- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 7 comments and to commentஇப்பதாங்க படம் பார்த்துட்டு வர்றேன்...
இந்த மாதிரி படம் தமிழ்ல வர்றதுக்கு இன்னும் 354 வருஷம் ஆகும்.
அதுக்குள்ளே சேரனும்,விக்ரமனும் காதல், பூவு,முதல் காதல்,439 வது  காதல்,தம்பிக்கு பஞ்சு வச்ச சிகெரட்டு வாங்கி குடுக்கறது,மழை நேரத்துல 
குடும்பத்துக்கே குடையா இருக்கிறது இப்புடி பல மேட்டருகள வெச்சு 
இன்னும் 35 படம் எடுத்து நம்மள இன்னும் புத்திசாலிய ஆக்கிருபாங்க.
நம்மளும் அத பார்த்துட்டு கை தட்டிருபோம்.....சரி மேட்டருக்கு வருவோம்...

"படம் நல்லாருக்குபா".. அப்டீனு சொல்றதெல்லாம் சாதரண வார்த்தைங்க..
ஒரு நல்ல ரசிகனா நான் அந்த டைரேக்டருக்கு பண்ற துரோகம்.....
கொய்யால, சும்மா மிரடிருக்கானுக...ஸ்டோரிலைன் என்னவோ ரொம்ப 
சின்னது.ஆனா,”தி ஆர்ட் ஆப் மூவீ  மேகிங்”.....
சத்யமா அவங்கள அடிச்சுக்கவே முடியாதுங்க...

கொலை எப்டி பண்ணுவாங்க...சுட்டு கொல்லுவாங்க,இல்ல அடிச்சு 
கொல்லுவாங்க..ஆனா ,பயபுள்ளைய இந்த படத்துல எப்டி எப்டியோ கொல்ரனுவோ...ஸ்க்ருடிரைவர  வெச்சு மூளைய நோண்டறது, டையர வெச்சு நசுக்கி கொல்லறது..மோட்டார  டிக்கில பிக்ஸ் பண்ணி கல்லீரள உருவரது...
அய்யோ முடியல வாப்பா....!பியுடிபுள் மூவிங்க....கண்டிப்பா பாருங்க...

ஆனா புதுசா கல்யாணம் ஆனவங்க பொண்டாட்டிய கூட்டிட்டு போறதா அவாய்ட் பண்ணுங்க...அப்பறம் நீங்க தனிய தூங்கற மாதிரி இருக்கும்...
(அப்பறம் அந்த புள்ள பயத்துல அவங்க அம்மா வீட்டுக்கு போய்டும்...)

மத்தபடி விமர்சனம்ங்க்ற பேர்ல கதைய சொல்லி அந்த படத்தோட வேகத்த குறைக்க விரும்பல..படம் முடிஞ்சு வெளில வரும்போது அப்பாடா,நமக்கு 
ஒன்னும் ஆகல அப்டீனு தோண வெக்கற படம்.
பார்த்து என்ஜாய் பண்ணுங்க..

(சேரன் இந்த படத்த எடுத்தா எப்டி இருக்கும்னு யோசிச்சு பாத்தேன்...
அது,விஜயகாந்த வெச்சு நல்ல படம் எடுத்த மாதிரி இருக்கும்.அதனால 
கற்பனைய டைட்டிலோட  நிப்பாட்டிட்டேன்.)

வெளியூர்க்காரன் 

7 Responses so far.

 1. Veliyoorkaran says:
  This comment has been removed by a blog administrator.
 2. Anonymous says:

  Dear Veliyoorkaran,
  I love all your bolg msg especially about Vijay and Kalaignar. I don't know how to type in tamil.
  I would like to say thousands times thanks in Tamil.
  keep on going.
  Kumar
  PS: I am also one more veliyoorkaran (Pozhaikka vanthavan)

  Again
  many many thanks

 3. Anonymous said...
  Dear Veliyoorkaran,
  I love all your bolg msg especially about Vijay and Kalaignar. I don't know how to type in tamil.
  I would like to say thousands times thanks in Tamil.
  keep on going.
  Kumar
  PS: I am also one more veliyoorkaran (Pozhaikka vanthavan)

  Again
  many many thanks

  September 18, 2009 5:10 PM////

  தங்கள் அன்புக்கும் வருகைக்கும் நன்றி...
  வெளியூர்க்காரன்..

