- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 54 comments and to comment


தியேட்டர்ல   சீட் நுனில உக்காந்து உங்க பிகர் நெறைய சீன்ல, பாப்கார்ன கீழ கொட்டிகிட்டே உங்க கைய இருக்கமா கட்டிபுடிச்சுகிட்டு படம் பார்க்கற  பரமசுகத்த எப்டியாவது அனுபவிக்கனும்னு ஆசைபடற அன்பர்கள் தாராளமா இந்த படத்துக்கு அந்த டிக்கட்ட தூக்கிகினு போலாம்... ஆனா, என்ன ஒன்னு..நீங்க எந்த சைட் உக்கான்துருக்கீங்கரத கிளியரா சொல்லிருங்க.. பாவம் என் பக்கத்துல உக்காந்துருந்த பொண்ணு படம் பார்க்கற டென்சன்ல  அவ பாய் பிரெண்டுன்னு நெனைச்சு ,சரி அத விடுங்க நம்ம படத்துக்கு போவோம்... !


நடு தண்டவாளத்துல நின்னு நம்ம விஜயகாந்த் குறுகுறுன்னு  முறைச்சு பார்த்து செய்ற வேலைய நம்ம டென்சல் வாஷிங்க்டன் ரொம்ப கஷ்டப்பட்டு உடம்ப வருத்தி செஞ்சிருக்காரு...எது என்னா வேலையா...அதாங்க மணிக்கு எழுவது கிலோமீட்டர் வேகத்துல போற டிரைவர் இல்லாத ட்ரைன நிப்பாட்றது..தலைவர் பட்டாசு பண்ணிருக்காரு..டென்சல் ரசிகர்களுக்கு இந்த படம் செம ட்ரீட்...அதும் கேப்ல கலாய்க்கற சீன்லாம் ங்கொய்யான்னு  இருக்கு..!


ஆனா பாருங்க தமிழ் ரசிகர்களுக்கு இந்த படம்லாம் ரொம்ப சப்ப மேட்டரு...நம்ம பரவால்ல...தெலுங்கு  பட ரசிகர்களுக்கு இது மேட்டரே இல்ல...அவங்கே பாலகிருஷ்ணா ட்ரைன நிப்பாட்ட வந்துகிட்ருக்காருன்னு தெரிஞ்சா ட்ரைன் தானா எஞ்சின ஸ்டாப் பண்ணிட்டு எறங்கி தம் அடிக்க போயிரும்..தக்காளி அவன் வந்தா டயலாக் அடிச்சே கொல்லுவான்னு..அவேங்கல்லாம் வானத்துல பறந்துகிட்ருக்கற ராக்கெட்ட ஆட்டோல கூட்டமா போய் மடக்கரவங்கே . இந்த படம் அவெங்களுக்கு பிசாத்து....!


ரொம்ப நல்ல த்ரில்லர் படம்..டென்சல்க்காக கண்டிப்பா ஒருதடவ பார்க்கலாம்..இந்த படம் எப்புடி இருக்குன்னு இலுமினாட்டி  இன்னும் நாலு வருஷம் கழிச்சு பரபரப்பா ஒரு விமர்சனம் போடுவான்..படிச்சு பார்த்து தெரிஞ்சுக்கங்க...


மொத்தத்துல இந்த படம் ஒரு ரியல் எண்ட்டர்டெய்னர்..!

மிஸ் பண்ணிடாதீங்க...!


வெளியூர்க்காரன்  


Posted by Veliyoorkaran - - 35 comments and to commentபொண்ணு பார்த்த கதை . 

எனக்கு மூச்சு பேச்சே வரல, எல்லார்கிட்டயும் இவ்ளோ நல்லா பேசறவன் என்கிட்டே என்ன பேச போறானோன்னு ஒரே நடுக்கம்.


ஆனா, இன்னும் கொஞ்ச நாள்ல இவன தூங்க விடாம விடிய விடிய பேசபோறோம்னு மட்டும் உள்மனசு அடிச்சு சொன்னுச்சு..!


தோட்டத்துக்கு வந்தோம்,


அப்போதாங்க அவன முழுசா பார்த்தேன்,


கொஞ்சம் க்ளோஸ் அப்ள அவன பார்த்ததும், மனசுக்குள்ள ஏதேதோ ஜப்பானீஸ் எழுத்தெல்லாம் குறுக்க நெடுக்க ஓடுனுச்சு... அத தமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணி பார்த்தப்போ வெக்கம்னு வந்துச்சு..! 


"என்ன ரொம்ப வெட்கப்பட வைக்கரிங்கன்னு" அவன் காதுக்குள்ள சொல்லனும்போல இருந்துச்சு..


ஆனா சொல்லல...!


அன்னிக்கு சிபி என்கிட்டே என்ன பேசுனான்னு நான் ஆயிரம் க்ளு குடுத்தா அதுல நீங்க அஞ்சத்தான் கரெக்டா கண்டுபுடிப்பீங்க...!


பேச ஆரம்பிச்சான்..,


சிபி : என்ன நிக் நேம் வைக்க போறீங்க? 


நான்: நான் எதுக்கு நிக் நேம் வெக்கணும்..? 

சிபி: இல்ல கல்யாணத்துக்கு அப்பறம் ஒரிஜினல் பேர் வெச்சு கூப்ட்டா ஒரு கிக் இருக்காது..அதான் கேட்டேன்..!


எனக்கு லேசா கிர்ருன்னு ஆய்டுச்சு.. அட பாவி ...நான் இன்னும் உன்ன புடிச்சிருக்குன்னு சொல்லவே இல்லையேடா என் செல்ல போருக்கின்னு சொல்ல உதடு துடிச்சுது..என் கண்ண பார்த்து என் மனச படிக்க ஆரம்பிச்சிருந்தான் என் மக்கு குட்டி..!


 ம்ம்ம்..இன்னும் 5 நாள்ல சொல்றேன்னு சொன்னேன்..!


அழகா சிரிச்சான்...!


அஞ்சு நிமிஷம் எதுவுமே பேசாம இருந்தோம்..எதுவுமே பேசாம என் கண் வழியா நைசா எறங்கி என் மனச திருடிகிட்ருந்தான்..என் கண்ணு முன்னாடியே...!


என்னால எதுவுமே பண்ண முடியல..பண்ணவும் தோணல..

அது அவனோடதுதான...!


அடுத்து என்ன கேட்ருப்பான்னு நெனைக்கறீங்க..


ஒரு ரோஜாவ பூவ என் முன்னாடி மண்டி போட்டு இங்கிலீஷ் பட ஹீரோ மாதிரி ரொமாண்டிக்கா ஐ லவ் யு சொல்லி குடுத்துருபான்னுதான நெனைக்கறீங்க...அதான் இல்ல..!


Phone நம்பருக்கு பதில் Pan நம்பர் குடுங்கன்னு கேட்டான்...

அப்போதான் புரிஞ்சுது பார்ட்டி  உள்ள  பயத்தை மறைச்சு வச்சுகிட்டு இவ்ளோ நேரம் க்ரிப்பா  பேசிக்கிட்டு இருக்குதுன்னு.. அப்போதான் கொஞ்சம் எனக்கும் தைரியம் வந்துச்சு..


போன் நம்பர் குடுத்தேன்..


நான் வேணாம் வேணாம்னு சொல்ல சொல்ல என் நாக்கு அவனுக்கு தேங்க்ஸ் சொல்லி தொலைச்சிடுச்சு...


எனக்கு தேங்க்ஸ்-எல்லாம் வேணாம் வேற வேனும்ம்னு அவன் சொன்னதும்..

மறுபடியும் பயம், எங்க வீட்டு வெள்ளை கலர் உச்சிமாங்காளி (பூனைக்குட்டி ) மாதிரி  வந்து கால சுத்திக்கிச்சு..


ஒரு வழியா தைரியத்தை வரவழைச்சுகிட்டு என்ன வேணும்ன்னு கேட்டேன்..


அப்புறமா சொல்லறேன்னு சொல்லிட்டான்...அட பாவி சொல்லிதொலைடா..எதா இருந்தாலும் சத்தியமா தரேன்னு நான் எப்டி அவன்கிட்ட சொல்ல.!

