- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 40 comments and to comment


பணிரெண்டு ஆயிரம் பேர் வந்து படிச்சிட்டு போயிருக்கீங்க..ரொம்ப நன்றி..ரெண்டாயிரத்துல ஒரு தடவ நன்றி சொன்னேன்..இப்போ இங்க...இந்த இடைவெளியில நான் பெருமையா சொல்லிக்கற மாதிரி  பெருசா எதையும் எழுதி கிழிச்சிடல....ஆனா மன்மோகன் சிங்லேர்ந்து விஜய் வரைக்கும் நெறைய பேர கிழிச்சிருக்கேன்...கொஞ்சம் அரசியல் ,கொஞ்சம் சினிமா ,கொஞ்சம் லவ்...இத தவிர நான் வேற எதையும் எழுதுனது இல்ல..எழுத முயற்சி பண்ணவும் இல்ல..வர்றத ஒழுங்கா எழுதுவோம்னு ஒரு சின்ன ஆசை..


நெறைய பேர் வந்து சொல்லிட்டு போயிருக்கீங்க...வெளியூர்க்காரன் வந்து படிச்சிட்டு ரொம்ப சந்தோசமா சிரிச்சிட்டு போறேன்னு..வெளியூர்க்காரன் படிச்சிட்டு நான் சிரிக்கரத பார்த்து பயந்து போய் என் பொண்டாட்டி என்ன டைவொர்ஸ் பண்ற முடிவுக்கு வந்துட்டான்னு ஒரு நண்பர் வந்து சொல்லிருந்தாரு.ரொம்ப சந்தோசமா இருந்துச்சு சார்..நீங்க இப்டி சந்தோசமா சிரிக்கணும்..உங்க வைப் உங்கள டைவொர்ஸ் பண்ணிட்டு ...சரி அத விடுங்க...அது எதுக்கு இப்போ...எங்க விட்டேன்...உம்...வெளியூர்காரன் நூறு சதவிதம் நீங்க சிரிக்கரதுக்காகவும் உங்கள சந்தொசபடுதரதுக்காகவும் மட்டுமே  எழுதபட்ற ஒரு வலைப்பூ...நீங்க சந்தோசமா சிரிச்சிட்டு போனீங்கன்னா அது போதும்..!


இங்க சில பேருக்கு நன்றி சொல்லணும்...!!


வெளியூர்க்காரனுக்கு பொட்டு வெச்சு வெளியூர்க்காரன்னு பேர் வெச்சு புது சட்ட (டெம்ப்ளேட்)  வாங்கி குடுத்து மடியிலேயே வெச்சு பாசத்தோட  இன்னிக்கு வரைக்கும் கண்ணும் கருத்துமா பார்த்துகிட்டு வர்ற வெளியூர்க்கரனின் தாய்மாமா நண்பர்  திரு.தமிழ்குமார் அவர்களுக்கு என் நன்றி...தொடர்ந்து இந்த பயலே  நீங்களே பார்த்துக்கோங்க தமிழ்..எழுதற வேலைய மட்டும் நான் பார்த்துக்கறேன்..!!


ரெட்டைவால்ஸ்..வெளியூர்க்காரனோட நக்கல்ல பாதி இவனோடது..நாங்க கலாய்ச்ச  காண்டுல சாபம் விடரவங்க இவனுக்கும் கொஞ்சம் விடுங்க...!!


மத்தபடி சொல்லனும்னா இங்க யார்மேலயும் எனக்கு வருத்தம் இல்ல..ஏன்னா பெரும்பாலும் யாரையும் இங்க நான் மதிக்கறது இல்ல..ஆனா சில ஆசைகள் இருக்கு..இத படிக்கறவங்களுக்கு இது அதிர்ச்சியா கூட இருக்கலாம்..ஏன்னா நான் சொல்லபோரவங்கள்ள பெரும்பாலான எழுத்தாளர்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் பரிட்சயம் இல்லாதவர்கள்.அல்லது அறிமுகம் இல்லாதவர்கள்..எனக்கும் இவங்களுக்கும் உள்ள தொடர்பு..அவங்களோட எழுத்து மட்டுமே..நான் அவங்கள பின்னோட்டங்கல்ள்ள கூட பாராட்னது இல்ல..தூரத்துல நின்னு ரசிச்சதோட  சரி..!!


