- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 37 comments and to comment


ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு  என்னோட லைக்குகள் என தீயா வேலை செஞ்சு மக்களுக்காக போராடிகிட்ருந்தாலும் எனக்கு ஓய்வு தேவைப்படுமா இல்லையா...? அதான் பேஸ்புக்க லாக் அவுட் பண்ணிட்டு கெளம்பிட்டேன்...!

"ரெசிடென்ட் ஈவில்"னு என்னோட பால்ய கால தோழர் பால் ஆண்டர்சன் ( பக்கி லீக்ஸ் எழுதற சாம் ஆண்டர்சன் இல்லப்பா...) இயக்கிய இலக்கிய படம்...! நீ பார்த்துட்டு எப்புடி இருக்குன்னு சொன்னாதான் நான் காலைல கக்காவே போவேன்னு அவரு அடக்கிட்டே நின்னதால ,தமிழ், ஒரிய மற்றும் ஜப்பானிய  மொழி இலக்கியங்கள கலக்குன மாதிரியே, உலக இலக்கிய வட்டத்தையும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம ஒரு கலக்கு கலக்கிபுடனும்னு வைரகியதொட சேகப்பு களர் கட்டாம் போட்டா சாட்டாய போட்டுக்குட்டு என் பைக்கோ ஸ்டார்ட் பண்ணி கொழம்பிட்டேன்...!! ( ச்சே...இனிமே ஜாக்கி சேகர் அண்ணன் ப்ளாகு பக்கமே போக கூடாது..அதே மாதிரி வருது...)  

இதுக்கு முன்னாடி வந்த ரெசிடென்ட் ஈவில் படங்கள்ல என்னத்த எடுத்தாங்கேலோ அதையேதான் இதுலயும் எடுத்துருக்காங்கே...!! அதே ரெத்தம், அதே துப்பாக்கி, அதே மனுசன கடிக்கிற வைரசால பாதிக்கப்பட்ட மனுசங்கே...!! என்ன...இதுல கொஞ்சம் அம்மா சென்டிமென்ட்ட கலந்துருக்காங்கே...!! மத்தபடி ஒன்னும் புதுசு இல்லைன்னேன்...!!

அதுலயும் இந்த படத்துல அந்த ஹீரோயின் ரொம்ப மோசமான பொம்பளையா இருக்குங்க...! துப்பாக்கிய எடுத்துச்சுன்னா நல்லவன் கெட்டவன் வித்தியாசம் தெரியாம எல்லாரையும் சுட்டு கொன்னுருது...!! இதுக்கு நம்ம முதலமைச்சர் தேவலாம் போலருக்கு...!! மக்களுக்காக போராடரவங்கள மட்டும்தான் குறி வெச்சு சுட்டு கொல்லுவாங்க...!! 

இதே மாதிரி வைரஸ் நம்ம தமிழ்நாட்டுல பரவிருந்தா வைகோ கம்பளி போர்வைய எடுத்து போர்த்திகிட்டு ரோட்ல படுத்து போராடிருப்பாறு...! ஆனா, கதை நடக்கறது வேற எங்குட்டோங்கறதால அண்ணனால போக முடியாது...!! மதிமுக அன்பர்கள் உடனே டென்சன் ஆகி கேக்கலாம்..!! ஈழ தமிழர்களுக்காக எதோ ஒரு மொழி தெரியாத ஊர்ல போய் ரோட்ல நின்னு போராட்னவண்டா என் தலைவன்... நாளைக்கு உனக்கு ஒரு பிரச்சனைனா அவந்தாண்டா மொதொள்ள வந்து நிப்பான்னு...!! வாஸ்தவந்தாம்..!! யாரு இல்லைனா...!! நம்ப தமிழ்நாட்டு மக்களுக்கு சூடு சொரன இருந்து நல்லது கெட்டது தெரிஞ்சிருந்தா என்னிக்கோ வைகோவ ஜெய்க்க வெய்ச்சு ஆட்சில உக்கார வெச்சிருக்க மாட்டாங்களா...? அரசியல்ல மக்களுக்காக போராடறது முக்கியம் இல்ல ப்ரதர்...பெர்பார்மன்ஸ் தான் முக்கியம்...!! இப்ப நாங்க உண்ணாவிரதம் இருக்கல...நாக்குக்கும் பங்கம் இல்லாம, குடலுக்கும் பங்கம் இல்லாம...!! மொதொள்ள அரசியல் எப்டி பண்றதுன்னு  கத்துக்கங்கடே...அப்பறம் ஆட்சிக்கு வரலாம்..!! 

