- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 67 comments and to comment
போன வாரம் காதலர் தினம் அன்னிக்கு எனக்கு ஒரு வாழ்த்து மெயில் வந்துச்சுங்க...ஆமாம்..வழக்கம் போல ஒரு பிகருகிட்டேர்ந்துதான்...வெளியூர்காரனுக்கு நித்தம் ஒரு காதல் கடிதமும், நொடிக்கு பல பரிசு பொருட்களும் ஜிகுடிங்ககிடேர்ந்து வர்றது வாடிக்கைதான்னாலும் அந்த மெயில் என்னை கொஞ்சம் ஈர்துச்சு..காரணம் எனக்கு தினந்தோறும் வர்ற காதல் கடிதங்கள்ள உங்கள உயிருக்கு உயிரா காதலிக்கறேன்..உங்க அழகுல மயங்கி கெறங்கி போய் கெடக்குறேன்...அப்டி இப்டினுதான் போட்ருக்கும்..ஆனா இந்த கடிதத்துல கொஞ்சம்  வித்யாசமா எனக்கு வெளியூர்க்காரனின் எழுத்துக்கள் புடிச்சிருக்கு..நான் உங்க எழுத்த காதலிக்கறேன்னு போட்ருந்தா...(நம்மகிட்ட ஒரு பிகர் டைம் கேட்டாலே அந்த பிகரே உஷார் பண்ணி லவ் பண்ண முயற்சி பண்ணுவோம்..இப்டி வந்து வாண்டடா சிக்குனா விட்ருவோமா...)..வானத்துல பறக்க ஆரம்பிச்சான் வெளியூர்க்காரன்...ஆனா, அந்த ஜிகுடி யாரு...!


யோசிச்சான் வெளியூர்க்காரன்..நிமிந்து உக்காந்து,குப்புற படுத்து,மல்லாக்க வேடிக்க பார்த்து,எங்கப்பா போட்டோவ கிட்டத்துல வெச்சு பார்த்து,(ஷாக்ல  எதாச்சும் ஐடியா வருதான்னு..).. அட ஏங்க.. ரெண்டு பீர போட்டு கூட யோசிச்சு பார்த்தேன்..நமக்கு வாழ்க்கைல இருந்ததே ரெண்டு கேர்ல் பிரெண்டுங்க..அதுல ஒருத்தி என்ன அப்பவே மதிக்க மாட்டா..அவளுக்கு இப்பதான் கல்யாணம் வேற ஆனுச்சு..இன்னொருத்திக்கு இதெல்லாம் சுத்தமா புடிக்காது.இன்னும் சொல்லபோனா அவளுக்கு நான் ப்ளாக் எழுதறதே தெரியாது....வேற எவளையும் வெளியூர்க்காரன நிழல கூட நெருங்க வெளியூர்காரன் விட்டது கெடயாது...(அட ரியல் லைப்ல வெளியூர்க்காரன் ஆம்பள நெருப்பு சாமி..)  அதனால செம கண்பியுசன்..யாரா இருக்குனு..அன்னிக்கு நைட்...!


கனவுல அந்த பிகர் வந்தாங்க..என்ன விட அழகு..அவ பேர கேக்கறதுக்கு முன்னாடி அவக்கிட்ட என் காதல சொன்னேன்..முடியவே முடியாதுன்னு சொன்னவ என் பேச்சுலயும் அப்பறம் முக்கியமா என் அழகுளையும் மயங்கி என் காதல ஏத்துக்கிட்டா...ரெண்டு பெரும் உயிருக்குயிரா காதலிச்சோம்...அவ எனக்கு செல்லமா வெச்ச பேரு அஜ்ஜு புஜ்ஜு..நான் அவளுக்கு வெகு செல்லமா வெச்ச பேரு ஜிஜ்ஜு புஜ்ஜு...பீசு செம கியுட்ங்க..செம கட்டையும் கூட...நறுக்குன்னு பச்சை மொளகாய கடிச்ச மாதிரி காரமா இருந்தா...எங்க காதல ஒருநாள் எங்கப்பாகிட்ட சொல்லிட்டேன்..தேவர் மகன் சீன் எங்க வீட்லயும் நடந்துச்சு...எனக்கு அந்த பிகர கல்யாணம் பண்ணி வெக்கலைனா நீங்க போடற  மூக்கு பொடில பூச்சி மருந்த கலந்துருவேன்னு அழுதுகிட்டே சொன்னோன்ன எங்கப்பா பயந்து போய் எனக்கு அந்த பிகர கல்யாணம் பண்ணி வெச்சுட்டாரு... .

எனக்கும் அந்த முதல் இரவு வந்துச்சு... புடவைய இடுப்புக்கு கீழ சரிய விட்டுட்டு...நமக்குள்ள இதெல்லாம் இப்போ வேணாமே..கொஞ்ச நாள் பிரெண்டா பழகலாமேன்னு சூரியவம்சம் தேவயாணி மாதிரி அவ கேட்டப்போ, நான் பச்சையா அடிச்ச ஒரு  ஜோக்குக்கு....பாவம்க...ரொம்பதான் சிரிச்சிட்டா...அன்னிக்கு இனிமே இதுதான் என்னோட பராசக்தின்னு நான் அவளோட இத அதாம்ப அது பேரு என்ன உம்..மூக்கு..அத தொட்டு கும்புட்டு கன்னத்துல போட்டுகிட்டத பார்த்து சிரிக்க ஆரம்பிச்சவ காலைல ஏய் பத்திரம் என் குழந்த மெதுவா நடந்து போடின்னு சொல்ற வரைக்கும் சிரிச்சுகிட்டே இருந்தா...விழுந்து விழுந்து...(சொன்னதுல பாதி ஏ ஜோக்கு மாமோய்...)


உலகத்துலேயே ஆம்பளைங்களுக்கு கஷ்டமான சில வினாடிகள்னா அது முதலிரவு ரூம விட்டு வெளில வர்றதுதாங்க....அப்பா உக்காந்துருப்பாறு..அம்மா இருப்பாங்க..சொந்தகாரன்கெல்லாம் இருப்பாங்க...க்ரிப்பா வெளில வந்து கேசுவலா காமிச்சுக்கணும்...நானும் உசுர குடுத்து நடிச்சு அப்பாவியா காமிச்சுகிட்டேன்...ஆனா ஜுஜ்ஜு புஜ்ஜு ஒண்ணுமே நடக்காத மாதிரி எல்லாருக்கும் டீ குடுத்துட்ருந்தா...(இந்த பொம்பளைங்க எப்பவுமே இப்டிதான் பாஸ்..எதுவுமே தெரியாத மாதிரியும், நடக்காத மாதிரியும் காமிச்சுக்குவாங்க...ஆனா நைட்டு வந்துச்சு. அத பண்ணு, இத பண்ணுன்னு....அயோயோயோ...அந்த கொடுமை கல்யாணம் ஆனவங்களுக்குதான் தெரியும்....)