அனுஜன்யா சாரோட வடபழனி சரவணபவன்ல சூடா ஒரு சுகர்லெஸ் காபி ஜாலியா கலாய்ச்சிகிட்டே சாப்டனும்...வசந்த கால பறவை சிவா சாரோட லவ் ஸ்டோரிய சத்யம் தியேட்டர் வாசல்ல உக்காந்து வாய பொளந்துகிட்டு ஆசையா கேக்கணும். கேபிள் அண்ணனோட உக்காந்து அடையார் அஞ்சப்பர்ல கொத்து பரோட்டா சாப்டுகிட்டே நெறைய அட்வைஸ் கேக்கணும்...புலவன் புலிகேசி சாரோட மெரினா பீச்ல காலை நேரத்துல  வாக்கிங் போய்கிட்டே எனக்கு பதிவுலகத்துல உள்ள சில ஆதங்கங்கள சொல்லணும்..இலங்கை பதிவர் திரு.மாதவராஜ் சார் டேய் இந்த பய வெளியூர்காரன் நல்லாதாண்டா எழுதரான்னு  ஒரு வரி என்ன பத்தி அவரோட வலைப்பூல எழுதணும்...திரு. லோஷன் சாரோட தோளுல கைய போட்டுக்கிட்டு புல் சைஸ்ல ஒரு போட்டோ எடுத்து பத்திரமா வெச்சுக்கணும்.. அண்ணாமலையான் ஸ்வாமிகிட்ட பாப்கார்ன் தின்னுகிட்டே தமிழ் சினிமா சரியில்ல சார்னு சொல்லி அவர கடுப்பாக்கி அவர் கோவமா சப்போர்ட் பண்ணி  பேசறத ரசிச்சு கேக்கணும்...வால் பையனோடையும் ராஜனோடையும் பெசன்ட் நகர் பீச்ல உக்காந்து பீர் அடிச்சுகிட்டே நறுக்குன்னு நக்கலா நாத்திகம் பேசணும்...இதுல எத்தன நிறைவேற போகுதுன்னு எனக்கு தெரியல...ஆனா இதுல பாதி நடந்துச்சுன்னாலும் நான் ரொம்ப சந்தோசபடுவேன்...ஏன்னா நான் நல்ல எழுத்தாளனா இல்லையான்னு எனக்கு தெரியாது..ஆனா நான் நல்ல வாசகன்..!!


வெளியூர்க்காரனோட   பதிவுகள படிச்சிட்டு சிரிச்சிட்டு போன எல்லாருக்கும் மீண்டும் என்னோட நன்றிகள்..உங்கள எந்த வரிகளாச்சும் காயப்படுதிருந்தா சின்னபயலுக விளையாட்டா கலாசுரானுகன்னு வெளியூர்க்காரனையும் ரெட்டைவால்சையும் மன்னிச்சு விட்ருங்க...பட் எங்க பதிவுகள படிக்கறப்போ கோவம் வர்ற மாதிரி பீல் பண்ற நண்பர்கள் தயவு செஞ்சு கோவத்த அடக்கிகிட்டு யார்கிட்டயும் சொல்லாம வெளியே போயிருங்க...


கோவப்படீங்கன்னு  எங்களுக்கு  தெரிஞ்சது இங்கயே கொன்னு புதைச்சிருவோம்..!!வெளியூர்க்காரன்

40 Responses so far.

 1. Anonymous says:

  உன்னொட பதிவுல எம்பேரப் போடரதில்லையினு
  காரமடை ஜோசியர் மேல சத்தியம் பண்ணிட்டேன் நானு..

 2. @@@பட்டாப்பட்டி என்னோட செல்லம்யா..எல்லாரும் சிரிக்கறதுக்கு வெளியூர்காரனுக்கு வருவாங்க..நான் சிரிக்கறதுக்கு பட்டாபட்டிக்குதான்யா வருவேன்..நான் உன் நக்கலுக்கும் நையாண்டிக்கும் அடிமைடா செல்லம்..!!!

 3. மிக்க மகிழ்ச்சி

 4. @@அண்ணாமலையான் said...
  மிக்க மகிழ்ச்சி///

  வாங்க சார்..இன்னிக்கு யாரையும் கலாய்க்கமாட்டோம்...கலாய் ப்ரீ டே..!!! :)

 5. அப்பாவி says:

  எதுக்கு தீடீர்னு நெஞ்ச நக்கர பதிவு?ம்ம் உச்சி மாங்காளி fix ஆயுடிச்சா?

