- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 35 comments and to comment


யானை தன் தலைல தானே மண்ணை வாரி போட்டுக்கும்னு கேள்விபட்ருக்கேன் ..ஆனா, மண்ணை மட்டும்ல இப்ப இருக்கற ஒரு யானை கல்லறையவே தனக்குதானே கட்டிக்கும்ங்கரத நேர்ல பார்த்துட்டேன்...வணக்கம் ஜெயலலிதா..நீங்க பன்னத பைத்தியகாரதனம்னு சொல்லி பைத்தியகாரங்கள கேவலபடுத்த நான் விரும்பல...அவங்க சில சமயமாச்சும் புத்திசாலித்தனமா நடந்துக்குவாங்க...! இப்டி லட்டு மாதிரி அமைஞ்ச கூட்டணிய கலைய விட்டுட்டு வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க மாட்டாங்க.. !

துக்ளக் சோ ராமசாமியோ , மைத்ரேயனோ, இல்ல நீங்க அன்னவுன்ஸ் பண்ணுங்க.கிரகம் நல்லாருக்கு...எல்லா தொகுதிலயும் அதிமுக கண்டிப்பா ஜெயக்குதுன்னு உங்களுக்கு அரசியல் ஆருடம் சொன்ன ஜோசியக்காரனோ வோட்டு போட போறதில்ல மேடம் உங்களுக்கு..மக்களும் உங்களையே நம்பிகிட்ருக்கற  தொண்டனும்தான்.. நேத்து வெச்சு அடிச்சீங்க பார்த்தீங்களா செருப்பால..தமிழ்நாட்ல இருக்கற ஒவ்வொரு அதிமுககாரனும் இப்ப என்ன பண்றதுன்னு தெரியாம மனசுக்குள்ள புளுங்கிகிட்டு செத்து போய் கெடக்குறான்.. அட விடுங்க..நீங்க என்னிக்கு தொன்டன பத்தியெல்லாம் கவலைபட்ருகீங்க..!

கூட்டணி கட்சிகளை நீங்க செருப்பால அடிக்கறதும் அவனுக கோச்சுகிட்டு போறதும், அடுத்த எலெக்சன்ல மறுபடியும் வந்து உங்க காலுல விழுகறதும் தமிழக அரசியல்ல மிக சாதாரணமான ஒரு நிகழ்வு..உங்க கோண புத்தி அதாங்கறது இங்க இருக்கற எல்லாருக்குமே தெரியும்..ஒரு கூட்டணிய கூட ஒழுங்கா நிர்வகிக்க தெரியாத ஒரு பொம்பள எப்புடி அரசாங்கத்த நிர்வகிக்க போறாங்கற கேள்விய கூட விட்டு தள்ளுங்க..,

உங்களையே நம்பி ஒரு மனுஷன் நீங்க செரமபடரபல்லாம் பக்கபலமா கூடவே இருந்தாரே..மேடைக்கு மேடை அன்பு சகோதரி அன்பு சகோதரின்னு உருகுனாரே...திரு வை.கோ...அவர மதிச்சிருக்க வேணாம்..மத்த கட்சிகள் எலேக்சனுக்காக மட்டும்தான் உங்களோட கூட்டு வெச்சுது...அவரு அப்டியா பண்ணாரு..,இதுதான் உங்களுக்கு தெரிஞ்ச அரசியல் நாகரீகமா...அவர் கேட்ட தொகுதிகள்ல பாதியாச்சும் குடுத்துருக்க வேணாம்..இதுதான் அஞ்சு வருஷம் உங்கள நம்பி தன்னோட அரசியல் வாழ்கைய தியாகம் பண்ணவருக்கு செய்ற நன்றி கடனா...?

உங்கள நம்புன அவருக்கே இந்த கதின்னா..உங்கள நம்புனா எங்க கதி...?

கேக்றேன்னு தப்பா நெனைச்சுகாதீங்க..,

பொம்பளையா நீ...?

வெளியூர்க்காரன்

Posted by Veliyoorkaran - - 16 comments and to comment
வெளியூர்க்காரனின் தன்னிகரில்லா தங்க தலைவர் திரு.கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் வெளியூர்க்காரனின் சொந்த ஊரான திருவாரூர் தொகுதியில் போட்டியிட போவதை அறிந்த திரு வெளியூர்க்காரன் அவர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போய் தன் பெயரை திருவாரூர்க்காரன் என மாற்றி அறிவித்துள்ளார்..தலைவருக்கு நேரடியாய் வாக்களிக்கபோவதை தன் பிறவிப் பயனாக கருதும் திருவாரூர்க்காரன் திமுகவை எதிர்த்து இத்தேர்தலை சந்திக்கும் எதிர்கட்சிகளுக்கு ஒரு பகிரங்க எச்சரிக்கை கடிதத்தை எழுதியுள்ளார்...அது பின்வருமாறு...,

