- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 123 comments and to comment


 சிம்புவுக்கும் த்ரிஷாவுக்கும் கெமிஸ்ட்ரி மட்டும் இல்ல..பிசிக்ஸ், பாட்டணி ,ஜாகரபிலேர்ந்து சோசியல் சயின்ஸ் வரைக்கும் எல்லாமே வொர்க்அவுட் ஆய்ருக்கு...உண்மைய சொல்லனும்னா கொஞ்சம் பொறாமையா இருக்கு..முக்கியமா அந்த ட்ரைன் சீன்ல ..சிம்பு சும்மாவே சும்மா இல்லாம ஹீரோயின எதாச்சும் நொண்டிகிட்டே இருப்பாரு..இதுல கௌதம்மேனன் நல்லா அடிச்சு ஆடு ராஜான்னு வேற சொல்லிருக்காரு போல..குட்டி தல பின்னிருக்கு.

சிம்பு சார்..நீங்க சூப்பரா நடிச்ச படங்கள்ல இது ரெண்டாவது எடத்துல இருக்கு...(மொத்தமே ரெண்டு படம்தான்..)..மீண்டும் தொட்டி ஜெயா முதல் இடத்தை தக்க வெச்சுருக்கு..நெறைய எடத்துல வாய மூடிகிட்டு பேசற மாதிரி இருக்கு சார்..அத கொஞ்சம் மாத்திகிட்ட நல்லா இருக்கும்..சிம்புவ சொம்புன்னு சொன்ன எல்லார் வாயிலையும் சொம்ப தூக்கி வெச்சுடீங்க..சூப்பர்ப் ஆக்டிங் சார்..அடுத்த சூப்பர் ஸ்டார் நீங்களா கூட இருக்கலாம்...வாழ்த்துக்கள்...

கவுதம்மேனன்...வழக்கம் போல ஒரு ஹை கிளாஸ் லவ்ஸ்டோரி...அழகான காட்சிகளோட...கண்டிப்பா பட்டுகோட்டைல படம் பார்க்கரவனுக்கு இந்த படம் புரியாது...நீங்க அவங்களுக்காக உங்க படங்கள எடுக்கலங்கறது உலகத்துக்கே தெரியும்னாலும் மலையாளத்துல படம் இருவது நிமிஷம் ஓடறது கொஞ்சம் டூ மச் சார்..உங்களுக்கு உங்க தாய்மொழியில படம் எடுக்கனும்னு ஆசை இருந்தா போய் எடுத்துட்டு திரும்ப கோடம்பாக்கத்துக்கு வாங்க...ஆனா, தமிழ்ல மலையாள படம் எடுக்காதீங்க..என் பிரெண்ட் எந்திரிச்சு போய் தம் அடிச்சிட்டு திரும்ப வர்ற வரைக்கும் படம் மலையாளத்துலையே ஓடிட்ருந்துச்சு...எங்களுக்கு மலையாள படம் புடிக்கும்தான்..ஆனா இந்த மாதிரி பேசிக்கிட்டுருக்கற படம் இல்ல..

ஏ.ஆர்.ரஹ்மான் மியுசிக் நல்லாருக்குன்னு சொல்றது விஜயகாந்துக்கு நடிக்க தெரியாதுன்னு சொல்ற மாதிரி..உலகத்துக்கே தெரிஞ்ச விஷயம்..இவர நேர்ல பார்த்து ஒரே ஒரு கேள்வி கேக்கணும்..என்ன மனுஷன் சார் நீங்க...?

டெக்னிக்கலி படம் கிளாஸ்...கவ்தமோட ஹியுமர் படம் புல்லா அழகா தெளிக்கபட்ருக்கு ..ரசிக்கற மாதிரி.. கௌதம் ரொமான்ஸ்ல பின்னிருக்காறு...சிலசீன்லாம் பார்க்கும்போதே ஏதோ ஒரு மாதிரி செய்யுது... மனசுக்குள்ள..! 

ஆனா, ரொமான்ஸ் பட வரிசைல பத்து வருசமா நம்பர் ஒன் இடத்துல இருக்கற அலைபாயுதே கிட்ட இந்த படம் டெபாசிட் இழந்துடுச்சு...

மொத்ததுல கவுதமோட லேங்குவேஜ்ல படத்த பத்தி சொல்லனும்னா...

..த்தா..படம் செம ஹிட்டு மச்சி...சத்யம் தியேட்டர்ல..!

வெளியூர்க்காரன் 

Posted by Veliyoorkaran - - 40 comments and to comment


பணிரெண்டு ஆயிரம் பேர் வந்து படிச்சிட்டு போயிருக்கீங்க..ரொம்ப நன்றி..ரெண்டாயிரத்துல ஒரு தடவ நன்றி சொன்னேன்..இப்போ இங்க...இந்த இடைவெளியில நான் பெருமையா சொல்லிக்கற மாதிரி  பெருசா எதையும் எழுதி கிழிச்சிடல....ஆனா மன்மோகன் சிங்லேர்ந்து விஜய் வரைக்கும் நெறைய பேர கிழிச்சிருக்கேன்...கொஞ்சம் அரசியல் ,கொஞ்சம் சினிமா ,கொஞ்சம் லவ்...இத தவிர நான் வேற எதையும் எழுதுனது இல்ல..எழுத முயற்சி பண்ணவும் இல்ல..வர்றத ஒழுங்கா எழுதுவோம்னு ஒரு சின்ன ஆசை..


நெறைய பேர் வந்து சொல்லிட்டு போயிருக்கீங்க...வெளியூர்க்காரன் வந்து படிச்சிட்டு ரொம்ப சந்தோசமா சிரிச்சிட்டு போறேன்னு..வெளியூர்க்காரன் படிச்சிட்டு நான் சிரிக்கரத பார்த்து பயந்து போய் என் பொண்டாட்டி என்ன டைவொர்ஸ் பண்ற முடிவுக்கு வந்துட்டான்னு ஒரு நண்பர் வந்து சொல்லிருந்தாரு.ரொம்ப சந்தோசமா இருந்துச்சு சார்..நீங்க இப்டி சந்தோசமா சிரிக்கணும்..உங்க வைப் உங்கள டைவொர்ஸ் பண்ணிட்டு ...சரி அத விடுங்க...அது எதுக்கு இப்போ...எங்க விட்டேன்...உம்...வெளியூர்காரன் நூறு சதவிதம் நீங்க சிரிக்கரதுக்காகவும் உங்கள சந்தொசபடுதரதுக்காகவும் மட்டுமே  எழுதபட்ற ஒரு வலைப்பூ...நீங்க சந்தோசமா சிரிச்சிட்டு போனீங்கன்னா அது போதும்..!


இங்க சில பேருக்கு நன்றி சொல்லணும்...!!


வெளியூர்க்காரனுக்கு பொட்டு வெச்சு வெளியூர்க்காரன்னு பேர் வெச்சு புது சட்ட (டெம்ப்ளேட்)  வாங்கி குடுத்து மடியிலேயே வெச்சு பாசத்தோட  இன்னிக்கு வரைக்கும் கண்ணும் கருத்துமா பார்த்துகிட்டு வர்ற வெளியூர்க்கரனின் தாய்மாமா நண்பர்  திரு.தமிழ்குமார் அவர்களுக்கு என் நன்றி...தொடர்ந்து இந்த பயலே  நீங்களே பார்த்துக்கோங்க தமிழ்..எழுதற வேலைய மட்டும் நான் பார்த்துக்கறேன்..!!


ரெட்டைவால்ஸ்..வெளியூர்க்காரனோட நக்கல்ல பாதி இவனோடது..நாங்க கலாய்ச்ச  காண்டுல சாபம் விடரவங்க இவனுக்கும் கொஞ்சம் விடுங்க...!!


மத்தபடி சொல்லனும்னா இங்க யார்மேலயும் எனக்கு வருத்தம் இல்ல..ஏன்னா பெரும்பாலும் யாரையும் இங்க நான் மதிக்கறது இல்ல..ஆனா சில ஆசைகள் இருக்கு..இத படிக்கறவங்களுக்கு இது அதிர்ச்சியா கூட இருக்கலாம்..ஏன்னா நான் சொல்லபோரவங்கள்ள பெரும்பாலான எழுத்தாளர்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் பரிட்சயம் இல்லாதவர்கள்.அல்லது அறிமுகம் இல்லாதவர்கள்..எனக்கும் இவங்களுக்கும் உள்ள தொடர்பு..அவங்களோட எழுத்து மட்டுமே..நான் அவங்கள பின்னோட்டங்கல்ள்ள கூட பாராட்னது இல்ல..தூரத்துல நின்னு ரசிச்சதோட  சரி..!!


