- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 59 comments and to comment


தேர்தல் முடிவுகள் வந்துருச்சு . முந்தா நேத்து கலைஞர் பதவி விலகிட்டாரு .அம்மா நாளைக்கு பதவி ஏத்துக்க போவுது...இன்னிக்கு இருக்கோம் பார்த்தியா...கலைஞரும் இல்லாம ஜெயலலிதாவும் இல்லாம..இதான் ஓய் மக்கள் எதிர்பார்க்கற ஆட்சி.. புது அரசு பதவி ஏத்துக்கறதுக்கு முன்னாடி தமிழக அரசியல் கட்சிகளுக்கும் அப்டியே வோட்டு போட்ட மக்களுக்கும் ஒரு சில வார்த்தைகள்...! 

பாமக

எல்லாம் பிச்ச எடுப்பாணுக..இவனுக பிச்சைக்காரன்கிட்டையே  பிச்சை எடுக்கற பனாதிங்க..ஏண்டா இப்டி சீட்டுக்காக பிச்ச எடுக்கறீங்கன்னு  கேட்டா, கோச்சுகினு அடுத்த கட்சிக்கு போய் நாராசமா பிச்ச எடுப்பாணுக..ரெண்டு சீட் கூட குடுத்தா ராஜபட்சேகிட்ட கூட கூட்டு வெக்கற அரசியல் கோமாளிங்க இந்த டோமருங்க...மத்திய சர்க்கார்ல காங்கிரஸ் முதுகுல சவாரி பண்ணி பதவிய அனுபவிச்சுக்கிட்டு குளிர் காய்ஞ்ச இவனுகள கடந்த நாடாளுமன்ற தேர்தல்ல மக்கள் கழுவி ஊத்தி மாநில கட்சியா ப்ரொமோட் ஆக்கி, இப்போ சட்டமன்ற தேர்தல்ல படுகேவலமா தோக்கடிச்சு பாமக வெத்து ஜாதி கட்சிங்கறத உணர்த்திட்டாங்க...!

திமுககாரனாவது சினிமாக்கு கதை எழுதறேன்...சீரியல் எடுக்கறேன்னு அடுத்த அஞ்சு வருசத்தை ஓட்டிருவான்...காங்கிரஸ்காரன் யார் தலைவர்னு சண்டை போட்டே ஓட்டிருவான்...மரத்த வெட்டி ரோட்டுக்கு குறுக்க போட்டு மறியல் பண்றத தவிர உனக்கு வேற என்னா மயிர  தெரியும்..இனிமே அதையும் பண்ண முடியாது...அம்மா அப்புடியே லாரிய ஏத்தி பூரா பயலையும் கொன்னுட்டு  கேஸே இல்லாம பண்ணிரும்..

உன் தலைவன் ராமதாசுக்கு ஒன்னே ஒன்னு சொல்லிகறேன்...யோவ் ராமு..பேசாம கட்சியா கலைச்சிட்டு போயஸ் கார்டனுக்கு வாட்ச் மேனா போய்யா...ஆனா நீ அதுக்கு கூட லாயக்கு இல்ல..! கொஞ்ச நாள் வேதா இல்லத்துல வேலை பார்த்துட்டு அடுத்த மாசம் பக்கத்து தெருவுல ரஜினி வீட்ல போய் வேலை பார்ப்ப...!

காங்கிரஸ்

தமிழ்நாட்ல நான் காங்கிரஸ்காரன்னு சத்தமா சொல்றது, நான் டி ராஜேந்தர் ரசிகன்னு சத்தமா சொல்லிக்கற மாதிரி...கேக்குறவன் பொசுக்குன்னு அதால சிரிச்சிருவான்...மானம் இல்லாதவன் திமுகல இருப்பான்..சொரணை இல்லாதவன் அதிமுகல இருப்பான்..ஆனா மானம் சூடு சொரணை வெக்கம் இப்டி எந்த கருமாதியும் இல்லாத எடுபட்ட நாய்ங்க தமிழக காங்கிரஸ்ல இருக்கும்..ஸ்ரீலங்காவுக்கு குண்டாடா குடுக்கறீங்க..குண்டு..குந்தானிங்களா..இனிமேதாண்டா இருக்கு உங்களுக்கு...!

