- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 12 comments and to comment


ஹாய்டி  செல்லகுட்டி..எப்டி அம்மு இருக்க...
நீ எப்டி இருப்ப..!இப்போ எங்க இருக்க..!
உன்ன பார்க்கணும் போல இருக்கு...!
அத்தை நல்லா இருக்காங்கள...? மாமா எப்டி இருக்கான்...?

இப்பல்லாம் தலைகாணி பிடிக்கறதே இல்ல தெரியுமா எனக்கு.. 
மெத்து மெத்துன்னு நீ இருக்க வேண்டிய எடத்ல,எவன் பெத்த மெத்தையோ.

கந்தசாமி படம் பார்த்துட்டியா..
எந்த தியேட்டர்ல பார்த்த.. அந்த தியேட்டர் எந்த ஊர்ல இருக்கு.....

உன்னப்பத்தி நெறைய தெரிஞ்சுக்கணும்னு ஆசையா இருக்கு..
ஆனா,அந்த ஆசையெல்லாம் யாருகிட்ட கேட்கறதுன்னு தெரில...

என்னிக்காச்சும் இத நீ படிப்பன்கர நம்பிக்கைல...இங்க கேக்கறேன்....

சிரிச்சா கன்னத்துல குழி விழுமா உனக்கு...
பேசும்போது உதட்ட சுழிப்பியா..நெகம் கடிப்பியா..
மருதாணி வெச்சுக்க பிடிக்குமா...
இல்ல ஹேர் கலரிங் பண்ணிகர ஜீன்ஸ் பொண்ணா...
ரொம்ப குஷியானா தொடைல நறுக்குன்னு கில்லுவியா...
கொஞ்சம் சோம்பேறியா..காலைல என்ன காபி போட சொல்லி கேஞ்சுவியா.
கர்லிங் ஹேரா உனக்கு...அடிக்கடி பியுட்டி பார்லர் போவியா..
தல கோதி விட புடிக்குமா..உன்னோட வாசன எப்டி இருக்கும்...
உனக்கு கவிதை எழுத வருமா..தெரியலைனா கூட பரவால்ல...
(எந்த ஊர்ல கவிதை கவிதை எழுதுனிச்சு...)

நல்லா படிப்பியா..இல்ல என்ன மாதிரி பிசிக்ஸ் வாத்யார் மாடு முட்டி சாகனும்னு தேங்கா உடைச்ச பார்ட்டியா.விஜய் செம கியுட்பான்னு வேணும்னே வேணும்னே செல்லமா வேருப்பெத்துவியா...
சொல்லி கொடுத்தா  கொஞ்சி கொஞ்சி கெட்ட வார்த்தையெல்லாம் பேசுவியா...எனக்கு இப்பவே ஐஸ்க்ரீம் வேணும்னு அடம் புடிக்கற பால் புட்டியா...

லோட லோடன்னு பேசிகிட்டே இருப்பியா..
வயித்த வலிக்குதுனு இன்னும் அம்மாவ கட்டிக்கிட்டு அழற குழந்தையா நீ...
இல்ல பெண்ணுரிமை பேசற பாலசந்தர் பட ஹீரோயினா..

மேரேஜுக்கு முன்னாடி என் கண்ண பார்த்து பேசும்போது ப்ளீஸ் அங்கெல்லாம் பார்க்காதீங்கன்னு கெஞ்சற டாமங்கோலியா..அப்போ திருட்டுத்தனமா கிஸ் குடுத்துட்டா,கோவத்துல கத்துவியா.இல்ல மயங்கி நின்னு  அவ்ளோதானா சொல்லுவியா...

நீ ஸ்கூல்ல எடுத்த போட்டோ எல்லாத்தையும் பத்திரமா எடுத்து வெச்சிரு...
நான் கண்டிப்பா பார்க்கணும்...எதெது எப்டி எப்டி இருந்துச்சுன்னு...

