- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 148 comments and to comment1)           1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

      பிரபல பதிவர் திரு வெளியூர்க்காரன் அவர்கள்...


2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில்
பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

அது வேற ஒண்ணும்ல அண்ணேன் ...இங்குட்டு சிங்கப்பூருக்கு வந்தோன்னையே பூரா பயலும் என்ன ஒரு மனுசன்னு அடையாளம் கண்டுபுடிக்கரதுக்கு முன்னாடியே என் ஸ்லிப்பர பார்த்துட்டு ஊர்நாட்டான்னு கண்டுபுடிச்சு என்ன தம்பி வெளியூரா அப்டீன்னு கேப்பாங்கே.. நானும் உள்குத்து புரியாம வெளியூருன்னு சொல்றது  எதோ க்ரிப் போலருக்குன்னு, பெருமையா ஆமாம்னேன் வெளியூருன்னு சொல்லி சொல்லி பழகிரிச்சு.. அந்த கழுதய அப்புடியே ப்ளாகுக்கும் வெச்சுபுட்டேன்...


3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

ஆமாம். நாங்க பெரிய சுஜாதா நொன்னை..இங்க காலடி எடுத்து வெச்சோம்...இப்புடி கேள்வி கேட்டே ஏத்திவிடுங்க எல்லா பயலையும்...ஏன் சார் நீங்க வேற.என் மொக்கைல காண்டாகி போய் இனிமே பேச வாய தொறந்தா நட்டுவாக்கிளி பூச்சிய எடுத்து நாக்குல விட்ருவோம்னு என் பிரெண்ட்ஸ்லாம்  மெரட்ட ஆரம்பிச்சிடாணுக...அப்பத்தான் கேள்விபட்டேன்..பதிவுலகம்னு ஒன்னு இருக்கு...அங்க போய் நீ நாலு மொக்கை பதிவர்களா பாராட்னா,அவனுக திரும்பி வந்து நீ போடற மொக்கைய பாராட்டி பார்மாலிட்டி பண்ணுவானுகன்னு..வோட்டெல்லாம் போட்டு உன்ன பெரிய ஆளாக்கி பிரபல பதிவராக்கிருவாங்க..நீ ஜாலியா நாலு பதிவர்கள வன்புணர்ச்சி பண்ணலாம்...உன்னை திட்டி கண்டனம் தெரிவிச்சு நாலு பிரபல பதிவர்கள் பதிவு எழுதி அவங்க ஹிட்ஸ் வாங்கி எண்ணி பார்த்துட்டு உன்ன மனசார வாழ்த்துவாங்க...உடனே பதிவுலகம் உன்ன பிரபலமான எழுத்தாளர்னு ஒத்துக்கும்னு...அதேன், இந்த பக்கம் ஒதுங்குனேன்....இங்க என்னடான்னா தக்காளி பாதி பேரு பதிவெழுதறேன் பேர்வழிங்கற  பேர்ல படிக்கறவன் காதுல ஏறி வன்புணர்ச்சி பண்ணிகிட்டுதான் இருக்கானுவோ...சரி அது எதுக்கு இப்போ...வாங்க அடுத்த கேள்விக்கு போவோம்...

4)  உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம்  செய்தீர்கள்?

எல்லாருக்கும் போய் பார்மாலிட்டி பண்ணேன்...அவெங்கே எடுத்த எல்லா வாந்திக்கும் நாத்தத்த பொறுத்துகிட்டு வோட்டு போட்டேன்..நான் வோட்டு போட்டுட்டேன்கரத அவேங்களோட பதிவுலையே கமெண்ட்ல சொல்லி எனக்கும் வோட்டு போட மறந்துடாதீங்கன்னு பிச்சை எடுத்தேன்...அவன் பதிவ போஸ்ட் பண்றதுக்கு முன்னாடியே போய் அய்..மீ தி பர்ஸ்டுன்னு கேண மாதிரி கமெண்ட் போட்டேன்...பதிவ படிக்காமையே மிக்க அருமை, அழகான பதிவு, ச்சே..பின்னு பின்னு என பின்னி விட்டீர்கள் போங்கள்...ச்சே எப்புடி இதெல்லாம்...இந்த மாதிரி டெம்ப்ளேட் நெறைய சேவ் பண்ணி வெச்சுகினு எல்லாரு வீட்டாண்டையும் போய் பதிவ படிக்காம சோறு மட்டும் வெச்சிட்டு வந்துருவேன்...(ச்சே ச்சே அது பிச்சை இல்லபா...மீன் புடிக்கரபோ தூண்டில்ல போடற புழு...அப்பதான  அவன் நமக்கு வந்து பிச்ச போடுவான்..ச்சே கமெண்ட் போடுவான்..) அப்டியே பிக் அப் பண்ணி இப்போ  நானும் பிரபல பதிவர் என எல்லோராலும் அன்போட அழைக்கபடறேன். 