அனுஜன்யா சாரோட வடபழனி சரவணபவன்ல சூடா ஒரு சுகர்லெஸ் காபி ஜாலியா கலாய்ச்சிகிட்டே சாப்டனும்...வசந்த கால பறவை சிவா சாரோட லவ் ஸ்டோரிய சத்யம் தியேட்டர் வாசல்ல உக்காந்து வாய பொளந்துகிட்டு ஆசையா கேக்கணும். கேபிள் அண்ணனோட உக்காந்து அடையார் அஞ்சப்பர்ல கொத்து பரோட்டா சாப்டுகிட்டே நெறைய அட்வைஸ் கேக்கணும்...புலவன் புலிகேசி சாரோட மெரினா பீச்ல காலை நேரத்துல  வாக்கிங் போய்கிட்டே எனக்கு பதிவுலகத்துல உள்ள சில ஆதங்கங்கள சொல்லணும்..இலங்கை பதிவர் திரு.மாதவராஜ் சார் டேய் இந்த பய வெளியூர்காரன் நல்லாதாண்டா எழுதரான்னு  ஒரு வரி என்ன பத்தி அவரோட வலைப்பூல எழுதணும்...திரு. லோஷன் சாரோட தோளுல கைய போட்டுக்கிட்டு புல் சைஸ்ல ஒரு போட்டோ எடுத்து பத்திரமா வெச்சுக்கணும்.. அண்ணாமலையான் ஸ்வாமிகிட்ட பாப்கார்ன் தின்னுகிட்டே தமிழ் சினிமா சரியில்ல சார்னு சொல்லி அவர கடுப்பாக்கி அவர் கோவமா சப்போர்ட் பண்ணி  பேசறத ரசிச்சு கேக்கணும்...வால் பையனோடையும் ராஜனோடையும் பெசன்ட் நகர் பீச்ல உக்காந்து பீர் அடிச்சுகிட்டே நறுக்குன்னு நக்கலா நாத்திகம் பேசணும்...இதுல எத்தன நிறைவேற போகுதுன்னு எனக்கு தெரியல...ஆனா இதுல பாதி நடந்துச்சுன்னாலும் நான் ரொம்ப சந்தோசபடுவேன்...ஏன்னா நான் நல்ல எழுத்தாளனா இல்லையான்னு எனக்கு தெரியாது..ஆனா நான் நல்ல வாசகன்..!!


வெளியூர்க்காரனோட   பதிவுகள படிச்சிட்டு சிரிச்சிட்டு போன எல்லாருக்கும் மீண்டும் என்னோட நன்றிகள்..உங்கள எந்த வரிகளாச்சும் காயப்படுதிருந்தா சின்னபயலுக விளையாட்டா கலாசுரானுகன்னு வெளியூர்க்காரனையும் ரெட்டைவால்சையும் மன்னிச்சு விட்ருங்க...பட் எங்க பதிவுகள படிக்கறப்போ கோவம் வர்ற மாதிரி பீல் பண்ற நண்பர்கள் தயவு செஞ்சு கோவத்த அடக்கிகிட்டு யார்கிட்டயும் சொல்லாம வெளியே போயிருங்க...


கோவப்படீங்கன்னு  எங்களுக்கு  தெரிஞ்சது இங்கயே கொன்னு புதைச்சிருவோம்..!!வெளியூர்க்காரன்

Posted by Veliyoorkaran - - 87 comments and to comment


பங்காளியலா வணக்கம்..உங்க எல்லாருக்கும் சேதி தெரியும்னு நெனைக்கறேன்..நாம இளைய தளபதி விஜய்க்காக உயிரை குடுக்கற கூட்டம்தான்..ஆனா நம்ம தலைக்கு ஒரு பிரச்சனைனா அத பார்த்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டோம்னு இந்த ராதாரவி பயலுக்கும் ஜாகுவார் தங்கத்துக்கும் தெரியாம போய்டுச்சு...தலை இல்லாம ஏதுயா தளபதி.. நம்மள அவங்கே கலாசுறதும்,பதிலுக்கு  நாம அவங்கெல படுகேவலமா கலாசறதும்தான தமிழ் சினிமா ரசிகனோட வாழ்க்கைல இருக்கற சுவாரஸ்யமே...தல ரசிகர்கள் இல்லாத விஜய் பட ரிலீச நம்மளால நெனைச்சு கூட பார்க்க முடியலையே...கன்னாபின்னான்னு அடிச்சுக்கவாவது அவனுக நமக்கு  வேணும்..இப்ப சம்பவத்துக்கு வர்றேன்...

அஜித் மன்னிப்பு கேட்க வேண்டும்...-நடிகர் சங்கம்..செய்தி...

தலைக்கு ஒரு வரி...
என்ன மைத்துக்கு நீங்க அவனுககிட்ட மன்னிப்பு கேக்கணும்..கலைஞர் முன்னாடி நீங்க அப்டி பேசுனது பக்கா ஆம்பளதனமான  பேச்சு..அத ஒரு விஜய் ரசிகனா நான் தலைவணங்கி ஏத்துக்கறேன்...தலை நீங்க ரியல் லைப்ளையும் ஹீரோ தலை..தக்காளி இந்த ஜாகுவார் தங்கம் ராதாரவி இவனுகல்லாம் கொசு விட்டுட்டு போன கு...ட்டி முட்டைங்க தலை...உனக்கு பின்னாடி உன்னோட வீணா போன ரசிகர்கள் இருக்கானுகல்லோ இல்லையோ...நாங்க இருக்கோம் தலை...அவனுக ஆர்குட்ல மட்டும்தான் சலம்புவாணுக...ரோட்ல வந்து சோடா பாட்ல வீசரதுல நாங்கதான் தலை கில்லி...எங்களுக்கு உங்க ரசிகர்களைத்தான் தலை புடிக்காது..உன்ன ரொம்ப புடிக்கும்..யு டோன்ட் வொர்ரி லா...மன்னிப்ப தலையோட தலை மயிறு கூட கேக்காதுன்னு சொல்லிட்டு நீ போய்கிட்டே இரு...மிச்சத்த நாங்க பார்த்துக்கறோம்..

தல ரசிகர்களுக்கு ஒரு வரி...
ஏண்டா உங்க தலையெழுத்து ஒவ்வொரு படத்துக்கும் எங்கக்கிட்ட அடிவாங்கறீங்க...ஏன் சாமிகளா கண்டவன்கிட்டையும் பேச்சு வாங்கறீங்க..எனக்கே மனசு தாங்கலப்பா...உடனே எல்லா ஆர்க்குட் கம்மியுனிடிளையும் ஜாகுவார் தங்கத்தை கலாய்க்கரதுக்கு  தனி த்ரெட் ஆரம்பிங்க...விஜய் ரசிகர்கள் அதுக்கு முழு ஆதரவு குடுப்பாங்க...தக்காளி கூட்டமா சேர்ந்து அந்த நாதாரி பயலுக தாலிய அறுக்கறோம்..

நடிகர் சங்க கூட்டமைப்புக்கு ஒரு வரி...
எலேய் நாதாரி பயலுகளா.. இப்போ ஏண்டா ரஜினி சார வம்புக்கு இழுக்கறீங்க.. விஜய்க்கும் அஜித்துக்கும் நாங்க விசில் மட்டும்தாண்டா    அடிப்போம்..ஆனா ரஜினிக்காக உயிரையே குடுப்போம்டா..எலேய் ஜாகுவாறு உனக்கு பப்ளிசிட்டி வேணும்னா நேரா மெரினா பீச்சுக்கு போய் தலைகீழா தூக்குல தொங்கி சூசைட் பண்ணிக்கடா பரதேசி...உன்ன அடிக்க ஏன்டா ஆள் அனுப்பனும்..உன் வீட்டு வழியா போற ரஜினி ரசிகர்கள ஆளுக்கு கொஞ்சம் காரி துப்பிட்டு போக சொன்னா உன் வீடு முழுகி மூணு நாள் ஆய்ருக்கும்டா மூதேவி..ஏண்டா யாரு யார சொல்றதுன்னு ஒரு வெவஸ்தை இல்ல..என்னடா நடக்குது அங்க...ஏன் இளைய தளபதிய மன்னிப்பு கேக்க சொல்லி அறிக்கை விட்டு பாருங்கடா..தக்காளி நடிகர் சங்க கட்டிடமே இருக்காது...வந்து கொளுத்திவிட்டுட்டு போயிருவோம்...ஒரு புள்ளைபூச்சி கெடைச்சா உடனே வீரத்த காட்ரீங்களா..படுவாங்களா...!

மிஸ்டர் கலைஞர் அவர்களுக்கு ஒரு வரி...
யோவ் என்னய்யா பெரிய மனுஷன் நீ..தமிழ்நாட்ல மிகபெரிய ஸ்டாருக்கே பாதுகாப்பு இல்ல..பப்ளிக்கா மிரட்டறாங்கன்னு ஒப்பன் மீட்டிங்க்ல சொல்றாரு..என்னையா நீ சட்டம் ஒழுங்க கட்டுபாட்ல வெச்சுருக்க...கை தட்டிகிட்டே  இருக்கற கூட்டத்துல ஒருத்தன் எந்திரிச்சு  எதிர்த்து உண்மைய தைரியமா பேசிட்டா உங்களுக்கு வலிக்கிதோ..என்ன நீங்க கடவுளா...நாங்கதான சாமி உங்கள அங்கிட்டு உக்கார வெச்சோம்...இப்போ நாங்க சொல்றோம்..போங்க..போய் எதாச்சும் பண்ணுங்க...இல்லைனா காஞ்சி போயிருக்கற  ரெட்டை இலைக்கு தண்ணி ஊத்துற மாதிரி இருக்கும்..!!!

ரஜினி சாருக்கு ஒரு வரி...
சார் நீங்க போய் சவுந்தர்யா கல்யாண வேலைய பாருங்க சார்..இந்த நாய்ங்கள நாங்க பார்த்துக்கறோம்...நீங்க இது எதையும் மனசுல நெனைச்சு கொழப்பிக்காதீங்க சார்...( எந்திரன் விமர்சனம் எழுதிட்டேன் சார்...படம் கன்பார்ம்ட் ஹிட்டு...நீங்க தைரியமா போய் எல்லாருக்கும் பத்திரிக்கை வெக்கற வேலைய பாருங்க...)