 6. @@அப்பாவி said...
  எதுக்கு தீடீர்னு நெஞ்ச நக்கர பதிவு?ம்ம் உச்சி மாங்காளி fix ஆயுடிச்சா?///

  இன்னிக்கு பொண்ணு பார்க்க போயிருக்காங்க..பேர கூட சொல்லிடாங்க...அனேகமா பிக்ஸ் ஆய்டும்னு நெனைக்கறேன்.வெளியூர்காரன் கூடிய சீக்கிரம் உச்சிமாங்காளிய விழுந்து விழுந்து லவ் பண்ண போறான்..நெஜமாவே.....!! :)

 7. ///கோவப்படீங்கன்னு எங்களுக்கு தெரிஞ்சது இங்கயே கொன்னு புதைச்சிருவோம்..!!///

  அட பாவி மக்கா !! திருந்த சான்ஸே இல்லையா???

 8. ஆகா வெளியூரு... நீ ரொம்ப நக்கல் புடிச்ச ஆளுன்னு தெரியும்... ஆனா இப்புடியும் நக்குவே-ன்னு இன்னைக்குத் தான்யா தெரியும்...

  அடிச்சு ஆடு.

 9. தமிழ்குமார் says:

  வெளியூர்காரனுக்கு வாழ்த்துக்கள்.இதெல்லாம் உங்க திறமைக்கு கம்மின்னு மொக்க போட மாட்டன்.உங்களோட எல்லா பதிவையும் படிசுருகன் நிறைய சிரிக்க முடியும்,உங்களோட உவமைக்கு நான் ரசிகன். இப்ப இருக்க டென்சன்ல அஜித்கிட்ட உங்களோட வவேவேவே,உச்சிமாங்காளி பதிவுகல படிச்சு காமிச்சா தல நடந்து நடந்து சிரிப்பாரு. உங்க பதிவ படிக்கும் போதும் பத்து நிமிஷம் crazy mohan படம் பார்த்த மாதிரி இருக்கும்,ஆனா crazy mohan
  படத்தயே வார வாரம் பாக்க முடியாது.அடுத்த தளத்திற்கு போங்க வெளியூர்க்காரன். இதே நையாண்டியோட வேற வேற தளத்துல எழுதுங்க.அங்கயும் கலக்குங்க.உங்களோட ஆசைய இந்த பதிவுல போட்ருகிங்க,எனக்கு வெளியூர்கரனோடு வலைபதிவ பத்தி பேசிகிட்டே பீர் அடிக்கிற சுகம் வாரா வாரம் கிடைக்கும்னு நினைகிறன்.

  இது தாய் மாமனோட சீர்.

 10. பட்டாபட்டிய Anonymous ஆகுன பெரும உன்னையே சேரட்டும்

 11. @@@@ஜெய்லானி said...
  அட பாவி மக்கா !! திருந்த சான்ஸே இல்லையா???////

  திருந்தனுமா.?..யாரு.?..எதுக்கு...?....என்ன சார் சொல்றீங்க...!!...திருந்தரதுன்னா என்னா...?

 12. @@@@ ரோஸ்விக் said...
  அடிச்சு ஆடு...////

  சரிங்க்ணா..அண்ணா சரிங்க்னோவ்...அண்ணா அண்ணா சரிங்கன்னோவ்...!!!!

 13. @@@@ தமிழ்குமார் said...
  அடுத்த தளத்திற்கு போங்க வெளியூர்க்காரன். இதே நையாண்டியோட வேற வேற தளத்துல எழுதுங்க.அங்கயும் கலக்குங்க.இது தாய் மாமனோட சீர்.//
  ////////////////////////////////////

  ஹா...ஹா...சரிங்க தமிழ்...பண்ணிடலாம்...(இந்த வாரம் சனிக்கிழமை கண்டிப்பா தேக்கால அடிக்கறோம்....சில பல பியர்கள..!!).. :)

 14. @@@@@@பட்டாப்பட்டி..////

  பட்டாப்பட்டி = வெளியூர்க்காரன் .,, வெளியூர்க்காரன் = பட்டாப்பட்டி ..!! :)

 15. @@@மங்குனி அமைச்சர் said...
  பட்டாபட்டிய Anonymous ஆகுன பெரும உன்னையே சேரட்டும்.////
  ///////////////////////////////

  ஆகா கிருத்துருவம் புடிச்சவன் வந்துட்டான்யா...!!...யுரின் போரவங்கல்லாம் ஜிப்ப மூடிட்டு ஒடுங்க...இவன் எமகாதக பய..!! :)

 16. அடிச்சு ஆடுங்க தல!