அதுவும் இல்லாம அந்த புள்ள இம்புட்டு போராடி அந்த வைரஸ் பிரச்சனைய தீர்க்கனும்னு தேவையே இல்லைங்கறேன்...!! நேத்து செங்கல்பட்டு பொதுக்கூட்டத்துல பேசும்போது சீமான் அண்ணன் சொன்னாப்டி...!! பதினைஞ்சு வருசத்துக்கு முன்னாடி நாம் தமிழர் இயக்கத்தோட போதுகூட்டதுல கலந்துக்கறதுக்காக தான்சானியா நாட்டுக்கு அண்ணன் போயிருந்தப்ப அந்த நாட்டு பிரதமர் அண்ணன் தனியா கூப்புட்டு சொல்லிருக்காப்ள...!! இந்த மாதிரி இந்த மாதிரி தம்பி...இதான் நெலமை...எனக்கப்ரம் நீதான் தம்பி இந்த நாட்டை காப்பாத்தி நல்லபடியா வழிநடத்தனும்னு...! ஆனா அண்ணன் உடனே பாசத்தோட மருதலிசிடாப்லாயாம்...! ஏற்கனவே ரெண்டு மூணு நாட்டை நாந்தான்னேன் காப்பாத்திகிட்ருக்கேன்...எனக்கு டைம் பத்தாதுன்னு...!! (வேணும்னா அண்ணன்ட்ட தான்சானியா பிரதமர் கெஞ்சறத போட்டோ எடுத்து வெச்சிருக்கோம்..ரிலீஸ் பண்றோம்..) அப்பேற்பட்ட எங்க அண்ணன் அந்த ரெசிடென்ட் ஈவில் வைரஸ்கிட்ட ஒரு அரை மணி நேரம் பேச விட்டா போதும்..!! பாதிக்கப்பட்ட எல்லாருக்கும் மருந்து வாங்கி குடுத்து பிரச்சனைய பைசல் பண்ணிவிட்டுட்டு வந்துருவாப்ள...!! ஆனா அரை மணி நேரத்துக்கு மேல அண்ணன அந்த வைரஸ்கிட்ட பேச விட்ராதீங்க... அந்த வைரஸ் பூச்சி இவர் பேச்ச கேட்டு கடுப்பாய்ரும் ..! அண்ணனும் கடுப்பாகி அந்த வைரஸ் பூச்சிய குத்தி கொல்ல பாய்ஞ்சிருவாப்டி...!! அப்பறம் தேவை இல்லாம அந்த பூச்சி அண்ணன முழுங்கி கக்காவோட கழிஞ்சிவிட்ற வரைக்கும் வெயிட் பண்ணி அப்பறம் துடைச்சு கூட்டிட்டு வர்ற மாதிரி இருக்கும்....!!


பைட்லாம் நல்லா எடுதுருக்காங்கே இந்த படத்துல..அதுலயும் ஒரு தாடிக்காரன் க்ளைமாக்ஸ் பைட்ல யாருமே இல்லாத எடத்த பார்த்து முகத்த டெர்ரரா வெச்சுக்கிட்டு பார்க்கறவெங்களுக்கு களுக்குன்னு சிரிப்பு வர்ற மாதிரி கத்திகிட்டு சுட்டுகிட்ருந்தான்...! பாமக காரனா இருப்பான் போல....!! ( கடைசீல அந்த வைரஸ் பூச்சி அவன மூஞ்சிலையே நக்கி கொன்ருச்சு...)   