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து
கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை
என்றால் ஏன்?

இங்க நான் எத எழுதுனாலும் ரெட்டைவால்ஸ், இலுமினாட்டி, பட்டாப்பட்டி, ரோஸ்விக்கு இந்த நாலு நாதாரிங்களும் சேர்ந்து என் பட்டாபட்டிய அவுத்துட்டு குதூகலமா கும்மியடிச்சிருவாங்கே...அதனால நாம அடுத்த கேள்விக்கு போவோம்..

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது
பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பதிவு எழுதி கோடிகணக்குல  சம்பாரிச்சு அதுல தங்கத்துல நாக்கு சுத்தம் செய்யற கருவி ஒன்னு வெளிநாட்லேர்ந்து வாங்கி நல்ல நாராசமா வழிக்கணும்...(எது எதையா..? நாக்க சார் நாக்க...!). அதுக்குதான் இவ்ளோ கஷ்டப்பட்டு இவனுககூட மல்லுகட்டிகிட்ருக்கேன்...இன்னும் நாலு வருசத்துல வாங்கிருவேன்...வாங்கி வழிச்சிட்டு அதுக்கு தனி பதிவு போடறேன்...வந்து வோட்டு போடுங்க...(இங்க பாதி பேரு ஊருக்கு போய்  கக்கூஸ் போனதெல்லாம் தனி பதிவா போட்ராணுக...நான் நாக்கு வழிச்சத  போடகூடாதா..என்ன இது போங்கா இருக்கு..)..

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில்
எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

வெளியூர்க்காரன் பட்டாப்பட்டி. (கொழம்பி சாவுங்கடா டேய்...)


8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை  ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

ஒரு சின்ன சம்பவத்த இவ்ளோ அழகா ரசிக்கற மாதிரி எழுத முடியுமான்னு விசாவ பார்த்து கொஞ்சம் வந்துருக்கு..சாதாரண வார்த்தைகள் இவர் பேனாலேர்ந்து வர்றபோ மட்டும் எப்டி இவ்ளோ காதல சொல்லுதுன்னு வசந்த கால பறவைகள பார்த்து கொஞ்சம், வாழ்க்கைய எவ்ளோ ரசனையோட வாழராருன்னு வீணாப்போனவன பார்த்து கொஞ்சம்,மனுஷனுக்கு நக்கல் வரலாம், ஆனா, நக்கலே மனுசனா வந்துருக்கானேன்னு பட்டாபட்டிய பார்த்து கொஞ்சம்.. இந்த நாயால மட்டும் எப்புடி எல்லா விசயத்த பத்தியும் ரசிக்கற மாதிரி எழுத முடியுதுன்னு ரெட்டைவால்ஸ  பார்த்து கொஞ்சம், சில நேரங்கள்ல மின்னற் பொழுதேதூரம் வலைப்பூவ பார்த்து....!


கோவபட்டது...ம்ஹும்..வெளியூர்க்காரன் கோவபட்ற அளவுக்கு இங்க எந்த பதிவருக்கும் வொர்த் இல்ல பாஸ்..


     9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு
       பாராட்டிய மனிதர் யார்? 

கொஞ்ச நாளைக்கு முன்னாடி அன்பு அண்ணேன் அஜித் அவர்களோட ரசிகர் ஒருத்தர் வந்து கமெண்ட்ஸ்ல என்னையும் என் குடும்பத்தையும் ரொம்ப அன்போட பாராட்டி விசாரிச்சிருந்தாறு...அவருதான் முதன்முதல்ல என்ன தொடர்பு கொண்டு அன்புள்ளத்தோட பாராட்ன மனித தெய்வம்...என் ஆசான்...(டேய் அமுக்குங்கடா இந்த இலுமினாட்டி பயல...வெளில விட்டா   உண்மையா சொல்லி என் மானத்த வாங்கிருவான்...டேய் டேய் முண்டறான் பாரு..விடாதீங்கடா...அமுக்குங்கடா...!) 

