- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 12 comments and to comment

...
நல்லா உத்து பாருங்க..
டர்பன் வெச்ச மொசக்குட்டி மாதிரி இல்ல நம்ம மன்மோகன் சார பார்த்தா...
மடில தூக்கி வெச்சு புஜ்சுபுஜ்சுபுஜ்சுன்னு கொஞ்சனும் போல இல்ல...ஐயோ சினுங்கராரே....
அழகு பீசுங்க நம்ம  மொசக்குட்டி....


(மொசக்குட்டின்னோன வேற எதாச்சும் எதிர்பார்த்தியலாக்கும்...எஸ்.ஜெ.சூர்யாவா ஒய் நான்...பொம்பள புள்ளயல பத்தியே எழுத...)சரி சம்பவத்துக்கு வருவோம்...ஒரு வாரம் ஆச்சு...ப்லாகுக்குள்ள வந்து...நீங்கல்லாம் ஏங்கி போய் என்னாச்சுடா வெளியூர்காரா ஏண்டா எழுதலைன்னு பதறி போய் கேப்பீங்கன்னு பார்த்தா ஒருத்தரும் மதிக்கல...மொட்ட மண்டைல நல்லெண்ண ஊத்துன மாதிரி எல்லாரும் கண்டுக்காம போய்டீங்க...பரவால்ல விடுங்க... என்னைய மாதிரி வீரனுக்கு விழுப்புண்கள் சகஜம்...


தமிழனுக்கு ரொம்ப புடிச்ச விஷயங்கள் மூணு.
அதுல மொதோ ரெண்டு சினிமா..மூணாவது அரசியல்...


அதும் தமிழகத்தோட புளிச்சு போன அரசியல்...கும்மிடிபூண்டி தாண்டி வர்ற நாடு நேபளா இல்ல பர்மவான்னு கேட்டா பளிச்சுன்னு பர்மான்னு பதில் சொல்ற பளீர் பட்டாசு நம்மாளு ...அவனுக்கு அத தாண்டி தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமும் இல்ல..(உன்னை போல் ஒருவன் ரொம்ப பாதிச்சிருக்கன்யா...)அதனால தமிழ் கூறும் நல்லுலகிற்கு இந்திய துணை கண்டத்தின் முக்கிய அரசியல் கரும்புள்ளிகளை பற்றிய ஒரு பார்வை...


நம்ம மொசக்குட்டி....12 பக்கத்துக்கு பயோ டேட்டா வெச்சுருக்கற ஒரே அரசியல்வாதி...மூளைக்கார செல்லக்குட்டி...மக்களால தேர்ந்தெடுக்கபடாமையே பிரதமர் பதவில இருக்கும் காமெர்ஸ் புலி...மனுஷன் சொக்க தங்கத்தோட அக்கா...எனக்கு மட்டும் வயசான தங்கச்சி இருந்தா இவர் காலுல விழுந்தாச்சும் கட்டி வெச்சுடுவேன்.... (ஆயுதம் அனுப்பறதா நிப்பாடிட்டீங்களா இல்ல இன்னும் போய்க்கிடுதான் இருக்கா சார்...)


அடுத்தது நம்ம சோனியா காந்தி...டெல்லியோட மூளைக்கார ஜெயலலிதா...இவங்கக்கிட்ட ஒரே ஒரு வேண்டுகோள்...தயவு செஞ்சு பிரதமர் பதவிக்கு வந்துடாதீங்க..ராகுல பிரதமராகுங்க.....உங்க பேர இந்தியா இந்திரா காந்தி வரிசைல வெச்சுக்கும்...


அடுத்தது நம்ம ராகுல் காந்தி...இந்தியாவின் அடுத்த பிரதமர்...ஏன்னே தெரியாம நேரு குடும்ப வாரிசுகள கண்னமூடிக்கிட்டு ஏத்துக்கற இந்தியாவோட செண்டிமெண்ட் பிரஜைகளில் அடியேனும் ஒருவன்....ராகுல் சார் என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்...(சீக்கிரம் கல்யாணம் பண்ணிகொங்க சார்..அடுத்த இந்திய பிரதமர் ரெடி ஆக வேண்டாமா...)


