- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 26 comments and to comment


"ஹலோ ஜுஜ்ஜு கண்ணு... ....என்ன மறந்துட்டியாமா.?"


"நான் பிஸியா இருக்கேன்!.. நீ மொதல்ல போன வை...."


"சரி பாப்பு கிட்ட குடு"


"ஹாய் டாட்..!"


"அம்மா என்ன பிஸியா இருக்காளா..?"


"டி.வி பார்த்துட்டு இருக்காங்க.."


"அவ இப்படியே இருந்தான்னா, அப்பா டைவ்ர்ஸ்    பண்ணிடுவேன்னு சொல்லு.."


"ஃபோனை கையில் வைத்துக் கொண்டே "ம்மா...அப்பா உன்னை டைவர்ஸ் பண்ண போறாராம்...!


"ரொம்ப சந்தோஷம்...சீக்கிரம் பண்ண சொல்லு! சரி சாப்பிட்டாச்சான்னு கேளு- சைந்தவி..!


"ப்பா..சாப்ட்டியா!"


"ம்ம்..சாப்டேன்டா குட்டி...! நீ என்னடா  சாப்பிட்ட..!


"ம்ம்..பிஸ்கெட்!"


"அம்மா வெஜ் ரைஸ் பண்ணுவாளே...இன்னிக்கு பண்ணலையா,,?


"பிஸ்கெட்டே பெட்டர்ப்பா.! ..அம்மா பார்க்கிற சானல் பயங்கர போர்.... எதுவுமே புரியாம ரொம்ப நேரமா டிஸ்கவரியே வச்சிருக்கா!....எப்போப்பா வர்ற நீ!"


"அப்பாக்கு பயங்கர வேலைடா கண்ணு!"


ஃபோனை சட்டென புடுங்கிய சைந்தவி " அங்க என்ன இப்போ வெட்டி முறிக்கிறீங்க?"


"நேத்து என் பாஸ் குடுத்த ஆடிட் ரிப்போர்ட்ல.."


"உண்மையை சொல்லு!"


"அது ப்ளாக்ல ஒரு ஆர்டிக்கில் படிச்சிட்ருந்தேன்..!


"கஷ்டம்! ப்ளாக்னால டைவர்ஸ்னா ஜட்ஜ் சிரிப்பார்..!"


"அடிப்பாவி...டைவர்ஸ் பண்ணிடறதா முடிவே பண்ணிட்டியா..?"


"சொன்ன வார்த்தையைக் காப்பாத்தாத நீயெல்லாம் என்ன புருஷன்?"


"ஹேய்! கூல் கூல்.. பெரிய வார்த்தையெல்லாம் பேசாத!".. ..!"


"நேத்து என்னடா  சொன்ன? நாளைக்கு ஒரு நாள் நான் சமைக்கிறேன்னு சொன்னேல்ல. உன்ன நம்பி இப்போ நானும் பாப்புவும் பட்டினி .!


பக்கத்து அறையில் இருந்து எழுந்து வந்து சிபி மேல் ரிமோட்டை எறிந்தாள் சைந்தவி. அப்பாடா என்ற பாப்புவிடம் ரிமோட் கிடைத்த மறு வினாடி டி.வி கார்ட்டூன் சானலுக்கு மாறியது.


"பக்கத்து ரூமில தான இருந்த...அப்புறம் என்ன ஃபோன்?"- சைந்தவி


"நீ ஏர்டெல் விளம்பரம் பார்த்ததில்லையா..."


"எனக்குன்னு அமைஞ்சிருக்கு பாரு..கடவுளே!..கையை எடுங்க...ஹேய் இன்னிக்கு நோ கொஞ்சல்ஸ்! நான் சொல்லித் தறேன்..நீங்க சமைச்சே ஆகனும்! என்ன செஞ்சாலும் குறை சொல்றாளே உங்க அருமைப் பொண்ணு... அவளுக்கு அவங்கப்பா லட்சணம் தெரியணும்...அப்போதான் வாயை மூடிட்டு ஸ்கூலுக்கு நான் குடுத்தனுப்பறதை எடுத்துட்டுப் போவா!"


சிபியும் சைந்தவியும் கிச்சனுள் எகிப்து,லிபியா ரேஞ்சுக்கு புரட்சி ஒன்று நடத்திக் கொண்டிருக்கையில் டெலிஃபோன் அலறியது.


பாப்பு எடுத்தாள்.