ஜுஜ்ஜு புஜ்ஜு ஈர வாசனையோட என் காதுக்கிட்ட வந்து நெறைய வெக்கத்தோட கொஞ்சம் செக்ச கலந்து கேட்டா..என்னடா சாப்ட்றேன்னு...நான் பதில் சொல்ல வாயேடுதப்போ டமார் டமார்னு ஒரு சத்தம்..என் ரூம் மெட் என்ன அவசரம் அவசரமா எழுப்பி விட்டு ரொம்ப குளிருது ஏசி ரிமோட் எங்க இருக்குன்னு கேட்டான்..  எனக்கு வந்துதே கோவம்...எந்திரிச்ச வேகத்துல அவன் கைல எடுத்து கொடுத்துட்டு மறுபடியும் குப்புற படுத்துட்டேன்...(வேற என்ன பண்ண முடியும் அவன...) அப்பதான் சார் தெரிஞ்சிது....எப்பவும் போல அப்பவும் கனவுன்னு...

நான் போட்ட மெய்லுக்கு இப்ப வரைக்கும் பதில் வரலைங்க..நினைத்தாலே இனிக்கும் படத்துல ரஜினி சாருக்கு அன்பரேனு பேசி ஒரு பிகர்கிட்டேர்ந்து கேசட் வந்தப்போ அவருக்கு எப்டி இருந்துருக்கும்னு எனக்கு அன்னிக்குதாங்க தெரிஞ்சுது..அட இதுவும் நல்லாதானுங்களே இருக்கு..அனுபவம்தானுங்களே வாழ்க்கை...அந்த ஜிகுடி பிகருக்கு ஒரே ஒரு விஷயம் சொல்லணும்...


உங்க அன்பு உள்ளத்திற்கு நன்றி..டி  ஜுஜ்ஜு புஜ்ஜு...


இப்படிக்கு


அஜ்ஜு புஜ்ஜு என்கிற

வெளியூர்க்காரன்

67 Responses so far.

 1. அத்தனையும் கனவா.. அதானே பார்த்தேன். நம்மாளு வாயத்திறந்தாலே பிகரெல்லாம் பத்து கிலோமீட்டரு தள்ளி ஓடிடுமே. எப்படி இவருக்கு கல்யாணம் ஆச்சுன்னு கன்பியூஸ் ஆயிட்டேன்.

  அதான் கனவுன்னு தெரிஞ்சு போச்சுல, அப்புறம் என்ன அஜ்ஜு புஜ்ஜு, டிஜ்ஜு புஜ்ஜுன்னு, போய் பல்ல வெளக்கிட்டு காப்பிய குடி மாமு..

  :)

 2. யோவ்...நான் போஸ்ட் பண்ணி ரெண்டு நிமிஷம் கூட ஆகலயேயா...அதுக்குள்ள வந்து என் காதல கசக்கலேன்னா உங்களுக்கு தூக்கம் வராதோ...ஏன் சாமி இந்த ரெத்த வெறி..!.

 3. //துக்குள்ள வந்து என் காதல கசக்கலேன்னா உங்களுக்கு தூக்கம் வராதோ//

  பின்ன, நாங்கெல்லாம் ஒரு அட்டுப்பிகருக்கே நாயா அலையறோம். இவரு மூக்கத்தொட்டு பராசக்திம்பாறாம். என் குழந்தை பாத்து போம்பாறாம். காலைல ரொமான்ஸா காதுகிட்ட பேசுவாங்கலாம்.. இதையெல்லாம் படிச்சா ஒரு ஃபிகர் இல்லாத பேச்சலர் மனசு எவ்வளவு பாடு படும்?? அதுதான் இந்த காண்டு..

 4. கனவுல முதலிரவுவரை போயாச்சா!! பேஷ்..பேஷ்..ரொம்ப நல்லாகீது..

 5. லோகு said...
  பின்ன, நாங்கெல்லாம் ஒரு அட்டுப்பிகருக்கே நாயா அலையறோம். இவரு மூக்கத்தொட்டு பராசக்திம்பாறாம்.//
  மூக்கதொட்டு பராசக்தின்னு கும்புட நான் என்ன மூளைகேட்டவனா...என்னையா லோகு இவ்ளோ வெள்ளந்தியா இருக்க...மூக்கன்னு சொல்லுவோம்..நீங்களா புரிஞ்சுக்கணும்..எதுவா இருக்கும்னு...!!

 6. @லோகு said...இதையெல்லாம் படிச்சா ஒரு ஃபிகர் இல்லாத பேச்சலர் மனசு எவ்வளவு பாடு படும்?? அதுதான் இந்த காண்டு.///
  செல்லம் நீ என் ஜாதிடா...உனக்கு ரெட்டைகிட்ட சொல்லி நமிதா நலவாரியத்துக்கு தலைவரா அறிவிக்க சொல்றேண்டா செல்லம்..உன் பீலிங்க்ஸ் எனக்கு மட்டும்தாண்ட செல்லகுட்டி புரியும்...!!

 7. @ஜெய்லானி said...
  கனவுல முதலிரவுவரை போயாச்சா!! பேஷ்..பேஷ்..ரொம்ப நல்லாகீது..//
  அயோயோ பார்மாலிட்டி வாசன அடிக்குதே..இங்க கம்மேன்ட்ல வந்து கலாய்ச்சிட்டு போகணும் ஜெய்லானி சார்..நல்லாருக்குன்னு மட்டும் சொல்லாதீங்க..கலாய்ப்போம்....!!! :)

 8. // உங்க அழகுல மயங்கி கெறங்கி போய் கெடக்குறேன்...அப்டி இப்டினுதான் போட்ருக்கும்..ஆனா இந்த கடிதத்துல கொஞ்சம் வித்யாசமா எனக்கு வெளியூர்க்காரனின் எழுத்துக்கள் புடிச்சிருக்கு..நான் உங்க எழுத காதலிக்கறேன்னு போட்ருந்தா...//

  அட ராமா.உம்ம திட்டி தான எப்பயும் மெயில் வரும்(அதுவும் கெட்ட வார்த்தைல)?இது மட்டும் எப்படி?ஒரு வேளை மெண்டலா இருக்குமோ?அட விடு மக்கா,உமக்கு சரியா தன் இருக்கும்.


