- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 34 comments and to comment


துடைச்சு வெச்ச ஐபோன் மாதிரி ஸ்ருதி...ஸ்க்ராச் ஆன நோக்கியா போன் மாதிரி தனுஷ்..!! என்னடா இது ஜோடி பொருத்தம் சரக்குல மோர மிக்ஸ் பண்ண மாதிரி மிக்சிங் சரியில்லேன்னு ஒரு டவுட்டோடதான் போய் உக்காந்தேன்...!! பயபுள்ளைக இது ரெண்டுக்கும் இடைல நெட்வொர்க் அப்புடித்தான் எடுத்துருக்கு...இந்த கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரிம்பாங்களே...இது ரெண்டுக்கும் அதுல ஆரம்பிச்சு மைக்ரோபயலாஜி வரைக்கும் வொர்க்அவுட் ஆய்ருக்கு...ஆனா ஒன்னு சொல்றேன் சார்...ரஜினி சார் பொண்ணு ஸ்டார்ட் ஆக்சன் சொல்லகமல் சார் பொண்ண அலேக்கா மடில தூக்கி வெச்சு தாவன்கொட்டைல முத்தம் குடுக்கற அதிர்ஷ்டம்லாம் நம்ப தனுஷுக்கு மட்டும்தான் சார் கெடைக்கும்...ஷூட்டிங் முடிஞ்சோன்ன ரஜினி பொண்ணையும் போய் கட்டிபுடிச்சுக்கலாம்.அது தனி கதை...எல்லாருக்கும் உடம்புல மச்சம் இருக்கும்..ஆனாஉனக்கு மச்சத்துல உடம்பு இருக்கு வாத்யாரே...நீ வாழு மச்சி..இதே சிச்சுவேசன்ல நான் இருந்து என் பொண்டாட்டி டைரெக்டரா இருந்து ஸ்ருதிகிட்ட இவ்ளோ பீல் பண்ணி நான் நடிச்சாஅடுத்த செகேன்ட் ஷூட்டிங்க கேன்சல் பண்ணிட்டு என்ன தரதரன்னு வீட்டுக்கு இழுத்துட்டு போயி செருப்ப பிச்சு தாவன்கொட்டைலையே ரெத்தம் வர்ற வரைக்கும் அடிப்பா...! என்னமோ போங்க..மனைவி அமைவதெல்லாம் ரஜினி சார் குடுத்த வரம்...!!

தனுஷ்...படத்த தூக்கி தோளுல வெச்சுகிட்டு அசால்ட்டா நடிச்சிட்டு போய்கிட்டே இருக்காப்டி இந்த படத்துல...! நடிப்பு ராட்சஷன்..! கார் பார்க்கிங்கள இவர ரவுடி பசங்க சேர்ந்து அடிக்கும்போது மனசு கெடந்து பதருனுச்சு...டேய் அவன விட்டுட்டு ஓடிருங்கடா...அவென் சைக்கோ...எந்திரிச்சான்னா காட்டுமிராண்டிதனமா அடிப்பான்னு...!! புதுபேட்டை பார்த்துட்டு இவரு மேல வந்த பயம் இன்னும் போகல போலருக்கு எனக்கு .!! இவ்ளோ நாள் சூப்பர் ஸ்டார் மருமகன் டைரெக்டர் செல்வா தம்பிதேசிய விருது வாங்குன நடிகர்,...இனிமே இயக்குனர் ஐஸ்வர்யாவோட புருஷங்கற பேரும் சாருக்கு சேர்ந்துக்கும்...! நீ ஜெய்ச்சுகிட்டே இருக்க மச்சி...! அடிச்சு ஆடு...!!  

ஐஸ்வர்யா தனுஷ்...இந்த படத்த கிழிச்சு தொங்க போட நூறு விஷயம் இருக்கு..ஆனா நான் அப்டி செய்ய மாட்டேன்...ஏன்னா உங்கப்பா இந்தியாவுலையே பெரிய சூப்பர் ஸ்டார்...ஆனா எங்கப்பாவுக்கு என் சொந்த ஊர்ல இருக்கற ஸ்டார் சைக்கிள் கம்பெனில ஒரு அரை மணி நேரத்துக்கு வாடகை சைக்கிள் கூட குடுக்க மாட்டாங்கே...! யாரும் உள்ளூர்ல தெர்ஞ்சவங்க இருந்தா சொல்ல சொல்லிட்டு எடுத்துட்டு போங்கன்ருவாங்கே...! அதனால உங்கள கலாய்க்கரதுக்கு எனக்கு மட்டும் இல்ல..என் தலைமுறைக்கே வொர்த் கெடயாது...! செல்வராகவன் இந்த படத்துல ஹெல்ப் பண்ணிருக்காத பட்சத்தில இது ஒரு நல்ல முயற்சி...!அடிச்சு சாத்துங்க...! 