@எல்லா எதிர்க்கட்சி பயலுக்கும்,

எலேய் எலெக்சன் ரிசல்ட் சொல்றேன் எழுதி வெச்சுக்க..திராவிட முன்னேற்ற  கழகம்  போட்டியிடற  நூத்தி பத்தொம்போது தொகுதில நூத்தி இருவது தொகுதில பெருவாரியான வாக்கு வித்யாசத்துல அமோகமா ஜெய்க்குது..இந்த தேர்தல்ல தமிழகத்தின் ஸ்டார் தொகுதிகளான திருவாரூர் (மாண்புமிகு தமிழக முதல்வரின் தொகுதி..) மற்றும் ஸ்ரீரங்கம் ( அதிமுக வை சேர்ந்த ஜெயலலிதா என்ற முன்னாள் கவர்ச்சி நடிகையின் தொகுதி..) இந்த இரண்டு தொகுதிகள்ளையும் அதிமுக டெபாசிட் வாங்கிட்டா வெளியூர்க்காரன் மொட்டை அடிச்சுக்கறான்...! அதிமுகங்கற கட்சி இந்த தேர்தலோட அழியுது..!

@விஜய்.

ஏண்டா அறிவு கெட்ட கெம்னாட்டி நாயே..யாரடா எதிர்த்து நிக்கற..எங்கள எதிர்த்து நின்னா என்ன ஆகும்னு காவலன் ரிலீஸ்லையே காமிச்சோம்ல.. மூடிகிட்டு இருக்க வேண்டியதுதான...என்னா தெனாவெட்டு இருந்தா என் தலைவனையே எதிர்த்து அதிமுகவோட கூட்டு சேருவ..இப்ப எழுதி வெச்சுக்கடி..மே பதிமூணு எலெக்சன் ரிசல்ட் வருது..நீ என்ன பண்ற மே பதினாலு கருக்கல்ல கெளம்பி சன் பிக்சர்ஸ் ஆபீஸ்க்கு வர்ற..வந்து போண்டா மணிய ஹீரோவா போட்டு கலைஞர் கதை வசனம் எழுத போற படத்துல நான் முழு மனதொட காமெடியன் ரோல் பண்றேன்னு எழுதி கையெழுத்து போட்டு குடுத்துட்டு போற..அந்த படத்துல நீ போண்டா மணிக்கு கால அமுக்கர மாதிரி சீன நெறைய வெச்சு நாங்க  எடுப்போம்..நீ நடிச்சு குடுக்கற.. அது மட்டும்ல..,

இன்னும் பத்து வருசத்துக்கு உன்ன எந்த ப்ரோடியுசரும் புக் பண்ண வரமாட்டான்..அப்டியே புக் பண்ணாலும் எந்த டைரக்டரும் உன்ன ஹீரோவா வெச்சு படத்த டைரக்ட் பண்ண மாட்டான்..உங்கப்பன வெச்சு நீனே உன் காசுல படம் எடுத்து முடிச்சாலும் அத ரிலீஸ் பண்ண தமிழ்நாட்ல ஒரு தியேட்டர் கூட கெடைக்காது..உனக்கும் உங்கப்பன் அந்த லோட்டா தலையனுக்கும் ஆப்பு எப்புடி எப்புடியெல்லாம் வெக்கரோம்னு எலெக்சன் முடிஞ்சோன்ன பாருடி..அந்த சாணி வாயன் எஸ்.ஏ.சந்து இனிமே படம் இல்ல..போட்டோ கூட தமிழ்நாட்ல எடுக்க கூடாது..எடுத்தா பொடா சட்டத்துல உள்ள தூக்கி போட்டு வாயிலையே மெதிப்போம்..ஏன் பேசிகிட்டு..எலெக்சன் முடியட்டும்..அப்பறம் இருக்குடி உனக்கு..!

@மதிமுக

வைகோ அண்ணேன்..என்ன அண்ணேன் இப்புடி ஆய்டுச்சு உங்க நிலைமை..ரொம்ப வருத்தமா இருக்குன்னேன்..ஒரு நேர்மையான அரசியல் தலைவருக்கு இந்த நிலைமை வந்துருக்க கூடாதுன்னேன்..உங்களுக்கு மிக பிரகாசமான அரசியல் எதிர்காலம் நம்ம கழகத்துல இருக்குன்னேன்..எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் நாஞ்சில் சம்பத்த கூட்டிகிட்டு  வந்துருங்க..! உங்களுக்காக திமுகவோட கொள்கை பரப்பு செயலாளர் பதவி காத்துகிட்ருக்கு..!     