ஆனா அப்போ அவன் கேக்கல..


என்ன கேட்டு இருப்பான்னு கெஸ் பண்ணி வைங்க.. அத  கடைசில சொல்றேன்...


நேத்து ட்ராவல் பண்ணதுல ரொம்ப டயர்டா இருக்குமே உங்களுக்கு ...இது நான்.

ஆமாம்ங்க..ஆனா இங்க எதோ ஒன்னு என்னை ரொம்ப சந்தோசமா எனேர்ஜெடிக்கா வெச்சிருக்கு..டயர்ட்னேஸ் தெரியல..! பொருக்கி..என்னைதான் சொன்னான்... !


வெக்கப்பட்டு நிமிர்றதுக்குள்ள  உங்ககிட்ட வத்திபெட்டி  இருக்கான்னு கேட்டான்..


வத்திபெட்டியா...எதுக்கு கேக்குறான்..பழைய தமிழ் சினிமால வர்ற சாம்பார் ஹீரோஸ் மாதிரி எங்க வீட்டுக்கு வெளக்கேத்த இப்பவே ரெடியா இருக்கீங்களான்னு மொக்கத்தனமா கேட்டு சத்தமா சிரிப்பானோ...பார்த்தா அப்டி தெரியலையே...ஒரு வேலை தம் அடிப்பானோ..அப்டி அடிச்சாலும் பொண்ணு பார்க்க வந்த எடத்துல அடிக்கமாட்டானே...வேற என்னவா இருக்கும்...எதுக்கு இப்போ கேக்குறான்...!


எதுக்கு கேக்குறீங்க...?


அதுக்கு அவன்...,

"ஒண்ணும்ல...இன்னிக்கு என் ராசி பலன்ல தொல்லைன்னு போட்டுருந்துச்சு , அதான்..வீட்டுக்கு போனோன்னோ, எங்க வீட்டு காலன்டர கொளுத்தரதுக்கு கேட்டேன்..!”


லிப்ஸ் கிஸ் எப்டி இருக்கும்னு மனசு யோசிச்சு பார்க்க ஆரம்பிச்சுது....!


எதுக்கு ரெண்டு மோதிரம் போட்ருக்கீங்கன்னு கேட்டான்..

எப்போ பார்த்தீங்க..? இது நான்..

வந்துதுல இருந்து ஷாக் அடிக்கற உங்க கண்ணை மட்டும்தான் பார்த்துகிட்ருக்கேன்...ஆனா, உங்க கண்னை பார்க்க முடியாம என் கண்ணு தவிக்கற நேரத்துல என்னை என்ன பண்ண சொல்றீங்க..அதான் மொதிரத்த பார்த்தேன்..


இவன்கிட்ட பேசி தோத்துபோக யாருக்குதாங்க பிடிக்காது...?


டேய் மக்கு குட்டி..உன்ன எனக்கு ரொம்ப புடிச்சிருக்குடான்னு  நான் மனசுக்குள்ள சொல்றத..எங்க வீட்டு ரோஜா செடி ஒட்டு கேட்டுட்டு அவன்கிட்ட சொல்லிடாதான்னு  இருந்துச்சு.


சரி நான் கெளம்பறேங்கன்னு  சொன்னவ்ன்கிட்ட, தேங்க்ஸ்க்கு  பதிலா எதோ வேணும்னு கேட்டீங்கலேன்னு வெட்கத்த விட்டு கேட்டேன்...


ஆமாம்.. என் புருசன்ட்ட எனக்கு என்ன வெக்கம்..


அவன் சொன்ன பதில்:

.............................................................................................

பொருக்கி எதோ பொடி வெச்சுதான் என்கிட்ட அந்த கேள்விய என்கிட்ட கேட்டான்னு எனக்கு தெரியும்..அதனால அவன் கேட்டது எனக்கு புரியாத மாதிரியே நடிச்சிட்டு , எனக்கு அந்தளவுக்கு யோசிக்க தெரியாது, நீங்களே சொல்லிடுங்கலேன்னு கேட்டேன்...!


"நானும் உங்கள  பாத்ததுல இருந்து யோசிச்சுகிட்டுதான் இருக்கேன். ஒன்னும் புரியல...நீங்களும் யோசிங்க...வர்ற வெள்ளிகிழமைக்குள்ள சொல்லுங்க சொல்லுங்க, அப்படியும் முடியலன்னா, வெள்ளிகிழமை ஈவினிங் வாங்க...நம்ம காந்தி பார்க்குக்கு போய் உக்காந்து ரெண்டு பெரும் ஐஸ் க்ரீம் சாப்ட்டுகிட்டே யோசிக்கலாம்..அப்பவும் பதில் கெடைக்கலைனா பார்க்குக்கு ஆப்போசிட்ல ஒரு முருகன் கோவில் இருக்கு...சர்க்கரை பொங்கல் நல்லா இருக்கும்...அத வாங்கி சாப்ட்டுட்டு அங்கேயே உக்காந்து ரெண்டு பெரும் திருதிருன்னு முழிக்கலாம்..!”


சிரிச்சிட்டு போய்ட்டான்...


அவன என்கிட்ட விட்டுட்டு...!
----------------------------------------------------------------------------

வெளியூர்காரனுக்கு..,

முடிவில்லா நம் நட்பின் தொடக்கம் போல், 

அன்னியாயகாதலில்  ஆரம்பிக்கட்டும் உங்கள் மன வாழ்வு...!

வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,

சிவா.

------------------------------------------------------------------------------------------

Posted by Veliyoorkaran - - 106 comments and to comment


அஞ்சு விஷயத்துக்காக எந்திரன் படத்த ஆபிஸ்க்கு லீவ் போட்டுட்டு கண்டிப்பா பார்க்கலாம்...

1) ஏன்னா இது ரஜினி படம்

2) சங்கரோட உழைப்பு

3) ஐஸ்வர்யா ராயோட செம கியூட்  டான்ஸ் 

4)ஏ ஆர் ரெஹ்மான்

5)மொதோ வரியா மறுபடியும் படிங்க...

படம் செம ஹிட்டுப்பா...!

இனிமே இந்தியால நம்ம தலைவன் மட்டும்தான்...!

வெளியூர்க்காரன்  

Posted by Veliyoorkaran - - 127 comments and to comment
இவருதாங்க வசந்த கால பறவை...இவரு வலைப்பூ ஆரம்பிச்சு ரொம்ப நாள் ஆகுது...ஆனா, இவரு ரொம்ப நல்லா எழுதுவாருங்கர மேட்டர் பதிவுலகத்த விடுங்க...இன்னும் இவருக்கே சரியா தெரியாது...நேத்து வந்த பதிவர் கூட பதிவெழுதி   நல்லா சோக்கா  வன்புணர்ச்சி பண்ணுவான்..ஆனா இவருக்கு இது குத்துமதிப்பா கூட பண்ண வராது...பதிவுலகத்துல ஜிஞ்சா அடிக்கறதுன்னா என்னா பாஸுன்னு பச்சபுள்ளதனமா கேப்பாரு...நாலு பேரோட கூட்டு சேர்ந்துகிட்டு அரசியல் பண்ணதெரியாத பச்ச மண்ணு...மீ த பர்ஸ்ட்ன்னு எந்த ஒரு பதிவுலயும் இவரோட பார்மாலிட்டி கமெண்ட்ட நான் பார்த்ததில்ல...!

வலைப்பூவுல வோட்டு பட்டன்ன்னு ஒன்னு வெக்கனும்கர மேட்டரே இவருக்கு இன்னும் தெரியாது...என் பதிவ வந்து படிங்கன்னு எவன் பதிவுலயும் போய் பிச்சை எடுக்க மாட்டாரு...பெண்ணடிமைத்தனத்த தொழில் நேக்கா பதிவுக்கு எடைல திணிக்க இவருக்கு சுத்தமா தெரியாது...முக்கியமா புனைவு எழுதறேங்கர பேர்ல வாந்தி எடுத்து அத காய வெச்சு பதிவா மாத்தி போஸ்ட் பண்ண தெரியாது...பெண் பதிவர்கள் கிட்ட சாட் பண்ணிட்டு அந்த சாட் ஹிஸ்டரிய  எடுத்து போஸ்ட் பண்ணி இவ என்கிட்டே அப்டி பேசுனா...டைப் பண்ணும்போது முதுக சொரிஞ்சுகிட்டா...இப்டி எல்லாம் சில்லியா எழுத வராத கண்ணியமான மனுஷன்...இவருக்கு என்னதான் வரும்னு கேக்றீங்களா...பாவம் இந்த  மனுஷனுக்கு நல்லா வர்றது ஒன்னே ஒன்னுதாங்க...!