 17. @வால்பையன்
  அடிச்சு ஆடுங்க தல!///

  யார அடிக்கணும்..சிவபெருமானையா இல்ல முருகனையா...சொல்லுங்க அடிச்சு ஆடிர்லாம்...நமக்கு வால்பையனோட நேயர் விருப்பம்தான் முக்கியம்...!!

 18. //இன்னிக்கு பொண்ணு பார்க்க போயிருக்காங்க..பேர கூட சொல்லிடாங்க...அனேகமா பிக்ஸ் ஆய்டும்னு நெனைக்கறேன்.//


  ஆகா.ஒரு dead body confirm . ஆனா,ரெண்டுல அது யாருன்னு தான் தெரியல.ஆனா ஒன்னு,அந்த பொண்ணுக்கு அச்டமததுல சனி சட விரிச்சு ஆடுதுன்னு மட்டும் தெரியுது. :)
  பாவம்.
  யாரு பெத்த புள்ளையோ.அது தல எழுத்த பாரு.
  anyway,congrats friend.(ithu umakku.antha ponna nenacha enakku innum paavama than irukku. :) )

 19. @@@Rettaivaals....///
  antha ponna nenacha enakku innum paavama than irukku. :) ////

  Cool buddy... :)
  (vaalu payale...)

 20. //ரொம்ப சந்தோசமா இருந்துச்சு சார்..நீங்க இப்டி சந்தோசமா சிரிக்கணும்..உங்க வைப் உங்கள டைவொர்ஸ் பண்ணிட்டு ...சரி அத விடுங்க...அது எதுக்கு இப்போ...//

  யோவ்!உமக்கு கல்யாணம் ஆகலைன்றதுக்காக இவ்ளோ கொலை வெறி ஆகாதுய்யா. :)

 21. வெளியூர்க்காரன் படிச்சிட்டு நான் சிரிக்கரத பார்த்து பயந்து போய் என் பொண்டாட்டி என்ன டைவொர்ஸ் பண்ற முடிவுக்கு வந்துட்டான்னு ஒரு நண்பர் வந்து சொல்லிருந்தாரு.ரொம்ப சந்தோசமா இருந்துச்சு சார்......

  PAAAVI MANUSAAA....THAT WON'T HAPPEN.......NOWADAYS...I AM READING YOUR BLOG IN OFFICE OR IN LATE NIGHT HOURS...

  ENNNNNAAA VILLA THANAM.....
  .
  .
  .
  .
  I ENJOYED READING அழ வெக்கரானுகடா வெளியூர்க்காரா..!! -அஜித்....GOD...THATS NON STOP COMEDY SARAVEDI...
  .
  .
  .
  RAJKUMAR

 22. ஆனா சில ஆசைகள் இருக்கு..இத படிக்கறவங்களுக்கு இது அதிர்ச்சியா கூட இருக்கலாம்...

  I TOO HAVE SOME ஆசைகள்...ONE DAY YOU SHOULD COME TO DUBAI...I WILL TAKE YOU TO DESERT SAFARI...40 MINS DUN BASHING IN "LAND CRUISER"...FOLLOWED BY 1 HOUR BELLY DANCE WITH APPLE FLAVOR SHISHA....FOLLOWED BY WINE AND DINE....TILL YOU GET FAINT....

 23. @@Zero to Infinity said...
  I TOO HAVE SOME ஆசைகள்...ONE DAY YOU SHOULD COME TO DUBAI...I WILL TAKE YOU TO DESERT SAFARI..FOLLOWED BY 1 HOUR BELLY DANCE WITH APPLE FLAVOR SHISHA....FOLLOWED BY WINE AND DINE....TILL YOU GET FAINT..////

  Thanks dude...Sure I will come oneday... :)
  (ஆனா பெல்லி டான்ஸ்லாம் பார்க்க மாட்டேன்னு மாரியாத்தா மேல சத்தியம் பண்ணி குடுதுருக்கேனே...சரி பரவால்ல விடுங்க...நமக்கு பெல்லி டான்ஸ்தான் முக்கியம்..)

 24. தளபதி படம் எவ்வளவோ பார்த்த ஆளு நீ... அதுகளையே தாங்கிட்டே... இது உனக்கு எம்மாத்திரம்...?

