- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 91 comments and to comment
பெயர் : பட்டாப்பட்டி


வயசு   :அது ஒண்ணுதான் கேடு இந்த டோமருக்கு


புடிச்சது : ரொம்ப நாளா ஒரே எடத்துல உக்காந்து கக்கா போறது 


புடிக்காதது : இந்த வெண்ணைக்கு  என்ன புடிக்குதுன்னு இதுக்கே தெரியாது.. 


பொழுதுபோக்கு : மூட் அவுட் ஆனா கலைஞர் ராசா கனிமொழி சோனியா  இவங்க நாலு பேரையும் இழுத்து போட்டு கழுவி கழுவி ஊத்தறது...(அதாம்பா வாரி வாரி வண்ட வண்டையா வழிச்சு கொட்றதும்பாங்கள்ள..) 


பிடித்த அரசியல் கட்சி : யாரு டீ வாங்கி குடுக்கறாங்களோ அந்த கட்சி..டீ செரிச்சோன்ன வாங்கி குடுத்தவனையும் திட்டுவான்..


பிடிக்காத கட்சி : இவனுக்கு எந்த அரசியல் கட்சியையும் புடிக்காது...ராணுவ ஆட்சிக்காக  போராடிகிட்ருக்கான்..


பிடிச்ச நடிகை : நடிகை சோனா...(ஆனா சோனா ஏன் ஆஸ்ட்ரேலியா போனாங்கரத மட்டும் யார் கேட்டாலும் சொல்லமாட்டான்...).


பிடிக்காத நடிகை : அனுஷ்கா (நமக்கு கெடைக்காம போய்ட்டாளேன்னு வைத்தேரிச்சல்தான்.)


பிடித்த நடிகர் : விஜயகாந்த் ( சபரி படம் பார்த்ததுலேர்ந்து ...) 


புடிக்காத நடிகர் : விஜயகாந்த்.. (நான்தான் முன்னாடியே சொன்னேன்ல..இவன் கொஞ்சம் லூசுன்னு..)


இவனோட பலம் :யார பத்தியும் கவலைபடாம பதிவெழுதறது...கமெண்ட்ல தெனாவெட்டா பேசறவங்கள மசுரா போச்சுன்னு அங்கேயே வெச்சு மெதிக்கறது...


இவனோட பலவீனம் : பதிவெழுதறேன்ங்கற  பேர்ல படிக்கறவன மெண்டலாக்கறது.. 


புடிச்ச பத்திரிக்கை : கக்கூஸ் பேப்பர் 


சமிபத்திய சாதனை :இணையத்துல இருக்கற  திமுக வோட வோட்டு வங்கிய ஒரு குறிப்பிட்ட அளவு குறைச்சது..


நீண்ட கால சாதனை : என்ன எழுதறோம்னு தெரியாம எதாச்சும் எழுதி தொடர்ந்து வாரி கொட்றது...

அடுத்த பயோடேட்டா கூடிய விரைவில்..!

(சைந்தவி பக்கங்கள்ல போன பதிவுல இவனுகள மொக்கை போட விடாம தடுக்கறதுக்கு என்னனென மொள்ளமாரித்தனம் பண்ண வேண்டிருக்கு....)

வெளியூர்க்காரன் 

Posted by Veliyoorkaran - - 50 comments and to comment

எனக்கு பெருசா எதுவும் வேணாம்டா..நீ சாப்டும்போது உன் கைய்யால  ஆசையா ஒரு வாய் எனக்கு ஊட்டிவிடு..எனக்கு அது மட்டும் போதும்..காலம் புல்லா உன்னோட வாழ்ந்துட்டு ஒரு நாள் சந்தோசமா செத்து போயிருவேன்..ஜீன்ஸ் டி.ஷர்ட் போட்டுக்கிட்டு என் சைந்தவி ஒரு நாள் என் கண்ணபார்த்து  சொன்னப்போ எனக்கு ஒரு விஷயம் தோனுச்சு..ஜீன்ஸ் டி ஷர்ட் போட்டுக்கிட்டு பொண்ணுங்க என்னதான் மாடர்னா காமிச்சுகிட்டாலும் பொண்ணுங்க பொண்ணுங்கதான்னு...மனசுக்கு புடிச்ச புருசன ஒரு பொண்ணால காதலிக்க முடிஞ்ச அளவுக்கு ஒரு பையனால தான் காதல் பொண்டாட்டிய காதலிக்க முடியாதுன்னு...சைந்தவி அவ காதலால என் காதல தோக்கடிச்சுகிட்டே இருக்கா...ஒவ்வொரு தடவையும்...!

வாழ்க்கை அழகு பாஸ்...அதுவும் சைந்தவிங்க கெடைச்ச எல்லா சிபிக்களுக்கும் வாழ்க்கை சொர்க்கம்..!