  // எங்கப்பா போட்டோவ கிட்டத்துல வெச்சு பார்த்து,(ஷாக்ல எதாச்சும் ஐடியா வருதான்)//

  தப்பு பண்ணிடீறு பங்காளி.கண்ணாடிய பாத்துகிட்டு யோசிச்சு இருந்தீருன்னா ஐடியா இல்ல,ஹார்ட் அட்டாக்கே வந்து இருக்கும்.எங்களுக்காவது நிம்மதி கேடசுருக்கும்.

  // வேற எவளையும் வெளியூர்க்காரன நிழல கூட நெருங்க வெளியூர்காரன் விட்டது கெடயாது...//

  யாரும் நெருங்கலைன்னு சொல்லும் ஓய்!வீணா யாருமே நம்பாத பில்ட் அப் எல்லாம் கொடுத்துக்கிட்டு....

  // முடியவே முடியாதுன்னு சொன்னவ என் பேச்சுலயும் அப்பறம் முக்கியமா என் அழகுளையும் மயங்கி என் காதல ஏத்துக்கிட்டா...//

  பங்காளி,இந்த மயங்கின்னு சொன்னீக பாத்தீகளா அது வரைக்கும் சரியாத்தேன் போச்சு.அதுக்கு அப்புறம் என்ன அது “காதல எத்துகிறது ?”

  ஒரு வேள,உம்ம மூஞ்ச க்ளோஸ் அப்ல பாத்து பயந்து போய் மயங்கி,அந்த சித்ரவத தாங்காம,தப்பிக்கவும் வேற வழி தெரியாம,தற்காலிகமா தப்பிச்சா போதும்னு நெனச்சுகிட்டு சரின்னு சொல்லி இருக்குமோ?

  // அயோயோயோ...அந்த கொடுமை கல்யாணம் ஆனவங்களுக்குதான் தெரியும்....//

  அதுதான் உமக்கு ஆகலைல.அப்றோம் என்ன scenu வேண்டி கெடக்கு? கல்யாணம் ஆன மாதிரி கனவு வந்ததுக்கே இந்த அலும்பா? உமக்கு எல்லாம் கல்யாணம் ஆனா?கடவுளே,மக்கள் நலனுக்காகவாவது இந்தப் பயபுல்லைக்கு கல்யாணமே நடக்கக்கூடாது.அப்பாடி,எப்படியோ கோத்து விட்டாச்சு...

  // நான் போட்ட மெய்லுக்கு இப்ப வரைக்கும் பதில் வரலைங்க..//

  அப்பாடி.வயித்துல பால வார்தீருயா வெளியூரு.
  ஹெ ஹெ ஹெ.....இதுக்கு அப்புறம் என்ன நடக்கும்னு உங்களுக்கு சொல்லவே வேண்டியதில்ல வாசகர்களே.ஏன்னா பயபுள்ள ஜாதகம் அப்படி.

 9. வெளியூரு சும்மா பின்னி எடுத்துட்டப்பா... வாழ்த்துக்கள்...

 10. // வேற எவளையும் வெளியூர்க்காரன நிழல கூட நெருங்க வெளியூர்காரன் விட்டது கெடயாது...//

  கிடைக்காததுக்கு இப்படி ஒரு சாக்கா? இது உமக்கே நியாயமா!!

 11. @ILLUMINATI said...//
  எலேய் அயோக்ய படுவா..அதென்ன நீ எல்லா பயலையும் ஒரு பக்கத்துக்கு கலாய்க்கற...எல்லாத்தையும் படிச்சு முடிக்கறதுக்குள்ள நெஞ்ச வலிக்குதுயா ..எலேய் ரெட்டை.சும்மாவே இருக்கியேடா எடுபட்ட பயலே.....இவனுக்கு எதாச்சும் தண்டனை குடுறா.....பக்கம் பக்கமா கமென்ட் எழுதறதுக்கு..இல்லைனா தேவை இல்லாம ராணுவ புரட்சி பண்ணி மகளிர் அணிய கைப்பற்ற வேண்டி வரும்...!!!

 12. @அண்ணாமலையான் said...
  வெளியூரு சும்மா பின்னி எடுத்துட்டப்பா... வாழ்த்துக்கள்...//
  அண்ணாமலையான் அண்ணன், வராதவுக வந்துருகியே..வந்ததுக்கு நாலு வார்த்தை நறுக்குன்னு கலாசிட்டு போனிகன்னா மனசுக்கு சந்தோசமா இருக்கும்...பின்னி எடுத்துட்ட..கலக்கிட்ட...இது எல்லாம் எல்லார் ப்லாகுளையும் இருக்கும்..வெளியூர்காரன்கிட்ட மனசு விட்டு கலாசிட்டு போங்க...மனுசன மனுஷன் கலாசிக்கரதுதான சாமி வாழ்க்கை....!!

 13. என்ன நெஞ்சு வலிக்குதா?ஒரு வேளை ஹார்ட் அட்டாக்கா இருக்குமோ.அப்பா,தொல்ல ஒளிஞ்சது..

  //அதென்ன நீ எல்லா பயலையும் ஒரு பக்கத்துக்கு கலாய்க்கற...//

  ஏதோ,நம்மால முடிஞ்சது பங்காளி.அப்புறம் படிச்சுட்டு ஒண்ணுமே சொல்லாம போய்டீறேன்னு நீரு நாள பின்ன வருத்தப் படக்கூடாதுல்ல.அதுக்குதான்.

 14. @ ஜெய்லானி said...
  கிடைக்காததுக்கு இப்படி ஒரு சாக்கா? இது உமக்கே நியாயமா!!//

  பரவால்ல..எதோ ட்ரை பண்றீங்க..ஆனா ரெட்டியோட அரசாங்கத்துல இத இன்னும் ராவா எதிர்பார்க்கறோம்..இப்ப விடுங்க..இதெல்லாம் பிராக்டிஸ்லதான் வரும்..கலாய்க்கறதுங்கறது தவம் மாதிரி..அனுபவிச்சு பண்ணனும்..(நன்றி திரு ப்ரியமுடன் வசந்த் அவர்கள்...)

 15. // வெளியூர்காரன்கிட்ட மனசு விட்டு கலாசிட்டு போங்க...மனுசன மனுஷன் கலாசிக்கரதுதான சாமி வாழ்க்கை....!!//
  யோவ்!என்ன நீரு அங்க ஒண்ணு பேசுரீறு?இங்க ஒண்ணு பேசுரீறு?