 25. சச்சின் குறித்த பதிவு உன்கிட்ட இருந்து வரணும்னு நம்ம நாட்டு மக்கள் விரும்புராய்ங்க... சீக்கிரமா போட்டு விடுப்பா...

 26. @@@ரோஸ்விக் said...
  சச்சின் குறித்த பதிவு உன்கிட்ட இருந்து வரணும்னு நம்ம நாட்டு மக்கள் விரும்புராய்ங்க... சீக்கிரமா போட்டு விடுப்பா...////

  ரெட்டை போட்ட போட்லையே அந்த டோமர் அக்கௌண்ட டெலிட் பண்ணிட்டு ஓடிருச்சு..ஏன்யா செத்த பாம்ப அடிச்சிகிட்டு...அதுவும் இல்லாம தல இருக்கப்ப வால் ஆட கூடாது....தலைதான் ஸ்பாட்ல எறங்கி கலாசிடுச்சே...அப்பறம் என்ன..??

 27. @பட்டாப்பட்டி...
  யோவ் பேர போடுயா...காரமடை ஜோசியர் காலுல விழுந்து நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்...!!

 28. ரைட்.. போட்டாச்சு...

 29. நாளைக்கு சனி நீராட்டு விழா...
  வருவதென்றால் ரோஸ்விக்கிட்ட சொல்லுமையா

 30. பங்காளி, எதோ சாதிச்சுபுட்டியாம்ல..., ட்ரீட்டு கீட்டு ஒன்னும் கெடையாதா...? வெள்ளிகிழமை வேற... பாத்து பண்ணுப்பா. நன்றின்னு சும்மா வாயிலேயே வாசிச்சா எப்புடி...? :)) வாழ்த்துக்கள் வெளியூர்காரரே...!

 31. நானும் ரொம்ப நாளா பாத்துகிட்டு தான் அப்பு இருக்கேன். அருவா எடுப்பேன், ஆட்டோ அனுப்புவேன்னு ரொம்பதான் சிலும்பிகிட்டு இருக்க. பாத்து சூதானமா இருந்துக்கடியோவ். காலம் கேட்டு கெடக்குது...!

 32. பங்காளிகளா, ஆட்டத்துல நானும் கலந்துக்கலாமா...? (இன்னொரு அடிமை சிக்கிட்டான்னேல்லாம் சொல்லப்படாது). ஏதாவது நல்ல பதவி இருந்தா தர்றது...! ரேட்டு தனியா பேசிக்கலாம். நானும் ரௌடிதான்யா, செத்துக்குங்கப்பா...!

  பதிவு கலக்கல். உங்க சண்டை அதவிட கலக்கல்
  ******************

  இவன் கிட்ட ஐடியா கேக்குது பாரு ...உருப்பட்டுரும்! இவனே ரொம்ப நாள் வெப்பன்ஸை கைல வச்சிக்கிட்டு யாரைப் போடலாம்னு சுத்திட்டுருக்கான்! தளபதி...மன்னருக்கு அறிவுஜீவிகள் என்றால் ஆகாது என்பது தெரியும் தானே...இவரை சற்று கவனி!
  ( ஜீவி சார்!இது மன்னராட்சின்னாலும் நாங்க அடிமை முறையை ஒழிச்சுட்டோம்!இங்க நிறைய டாபருங்க என் பதவியை கவிழ்க்க அலையுதுங்க...அந்தப்புரத்தோட கொத்தா அள்ளிட்டு போக ரெடியாயிருக்கானுங்க!உங்களுக்கு உளவு துறைல போஸ்டிங் போட சொல்றேன்!)

 33. @@அறிவு GV
  நானும் ரொம்ப நாளா பாத்துகிட்டு தான் அப்பு இருக்கேன். அருவா எடுப்பேன், ஆட்டோ அனுப்புவேன்னு ரொம்பதான் சிலும்பிகிட்டு இருக்க. பாத்து சூதானமா இருந்துக்கடியோவ். காலம் கேட்டு கெடக்குது...!////

  இங்க வந்து இந்த வெட்டி நியாயம்லாம் பேசக்கூடாதுப்பு...இங்க பூரா தீவிரவாதிக நடமாட்டம் மட்டும்தான் இருக்கும்...உங்கள பார்த்தாலும் பச்சை புள்ளைய கடத்தி கொண்டு போய் விக்கற ஆளுமாதிரிதான் தெரியுது...சட்டுபுட்டுன்னு வந்து அந்த உளவுதுரைல சேர்ந்துட்டு மகளிர் அணில போய் ஆசிர்வாதம் வாங்கிடுங்க..!!