அப்பறம் ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்...அது ஏன்னு தெரியல..அந்த வைரஸ் பூச்சிய க்ளோஸ் அப்ள காமிக்கும்போதெல்லாம் எனக்கு என் கேப்டன் விஜயகாந்த் ரொமாண்டிக்கா நடிக்கற தமிழ் பட சீன்லாம் ஞாபகம் வந்துச்சுன்னு தெரியல..!! நல்ல கண் டாக்டரா பார்த்து காத காட்டனும்...!!


மொத்ததுல இதுவரைக்கும் வந்த ரெசிடென்ட் ஈவில் படத்துலையே இதான் செம மொக்க படம்...!! ( வினுச்சக்கரவர்த்தி தீர்ப்பு சொல்லிடாப்ள...பஞ்சாயத்து கலையட்டும்...)


சனிகிளமைல ரெண்டு ஹெனிக்கேன் அடிச்சும் தூக்கம் வரலைனா இந்த படத்த போய் பாருங்க..!!


என்னை  மாதிரி...!!

வெளியூர்க்காரன்  

Posted by Veliyoorkaran - - 12 comments and to comment


இந்த கதைல லாஜிக்லாம் ஒன்னும் பெருசா கெடயாதுங்க...!! ஒன்லி மேஜிக்தான்...!! உங்க லைப்ல எந்த கதையாச்சும்,  படிச்சிட்ருக்கும்போது   சும்மா ஜிவ்வுன்னு ரொமான்ஸ் வாசனையோட ஒரு ஐஸ்க்ரீம் உலகத்துல ஜில்லுன்னு உங்கள பறக்க வெய்ச்சுருக்கா....! இந்த சாக்லேட் பேஜஸ் பறக்க வெய்க்கும்..!! காதலோட புது டைமென்சன உங்களுக்கு காட்டும்..!! இத படிச்சி முடிச்சோன்ன..உங்க பழைய காதலிஸ்கூல்லைப்ல கூட டியுசன் படிச்ச பொண்ணுஎதிர் வீட்டுல மஞ்ச தாவணில தூக்கத்த கலைச்ச பொண்ணு...இவங்க யார் ஞாபகமும் வராம உங்க வைப் ஞாபகம் உங்களுக்கு வந்துச்சுன்னா நீங்கதான் சார் சிபி...! உங்க வைப்தான் சைந்தவி...!! ஆமாம்ங்க..!! இது உங்க கதை..!!

இது சீசன் டூ...சைந்தவி சிபி பாப்பு இந்த கேரக்டர்ஸோட பேர்ல எந்த சேஞ்சசும் இல்லைங்க..!! ஆனா இந்த கதை புதுசு..!! இந்த கதையோட ஹீரோயின் பேரும் சைந்தவிதான்..என்ன..?.இந்த சைந்தவி செகேன்ட் இயர் எஞ்சினியரிங்க பத்திரிக்கைல போடறதுக்காக பேமென்ட் சீட்ல படிக்கற மாடர்ன் மல்லிப்பூ...!! டாப்சி டெயில் போட்டுக்கிட்டு ராக்போன்  ஜீன்ஸ்சுடி டாப்ஸ்ல இவ ஸ்கூட்டில பறக்கறத பார்த்தீங்கன்னா மனசுக்குள்ள புல் கூலிங்க்ள ஒரு பீர் பாட்டில் ஓபன் ஆகும்...!! பயபுள்ள அப்டி ஒரு அழகு..!!!      

சிபி.."பிகருங்கள மடிக்கரதேல்லாம் டைம் வெஸ்ட் மச்சி...சுண்டுனா கொட்டனும்டா...! அவந்தாண்டா ஆம்பளை"ன்னு மெர்சல் பேசற பல்சர் பையன்..!! படு ஸ்டைலிஷான டீசென்ட் பொருக்கி..!! ஆனாஆம்பளைங்களுக்குதான் சார் பொருக்கி...! பொண்ணுங்களுக்கு...!! (எதுக்கும் உங்க பிகர இந்த கதைய படிக்க விடாதீங்க பாஸ்..!! அப்பறம் உங்க இஷ்டம்...!!)

கதைப்படி இன்னும் இவங்க ரெண்டு பேரும் மீட் பண்ணிக்கவே இல்லைங்க...!! அதனால பாப்புவோட இன்ட்ரோ இப்போதைக்கு தேவை இல்ல...!!