 16. @ILLUMINATI said...
  ஏதோ,நம்மால முடிஞ்சது பங்காளி.அப்புறம் படிச்சுட்டு ஒண்ணுமே சொல்லாம போய்டீறேன்னு நீரு நாள பின்ன வருத்தப் படக்கூடாதுல்ல.அதுக்குதான்.//
  பாரேன் இத தன்னிலை விளக்கம் குடுக்குது..அதுக்காக பதிவ விட பெருசா கம்மென்ட் போடறது எந்த ஊரு நியாயம்...என்ன இது பெரிய மனுஷதனமா இருக்கு ராஸ்கல்...!!(Just I am kidding buddy..I really like all ur comments..You are the only one who always enjoys the whole article by highlighting the key points..Keep doing it to all buddies... :) )

 17. @ ILLUMINATI said...
  //யோவ்!என்ன நீரு அங்க ஒண்ணு பேசுரீறு?இங்க ஒண்ணு பேசுரீறு?//
  நான் பேசறது உனக்கு புரிஞ்சிடுச்சுண்ணா நீ ராணுவ அமைச்சரா ஆய்ட மாட்டியா...என்னடா செல்லம்.!!..ரெட்டைகிட்டையும் பட்டாபட்டிகிட்டையும் வேலை பார்க்கறது அவ்ளோ ஈசி இல்ல கண்ணா...இப்டி மாத்தி மாத்தி பேசி மத்தவன கொழப்பி விட்டுட்டு நம்ம பிகரோட பீச்சுக்கு போயரனும்...இதுவும்தான் சாமி வாழ்க்கை..!!!

 18. //Just I am kidding buddy..I really like all ur comments..//

  இன்னும் சின்னப் புள்ளயாவே இருக்கீரே வெளி... :)

 19. // நான் பேசறது உனக்கு புரிஞ்சிடுச்சுண்ணா நீ ராணுவ அமைச்சரா ஆய்ட மாட்டியா...//

  ஆமா,நல்ல ராணுவ அமைச்சரு...நீரு தான் மெச்சிக்கணும்.உமக்கு தெரியாம உம்மையே கண்காணிக்குது அந்த ரெட்ட...(யப்பாடி,கோத்து விட்டாச்சு.யப்பா,ஏய்!அடிஞ்சுக்கங்கப்பா ).

 20. @ILLUMINATI said...
  இன்னும் சின்னப் புள்ளயாவே இருக்கீரே வெளி... :)////

  ஆகா கேப்ல கலாசிட்டானுகளே...யோவ் ஜெய்லானி...இதுக்கு பேருதான்யா ஓட விட்டு கலாசுரது...பீலிங்க பேசி ஆப்போசிட் பார்டிய நெஞ்ச நக்கிட்டு அவன் சென்டிமென்ட்ட பேச ஆரம்பிக்கும்ப்போது கலாசறது...நோட் பண்ணிகொங்க வாத்யாரே..உமக்கு கிளாஸ் ஸ்டார்ட் ஆய்டுச்சு...எலேய் இலுமு இந்த புள்ளைக்கு கொஞ்சம் ட்ரைனிங் குடுலே...இதுக்கு மத்த மொக்க ப்லாகுக்கேல்லாம் போய் போய் பார்மாலிட்டி ஜுரம் கொஞ்சம் அடிக்கிது...ஒரு ரெண்டு நாளுல கண்டினுயசா கலாய்ச்சு சரி பண்ணி விட்ருவோம்...!!!

 21. ILLUMINATI said...
  ஆமா,நல்ல ராணுவ அமைச்சரு...நீரு தான் மெச்சிக்கணும்.உமக்கு தெரியாம உம்மையே கண்காணிக்குது அந்த ரெட்ட...(யப்பாடி,கோத்து விட்டாச்சு.யப்பா,ஏய்!அடிஞ்சுக்கங்கப்பா/
  கண்காணிச்சு கிழிச்சான் அந்த கம்னாட்டி....அவனுக்கு தெரியாம அவனுக்கு விசிறி விடற பிகர உஷார் பண்ணி அவ பேரையே கேட்டுட்டேன்..இன்னும் அந்த டோமருக்கு தெரியல...அவன் என்ன கண்காணிச்சு என்னத்த கிழிக்க போறான்..(இன்னும் ரெண்டு வருசத்துக்குள்ள எப்டியாச்சும் முரளிய மனசுல வேண்டிகிட்டு அந்த புள்ளைகிட்ட என் காதல சொல்லிடனும்...)

 22. //.இதுக்கு பேருதான்யா ஓட விட்டு கலாசுரது...பீலிங்க பேசி ஆப்போசிட் பார்டிய நெஞ்ச நக்கிட்டு அவன் சென்டிமென்ட்ட பேச ஆரம்பிக்கும்ப்போது கலாசறது...நோட் பண்ணிகொங்க வாத்யாரே..உமக்கு கிளாஸ் ஸ்டார்ட் ஆய்டுச்சு...//

  பயபுள்ள எப்டி எல்லாம் சமாளிக்குது பாரு.ஓய்!இதையும் நோட் பண்ணிக்கங்க.சமயத்துல இந்த மாதிரி மானங்கெட்ட தனமா எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கும்.அதுல இந்த gangலேயே வெளி தான் ரொம்ப கெட்டிகாரரு.அனுபவஸ்தரும் கூட.அதனால,அந்த கிளாஸ் நீரு அவரு கிட்ட கத்துக்கிறது தான் கரெக்டா இருக்கும் ஓய்...

 23. //அவனுக்கு விசிறி விடற பிகர உஷார் பண்ணி அவ பேரையே கேட்டுட்டேன்..//

  ஆமா,பெரிய சாதன...நீரு மறுபடி மறுபடி சின்னப் புள்ளைங்ரத நிரூபிக்கிரீறு வெளி..

 24. ///இன்னும் ரெண்டு வருசத்துக்குள்ள எப்டியாச்சும் முரளிய மனசுல வேண்டிகிட்டு அந்த புள்ளைகிட்ட என் காதல சொல்லிடனும்..///
  என்ன காதல சொல்ல ரெண்டு வருசமா? நீரு என்ன L.K.G ஆ

 25. நம்மல விட்டா ரெண்டு வருசத்திலெ ரெட்டை ரெட்டையா நாலும் அட்ரஸ் இல்லாம ஆறும் சுத்துமே. தளபதி போஸ்ட் கேன்ஷல் செய்ய இந்த கோர்ட் ஆனையிடுகிறது. ஆர்டர்.....ஆர்டர்..

 26. அஜ்ஜு புஜ்ஜுவும் ஜுஜ்ஜு புஜ்ஜுவும்..........அடடா...தளபதி... நீரே ஃபிகர்களுக்கெல்லாம் சத்தியமும் விசுவாசமுமாய் இருக்கிறீர்! நீர் அவர்களை விட்டு விலகுவதுமில்லை.. கைவிடுவதுமில்லை...