    10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு
       தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

பதிவர்களுக்கு நான் சொல்றதுக்கு ஒன்னும் இல்லைங்க..கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு மேட்டர் சொன்னேன்...வழக்கம் போல ஒருத்தனும் கேக்கல..தக்காளி கேக்கவும் மாட்டாங்கே...அதனால கமெண்ட்ஸ் போடற நண்பர்களுக்கு தமிழ் பதிவுலகத்தோட மிக முக்கியமான பிரபல பதிவர்ங்கர முறைல ஒரு மேட்டர் சொல்லலாமேன்னு...அண்ணேன்ங்களா வணக்கம்..நல்ல பதிவுகள கண்டிப்பா படிங்க..நல்ல எழுதாளர்கள மனசுலேர்ந்து பாராட்டி வளர்த்து விடுங்க...இங்க நெறைய பேர் ரொம்ப அருமையா எழுதறாங்க...அவங்கல்லாம் வளரனும்..அது உங்களாலதான் முடியும்..அதனால நல்லா இருந்தா கண்டிப்பா பாராட்டுங்க...ஆனா நல்லா இல்லைனா ஜிஞ்சா அடிக்காதீங்க..அருமை, மிகவும் அழகான பகிர்வு.ஆகா அபாரம்.....இதெல்லாம் வேணாம்...பின்னி எடுத்துவிட்டீர்கள்  போங்கள் அப்டீன்னு உங்க கமேண்ட்ச கீழ  படிச்சிட்டு பதிவு நல்லாருக்கு போலருக்குன்னு மேல போனா அந்த நாய் பண்ணி மாதிரி வாந்தி எடுத்து வெச்சிருக்கு...! 

ஏன்யா...ஏன் இந்த மானம்கெட்ட பொழப்பு நமக்கு...நமக்கெல்லாம் சூடு சொரணை இருக்குன்னேன்..எது நல்லாருக்கு எது நல்லால்லைன்னு பார்த்த உடனே தெரியும்..நல்லா இல்லைனா நல்லா இல்லைன்னு மூஞ்சிக்கு நேரா சொல்லு..என்னா பண்ணிருவாங்கே...தக்காளி கோச்சுகிட்டா போறாங்கே....இல்ல எதிர்த்து எதாச்சும் உன்ன திட்ராங்கேளா...உடனே இங்க இப்டி நடந்துச்சுன்னு அனானிங்கற பேர்ல வந்து பட்டாப்பட்டி போலிஸ் ஸ்டேசன்ல அந்த டோமரோட லிங்கோட  ஒரு கம்ப்ளைன்ட் குடுத்துட்டு நீ போய் உன் வேலைய பாரு..நாங்க மிச்சத்த பார்த்துக்கறோம்...சிக்குனவன விடிய விடிய குமுர்றதுக்குன்னே இங்க ஒரு பெரிய குண்டர்கள் இராணுவமே இருக்கு. அவனுக எல்லாருமே ஆபிஸ் வேலைய பார்க்காம இங்கதான் வெட்டியா உக்காந்துருப்பானுவோ...எவனாச்சும் சிக்குவானான்னு...அதே மாதிரி, எங்க யாருக்குமே பதிவு எழுத தெரியாது..சிக்குனவன கமெண்ட் ஏரியால வெச்சு செதைச்சு கலாய்க்க மட்டும்தான் தெரியும்....(உம் : வெளியூர்க்காரன் ) 

நான் இந்த தொடர எழுத யார கூப்டாலும் வரமாட்டானுவோ..ஏன்னா என்னை இங்க எவனும் மதிக்க மாட்டான்...அதனால வாய பொளந்துகிட்டு கதை கேட்டது போதும்..கூட்டத்த கலைச்சிட்டு எல்லாரும் போய் ஆபிஸ் வேலைய பாருங்க போங்க..!

தக்காளி வந்துட்டாங்கே..!