தங்கமா எழுதுவாரு...ரொம்ப எளிமையா...கதர் சட்டைய அயன் பண்ணி போட்ட மாதிரி கண்ணியமான வரிகள்..நான் எழுதுனதுன்னு அவரு புள்ளைங்ககிட்ட பத்து வருஷம் கழிச்சு  கம்பீரமா சொல்லிக்கற மாதிரி...படிச்சுகிட்டே இருக்கலாம்...இவரோட சில காதல் பதிவுகள படிச்சிட்டு நீங்க போட்ருக்கற சட்டைய கழட்டி புழிஞ்சிங்கண்ணா  காதல் சொட்டும்..அதுவும் வெக்கபட்டுகிட்டே சொட்டும்...அவ்ளோ ரசனையான எழுத்துக்கள்.! 

நீங்களே சொல்லுங்க சார்..நல்லா எழுதற ஒரே ஒரு திறமைய  மட்டும் வெச்சுக்கிட்டு எப்டி சார் இவரால தமிழ் பதிவுலகத்துல  பிரபல பதிவரா வரமுடியும்...என்ன பொருத்தவரைக்கும் ரொம்ப நாளைக்கு முன்னாடியே மிகபிரபலமான பதிவரா வர வேண்டிய, அதுக்கு எல்லா தகுதியும் இருக்கற,ஆனா இப்போ மிக சுமாரான பேரோட இருக்கற வெளியூர்க்காரனோட பாவரைட் பதிவர்...வசந்த கால பறவை சிவா....


உங்ககிட்ட ஒரு சின்ன வேண்டுகோள் சிவா...எல்லாருக்கும் புடிச்ச சைந்தவியின் சாக்லேட் பக்கங்கள்ல நானும் ரெட்டைவால்சும் சில பக்கங்கள்ல இதுவரைக்கும்  எழுதிருக்கோம்...எல்லாரும் படிச்சு ரசிச்சிருக்காங்க...எனக்கு சாக்லேட் பக்கங்கள உங்க வரிகள்ள படிக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு..வெளியூர்க்காரன்கர ஒரு சின்னமரக்கிளைல  வசந்த கால பறவை கொஞ்ச நேரம் உக்காரணும்....!


எழுதுங்களேன் ப்ளீஸ்...


இது சைந்தவி பத்தின தொடர்பதிவேல்லாம் இல்ல சாமி...!


வெளியூர்க்காரன்கர ஒரு நேர்மையான ரசிகன் வசந்த கால பறவைங்கற  ஒரு தரமான எழுத்தாளன்கிட்ட கேக்கற ஒரு நியாயமான நேயர் விருப்பம்...! 

---------------------------------------------------------------------------------------------------------------------
இப்போ சில காக்காய்ங்களுக்கு .,  


அந்தரங்கம், தன்மானம், சுயகவுரவம் .இதெல்லாம் எல்லாருக்கும் இருக்கு சார்..யாருக்கு இல்ல...உங்களுக்கும் இருக்கு எனக்கும் இருக்கு..ஏன்யா பச்சபுள்ளதனமா அடிச்சுக்கறீங்க..படிச்சவன்தான நீங்கல்லாம்...அசிங்கமா இல்ல...பதிவுல இந்த மாதிரி சண்டை போட்டுக்க....பெரிய மனுஷன் மாதிரி பீகேவ் பண்ணுங்கையா..எழுத்தாளர் ஜெயகாந்தன்லேர்ந்து கவிஞர் வைரமுத்து வரைக்கும் எழுத்துல சாதிச்சவங்கல்லாம்  அமைதியாத்தான் இருக்காங்க.. தக்காளி பதிவுலக எழுத்தாளர்ங்கற பேர்ல நீங்க போடற சத்தம்தான் இங்க தாங்க முடியல...போனைவு எழுதறேன் மயிர புடுங்கறேன்னு எதாச்சும் உளறிகொட்டி எழுதி வெச்சு ஏன்யா எல்லார் மானத்தையும் வாங்கறீங்க...!

பெண் பதிவர்கள பத்தி நான் ஒன்னும் சொல்ற மாதிரி இல்ல...ஏன்னா,பத்து நாள் நல்லா பேசிட்டு பதினோராவது நாள் இப்போ மணி என்னாம்மா ஆச்சுன்னு கேட்டா வெளியூர்க்காரன் வன்புணர்ச்சி பண்றான்னு அங்க போய் கம்ப்ளைன்ட் பண்ணுவீங்க...அங்க உடனே பஞ்சாயத்து போர்டு ப்ரெசிடென்ட்ங்கல்லாம் சொம்ப தூக்கிட்டு வந்து வெச்சுகிட்டு அதிசய லொட்டயா  என்ன ஏதுன்னு விசாரிக்காம உங்களுக்கு சாதகமா தீர்ப்பு சொல்லுவாங்க...எடைல இருக்கற அல்லகைங்கல்லாம் அதிசிய மசுரா பதிவு போட்டு கண்டனம் தெரிவிக்கும்...அதனால நீங்கல்லாம் முடிஞ்சா திருந்துங்க...இல்லைனா அப்டியே போயிருங்க...!   


யோவ் பட்டாப்பட்டி...இந்த மாதிரி பிரச்சனைல  எடைல பூந்து  ஊதிவிட்டு பெருசாக்கி வெளாட்ற பன்னாடைங்கல்லாம் என்னிக்கோ நம்மகிட்ட வசமா சிக்கராணுக....!


அன்னிக்கு இருக்குடி  மாப்ள நம்ம ஆட்டம்....! 


வெளியூர்க்காரன் 

Posted by Veliyoorkaran - - 85 comments and to comment


“நாளைக்கு காலைல பத்து மணிகெல்லாம் அவங்க வந்துருவாங்க..இன்னிக்கே வெங்கட்டு ஐயர் கடைலேர்ந்து ஸ்வீட் காரம்லாம் மறந்துறாம வாங்கிட்டு வந்துருங்க..மொதோ மொதொள்ள நம்ப சைந்தவிய பொண்ணு பார்க்க வர்றாங்க..இந்த எடமே எப்டியாச்சும் தெகைஞ்சிரனும்..”..ஏதேதோ வேண்டிகிட்டே அங்கயும் இங்கயும் பதட்டமா அலைஞ்சுகிட்ருந்த  என் அம்மாவ பார்த்தப்போ எனக்கு அவ முதுக புடிச்சு தொங்கி திட்டு வாங்கணும் போல இருந்துச்சு...நான் இன்னொருத்தனுக்கு கல்யாணம் பண்ணி குடுக்கற அளவுக்கு எப்போ வளந்தேன்..இப்பயுமே என் அப்பா முறைச்சு பார்த்தா எனக்கு அழுக வருமே...!

சிபியோட போட்டோவ இருபத்தி எட்டாவது தடவையா யாருக்கும் தெரியாம எடுத்து பார்த்தேன்..இருபத்தி எட்டாவது தடவையா நல்லாருந்தான்..ஸ்டுடியோல போய் கோட் போட்டு புல் மேக்அப்ள போட்டோ எடுத்து அனுப்பாம எதோ பங்சன்ல  எடுத்தத அனுப்பிருந்தாங்க.ரொம்ப மேன்லியா இருந்தான்.எனக்கு உடனே அவன நேர்ல பார்க்கணும் போல இருந்துச்சு..மனசு வெக்கபட்டுகிட்டே என்கிட்டே கேட்டுச்சு..இவன லவ் பண்ண ஆரம்பிக்கவான்னு..நான் தலைல அடிச்சுக்கிட்டே ச்சே ச்சே அதெல்லாம் நடந்தா பார்த்துக்கலாம்னு போட்டோவ திரும்ப உள்ள வெச்சுட்டு திரும்புனப்போ எங்கம்மா சிரிச்சுகிட்டே என்கிட்டே கேட்டா..”என்னடி மாப்ளைய ரொம்ப புடிச்சிருக்கா”ன்னு .. அய்யோ..!