ஜெயலலிதாவுக்கு ஒரு வரி...
எய்யாடி...இது என்ன வைத்தெரிச்ச கூத்தால்ல இருக்கு..தமிழ்நாட்ல கொசு தலை எண்ணிக்கை கூடிருச்சுன்னா எதிர்ப்பு தெரிவிச்சு போராட்டம் நடத்துவாங்களாம்...ஒரு முக்கியமான தலைக்கு பிரச்சனைனா கண்டுக்க மாட்டாங்களாம்...இதான் கொடநாட்டு நியாயமா...உங்க பவர் உங்களுக்கு தெரியாது மேடம்..நான் மறுபடியும் ஆட்சிக்கு வந்தா கலைகருக்கு பாராட்டு விழா நடத்தற பூரா பேரையும் புடிச்சு உள்ள தூக்கி வெச்சு சொருகு சொருகுன்னு சொருகி வாய கிழிச்சு விட்ருவேன்னு ஒரு அறிக்கை விடுங்க..ஒரு பயலும் வாழை மரம் கூட கட்டமாட்டான்...எல்லா பயலுக்கும் தெரியும் நீங்க சொன்னீங்கன்னா அது பைத்தியகாரதனமா இருந்தாலும் செஞ்சு காட்டுவீங்கன்னு...அப்பறம் எங்கேர்ந்து வர சொல்லி கட்டாயபடுத்தறது...!!

மறுபடியும் சொல்றேன்...விஜய் ரசிகனுக்கு விஜய புடிக்கும்..ஆனா அஜித்தையும் புடிக்கும்..நீங்க மோதறது தலைகிட்ட...வேணாம்..இதோட நிறுத்திக்கிட்டு பூரா பயலும் கலைஞ்சு ஓடிருங்க...மன்னிப்பு  கேக்கனும்லாம் அறிக்கை விட்டு அடி வாங்கி சாவாதீங்க...  

தலையோட ஆளுகளுக்கெல்லாம் ஒன்னு சொல்றேன்..நாங்க இப்பவும் எதிர்கூட்டணிதான்...ஏன்னா எங்க தலைவர் எவ்ளோ மோசமான படம் நடிச்சாலும் அதுக்கு ஈடு கொடுத்து மோசமான படங்கள தர்றது உங்க தல மட்டும்தான்...அதனால உங்க அடுத்த படத்தையும் மனசாட்சி இல்லாம கன்னாபின்னான்னு கலாய்ப்போம்..அதையும் இதையும் போட்டு மனச கொழப்பிக்காதீங்க...

தல வாழ்க..தலை ரசிகர்கள் ஒழிக...

சுறா வாழ்க..இளைய தளபதி வாழ்க..

வெளியூர்க்காரன்....

Posted by Veliyoorkaran - - 67 comments and to comment
போன வாரம் காதலர் தினம் அன்னிக்கு எனக்கு ஒரு வாழ்த்து மெயில் வந்துச்சுங்க...ஆமாம்..வழக்கம் போல ஒரு பிகருகிட்டேர்ந்துதான்...வெளியூர்காரனுக்கு நித்தம் ஒரு காதல் கடிதமும், நொடிக்கு பல பரிசு பொருட்களும் ஜிகுடிங்ககிடேர்ந்து வர்றது வாடிக்கைதான்னாலும் அந்த மெயில் என்னை கொஞ்சம் ஈர்துச்சு..காரணம் எனக்கு தினந்தோறும் வர்ற காதல் கடிதங்கள்ள உங்கள உயிருக்கு உயிரா காதலிக்கறேன்..உங்க அழகுல மயங்கி கெறங்கி போய் கெடக்குறேன்...அப்டி இப்டினுதான் போட்ருக்கும்..ஆனா இந்த கடிதத்துல கொஞ்சம்  வித்யாசமா எனக்கு வெளியூர்க்காரனின் எழுத்துக்கள் புடிச்சிருக்கு..நான் உங்க எழுத்த காதலிக்கறேன்னு போட்ருந்தா...(நம்மகிட்ட ஒரு பிகர் டைம் கேட்டாலே அந்த பிகரே உஷார் பண்ணி லவ் பண்ண முயற்சி பண்ணுவோம்..இப்டி வந்து வாண்டடா சிக்குனா விட்ருவோமா...)..வானத்துல பறக்க ஆரம்பிச்சான் வெளியூர்க்காரன்...ஆனா, அந்த ஜிகுடி யாரு...!


யோசிச்சான் வெளியூர்க்காரன்..நிமிந்து உக்காந்து,குப்புற படுத்து,மல்லாக்க வேடிக்க பார்த்து,எங்கப்பா போட்டோவ கிட்டத்துல வெச்சு பார்த்து,(ஷாக்ல  எதாச்சும் ஐடியா வருதான்னு..).. அட ஏங்க.. ரெண்டு பீர போட்டு கூட யோசிச்சு பார்த்தேன்..நமக்கு வாழ்க்கைல இருந்ததே ரெண்டு கேர்ல் பிரெண்டுங்க..அதுல ஒருத்தி என்ன அப்பவே மதிக்க மாட்டா..அவளுக்கு இப்பதான் கல்யாணம் வேற ஆனுச்சு..இன்னொருத்திக்கு இதெல்லாம் சுத்தமா புடிக்காது.இன்னும் சொல்லபோனா அவளுக்கு நான் ப்ளாக் எழுதறதே தெரியாது....வேற எவளையும் வெளியூர்க்காரன நிழல கூட நெருங்க வெளியூர்காரன் விட்டது கெடயாது...(அட ரியல் லைப்ல வெளியூர்க்காரன் ஆம்பள நெருப்பு சாமி..)  அதனால செம கண்பியுசன்..யாரா இருக்குனு..அன்னிக்கு நைட்...!


கனவுல அந்த பிகர் வந்தாங்க..என்ன விட அழகு..அவ பேர கேக்கறதுக்கு முன்னாடி அவக்கிட்ட என் காதல சொன்னேன்..முடியவே முடியாதுன்னு சொன்னவ என் பேச்சுலயும் அப்பறம் முக்கியமா என் அழகுளையும் மயங்கி என் காதல ஏத்துக்கிட்டா...ரெண்டு பெரும் உயிருக்குயிரா காதலிச்சோம்...அவ எனக்கு செல்லமா வெச்ச பேரு அஜ்ஜு புஜ்ஜு..நான் அவளுக்கு வெகு செல்லமா வெச்ச பேரு ஜிஜ்ஜு புஜ்ஜு...பீசு செம கியுட்ங்க..செம கட்டையும் கூட...நறுக்குன்னு பச்சை மொளகாய கடிச்ச மாதிரி காரமா இருந்தா...எங்க காதல ஒருநாள் எங்கப்பாகிட்ட சொல்லிட்டேன்..தேவர் மகன் சீன் எங்க வீட்லயும் நடந்துச்சு...எனக்கு அந்த பிகர கல்யாணம் பண்ணி வெக்கலைனா நீங்க போடற  மூக்கு பொடில பூச்சி மருந்த கலந்துருவேன்னு அழுதுகிட்டே சொன்னோன்ன எங்கப்பா பயந்து போய் எனக்கு அந்த பிகர கல்யாணம் பண்ணி வெச்சுட்டாரு... .

எனக்கும் அந்த முதல் இரவு வந்துச்சு... புடவைய இடுப்புக்கு கீழ சரிய விட்டுட்டு...நமக்குள்ள இதெல்லாம் இப்போ வேணாமே..கொஞ்ச நாள் பிரெண்டா பழகலாமேன்னு சூரியவம்சம் தேவயாணி மாதிரி அவ கேட்டப்போ, நான் பச்சையா அடிச்ச ஒரு  ஜோக்குக்கு....பாவம்க...ரொம்பதான் சிரிச்சிட்டா...அன்னிக்கு இனிமே இதுதான் என்னோட பராசக்தின்னு நான் அவளோட இத அதாம்ப அது பேரு என்ன உம்..மூக்கு..அத தொட்டு கும்புட்டு கன்னத்துல போட்டுகிட்டத பார்த்து சிரிக்க ஆரம்பிச்சவ காலைல ஏய் பத்திரம் என் குழந்த மெதுவா நடந்து போடின்னு சொல்ற வரைக்கும் சிரிச்சுகிட்டே இருந்தா...விழுந்து விழுந்து...(சொன்னதுல பாதி ஏ ஜோக்கு மாமோய்...)


உலகத்துலேயே ஆம்பளைங்களுக்கு கஷ்டமான சில வினாடிகள்னா அது முதலிரவு ரூம விட்டு வெளில வர்றதுதாங்க....அப்பா உக்காந்துருப்பாறு..அம்மா இருப்பாங்க..சொந்தகாரன்கெல்லாம் இருப்பாங்க...க்ரிப்பா வெளில வந்து கேசுவலா காமிச்சுக்கணும்...நானும் உசுர குடுத்து நடிச்சு அப்பாவியா காமிச்சுகிட்டேன்...ஆனா ஜுஜ்ஜு புஜ்ஜு ஒண்ணுமே நடக்காத மாதிரி எல்லாருக்கும் டீ குடுத்துட்ருந்தா...(இந்த பொம்பளைங்க எப்பவுமே இப்டிதான் பாஸ்..எதுவுமே தெரியாத மாதிரியும், நடக்காத மாதிரியும் காமிச்சுக்குவாங்க...ஆனா நைட்டு வந்துச்சு. அத பண்ணு, இத பண்ணுன்னு....அயோயோயோ...அந்த கொடுமை கல்யாணம் ஆனவங்களுக்குதான் தெரியும்....)

ஜுஜ்ஜு புஜ்ஜு ஈர வாசனையோட என் காதுக்கிட்ட வந்து நெறைய வெக்கத்தோட கொஞ்சம் செக்ச கலந்து கேட்டா..என்னடா சாப்ட்றேன்னு...நான் பதில் சொல்ல வாயேடுதப்போ டமார் டமார்னு ஒரு சத்தம்..என் ரூம் மெட் என்ன அவசரம் அவசரமா எழுப்பி விட்டு ரொம்ப குளிருது ஏசி ரிமோட் எங்க இருக்குன்னு கேட்டான்..  எனக்கு வந்துதே கோவம்...எந்திரிச்ச வேகத்துல அவன் கைல எடுத்து கொடுத்துட்டு மறுபடியும் குப்புற படுத்துட்டேன்...(வேற என்ன பண்ண முடியும் அவன...) அப்பதான் சார் தெரிஞ்சிது....எப்பவும் போல அப்பவும் கனவுன்னு...