தொடர் பதிவுன்னு ரயில் வண்டி விடுறதுக்கு..!

வெளியூர்க்காரன்..

148 Responses so far.

 1. ஆகா...அருமை..
  இந்த திறமையை..இவ்வளவு நாட்களால..எங்கு வைத்திருந்தீர்கள்?...

 2. யோவ்.. முதல் கமென்ஸ் போட்டுட்டேனு..ஆபீஸ்ல சும்மா உக்காந்திருக்கேனு சொன்னே.. நீ காலி...

  ( சே.. எப்படியெல்லாம் பயப்படவேண்டியிருக்கு...)

 3. VISA says:

  தலைவரே நானும் இரண்டு நாளா உங்க பிளாக எப்படியாவது படிச்சிடணுமுன்னு முயற்சி பண்றேன் ஒரே கருப்பா தெரியுது. கொஞ்சம் டெம்ப்லேட்ட மாத்துங்களேன்.

 4. @@@VISA said...
  தலைவரே நானும் இரண்டு நாளா உங்க பிளாக எப்படியாவது படிச்சிடணுமுன்னு முயற்சி பண்றேன் ஒரே கருப்பா தெரியுது. கொஞ்சம் டெம்ப்லேட்ட மாத்துங்களேன்.////

  ரெண்டு மூணு நாளா முயற்ச்சி பண்ணி படிக்கற அளவுக்கெல்லாம் உள்ள ஒன்னும் மேட்டர் இல்லிங்கன்னோவ்..! :)
  (தங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டது...கூடிய விரைவில் ஆவன செய்யப்படும்..) :)

 5. ரெண்டு மூணு நாளா முயற்ச்சி பண்ணி படிக்கற அளவுக்கெல்லாம் உள்ள ஒன்னும் மேட்டர் இல்லிங்கன்னோவ்..! :)
  //


  தன்னடக்கத்தில் உன்னை மிஞ்ச..ஆளே இல்லையா..

 6. தலைவரே நானும் இரண்டு நாளா உங்க பிளாக எப்படியாவது படிச்சிடணுமுன்னு முயற்சி பண்றேன் ஒரே கருப்பா தெரியுது. கொஞ்சம் டெம்ப்லேட்ட மாத்துங்களேன்

  ********************************

  கூலிங்கிளாஸை கழட்டிட்டு படிங்க தலைவரே...!

  (ஐயோ மச்சி...இவரு நம்ம ஆளாடா!?)

 7. //இங்க நெறைய பேர் ரொம்ப அருமையா எழுதறாங்க...அவங்கல்லாம் வளரனும்..அது உங்களாலதான் முடியும்..அதனால நல்லா இருந்தா கண்டிப்பா பாராட்டுங்க...ஆனா நல்லா இல்லைனா ஜிஞ்சா அடிக்காதீங்க..அருமை, மிகவும் அழகான பகிர்வு.ஆகா அபாரம்.....இதெல்லாம் வேணாம்...பின்னி எடுத்துவிட்டீர்கள் போங்கள் அப்டீன்னு உங்க கமேண்ட்ச கீழ படிச்சிட்டு பதிவு நல்லாருக்கு போலருக்குன்னு மேல போனா அந்த நாய் பண்ணி மாதிரி வாந்தி எடுத்து வெச்சிருக்கு...! //

  வெளி!! உன் பதிவுல இந்த மேட்டர் நல்ல இருக்கு.... கொய்யல இப்போ நான் என்ன சொல்லி பாராட்டின திட்டமாட்ட....

 8. @@@Rettaival's said...
  கூலிங்கிளாஸை கழட்டிட்டு படிங்க தலைவரே...!
  (ஐயோ மச்சி...இவரு நம்ம ஆளாடா!?)///

  ஹா ஹா...எனக்கும் சரியா தெரில மச்சி...விடு விடு...போர்களத்துக்கு வந்துட்டா அப்புடி இப்புடி கத்தி படத்தான் செய்யும்..இதுகெல்லாம் பயந்தா முடியுமா...பஞ்சாயத்துல கிழியாத பனியன் இருக்கா என்ன..? :)

 9. @@@ TERROR-PANDIYAN(VAS) said...
  வெளி!! உன் பதிவுல இந்த மேட்டர் நல்ல இருக்கு.... கொய்யல இப்போ நான் என்ன சொல்லி பாராட்டின திட்டமாட்ட....////