 34. @Veliyoorkaran
  இங்க வந்து இந்த வெட்டி நியாயம்லாம் பேசக்கூடாதுப்பு...இங்க பூரா தீவிரவாதிக நடமாட்டம் மட்டும்தான் இருக்கும்...உங்கள பார்த்தாலும் பச்சை புள்ளைய கடத்தி கொண்டு போய் விக்கற ஆளுமாதிரிதான் தெரியுது...சட்டுபுட்டுன்னு வந்து அந்த உளவுதுரைல சேர்ந்துட்டு மகளிர் அணில போய் ஆசிர்வாதம் வாங்கிடுங்க..!!
  //

  வெளியூரு.. சனிக்கிழம.. ஆட்டு பிரியாணி சாப்பிடாம , கை, கால் பர பறங்குது..
  ஏதாவது ஆடு இருக்காய்யா?

 35. @@@பட்டாபட்டி..
  வெளியூரு.. சனிக்கிழம.. ஆட்டு பிரியாணி சாப்பிடாம , கை, கால் பர பறங்குது..ஏதாவது ஆடு இருக்காய்யா?//

  அதான்யா நானும் தேடிகிற்றுக்கேன்..நானும் போய் ஒவ்வொருதனாயா சண்டைக்கு இழுத்துதான் பார்க்கறேன்....ஒரு பய சண்டைக்கு வரமாட்டேங்கறான்...எரிச்சலா வருது..உனக்கு எதாச்சும் பீஸ் மாட்னா சொல்லு...தேங்கா பால் நெறையா ஊத்தி மட்டன் பாயா பண்ணலாம் இன்னிக்கு..வாரம் வாரம் பிரியாணி போர் அடிக்குது...!

 36. மங்குனி வந்தாவாவது.. போட்டு தள்ளலாம்.. தக்காளி..
  டாஸ்மார்க்ல இருந்து வெளிய வர மாட்டிங்குது..

 37. ///இவனே ரொம்ப நாள் வெப்பன்ஸை கைல வச்சிக்கிட்டு யாரைப் போடலாம்னு சுத்திட்டுருக்கான்!///
  கொஞ்சம் வெளக்கமா சொன்னா பரவால்ல. :)

  ///உங்களுக்கு உளவு துறைல போஸ்டிங் போட சொல்றேன்///
  உளவுத்துறை எல்லாம் வேணாங்க. பொழுது போவாது, போர் அடிக்கும். வேற ஏதாவது.....?

  ///.உங்கள பார்த்தாலும் பச்சை புள்ளைய கடத்தி கொண்டு போய் விக்கற ஆளுமாதிரிதான் தெரியுது///
  அது எப்டிங்க பேர பாத்த ஒடனியே கண்டுபுடிச்சீங்க...? சங்கத்துக்குள்ள வந்த ஒடனே உங்களுக்கு ஒரு 'பொட்டி' ஜாஸ்தியா அனுப்பிடுறேன். நம்ம அருமை பெருமையெல்லாம் இன்னும் கொஞ்சம் வெளியே எடுத்துவிடுங்க. அப்பா தான் அந்தபுரத்துல 'கவனிப்பாங்க'. :)

  ///டாஸ்மார்க்ல இருந்து வெளிய வர மாட்டிங்குது..///
  இன்னிக்கு டாஸ்மாக் லீவுண்ணுல கேள்விபட்டேன், நமக்கே தெரியாம ஷட்டர தூக்கிட்டானுவலா...? டாய், எடுங்கடா ஆட்டோவ...!

 38. Bogy.in says:

  புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
  உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
  ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

  தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

  இவன்
  http://www.bogy.in

 39. @@Bogy.In
  புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
  உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
  இவன் http://www.bogy.in
  ///////////////////////////////////

  பேரு புடிக்கல,,போட முடியாது...போய் தமிழ்ல பேர மாத்திட்டு வந்து சொல்லுங்க..அதென்ன பேரு போகி...பேர கேட்டோன்னையே எனக்கு மூட் அவுட் ஆகுது..

 40. ggggggggggggggssssssssssssssssss

There was an error in this gadget