 4. வெளியூர்க்காரன் அவர்களே, நீங்கள் ஒரு படத்தை விமர்சனம் செய்வதில் தவறில்லை, அதற்காக மற்ற படங்களோடு ஒப்பிடாதீர்கள், குறிப்பாக வேறு மொழிப்படங்களையும் தமிழ் படங்களையும். நீங்கள் சொல்வது போல் Final Destination 4 ஒன்றும் அவ்வளவு சிறந்த படமில்லை, உங்களுக்கு பிடித்திருக்கிறது அவ்வளவே. இந்த படத்துக்கான ரேடிங்கை IMDB மற்றும் rotten tomatoesல் பாருங்கள், அவர்கள் ஊரில் அந்த படங்களுக்கு கிடைத்த மரியாதை தெரியும். சேரன் ஒரு சிறந்த படைப்பாளி குரூரத்தையும், மயஜாலங்களை நம்பாமல் கதையை நம்பி படமெடுப்பவர் அவருடைய கடைசி இரண்டு படங்கள் ஓடவில்லை அவ்வளவுதான். சிறந்த வேற்று மொழி படங்களை பார்ப்பதும் பாராட்டுவதும் நல்லதே, அதற்காக நம் படங்களோடு ஒப்பிடாதீர்கள், எந்த காலத்திலேயும் நாம் pearl harbor எடுக்கபோவதில்லை அவர்கள் பருத்தி வீரனை எடுக்கபோவதில்லை, இதை புரிந்து கொண்டு விமர்சனம் எழுதுங்கள் உங்கள் மேதமையை காட்டவல்ல.

 5. நண்பர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..
  பக்கத்துக்கு வீட்டு பையன் எப்டி படிக்கறான் பாருன்னு கேட்ருக்கேன்...நீயும் இருக்கியேன்னு நான் எந்த இடத்லயும் கேக்கல...நான் கேட்ருகேன்னு நீங்க நெனசீங்கன்ன அது நண்பர் புரிதலுக்குட்பட்ட ஒரு விஷயம்...நான் பயன்படுத்திய வார்த்தைகள் வலித்திருந்தால் மன்னிக்கவும்...உங்க கருத்துக்கு வருவோம்...இது நம் படங்கள் பிடிக்கலங்க்ரதனால இல்ல...நானும் ஆட்டோகிராப் லேர்ந்து பொக்கிஷம் வரைக்கும் சேரனோட எல்லா படங்களையும் பார்த்துருக்கேன்...சில படங்கள ரசிச்சிருக்கேன்...என்னோட வருத்தம் என்னென்னா,ஏன் ஒரே எடத்லையே நின்னுகிட்டு காட்னதையே காட்றாங்க...அடுத்த தளத்துக்கு வர சொல்லுங்க...மறுபடியும் ஒப்பிடுறேன்னு நெனைக்காதீங்க...ஆங்கிலத்துல Life is Beautiful னு ஒரு படம் இருக்கு... அந்த மாதிரி படாத இப்ப இருக்கற தமிழ் இயக்குனர்கலால எடுக்க முடியுமாங்கறது கேள்விக்குறிதான்.அவங்களுக்கு இரண்டு தளங்களும் இயல்பா வருது...தமிழ் படம்னாலே பஸ் டிக்கெட்ல காதல எழுதி கொடுத்துகிட்டு,காதல்ல தோத்து போய்...என்ன சார் இது...! அவங்க பருத்தி வீரன எடுக்கரஙகளா இல்லையாங்கறத பத்தி எனக்கு கவலை இல்லை.. என்னோட ஆதங்கம் நம் படைப்பாளிகள் ஏன் Pearl Harbour மாதிரி முயற்சிகள தமிழ்ல பண்ண கூடாது...மணிரத்னத்ல ஆரம்பிச்சு பி.சி.ஸ்ரீராம்,ரவிச்சந்திரன் இப்டி ஏகப்பட்ட சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள வெச்சுகிட்டு ஏன் இன்னும் 1950 கல்ல உள்ள கதைகள படமாக்கறீங்க..எங்களோட ரசிக்கும் திறன உயர்த்த சொல்லுங்க...யாரையோ கொண்டாடற நாங்க...எங்க படைப்பாளிகள கொண்டடமாட்டமா....?
  ஒப்பிட்டு பெசியமைக்கு மன்னிக்கவும்.
  வெளியூர்காரனின் பக்கங்களில் இனி இது போன்ற தவறுகள் பதிவாகாது..சுட்டி காட்டியமைக்கு நன்றி...

 6. Anonymous says:

  marvellous work da mama

 7. Anonymous said...
  marvellous work da mama

  September 27, 2009 9:11 PM////
  தேங்க்ஸ்டா மாமா..ஆமாம்...யாரு மாமா நீ....