விடுதலை சிறுத்தைகள்

ஈழ பிரச்சனைல நீங்க ஆடுன டபுள் கேமுக்கு இந்த தேர்தல்ல தோத்துருவீங்கன்னு தெரியும்...ஆனா இவ்ளோ கேவலமா தோப்பீங்கன்னு  எதிர்பார்க்கல...செத்த பாம்ப என்னத்த அடிக்க..போங்க..போய் மிச்சம் இருக்கற உங்க வாக்கு வங்கிய காப்பாத்திக்கங்க...அதுக்கும் இந்நேரம் தேமுதிக ஸ்கெட்ச் போட்டாலும் போட்ருபாங்கே...!

தேமுதிக

சில வருடங்களுக்கு முன்னாடி திரை உலகத்தினர் கலைங்கருக்கு பாராட்டு விழா எடுத்தப்போ மேடைல பேசகூட தெரியாம நீங்க உலருனத  பார்த்து நக்கலா சிரிச்ச கலைஞர், சத்தியமா அப்போ நெனைச்சு கூட பார்த்துக்க மாட்டாரு...சட்டசபைல எதிர்க்கட்சி அந்தஸ்த கூட உங்ககிட்ட பறிகுடுத்து அனாதையா கடைசி வரிசைல உக்கார போறோம்னு..திராவிட கட்சிகளின் ஆக்ரமிப்புல இருந்த தமிழக அரசியல் வரலாறுல நீங்க பண்ணது ஒரு அதிசயம்...போன தேர்தல்ல தனி மனிதரா சட்டசபைக்கு போனீங்க..இப்போ இருபதில் ஏழு பேரோட எதிர்க்கட்சி தலைவரா...நாளை...? வாழ்த்துக்கள் விஜயகாந்த்..

அதிமுக

சீமான், வைகோ, நெடுமாறன் வகையறாக்கள், இனிமே ஈழ தமிழர்கள பத்தி பாத்ரூம்ல கூட சத்தம் போட்டு பேச முடியாது...பேசலாம்னு நெனைச்சாலே அம்மா ரிவிட் வெச்சிரும்...மக்கள் ஒரு குடும்பத்தோட மன்னராட்சிய முடிவுக்கு கொண்டு வந்து ஒரு சர்வாதிகாரிகிட்ட ஆட்சிய குடுத்துட்டாங்க..இனி ஒரு பய திமுக கரை வெட்டி கட்ட முடியாது தமிழ்நாட்ல...அம்மா வெரட்டி வெரட்டி அடிக்கும்...எல்லா உடன்பிறப்புகளும் கட்சி கரை வேட்டிய சலைவைக்கு  போட்டு,நல்லா அழகா  மடிச்சு பீரோகுள்ள அடிக்கி வெச்சு, பீரோவ பூட்டி சாவிய கடல்ல தூக்கி போட்ருங்க... இப்போ நீங்க தோத்த கேவலத்துக்கு, அனேகமா இனிமே உங்களுக்கு அந்த சாவி தேவையேபடாது...!

மக்கள்

என்னா பார்க்கற...இப்ப என்ன உனக்கு ஒருத்தனே தமிழ்நாட்ல சம்பாரிக்க கூடாது அவ்ளோதான...விடு இப்போ ஊழல் பண்ண வேற ஆள் வந்துருச்சு...நீ போய் உன்னோட இந்த மாச கிரெடிட் கார்ட் பில்லுக்கு எப்புடி பணம் கட்டலாம்னு யோசி...அத விட்டுட்டு இவனுக நல்லது பண்ணுவானுக நாம நல்ல சிறப்பா வாழ்ந்து வரலாறு படைப்போம்னு கனவு கண்டீன்னா திமுக கதிதான் உனக்கும்...,

என்னது என்னாவா...,

குமிஞ்சு முட்டிய  நக்கிகினே போவேண்டியதுதான்..! 

வெளியூர்க்காரன்

There was an error in this gadget