என்னடா சொல்ற...ஒண்ணுமே புரியலேன்னு தலைய பிச்சுகர அன்பர்கள்..இது எல்லாத்தையும் போய் படிச்சிட்டு வாங்க...!! (அப்பயும் புரியாது..)


இதுல எல்லாத்தையுமே முடிஞ்ச அளவுக்கு புதுசா யோசிச்சிருக்கோம்ங்க..! ரொமான்ஸ்லேர்ந்து பீச்ல அவங்க குடுத்துக்க போற முதல் மழைமுத்தம் வரைக்கும்..!! எல்லாமே புதுசு..!! ஆனா ஒரு சின்ன கன்பியுஸன்..சைந்தவி போட்டோவா அதையே வெச்சுக்கலாமா...இல்ல புதுசா ஒரு பொண்ணு போட்டோவ ட்ரை பண்லாமான்னுதான்..!!  

அதனால  கதைய நாங்க எழுதறோம்...சைந்தவி யாருன்னு நீங்க சூஸ் பண்ணுங்க..!!

பார்த்தோன்னையே இவதாண்டா சைந்தவின்னு தோன்ற மாதிரி ஒரு பொண்ணு..!!

நீங்க அனுப்பற போட்டோ சைந்தவிங்கற கேரக்டருக்கு மேட்ச் ஆய்ருச்சுன்னா..!!

சைந்தவியின் சாக்லேட் பக்கங்களோட அட்டை படம் உங்களோடதுதான் பாஸ்...!!

An article by,

வெளியூர்க்காரன் & ரெட்டைவால்ஸ்.  

@ veliyoorkaran@gmail.com

Posted by Veliyoorkaran - - 60 comments and to comment

நாங்க நெறைய பேரு...எங்களுக்கு வேற வேலையே கெடயாது...எப்பவுமே பேஸ்புக்லதான் இருப்போம்..விடுதலை புலிகள் இறுதிபோர்ல தோத்ததுக்கு அப்பறம், தமிழீழ போராட்டத்த மிக தீவிரமா ஆக்ரோசத்தோட முழு வேகத்தோட செயல்படுத்திகிட்ருக்கறது நாங்கதான்...அப்புடி என்ன மசுர புடுங்குன போராட்டத்த பண்ணி கிழிச்சிடீங்கன்னு கேக்க தோணுதா..இருங்க சார் சொல்றேன்..அதுக்கு முன்னாடி பேஸ்புக் போராளியா மாறி இந்த போராட்டத்துல உங்கள இணைசிக்கரதுக்கு சில அடிப்படை சட்டதிட்டங்கள் இருக்கு..!அண்ணன் ஒன்னொன்னா சொல்றேன்..ஆரவாரம் செய்யாம அமைதியா கேட்டுக்கங்க...!

மொதொள்ள பேஸ்புக்ல இருக்கற ப்ரோபைல் போட்டோவ மாத்துங்க...ஈழ போராட்ட வரலாறு தெரிஞ்சவங்க பிரபாகரன் போட்டோவ வெச்சுக்கங்க...எல்டிடினா அப்டீங்க்ரவங்க அண்ணன் சீமான் போட்டோவ வெச்சுக்கங்க...உங்கள இன்னும் அதிதீவிர போராளியா காட்டிக்கணும்னா உடனே ச்சேகுவேரா போட்டோவ வெச்சுக்கங்க..அப்பத்தான் மக்கள் மத்தியில ஒரு க்ரிப்பு கெடைக்கும்பிகருங்க மத்தியில ஒரு கெத்தா இருக்கும்..என்னது ச்சேகுவேரா ன்னா யாரா...யோவ்..அது தெரியாதா உனக்கு...சரி விடு..போராளியாஇருக்கறதுக்கு அதெல்லாம் தெரிஞ்சு வெச்சுக்க வேண்டியதில்ல..போட்டோ வெச்சிருந்தா போதும்..ஆச்சா...!

