- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 60 comments and to comment

நாங்க நெறைய பேரு...எங்களுக்கு வேற வேலையே கெடயாது...எப்பவுமே பேஸ்புக்லதான் இருப்போம்..விடுதலை புலிகள் இறுதிபோர்ல தோத்ததுக்கு அப்பறம், தமிழீழ போராட்டத்த மிக தீவிரமா ஆக்ரோசத்தோட முழு வேகத்தோட செயல்படுத்திகிட்ருக்கறது நாங்கதான்...அப்புடி என்ன மசுர புடுங்குன போராட்டத்த பண்ணி கிழிச்சிடீங்கன்னு கேக்க தோணுதா..இருங்க சார் சொல்றேன்..அதுக்கு முன்னாடி பேஸ்புக் போராளியா மாறி இந்த போராட்டத்துல உங்கள இணைசிக்கரதுக்கு சில அடிப்படை சட்டதிட்டங்கள் இருக்கு..!அண்ணன் ஒன்னொன்னா சொல்றேன்..ஆரவாரம் செய்யாம அமைதியா கேட்டுக்கங்க...!

மொதொள்ள பேஸ்புக்ல இருக்கற ப்ரோபைல் போட்டோவ மாத்துங்க...ஈழ போராட்ட வரலாறு தெரிஞ்சவங்க பிரபாகரன் போட்டோவ வெச்சுக்கங்க...எல்டிடினா அப்டீங்க்ரவங்க அண்ணன் சீமான் போட்டோவ வெச்சுக்கங்க...உங்கள இன்னும் அதிதீவிர போராளியா காட்டிக்கணும்னா உடனே ச்சேகுவேரா போட்டோவ வெச்சுக்கங்க..அப்பத்தான் மக்கள் மத்தியில ஒரு க்ரிப்பு கெடைக்கும்பிகருங்க மத்தியில ஒரு கெத்தா இருக்கும்..என்னது ச்சேகுவேரா ன்னா யாரா...யோவ்..அது தெரியாதா உனக்கு...சரி விடு..போராளியாஇருக்கறதுக்கு அதெல்லாம் தெரிஞ்சு வெச்சுக்க வேண்டியதில்ல..போட்டோ வெச்சிருந்தா போதும்..ஆச்சா...!

இப்ப என்னா பண்ணு..டெய்லி நாலு ஸ்டேடஸ் போடு..ஒன்னு ஈழம் மலரும்” அப்டீன்னு ஒன்னு...ரெண்டாவதுராஜபக்சே பாடைல போவான்” அப்டீன்னு..மூணாவது கலைஞர் கட்டைல போவாரு” அப்டீன்னு... நாலாவதா இத்தாலிய சோனியா காந்திய கழுவி ஊத்து...! ஆச்சா...!

அடுத்தது என்ன பண்ற ஆபிஸ்ல மேனேஜர் பார்க்காதப்ப அப்டியே ஜஸ்ட் ஒரு டூ மினிட்ஸ் (பத்து மணிலேர்ந்து சாயங்கலாம் அஞ்சு மணி வரைக்கும்பேஸ் புக்ல ஒரு லுக்க போடு... யாரெல்லாம் ராஜபக்சேவுக்கு எதிரா ஸ்டேடஸ் போட்ருக்காங்கலோ அவேங்களுகேல்லாம் ஒரு லைக்க போடு...அப்டியே மனசுக்குள்ள  நேரா கொழும்புக்கு போய் ராஜபக்சே தலைல ஒரு கொட்டு கொட்னா மாதிரி ஒரு பீலிங் வரும்..வருதா.?..நீ ராஜபக்சேவ ஜெய்ச்சிட்ட...இப்ப நீனும் ஒரு போராளி.(ஆனாஉனக்கு உன்னை மண்ணுக்குள்ள வெச்சு புதைக்கற வரைக்கும் தெரியாது... ராஜபக்சேங்கறவன் நம்ம தமிழின தலைவர் கலைஞர் அவர்களையே அடிச்சு சுருட்டி கவுட்டிக்குள்ள வாங்கி கொல்லப்பக்கம் வழியா குப்பைகுழிக்குள்ள வீசுனவன்னு..) ஆச்சா...இப்ப அடுத்த பேராவுக்கு போ..!