காலைல நாலு மணிகெல்லாம் அம்மா எந்திரிச்சு வேலை பார்க்க ஆரம்பிச்சிட்டா..எனக்குதான் தூக்கமே வரல...”மாப்ள ரொம்ப இயல்பா  இருப்பாப்லாயாம் ..அதனால ரொம்ப மேக்அப்ளாம் வேண்டாம். சிம்பிளா  பண்ணிக்க போதும்”னு அம்மா வந்து சொல்லிட்டு போனா..வெளில என் மாமா எங்கப்பாகிட்ட சொல்லிகிட்ருந்தாறு “மாப்ள ரொம்ப ஜாலியான டைப்பாம் அத்தான் ..சிரிக்க சிரிக்க பேசுவாப்லயாம்..அவரு பிரெண்ட்ஸ் வட்டாரத்துல விசாரிச்சப்ப சொன்னாங்க..அவங்க குடும்பத்துல எல்லாரும் ரொம்ப நல்ல மாதிரியாம்...நம்ப சைந்தவி ரொம்ப குடுத்து வெச்சவ....!”

என்னங்கடா இது ஆளாளுக்கு பேசி இவங்களே கல்யாணத்த  முடிச்சிருவாங்க போல..இன்னும் அரை மணி நேரத்துல மாப்ள வீட்லேர்ந்து  வந்துருவாங்க. ப்ளூ கலர் பட்டுபுடவைல மேக்அப்ளாம் போட்டுட்டு உக்காந்துருந்தேன்..சிபி போட்டோவ பார்க்கணும் போல இருந்துச்சு..ச்சே வேணாம்..அதான் நேர்ல பார்க்கபோரனே ..பேனாவ எடுத்து நெகத்துக்கு கீழ குட்டியா "சிபி" ன்னு எழுதி பார்த்தேன்...சிரிப்பு வந்துச்சு..கொஞ்சம் வெக்கமும்..   என்னையே அறியாம என் விரலுக்கு முத்தம் குடுத்தேன்..குடுத்துட்டு ச்சீ அலையாதடி சைந்தவின்னு  நாக்க கடிச்சுகிட்டேன்...நான் காபி குடுத்தப்ப என் வெரல் நுனில உன் பேர எழுதிருந்தனே பார்த்தியாடான்னு கேக்கணும்..கல்யாணத்துக்கு அப்பறம்..! ச்சே அவங்க இன்னும் வரவே இல்ல அதுக்குள்ள என்னென்னமோ இமேஜின் பண்றேன் ..

கார் வந்துடுச்சு யாராரு வந்துருக்காங்கன்னு ரூம்லேர்ந்து பார்க்க முடியல...நாலஞ்சு பேரு வந்துருப்பாங்களா இருக்கும்...வாங்க வாங்கன்னு எங்கப்பா எல்லாரையும் வழிஞ்சு வழிஞ்சு கூப்டுகிட்ருந்தாறு ..எங்கம்மாவ திட்டும்போது எங்கப்பா குரல் எப்டி இருக்கும்னு யோசிச்சு பார்த்தேன்..தான் பொண்ணோட வாழ்க்கைனா எப்டியெல்லாம் மாறிடறாங்க ஆம்பளைங்க...!

எங்கப்பா எல்லாரையும் உக்காருங்கன்னு சொல்லிகிட்ருந்தப்ப திடீர்னு  ஒரு குரல்.."சும்மா வெக்கபடாம  நீங்களும் வந்து உக்காருங்க மாமா...நமக்குள்ள என்னன்னு."  எது யாரோட குரலா ..இந்த நாய்தான்..எங்க வீட்ல வந்து உக்காந்துகிட்டு எங்கப்பாவையே வெக்கபடாம உக்காருங்கன்னு சொல்லிகிட்ருந்தான் எருமை ...எங்கப்பா அப்போ சிரிக்க ஆரம்பிச்சாரு...ஒரு அரை மணி நேரம் எல்லாரும் என்னை மறந்துட்டாங்க ..பேசிகிட்டே இருந்தான்..என் மாமாவுக்கு அவன் பேசுன பேச்சுல சிரிச்சு சிரிச்சு அவர் கண்ணுலேர்ந்து தண்ணி வந்துருச்சு..போதும் மாப்ள விட்ருங்கன்னு அவன்கிட்ட கெஞ்ச ஆரம்பிச்சிட்டாரு...அய்யோ என்ன கூப்டுங்கடா நான் வந்து என் புருசன பார்க்கனும்னு கத்தனும் போல இருந்துச்சு...கூப்ட்டாங்க.. 

“மாப்பிள்ளைய பார்த்து வணக்கம் சொல்லுமா”ன்னு ஒரு சவுண்ட்.

எங்கப்பா..!

நிமிந்து பார்த்தேன்..

ப்ளூ கலர் செக்டு ஷர்ட், ப்ளாக் கலர் ஜீன்ஸ் போட்டுகிட்டு சோபால உக்காந்துருந்தான் என் சிபி...ரொம்ப சுப்பர்லாம் இல்ல...பட்,நல்லா இருந்தான் ...மறுபடியும் ஒரு தடவ நிமிர்ந்து பார்க்க வெக்கற அளவுக்கு...!

காபி குடுத்தேன்...படு டீசெண்டா வாங்கிகிட்டான்..அழகா சிரிச்சுகிட்டே ஜெண்டிலா தேங்க்ஸ் சொன்னான்..வேற எதாச்சும் பேசுவான்னு நெனச்சேன்..ஒண்ணுமே சொல்லல.. !

எனக்கு உடனே மனசுக்கு தோனுச்சு..இவதான் என் புருசன்னு.. இவன்கூட இப்போவே கெளம்பி போய்டலாம்னு... நானும் என் புருசனும் இருக்கப்போ எதுக்கு இவ்ளோ பேரு தேவை இல்லாம இங்க இருக்காங்கன்னு நெனைச்சுகிட்டே என் அப்பாவ பார்த்தேன்..என் அப்பா எனக்கு சொந்தகாரர் மாதிரியே தெரிய ஆரம்பிச்சாரு...!

டேய் தம்பி போய் சைந்தவி கூட ஒரு வார்த்தை பேசிட்டு வந்துடு..என் மாமா சொன்னது என் காதுல விழுந்துச்சு..அயோயோ ..எல்லார்கிட்டயும் இவ்ளோ நல்லா பேசுறானே..நம்மகிட்ட எப்டி பேசுவான்...சாமி நான் உளறி கொட்டாம இருக்கணும்னு நெனைச்சுகிட்டே ரெண்டு பெரும் பின்னாடி  தோட்டத்துக்கு போனோம்...

ஆனா, அங்க உளறி கொட்னது..!

...ச்சாக்லேட் பக்கங்கள் தொடரும்.,  

வெளியூர்க்காரன் 

Posted by Veliyoorkaran - - 27 comments and to comment


நான்தான் சார் சிபி,

பியர் பிரியாணி பீடான்னு வாழ்ந்துக்கிட்டு இருந்த ஒரு பையன்...கோக், பிஸ்ஸா, பபிள்கம்னு மாறின கதைதான் என்னோடது!
எனக்கு இந்த உலகத்துல மொத்தம் மூனு விஷயம்
பிடிக்கும்ங்க. .
1.சைந்தவி...2.லவ்...3.சைந்தவியோட லவ்.
சில பேருக்கு லவ் அட் பர்ஸ்ட் சைட்ல  நம்பிக்கை இருக்கும்.சில பேர் அப்பா அம்மா பார்க்கிற பொண்ணுங்ககிட்ட கூட காலம் பூரா கவித்துவமா வாழ்வாங்க.உண்மை என்னன்னா நாங்க இதுல எந்த ரகம்னு எனக்கே சொல்லத் தெரியலை. Why Because, am a Blessed child of Destiny..!