இப்ப என்னா பண்ணு..டெய்லி நாலு ஸ்டேடஸ் போடு..ஒன்னு ஈழம் மலரும்” அப்டீன்னு ஒன்னு...ரெண்டாவதுராஜபக்சே பாடைல போவான்” அப்டீன்னு..மூணாவது கலைஞர் கட்டைல போவாரு” அப்டீன்னு... நாலாவதா இத்தாலிய சோனியா காந்திய கழுவி ஊத்து...! ஆச்சா...!

அடுத்தது என்ன பண்ற ஆபிஸ்ல மேனேஜர் பார்க்காதப்ப அப்டியே ஜஸ்ட் ஒரு டூ மினிட்ஸ் (பத்து மணிலேர்ந்து சாயங்கலாம் அஞ்சு மணி வரைக்கும்பேஸ் புக்ல ஒரு லுக்க போடு... யாரெல்லாம் ராஜபக்சேவுக்கு எதிரா ஸ்டேடஸ் போட்ருக்காங்கலோ அவேங்களுகேல்லாம் ஒரு லைக்க போடு...அப்டியே மனசுக்குள்ள  நேரா கொழும்புக்கு போய் ராஜபக்சே தலைல ஒரு கொட்டு கொட்னா மாதிரி ஒரு பீலிங் வரும்..வருதா.?..நீ ராஜபக்சேவ ஜெய்ச்சிட்ட...இப்ப நீனும் ஒரு போராளி.(ஆனாஉனக்கு உன்னை மண்ணுக்குள்ள வெச்சு புதைக்கற வரைக்கும் தெரியாது... ராஜபக்சேங்கறவன் நம்ம தமிழின தலைவர் கலைஞர் அவர்களையே அடிச்சு சுருட்டி கவுட்டிக்குள்ள வாங்கி கொல்லப்பக்கம் வழியா குப்பைகுழிக்குள்ள வீசுனவன்னு..) ஆச்சா...இப்ப அடுத்த பேராவுக்கு போ..!

தோழர் தோழர்னு பேசி பழகிக்க..அப்பத்தான் உன்னை கம்யுனிஸ்ட்ன்னு மக்கள் நம்புவாங்கே..கம்யுனிஸ சித்தாந்தம்னா என்னான்னே தெரியாத கம்னாட்டி கப்போதியா கூட நீ இருக்கலாம்..ஆனா தோழர்னு கூப்டறது ரொம்ப முக்கியம்...அப்பத்தான் ஊருக்குள்ள நாலு பேரு உன்னை நம்புவாங்கே..உன் ஸ்டேடச்க்கு லைக் போடுவாங்கே..உன் போராட்டம் வெற்றி அடையறதுக்கு ஏதுவா இருக்கும்...ஆச்சா...?

எதாச்சும் ஒரு ஸ்டேடஸ்ல நெஜமாவே சரக்கு உள்ளவன் நாலு பேரு தீவிரமா விவாதம் பண்ணிக்கிட்டு இருப்பான்..வாய்ப்ப மிஸ் பண்ணிராத...நேரா உள்ள போ..! அது எந்த டாபிக்கா இருந்தாலும் சரி...டக்குனுதமிழின துரோகி கலைஞர்க்கு வவுத்தால போவன்னு ஒரு கமேன்ண்ட போடு..போட்டுட்டு அஞ்சு நிமிஷம் அங்கேயே வெயிட் பண்ணி பாரு...உன்னை எவனும் மதிக்கிரானன்னு..எவனும் மதிக்கலைனா உன் போராட்டம் வெற்றி அடைஞ்சிருச்சு...! இல்ல திடீர்னு எவனாச்சும் யோவ்..என்னய்யா லூசு மாதிரி பேசுறேன்னு கேக்ரான்னு வையி...! திரும்பி அதே கேள்விய அவன்ட்ட கேளு..என்ன லூசு மாதிரி பேசுறேன்னு..! அவன் ஷாக் ஆகி உன்னை விட்டுட்டு போயிருவான்...உன் போராட்டம் வெற்றி அடைஞ்சிரும்...! ஆச்சா 