  வெளியூர்காரன்ல வந்து நீ பதிவு நல்லாருக்குன்னு பாராட்டவே வேணாம்..இங்க வர்றவங்கள நல்லா ஜாலியா கலாய்...அது போதும் மச்சி...! என் பதிவு நல்லாத்தான் இருக்கும்னு எனக்கு தெரியும்...! :) (யோவ் பட்டாப்பட்டி., இதுக்கு பேரு தன்னம்பிக்கை...) :)

 10. @வெளியூர்க்காரன்
  //அது போதும் மச்சி...! என் பதிவு நல்லாத்தான் இருக்கும்னு எனக்கு தெரியும். (யோவ் பட்டாப்பட்டி., இதுக்கு பேரு தன்னம்பிக்கை...) :) //

  இதுக்கு பேருதான் நாதரிதனமா?? கொய்யல மாமனாரை தெய்வமாக மதிக்கும் சங்கம் திரும்ப ஆரம்பிக்க வேண்டி வருமோ.....

 11. //என் ஸ்லிப்பர பார்த்துட்டு//

  எங்கனயோ இடிக்குதே.மச்சி,மெய்யாலுமே அது உன் ஸ்லிப்பர் தானா? :)

  //பதிவுலகம்னு ஒன்னு இருக்கு...அங்க போய் நீ நாலு மொக்கை பதிவர்களா பாராட்னா,அவனுக திரும்பி வந்து நீ போடற மொக்கைய பாராட்டி பார்மாலிட்டி பண்ணுவானுகன்னு..வோட்டெல்லாம் போட்டு உன்ன பெரிய ஆளாக்கி பிரபல பதிவராக்கிருவாங்க..நீ ஜாலியா நாலு பதிவர்கள வன்புணர்ச்சி பண்ணலாம்..//

  //நான் வோட்டு போட்டுட்டேன்கரத அவேங்களோட பதிவுலையே கமெண்ட்ல சொல்லி எனக்கும் வோட்டு போட மறந்துடாதீங்கன்னு பிச்சை எடுத்தேன்...அவன் பதிவ போஸ்ட் பண்றதுக்கு முன்னாடியே போய் அய்..//
  //மீ தி பர்ஸ்டுன்னு கேண மாதிரி கமெண்ட் போட்டேன்...பதிவ படிக்காமையே மிக்க அருமை, அழகான பதிவு//

  ஹாஹஹா...

  //டேய் அமுக்குங்கடா இந்த இலுமினாட்டி பயல...வெளில விட்டா உண்மையா சொல்லி என் மானத்த வாங்கிருவான்...டேய் டேய் முண்டறான் பாரு..விடாதீங்கடா...அமுக்குங்கடா...!//

  தொலைஞ்சு போ....

  //தக்காளி வந்துட்டாங்கே..!
  தொடர் பதிவுன்னு ரயில் வண்டி விடுறதுக்கு..!
  //

  இது தான் யா கெத்து... :)

 12. //தக்காளி வந்துட்டாங்கே..!

  தொடர் பதிவுன்னு ரயில் வண்டி விடுறதுக்கு..!//

  பதிவுலகில் நான் எப்பாடு பட்டவன்
  :)

 13. @@@TERROR-PANDIYAN(VAS) said...
  கொய்யல மாமனாரை தெய்வமாக மதிக்கும் சங்கம் திரும்ப ஆரம்பிக்க வேண்டி வருமோ.....///

  மாமனாருங்கள அப்டியெல்லாம் மரியாதை இல்லாம பேசகூடாது ராஜா...அவங்கல்லாம் நமக்கு தெய்வம் மாதிரி...!
  - அடிக்கு பயந்து உளறி கொட்டுவோர் சங்கம்..! :)

 14. @@@@ ILLUMINATI said...
  இது தான் யா கெத்து... :)///

  "வெளியூர்க்காரன்"னாலே கெத்துதான மச்சி...!