சத்யம், மாயாஜால் , ஐனாக்ஸ்னு சந்தோஷமா வாழ்ந்துகிட்டு இருந்த போது தான் அந்த ஃபோன் கால் வந்தது..!

"சிபி..! அம்மா பேசறேன்டா.சனிக்கிழமை புறப்பட்டு ஊருக்கு வந்துடு.பக்கத்து ஊர்ல உனக்கு பொன்னு பார்த்து வச்சிருக்கோம்.நீயும் ஒரு எட்டு பார்த்துட்டேன்னா பேசி முடிச்சுடலாம்!"

"அம்மா நோ..நோ..எனக்கு இப்போ கல்யாணம் வே...."

"ந்தா அப்பா பேசறாராம்...!"

"என்னடா...!! ஒழுங்கா வந்து சேரு!".

அப்பா முகம் ஒரு நிமிஷம்  வலது மூளைக்குள் வந்து போனது.இனி பேசி டைம் வேஸ்ட். ஊருக்கு போகும் போது பஸ்ஸில் தூக்கமே வரலை.

"ஹாய்! ஜெஃப்ரி ஆர்ச்சர் படிப்பீங்களா?

"கடைசியா என்ன படம் பார்த்தீங்க?

"ஸ்போர்ட்ஸ் பிடிக்குமா? "

இதுக்கெல்லாம் என்ன பதில் கிடைக்கும்?ம்ஹூம்!

"ரமணி சந்திரன் ,அவள் விகடன், ஸ்நேகிதி  படிப்பேன்.நீங்க சொல்ற ரைட்டரெல்லாம்தெரியாது.!"
"கடைசியா பார்த்த படம் கண்டேன் காதலை!"

"ஸ்போர்ட்ஸெல்லாம் அவ்வளவா தெரியாது.கிரிக்கெட் சுத்தமா பிடிக்காது.எல்லாம் ஒரே ஃபிக்ஸிங்".

இப்படித்தானே இருக்கப் போகிறது. அப்பனை நினைத்தால் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.மீசை தடித்த செங்கிஸ்கான்.இன்னும் என்னென்னவோ திட்டலாம் அந்தாளை.விண்ணைதாண்டி வருவாயா கார்த்திக்குக்கு கிழக்குச் சீமையிலே விஜயகுமார் மாதிரி ஒரு அப்பா இருந்தா எப்படி இருக்கும்? அப்படிதாங்க எனக்கும்! என்ன கொடுமை இதுன்னு பார்க்கறீங்களா? 

அப்பேற்பட்ட ஒரு மகாத்மா எனக்கு பொன்னு பார்த்தா எப்படி இருக்கும்? எப்படியும் ஏதோ ஒரு கைநாட்டை என் தலைல கட்டி வைக்க போறானுங்கன்னு எரிச்சலா வந்தது. வேணாமுன்னு சொல்லலாம்னு பார்த்தா எங்கப்பன் மீசை குளோசப் ஷாட்டில வந்து எகிறுவான். தக்காளி எதுக்கு பிரச்சினையை வாரிக்கொட்டிக்கிட்டு...கழுதை போவோம்..பார்த்த உடனே நடையைக்கட்டிட்டு வந்துடுவோம்னு போனேன்.

பேரென்னப்பா?

சைந்தவி!

நம்ம ஊர்ல இப்படி பேரெல்லாம் வைக்கிறானுங்களா?

டிபிகல் மல்லிகைபூ பட்டுபுடவை வாசனைக்கு நடுவுல திடுதிப்புனு

"மாப்பிள்ளைய பார்த்து வணக்கம் சொல்லுமான்னு ஒரு சவுண்ட்.(நம்ம பூர்ணம் விஸ்வநாதன்- - மாம்ஸ்!). நிமிர்ந்து பார்த்தா...

அசப்புல கலாப காதலன் படத்துல வர்ற ரேணுகா மேனன் மாதிரி ஒரு பொண்ணு . சுத்தமா அந்த இடத்துக்கே சம்மந்தமில்லாத மாதிரி! எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை.

எங்கப்பா கூட கொஞ்சம் தனியா பேசணும்னு சொன்னேன். பொசுக்குனு எல்லாபயலும் சிரிச்சுட்டானுங்க. உலகத்துலயே பொன்னு பார்க்க வந்து தான்  அப்பன் கூட தனியா பேசணும்னு சொன்ன ஒரே பேக்கு நானாதான் இருப்பேன்னு நினைச்சுட்டானுங்க போல .முதல்ல பொன்னு கூட ரெண்டு வார்த்தை பேசிட்டு வா"ன்னாரு  மீசை.

தோட்டத்துல கிணத்தடிக்கு அனுப்புனானுங்க.

இந்த ராட்சசிக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை. மெதுவா ஆரம்பிச்சேன்

"Ah Well....என்ன மாதிரி புக்ஸ் படிப்பீங்க ? நிமிர்ந்து பார்த்தா.

"ம்ம்ம்..ருஷ்டி! ஷெல்டன் அப்புறம் ஜெஃப்ரி ஆர்ச்சர்!
The Enchantress of Florence படிச்சுட்டு இருக்கேன் இப்போ!"

எனக்கு தொடை லேசா நடுக்க ஆரம்பிச்சுது..!

"கடைசியா என்ன படம் பார்த்தீங்க ?"

"The Break up Plan.ஜென்னிஃபர் லோபஸுக்கு வயசாயிடுச்சுல்ல. உங்களுக்கு ஸ்போர்ட்ஸ் பிடிக்குமா .ரஃபேல் நடால் மேட்ச்னா மிஸ் பண்ண மாட்டேன். ஸாக்கர்ல இந்த தடவை ஜெர்மனி தான்.."

நான் இன்னும் பஸ்ல தூங்கிட்டு தான் இருக்கேனா? இது நிஜம்தானா! வரப்பட்டிக்காட்டுக்குள்ள ரஃபேல் நடாலா?உண்மை தானா...இல்லை ஏதாவது தேவதை ..வரம் டகால்டியா.! அட நிஜந்தான்!நம்ம பூர்ணம் விஸ்வநாதன் டென்ஷனா இருக்காரே. ஆனா இந்த ராட்சஸி முகத்துல அரை இன்ச் டென்ஷன் கூட காணொமே!

இப்போ எனக்கு வாயும் வார்த்தையும்  ரொம்ப ரோலிங் ஆக ஆரம்பிச்சது.

"போதுங்க... இதெல்லாம் கனவா நனவான்னு தெரில..."

கலகலன்னு ஒரு சத்தம்... பக்கத்துல இருந்த மல்லிகை பூ செடி இவ சிரிச்ச அழகு சிரிப்புல வெக்கப்பட்டு தலைகுனிஞ்சுகிச்சு.. மாமரத்துல ஒரு பட்சி உக்காந்து இவதாண்டா இவதாண்டா விட்றாதன்னு கத்துச்சு...(தக்காளி அந்த பட்சியதான் இன்னும் தேடிகிட்ருக்கேன்...)
"வேணும்னா கிள்ளிப்பார்த்துக்கங்க".மறுபடியும் சிரிச்சா.

சட்டுனு அவளோட உள்ளங்கையை கிள்ளப் போனேன்.அப்போ சிவந்தது பாருங்க அவ முகம்...அதுக்காகவே எனக்கு  ரெண்டாவதுல பாடம் சொல்லிக்கொடுத்த கணக்கு வாத்தியார்ல இருந்து என்னோட இப்போதைய  ரீஜினல்  மானேஜர் வரைக்கும் எவனை வேணும்னாலும் போட்டுத் தள்ளலாம்.

நேரா மீசைகிட்ட போனேன் .சிரிச்சார். கிழக்குச் சீமையிலே விஜயகுமாருக்குள்ளயும் ஒரு மணிரத்னம், வஸந்த் பட அப்பா ஒளிஞ்சிருக்கார்னு அன்னிக்குதான் தெரிஞ்சது!

எப்படி என் செலெக்ஷன்ங்கிற மாதிரியான பார்வை.

"என்னடா பொண்ணு  ஓ.கே வா?"