"ஹலோ"
"ஹலோ பாப்பு குட்டி  .. சிபி இருக்கானா?"

"ம்ம்...அப்பாவும் அம்மாவும் கிச்சன்ல.."

"சமையல் பண்றாங்களா.."

"இல்ல அங்கிள்  .ரெஸ்ட்லிங்!"

"அப்போ நீ இன்னைக்கு சாப்பிட்டா மாதிரி தான்!"

"இல்லை அங்கிள்...இது வேலைக்கு ஆவாதுன்னு தெரியும்!அதான் அப்பொவே ஒரு பீட்ஸா ஆர்டர் பண்ணிட்டேன்!"


இதைக் கேட்ட உடன் சடாரென வெளியே வந்தனர் சிபியும் சைந்தவியும்.


யாருடா போன்ல.?..


"பிள்ளைக்கு சாப்பாடு செய்யுங்கன்னா கிச்சன்ல உக்காந்து லவ்வா பண்றீங்க!" பார்த்துகிட்டே இருங்க..என்னிக்கோ ஒரு நாள்  உங்க ரெண்டு பேரையும் நான் டைவர்ஸ் பண்ணபோறேன் ...! இந்தாங்க வந்து பேசுங்க..அங்கிள் லைன்ல இருக்காரு..!


வெஜ் ரைஸ் என்கிற பெயரில் இருந்த வெந்தய களியை அசடு வழிய பார்த்துகிட்டே போனை வாங்கி ஹலோ சொல்லிய சிபியின் முகம் மலர ஆரம்பித்தது...!


A article by

26 Responses so far.

 1. @ All.//

  No Mokkais or Kummis on Chocolate Pages..!

  This Chocolate Pages are only for Sainthavi and Sibi Fans...!

  :)

 2. /// @Veliyoorkaran said...

  No Mokkais or Kummis on Chocolate Pages..!////

  ஹி ஹி ....

 3. ///@ Veliyoorkaran said...


  This Chocolate Pages are only for Sainthavi and Sibi Fans...!

  :) ///

  இந்த Usha Fan , Khaitan Fan , Crompton Fan not allowed?

 4. ///@Veliyoorkaran said...

  @ All.//

  No Mokkais or Kummis on Chocolate Pages..!

  This Chocolate Pages are only for Sainthavi and Sibi Fans...!

  :)///

  அம்மாடியோவ் இங்கிலிபிஷு........ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்..........

 5. @ரெட்டைவால்

  //"ஹலோ"
  "ஹலோ பாப்பு குட்டி .. சிபி இருக்கானா?"//

  இந்த லைனுக்கு அப்புறம் வருவது எல்லாம் மொக்கையா போய்டுத்து மச்சி.. :)

 6. இன்னும் பதிவையே படிக்கல அதுக்குள்ளே இதனை கமெண்ட்ஸ் போஸ்ட் பண்ணிட்டமே... சும்மாவே இந்த வெளியூரு பன்னி குட்டி ஓவர் ஆ கமெண்ட்ஸ் போஸ்ட் பண்ணுதுன்னு வந்து திட்டிட்டு சீன் போட்டு போவாரு . இப்போ இந்த கமெண்ட்ஸ் க்கு எல்லாம் என்ன காட்டு காட்ட போறாரோ தெரியல .... எப்பிடியும் பொங்குவாப்பல , இருந்து பார்ப்போம் ....

 7. awwwwwwwww terror vanthaachuuuuu......

 8. அப்புறம் terror மச்சி எப்புடி இருக்க? நல்ல இருக்கியா ? ....

 9. @Rocks

  ராக்கு மச்சி! இந்த போஸ்டல விள்ளாடாத. மாப்ளை பீல் பண்ணி எழுதரான். கும்மிய அடுத்த போஸ்ட்ல வச்சிகலாம்... :)

 10. //////@Terror....


  @Rocks

  ராக்கு மச்சி! இந்த போஸ்டல விள்ளாடாத. மாப்ளை பீல் பண்ணி எழுதரான். கும்மிய அடுத்த போஸ்ட்ல வச்சிகலாம்... :)
  /////////

  அவ்வ்வவ்வ்வ் ஆமாவா? எங்க முன்ன மாதிரி வெளியூரு நெறைய போஸ்ட் போடுறது இல்ல. நானும் எவ்வளவு நாள் தான் வெயிட் பண்ணுறது வெளியூரு போஸ்ட் காக ? போடுற ஒன்னு ரெண்டு போஸ்ட் லதானே கும்மி அடிக்க முடியும் ?