  - பஞ்ச டயலாக் பேசி பரதேசியாய் போன விஜய் ரசிகர்கள் முன்னேற்ற சங்கம். :)

 15. @@@@கோவி.கண்ணன் said...
  பதிவுலகில் நான் எப்பாடு பட்டவன்
  :)////

  அண்ணேன்..என்னையும் பட்டாபட்டியையும் எப்போ சிங்கப்பூர் பதிவர்கள் சங்கத்துல சேர்த்துக்க போறீங்க..! சேர்த்துக்க முடியுமா முடியாதா..! இன்னும் மூணு எண்றதுக்குள்ள நீங்க பதில் சொல்லலைனா கூடிய விரைவில் நாங்க போட்டியா ஒரு சிங்கப்பூர் பதிவர் சங்கம் ஆரம்பிச்சு ஜோசப் செல்வராஜா எங்க பக்கம் இழுத்து உங்க பதிவர் சங்கத்துக்கு கடும் போட்டியா உருவாயடுவோம்..சீக்கிரம் யோசிச்சு சொல்லுங்க...! :)

 16. @வெளி
  //இன்னும் மூணு எண்றதுக்குள்ள நீங்க பதில் சொல்லலைனா கூடிய விரைவில் நாங்க போட்டியா ஒரு சிங்கப்பூர் பதிவர் சங்கம் ஆரம்பிச்சு ஜோசப் செல்வராஜா எங்க பக்கம் இழுத்து உங்க பதிவர் சங்கத்துக்கு கடும் போட்டியா உருவாயடுவோம்..சீக்கிரம் யோசிச்சு சொல்லுங்க...! :) //

  1... 2... 3... நேரம் முடிஞ்சிபோச்சி. நீ புது சங்கத்த ஆரம்பி மச்சி....

  (சண்டை பாத்து ரொம்ப நாளாச்சி.)

 17. @@@TERROR-PANDIYAN(VAS) said...
  1... 2... 3... நேரம் முடிஞ்சிபோச்சி. நீ புது சங்கத்த ஆரம்பி மச்சி....
  (சண்டை பாத்து ரொம்ப நாளாச்சி.)///

  எலேய் இந்தாடா..யார்ரா நீயி...என்னடா இது அராஜகமா இருக்கு...காத்தாடி விடற கேப்ல நீ உலகபோர கொண்டு வந்துருவ போலருக்கு...! இரு அவசரபடாத...சண்டைக்கு வருவாங்கே..அப்பறம் ஆரம்பிக்கலாம்..இப்ப எனக்கு அலுப்பா இருக்கு....! :)

 18. டெர்ரர் பாண்டியன்...நீங்க சைவமா அசைவமா?

 19. //டெர்ரர் பாண்டியன்...நீங்க சைவமா அசைவமா?//

  மச்சி,அது நமக்குள்ள கேட்டுக்க வேண்டியது மச்சி.ஏன் அது கிட்ட கேக்குற? ;)

 20. அடுத்த முக்காடு வந்தாச்சு...
  தக்காளி..எவனெவனுக்கு உருவப்போறானுகளோ?

  உசார்..மக்களே... கடற்கரையில 12 நம்பர் கொடி ஏத்துங்க....

 21. //அடுத்த முக்காடு வந்தாச்சு...
  தக்காளி..எவனெவனுக்கு உருவப்போறானுகளோ?//

  ஹீ ஹீ,நாலு பேரும் ஆஜர்.தக்காளி,இன்னிக்கு ஒரு ரத்தக்களறியே நடக்கப் போவுது இங்க.எவன் மாட்டப் போறானோ? :)

 22. //நீங்க சைவமா அசைவமா?//

  கைல மட்டின உன்னகூட கரி ஆக்கி துன்னுடுவேன்....அந்த அளவு அசைவம்... (மக்கா இதுல எதாவது உள்குத்து இருக்க.... அவ்வ்வ்வவ்வ்வ்...)

 23. //"வெளியூர்க்காரன்"னாலே கெத்துதான மச்சி...!
  - பஞ்ச டயலாக் பேசி பரதேசியாய் போன விஜய் ரசிகர்கள் முன்னேற்ற சங்கம். :)//

  ஏலேய்,மொண்ண..
  இன்னும் அந்த சங்கத்துல இருந்து வரலையா நீயு?
  அப்புறம்,ஒரு சின்ன தப்பு நடந்து போச்சு மச்சி..
  அது கெத்து இல்ல,வெத்து.. :)

 24. @TERROR-PANDIYAN(VAS) said...