"எப்பா..என்னை பெத்ததுக்கப்புறம் உன் வாழ்க்கைலயே இப்போதான் உருப்படியான காரியம் பண்ணியிருக்கே! அந்த புள்ளையை கூப்பிட்டு இப்படியே நம்ம வீட்டுக்குப் போயிடுவோம்..வாப்பா"

எத்தனை தடவை சொன்னாலும் சலிக்காத கதை. ஓ.கே  பாஸ்... கிச்சன் ல டம் டும்னு சத்தம் கேக்குதா! அவதான். அவளுக்கு இந்த ஜென்மத்துல வராத பாதாம் அல்வாவை முப்பதியேழாவது  முறையா ட்ரை பண்ணிட்டு இருக்கா. விதி....நான் இதை சாப்ப்டே ஆகனும். சரிங்க நான் இப்போ வெளில கெளம்பறேன்...சீக்கிரம் திரும்ப சந்திப்போம்...!
அதுவரைக்கும் ஜாலியா  லவ் பண்ணிட்டு இருங்க!

.......................................................(Chocolate பக்கங்கள் தொடரும்)


                                                    - By Rettaival's 
                                      

Posted by Veliyoorkaran - - 40 comments and to comment


கொஞ்ச நேரம் சும்மா இருடா டேய்..ஐயோ எழுத விடுறா எருமைமாடு...இவன் எப்பவுமே இப்டிதாங்க...சரியான அறுந்த வாலு.. சும்மாவே இருக்க மாட்டான் பன்டி ...! சரி நான் விசயத்துக்கு வர்றேன்..என் பேரு சைந்தவி..சிபியோட வொயிப்  ..இல்லை இல்லை...சிபியோட செல்ல காதலி..ஆமாம்..நாங்க ரெண்டு பெரும் இப்பவும் லவ் பண்ணிகிட்ருக்கோம்..எனக்கு இந்த உலகத்துல ரொம்ப புடிச்ச விஷயம் நாலுங்க...மொதோ ரெண்டு விஷயம் என் சிபிய உயிருக்குயிரா காதலிக்கறது, மூணாவது விஷயம் இவன பத்தியே நெனைச்சிகிட்ருக்கறது ...நாலாவது இவன பத்தி எதாச்சும் என் டைரில எழுதி வெக்கறது... லைப்ல இருக்கற ரொம்ப அழகான விசயங்கள்ல ஒன்னு மனசுக்கு புடிச்சவங்கள பத்தி டைரில எழுதி வெச்சு, கொஞ்ச நாள் கழிச்சு  தனியா உக்காந்து ரசிச்சு படிக்கறது.! நல்ல அடைமழை நேரத்துல நைட்ல வீட்டு ஜன்னல் ஓரமா நின்னு மழைய வேடிக்க பார்த்துகிட்ருக்கற  லவ்வர பின்னாடிலேர்ந்து கட்டிபுடிச்சு சூடா ஐ லவ் யு சொல்றமாடி ஒரு ஜில் பீலிங் அது.. !


என் டைரிய இதுவரைக்கும் என் சிபியே படிச்சது கெடயாது..நீங்க படிக்க போறீங்க...நான் அவன்கிட்ட படிக்க சொல்லி  குடுக்கவும் மாட்டேன்...குடுத்தா அதையும் கன்னாபின்னான்னு கிண்டல் பண்ணி சிரிப்பான் பொருக்கி..என் டைரில நான் என்னென்னமோ கிறுக்கி வெச்சிருப்பேன்..ஆனா, எல்லா கிறுக்கல்லையும் என் சிபி இருப்பான்..என் செல்ல புருஷன்.. இவன ஸ்வீட் ராஸ்கல்னு சொன்னா பத்தாதுங்க..இவன் அதுக்கும் மேல..அதுக்காக இவன சினிமால வர்ற ரொமண்டிக் ஹீரோ மாதிரின்னு நெனைச்சிடாதீங்க..நான் ஐ லவ் யூ சொன்னா திரும்ப ஐ லவ் யூ சொல்லனும்னு கூட தெரியாம ஓகே ஓகே தேங்க்ஸ்ன்னு சொல்ற மடையன் இவன்..யாரையாச்சும் கிண்டல் பண்ணனும்னா மட்டும் இவனுக்கு வாய் வங்காளம் முட்டும் விரியும்...ஆனா ஒழுங்கா ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம ஒரு ஐ லவ் யூ சொல்ல வராது...ஏண்டா ஒரு தடவ கூட ஐ லவ் யூ சொல்ல மாட்டேங்கறேன்னு கேட்டா வெக்கமா இருக்குடின்னு சொல்லி வழிவான்..!


ஆனா நல்லவன்...சரியான வாலு..இப்போ ரூம்ல உள்ள தூங்கிகிட்ருக்கான் ..திடீர்னு ஒருநாள் என் வாழ்க்கைக்குள்ள  வந்து அதே வேகத்துல என் வாழ்க்கையாகி போனவன்.  எனக்கு கலைஞர் அடுத்த எலெக்சன்ல ஜெயிக்கிறாரா, எந்திரன் படம் ஓடுமா,சச்சின் எப்போ  அடுத்த செஞ்சுரி அடிப்பாரு இது எத பத்தியும் கவலை இல்ல..எனக்கு என் சிபி ஆபிஸ் முடிஞ்சு சீக்கிரம் வீட்டுக்கு வந்துரனும், என் கூடவே இருக்கணும், அது போதும்..அவனோட விளையாண்டுகிட்டே அவன் அடிக்கற ஜோக்குக்கு சிரிச்சுகிட்டே அடுத்த நாள் அவன ஆபிஸ்க்கு அனுப்பனும்.அனுப்பிட்டு எப்படா அஞ்சு மணி வரும் என் சிபி வருவான்னு வெயிட் பண்ணனும்..இதுதான் என் சந்தோசம், என் ஆசை, என் வாழ்க்கை, எல்லாமே...!

இவன பேச விட்டா பேசிகிட்டே இருப்பான்..ஒரு நாளைக்கு முப்பது ஜோக் சொல்லுவான்..எங்கதான் இவனுக்கு இவ்ளோ ஜோக் கெடைக்குதோ தெரியாது..என்கிட்டே உனக்கு என்னடா புடிச்சிருக்குன்னு கேட்டா நீ கோவத்துல சொல்ற மயிறுதாண்டின்னு சொல்லி சிரிப்பான்.ஒரே ஒரு சிகரெட் அடிக்கறதுக்கு என்கிட்டே பெர்மிசன் வாங்க கூச்சமே இல்லாம என் காலுல விழுந்து கெஞ்சி சிரிக்க வெச்சிருவான்......நைட் மூணு மணிக்கு எந்திருச்சு உக்காந்து என் முகத்தையே பார்த்து ரசிச்சிட்ருப்பான் ..அது தூங்கற உனக்கு  எப்டி தெரியும்னு கேக்காதீங்க..எனக்கு தெரியும்..என் சிபி எப்போ என்ன பண்ணாலும் எனக்கு தெரியும்..!


அயோயோ சொல்ல மறந்துட்டனே என் குடும்பத்துல இவன் வாய்ல விழாத ஆளே கெடயாதுங்க...எல்லாரையும் நாராசமா கலாய்ப்பான்..அதுவும் எங்கப்பான்னா இவனுக்கு அவ்ளோ புடிக்கும்..ரசிச்சு ஒட்டுவான்...எங்கப்பா போட்டோவ பார்த்தாலே இவனுக்கு சிரிப்பு வந்துரும்..டேய் பாவம்டா வயசானவர் விட்ருடான்னு சொன்னாலும் கேக்கமாட்டான்..உங்கப்பன கிட்டத்துல பார்த்தா பூர்ணம் விஸ்வநாதனுக்கே உங்கப்பன கலாய்க்கனும்னு தோணும்டின்னு சொல்லி  ஓட்ட ஆரம்பிச்சிருவான்.ஐயோ எவ்ளோ கெஞ்சினாலும் விடமாட்டான்...பாவி...!