ஸ்ருதி..வழக்கமா இவங்க அப்பா படத்துல தான் கூட நடிக்கிற நடிகைங்கள எல்லாம் பிரிச்சு மேயுவாப்டி...இந்த பொண்ணு தனுஷ மேஞ்சிட்டு பிரிச்சிருக்கு...! எம்மாடி...என்னா நடிப்பு...! அதுவும் இந்த புள்ள அழுவும்போது வருத்தபடாத ஆயி...அங்காளம்மன் புண்ணியத்துல உன் புருஷன் கண்டிப்பா நல்லபடியா வந்துருவான்னு தலைய தடவி குடுத்து சொல்லணும் போலவே இருந்துச்சு...ஆனா என் பொண்டாட்டி ஞாபகம் திடீர்னு வந்துட்டதால அந்த ஆசைய கட்டுபடுத்திகிட்டேன்..!இல்லாட்டின மட்டும் பண்ணி கிழிச்சிருவன்னு அன்போடு சொல்ற அண்ணங்கல்லாம் அகம்பாவத்த குறைச்சுகிட்டு அடுத்த பேராவுக்கு போங்க...!!

மொத்தத்துல ராம் ஜனனி காதல நம்பி அனுபவிச்சு பார்க்கறவங்களுக்கு இந்த படம் ஒரு கவிதை...!

நம்பாத கழிசடைங்களுக்கு  அடிச்சு கிழிச்சு தொங்க விட இந்த படம் சமர்ப்பணம்...!!

ஆனா ஒரு அஞ்சு வருஷம் கழிச்சு இந்த படத்த பார்க்குற காலேஜ் பிகருங்கல்லாம் கண்டிப்பா இப்டி பேசிக்கும்..!

"ஏய்..பாருடி...சிவகார்த்திகேயன் அப்போல்லாம் சைட் ரோல்ல காமெடி ஆர்டிஸ்ட்டா வந்துருக்காரு"...!!!

"சிவா....மங்காத்தா ஆரம்பிச்சிருசுடி உனக்கு"...!! 

"கெளப்புரா கெளப்புரா கெளப்புரா தம்பி"....!!!

வெளியூர்க்காரன்

34 Responses so far.

 1. Hooooo.. Haaaa... Ithu pathivu eluthunathukku!!!!

 2. பட்டாபட்டி.... hey hoooo hey ..,nee pathiva onnu ezhuthuyaa !!

 3. @பட்டாபட்டி.... says:
  Hooooo.. Haaaa... Ithu pathivu eluthunathukku!!!///

  கோட்டான கோட்டி நன்றிகள் ஏசப்பா...! கோட்டான கோட்டி நன்றி...! இயேசு உங்களை ஆசிர்வதிப்பாராக....!!!:)

 4. @@டிராகன் said...
  பட்டாபட்டி.... hey hoooo hey ..,nee pathiva onnu ezhuthuyaa !!///

  யோவ் பட்டாப்பட்டி...அண்ணன் சொல்ட்டார்ல...போய் எழுதுயா...!! :)

 5. பாஸ்வேர்ட்...

  இது யாருய்யா கொடுப்பா?

 6. @பட்டாபட்டி.... says:
  பாஸ்வேர்ட்...
  இது யாருய்யா கொடுப்பா?///

  யோவ் ட்ராகன்...! பட்டாபட்டி கேக்குதுள்ள...பதில் சொல்லுயா...! பாஸ்வேர்ட் என்னா...? சூரியனுக்கு கம்மகோட்டய காமிச்சா மட்டும் பத்தாது...! பட்டாபட்டியோட பாஸ்வேர்ட் தெரிஞ்சிருக்கணும்...!!:)

 7. தல நான் என் FB ல போஸ்ட் பண்ணிக்கிறேன் தல உங்க அனுமதி இல்லாம......அனுமதி தரமாட்டேன்னு சொன்னாலும் பரவாயில்லை....

 8. விமர்சனம் அருமை, எப்படி இப்படியெலாம்? தொடருங்கள் நண்பா...

 9. இந்த பதிவை கல்வெட்டில் செதுக்கி வைத்துக் கொள்ள அனுமதி கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்....

 10. என்னதாண்ணே சொல்லவ வர்றீக! படத்துக்குப் போலாமா வேணாமா? தனுஷைப் பார்த்து அங்க வயிறு எரியுறது இங்க வாடை அடிக்கி!