உங்கொப்பன் அந்த முட்டாபயல கிண்டல் பண்ணா கோவம் வருமா உனக்கு
இல்ல பொய்யா கோவப்பட்டு, கிட்சென்ல போய் சிரிப்பியா..

நீ இருக்கும்போது நான் நம்ம குழந்தைய கொஞ்சுனா கூட போறாமபடுவியா.
ஏதாவது சமைக்க தெரியுமா..இறால் வறுவல்...!
இலக்கியம் பேசுவியா...நல்லா டிரஸ் பண்ணுவியா...!
உனக்கு மீன் வளர்க்க புடிக்குமா..பூனை...!
சாமி கும்புடிவியா..இல்ல தாலிய கழட்டி பீரோல்ல வெச்சுக்கற எங்க பெரியார் பொண்ணா.

டாட்டூ போட்டுக்க புடிக்குமா.
வெயில்ல ஊர் சுத்த புடிக்குமா.
ப்ளூ கலர் புடிக்குமா உனக்கு...
ஜீன்ஸ் டி ஷர்ட்லாம் போடுவியா..

எப்போடி ஏஜ் அட்டன்ட் பண்ண...?

நீ பட்டு பாவாட கட்டிருக்க போட்டோ இருக்கா உன்கிட்ட...
என் தோள்ல சாஞ்சுகிட்டே பஸ்ல தூங்க பிடிக்குமா உனக்கு...
கல்யாணத்துக்கு அப்பறம் நான் உனக்கு லவ் லெட்டர் குடுத்தா சிரிச்சுகிட்டே வாங்கிப்பியா...இல்ல போடா லூசுன்னு டிவி பார்க்க போயிடுவியா..
ரொம்ப சந்தோசமா இருக்கப்போ அழுக பிடிக்குமா...
பார்ட்டில தண்ணியடிச்சிட்டு வந்தா மூஞ்ச தூக்கி வெச்சுபியா...
பீர் கொஞ்சம் குடிச்சு பாருடின்னு சொன்னா செருப்பு பிஞ்சிடும்ன்னு சொல்லுவியா...இல்ல கிங் பிஷர் ஸ்ட்றாங்க  சொல்றா மச்சான்னு பதற வெக்கற சிட்டி பட்டாசா.
என்னோட ஸ்கூல் லவ்வ சொன்னா ரசிச்சு கேப்பியா..
என்னோட ஆட்டோகிராப் நோட்ட படிச்சிட்டு விழுந்து விழுந்து சிரிப்பியா...
உன்ன இப்பவே கட்டிபுடிச்சு கன்னாபின்னான்னு கடிக்கணும் போல இருக்கு...
எது ஏனா... ங்கோயல.
ஏன்னா,
உன்ன நான்தாண்டி கல்யாணம் பண்ணிக்க போறேன் கிறுக்கு பய மவளே...
இன்னும் நாப்பது வருஷம் நீ என்கூடதாண்டி தூங்க போற...

அதுவும் ஒரே பெட்ல...

ஒவ்வொரு நைட்டும் நீ ரொம்ப அழகா இருக்க புஜ்ஜுன்னு உன்கிட்ட நாந்தான் வழிய போறேன்...
உங்கோப்பன வேற  மானம் கெட்டு போய் ,மாமான்னு கூப்ட போறேன்...
(கருமாந்தரம்..)
ஆமாம்டி..உங்கப்பன் அந்த பனங்கா மண்டையன் இப்போ என்னதான் தேடிகிட்ட்ருக்கான்...(வீட்ல இருக்கானா இப்போ...)

அவன சீக்கிரம் தேட சொல்லு...

இப்படிக்கு வெளியூரிலிருந்து...
உன் புருசன்காரன்..