நான் போட்ட மெய்லுக்கு இப்ப வரைக்கும் பதில் வரலைங்க..நினைத்தாலே இனிக்கும் படத்துல ரஜினி சாருக்கு அன்பரேனு பேசி ஒரு பிகர்கிட்டேர்ந்து கேசட் வந்தப்போ அவருக்கு எப்டி இருந்துருக்கும்னு எனக்கு அன்னிக்குதாங்க தெரிஞ்சுது..அட இதுவும் நல்லாதானுங்களே இருக்கு..அனுபவம்தானுங்களே வாழ்க்கை...அந்த ஜிகுடி பிகருக்கு ஒரே ஒரு விஷயம் சொல்லணும்...


உங்க அன்பு உள்ளத்திற்கு நன்றி..டி  ஜுஜ்ஜு புஜ்ஜு...


இப்படிக்கு


அஜ்ஜு புஜ்ஜு என்கிற

வெளியூர்க்காரன்

Posted by Veliyoorkaran - - 142 comments and to comment


இனி வெளியூர்க்காரன் எதுக்காக உயிரோட இருக்கணும்னு தெரிலங்க...இருந்த கடைசி வாய்ப்பும் பறிபோய்ருச்சு .எப்டியாச்சும் ரஜினியோட மொதோ பொண்ணு ஐஸ்வர்யாவ உஷார் பண்ணி கல்யாணம் கட்டிக்கிட்டு ரஜினி சாரோட ஒரு போட்டோ எடுத்து  எங்க அய்யாகிட்ட காட்டிட்டு வீட்டு ஹால்ல மாட்டணும்னு ஒரு லட்சியம் இருந்துச்சு வெளியூர்க்காரன் மனசுல...அத இந்த தனுஷ் சார் வந்து கெடுத்துபுட்டாரு .சரி கழுத போனா போகுது சௌந்தர்யாவ பிக் அப் பண்ணி அந்த போட்டோவ எப்டியாச்சும் எடுத்துபுடனும்னு இன்னொரு லட்சியத்தோட வாழ்ந்தப்பதான் அந்த செய்தி என் காதுல இன்னிக்கு இடியா வந்து எறங்குனுச்சு..ஐஸ்வர்யாவுக்கு அடுத்த வாரம் நிச்சயதார்த்தமாம்....


இதுக்கு மேல சோகம் என்னங்க இருக்கு என் வாழ்க்கைல..இது இன்னிக்கு நேத்து எடுத்த சபதம் இல்ல..நான் மூணாவது படிக்கும்போது எங்க ஊர் தைலம்மை தியேட்டர்ல டிக்கெட் எடுக்க போனப்போ அங்க ரஜினி ரசிகர் மன்ற தலைவர் ரஜினிசக்தி இந்த வயசுல மொதோ ஷோ கேக்குதாட உனக்குன்னு என் பொரடிலையே ஓங்கி பொடேர்னு அடிச்சு வீட்டுக்கு ஓடுறான்னு வெரட்டுணப்ப நான் அழுதுகிட்டே எடுத்த சபதம்க இது..எப்டியாச்சும் மெட்ராஸ் போய் ரஜினி சார் பொண்ண கல்யாணம் பண்ணி ரஜினி சாரோடையே உக்காந்து அவரோட எதாச்சும் ஒரு படத்த ப்ரிவியு ஷோல பார்த்துபுடனும்னு..பாருங்க இப்போ அது என்னோட மத்த எல்லா சபதத்த மாதிரியே நிறைவேறாமையே போய்டுச்சு..நீங்களே சொல்லுங்க...ரஜினி சாரோட பொண்ண கட்டிக்க என்னங்க தகுதி இல்ல எங்கிட்ட...(யோவ் பெட்ரோலு, நேத்து வந்து என்ன குருமா வெச்சு பொங்கிட்டு போனவன் மறுபடியும் வந்துரபோரான்யா...அஜிதுக்கே அப்புடி திட்டுனாங்கே..ரஜினி ரசிகர்களுக்கு நான் இப்புடி ஒரு கேள்வி கேட்டது தெரிஞ்சிது என் அட்ரஸ் கண்டுபுடிச்சு நேரா வீட்டுக்கு வந்து என்ன பரோட்டா போட்ருவாங்கே...).சபதம்தான் நிறைவேரலையே அப்பறம் என்ன ஹேருக்கு நீ உயிரோட இருக்கன்னு பட்டாப்பட்டி நெக்கலா மனசுக்குள்ள நெனைக்கறது எனக்கு மைன்ட் வாய்ஸ்ல கேக்குது...அவருக்கு என்னோட பதில்...இன்னும் கமலஹாசன் சாருக்கு ரெண்டு பொண்ணு இருக்காமே...!.. தேடல்தான சார் வாழ்க்கை.,    


அடுத்த வாரம் பிப்ரவரி 14..உலக காதலர்கள் தினம்...1999ல பன்னெண்டாவது முடிச்சப்போ மனசுக்குள்ள ஒரு வைராகியத்த எடுத்துகிட்டான் வெளியூர்க்காரன்...எப்டியாச்சும் அடுத்த வருஷம் பிப்ரவரி 14க்கு ஒரு பிகர உஷார் பண்ணி பட்டுகோட்டை மெரினா கூல் ட்ரிங்க்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ்க்கு  கூட்டிட்டு போய் ஒரு காபிய வாங்கி குடுத்து காதல சொல்லி வரலாறுல இடம் புடிக்கனும்னு...(நமக்கு அதுக்கு மேல ஏதும் ப்ளான் பண்றதுக்கு தைரியம் பத்தாது..தைரியம் மட்டும் இல்ல..அதுக்கு மேல என்ன பண்றதுன்னும் தெரியாது...உடம்பு பூரா அவ்ளோ குழந்தைத்தனம்..)


இந்த வருசத்தோட பத்து வருஷம் ஆய்டுச்சு...ஒவ்வொரு வருசமும் ஒவ்வொரு  சொதப்பல்கள்.ஒரு எட்டு வருஷம் பிகர் கெடைக்கல...ஒரு வருஷம் எனக்கு உடம்பு சரி இல்ல..ஒரு வருஷம் பிப்ரவரி 14 வியாழகிழமைல வந்துருச்சு...உங்களுக்கே தெரியும் வியாழகெலமைல நயன்தாராவே வந்து ப்ரொபோஸ் பண்ணாலும் துச்சமென மதிச்சு தூக்கி எறிஞ்சிருவான் வெளியூர்காரன்னு..(அந்த ரெண்டு வருசமும் பிகர் கெடைக்கலங்கறத எவ்ளோ அழகா சமாளிக்கறான் வெளியூர்க்காரன்...ச்சே...என் கண்ணே பட்டுரும் போலருக்கு...)


அதனால இத படிக்கற சிங்கப்பூர் வாழ் ஜிகுடி பிகருகளுக்கு ஒரு ரிக்குவெஸ்ட்.அம்மா தாயே....என்ன யாரோ ஒரு நாயா நெனைச்சு பிப்ரவரி 14 அன்னிக்கு என் கூட வந்து ரேபிள்ஸ் பிளேஸ் ஸ்டார் பக்ஸ்ல ஒரு காபி சாப்டுட்டு போங்கம்மா..ஒரு கன்னி பையனோட ஆசை நிறைவேறாமையே போய்ற கூடாதும்மா...அந்த ஒரே காரணத்துக்காக ஒரே ஒரு தடவ ஐ லவ் யு சொல்லிக்கறேன்..அத நீங்க காதுல கூட வாங்க வேணாம்..கண்டுக்காம எந்திரிச்சு போய் வாய கொப்புளிச்சிட்டு காரி துப்பிட்டு கெளம்பி போய்கிட்டே இருங்க..அதுக்கப்றம் உங்கள வெளியூர்க்காரன் எந்த தொந்தரவும் பட்டாப்பட்டி மேல சத்தியமா பண்ணமாட்டான்...


தாத்தா நீ பிப்ரவரி 14 லவ்வர்ஸ் டே கொண்டாடுனதில்லையான்னு என் பேரன் என்ன கேவலமா நாக்கு மேல பல்ல போட்டு அவ கேர்ள் பிரெண்ட வெச்சுகிட்டு கேட்டுபுட்டான்னா என்னால அதுக்கப்றம் தலைநிமிர்ந்து தன்மானத்தோட வாழ முடியாதுங்க..அதனால்தான் கேக்குறேன்...(இல்லைனாலும் கேப்பேன்...பிகர் உஷார் பண்ண நமக்கு காரணம் வேணும் அவ்ளோதான்..)அடுத்த வருஷம் பிப்ரவரி 14குள்ள எனக்கு கல்யாணத்த பண்ணி வெச்சுடுவாங்கே...அப்போ பொண்டாட்டிகிட்ட போய் ஐ லவ் யு சொல்றதுல என்னையா கிக் இருக்கு..அப்டியே சொன்னாலும் சரிங்க..இந்தாங்க இன்னும் கொஞ்சம் தேங்கா சட்னி வெச்சுக்கொங்கனு சொல்லிட்டு இந்த லூசுக்கு எப்ப பார்த்தாலும் இதே நெனைப்புதான்னு மனசுக்குள்ள நெனைச்சுகிட்டு மொளகா போடி எடுக்க சமயகட்டுக்கு போய்டுவா...சோ எப்டியாச்சும் இந்த வருஷம் யாரவது ஒரு பிகர்கிட்ட  ஐ லவ் யு சொல்லிரலாம்னு முடிவு பண்ணிட்டான் வெளியூர்க்காரன்...