 11. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  விமர்சனம் அருமை, எப்படி இப்படியெலாம்? தொடருங்கள் நண்பா...//


  யோவ்..பன்னி.. நீபாட்டுக்கு தொடருங்கள் நண்பான்னு போட்டு போய்ட்ட.. பாரு ஸ்ருதிய தொடந்துகிட்டு போன வெளியூர்காரன இன்னும் காணும்? :-)

 12. ///////வைகை said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  விமர்சனம் அருமை, எப்படி இப்படியெலாம்? தொடருங்கள் நண்பா...//


  யோவ்..பன்னி.. நீபாட்டுக்கு தொடருங்கள் நண்பான்னு போட்டு போய்ட்ட.. பாரு ஸ்ருதிய தொடந்துகிட்டு போன வெளியூர்காரன இன்னும் காணும்? :-)///////////

  போய்ட்டு வரட்டும், நமக்கும் யூஸ் ஆகும்.........

 13. @@பன்னிக்குட்டி ராம்சாமி says:
  போய்ட்டு வரட்டும், நமக்கும் யூஸ் ஆகும்.........////


  யாராச்சும் போய்ட்டு வந்தா உனக்கு யூஸ் ஆகுமா...? பன்னின்னு பேரு வெச்சிருந்தப்பவே நாங்க சந்தேகபட்ருக்கணும்...!! (நகந்து நில்றா டேய்...!) :)

 14. @@கிறுக்கன்☁☂ said...
  தல நான் என் FB ல போஸ்ட் பண்ணிக்கிறேன் தல உங்க அனுமதி இல்லாம......அனுமதி தரமாட்டேன்னு சொன்னாலும் பரவாயில்லை....//

  சரி போட்டுக்கடா தம்பி...! ( யோவ் பட்டாபட்டி..பேர பார்த்தியா.. கிருக்கனாம்..!! இவன் கிறுக்கண்ணா அப்ப நம்பலாம் யாரு...? ) :)

 15. @@@வைகை said...
  யோவ்..பன்னி.. நீபாட்டுக்கு தொடருங்கள் நண்பான்னு போட்டு போய்ட்ட.. பாரு ஸ்ருதிய தொடந்துகிட்டு போன வெளியூர்காரன இன்னும் காணும்? :-)///

  யோவ் வைகை...ஒரு நாயும் மதிக்கலைனாலே அந்த டபரா மண்டையன் அம்பது கமெண்ட் போடுவான்...நீ வேற சூப்பர் சிங்கர்ல வர்ற பிகர் கணக்கா கேள்வி வேற கேக்குற அவன்ட்ட...!! ஏன்யா இந்த வெறி உனக்கு...?? :)

 16. @@@Rettaival's Blog said...
  என்னதாண்ணே சொல்லவ வர்றீக! படத்துக்குப் போலாமா வேணாமா? தனுஷைப் பார்த்து அங்க வயிறு எரியுறது இங்க வாடை அடிக்கி!/////


  அது வவுதெரிச்சல் இல்லை தோழரே...! ஆக்ரோசமா பொறாமபடறது...!!! நீங்க சொல்றதுக்கும் இதுக்கும் நெறைய வித்யாசம் இருக்கு...! ( நல்லவேளை இப்ப அந்த கம்னாட்டி இலுமி இங்க இல்ல..) :)

 17. கலை குடும்பத்தில் இருந்து வந்து மக்களுக்காக.. இப்படி கலைச்சேவை பண்ணினால்.. இப்படியா நக்கல் செய்வது...தோழர்?

 18. பன்னிப்பயலோட ஒரு கால் மட்டும் வீங்கியிருக்கே..’

  இன்னா காரணமுனு கேட்டியா மச்சி?

 19. நீங்களும் அதில் ஒருவர் என்பதையும் நான் அறிவேன். இந்த 2000 பேரில் 20 பேர் தான் என்னை போஷிக்கிறார்கள். சட்டை வாங்கிக் கொடுக்கிறார்கள்; மோதிரம் போடுகிறார்கள்; ரெமி மார்ட்டின் வாங்கிக் கொடுக்கிறார்கள். அப்படிப்பட்ட நண்பர் ஒருவர் நேற்று என்னிடம் “உங்களுக்குக் க்யூபாவுக்கு ஒரு டிக்கட் வாங்கிக் கொடுக்கிறேன்; போய் வாருங்கள்” என்று சொல்லி இருக்கிறார். கச்சி ஏகாம்பரன் என் குரலை செவி மடுத்து விட்டான் என்று நினைத்துக் கொண்டேன்.
  //