 27. ஏத்தா..யாருத்தா அது... வந்து சொல்லிப்புட்டுப் போம்மா..கனவுல வந்தவளே..(உண்மைலேயே கனவு தானா இல்லைன்னா எதுனா அட்டு பீஸு இவனுக்கு ஆஃப் ஆயிடுச்சா...?)

 28. "முடியவே முடியாதுன்னு சொன்னவ என் பேச்சுலயும் அப்பறம் முக்கியமா என் அழகுளையும் மயங்கி என் காதல ஏத்துக்கிட்டா..."
  ///////////////////////////////////

  அன்னிக்கு ஏறினார்டா சனி பகவான் அவ சைக்கிள்ல..

 29. பின்ன, நாங்கெல்லாம் ஒரு அட்டுப்பிகருக்கே நாயா அலையறோம். இவரு மூக்கத்தொட்டு பராசக்திம்பாறாம். என் குழந்தை பாத்து போம்பாறாம். காலைல ரொமான்ஸா காதுகிட்ட பேசுவாங்கலாம்.. இதையெல்லாம் படிச்சா ஒரு ஃபிகர் இல்லாத பேச்சலர் மனசு எவ்வளவு பாடு படும்?? அதுதான் இந்த காண்டு..
  ///////////////////////////////////

  அடேய் வெளியூரு...இவன் ஒத்த வார்த்தைல நம்மளை நெருங்கிட்டான்லே... இவனை எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு...இவந்தாம்லே நம்ம அரசாங்கத்தோட செய்தி தொடர்பு அமைச்சர்... ( நமீதா பேச்சை எடுத்ததுமே அரசவையில் எல்லா டாபருங்களும் கட்டிப் பிடித்து சண்டை..தவிர நமீதா மன்னரின் தனி சொத்து!)

  என்ன ஒரு ஃபீலிங்...என்ன ஒரு காண்டு...வாவ்..ஓஞ்சு போன பேச்சிலர்களுக்கெல்லாம் இவன் தான்யா இனிமே மைக் செட்டு!

 30. ஜெய்லானி said...
  நம்மல விட்டா ரெண்டு வருசத்திலெ ரெட்டை ரெட்டையா நாலும் அட்ரஸ் இல்லாம ஆறும் சுத்துமே. தளபதி போஸ்ட் கேன்ஷல் செய்ய இந்த கோர்ட் ஆனையிடுகிறது. ஆர்டர்.....ஆர்டர்..
  ////////////////////////////////

  சந்துல பூந்துட்ட பாத்தியா நீ...

  பத்து வெத்து டோமருங்களை சுத்தவிடும் உனக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய அரசாங்கம் உத்தரவிடுகிறது...எப்படி கணக்குப் போட்டாலும் ரெண்டு வருஷத்துல பத்து வராதேய்யா...சரி எப்படியோ போங்க..மகளிர் அணி குட்டை குழம்புனதுல நீ மீன் புடிச்சுட்ட போல இருக்கு! உன்னை பட்டாபட்டி கவனிச்சுக்குவான்...

  வெளியூரு..நம்ம ஜோதில வர வர அறிவாளிங்க நிறைய ஐக்கியமாகுறாங்க போல... எதுனா ஃபாரின் மேல படையெடுத்து நம்ம பேரை காப்பாத்திக்குவோம்..(உனக்கு தான் ஃபாரின் கூட சண்டைன்னாலே யூரின் வந்துடுமே...)

 31. கலாய்க்கறதுங்கறது தவம் மாதிரி..அனுபவிச்சு பண்ணனும்..(நன்றி திரு ப்ரியமுடன் வசந்த் அவர்கள்...)
  ///////////////////

  யாரு அந்த காக்கா எருமை பார்ட்டியா...?

  தமாசு சார் நீங்க!

 32. வாயா ராணுவம்... ஸ்ரீகொங்கா நாட்டுல புடிச்சு வச்சது மாதிரி... உன்னையும் எங்கையோ புடிச்சு வச்சிட்டாய்ங்கன்னு நினைச்சோம்... வந்துட்டியா... இனிமே தாண்டி களைகட்டும்...

 33. வந்த உடனே... எகத்தாளத்தை பாரு... ங்கொய்யா... கனவுல சுண்டெலிய பாத்துபுட்டு... என் பிகரு அஞ்சலி போட்டோ போட்டிருக்கு... உமக்கே ஓவராத் தெரியல.

  பாத்துடி... ஜுஜ்ஜு புஜ்ஜு கல்யாணத்துக்கு அப்புறம் நொச்சு நொச்சு-வா ஆயிடப் போகுது...
  மகளிரணி... வெளியூரானுக்கு பொண்ணு குடுக்காதீகன்னு ஊர் ஒர்ரா பிளக்ஸ் பேனர் வைக்குதாம்டி... சூதானமா இருந்துக்க.

 34. @ரெட்டைவால் ' ஸ் said...
  அடடா...தளபதி... நீரே ஃபிகர்களுக்கெல்லாம் சத்தியமும் விசுவாசமுமாய் இருக்கிறீர்! நீர் அவர்களை விட்டு விலகுவதுமில்லை.. கைவிடுவதுமில்லை...///////
  ஸ்தோத்திரம் கர்த்தாவே....ரெட்டையின் ரெத்தம் ஜெபம்...அல்லேலூயா...!!!

 35. @ ரெட்டைவால் ' ஸ் said...
  @ லோகு said...//என்ன ஒரு ஃபீலிங்...என்ன ஒரு காண்டு...வாவ்..ஓஞ்சு போன பேச்சிலர்களுக்கெல்லாம் இவன் தான்யா இனிமே மைக் செட்டு!

  ரெட்டை இவன் நமக்கு மேல பிகர் கெடைக்காத காண்டுல திரியரான்யா...இவன உடனே இழுத்து போட்டுக்குவோம்...அதிரடி தாக்குதலுக்கு பயன்படுவான்...செம ஷார்ப்பா கலாய்க்கறான்...!!!

 36. ரெட்டைவால் ' ஸ் said...
  வெளியூரு..நம்ம ஜோதில வர வர அறிவாளிங்க நிறைய ஐக்கியமாகுறாங்க போல...//

  அப்பாவி தமிழன், முத்து,ஜெய்லானி,லோகு, இந்த டோமருங்களுக்கெல்லாம் இன்னும் பதவி அளிக்கபடாமல் நிலுவையில் வைக்கபட்டிருகிறார்கள் என்பதை ராணுவ தளபதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு தெரிவிக்கிறது...(ரெட்டை சட்டு புட்டுன்னு எல்லாருக்கும் டிபார்ட்மென்ட் பிரிச்சு அறிவிச்சுடுலே....பய புள்ளையே ரொம்ப ஆர்வமா இருக்காங்கே...இதுல இந்த பய முத்து சில நேரத்துல டபுள் மீனிங்க்ள வெண்ணிற ஆடை மூர்த்தி கணக்கா பேசறதால அதுக்கு சிறை கண்காணிப்பு துறை அமைச்சரா அறிவிச்சிடு...வெளியே விட்டா மக்கள் தொகை அதிகமாய்டும்...!!!

