரம் ஆரம்பி ..,இது அன்பு கலந்த எச்சரிக்கை .,,,,,

 5. இந்த கந்த சஷ்டி கவசம் படிச்சிருக்கீங்களா?
  எல்லா சாமி பாட்டு மாதிரி இந்த பாட்டு ஒரு வேண்டுதலோ அல்லது வாழ்த்த்துதலோ மட்டும் இல்ல ஒரு மிரட்டலும் கூட.
  முதல் பாதியில் கொஞ்சம் மென்மையா முருகனை வாழ்த்தி padittu,
  ரெண்டாவது பாதில சும்மா டெரர் வாய்ஸ்ல
  முருகன் எப்படி அவங்கள பாதுக்கனும்ன்னு சொல்லிட்டு
  அப்படியே u - turn போட்டு,
  முருகன் எப்படி உங்கள பாத்துக்குவாருன்னு அதே டெரர் வாய்ஸ்ல சொல்லுவாங்க...
  இது ஒரு அழகான டேம்ப்லடே, இதவச்சு ஒரு நல்ல காதல் சஷ்டி கவசம் எழுதுங்க....
  // சூலமங்களம் சகோதரிகள் மட்டும் கேளுங்க, மத்தது எல்லாம் ரொம்ப மென்மையா இருக்கும்....
  http://www.youtube.com/watch?v=Y9NH9vhQL1w&feature=related

 6. அனு says:

  //என்னா பாஸ் இப்படி ஏமாத்திட்டீங்க, தலைப்ப பார்த்துட்டு 'சைந்தவி' புது போஸ்ட்னு ஓடி வந்தா சின்ன இண்ட்ரோவோட முடிச்சீட்டீங்களே... :)//

  repeattu :(

 7. இன்னா பாஸ் நீங்க? ஒரே ஊர்லகீறோம்...இம்மா நாள் படிக்காம பூட்டேனே இதெல்லாத்தையும்?.. அல்லாத்தையும் ஒரே தம்முள முடிச்டேம்பா... சோக்காகீதுப்பா...இதுக்கோசராமாவது என்க்கே இன்னொரு தபா பொண்ணு பார்த்து கல்லாணம் கட்டிக்கலாம் போல கீதுப்பா. :))

 8. இதன்மூலம்...வெளியூர், இன்னும் உயிருடன் உலாவிக்கொண்டு இருக்கிறார் எனபதை.. மகிழ்வுடன் ஊர்ஜிதப்படுத்திகிறோம்..
  :-)

 9. @@@@பட்டாபட்டி.... said...
  இதன்மூலம்...வெளியூர், இன்னும் உயிருடன் உலாவிக்கொண்டு இருக்கிறார் எனபதை.. மகிழ்வுடன் ஊர்ஜிதப்படுத்திகிறோம்..///

  யோவ் பட்டாப்பட்டி...நீ இன்னும் சாகலையா....அப்போ பின்லேடன் வீட்ல அமெரிக்க படைக்கு கெடைச்ச கிழிஞ்சு போன பழைய பட்டாப்பட்டி யாரோடதுயா...? :)

 10. @@@வைகை said...
  என்க்கே இன்னொரு தபா பொண்ணு பார்த்து கல்லாணம் கட்டிக்கலாம் போல கீதுப்பா.///

  உன் தலையெழுத்து...யாரால என்ன பண்ண முடியும்..போ மச்சி..போய் பண்ணிக்கிட்டு சாவு..!:)

 11. @@@அனு said...
  repeattu :( ///

  ரிப்பீட்டா...?
  இந்த வடை போச்சே...மீ தி பர்ஸ்ட்டு...இதெல்லாம் போடல...??

 12. @@@சிவமஞ்சுநாதன் said...
  இது ஒரு அழகான டேம்ப்லடே, இதவச்சு ஒரு நல்ல காதல் சஷ்டி கவசம் எழுதுங்க....///

  ஹலோ...என்ன அட்வைஸ் குடுத்துட்டு கெளம்ப பார்க்றீங்க ..?
  போங்க போய் அடுத்த பார்ட்ட எழுதுங்க...! :)

 13. @@@பனங்காட்டு நரி said...
  சைந்தவிய படிக்கும் போதே ஜிவ்வ்னு ரெண்டு 5000 விட்டா மாதிரி இருக்கியா..,///

  யோவ் பட்டாபி, இவன்ட்ட ரெண்டு பீருக்கு காச வாங்குயா...நாமலே ஓசில குடிக்கற நாய்ங்க..இவன் நம்மல்டையே ஆட்டைய போட பார்க்கறான்..! :)

 14. @@@மாணவன் said...
  என்னா பாஸ் இப்படி ஏமாத்திட்டீங்க, தலைப்ப பார்த்துட்டு 'சைந்தவி' புது போஸ்ட்னு ஓடி வந்தா சின்ன இண்ட்ரோவோட முடிச்சீட்டீங்களே...//

  அவ்ளோதான போட்டுட்டா போச்சு...!
  ( உஸ்ஸ்...டேய் ரெட்டை இவங்கே பாட்டுக்கும் ஈசியா கேட்டுட்டு போயறாங்கே...யோசிச்சு யோசிச்சு எழுதி முடிக்கறதுக்குள்ள மண்டை கிறுகிறுத்து மூளை ஒரு சைடா இழுத்துக்கறது நமக்குதான் தெரியும்...) :)

 15. @@@விக்கியுலகம் said...
  மாப்ள ரைட்டுய்யா!///

  அப்பாசுக்கு புல் ஷேவிங் பண்ணா மாதிரி இருக்காரே...? யாருயா இது...உன் ப்ரோபைல் போட்டோல..? :)

 16. vijay.s says:

  veliyoorkaran...singapore la enga irukinga...naan, inga vandhu 10maasam aachu...if possible,naama nera meet pannalam...unga blog oru rendu varusham padikaren...off late, romba naala neenga ezhuthala...take care

 17. vijay.s says:

  unga saindhavi/sibi kadhal thodar is too good... kindling the hormones/romantic thoughts in the reader's mind... ur humourous sense is too good... pls write more...take care

 18. love to read sibi &saindhavii., very intresting and romantic.,ennakum ippadi oru live irukku., athu kalyanathil mudinthal saindhavi poola en hubby aa nesikka aasai padikirean .,

 19. @@@shanthi priya says:
  love to read sibi &saindhavii., very intresting and romantic.,ennakum ippadi oru live irukku., athu kalyanathil mudinthal saindhavi poola en hubby aa nesikka aasai padikirean .,////

  நல்ல விஷயம்ங்க...!! சந்தோசமா லவ் பண்ணுங்க....!! உங்க சிபிய ரொம்ப விசாரிச்சதா சொல்லுங்க...!! ( ச்சே...எந்த பொண்ணாச்சும் வந்து வெளியூர்காரன் வெளியூர்காரன்...நான் உங்கள "ஐ லவ் யூ" பண்றேன்னு சொல்லும்னு பார்க்கறேன்...!! எல்லாம் கம்மிட் ஆனதா வருதுகப்பா...) :)

 20. @@vijay.s says:
  unga saindhavi/sibi kadhal thodar is too good... kindling the hormones/romantic thoughts in the reader's mind...//

  யோவ் பட்டாப்பட்டி..ஏன்யா இந்த பயலுக கமெண்ட் போட்டா மட்டும் திரும்ப ரிப்ளை பண்ணனும்னே தோன மாட்டேங்குது...ஆனா, புள்ளைகளுக்கு உடனே பண்ணனும்னு தோணுது...!! சம்திங் இஸ் fundamentaly wrong..!! :)