  இது சாரு சொன்னது..
  சிங்கை பதிவர்கள்(ஒரிஜினல்) சார்பாக..காண்டமாவது வாங்கிக்கொடுக்கனுமய்யா.. இல்ல,, அசிங்கமா போயிடும்போல,,,,

 20. @@பட்டாபட்டி.... says:
  கலை குடும்பத்தில் இருந்து வந்து மக்களுக்காக.. இப்படி கலைச்சேவை பண்ணினால்.. இப்படியா நக்கல் செய்வது...தோழர்?///

  மன்னித்து விடுங்கள் தோழர்..! இனி இவ்வாறு நடவாது என உறுதி அளிக்கிறேன் தோழர்...! (வக்காளி உனக்கு இருக்குடி ஒரு நாளு..!! ):)

 21. @@@பட்டாபட்டி.... said...
  பன்னிப்பயலோட ஒரு கால் மட்டும் வீங்கியிருக்கே..’இன்னா காரணமுனு கேட்டியா மச்சி?//

  எதாச்சும் ஒரு மொக்க பதிவுல போய் கூச்சமே இல்லாம முப்பத்தேழு கமெண்ட் போட்ருப்பான்...அங்க உள்ளவனுகல்லாம் ஒண்ணா சேர்ந்து இவன் வாய சைக்கிள் டியூபால கட்டி மல்லாக்க படுக்க போட்டு கெண்டகால்லையே நச்சு நச்சுன்னு அடிச்சிருப்பாணுக...! காலு ஒரு சைடா இழுத்துருக்கும்...!! இதெல்லாம் நோபல் பரிசு வாங்க போறப்ப மேடைல தடிக்கி விழுந்தா கால உடைச்சுக்கும்...!! என்னயா கேனத்தனமா கேள்வி கேக்குற...!!:)

 22. @@பட்டாபட்டி.... said...
  இது சாரு சொன்னது..
  சிங்கை பதிவர்கள்(ஒரிஜினல்) சார்பாக..காண்டமாவது வாங்கிக்கொடுக்கனுமய்யா.. இல்ல,, அசிங்கமா போயிடும்போல,,,,//

  யூஸ் பண்ணதா....பண்ணாததா...?? தெளிவா சொல்லுயா...!! ( ஆமாம், நாமதான் சிங்கப்பூர் பதிவர் சங்கத்த போன வாரமே தேக்கால தண்ணியடிக்கும்போது சைட் டிஷ் தகராறுல கலைச்சிட்டமே..?? நீ எந்த சங்கத்த சொல்ற...? ) :)

 23. அண்ணே அது நோபல் இல்லண்ணே ஆஸ்கார்....... எங்க மறுக்கா சொல்லுங்க....... ஆஸ்கார்........

 24. @பன்னிக்குட்டி ராம்சாமி

  சார்.. வணக்கம்.. மூக்கு அரித்தாலே.. அதைப்பற்றி அரிய தகவலுடன் பதிவு எழுதும் வல்லமை படைத்த நீர்,

  அதாவது... பன்னி சார்....  சமீபகாலமாக பதிவு எழுதாமல் இருப்பதின் ரகசியம் என்னவோ?

 25. சசியும் ஜெயாவும் இணைந்ததால்.. இனிமேல்
  சைபால் வாங்க வேண்டிய பணம் மீதமாகும் என அண்ணன் பன்னீரு..டீக்கடையில சொல்லியிருந்தாரே...

  அது ஏய்யா?

 26. ☀☃ கிறுக்கன்☁☂ said...

  தல நான் என் FB ல போஸ்ட் பண்ணிக்கிறேன் தல உங்க அனுமதி இல்லாம......அனுமதி தரமாட்டேன்னு சொன்னாலும் பரவாயில்லை....
  //

  இது என்ன காவியமா சார்..?
  கண்ட கருமாந்திரத்தை காப்பி பேஸ்ட் பண்ண பர்மிஷன் கேட்டுக்கிட்டு...  எடுத்துக்கிட்டு போய்கிட்டே இருங்க...
  வெளியூரு ஏதாவது டீ காபி கேட்டா மட்டும் சிரிச்சுக்கிட்டே வாங்கிக்கொடுங்க போதும்..

  அதுகண்டி பண்ணீட்டீங்க....
  பய
  மூணு நாள் முழிச்சிருந்து அடுத்த பதிவு எழுதிக்கொடுப்பாரு....ஹிஹி

  (அப்பாடா.. வந்த வேலை முடிஞ்சது....)

 27. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  இந்த பதிவை கல்வெட்டில் செதுக்கி வைத்துக் கொள்ள அனுமதி கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...
  //

  எடுத்துட்டு கெளம்ப்பு மச்சி..