@தேமுதிக 

ஹி ஹி ஹி ஹி ....கொள்கை கொள்கைன்னு வீர வசனம் பேசுனீங்க...அந்த பொம்பள காரிதுப்புனோன்ன வெளில வந்து மூணாவது அணின்னு போஜா காட்றீங்க..போங்க கருப்பு எம்சிஆரு சார்..நீங்க சரியான தமாசு...எப்போதும் போல நீங்க வோட்ட பிரிச்சிருங்க...மிச்சத்த நாங்க பார்த்துக்கறோம்..! அப்பறம் கேக்க மறந்துட்டேன்...இவ்ளோ நஞ்சு  போன  மூஞ்ச வெச்சுருக்கற  உங்கள யாரு சார் அரசியல்ல குதிக்க சொன்னா...ஹி ஹி ...பிரேமலதா அக்காவா...! பாவம் சார் அவங்க..!

@கம்மியூனிஸ்ட்

திருத்துறைபூண்டி வழக்கம் போல உங்களுக்குத்தான்...வேறென்னத்த சொல்ல..? போங்க போய் உண்டியல வெளக்கி எடுத்து வெச்சுக்கங்க..தேர்தல் வரபோகுது...!

@அதிமுக

அண்ணேன் நான் உன்ன ஒன்னும் சொல்லபோறதில்லன்னேன்..தமிழ்நாட்ல நான் பார்த்து பரிதாபபட்ற ஒரே கட்சி தொண்டன் நீ மட்டும்தான்னேன்...உன்ன என்ன சொல்லி தேத்தரதுன்னு கூட எனக்கு தெரியல அண்ணேன்.. உன் தொகுதி கேண்டிடேட்கிட்ட ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லு..பணத்த இந்த எலேக்சனுக்காக ரொம்ப செலவு பண்ணிற வேண்டாம்னு...இருக்கறத சேர்த்து வெச்சுகிட்டு நெலம் நகை நட்டு எதுனா வாங்கி போட சொல்லு..அவன் குடும்பமாச்சும் நல்லா இருக்கும்..நடக்க போற எலெக்சன்ல எப்டியாச்சும் ஜெய்ச்சிர்லாம்னு காச செலவு பண்ற அதிமுக வேட்பாளர விட ஒரு அடிமுட்டாள் உலகத்துலேயே இருக்க முடியாது..தமிழ்நாட்ல எலெக்சன் கமிசனும் போலிசும் லாரி லாரியா  புடிக்கற பணம் எல்லாம்  உங்க பணம்தான்னேன்..எங்க கட்சிகாரங்க அனுப்பற பணம் எல்லாம் போலிஸ் பாதுகாப்போட பத்திரமா போய்க்கிட்டுதான் இருக்கு..அதனால மனச போட்டு கொழப்பிக்காம போய் தயவு செஞ்சு தற்கொலை பண்ணிக்கன்னேன்..!

@மாண்புமிகு கலைஞர் மு கருணாநிதி

தலைவா நீ ஜெயிக்கிற தலைவா..திமுக வரபோற தேர்தல்ல எல்லா தொகுதிகள்ளையும் வரலாறு காணாத அளவுக்கு வெற்றி பெற போகுது ஆனா, உன்கிட்ட ஒரே ஒரு விஷயம் சொல்லணும்...,

காங்கிரஸ் அறுபத்தி மூணு எடத்துலயும் தோக்கனும் ..! 

“திருவாரூர்க்காரன்” 

Posted by Veliyoorkaran - - 26 comments and to comment


"ஹலோ ஜுஜ்ஜு கண்ணு... ....என்ன மறந்துட்டியாமா.?"


"நான் பிஸியா இருக்கேன்!.. நீ மொதல்ல போன வை...."


"சரி பாப்பு கிட்ட குடு"


"ஹாய் டாட்..!"


"அம்மா என்ன பிஸியா இருக்காளா..?"


"டி.வி பார்த்துட்டு இருக்காங்க.."


"அவ இப்படியே இருந்தான்னா, அப்பா டைவ்ர்ஸ்    பண்ணிடுவேன்னு சொல்லு.."


"ஃபோனை கையில் வைத்துக் கொண்டே "ம்மா...அப்பா உன்னை டைவர்ஸ் பண்ண போறாராம்...!


"ரொம்ப சந்தோஷம்...சீக்கிரம் பண்ண சொல்லு! சரி சாப்பிட்டாச்சான்னு கேளு- சைந்தவி..!


"ப்பா..சாப்ட்டியா!"


"ம்ம்..சாப்டேன்டா குட்டி...! நீ என்னடா  சாப்பிட்ட..!


"ம்ம்..பிஸ்கெட்!"