ஒரு நிமிஷம் இருங்க..எரும இப்போ  என்ன எழுதவிடாம அரைதூக்கத்துல  ஏதேதோ பேச ஆரம்பிச்சிருச்சு..ஏய் சொல்ல மறந்துட்டனே..இவன் பேச ஆரம்பிச்சிட்டா என்ன சொன்னாலும் இவன் வாய மூட முடியாது.ஆனா ஒரு விரல வாய்ல வெச்சு பச்சபுள்ளைங்கள  மெரட்ற மாதிரி ஒரு வார்த்தை சொன்னா மட்டும் அப்டியே முயல்குட்டி மாதிரி திருதிருன்னு முழிச்சிட்டு அப்டியே தூங்கிருவான்.இருங்க சொல்லிட்டு வந்துடறேன்...!


ஏய் சிபி...


உஷ் பேசாத...! தூங்கு.!


தொடரும்....! 
------------------------------------------------------------------------------------------------------------------------

சைந்தவி - சிபி காதல் ஜோடியின் அறிமுகம் இல்லாத நண்பர்கள் ரெண்டு விஷயம் பண்ணுங்க..பர்ஸ்ட் கீழ இருக்கற இந்த இந்த மூணு லிங்கயும் படிங்க..ரெண்டாவது உடனே உங்க மனசுக்கு புடிச்சவங்களுக்கு போன் பண்ணி சும்மா உன் குரலை கேக்கணும் போல இருந்துச்சு அதான் போன் பண்ணேன்னு சொல்லி அவங்க எதிர்பார்க்காதப்போ சர்ப்ரைசா ஒரு ஐ லவ் யூ சொல்லுங்க...அது நைட் மூணு மணியா இருந்தாலும் சரி.. ஏன்னா  காதலுக்கு வாட்ச் கட்ட தெரியாது சார்...நம்ம இஷ்டத்துக்கு எப்போ வேணா காதலிக்கலாம்...!
------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு சின்ன இன்ட்ரோ., 

இப்டி ஒரு பொண்ணு நமக்கு கெடைக்காதான்னு எல்லா பசங்களையும் ஏங்க வெக்கற ட்ரீம் கேர்ல் நம்ம சைந்தவி...ச்சே செம பையன்ப்பா சிபி.. சைந்தவி செம லக்கினு அத்தன பிகருங்களையும் பொறாமைப்பட  வெக்கற சாக்லேட் பையன் சிபி..கியூட் ரொமாண்டிக் கப்புள்ஸ்..இவங்க ரெண்டு பேரும்தான் சார் நம்ம கதைக்கு ஹீரோ ஹீரோயின்...இந்த கதைய தொடரா நானும் ரெட்டைவால்சும் கொஞ்ச நாளைக்கு முன்னாடி  எழுதுனோம்..எல்லாரும் சேர்ந்து எங்க ரெண்டு பேரையும் வாரி அணைச்சு கண்ணுல ஒத்திகிட்டீங்க..எங்க எழுதுக்கள நீங்க இன்னும் ரசிக்கறீங்கங்கறதுக்கு   ஒரு உதாரணம் ஒரு வருசத்துக்கு முன்னாடி எழுதுன பதிவுகளுக்கு முந்தாநேத்து வரைக்கும் வந்துகிட்ருக்க ரசனையான கமெண்ட்ஸ்..அதான் ஒரு சின்ன ஆசை...செகேன்ட் ரவுன்ட் ட்ரை பண்ணலாமேன்னு...அதுக்கு முன்னாடி  இதையும் படிச்சு பாருங்க.. படிச்சிட்டு சொல்லுங்க...!


------------------------------------------------------------------------------------------------------------------------
வெளியூர்க்காரன் 

Posted by Veliyoorkaran - - 148 comments and to comment1)           1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

      பிரபல பதிவர் திரு வெளியூர்க்காரன் அவர்கள்...


2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில்
பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

அது வேற ஒண்ணும்ல அண்ணேன் ...இங்குட்டு சிங்கப்பூருக்கு வந்தோன்னையே பூரா பயலும் என்ன ஒரு மனுசன்னு அடையாளம் கண்டுபுடிக்கரதுக்கு முன்னாடியே என் ஸ்லிப்பர பார்த்துட்டு ஊர்நாட்டான்னு கண்டுபுடிச்சு என்ன தம்பி வெளியூரா அப்டீன்னு கேப்பாங்கே.. நானும் உள்குத்து புரியாம வெளியூருன்னு சொல்றது  எதோ க்ரிப் போலருக்குன்னு, பெருமையா ஆமாம்னேன் வெளியூருன்னு சொல்லி சொல்லி பழகிரிச்சு.. அந்த கழுதய அப்புடியே ப்ளாகுக்கும் வெச்சுபுட்டேன்...


3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

ஆமாம். நாங்க பெரிய சுஜாதா நொன்னை..இங்க காலடி எடுத்து வெச்சோம்...இப்புடி கேள்வி கேட்டே ஏத்திவிடுங்க எல்லா பயலையும்...ஏன் சார் நீங்க வேற.என் மொக்கைல காண்டாகி போய் இனிமே பேச வாய தொறந்தா நட்டுவாக்கிளி பூச்சிய எடுத்து நாக்குல விட்ருவோம்னு என் பிரெண்ட்ஸ்லாம்  மெரட்ட ஆரம்பிச்சிடாணுக...அப்பத்தான் கேள்விபட்டேன்..பதிவுலகம்னு ஒன்னு இருக்கு...அங்க போய் நீ நாலு மொக்கை பதிவர்களா பாராட்னா,அவனுக திரும்பி வந்து நீ போடற மொக்கைய பாராட்டி பார்மாலிட்டி பண்ணுவானுகன்னு..வோட்டெல்லாம் போட்டு உன்ன பெரிய ஆளாக்கி பிரபல பதிவராக்கிருவாங்க..நீ ஜாலியா நாலு பதிவர்கள வன்புணர்ச்சி பண்ணலாம்...உன்னை திட்டி கண்டனம் தெரிவிச்சு நாலு பிரபல பதிவர்கள் பதிவு எழுதி அவங்க ஹிட்ஸ் வாங்கி எண்ணி பார்த்துட்டு உன்ன மனசார வாழ்த்துவாங்க...உடனே பதிவுலகம் உன்ன பிரபலமான எழுத்தாளர்னு ஒத்துக்கும்னு...அதேன், இந்த பக்கம் ஒதுங்குனேன்....இங்க என்னடான்னா தக்காளி பாதி பேரு பதிவெழுதறேன் பேர்வழிங்கற  பேர்ல படிக்கறவன் காதுல ஏறி வன்புணர்ச்சி பண்ணிகிட்டுதான் இருக்கானுவோ...சரி அது எதுக்கு இப்போ...வாங்க அடுத்த கேள்விக்கு போவோம்...

4)  உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம்  செய்தீர்கள்?

எல்லாருக்கும் போய் பார்மாலிட்டி பண்ணேன்...அவெங்கே எடுத்த எல்லா வாந்திக்கும் நாத்தத்த பொறுத்துகிட்டு வோட்டு போட்டேன்..நான் வோட்டு போட்டுட்டேன்கரத அவேங்களோட பதிவுலையே கமெண்ட்ல சொல்லி எனக்கும் வோட்டு போட மறந்துடாதீங்கன்னு பிச்சை எடுத்தேன்...அவன் பதிவ போஸ்ட் பண்றதுக்கு முன்னாடியே போய் அய்..மீ தி பர்ஸ்டுன்னு கேண மாதிரி கமெண்ட் போட்டேன்...பதிவ படிக்காமையே மிக்க அருமை, அழகான பதிவு, ச்சே..பின்னு பின்னு என பின்னி விட்டீர்கள் போங்கள்...ச்சே எப்புடி இதெல்லாம்...இந்த மாதிரி டெம்ப்ளேட் நெறைய சேவ் பண்ணி வெச்சுகினு எல்லாரு வீட்டாண்டையும் போய் பதிவ படிக்காம சோறு மட்டும் வெச்சிட்டு வந்துருவேன்...(ச்சே ச்சே அது பிச்சை இல்லபா...மீன் புடிக்கரபோ தூண்டில்ல போடற புழு...அப்பதான  அவன் நமக்கு வந்து பிச்ச போடுவான்..ச்சே கமெண்ட் போடுவான்..) அப்டியே பிக் அப் பண்ணி இப்போ  நானும் பிரபல பதிவர் என எல்லோராலும் அன்போட அழைக்கபடறேன். 