வெளியூர்க்காரன்

12 Responses so far.

 1. இப்பல்லாம் இப்படித்தான் காதல் சொல்லியாறதோ. பயலுவ ஒரு மார்க்கமாத்தான் போய்கிருக்கிங்க போல. அசத்தல் தம்பி. வாழ்த்துகள்

 2. இப்பல்லாம் இப்படித்தான் காதல் சொல்லியாறதோ. பயலுவ ஒரு மார்க்கமாத்தான் போய்கிருக்கிங்க போல. அசத்தல் தம்பி. வாழ்த்துகள்

  September 16, 2009 9:14 PM

  பயபுல்லையே ஒன்னும் கமெண்ட போடாம போயட்டங்கலேன்னு மனசு ஏங்கி கேடைக்கைய்லே வயத்துல ginger beera வார்துப்புடியே போங்க....வர்ற சந்தோசத்துக்கு ப்ரியாமனிய விட்டு உங்க கைல முத்தம் குடுக்க சொல்லலாமான்னு தோனுது...(கன்னத்துல குடுக்க கற்பனைல கூட விடமாட்டோமுள்ள.....)

 3. Siva says:

  ஒரு பொண்ணு மனச புரிஞ்சுக்க நெனைக்கற எந்த ஒரு உள்ளூர் ஆணும் வெளியுர்க்கரனே.. அப்படின்னு சொல்லாம சொல்ல-தான் இப்படி பேரு வச்சிருக்கீங்களா? அப்படின்னு கேட்க-தான் வந்தேன்..
  உங்க கவிதைய பார்த்து கொஞ்சம் பயந்துட்டேன்..
  அப்புறமா வரேன்...

 4. Siva said...
  ஒரு பொண்ணு மனச புரிஞ்சுக்க நெனைக்கற எந்த ஒரு உள்ளூர் ஆணும் வெளியுர்க்கரனே.. அப்படின்னு சொல்லாம சொல்ல-தான் இப்படி பேரு வச்சிருக்கீங்களா? அப்படின்னு கேட்க-தான் வந்தேன்..
  உங்க கவிதைய பார்த்து கொஞ்சம் பயந்துட்டேன்..
  அப்புறமா வரேன்...

  September 23, 2009 4:38 AM///
  நான் எங்க ஒய் கவித எழுதிருக்கேன்..இதான் போற போக்குல நக்கல போடறதா...

 5. wow.. really super. keep rocking

 6. Anonymous says:

  எப்போdi age attend பண்ண...
  ithakodaya ni keppa...
  Irundhalum un blog la elame superb ya.......
  keep it up

 7. Anonymous said...
  எப்போdi age attend பண்ண...
  ithakodaya ni keppa...
  Irundhalum un blog la elame superb ya.......
  keep it up.Oct 23, 2009 7:48:00 PM//
  என்ன கேள்வி ரொம்ப குழந்தைதனமா இருக்கு...இன்னும் கேக்கறதுக்கு என்னெனமோ இருக்கு...இதுக்கு போய் ஆச்சர்யபட்டுகிட்டு...லூசாப்பா நீ....

 8. Saravanan says:

  இல்ல KFstronga சொல்றா மச்சான்னு பதற வெக்கற சிட்டி பட்டாசா.Machyyyyyyyyyy asathuda....annan irukken pulli vakka...........kmc manathoda appavaye kapathita.....

 9. Vidu vidu vidu machi....enakku pugalchiyellam pudikaathu..(neengalam kaaranam illama kuli vetta maateengale...en thideernu....)

 10. எந்த ஊர்ல கவிதை கவிதை எழுதுனிச்சு..


  wow

 11. director says:

  உனக்கு கவிதை எழுத வருமா..தெரியலைனா கூட பரவால்ல...
  (எந்த ஊர்ல கவிதை கவிதை எழுதுனிச்சு...)

  super timing friend ungalukku,keep it up.
  saravanan
  singapore.

 12. அண்ணன் கவிதை எழுதிருக்காரு இத படிக்காம விட முடியுமா ? ஹி ஹி