 37. ரெட்டைவால் ' ஸ் said...
  ///////////////////
  யாரு அந்த காக்கா எருமை பார்ட்டியா...?
  தமாசு சார் நீங்க!////

  @ரெட்டை சார் உங்க சண்டையெல்லாம் வெளியே போய் வெச்சுக்கங்க சார்...இது டீசண்டானவங்க வந்து போற இடம்..இங்க கலாய்க்கரதுக்கெல்லாம் அனுமதி இல்ல..கலாய்க்கறதா இருந்தா பட்டாப்பட்டி ப்ளாக் இருக்கு அங்க போங்க....இந்த வேலையெல்லாம் என்கிட்டே வெச்சுகாதீங்க...நான் கொஞ்சம் கோவக்காரன்...எனக்கு இப்போ கோவம் வந்துடுச்சு சார்....இந்தியால எனக்கு மட்டும்தான் கோவம் வரும்கறது ஊருக்கே தெரியும்..அதனால பார்த்து உஷாரா நடந்துக்கங்க...இல்லாங்காட்டி அவ்ளோதான்.....!!!.

 38. @ Unakkuthaan....///
  எலேய் மாப்ள சும்மா தமாசுக்குலே...சீரியஸா எடுத்துக்கிட்டு சண்டைக்கு வந்துடாத...இது சும்மா உள்ளலாயீ...!!!

 39. //பாத்துடி... ஜுஜ்ஜு புஜ்ஜு கல்யாணத்துக்கு அப்புறம் நொச்சு நொச்சு-வா ஆயிடப் போகுது...//

  ஹா ஹா ஹா.....

 40. @ ரோஸ்விக் said...
  என் பிகரு அஞ்சலி போட்டோ போட்டிருக்கு..///

  என்ன அஞ்சலி உம்ம பிகரா..??..ரெட்டை அது அவன் ஆளுன்னு சொன்னான்..!!. என்னையா நடக்குது இங்க..ச்சை..இந்த மானம் கேட்ட பொழைப்பு பொழைச்சு இங்க ராணுவ தளபதியா இருக்கறதுக்கு பழைய மாதிரியே துர்கிஷ் ஏர்லைன்ஸ்ல சீப் பைலட்டா போய்டலாம் போல இருக்கு..(நான் மன்னார்குடில மாடு மேய்ச்சிகிட்ருந்த உண்மை ரெட்டைக்கு மட்டும்தான் தெரியும்ங்கறது அரசாங்க செய்தி குறிப்பு தெரிவிக்கறது....)

 41. @ILLUMINATI said...
  ஹா ஹா ஹா.....//

  தக்காளி வந்துட்டான்யா...(எலேய் எழவெடுத்த இலுமு.உன் வாழ்க்கைளையே முதல் தடவையா ரெண்டு வார்த்தைல கம்மென்ட் போட்ருக்களே..!!.திருந்திட்ட போலருக்கு...???)

 42. ச்சே,வருத்தத்த பார்ரா. மக்கா, வேற ஏதாவது பெரிய கமெண்டா போட்டுடவா.

 43. @ILLUMINATI said...
  ச்சே,வருத்தத்த பார்ரா. மக்கா, வேற ஏதாவது பெரிய கமெண்டா போட்டுடவா./

  எந்த நாய் சொன்னாலும் உன் தனித்தன்மைய விட்டுடாதலே.இல்லுமுன்னா இப்டிதான் கம்மென்ட் போடுவான்...அப்டி ஆக்கிக்க....(ஆனா இந்த காமிக்ஸ் படிக்க சொல்லி அடுத்தவன கொடுமபடுத்தரத மட்டும் தயவு செஞ்சு விட்டுரு...உன்ன கெஞ்சி கேட்டுக்கறேன்..அதெல்லாம் இன்டெரெஸ்ட் தானா வரணும் பிகர சைட் அடிக்கற மாதிரி....)

 44. // அதெல்லாம் இன்டெரெஸ்ட் தானா வரணும் பிகர சைட் அடிக்கற மாதிரி....//

  அது சரி மக்கா.ரேச்போன்ஸ் இருந்தா பரவா இல்ல.உம்ம மாதிரி ரெஸ்பான்ஸ் இல்லாத கேசுக்கு என்ன பன்றது? :) ultimate ஆ ஏதோ ஒரு ஏமாளிய வற்புறுத்தி உம்ம தலையில கட்டி விட மாட்டாங்க.அது மாதிரி தேன் இது. :)

 45. Sorry Veliyooraan. I should not use this place for the below one. but no otherway now. Thanks for understanding.

  ILUMU this is for you...

  உங்க பதிவுல பின்னூட்டம் போடுவதுல சிக்கலு-ங்கோ......

 46. @ILLUMINATI said...
  அது சரி மக்கா.ரேச்போன்ஸ் இருந்தா பரவா இல்ல.உம்ம மாதிரி ரெஸ்பான்ஸ் இல்லாத கேசுக்கு என்ன பன்றது? :)//

  பளிச்சுன்னு வேற ஒரு பிகர உஷார் பண்ண வேண்டியதுதான்..ரெஸ்போன்ஸ் இல்லாத பிகருகிட்ட ஏன்யா போய் ப்ரபோஸ் பண்ற...!!!

 47. @ ரோஸ்விக் said...
  உங்க பதிவுல பின்னூட்டம் போடுவதுல சிக்கலு-ங்கோ......//

  மிகவும் பயனுள்ள பதிவு..பல அரிய கருத்துக்களை மிக அழகாக எடுத்துரைதுள்ளீர்கள்..அற்புதமாக எழுதியுள்ளீர்கள்....மிக்க நன்றி..இது உலக பதிவர்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்....தங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்..(இத முறைப்படி நான் உங்க பதிவுலதான் போடணும்...ஆனா நான் சீரியஸா சொன்னத வெளியூர்க்காரன் கலாய்க்கறான்னு நீங்க தப்ப புரிஞ்சுகிட்டு டெலிட் பண்ணிடுவீங்க...அதான் எங்க ஏரியாயலையே சம்பவத்த நடத்தி முடிச்சிட்டோம்...) :)

 48. thala,en blog la word verification munnadiye eduthuttene?
  vera ethachum prachana irukka enna?
  therinjaa sari panna usefula irukkum.