  சரி நீயே சொல்லிபுட்ட அப்புறம் கேக்கலைன எப்புடி ? ரைட்டு நோ கும்மி .....
  டா டா

 11. வருங்கால ஜனாதிபதி ரெட்டைவால்ஸ் வால்க....!

 12. Anonymous says:

  /// A article by

  ரெட்டைவால்ஸ்/////

  யோவ் இத எழுதினது ரெட்டையா ? வாழ்த்துக்கள் ..,உனக்கு தான் அந்த பீர் ..,நாதமுனி தியேட்டர் பக்கத்துல இருக்குற டாஸ்மாக் ல

 13. @@@♔ℜockzs ℜajesℌ♔™ said...
  இந்த கமெண்ட்ஸ் க்கு எல்லாம் என்ன காட்டு காட்ட போறாரோ தெரியல .... எப்பிடியும் பொங்குவாப்பல , இருந்து பார்ப்போம் ....//

  ங்கொய்யால நக்கல் ஒய் உமக்கு..! :)

 14. @@@♔ℜockzs ℜajesℌ♔™ says:
  இந்த Usha Fan , Khaitan Fan , Crompton Fan not allowed?///

  இந்த இலுமி பயலுக்குதான் இந்த மாதிரியெல்லாம் குயித்தியா தோணும்..!

  இப்ப உனக்குமா மச்சி..! :)

 15. வாழ்க்கை இது போலவே அமையாதா??

 16. @@@Speed Master says:
  வாழ்க்கை இது போலவே அமையாதா??///

  ஏன் அமையாது...!
  மொட்டை வெயில்ல வேலில போற ஒரு ஓணான புடிச்சு அது வயித்த வெரும்வாயில கடிச்சு, வர்ற ரெத்தத்த எடுத்து மல்லாக்க படுத்துகிட்டு நடு மண்டைல நாலு நாளைக்கு சூடு பறக்க தேய் மச்சி..! வாழ்க்கை இது போலவே அமையும்..!

  @ பொதுமக்கள்...சாரி பொதுமக்களே...போட வேணாமேன்னுதான் பார்த்தேன்..பட் இப்புடி ஒரு வால்பமான பீஸ் கெடைச்சு போடாம விட்டுட்டான் வெளியூர்காரன்னு நாளை பின்ன என்னை இலுமினாட்டி பய நாக்கு மேல பல்ல போட்டு தப்பா பேசிரபுடாது பாருங்க..அதேன்..!

  தக்காளி எங்க வந்து பீல் பண்ணுது பாருங்க..வாழ்க்கை இப்புடி அமையாதான்னு..! இது எப்புடிபட்ட எடம்னு தெரியாம...! :)

 17. // Veliyoorkaran said...
  @@@Speed Master says:
  வாழ்க்கை இது போலவே அமையாதா??///


  ஏன் இவ்வளவு கொலவெறி
  நல்லாயிருக்குதானே சொன்னேன்

  ஹி ஹி

 18. இனிமையான வாழ்க்கை! என்றும் இனிமையாக வாழட்டும் அவர்கள்!

 19. vinu says:

  sari ippo ellaarum enna solla vareenga;

  velliyoorukku kalyaanam aayiruchchaa aagalayaaaa?

  athukkullea kulanthai eppudiiiiiiiii?


  nalaa irru machi neee nalla irru

  x-(
  x-(
  x-(
  x-(
  x-(
  x-(
  x-(
  x-(

 20. //No Mokkais or Kummis on Chocolate Pages..!//

  இப்படி சொன்னதால நான் படிச்சு கொஞ்ச நேரம் பீல் பண்ணிட்டு அப்படியே திரும்பி போறேன் ..

 21. //எனக்குன்னு அமைஞ்சிருக்கு பாரு..கடவுளே!..கையை எடுங்க...ஹேய் இன்னிக்கு நோ கொஞ்சல்ஸ்!//
  "வெட்கம் பிடுங்கி தின்னும் வேளைகளை வார்த்தைகளால்
  சிறை பிடிப்பது மிகவும் கடினம்"
  ஆனா இங்க ரெட்டைவால் புகுந்து விளையடிருக்கரு...
  ரொம்ப நல்லா இருக்கு....

 22. Sham says:

  Nice one I love your Chocolate pages... :)