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து
கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை
என்றால் ஏன்?

இங்க நான் எத எழுதுனாலும் ரெட்டைவால்ஸ், இலுமினாட்டி, பட்டாப்பட்டி, ரோஸ்விக்கு இந்த நாலு நாதாரிங்களும் சேர்ந்து என் பட்டாபட்டிய அவுத்துட்டு குதூகலமா கும்மியடிச்சிருவாங்கே...அதனால நாம அடுத்த கேள்விக்கு போவோம்..

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது
பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பதிவு எழுதி கோடிகணக்குல  சம்பாரிச்சு அதுல தங்கத்துல நாக்கு சுத்தம் செய்யற கருவி ஒன்னு வெளிநாட்லேர்ந்து வாங்கி நல்ல நாராசமா வழிக்கணும்...(எது எதையா..? நாக்க சார் நாக்க...!). அதுக்குதான் இவ்ளோ கஷ்டப்பட்டு இவனுககூட மல்லுகட்டிகிட்ருக்கேன்...இன்னும் நாலு வருசத்துல வாங்கிருவேன்...வாங்கி வழிச்சிட்டு அதுக்கு தனி பதிவு போடறேன்...வந்து வோட்டு போடுங்க...(இங்க பாதி பேரு ஊருக்கு போய்  கக்கூஸ் போனதெல்லாம் தனி பதிவா போட்ராணுக...நான் நாக்கு வழிச்சத  போடகூடாதா..என்ன இது போங்கா இருக்கு..)..

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில்
எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

வெளியூர்க்காரன் பட்டாப்பட்டி. (கொழம்பி சாவுங்கடா டேய்...)


8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை  ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

ஒரு சின்ன சம்பவத்த இவ்ளோ அழகா ரசிக்கற மாதிரி எழுத முடியுமான்னு விசாவ பார்த்து கொஞ்சம் வந்துருக்கு..சாதாரண வார்த்தைகள் இவர் பேனாலேர்ந்து வர்றபோ மட்டும் எப்டி இவ்ளோ காதல சொல்லுதுன்னு வசந்த கால பறவைகள பார்த்து கொஞ்சம், வாழ்க்கைய எவ்ளோ ரசனையோட வாழராருன்னு வீணாப்போனவன பார்த்து கொஞ்சம்,மனுஷனுக்கு நக்கல் வரலாம், ஆனா, நக்கலே மனுசனா வந்துருக்கானேன்னு பட்டாபட்டிய பார்த்து கொஞ்சம்.. இந்த நாயால மட்டும் எப்புடி எல்லா விசயத்த பத்தியும் ரசிக்கற மாதிரி எழுத முடியுதுன்னு ரெட்டைவால்ஸ  பார்த்து கொஞ்சம், சில நேரங்கள்ல மின்னற் பொழுதேதூரம் வலைப்பூவ பார்த்து....!


கோவபட்டது...ம்ஹும்..வெளியூர்க்காரன் கோவபட்ற அளவுக்கு இங்க எந்த பதிவருக்கும் வொர்த் இல்ல பாஸ்..


     9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு
       பாராட்டிய மனிதர் யார்? 

கொஞ்ச நாளைக்கு முன்னாடி அன்பு அண்ணேன் அஜித் அவர்களோட ரசிகர் ஒருத்தர் வந்து கமெண்ட்ஸ்ல என்னையும் என் குடும்பத்தையும் ரொம்ப அன்போட பாராட்டி விசாரிச்சிருந்தாறு...அவருதான் முதன்முதல்ல என்ன தொடர்பு கொண்டு அன்புள்ளத்தோட பாராட்ன மனித தெய்வம்...என் ஆசான்...(டேய் அமுக்குங்கடா இந்த இலுமினாட்டி பயல...வெளில விட்டா   உண்மையா சொல்லி என் மானத்த வாங்கிருவான்...டேய் டேய் முண்டறான் பாரு..விடாதீங்கடா...அமுக்குங்கடா...!) 

    10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு
       தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

பதிவர்களுக்கு நான் சொல்றதுக்கு ஒன்னும் இல்லைங்க..கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு மேட்டர் சொன்னேன்...வழக்கம் போல ஒருத்தனும் கேக்கல..தக்காளி கேக்கவும் மாட்டாங்கே...அதனால கமெண்ட்ஸ் போடற நண்பர்களுக்கு தமிழ் பதிவுலகத்தோட மிக முக்கியமான பிரபல பதிவர்ங்கர முறைல ஒரு மேட்டர் சொல்லலாமேன்னு...அண்ணேன்ங்களா வணக்கம்..நல்ல பதிவுகள கண்டிப்பா படிங்க..நல்ல எழுதாளர்கள மனசுலேர்ந்து பாராட்டி வளர்த்து விடுங்க...இங்க நெறைய பேர் ரொம்ப அருமையா எழுதறாங்க...அவங்கல்லாம் வளரனும்..அது உங்களாலதான் முடியும்..அதனால நல்லா இருந்தா கண்டிப்பா பாராட்டுங்க...ஆனா நல்லா இல்லைனா ஜிஞ்சா அடிக்காதீங்க..அருமை, மிகவும் அழகான பகிர்வு.ஆகா அபாரம்.....இதெல்லாம் வேணாம்...பின்னி எடுத்துவிட்டீர்கள்  போங்கள் அப்டீன்னு உங்க கமேண்ட்ச கீழ  படிச்சிட்டு பதிவு நல்லாருக்கு போலருக்குன்னு மேல போனா அந்த நாய் பண்ணி மாதிரி வாந்தி எடுத்து வெச்சிருக்கு...! 

ஏன்யா...ஏன் இந்த மானம்கெட்ட பொழப்பு நமக்கு...நமக்கெல்லாம் சூடு சொரணை இருக்குன்னேன்..எது நல்லாருக்கு எது நல்லால்லைன்னு பார்த்த உடனே தெரியும்..நல்லா இல்லைனா நல்லா இல்லைன்னு மூஞ்சிக்கு நேரா சொல்லு..என்னா பண்ணிருவாங்கே...தக்காளி கோச்சுகிட்டா போறாங்கே....இல்ல எதிர்த்து எதாச்சும் உன்ன திட்ராங்கேளா...உடனே இங்க இப்டி நடந்துச்சுன்னு அனானிங்கற பேர்ல வந்து பட்டாப்பட்டி போலிஸ் ஸ்டேசன்ல அந்த டோமரோட லிங்கோட  ஒரு கம்ப்ளைன்ட் குடுத்துட்டு நீ போய் உன் வேலைய பாரு..நாங்க மிச்சத்த பார்த்துக்கறோம்...சிக்குனவன விடிய விடிய குமுர்றதுக்குன்னே இங்க ஒரு பெரிய குண்டர்கள் இராணுவமே இருக்கு. அவனுக எல்லாருமே ஆபிஸ் வேலைய பார்க்காம இங்கதான் வெட்டியா உக்காந்துருப்பானுவோ...எவனாச்சும் சிக்குவானான்னு...அதே மாதிரி, எங்க யாருக்குமே பதிவு எழுத தெரியாது..சிக்குனவன கமெண்ட் ஏரியால வெச்சு செதைச்சு கலாய்க்க மட்டும்தான் தெரியும்....(உம் : வெளியூர்க்காரன் ) 

நான் இந்த தொடர எழுத யார கூப்டாலும் வரமாட்டானுவோ..ஏன்னா என்னை இங்க எவனும் மதிக்க மாட்டான்...அதனால வாய பொளந்துகிட்டு கதை கேட்டது போதும்..கூட்டத்த கலைச்சிட்டு எல்லாரும் போய் ஆபிஸ் வேலைய பாருங்க போங்க..!

தக்காளி வந்துட்டாங்கே..!

தொடர் பதிவுன்னு ரயில் வண்டி விடுறதுக்கு..!

வெளியூர்க்காரன்..

There was an error in this gadget