 49. @ILLUMINATI said...
  vera ethachum prachana irukka enna?
  therinjaa sari panna usefula irukkum.///

  எல்லாம் கரெக்டுதாம்ப்பு....ஆனா, அந்த மாடரேட்டர் அப்ரூவல மட்டும் எதுக்கு வெச்சுருகீருன்னுதான் தெரியல..எல்லா பயலும் வந்து கெட்ட வார்த்தைல திட்ற அளவுக்கு ஏதும் சென்சிடிவா நீங்க ஒன்னும் எழுதலையே ஒய்...டீசென்ட்டா விமர்சனம் மட்டும்தான பண்றீரு..அப்பறம் எதுக்கு இது...புடிச்ச கம்மென்ட்ட மட்டும் அப்ரூவ் பண்ணிக்கலாமேன்னா..?? ...இல்ல என்னோட சிங்கக்குட்டி இலுமுக்கு பயமா...பசங்க கலாய்ச்சிடுவாங்கேன்னு...???

 50. you have "Comment Form Placement" as "embeded. In few companies, their browser / firewall setup will not allow them to give input on those comment text boxes.

  So,

  நீங்க "blogger" account user-னா உடனே "settings"-க்கு போயி...."comments"-ஐ அமுக்கி..."Comment Form Placement"-ல "Full page" அல்லது "Pop-up window"-ல கரும்புள்ளி குத்திடுங்கோ....


  :-)

  Thanks veliyooru... nee pasakkaaranyaa.

 51. @ரோஸ்விக் said...
  Thanks veliyooru... nee pasakkaaranyaa.///

  யோவ் ரெட்டை..என்னையா இது..எல்லா பயலும் அன்பே சிவம்னு சமாதானத்துல எறங்கிட்டாங்கே....பாசமா பேசறாங்கே...எதையாச்சும் சண்டைய மூட்டி விடுயா....தக்காளி சண்டே அன்னிக்கு போர் அடிக்குது...நாளைக்கு வேலைக்கு போகணும்...ஆத்தா வைய்யும்..எந்த பஞ்சாயத்தா இருந்தாலும் இன்னிக்கே வெச்சுக்குவோம்...!!

 52. ada kalasuna parava illa veli.sila nerathula vanthu romba nenja nakidraanunga.namakke oru mathiri aiduthu.
  ithu poga,intha keela kodutha mathiri kanda elavu ellam vanthu tholayuthu.

  "Maroussia has left a new comment on your post "SHAWSHANK REDEMPTION-A REVIEW:

  It will be great to watch The Shawshank Redemption, i have bought tickets from
  http://ticketfront.com/event/The_Shawshank_Redemption-tickets
  looking forward to it."

  word verificationa thaan thokkittom.kalutha ethavathu onnu irunthaa nalla irukumnu than.by the by,kalasuratha?yov!engallukku athu thanyaa velaye.naangalaavathu bapadrathaavathu.... :)

  sorry for posting that spam i received in your blog friend.

 53. @ILLUMINATI said...
  ada kalasuna parava illa veli.sila nerathula vanthu romba nenja nakidraanunga.namakke oru mathiri aiduthu.//

  மறுபடியும் ஆரம்பிச்சுட்டான்யா இங்கிலிஸ்ல...இவன மொதொள்ள புடிச்சு உள்ள போடணும்...!!

  (ரெட்டை கேட்டியா சேதிய...யாரோ ஸ்பாமாம்...இவுகள தேடி தேடி வந்து கம்மென்ட் போட்ராகலாம்...நானும் பட்டாபட்டியும் இப்டி ஸ்பாம்ல வந்த ஒருத்தன எப்டி கலாய்ச்சு ஊர விட்டு விரட்னொம்னு நீ இந்த இலுமு பயலுக்கு எடுத்து சொல்லுலே..!!)

 54. //நானும் பட்டாபட்டியும் இப்டி ஸ்பாம்ல வந்த ஒருத்தன எப்டி கலாய்ச்சு ஊர விட்டு விரட்னொம்னு நீ இந்த இலுமு பயலுக்கு எடுத்து சொல்லுலே..!!//

  அப்படியா?இது எப்ப நடந்தது?அன்னைக்கு ஒருத்தன் உம்ம ப்ளாக்ல வந்து உம்ம நாரடிச்சனே(அந்த அசல் போஸ்ட் பாஸு.)?.அதுக்கு முந்தியா?பிந்தியா?
  :)

 55. போய் தூங்கி எந்திரிச்சு வர்றதுக்குள்ள இவ்வளவு கலவரம் நடந்துடுச்சா..வெளியூர்க்காரரைத்தான் வெளுத்து வாங்கிட்டாங்க போல.

  @ரெட்டைவால் ' ஸ்
  மன்னா நீ ஒரு மாமன்னன் (ஒரு மா தான், மாமா அல்ல). என்னையும் சேர்த்துக்கிட்டதுக்கு தேங்ஸு மன்னா. ஆனா சந்துல நமீதா உங்க சொத்துன்னு சொன்ன உங்க நுண்ணரசியல் தான் ஏத்துக்க முடியல.

  இருந்தாலும், அடுத்த வாரம் மருதமலைக்கு போய் சீக்கிரமா ஃபிகர் கெடைக்கனும்னு வேண்டிக்கும் போது உங்களுக்கு சேர்த்து வேண்டிக்கறேன்.

 56. @ILLUMINATI said...
  அப்படியா?இது எப்ப நடந்தது?அன்னைக்கு ஒருத்தன் உம்ம ப்ளாக்ல வந்து உம்ம நாரடிச்சனே(அந்த அசல் போஸ்ட் பாஸு.)?.அதுக்கு முந்தியா?பிந்தியா?:)///

  வெசம்.. வெசம்...அவனாச்சும் ஒரு தடவைதான் திட்டுனான்...தக்காளி நீ அத வாரத்துக்கு ரெண்டு தடவ சொல்லி காமிக்கற ஓய்...பழச மறங்கடா டேய்...!!

 57. @ லோகு said...
  போய் தூங்கி எந்திரிச்சு வர்றதுக்குள்ள இவ்வளவு கலவரம் நடந்துடுச்சா..//


  செய்தி மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் திரு லோகு அவர்களுக்கு ராணுவ தளபதி தன் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறான்...(ரொம்ப நேரம் தூங்காதப்பு..பொட்டு வெச்சு இங்குனையே பொதைச்சிருவாங்கே..இந்த ஏரியால திரியறவன் பூரா காவாலி பயலுக....)

 58. ஸ்தோத்திரம் கர்த்தாவே....ரெட்டையின் ரெத்தம் ஜெபம்...அல்லேலூயா...!!!