ஷார்ட் நோட்டிஸ்ல இத அனவுன்ஸ் பண்ணதுக்கு அப்போலஜைஸ் கேட்டுகறான் வெளியூர்க்காரன்...(இந்த லூசுங்க இப்புடி  இங்கிலிஷ்ல பீட்டர் விட்டாதான் மடியும்..நீ கண்டுகாத ரோஸ்விக்கு ...)

சோ ஜிகுடி பிகருங்களுக்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பு...இன்னும் ஒரு வாரம் டைம் இருக்கு...நல்லா பொறுமையா யோசிச்சு ஒரு நல்ல முடிவா சீக்கிரமா இன்னிக்கு சாயங்காலத்துக்குள்ள எடுங்க..நீங்க எவ்ளோ அழகா இருந்தாலும் வருத்தபடாதீங்க..அத்தான் அட்ஜஸ்ட் பண்ணிகறேன்..ஆனா என்கிட்டே தப்பா நடக்க மட்டும் முயற்சி பண்ண வேண்டாம் என தன்னடக்கத்தோட எல்லா பிகருங்களையும் எச்சரிசுக்கறேன்..எனக்கு அதெல்லாம் சுத்தமா புடிக்காது என்பதை நாடறியும் என்பதால் அடக்க ஒடுக்கமாக நடந்து கொள்வது எல்லாத்துக்கும் நல்லது  என்பதையும் ஸ்டிரிட்டாக தெரிவித்து கொள்கிறேன்..ரெகமண்டேசன் கடிதங்கள் கண்டிப்பாக ஏற்றுகொள்ளபட மாட்டாது..முதலில் வருபவருக்கே முன்னுரிமை வழங்கப்படும்..


விண்ணப்பங்கள் பரிசீலனை குழுவால்  பரிசீலிக்கப்பட்டு (ரெட்டைவால்ஸ்,பட்டாப்பட்டி,ரோஸ்விக்,இல்லுமினாட்டி இந்த நாலு டோமருங்களும்தான் அந்த பரிசீலனை குழு..) முடிவுகள் சனிகிழமை மாலை அறிவிக்கப்படும்...


வெளியூர்க்காரன் கவுண்ட் டௌன் ஸ்டார்ட்ஸ்...1,2,3......( இப்டி பில்ட் அப் குடுத்தே செருப்படி வாங்கப்போறேன் பாரு..)


யோவ் பட்டாப்பட்டி...தூண்டில் போட்ருக்கேன்...எதாச்சும் ஒரு லூசாச்சும் மாட்டாமையா போய்டும்..


ஆமாம், நீ என்னையா நெனைக்கற என்னோட இந்த முடிச்சவிக்கிதனத்த பத்தி..

வெளியூர்க்காரன்..

Posted by Veliyoorkaran - - 83 comments and to comment


அசல் படம் தியேட்டர்ல முடிஞ்சோன்ன இருநூறு அஜித் ரசிகர்களுக்கு மத்தியில தன்னந்தனியா ஒரு குரல் இளைய தளபதி வாழ்க, சுறா வாழ்க ,தலை ஒழிகன்னு ஓங்கி ஒலிச்சுது..எந்த விதமான எதிர்ப்பு குரலும் இல்ல..ஒரு சின்ன முறைப்பு கூட இல்ல.படம் போடறதுக்கு முன்னாடி கத்தி ஆர்பாட்டம் பண்ணிகிற்றுந்த  எல்லா தலையும் நிமிர்ந்து பார்க்க கூட திராணி இல்லாம தொங்கி போய் அவமானத்தோட தியேட்டர விட்டு வெளியேறுனிச்சு ..இதாங்க படத்தோட ரிசல்ட்..இது நடந்த இடம் யிஷுன் கோல்டன் வில்லேஜ்  தியேட்டர்...அந்த குரலுக்கு சொந்தக்காரன்..உங்க வெளியூர்க்காரன்.. 

படம் எப்டி இருக்குன்னு பார்க்கறதுக்கு முன்னாடி என் பங்காளியளுக்கு (விஜய் ரசிகர்கள்...) ஒரு விஷயம் சொல்லிக்கணும்..மாப்ளைங்கள நாம டைனோசர்னு நெனைச்சு பயந்துகிட்ருந்தது ஒரு சிட்டு குருவி முட்டைகிட்ட..தக்காளி டொட்டோடொயின் டொட்டோடொயின்னு படம் புல்லா காமெடி பன்றாங்கேப்பா...இவனுங்களுக்கு போய் பயந்துகிட்டு வேட்டைக்காரன் ரிலீஸ் ஆனப்போ தலைமறைவா வாழ்ந்துட்டமேன்னு  அவமானத்துல கூனி குறுகி போய் நிக்கறான் வெளியூர்காரன்...நம்ம எல்லாருக்கும் இனி இவனுக அடிமை..தலை ரசிகன் எவனாச்சும் இனிமே ரோட்ல பார்த்தீங்கன்னா கண்ட எடத்துலயே பைக்க நிறுத்தி பளார்னு ஒரு அறைய கேள்வி கேக்காம அவன் கன்னத்துல போட்டுட்டு நீங்க போய்கிட்டே இருங்க..எவனும் எதிர்த்து ஒரு வார்த்தை கேக்கமாட்டான்...

தலை ரசிகர்களை வரிசையா நிக்க வெச்சு ஒரு கேள்வி...

அதென்ன எப்ப பார்த்தாலும் தலை தலைன்னு...உங்க தலைக்கு மட்டும்தான் தலை இருக்கா...நாங்கல்லாம்  அலுமினிய குண்டாவய கழுத்துல கவுத்துகிட்டா அலையறோம்...அடங்குங்கடா டேய்...சரி சரி உங்களையெல்லாம் பார்த்தாலே எனக்கு மூட் அவுட் ஆகுது..எல்லாம் லைன்ல வரிசையா வந்து நில்லுங்க...அண்ணன்..வெள்ளை சட்ட போட்ட அண்ணன்..நான்தான் லைன்ல நிக்க சொல்றேன்ல அப்பறம் என்ன ஸ்டைலு மயிரா சாய்ஞ்சு சாய்ஞ்சு நடந்துகிட்டு எச்ச பீடிய குடிச்சுகிட்டு நிக்கற..வந்து லைன்ல நில்லுன்னேன்..கடுப்பாகி பொளேர்னு இழுத்துடபோறேன்..அது என்ன தலைல காரகொலம்ப ஊத்தி வெச்சிருக்க..ஸ்டைலா...சரி போய் தொலை...வேட்டைகாரனோட ரிலீஸ் பண்ணா அசல் அட்டர் பிளாப் ஆயடும்னு பயந்துதானடி ரெண்டு மாசம் கழிச்சு படத்த ரிலீஸ் பண்ணீங்க.. ..உன் மனசாக்ச்சிய தொட்டு பதில் சொல்லு.படம் எப்டி இருக்கு...?...உனக்கு படம் புடிச்சிருக்கா...?...

இப்போ அசல் ...

என்னையா படம் பார்க்க வந்தா அஜீத்த வெச்சு பேசன் ஷோ காட்றீங்க...நாங்க அதையா பார்க்க வந்தோம்..அதென்ன அஜீத்த நடக்க விட்டு பின்னாடியே காமெராவ தூக்கிட்டு ஓடறீங்க..ஏன் வேற எத எடுக்கறதுன்னு தெரிலையா.... தலைமுடில கோபுரம் கட்டி சுருட்டு குடிக்கற மாதிரி போட்டோ ரிலீஸ் பண்ணீங்களே..அந்த படம் அசல எப்பையா ரிலீஸ் பண்ண போறீங்க...

சரண் சார்..உங்களோட படுகேவலமான படம் இனிமே  அல்லி அர்ஜுனா இல்ல..அசல்தான்..அஜித் எவ்ளோ பெரிய மாஸ் ஹீரோ.அவருக்கு ஒன்ரை வருஷம் கழிச்சு ஒரு படம் வருது.....இவ்ளோ எதிர்பார்ப்பு உள்ள ஒரு படத்துக்கு நாப்பது வருசத்துக்கு முன்னாடி உள்ள கிளைமாக்ச வெச்சுருகீங்களே உங்களுக்கு அசிங்கமா இல்ல..நீங்க உண்மையாவே மனசாச்சி  உள்ளவரா இருந்தா நேரா பிரபு வீட்டுக்கு போய் அவர் தொப்பைகிட்ட  மன்னிப்பு கேட்டுட்டு சினிமா பீல்ட விட்டு ஒதிங்கிடுங்க....

இந்த படத்தோட கதைய பீர்பால் அக்பர்கிட்ட சொன்னப்போ அக்பர் சொன்னாராம்...டேய் எழவு..இது பழைய கதைடா..புதுசா எதாச்சும் இருந்தா சொல்லுன்னு..ஆனா பாருங்க அக்பருக்கு இருந்த அறிவு நம்ம என்ன கொடும சரவணன் புகழ் பிரபுவுக்கு இல்லாம போச்சு..உங்ககிட்ட கேக்கணும்னு நெனச்சேன்...அஜித் அழகா இருகாரு..கூலிங் க்ளாஸ் போட்டுகிட்டு சாய்ஞ்சு சாய்ஞ்சு நடகராறு..நீங்க ஏன் சார் இதெல்லாம் பண்றீங்க...ப்ரோடியுசர்ணா என்ன வேணா பண்ணுவீங்களா..படம் பார்க்கறது நாங்க சார்..இந்த வெளாட்டேல்லாம் எங்க கைல வேணாம்...