சொந்த தொகுதிலையே மக்கள் காரி மூஞ்சில துப்பி தோக்கடிசாலும் அத காட்டிக்காம ஆளுங்கட்சி காலுல விழுந்து உட்டாலக்கடி வேல பார்த்து எதிர்கட்சிய டபாய்ச்சு, ஜெய்ச்சிட்டதா அறிவிச்சுகிட்ட இந்திய துணைக்கண்டத்தின் தவிர்க்க முடியாத அதிகார மையம் திரு .சிதம்பரம் அவர்கள்....கட்சில நான்காம் இடத்ல இருக்கற பிரதமர் வேட்பாளர்...தேர்தல்ல தொத்துருந்தாலும் காபினெட்ல சீட் வாங்கி அமைச்சர் பதவிய தக்க வெச்சுக்கற அளவுக்கு செல்வாக்கு படைத்த தமிழக காங்கிரஸ் கட்சிகளின் ஒரு பிரிவு தலைவர்....(சார்,கார்த்திய கண்டிச்சு வைங்க...ரொம்ப பேசறாப்ல..)

அடுத்தது நம்ம பிரணாப் முகர்ஜீ...இவர் படத்த கார்டூன்ல போட்ட அன்னிக்கு வியாபாரம் பிச்சுக்கும்னு எவனோ சொல்லிட்டான் போல...சிக்கன நடவடிக்கைன்னு சொன்னாலும் சொன்னாரு,இவர ஜட்டியோட,வெறும் துண்டோட,டவசர் போட்டுக்கிட்டுன்னு பின்னி பெடலெடுத்து  நமீதா ரேஞ்சுக்கு போட்டு தாளிச்சுடாங்கே நம்ம மீடியா.....மொசக்குட்டியின் அமைச்சரவை சகாக்களில் இவர் முக்கியமான மூளைக்கார ஜிகர்தண்டா...மம்தா மேடம்...கலைஞர மண்டைல தட்டி கெலம்புடி செல்லம் காத்து வரட்டும்னு சொல்லிட்டு ரயில்வே துறைய அசால்ட்டா கைப்புடிச்ச மேற்கு வங்கத்தின் விஜய்...(கில்லி..) லல்லூவ விட அதிகமா பேர் வாங்கறதுக்கு என்னென்மோ பண்றாங்க...பாப்போம்...


அடுத்து நம்ம பிரபுல் பட்டேல்..சாட்சி சொன்னதும் போதும்...சங்கட்டபட்டதும் போதும்ங்கற மாதிரி இந்தியால சங்கு அறுபட்ற துறைகள்ல மொத எடத்துல இருக்கற துறைய வெச்சுக்கிட்டு படாதபாடு படர பரம்பர கோடீஸ்வரர்...இந்த சனிபெயர்சிலயாவது இவருக்கு ஏதாவது நல்லது நடக்குதான்னு பார்ப்போம்...


நம்ம ராஜா..கலைஞர் சாரோட நம்பிக்கை நட்சத்திரம்...ஸ்டாலின் பக்கத்துல இருந்தாலும் இவர் தோளை புடிச்சிக்கிட்டு நடந்து போற அளவுக்கு இவர் செல்வாக்கு கட்சில பிரசித்தம்...இவர் இப்போ என்ன பண்ணிகிட்ட்ருகாருங்கறது அடுத்த ஆட்சில CBI விசாரணை முடிஞ்ச அப்பறம்தான் தெரியும்...அவ்ளோ நல்லது பண்றாரு...எது யாருக்கா..மக்களுக்குதாங்க...