  பாண்டி அண்ணே....கடைசியா பாக்கிங் மட்டும் எப்படினு சொல்லிக்கிட்டு , இவங்ககூட சண்டைக்கு போங்க...
  சொல்லிப்புட்டேன்

 25. // பாண்டி அண்ணே....கடைசியா பாக்கிங் மட்டும் எப்படினு சொல்லிக்கிட்டு , இவங்ககூட சண்டைக்கு போங்க...சொல்லிப்புட்டேன் //

  சண்டைய??? நான் எசஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்............... நான் கட்சில சேர வந்த பீஸ்ங்கோ

 26. டெர்ரர் பாண்டி அண்ணே...நீங்க ஆஸ்திகமா ..இல்லை நாஸ்திகமா?

 27. @@@Rettaival's said...
  டெர்ரர் பாண்டி அண்ணே...நீங்க ஆஸ்திகமா ..இல்லை நாஸ்திகமா?///

  டேய் ரெட்டை...டெர்ரர் பாண்டியன் சார் யாரு...அவர போய் கலாய்க்கற..சொன்னா கேளுரா..அவரு கலாய்க்க ஆரம்பிச்சா நீ அவ்ளோதான்...தாங்கமாட்ட..சொல்லிபுட்டேன் ஆமாம்..! :)

  (டேய் இலுமி..நான் பேசிகிட்டே இருக்கேன்..நீ அப்புடியே இது ஓடிராம வளைச்சு புடி..தக்காளி ரொம்ப நாள் ஆச்சு...! ):)

 28. // நீங்க ஆஸ்திகமா ..இல்லை நாஸ்திகமா //

  இந்த இரண்டு கருமத்துக்கும் மொத அர்த்தம் சொல்லு.... சாமி கும்புடுவிய கேக்கறய? சத்தியமா இல்ல...

 29. டெர்ரர் பாண்டி சார்...நீங்க பட்டாபட்டி டவுசரா...இல்லை கோமணமா?

 30. டெர்ரர் பாண்டி சார்...நீங்க போடறது...பூ போட்ட சட்டையா...இல்லை கட்டம் போட்டதா?

 31. டெர்ரர் பாண்டி சார்...நீங்க வேர்க்கடலையை அவிச்சு சாப்பிடுவீங்களா? இல்லை வறுத்து சாப்பிடுவீங்களா?

 32. @@@@TERROR-PANDIYAN(VAS) said...
  இந்த இரண்டு கருமத்துக்கும் மொத அர்த்தம் சொல்லு.... சாமி கும்புடுவிய கேக்கறய? சத்தியமா இல்ல...////

  மச்சி பதில கவனிச்சியா..செம பிரெஷ் பீசு...அப்புராணி.யார் கையும் படாம வளந்துருக்கு....தட்டி மெளகு போட்டு வறுத்தா அப்புடித்தான் இருக்கும்...! கொஞ்ச நேரம் ஓட விட்டு வெளாடலாம்..அப்பதான் ரெத்தம் வேகமா ஓடி, சமைக்கும்போது கறி நல்லா வேகும்...! :)

 33. // டெர்ரர் பாண்டி சார்...நீங்க பட்டாபட்டி டவுசரா...இல்லை கோமணமா? //

  ஊறுவ ரெடி அகிடாங்கய....

 34. //டேய் இலுமி..நான் பேசிகிட்டே இருக்கேன்..நீ அப்புடியே இது ஓடிராம வளைச்சு புடி..தக்காளி ரொம்ப நாள் ஆச்சு...!//

  மச்சி,இது ஓடுற பீசு மாதிரி தெர்ல.உன்னை மாதிரி நின்னு அடி வாங்குற பீசா தெரியுது.கவலைப்படாத..

 35. @@@Rettaival's said...
  டெர்ரர் பாண்டி சார்...நீங்க வேர்க்கடலையை அவிச்சு சாப்பிடுவீங்களா? இல்லை வறுத்து சாப்பிடுவீங்களா?///

  டெர்ரர் பாண்டி வேர்கடலைய அவிச்சு சாப்டறாரா இல்ல வறுத்து சாப்ட்ராராங்கறது அடுத்த பிரச்சனை..நாம டெர்ரர் பாண்டிய எப்புடி சாப்புட போறோம்...வறுத்தா இல்ல அவிச்சா....அத மொதொள்ள சொல்லு..நான் மசாலா ரெடி பண்ணும்...! :)

 36. நான் மசாலா ரெடி பண்ணும்...! :)
  //

  அப்படியே எனக்கு ஒரு பாரின் பாட்டில்..