தோழர் தோழர்னு பேசி பழகிக்க..அப்பத்தான் உன்னை கம்யுனிஸ்ட்ன்னு மக்கள் நம்புவாங்கே..கம்யுனிஸ சித்தாந்தம்னா என்னான்னே தெரியாத கம்னாட்டி கப்போதியா கூட நீ இருக்கலாம்..ஆனா தோழர்னு கூப்டறது ரொம்ப முக்கியம்...அப்பத்தான் ஊருக்குள்ள நாலு பேரு உன்னை நம்புவாங்கே..உன் ஸ்டேடச்க்கு லைக் போடுவாங்கே..உன் போராட்டம் வெற்றி அடையறதுக்கு ஏதுவா இருக்கும்...ஆச்சா...?

எதாச்சும் ஒரு ஸ்டேடஸ்ல நெஜமாவே சரக்கு உள்ளவன் நாலு பேரு தீவிரமா விவாதம் பண்ணிக்கிட்டு இருப்பான்..வாய்ப்ப மிஸ் பண்ணிராத...நேரா உள்ள போ..! அது எந்த டாபிக்கா இருந்தாலும் சரி...டக்குனுதமிழின துரோகி கலைஞர்க்கு வவுத்தால போவன்னு ஒரு கமேன்ண்ட போடு..போட்டுட்டு அஞ்சு நிமிஷம் அங்கேயே வெயிட் பண்ணி பாரு...உன்னை எவனும் மதிக்கிரானன்னு..எவனும் மதிக்கலைனா உன் போராட்டம் வெற்றி அடைஞ்சிருச்சு...! இல்ல திடீர்னு எவனாச்சும் யோவ்..என்னய்யா லூசு மாதிரி பேசுறேன்னு கேக்ரான்னு வையி...! திரும்பி அதே கேள்விய அவன்ட்ட கேளு..என்ன லூசு மாதிரி பேசுறேன்னு..! அவன் ஷாக் ஆகி உன்னை விட்டுட்டு போயிருவான்...உன் போராட்டம் வெற்றி அடைஞ்சிரும்...! ஆச்சா 

இப்ப நீனும் ஒரு போராளி...தமிழ்ஈழத்த எப்டியாச்சும் மலர வெச்சுறனும்ங்கற ஒரு நெருப்பு உனக்குள்ள எரிஞ்சுகிட்டே இருக்கணும்..அதுதான் ஒரு உண்மையான போராளிக்கு அழகு...! நேத்து மத்தியானம் ஒரு மூணு மணி வாக்குல கூட எனக்கு பயங்கரமா தோணுச்சு..எப்டியாச்சும் ஈழத்த மலர வெய்ச்சிரனும்னு...அப்பன்னு பார்த்து ஒரு பிரெண்டு படத்துக்கு கூப்ட்டான்...அர்ஜென்ட்டா கெளம்பி போயிட்டேன்..இல்லேன்னா நேத்தே ஒரு வழி பண்ணிருப்பேன்...!

ஆனா ஒன்னு மச்சி..பேஸ்புக்ல நம்ப பண்ற கூத்தெல்லாம் பார்த்து ஈழத்துல இருக்கற தமிழர்கள் கண்டிப்பா வாயால சிரிக்க மாட்டாங்கே...!!

நீ அதுக்காக உன் போராட்டத்த விட்றாத...! விடாம போராடு...!

லைக்குகள் அலறும்...ஸ்டேடசுகள் தொடரும்...!

ஈழம் மலரும்...!

வெளியூர்க்காரன்