ஹி ஹி..அடுத்தது நம்ம போட்டோ பீசு தயாநிதி மாறன்...கில்லி துறைய வெச்சுருந்த ஒரு கார்பரேட் சூரப்புலிய கூப்ட்டு .வி.கே.எஸ்.இளங்கோவன் மாதிரி ஒரு வெத்து குதுரை வெச்சுருந்த ஜவுளி துறைய குடுத்து செல்லத்த அசிங்கபடுதுனாலும் ,கட்சிக்காக தலைவணங்கி ஏத்துக்கிட்ட கழக காவலன்...இவர சேட்டு வீட்டு பையன்னு நெனச்சு ஒட்டு போன்ற மார்வடிங்க இன்னும் இருக்காங்க தண்டயார்பேட்டைல...தமிழகத்தின் ஸ்டார் அரசியல்வாதி...எந்த தொகுதில மனுதாக்கல் பண்ணாலும் எதிர்த்து நிக்கரவங்களுக்கு எனிமா குடுக்கற முரசொலி மாறனின் புலிக்குட்டி...ராகுல் காந்தி கண்ணா மூடிக்கிட்டு டிக் அடிக்க போகும் அடுத்த வெளியுறவு துறை அமைச்சர்...(இப்பல்லாம் அவ்ளவா போட்டோல பார்க்கமுடியரதுள்ள...ஏன் சார்...அக்கா திட்ராங்களா...)


ஜி கே வாசனுக்கு கப்பல் எப்டி மெதக்குதுங்கறது தெரியரதுக்குள்ள மொசக்குட்டி துறைய மாத்தி விட்ரும்...(எது பண்ணாலும் சீக்கிரம் பண்ணுங்க சார்...உங்க கட்சிய பத்தி உங்களுக்கு தெரியாததில்ல...)


எது அழகிரி சார்ஆ...(யோவ் ஏன்யா வம்புல மாட்டிவிட்றீங்க...எனக்கு வேற வாய் சும்மா இருக்காதே...)அழகிரி சார் பத்தி சொல்றதுக்கு என்னெனமோ இருக்கு...இப்போ இங்கிலிசு பேச வேற கத்துகிட்டராம்..கெமிஸ்ட்ரினா வேதியல் அப்டீனு மனபாடம் பண்ணி போன வாரம் அவங்கப்பாகிட்ட சொல்லி ஆனந்த கண்ணீர் வர வெச்சுட்டாரம்.கழக உடன்பிறப்புகள் இத மதுரைல கிடா வெட்டி கொண்டாடி அவங்களோட மகிழ்ச்சிய வெளிபடுதினதா வேற கேள்வி...இன்னும் ரெண்டு மாசத்துக்குள்ள Fertilizerனா என்ன அப்டீங்கரத்தையும் கத்துக்கறதா அவங்க நைனா கிட்ட உறுதி கொடுத்துருகாரம்...அத கத்துக்கிடார்னா அதுக்கப்றம் புல்லா நல்லதுதான் பண்ணுவாரு ...எது யாருக்கா...எந்த ஊருயா நீ...இவ்ளோ வெள்ளந்தியா இருக்க....


டி.ஆர்.பாலுக்கு பல்பு குடுத்து உக்கார வெச்சதுனால சொல்லிகற மாதிரி வேற யாரும் இல்லைங்க...(பொண்ண குடுத்து சம்பந்தி ஆய்ருந்தா இவருக்கும் சீட் கெடைச்சிருக்கும்...குழந்தை அரசியல் தெரியாம ஏமாந்துடுச்சு...)


அத்வானி சார்...நரேந்திர மோடி,அருண் ஜெட்லி,சுஷ்மா ஸ்வராஜ்,இப்டி காங்கிரஸ்க்கு கொஞ்சமும் சலச்சுக்காத அளவுக்கு இரண்டாம் கட்ட தலைவர்கள வேச்சுருகர நீங்க இவ்ளோ மோசமா தொத்துருக்க வேணாம்...அதுக்காக பால் தாகரே காலுல போய் விழுந்துடாதீங்க...ரத யாத்திரை வேணா ட்ரை பண்ணி பாருங்க..Better luck next time..


மொத்ததுல இது மொசக்குட்டியின் கில்லி அரசாங்கம்...BJP ரெண்டாவது இன்னிங்க்ஸ் கஷ்டம்தான்...


இப்படிக்கு முட்டுசந்துல உக்கார்ந்து தேசிய அரசியல இஞ்சி டீல கலந்து குடிச்ச திருப்தியுடன்,


வெளியூர்க்காரன்..
 

There was an error in this gadget