இப்ப நீனும் ஒரு போராளி...தமிழ்ஈழத்த எப்டியாச்சும் மலர வெச்சுறனும்ங்கற ஒரு நெருப்பு உனக்குள்ள எரிஞ்சுகிட்டே இருக்கணும்..அதுதான் ஒரு உண்மையான போராளிக்கு அழகு...! நேத்து மத்தியானம் ஒரு மூணு மணி வாக்குல கூட எனக்கு பயங்கரமா தோணுச்சு..எப்டியாச்சும் ஈழத்த மலர வெய்ச்சிரனும்னு...அப்பன்னு பார்த்து ஒரு பிரெண்டு படத்துக்கு கூப்ட்டான்...அர்ஜென்ட்டா கெளம்பி போயிட்டேன்..இல்லேன்னா நேத்தே ஒரு வழி பண்ணிருப்பேன்...!

ஆனா ஒன்னு மச்சி..பேஸ்புக்ல நம்ப பண்ற கூத்தெல்லாம் பார்த்து ஈழத்துல இருக்கற தமிழர்கள் கண்டிப்பா வாயால சிரிக்க மாட்டாங்கே...!!

நீ அதுக்காக உன் போராட்டத்த விட்றாத...! விடாம போராடு...!

லைக்குகள் அலறும்...ஸ்டேடசுகள் தொடரும்...!

ஈழம் மலரும்...!

வெளியூர்க்காரன் Posted by Veliyoorkaran - - 34 comments and to comment


துடைச்சு வெச்ச ஐபோன் மாதிரி ஸ்ருதி...ஸ்க்ராச் ஆன நோக்கியா போன் மாதிரி தனுஷ்..!! என்னடா இது ஜோடி பொருத்தம் சரக்குல மோர மிக்ஸ் பண்ண மாதிரி மிக்சிங் சரியில்லேன்னு ஒரு டவுட்டோடதான் போய் உக்காந்தேன்...!! பயபுள்ளைக இது ரெண்டுக்கும் இடைல நெட்வொர்க் அப்புடித்தான் எடுத்துருக்கு...இந்த கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரிம்பாங்களே...இது ரெண்டுக்கும் அதுல ஆரம்பிச்சு மைக்ரோபயலாஜி வரைக்கும் வொர்க்அவுட் ஆய்ருக்கு...ஆனா ஒன்னு சொல்றேன் சார்...ரஜினி சார் பொண்ணு ஸ்டார்ட் ஆக்சன் சொல்லகமல் சார் பொண்ண அலேக்கா மடில தூக்கி வெச்சு தாவன்கொட்டைல முத்தம் குடுக்கற அதிர்ஷ்டம்லாம் நம்ப தனுஷுக்கு மட்டும்தான் சார் கெடைக்கும்...ஷூட்டிங் முடிஞ்சோன்ன ரஜினி பொண்ணையும் போய் கட்டிபுடிச்சுக்கலாம்.அது தனி கதை...எல்லாருக்கும் உடம்புல மச்சம் இருக்கும்..ஆனாஉனக்கு மச்சத்துல உடம்பு இருக்கு வாத்யாரே...நீ வாழு மச்சி..இதே சிச்சுவேசன்ல நான் இருந்து என் பொண்டாட்டி டைரெக்டரா இருந்து ஸ்ருதிகிட்ட இவ்ளோ பீல் பண்ணி நான் நடிச்சாஅடுத்த செகேன்ட் ஷூட்டிங்க கேன்சல் பண்ணிட்டு என்ன தரதரன்னு வீட்டுக்கு இழுத்துட்டு போயி செருப்ப பிச்சு தாவன்கொட்டைலையே ரெத்தம் வர்ற வரைக்கும் அடிப்பா...! என்னமோ போங்க..மனைவி அமைவதெல்லாம் ரஜினி சார் குடுத்த வரம்...!!