"அம்மா வெஜ் ரைஸ் பண்ணுவாளே...இன்னிக்கு பண்ணலையா,,?


"பிஸ்கெட்டே பெட்டர்ப்பா.! ..அம்மா பார்க்கிற சானல் பயங்கர போர்.... எதுவுமே புரியாம ரொம்ப நேரமா டிஸ்கவரியே வச்சிருக்கா!....எப்போப்பா வர்ற நீ!"


"அப்பாக்கு பயங்கர வேலைடா கண்ணு!"


ஃபோனை சட்டென புடுங்கிய சைந்தவி " அங்க என்ன இப்போ வெட்டி முறிக்கிறீங்க?"


"நேத்து என் பாஸ் குடுத்த ஆடிட் ரிப்போர்ட்ல.."


"உண்மையை சொல்லு!"


"அது ப்ளாக்ல ஒரு ஆர்டிக்கில் படிச்சிட்ருந்தேன்..!


"கஷ்டம்! ப்ளாக்னால டைவர்ஸ்னா ஜட்ஜ் சிரிப்பார்..!"


"அடிப்பாவி...டைவர்ஸ் பண்ணிடறதா முடிவே பண்ணிட்டியா..?"


"சொன்ன வார்த்தையைக் காப்பாத்தாத நீயெல்லாம் என்ன புருஷன்?"


"ஹேய்! கூல் கூல்.. பெரிய வார்த்தையெல்லாம் பேசாத!".. ..!"


"நேத்து என்னடா  சொன்ன? நாளைக்கு ஒரு நாள் நான் சமைக்கிறேன்னு சொன்னேல்ல. உன்ன நம்பி இப்போ நானும் பாப்புவும் பட்டினி .!


பக்கத்து அறையில் இருந்து எழுந்து வந்து சிபி மேல் ரிமோட்டை எறிந்தாள் சைந்தவி. அப்பாடா என்ற பாப்புவிடம் ரிமோட் கிடைத்த மறு வினாடி டி.வி கார்ட்டூன் சானலுக்கு மாறியது.


"பக்கத்து ரூமில தான இருந்த...அப்புறம் என்ன ஃபோன்?"- சைந்தவி


"நீ ஏர்டெல் விளம்பரம் பார்த்ததில்லையா..."


"எனக்குன்னு அமைஞ்சிருக்கு பாரு..கடவுளே!..கையை எடுங்க...ஹேய் இன்னிக்கு நோ கொஞ்சல்ஸ்! நான் சொல்லித் தறேன்..நீங்க சமைச்சே ஆகனும்! என்ன செஞ்சாலும் குறை சொல்றாளே உங்க அருமைப் பொண்ணு... அவளுக்கு அவங்கப்பா லட்சணம் தெரியணும்...அப்போதான் வாயை மூடிட்டு ஸ்கூலுக்கு நான் குடுத்தனுப்பறதை எடுத்துட்டுப் போவா!"


சிபியும் சைந்தவியும் கிச்சனுள் எகிப்து,லிபியா ரேஞ்சுக்கு புரட்சி ஒன்று நடத்திக் கொண்டிருக்கையில் டெலிஃபோன் அலறியது.


பாப்பு எடுத்தாள்.


"ஹலோ"
"ஹலோ பாப்பு குட்டி  .. சிபி இருக்கானா?"

"ம்ம்...அப்பாவும் அம்மாவும் கிச்சன்ல.."

"சமையல் பண்றாங்களா.."

"இல்ல அங்கிள்  .ரெஸ்ட்லிங்!"

"அப்போ நீ இன்னைக்கு சாப்பிட்டா மாதிரி தான்!"

"இல்லை அங்கிள்...இது வேலைக்கு ஆவாதுன்னு தெரியும்!அதான் அப்பொவே ஒரு பீட்ஸா ஆர்டர் பண்ணிட்டேன்!"


இதைக் கேட்ட உடன் சடாரென வெளியே வந்தனர் சிபியும் சைந்தவியும்.


யாருடா போன்ல.?..


"பிள்ளைக்கு சாப்பாடு செய்யுங்கன்னா கிச்சன்ல உக்காந்து லவ்வா பண்றீங்க!" பார்த்துகிட்டே இருங்க..என்னிக்கோ ஒரு நாள்  உங்க ரெண்டு பேரையும் நான் டைவர்ஸ் பண்ணபோறேன் ...! இந்தாங்க வந்து பேசுங்க..அங்கிள் லைன்ல இருக்காரு..!


வெஜ் ரைஸ் என்கிற பெயரில் இருந்த வெந்தய களியை அசடு வழிய பார்த்துகிட்டே போனை வாங்கி ஹலோ சொல்லிய சிபியின் முகம் மலர ஆரம்பித்தது...!


A article by

There was an error in this gadget