பாவனா சமீரா ரெட்டி ..ஆவ்..கொட்டாவிதான் வருது...இதுக மொரகட்டைக்கு டபுள் மீனிங் டையலாக் வேற...(எதிர் அணி பிகருங்களையும் நாங்க பாரபட்சம் இல்லாம கலாய்ப்போம்..)

சம்பத்கிட்ட ஹீரோவோட ஸ்கிரிப்ட் பேட மாத்தி குடுத்துடாங்க போல..ஹீரோ பேச வேண்டிய பஞ்ச டயாலாக இவரே பேசி தீக்குராறு..தலை தலைன்னு இதனை தடவ சொல்றதுக்கு உங்களுக்கு தலைய சுத்தல சம்பத் சார்.. 

யூகி சேது..கோமாளிதனம்தான் ஆனா உங்க பேஸ் ரியாக்சன் நல்லாருக்கு..

படம் ஆரம்பிச்சு சரியா இருவது நிமிஷம் படம் நல்லாருக்கு...அது மட்டும்தான் நல்லாருக்கு...அதுகப்ரம்தான் நம்ம டொட்டோடொயின் சாங்..தக்காளி தியட்டரே சிரிக்குது ..என்னத்த சொல்ல..எனக்கு செத்த பாம்ப அடிக்க அலுப்பா இருக்கு சார்....

அஜித் ரசிகன்லாம் உடனே சென்னைக்கு வந்து நேரா நீலாங்கரை போய் இனிமே தல ரசிகன்னு வெளிய சொல்லிக்க மாட்டோம்னு கூட்டு சத்தியம் பண்ணிட்டு ,சின்ன அய்யா சஞ்சய் அய்யா காலுல விழுந்து மன்னிப்பு கேட்டுட்டு எல்லாம் ஓடி போயிருங்க...

மொத்தத்தில் அசல்..விஜய் ரசிகர்களுக்கு தலப்பாக்கட்டு பிரியாணி..

வெளியூர்காரன்... 

Posted by Veliyoorkaran - - 69 comments and to comment


இன்னிக்கு நைட் என் வீட்டு லிப்ட்ல ஏறும்போது என்கூட ஒரு பொண்ணும் வந்தாங்க..வெளியூர்காரன் நியாயபடி அவள பன்னுனுதான் சொல்லணும்...அதிகமா போனா 19 வயசுதான் இருக்கும்...ஆனா நான் பார்த்த வரைக்கும் 22  இருக்கும்னு சொல்லுவேன்..ப்ளூ கலர் ஜீன்ஸ், ரெட் கலர்ல கோடு போட்ட காலர் வெச்ச டி.ஷர்ட் போட்டு நச்சுன்னு நதியா கொண்டை போட்ருந்தா...ஹை ஹீல்ஸ்க்கு பதிலா முடிச்சி போட்ட டிசைன்ல ஒரு லெதர் ஷூ அவ காலையும் அழகாகிகிட்டு இருந்துச்சு...கழுத்துல செம கியுட்டான ஒரு செயின் போட்ருந்தா...செம லென்க்துங்க.அந்த செய்னோட டாலர்ல எஸ் னு போட்ருந்துச்சு..சங்கீதா,ஷர்மிலா இப்டி எதாச்சும் ஒரு பேரா இருக்கும் போலருக்கு...நல்ல வாசனை..என்சான்டியர் பவுடர்தான் யூஸ் பண்ணுவா போல...சோப்பு பியர்ஸ்...லிப்ட்ல கூட்டம் அதிகமா இருந்ததால நான் அவ்ளவா  கண்டுக்கல அந்த பொண்ண..தவிர எனக்கு பொண்ணுங்கள கண்ணுகொட்டாம சைட் அடிக்கறது புடிக்காதும்கறதும் ஒரு காரணம்..கிரௌண்ட் ப்ளோர்ல எலாரும் ஏறுனோம்..என் தாத்தா அவரோட கேர்ள் பிரெண்ட் என் ஆத்தாவ ஏமாத்தாம கல்யாணம் பண்ணிகிட்ட புண்ணியம் எல்லாரையும் செகண்ட் ப்ளோர்ல எறக்கி விட்ருச்சு..

இப்போ நானும் அந்த ஜிகுடியும் மட்டும்..நான் எறங்க வேண்டியது 21 வது ப்ளோர்ல..வெளியூர்காரனால குஷி தாங்க முடியல..இந்த கேப்ப யுஸ் பண்ணி எப்டியாச்சும் அந்த பொண்ணுகிட்ட ஐ லவ் யு சொல்றதுன்னு முடிவுக்கு வந்துட்டான்..(நமக்கு ஐ லவ் யு சொல்றதுக்கு ஒரு பொண்ணும், நல்ல சான்சும் கெடைச்சா போதும்..) பட் ஐ லவ் யு சொல்றதுக்கு முன்னாடி எதாச்சும் பேசி பிரெண்ட்ஷிப்ப வளர்த்துகிட்டாதான ஒரு கவுரவமா இருக்கும்..வெளியூர்காரன் நாகரீகமானவங்க...பொண்ணுங்கள நாசுக்கா கையாளுவான்...ஆகையினாலே அந்த மாதிரி சமயங்களில் ஆண்களால் பெண்களிடம் லிப்டில் காலம்காலமாக கேக்கப்படும் கேள்வியை வெளியூர்காரனும் கேட்டான்...எக்ஸ்கியுஸ் மீ ...நீங்க எந்த ப்லோர்னு...அப்போ 21 அப்டீன்னு வீர சிவாஜி பாய்சன் சாப்டுட்டு கட்டபொம்மன் குரல்ல பேசுன மாதிரி ஒரு பதில் வந்துச்சு..!!!

உச்சிமாங்காளி...இது என் பொண்டாட்டிய செல்லமா கூப்ட்ரதுக்கு நான் 6 வது படிக்கும்போது யோசிச்சு வெச்ச செல்ல பேரு..(கல்யாணம் ஆன அண்ணணுக எல்லாம் சரியா நைட் பதினோரு மணிக்கு பல்லுகில்லேல்லாம் சுத்தபத்தமா வெளக்கிட்டு உங்க பொண்டாட்டிமார்கள  செல்லமா உச்சிமாங்காளினு கூப்ட்டா நறுக்குன்னு எச்சில் வாசனையோட ஒரு லிப்ஸ் கிஸ் கருகி போன உங்க உதட்டுக்கு பரிசா கெடைக்கும்னு ஜக்கம்மா மேல சத்தியம் பண்ணி வெத்து பத்திரத்துல எழுதி குடுக்கறான் வெளியூர்காரன்... ) 


அப்டியாகபட்ட வேளையிலே, கற்போட வாழறத மட்டுமே லட்சியமா மேற்கொண்டு ஒரு பதிவிரதனா, ஆஞ்சநேயரோட ஒரிஜினல் பக்தனா, (அதாம்ப்பா...அசல் பக்தன்...அந்த வார்த்தைய கூட பயன்படுத்தமாட்டான் இந்த விஜய் ரசிகன்..) வாழ்க்கை படக சலனமில்லாம ஒட்டிகிட்டு இருந்தான் வெளியூர்காரன்...அந்த போன் கால் வர்ற வரைக்கும்...


ஹலோ ஸ்ருதியான்னு ஒரு குரல்..நானும் பதட்டத்துல பீசு மிஸ் ஆய்ட கூடாதேன்னு ஆமாம்னு சொல்லிட்டேன்...ஸ்ருதிங்கறீங்க..ஆனா ஆம்பள குரல்ல பேசறீங்கன்னு கலகலன்னு சிரிச்சது என் போன்..அவ கூட சேர்ந்து..பொம்பளபுள்ள சிரிச்சா போச்சுன்னு சும்மாவா சொன்னுச்சு என் அவ்வா...அவ்ளோ நாளா கட்டுசிட்டா கற்ப காவல் காத்துகிட்ருந்த வெளியூர்காரன் மனசு படீர்னு பஞ்சர் ஆகி பொசுக்குன்னு படுத்துருச்சு..எது என் அப்டியா...யோவ் குரலாயா அது..அயோயோ எப்டியா புரிய வெப்பேன் உனக்கு அதை..தேன க்ளோப் ஜாமூன்ல ஊற வெச்சு கொஞ்சம் முந்திரி பருப்ப தூவி அதை ஒரு ப்லூட்ல ஊத்தி எஸ்.ஜானகிய விட்டு ஊத சொன்னா வரும்ல ஒரு சவுண்டு...அது அந்த புள்ளயோட குரல்யா...அந்த குரலுக்கு மட்டும் கழுத்து இருந்துச்சுன்னா தக்காலி போன்லயே தாலிய கட்டி புள்ளைய பெத்துருப்பான் இந்த வெளியூர்காரன்..  


ஒரு வாரத்திற்கு பிறகு...


வேறென்ன நடந்துருக்கும்...2039 மெசேஜுகள்...அவுக செலவுல 359 மிஸ் கால்கள்...என் செலவுல விடிய விடிய கடலைகள்..கிளைமாக்ஸ்ல வெளியூர்காரன் காலடில அந்த பொண்ணு...ஆனா எவ்ளவோ கெஞ்சியும் என் உச்சிமாங்காளிய என்னால பார்க்க மட்டும் முடியலைங்க..ஒரு வழியா நான் பிரசன்ட்டா  வாங்கி வெச்சுருக்கற அந்த மொபைல் போன உன்ன பார்க்காம உன்கிட்ட எப்டி குடுக்கறதுன்னு பீலிங்கோட கேட்டோன்ன என் வீட்டு பப்பி மாதிரி தாவி குதிச்சு ஓடோடி வந்தா என் உச்சிமாங்காளி..அடுத்த நாள் பார்க்கறதா முடிவாயருச்சு...


