- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 21 comments and to comment
கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்க மச்சான்..இப்பதாண்டா எதோ சாதிச்ச 
மாதிரி ஒரு பீலிங் வருது..வாழ்க்கையோட அர்த்தம் இப்பதாண்டா புரியுது...பொண்டாட்டி முன்னாடி இப்டி சொல்லிட்டு,அவங்க கிட்சென் உள்ள 
போனோன, கையெடுத்து கும்புட்டு தயவு செஞ்சு அந்த தப்ப மட்டும் பண்ணிமாட்டிக்காத மச்சின்னு கெஞ்சற நண்பன்....


எவ்ளோ நிம்மதியா இருந்தேன்..கல்யாணத்த பண்ணி வெச்சு என்ன என் புருசனுக்கு அடிமையகிட்டாங்க.என் தோழி ஒருத்தி...


தம்பி அடுத்த வருஷம் ஜூன் குள்ள கல்யாணத்த முடிசிரனும்டா..நல்ல பொண்ணு கேடைசுதுன்ன விட்ற கூடாது.....என் அம்மா..


டேய் கல்யாணத்துக்கு நெறைய செலவாகும்..வழக்கம் போல பெருந்தன்மமயிரா நீங்களே பார்துகங்கப்பானு சொல்லிட்டு போய்டாத...மரியாதைய காச சேர்த்து வை...என் அப்பா..


சீக்கிரம் கல்யாணம் பண்ணி தொலைடா...காலேஜுக்கு ரெண்டு நாள் லீவ் போடலாம்னு நானும் ரெண்டு வருசமா வெயிட் பன்றேனு.... சொல்லிட்டு ...மூதேவி..இதுவும் பண்ணிக்கமட்டேன்குது.எனக்கும் பண்ணி வெக்க மாட்டேன்குதுன்னு மனசுக்குள்ள முனுமுனுக்கற என் தங்கச்சி...


கல்யாணம்லாம் சும்மா பிரதர்...வெத்து மேட்டரு...ஒன்னும் இல்ல அதுல...பார்ல சிகரட் ஓசி வாங்குன கடனுக்கு அட்வைஸ் பண்ண வஸ்தாது ஒருத்தர்.

கல்யாணம்..கல்யாணம்...கல்யாணம் ..... 

27 வது வயசுல ஒரு பேச்சுளர லேசா பயமுறுத்தி அதிகமா பதட்டபடுத்தி கொஞ்சமா ஷாக் அடிக்க வைக்கற ஒரு வார்த்த... அப்டி என்னதாங்க இருக்கு இந்த கல்யாணத்துல....


முதல் 3 மாதம்... திடீர்னு ஒரு நாள் ஒரு பொண்ணு போண்டாட்டிங்க்ற பேர்ல உங்க வீட்டுகுள்ள வருவா...ஒரு கூட்டமே வந்து விட்டுட்டு போகும்....உங்க பக்கத்துலையே படுத்து, உங்க வீட்லயே தங்குவா..


பீரோ குள்ள உங்க துணிய நகர்த்தி வெச்சுட்டு அவ துணிய அடுகிக்குவா...உங்க பாத்ரூம்ல அவசோப்பும் ப்ரச்சும் எடத்த புடிச்சுக்கும்...அடுத்த நாள் ஆபீஸ் போகும்போது சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுங்கன்னு குழைஞ்சு குழைஞ்சு காதுகிட்ட மூச்ச விட்டுகிட்டே சொல்லுவா...ஊர்ல டம்மி பிகர் கூட மதிக்காத நம்மள இந்த 
புள்ளைக்கு இவ்ளோ புடிசிருகேன்னு நம்மளும் வழிஞ்சுகிட்டே சீக்கிரம் வர ஆரம்பிப்போம்...(இது அடிமையாகரதொட முதல் கட்டம்...)

அப்பறம் உங்கள அடிமையாக்கரதுக்கு,உண்டான பணிகள் வேகம் வேகமா கனஜோர்ல நடக்கும்...
(அவ கூட படிச்சா வில்லிங்கல்லாம் வேற இதுக்கு ரூம் போட்டு ஐடியா குடுப்பாளுக...)


மற்றொரு அழகான மாலை பொழுதுல புது பொண்டாட்டிய ஷாப்பிங் 
கூட்டிட்டு போவீங்க...அது 3 வருசமா வாங்க நெனச்சு வாங்காம இருந்த 
எல்லாத்தையும் அப்பதான் வாங்கும்....எவன் பெத்த பொண்ணாவோ 
இருந்தாலும் அவ வாங்கற நெய்ல் பாளிஷ்க்கும் பாடி ஸ்ப்ரெயெர்க்கும் நீங்கதெண்டம் அழுகனும்...கான்டாதான் இருக்கும்...என்ன பண்றது...
பொண்டாட்டிய போய்ட்டா...ஒவ்வொரு சினுங்களுக்கும் கிரெடிட் கார்ட் 
கிழிய கிழிய தேய் தேய்னு தேய்ப்போம்...பில்லு எகிர்றது பார்த்து மனசு 
பதர்னாலும் உதடு வேற என்ன வேணும் என் செல்லகுட்டிக்குன்னு கேக்கும்.