என் சைந்தவியும் பாப்புவும், பாப்புவோட ஸ்கூல் லீவுக்காக ஊருக்கு போயிருக்காங்க...பதினைஞ்சு நாள் என்ன தனியா விட்டுட்டு போயிருக்காங்க..யார்கிட்டயும் சிரிச்சு பேச புடிக்கல...கிரிக்கெட் மேட்ச் பார்க்க புடிக்கல...பாப்புவோட வெளாட்னும்போல இருக்கு...எப்ப பார்த்தாலும் லேப்டாப் நோண்டறத விட்டுட்டு நான் பேசறத கொஞ்ச நேரம் கேள்றா எருமைன்னு சைந்தவிகிட்ட திட்டு வாங்கணும் போல இருக்கு..தண்ணியடிக்கரத   தவிர வேற எதுவுமே புடிக்கமாட்டேங்குது..(ச்சே கடைசி வரில தக்காளி வெளியூர்க்காரன் உள்ள வந்துட்டான்..டேய் வெளில போடா டேய்...)


என் சைந்தவி ஊருக்கு போய் அஞ்சு நாளாகுது...அவள பார்க்கணும் போல இருக்கு..போன வாரம் ஏண்டி அந்த ப்ரேஸ்லெட்ட தொலைச்சன்னு அவள வம்புக்கு சண்டைக்கு இழுக்கணும் போல இருக்கு...ஏண்டி டிஸ்கவரி சேனல் பார்க்கரப்பல்லாம் எனக்கு உங்க அப்பா ஞாபகம் வருதுன்னு அப்பாவித்தனமா கேட்டு அவள கடுப்பேத்தனும் போல இருக்கு..நான் தூங்கரத அவ ரசிச்சு பார்க்கறத நான் தூங்காம இருந்து ரசிக்கணும் போல இருக்கு..அவ டிரஸ் பண்ணும்போது பக்கத்துலையே இருந்து அவ சிரிக்க சிரிக்க கமென்ட் அடிக்கணும் போல இருக்கு... இப்ப அவளும் என்ன கண்டிப்பா மிஸ் பண்ணுவாளா இருக்கும். !

என் சைந்தவிய நான் குழந்தைலேர்ந்து பார்த்து பார்த்து வளர்க்க முடியலயேங்கற வருத்தம் எனக்கு இருக்ககூடாதுங்கறதுக்குத்தான் என் சைந்தவியே வந்து எனக்கு மகளா பொறந்துருக்கா போல..அதே அழகு கண்ணு..கொழு கொழு கன்னம்..என் பாப்புவ பார்த்துகிட்டே இருக்கலாம் தெரியுமா...நான் இல்லாம ஊர்ல எவ்ளோ கஷ்டபட்றாலோ  தெரில..அப்பாவ பார்க்கணும்.. என்னை என் அப்பா வீட்டுக்கு கூட்டிட்டு போங்கன்னு சைந்தவிக்கிட்ட அழுதுகிட்டே இருக்காலாம்.. அவ குட்டி பொண்ணு...அவங்கம்மாகிட்ட கேட்ருவா.. நான் யார்கிட்ட போய் கேப்பேன்..என் பாப்புவ பார்க்கணும்..என்னை கூட்டிட்டு போங்கன்னு..!

மனசுக்கு புடிச்சவங்கள பிரியற பிரிவு ரொம்ப கொடுமை பாஸ்...அது பதினைஞ்சு வருசமா இருந்தாலும் சரி..பதினைஞ்சு நாளா இருந்தாலும் சரி..!

ஒரு நிமிஷம் இருங்க சார்..நான் போய் பாப்புகிட்டையும் சைந்தவிகிட்டையும் ஒரு வார்த்தை பேசிட்டு வந்துடறேன்...என் தங்கபவுனு சாப்ட்டாலா  என்னனு தெரில..பேசி அஞ்சு மணி நேரம் ஆச்சு...!

என் குரலை கேக்கலைனா என் பாப்பு சாப்ட மாட்டா...!


வெளியூர்க்காரன் 


@சைந்தவி கெடைச்ச சிபிக்களுக்கு.//


நீங்களும் ஒரு தடவ உங்க சைந்தவிகிட்ட எதேச்சையா சொல்ற மாதிரி இன்னிக்கு ஒரு தடவ ஐ லவ் யு சொல்லிருங்க...எல்லா சைந்தவிங்களுக்கும் தான் புருஷன் தன்கிட்ட அடிக்கடி  ஐ லவ் யு சொல்றது ரொம்ப புடிக்கும்...கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆய்ருந்தா கூட...!


@சைந்தவி கெடைக்காத சிபிக்களுக்கு.//


சனியனே..உனக்கெல்லாம் அட்வைஸ் ஒரு கேடா...போ போய் எந்த கருமத்தயாச்சும் குடிச்சுபுட்டு வீட்டுக்கு போய் அக்கா மேல கை படாம குப்புற படுத்து தூங்கிரு..ஏதும் சில்மிஷம் பண்ணி எழுப்பிகிலுப்பி விட்டு அடி வாங்கிறாத எழவு..! 


வெளியூர்க்காரன் 

There was an error in this gadget