  ///////////////////////////////

  ரெட்டையோட ரத்தம் வேணுமா உனக்கு... நாட்டுக்காக சண்டை போட்டு ஒரு சொட்டு ரத்தம் சிந்திருப்பியா நீயி.. யோவ் சட்டம்..அவன் அவனைப் போட்டு தள்றதுக்கு ஐடியா குடுன்னா... இலுமி பயலுக்கு கமென்ட்டுகளோட சட்ட திட்டத்தை சொல்லிக் குடுத்துட்டு இருக்க... அவன் உன்னைய காமிக்ஸ் படிக்க சொல்லிக் கதறடிப்பான் பாரு..அப்போ தெரியும்!

 59. Tamilan says:

  Hi,
   
  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.tamildaily.com ல் சேர்த்துள்ளோம்.
   
  இதுவரை இந்த www.tamildaily.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
  உங்கள் நண்பர்களுக்கும் இத் தளத்தை அறிமுகம் செய்து வையுங்களேன்...

 60. @Tamilan said...
  Hi,உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.tamildaily.com ல் சேர்த்துள்ளோம். இதுவரை இந்த www.tamildaily.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.///


  உத்தரவு மகராஜா...தங்கள் ஆணைப்படியே ஆகட்டும்...(யாரங்கே இந்த பீச கொண்டு போய் சிறையில் அடையுங்கள்..!!)

 61. @ரெட்டை சார் உங்க சண்டையெல்லாம் வெளியே போய் வெச்சுக்கங்க சார்...இது டீசண்டானவங்க வந்து போற இடம்..இங்க கலாய்க்கரதுக்கெல்லாம் அனுமதி இல்ல..கலாய்க்கறதா இருந்தா பட்டாப்பட்டி ப்ளாக் இருக்கு அங்க போங்க....இந்த வேலையெல்லாம் என்கிட்டே வெச்சுகாதீங்க...நான் கொஞ்சம் கோவக்காரன்...எனக்கு இப்போ கோவம் வந்துடுச்சு சார்....இந்தியால எனக்கு மட்டும்தான் கோவம் வரும்கறது ஊருக்கே தெரியும்..அதனால பார்த்து உஷாரா நடந்துக்கங்க...இல்லாங்காட்டி அவ்ளோதான்.....!!!.
  //////////////////////////////////
  எனக்கு அழுகை அழுகையா வருது சார்.!சார்... நீங்க பயங்கர டீசன்ட்டான ஆளுங்க சார்.. நீங்க எழுதின மேட்டரை விட அந்த ஃபோட்டோக்கள் தான் சார் அட்டகாசம். சும்மா ஜிவ்வுனு பிட்டு படம் பார்த்த எஃபக்டு!என்னது..கருத்து சொன்னீங்களா ...அய்யோயோ... கலக்கிப்புட்டீங்க சார்...அந்த கருத்து இன்னும் மனசிலேயே தங்கிடுசு சார்! உங்களோட இந்த பதிவை சொல்லலை சார்...அது அது...அந்த மேட்டரு...இன்னும் கண்ணுக்குள்ளயே நிக்கிது சார்...அப்புறம் ...திரும்பவும் வடிவேலு காமெடி மாதிரி எதும் இனிமே பண்ண மாட்டீங்கங்கற நம்பிக்கைல...

  இதை நீங்க உங்க பதிவுல போடவே கூடாது. படிச்சுட்டு டெலீட் பண்ணிடனும். பின்னாலேயே வந்து ஆகா ஓகோ சூப்பர்னு சொல்றதை மட்டும் தான் போடனும்.அப்போ தான் உங்க கோவம் எவ்வளோ டீசன்ட்னு எல்லாருக்கும் தெரியும்!

 62. //...தங்கள் ஆணைப்படியே ஆகட்டும்...(யாரங்கே இந்த பீச கொண்டு போய் சிறையில் அடையுங்கள்..!!)///

  :-)))

 63. சாரி நண்பா , உங்க கூட சேர்ந்து நானும் கனவு கண்டு விட்டேன் ..

  எல்லாம் தெரியும் ,எதுவும் காட்டாத முகம் ..
  இந்த பொண்ணுங்களே இப்படித்தான் பாஸ் ..

 64. @மந்திரன் said...
  சாரி நண்பா , உங்க கூட சேர்ந்து நானும் கனவு கண்டு விட்டேன் ..
  எல்லாம் தெரியும் ,எதுவும் காட்டாத முகம் ..இந்த பொண்ணுங்களே இப்படித்தான் பாஸ் ..//

  என்னபா இந்த பீசு இப்டி பீல் பண்ணுது...சோம்பு ரொம்ப அடி வாங்கிருக்கும் போலருக்கு...!! :)

 65. பங்காளி...இந்த பீஸு இவனை பத்தி இவன் ப்லாக்ல இவனே ஒரு மார்க்கமா எழுதி வச்சுருக்கான்.. கொஞ்சம் அசந்தா சிகப்பு ரோஜாக்கள் கேஸாயிடும் போல.. ( இங்க வர்றவனெல்லாம் ஒரு மார்க்கமா தான்டா இருக்காய்ங்க)

 66. வெளியூர்காரன் கனவாய் போனது மிகவும் வருத்தமளிக்கிறது. அருமையாய் வருகிறது கதை. வாழ்த்துக்கள்.

 67. saju says:

  //எங்கப்பா போட்டோவ கிட்டத்துல வெச்சு பார்த்து,(ஷாக்ல எதாச்சும் ஐடியா வருதான்னு..).//

  //உலகத்துலேயே ஆம்பளைங்களுக்கு கஷ்டமான சில வினாடிகள்னா அது முதலிரவு ரூம விட்டு வெளில வர்றதுதாங்க....அப்பா உக்காந்துருப்பாறு..அம்மா இருப்பாங்க..சொந்தகாரன்கெல்லாம் இருப்பாங்க...க்ரிப்பா வெளில வந்து கேசுவலா காமிச்சுக்கணும்...நானும் உசுர குடுத்து நடிச்சு அப்பாவியா காமிச்சுகிட்டேன்...ஆனா ஜுஜ்ஜு புஜ்ஜு ஒண்ணுமே நடக்காத மாதிரி எல்லாருக்கும் டீ குடுத்துட்ருந்தா...(இந்த பொம்பளைங்க எப்பவுமே இப்டிதான் பாஸ்..எதுவுமே தெரியாத மாதிரியும், நடக்காத மாதிரியும் காமிச்சுக்குவாங்க...ஆனா நைட்டு வந்துச்சு. அத பண்ணு, இத பண்ணுன்னு....அயோயோயோ...அந்த கொடுமை கல்யாணம் ஆனவங்களுக்குதான் தெரியும்....)//

  ரொம்ப ரசிச்சேன் பாஸ்