வீட்டுக்கு விருந்தாடிங்க்ற பேர்ல வந்து டேரா போன்ற அவங்கப்பன் 
விருமாண்டி கிட்ட கூட  பாசமா நடந்துகுவோம்...(எல்லாம் நடிப்புதேன்..
எந்த ஊர்ல மாப்பிள்ளைக்கு அவன் மாமனார புடிச்சிருக்கு...)கொஞ்சம் 
கொஞ்சமா நீங்க நீ யாயிட்டு வருவீங்க...


கட் பண்ண ஆறு மாசம் ஓடிடும்...


அதுக்கப்றம் எங்க ஒய் இருக்கு உமக்கு வாழ்க்கை...அடிமை ஒய் நீரு...


பிரென்ட் ரூம்ல போய் விடிய விடிய தண்ணியடிச்சிட்டு கத பேசுற சுகம் 
அதுக்கப்றம் கனவாவே போய்டும்....எங்க போறோம்,எதுக்கு போறோம்னு தெரியாம எங்கெங்கயோ போன தருணங்கள் மனசுக்குள்ள வெறும் 
நினைவுகளா மட்டுமே இருக்கும்...எந்த பொண்ண பார்த்தாலும் நம்ம 
பொண்டாட்டி இப்டி இருப்பாளோ,அப்டி இருப்பாலோங்க்ற அந்த curiosity சுத்தமா இருக்காது...(அதான் எழவு வீட்ல இருக்குமே...)செகண்ட் ஷோ 
சினிமா கட் ஆகும்...குஷி ஆனா அடிக்கற பீர் கட் ஆகும்...வீட்டுக்குள்ள 
அடிக்கற தம் கட் ஆகும்.நிம்மதியா செலவு பண்ற சுதந்திரம் கட் ஆகும்....
என்ன கொடும கோதண்டபாணி சாஸ்த்ரிகள் இது.
இதுக்குதான் இந்த கருமம் புடிச்ச கல்யாணத்த வேண்டம்கரன்...


வாழ்க்கைல சந்தோஷமான தருணம் bachelorlife மட்டும்தான்னு எனக்கு தோனுது..

நீங்க என்ன நெனைக்கறீங்க...
இப்படிக்கு bachelorlife  ரசித்து ருசித்து என்ஜாய் பத்திரி ரைடு பண்ணிகொண்டிருக்கும்...

வெளியூர்க்காரன்...


21 Responses so far.

 1. Anonymous says:

  "என்ன கொடும கோதண்டபாணி சாஸ்த்ரிகள் இது""பீரோ குள்ள உங்க துணிய நகர்த்தி வெச்சுட்டு அவ துணிய அடுகிக்குவா...உங்க பாத்ரூம்ல அவ சோப்பும் ப்ரச்சும் எடத்த புடிச்சுக்கும்..."

  wat a beautiful lines..mr veliy....kaaran!!!1

  vaazka bachelor life

 2. நல்லா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க போல...:)))

 3. பயமக்களுக்கு எம்புட்டு சந்தோசம்...நம்ப கடைசி வரைக்கும் காதலிக்காம கல்யாணம் பண்ணிகாமையே வாழ்ந்து காட்டுவோம்ல...கல்யாண வாழ்க்கை ஒழிக...

 4. //பிரென்ட் ரூம்ல போய் விடிய விடிய தண்ணியடிச்சிட்டு கத பேசுற சுகம் அதுக்கப்றம் கனவாவே போய்டும்//

  கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் அந்த சான்ஸ் கிடைக்கும் வெளியூர்க்காரன்,பொண்டாட்டி அவுங்க அப்பா வீட்லந்து போன் பண்ணி நான் ரெண்டு நாள் இருந்துட்டு வரன்னு சொல்லும்போதும்,நீங்க துள்ளி குதிச்சு உங்க friends க்கு கால் பண்றப்போ ,அப்ப உங்க friends மச்சான் காசு இல்லடான்னு சொல்லும்போது,நீங்க டேய் already எல்லாம் வாங்கி வச்சாசுடானு சொல்லிட்டு ,உங்க friendsa வீட்டுக்கு வர சொல்லி,தண்ணி அடிக்கிற சுகம் இருக்கு பாருங்க ...........

  கவித...கவித
  http://kittipullu.blogspot.com

 5. Anonymous says:

  டேய் யார்ரா நீ..என்னடா பிரச்சனை உனக்கு..
  வந்தன்னா தூக்கி போட்டு மெதிச்சிபுடுவேன் ராஸ்கல்.
  இப்டியா அநியாயத்துக்கு உண்மைய எழுதுவ நீ...!

 6. Anonymous says:

  Chellam...