அவ என்ன பார்க்க ஒத்துகிட்ட அடுத்த செகென்ட் நான் பண்ண விஷயம் எங்கம்மாவுக்கு போன் போட்டதுதான்...போன போட்டு சொல்லிட்டேன்..நான் கல்யாணம்னு ஒன்னு பண்ணா அது அந்த பொண்ணதான்னு ..அதுக்கு எந்த பொண்ணடான்னு  கேட்டாங்க...அதுக்கு காதல்ல ஜெயிச்சு  காட்ட போற ஆணவத்தோட நான் சொன்னேன்.. இன்னிக்கு நான் மொதொ மொதொள்ள பார்க்க போறனே..அந்த பொண்ணதான்னு ..அதுக்கு எங்கம்மா அப்பன மாதிரியே லூசா வந்து பொறந்துருக்கான் பாரு மூதேவின்னு கேசுவலா சொல்லிட்டு போன வெச்சிட்டு வெங்காயம் அரிய போய்ட்டாங்க...மனம் தளராத வெளியூர்காரன் கால் கிலோ பௌடரை பேப்பரில் மடித்து கொண்டு புறபட்டான் அந்த தேனிசை தென்றலை சந்திக்க...


கரெக்டா மூணு மணிக்கு கிண்டி ஒலிம்பியா டெக்னோ பார்க் என்ட்ரன்ஸ்ல வந்து வெயிட் பண்ணு...நான் ஒன் அவர் பெர்மிசன் போட்டுட்டு வந்து உன்ன பார்க்கறேன்னு மொபைல் மேல இருந்த ஆசைல என்கிட்டே கூவிருந்தா என் பச்சக்கிளி...அந்த உச்சிமாங்காளி..எப்போதும் ஒன்பது மணி ஆபிஸ்க்கு பத்து முப்பதுக்கெல்லாம் போய் நின்னு கடிகாரத்த வெக்கப்பட வெக்கற நான்,அன்னிக்கு எதோ டென்சன்ல மூணு மணிக்கு வர்றேன்னு சொல்லிட்டு லேட்டா ஒரு மணிக்குதான் போனேன்... அந்த பில்டிங்க்கு சைட்ல உள்ள இளனி கடைல ரெண்டு இளனி வாங்குனேன்.ஒன்னு குடிக்க இன்னொன்னு பேஷ பிரெஷ் ஆக்க...ஆமாம்ங்க..இளனில  மூஞ்சி கழுவுனா முகம் அழகா தெரியும்னு ஜெயலலிதான்னு ஒரு சினிமா கவர்ச்சி நடிகை (தக்காலி, கேப் கெடைக்கும்போதெல்லாம் போடுவோம்ல...) 1976 ல ஆனந்த விகடனுக்கு பேட்டி குடுத்தத மறக்காம இருந்து கப்புன்னு யுஸ் பண்ணிகிட்டான்  வெளியூர்க்காரன்.ஆனா ,ஒன்னும் பெருசா வித்யாசம் இல்லாம பழைய மாதிரியே எங்கப்பா முகச்சாடைல அசிங்கமாத்தான் தெரிஞ்சுது என் மூஞ்சி..ஒரு இளனி வாங்கி வண்டி கண்ணாடிய கூட கழுவி பார்த்தேன்..ம்ஹும்...உடனே என் அண்ணன் இப்டின்னு இளனிக்கார அண்ணன கேட்டேன்...அதுக்கு அவன் இளனிய காய வெச்சு தேங்கா நார எடுத்து செங்காமட்டைல தொட்டு பரபரன்னு மூஞ்சில தொலுரிய தேய்...அழகாயடுவன்னான் .நாரப்பய...எங்க ஊர்காரன் போலருக்கு..


கரெக்டா மூணு மணி...கண்ணுல “உச்சிமாங்காளி காலிங்.”..காதுல "வந்தால் மகாலக்ஷ்மியே..."..(என் ரிங் டோன்..)..அட்டன் பண்ணேன் ..எங்கட  செல்லம்  இருக்க  ...இது அவுக...உன்  இதயத்துல ...இது நான்..ச்சீ  பொருக்கி ..இது அவுக...ஆமாம் ..உன்  இதய பொருக்கி...இது நான்..டேய் டைம் ஆச்சுடா சொல்லுடா எங்க இருக்க நீ...என் உச்சிமாங்காளி சஸ்பென்ஸ் தாங்க மாட்டாளேன்னு சொல்லிட்டேன்...ஒலிம்பியா டெக் பார்க்கோட ப்ரண்ட் என்ட்ரன்ஸ்ல நிக்கறேன் வாடின்னு..வந்தா...


கந்தசாமில விக்ரம் சேவல் கோழி வேஷம் போட்டுட்டு வர்றத நீங்கல்லாம் பார்த்துருபீங்க..ஆனா ஒரு போந்தாகோழி விக்ரம் வேஷம் போட்டுக்கிட்டு சுடிதார்ல வர்றத நீங்க பார்த்துருகீங்களா..வேணாம்...கற்பனைல கூட  நெனைச்சு பார்த்துடாதீங்க...தாங்க மாட்டீங்க...பல அவமானங்களையும் காதல் தோல்விகளையும் டம்மி பீசுகளின் கொடூர பார்வைகளையும் துச்சமென தாங்கி வந்த வெளியூர்காரனாலையே அந்த பீசொட அழக தாங்கிக்க  முடியல..குண்டுங்கர வார்த்தையோட அக்காங்க அவ....அவ எனக்கு  லிப்ஸ் கிஸ் குடுக்கனும்ங்கர ஆசைல என்னதான் இறுக்கி கட்டி புடிச்சாலும் என் லிப்ஸும் அவ லிப்ஸும் கிட்டக்கவே போகாதுங்க...ஒரு மீட்டர் தூரத்துல அந்தரத்துலையே ஸ்டாப் ஆய்டும்..அவ்ளோ குண்டு..(இதுக்கு மேல விளக்கமா  சொன்னா மஜா மல்லிகா மாதிரி செக்சியா எழுதறான் வெளியூர்காரன்னு பதிவு வெளியிட்ருவான்   பட்டாப்பட்டி ...)மொத்ததுல வெளியூர்க்கரனுக்கே புடிக்கலைனா அது எவ்ளோ பெரிய டம்மியோட அக்கா பீசுங்கரத நீங்களே புரிஞ்சுக்கங்க..    

உலகத்துலேயே ஈசியான விஷயம் ஒரு பிகர உஷார் பண்றது..நல்லா நாலு ஜோக்க நறுக்குன்னு தட்டி விட்டா படக்குன்னு மடில விழுந்துடுவாலுக..ஆனா அதே மாதிரி உலகத்துலேயே ரொம்ப கஷ்டமான விஷயம் உஷார் பண்ண ஜிகுடிய கயட்டி விடறது..நீங்கல்லாம் இத படிக்கும்போது தலைய ஆட்டும்போதே தெரியுது..அது எவ்ளோ பெரிய கஷ்டம்னு...

ஆனா வெளியூர்காரனுக்கு ரெண்டுமே அசால்ட்டு பத்திரி ரைடுங்க...சிம்பிளா ஒரு கேள்வி கேட்டேன்..பயந்து போய் மொபைல விட்டுட்டு  தலை தெறிக்க ஓடிட்டா. அது என்ன கேள்வின்னு கேக்கறீங்களா... ..


என்ன கல்யாணம் பண்ணிக்கிறியாடி உச்சிமாங்காளின்னு...


வெளியூர்க்காரன்.. 

Posted by Veliyoorkaran - - 36 comments and to comment


உலகத்துலேயே பொண்ணுங்க சொன்னா மட்டுமே அழகா இருக்கற ஒரே வார்த்தை இது மட்டும்தாம்ங்க..ஆண்கள் நாம என்னதான் பொண்ணுங்கள விட அழகுலையும் திறமைலையும் படிப்புலையும் பண்புலையும் இன்னும் இங்கு விட்டு போன மற்றும் சில இத்யாதிகள்ளையும் பெண்களால தொடவே முடியாத அளவுக்கு உயரத்துல இருந்தாலும் இந்த வேவேவேவே விசயத்துல நாம பொண்ணுங்ககிட்ட தோத்து போறோம்ங்கரத ஈகோ இல்லாம ஒத்துகிட்டுதாங்க ஆகணும்... ஆமாம்க...ஒரு பொண்ணு உதட்ட சுளிச்சு வேவேவேவே சொல்லும்போது...ப்ச்.அதாங்க..அது மட்டும்தாங்க...ஆனா பாருங்க இதே வார்த்தைய நான் தனியா கண்ணாடி முன்னாடி நின்னு சொல்லி பார்த்தேன்...வண்டலூர் ஜூ ல ஆண் கொரில்லா குரங்கு, பெண் குரங்க செக்சுக்கு கூப்டுற மாதிரி இருந்துச்சு...அதனால இது பெண்களுக்கு மட்டுமே சொந்தமான வார்த்தைன்னு வெளியூர்காரன் அங்கீகரிசிட்டான்.இது பெண்கள் சாம்ராஜியத்தோட ஆட்சி மொழி...ஒரு பொண்ணு வேவேவேவே சொல்லும்போது எந்த ஒரு ஆணா இருந்தாலும் அவன் மனசு தடுமாருவாங்கறது வெளியூர்க்காரன் சைகாலஜில ப்ரூவ் பண்ணப்பட்ட உண்மை... இப்ப பதிவுக்கு போவோம்..

