புதுசா எழுத ஆரம்பிக்கறோம்..
நம்ம சென்னைய பத்தியே எழுதிடலாம்னு மனசுக்குள்ள ஒரு சின்ன ஆசை..
அப்போ சென்னைக்கும் உங்கள ரொம்பபுடிக்கும்.. ஏன்னா சென்னைக்கும்
பாலவாக்கம் பீச்சு.. !
மெட்ராஸ் பசங்க 5 வார்த்தை பேசுனா அதுல 3 தடவ வர்ற .....த்தா.
சென்னை சுகம்ங்க...அழகான சுகம்..
சென்னையை இன்னும் காதலிக்கும் வெளியூர்காரன்....
அசலூரிலிருந்து...
அழகான விஷயங்களோட அம்மாங்க சென்னை.. !
லைப்ல இருக்கற எல்லா அழகான விசயங்களையும் ஸ்ட்ராபெரி ஐஸ்க்ரீம்ல கலந்து,அதுல நெறைய சந்தோசத்த தூவி,என் பக்கத்துக்கு வீட்டு
சின்னக்குட்டி மாதிரி ஒரு சாக்லேட் பொண்ணு சாப்புட்ரா செல்லகுட்டினு
கண்ணாலேயே சொல்லிட்டு கைல குடுத்துட்டு போனா எப்டிங்க இருக்கும்...
அப்டித்தாங்க இருந்துச்சு எனக்கும்... !
ஆறு வருஷத்துக்கு முன்னாடி.. ,
சென்னைனு எழுதி படிச்சு பாருங்களேன்....அந்த வார்த்தையே அவ்ளோ அழகா இருக்கும்.. கைல காசு இல்லாம தல சுத்தற பசியில சுத்துனா கூட அழகா தெரியுற ஒரே ஊர்.. சென்னை அழகுன்னா, சென்னையோட பொண்ணுங்க இன்னும் அழகு .ஸ்பென்சர்லஅவளுக திருட்டுத்தனமா சைட் அடிக்கறத
பார்கறதுகுன்னே அடுத்த ஜென்மத்துலயும் நாம ஆம்பளைய பொறக்கலாம்.
உங்களுக்கு லைப்ல சின்ன சின்ன விசயங்கள என்ஜாய் பண்ண புடிக்குமா..
என்ஜாய் பண்றதுன்னா ரொம்ப புடிக்கும்.. மழை நேரத்துல மெரினா பீச்ல மொளகா பஜ்ஜியும் வெங்காய சட்னியையும் சப்புகொட்டிகிட்டே
சாப்டிருகீங்களா... நைட்டு 11 மணிக்கு திருவான்மியூர் பீச்ல ஐஸ் மோர குடிச்சுகிட்டே தியாகராஜா தியேட்டர்ல 30 ரூவைக்கு பார்த்த படத்த 300
தடவ பேசிருக்கீங்களா.பெசன்ட் நகர் பீச்ல லவ்வர்ஸ் கொஞ்சிக்கரத, கமெண்ட் அடிச்சுகிட்டே கிராஸ் பன்னிருகீங்களா . இல்லேன்னா..
இதையெல்லாம் பண்ணுங்க சார் முதல்ல..
சிட்டி சென்டர் வாசன.. !
சத்யம் தியேட்டர் பிகருங்க... !
பிரார்த்தனா தியேட்டர் கம்மேன்ட்சு ... !
மாயாஜால் பாரு... சிசிஎம் பீரு..!
தேவி தியேட்டர்ல ப்ளாக்ல டிக்கெட் விக்கற ஊதா சட்ட போட்ட பொடியன்.
இசிஆர் செக்கிங்ல தண்ணியடிசிருக்கியான்னு மூஞ்ச பார்த்தே கேக்ற
போலீஸ் அங்கிள்....
மறக்க முடியலைங்க எதையுமே....
இப்படிக்கு..
வெளியூர்க்காரன்.
vanakkam vathiyare vannakkam..........
enna mama soukkiyamma....
எழுத ஒன்னும் கேடக்கலன்னா இப்படி எடத்த விட்டு விட்டு எழுதுவியா....
nanum oru chennai kadalan illaai koliveri kathalan so no comment.....
மொதல்ல பின்னூட்டம் போடவா?
வில்லங்கப் பார்டியோன்னு தமிழ் பிளாகுல துவங்கி கீழே....கீழேன்னு இங்கே வந்தா....
சரக்கில்லாமில்லாம மப்பு:)
ஹய் வெளியூர்க்காரா
நானும் சென்னைலே பல ஆண்டு இருந்திருக்கேன் தெரியுமா - உன்னெ விட எத்தனை மடங்கு அதிகம் தெரியுமா - யோசிச்சுச் சொல்லு பாப்போம்
நல்வாழ்த்துகள் வெளியூர்க்க்காரன்
நட்புடன் சீனா
its true boss... Chennai roxx... am new to chennai... it looks different and beutiful to me evry day...