 7. Anonymous says:

  ayyyooo evallvoo polamba vachitangalea .namakuuthan ponnukedaikalnna aduthavanyum bachelora irrukasonna enn gyayam.unga vetla solli nallaa heightaa azhaka oru ponna pakkasolren ok vaa

 8. ஒரு முக்கியமான விஷயத்தை மிகவும் காமெடியாக சொல்லயுள்ளீர்கள். நன்றி........

 9. Sachanaa says:

  //டேய் யார்ரா நீ..என்னடா பிரச்சனை உனக்கு..
  வந்தன்னா தூக்கி போட்டு மெதிச்சிபுடுவேன் ராஸ்கல்.
  இப்டியா அநியாயத்துக்கு உண்மைய எழுதுவ நீ...!//

  hahahahah

 10. Anonymous says:

  nee yaru samy romba nella erupa

 11. Anonymous said...
  டேய் யார்ரா நீ..என்னடா பிரச்சனை உனக்கு..
  வந்தன்னா தூக்கி போட்டு மெதிச்சிபுடுவேன் ராஸ்கல்.
  இப்டியா அநியாயத்துக்கு உண்மைய எழுதுவ நீ...!

  September 22, 2009 7:07 PM/////
  அட விடுன்னேன்.இதுக்கெல்லாம் கொவப்பட்டுகிட்டு....

 12. Anonymous said...
  ayyyooo evallvoo polamba vachitangalea .namakuuthan ponnukedaikalnna aduthavanyum bachelora irrukasonna enn gyayam.unga vetla solli nallaa heightaa azhaka oru ponna pakkasolren ok vaa

  September 23, 2009 4:33 AM///
  யோவ்..ங்கோயல...நீ பேர் போடலைனாலும் யாருன்னு எமக்கு தெரியும் ஒய்...

 13. Sachanaa said...
  //டேய் யார்ரா நீ..என்னடா பிரச்சனை உனக்கு..
  வந்தன்னா தூக்கி போட்டு மெதிச்சிபுடுவேன் ராஸ்கல்.
  இப்டியா அநியாயத்துக்கு உண்மைய எழுதுவ நீ...!//

  hahahahah

  September 23, 2009 2:49 PM///
  Hi Sachana,by the by I am a bachelor...enakku ippothan ponnu parthukitrukanga.
  ungalukku...(nangallam damarnu kalla vilunthuruvom audience..no soodu soranai...)

 14. Anonymous said...
  nee yaru samy romba nella erupa

  September 23, 2009 3:05 PM///
  ஏன் அண்ணேன் இம்புட்டு பீலிங்க்சு...விடுன்னேன்...
  நமக்கு ஒரு நல்ல காலம் வராமயா போய்டும்...

 15. புலவன் புலிகேசி said...
  ஒரு முக்கியமான விஷயத்தை மிகவும் காமெடியாக சொல்லயுள்ளீர்கள். நன்றி........

  September 23, 2009 2:08 PM////
  நன்றி திரு புலவன் புலிகேசி அவர்களே...(நக்கல் ஒய் உமக்கு...எங்கையா புடிச்சீரு இந்த பேர...)

 16. azhahu says:

  hai nanba ,

  ungaludya ezhthukkal anaithum ennai kavarkirathu. intha muyarchi vetriyadaya en valthukkal . veelvathu namaha irunthalum valvathu tamilaha irukkattum

 17. azhahu said...
  hai nanba ,

  ungaludya ezhthukkal anaithum ennai kavarkirathu. intha muyarchi vetriyadaya en valthukkal . veelvathu namaha irunthalum valvathu tamilaha irukkattum

  September 27, 2009 4:44 AM///

  இங்க பாரேன்...வாழ்வது தமிழாக இருக்கட்டும்னு இங்கிலிஷ்ல டைப் பண்ணிருகாப்டி....

 18. azhahu says:

  annathai namakku tamila epdi nnu thoriyathu nee koncham sollen , ennamo persa biku panre.

 19. azhahu says:

  neengal enakku pathil sollum neram oru puthiya pathivedu ezhuthi irunthal nan padithu mahilnthuruppen.

 20. மாமேய்...முடியாதுள்ள..என் வாத்யாரே லேசா தொட்டா இதாதண்டிகு மேர்சலாக்ற...விடுமே..
  (ஆனா,வெச்ச பாத்தியா ஐசு...நீ உஷாரு மச்சி ...)

 21. "ஊர்ல டம்மி பிகர் கூட மதிக்காத நம்மள இந்த புள்ளைக்கு இவ்ளோ புடிசிருகேன்னு நம்மளும் வழிஞ்சுகிட்டே சீக்கிரம் வர ஆரம்பிப்போம்...(இது அடிமையாகரதொட முதல் கட்டம்...)அப்பறம் உங்கள அடிமையாக்கரதுக்கு,உண்டான பணிகள் வேகம் வேகமா கனஜோர்ல நடக்கும்...(அவ கூட படிச்சா வில்லிங்கல்லாம் வேற இதுக்கு ரூம் போட்டு ஐடியா குடுப்பாளுக...)"

  Nice

There was an error in this gadget