தனுஷ்...படத்த தூக்கி தோளுல வெச்சுகிட்டு அசால்ட்டா நடிச்சிட்டு போய்கிட்டே இருக்காப்டி இந்த படத்துல...! நடிப்பு ராட்சஷன்..! கார் பார்க்கிங்கள இவர ரவுடி பசங்க சேர்ந்து அடிக்கும்போது மனசு கெடந்து பதருனுச்சு...டேய் அவன விட்டுட்டு ஓடிருங்கடா...அவென் சைக்கோ...எந்திரிச்சான்னா காட்டுமிராண்டிதனமா அடிப்பான்னு...!! புதுபேட்டை பார்த்துட்டு இவரு மேல வந்த பயம் இன்னும் போகல போலருக்கு எனக்கு .!! இவ்ளோ நாள் சூப்பர் ஸ்டார் மருமகன் டைரெக்டர் செல்வா தம்பிதேசிய விருது வாங்குன நடிகர்,...இனிமே இயக்குனர் ஐஸ்வர்யாவோட புருஷங்கற பேரும் சாருக்கு சேர்ந்துக்கும்...! நீ ஜெய்ச்சுகிட்டே இருக்க மச்சி...! அடிச்சு ஆடு...!!  

ஐஸ்வர்யா தனுஷ்...இந்த படத்த கிழிச்சு தொங்க போட நூறு விஷயம் இருக்கு..ஆனா நான் அப்டி செய்ய மாட்டேன்...ஏன்னா உங்கப்பா இந்தியாவுலையே பெரிய சூப்பர் ஸ்டார்...ஆனா எங்கப்பாவுக்கு என் சொந்த ஊர்ல இருக்கற ஸ்டார் சைக்கிள் கம்பெனில ஒரு அரை மணி நேரத்துக்கு வாடகை சைக்கிள் கூட குடுக்க மாட்டாங்கே...! யாரும் உள்ளூர்ல தெர்ஞ்சவங்க இருந்தா சொல்ல சொல்லிட்டு எடுத்துட்டு போங்கன்ருவாங்கே...! அதனால உங்கள கலாய்க்கரதுக்கு எனக்கு மட்டும் இல்ல..என் தலைமுறைக்கே வொர்த் கெடயாது...! செல்வராகவன் இந்த படத்துல ஹெல்ப் பண்ணிருக்காத பட்சத்தில இது ஒரு நல்ல முயற்சி...!அடிச்சு சாத்துங்க...! 

ஸ்ருதி..வழக்கமா இவங்க அப்பா படத்துல தான் கூட நடிக்கிற நடிகைங்கள எல்லாம் பிரிச்சு மேயுவாப்டி...இந்த பொண்ணு தனுஷ மேஞ்சிட்டு பிரிச்சிருக்கு...! எம்மாடி...என்னா நடிப்பு...! அதுவும் இந்த புள்ள அழுவும்போது வருத்தபடாத ஆயி...அங்காளம்மன் புண்ணியத்துல உன் புருஷன் கண்டிப்பா நல்லபடியா வந்துருவான்னு தலைய தடவி குடுத்து சொல்லணும் போலவே இருந்துச்சு...ஆனா என் பொண்டாட்டி ஞாபகம் திடீர்னு வந்துட்டதால அந்த ஆசைய கட்டுபடுத்திகிட்டேன்..!இல்லாட்டின மட்டும் பண்ணி கிழிச்சிருவன்னு அன்போடு சொல்ற அண்ணங்கல்லாம் அகம்பாவத்த குறைச்சுகிட்டு அடுத்த பேராவுக்கு போங்க...!!

மொத்தத்துல ராம் ஜனனி காதல நம்பி அனுபவிச்சு பார்க்கறவங்களுக்கு இந்த படம் ஒரு கவிதை...!

நம்பாத கழிசடைங்களுக்கு  அடிச்சு கிழிச்சு தொங்க விட இந்த படம் சமர்ப்பணம்...!!

ஆனா ஒரு அஞ்சு வருஷம் கழிச்சு இந்த படத்த பார்க்குற காலேஜ் பிகருங்கல்லாம் கண்டிப்பா இப்டி பேசிக்கும்..!

"ஏய்..பாருடி...சிவகார்த்திகேயன் அப்போல்லாம் சைட் ரோல்ல காமெடி ஆர்டிஸ்ட்டா வந்துருக்காரு"...!!!

"சிவா....மங்காத்தா ஆரம்பிச்சிருசுடி உனக்கு"...!! 

"கெளப்புரா கெளப்புரா கெளப்புரா தம்பி"....!!!

வெளியூர்க்காரன்

There was an error in this gadget