  அடுத்தாப்பல... அம்மா கொடுக்கும் நாப்கின்ன மட்டும் மறக்காம மாட்டிக்கிட்டு .. இந்தப்பக்கம் வா.,...

  அப்பதான் உனக்கு ஒரு ரகசியம் சொல்லுவேன்


  :-)

 28. இந்தா பாரு வெளியூர்காரா! இண்னிக்கு மொத மொதலா உன்னோட பிளாக்குக்கு வந்து கிட்டத்தட்ட அத்தனை பதிவையும் படிச்சு முடிச்சிருக்கேன். என்னை உங்கள் பக்கம் திருப்பிய பன்னிக்குட்டி ராம்சாமிக்கு நன்றிகள்.! அது போக உன்னோட பிளாக்க வேற பாலோ பண்ணுறன். நான் எல்லாம் ரொம்ப பிஸியான பதிவர். முப்பது பதிவு போட்டிருக்கேன்னா பாத்துக்கேயேன்! நாளுக்கு எத்தன வாங்குறேன்னு நெனைக்கிறே? சும்மா இருத்தம்பது முன்னூறுன்னா சும்மாவா? இப்பிடியா பட்ட பிஸியான பதிவர் நானு ஏன் உன்ன பாலோ பண்ணுறன் அப்டீன்னா, எனக்கும் உனக்கும் ஒரு ஒத்தும இருக்கு, ரெண்டு பேருமே நம்மோட தானை தளபதி டாகுடரோட தீவிர , அதிதீவிர அதிஅதி தீவிர விசிறிகள், ஏ.சி கள்! ஏர் கூலர்கள். அந்த ஒரு காரணத்துக்காகத்தான் உன்ன நான் பாலோ பண்ணுறன், இல்லாங்காட்டி சுண்டக்கா, ஈ ஆடாதைந்த பிளாக்க பாலோ பண்ணனும்ங்கிற அவசியம் எனக்கு கெடையாது புரிஞ்சுகோ!

  ஆ! புரிஞ்சுதா? இவளவு அளப்பறைய குடுக்குறேன்னா அதுக்கு என்ன காரணம்? மருவாதையா என்ன வெத்தல பாக்கு வச்சு உன்னோட பிளாக்குக்கு வரவேத்து உன்னோட மானம் மருவாதைய காப்பாத்திக்கோ! ஆ சொல்லிப்புட்டேன்! அப்புறம் டாகுடரோட கட்சில கொ.ப.சே யா இருக்கிற நான் உன்னப்பத்தி அவதூறு பரப்பி விட்டுருவேன் ஜாக்கிரத!

 29. கிஷோகர் IN பக்கங்கள் says:
  நான் எல்லாம் ரொம்ப பிஸியான பதிவர். ///


  டேய் வெளில போடா டேய்...! :)

 30. அண்ணே வணக்கம்னே...
  சலாம் வச்சிக்கிட்டு அப்படிக்கா குத்தவட்சி உக்காந்துக்கிறேன்...

  [இப்படி கமெண்ட் போட சொல்லி வெலன்காதவன் சொன்னாரு]

 31. மீண்டும் வணக்கம்னே...

  சொல்லிக்கிட்டே இருக்க சொன்னாங்க...

 32. அண்ணே முடியளைண்ணே...
  வணக்கம்...வணக்கம்...வணக்கம்...

  [சைந்தவியும்,சிபியும் வரவரைக்கும்...நான் வணக்கம் சொல்லிக்கிட்டே இருக்கணுமாம்...காப்பாத்துங்கண்ணே..]

 33. யோவ் வெளியூரு, நீ டுப்பாக்கி படம் வரவரைக்கும் பதிவு எழுதமாட்டைன்னு சொன்னாங்க...


  :-)

 34. //சிங்கை பதிவர்கள்(ஒரிஜினல்) சார்பாக..காண்டமாவது வாங்கிக்கொடுக்கனுமய்யா.. இல்ல,, அசிங்கமா போயிடும்போல,,,,//

  யூஸ் பண்ணதா....பண்ணாததா...?? தெளிவா சொல்லுயா...!! ( ஆமாம், நாமதான் சிங்கப்பூர் பதிவர் சங்கத்த போன வாரமே தேக்கால தண்ணியடிக்கும்போது சைட் டிஷ் தகராறுல கலைச்சிட்டமே..?? நீ எந்த சங்கத்த சொல்ற...? ) :)
  ////

  மறக்காம, குண்டலினி கத்துக்கங்கைய்யா...