ஆனா இந்த வெவேவேவால வெளியூர்காரன் பட்ட பாட்டதாங்க உங்களால தாங்கிக்கவே முடியாது..உங்களுக்கே தெரியும் வெளியூர்க்காரன் இளைய தளபதி  விஜயோட அதிதீவிர ரசிகன்னு..எந்த விஜய் படம் பார்த்தாலும் அந்த படத்துல வர்ற விஜய் கேரக்டர் மாதிரியே கொஞ்ச காலம் வாழ்ந்து வருவான் வெளியூர்க்காரன்கரதையும்  நாடறியும்..நான் சொல்லபோற சம்பவம் நடந்தது சச்சின் ரிலீஸ் ஆன காலகட்டம்..அப்பல்லாம் எந்த அழக யாருகிட்ட பார்த்தாலும் உடனே ஓடி போய் பாராட்டி சொல்லிடறது வழக்கம் ..பக்கத்துக்கு வீட்ல குனிஞ்சி கோலம் போடற ஆண்ட்டி,ஷால் போடாம சுடி போட்டுகிட்டு மிடுக்கா வர்ற கூட படிக்கற ஷீலா,ஜீன்ஸ் பேன்ட்ட டைட்டா போட்டுக்கிட்டு லேடீஸ் பேக ஆட்டிகிட்டே வர்ற சரளா இவங்க எல்லார்கிட்டயும் போய் முறையே கோலம் நல்லாருக்கு,சுடிதார் நல்லாருக்கு,லேடீஸ் பேக் நல்லாருக்குன்னு பாராட்டி சொல்லி அலப்பறைய குடுத்து அப்லாசுகள அள்ளிகிற்றுந்த காலகட்டம்..கட் பண்ணீங்கன்னா...   

ஒரு பொண்ண பார்த்தேங்க...அவ ரெண்டு கண்ண பார்த்தேங்க..அயோயோ.அயோயோயோயோ..அதே அதே அதே அதேதாங்க....அப்போதான் அதையும் பார்த்தேங்க..எது..? எதையா..இருயா சொல்றேன்..தோழிகள் புடை சூழ சிரிச்சு பேசிகிட்டே வந்த அந்த தேவதை பீசு திடீர்னு அவ பிரெண்டு அந்த குள்ளச்சிய பார்த்து வேவேவேன்னு பலிப்பு காமிச்சா..ச்சே,என் சித்தப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்தப்போ அவருக்கு எப்டி வலிசிருக்கும்னு எனக்கு அப்போதாங்க தெரிஞ்சுது...ஒரு ஸ்மால் கட்டிங் பலிப்புல,பயபுள்ள என்ன இழுத்துபோட்டு அவ காலடில கவுத்தீட்டாங்க...விட்டனா..நம்மதான் சச்சின் ஆச்சே...நேர அந்த புள்ளைகிட்ட போனேன்..எக்ஸ்கியூஸ் மீ..எனக்கு எதாச்சும் அழகா தெரிஞ்சா உடனே போய் பாரட்டிருவேன்.நீங்க இப்போ வேவேவேணு சொன்னது உங்கள விட ரொம்ப அழகா இருந்துச்சுன்னு சொல்லிட்டேன்..நாம யாரு...சச்சின்ல.... 

அந்த மாதிரி சீனுக்கு எல்லா படத்துலயும் கூட நிக்கற பிரெண்ட்ஸ் வாய கையாள மூடிட்டு சிரிச்சுகிட்டே ஷாக்கிங்கா   ஒரு எபக்ட் குடுப்பாங்க..ஆன அன்னிக்கு விதயாசமா நடந்துச்சு..எல்லாம் பேயடிச்ச மாதிரி நின்னாலுக .நாம்தான் ரொமான்ஸ் காமெடி மூட்ல இருந்தமா...அவளுக ரியாக்சன் ஒரு பெரிய விஷயமா தெரியல .அப்பதாங்க நானே எதிர்பார்க்காத மாதிரி ஒரு விஷயம் நடந்துச்சு...சட்டுன்னு திரும்பி அந்த வேவேவே பலிப்புக்காரி என் மொபைல் நம்பர கேட்டா..தக்காளி அந்த செகண்ட் இருக்கே..மறுபடியும் வாழ்க்கைல வரவே வராதுயா..காலுல விழுந்தாலும் பிகர் மடியாத நமக்கு தானா வந்து காலடியில ஒரு பிகர் விழுதேன்னு அங்காலம்மனுக்கு நன்றி சொல்லிட்டு என்னோட ஆபீஸ் விசிட்டிங் கார்ட எடுத்து நீட்னேன்..(காதல்ல விளம்பரம் ரொம்ப முக்கியம் பிரதர்..) 

அன்னிக்கு ஈவினிங் வரைக்கும் மொபைல கைல வெச்சுகிட்டே வெயிட் பண்ணிகிட்டே இருந்தேன்..நாதாரி பயலுக அன்னிக்குன்னு பார்த்து எந்த நாயும் எனக்கு கால் பண்ணவே இல்ல..கரெக்டா மணி 7.48pm...ஜெர்மனியின் செந்தேன்மலரே....(என்னோட ரிங்க்டோன்..)..அட்டென்ட் பண்ணேன்.....................!

யாருன்னே தெரிலங்க...ஒருத்தன் போன் பண்ணி எங்கப்பாவே பச்சை பச்சையா திட்டுனான்...நான் அப்பவும் சொன்னேன்...நீங்க என் அப்பாவ திட்றத பத்தி எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல பிரதர்...பட் நீங்க யாருன்னு சொல்லிட்டு திட்டுங்கன்னு..சண்டாளப்பாவி..கோவக்காரன் போலருக்கு...என்னையும் திட்ட ஆரம்பிச்சிட்டான்...உங்களுக்குத்தான் என்ன பத்தி தெரியுமே..கன்னாபின்னான்னு கோவம் வந்தா போன கட் பண்ணிட்டு நேரா பாத்ரூம் போய் பேன்ட்லையே  யூரின் இருந்து பயத்த கண்ட்ரோல் பண்ணிடுவேன்னு..அன்னிக்கும் அப்டிதான் பண்ணேன்..ஆன என் கேட்ட நேரம்..!

அந்த புள்ளைக்கு அஞ்சு அண்ணனுகளாம்...உலகத்துலேயே கொடுமையான விஷயம் அழகான ஜிகுடிகளுக்கு முரட்டு அண்ணணுக இருக்கறதுதான்..ஏன்டா செகண்ட் லைன் ஆக்டிவேட் பண்ணோம்னு அன்னிக்குதாங்க பீல் பண்ணேன்.ஒருத்தன் திட்டிகிட்டு இருக்கான்..இன்னொருத்தன் செகண்ட் லைன்ல வெயிட் பண்ணிகிற்றுகான்..ஒரு நிமிஷம் இருங்கன்னேன் உங்க தம்பி வெயிட் பண்றாருன்னு 2 வது அண்ணன் சார்கிட்ட(இன்னும் பயம் போகல.) அனுமதி வாங்கிட்டு 3 வது அண்ணன்கிட்ட போனேன்..ஆன சும்மா சொல்லகூடாது...அவர் ரொம்ப டீசெண்டுங்க..அந்த குடும்பத்துலயே நல்ல வேலைல இருக்கறது அவரு மட்டும்தானாம்..(வெல்டிங் பட்டறை வெச்சுருகாராம்..).திட்றதுக்கு முன்னாடி இன்ட்ரோ பண்ணிகிட்டாறு.ஆன கெட்ட வார்த்தைல திட்றதுல அவரு எந்த கம்ப்ரமைசும் பண்ணிக்கல...தொழில் நேக்கா திட்னாறு..எனக்கெல்லாம் திட்டு வாங்கறது புதுசிள்ளதான்..ஆன அன்னிக்கு திட்டு வாங்கினது ரொம்ப புதுசா இருந்துச்சு...புதுசு புதுசா திட்னாங்கே...வேவேவே நல்லாருக்குன்னு சொன்னியாம்ல..உனக்கு தாடையே இல்லாம பேத்து எடுதுருவேன்னு 4 வது அண்ணன் ரொம்ப அன்போட எச்சரிச்சாறு..அப்போ ரெண்டாவது  அண்ணன் மறுபடியும் லைன்ல வந்தாரு.. 

நீ நாளைக்கு உன் ஆபீஸ் வாடி அங்க வெச்சுக்குவோம் கச்சேரியன்னு மிரட்டல் விடுத்தாறு....நானும் வழக்கம் போல வாய் சும்மா இல்லாம உங்களுக்கு எப்டின்னேன் என் ஆபீஸ் தெரியும்னு கேட்டுபுட்டேன்...அதுக்கு ரொம்ப அழகா பாசத்தோட ஒரு பதில் சொன்னாரு...நீதானடா விசிட்டிங் கார்ட என் தங்கச்சிக்கு குடுத்த எருமைமாட்டு உலக்கைன்னு... 

இப்பவும் கூட அந்த அஞ்சு அண்ணனுங்களுக்கும் குடும்பத்துல எதாச்சும் பிரச்சனைனா கூட எனக்குதான் போன் பண்ணி திட்டுவாங்கன்னா பார்த்துகோங்க..அவ்ளோ பழகிட்டோம்..அந்த மூணாவது அண்ணன் இந்த பொங்கலுக்கு கூட கால் பண்ணி உன் கால வெட்டி காக்கைக்கு போட்ருவண்டா நாயேன்னு திட்னாறு..ஏதோ அன்னிக்கு பொங்கல் சரியா பொங்கல போலருக்கு..ஆன அதோட விட்டுடேங்க...விஜய பார்த்து விஜயா வாழற வழக்கத்த...

இப்பல்லாம் பொண்ணுங்க வேவேவேன்னு பலிப்பு காமிச்சா ரொமான்ஸ் மூடே வரமாட்டேன்குதுங்க...

பயத்துல யுரின்தான் வருது..கருமம் அதுவும் பேன்ட்லையே ..

வெளியூர்க்காரன் 

There was an error in this gadget