  ( தயவு செய்து ரெட்டைகிட்ட வாங்கிட்டு வராதய்யா...)

 37. @@@@TERROR-PANDIYAN(VAS) said...
  ஊறுவ ரெடி அகிடாங்கய....//

  டேய் ரெட்டை...நான் அப்பவே சொன்னேன்ல...டெரர் சாருக்கு சமஸ்க்ரிதம் தெரியும்னு...இப்ப பார்த்தியா..! நான் சொன்னா கரெக்டா இருக்கும்டா...! :)

  பின்குறிப்பு :
  ("ஊறுவ ரெடி அகிடாங்கய." என்றால் சமஸ்க்ரிதத்தில் என்னை ஊற வெச்சு ரெடி பண்ணி நெய் சோறு பண்ணுங்கன்னு அர்த்தம்..)

 38. //மச்சி பதில கவனிச்சியா..செம பிரெஷ் பீசு...அப்புராணி.யார் கையும் படாம வளந்துருக்கு....//

  ஆமா,மச்சி.உன்னை மாதிரியே ஆயிரம் பேர்கிட்ட அடி வாங்கினாலும் கற்பு கழியாத கன்னி ஆடு!பாத்து handle பண்ணு.

 39. இலுமி...சாந்தி தியேட்டர் ல "புதிய பறவை " படம் போட்டிருக்கானுக...பார்த்தவுடனே பகீர்னு ஆயிடுச்சு...! இலுமி இன்னிக்கு நைட்டு விமர்சனம் போடுவானேன்னு ஒரு சின்ன பீதி!அப்படி எதுவும் திட்டம் இல்லையே!?

 40. //டெர்ரர் பாண்டி வேர்கடலைய அவிச்சு சாப்டறாரா இல்ல வறுத்து சாப்ட்ராராங்கறது அடுத்த பிரச்சனை..நாம டெர்ரர் பாண்டிய எப்புடி சாப்புட போறோம்...வறுத்தா இல்ல அவிச்சா....அத மொதொள்ள சொல்லு..நான் மசாலா ரெடி பண்ணும்...! :)//

  மசாலா அளவுக்கு போய்டானுன்களே..... பட்டாபட்டி சார்... பக்கிங் ரெடியா?

 41. யோவ் டெர்ரர் பாண்டி... மிக்ஸில டைப் பண்றியா...இந்த குதறு குதறுற...?

 42. @@TERROR-PANDIYAN(VAS) said...
  மசாலா அளவுக்கு போய்டானுன்களே..... பட்டாபட்டி சார்... பக்கிங் ரெடியா? ///

  டெரர் சார்...டெரர் சார்...மாரியாத்தவையும் மங்காத்தவையும் மனசுல நெனைச்சிகிட்டு அப்புடிக்கா குமிங்களேன்...ஒரு மேட்டர் சொல்றேன்...! :) (டேய் ரெட்டை பார்த்து வலிக்காம...டக்குன்னு தலை தனியா வந்தர்னும்...போன தடவை மாதிரி ஆக்கிராத...! :)

 43. //பக்கிங் ரெடியா?//

  என்ன இது வில்லங்கமான பீசா இருக்கும் போலயே...

 44. // யோவ் டெர்ரர் பாண்டி... மிக்ஸில டைப் பண்றியா...இந்த குதறு குதறுற...? //

  அட நீவேற மச்சி... நானே google transliterate ல கஷ்டப்பட்டு டைப்பண்ணிட்டு இருக்கேன்...

 45. @@Rettaival's said...
  யோவ் டெர்ரர் பாண்டி... மிக்ஸில டைப் பண்றியா...இந்த குதறு குதறுற...?//

  ஹா ஹா...மரண கலாய்...! மச்சான்..இந்த பீசு அவ்ளவா கம்பெனி குடுக்க மாட்டேங்குது...இலுமி வேற இருக்கான்..நாம பட்டாப்பட்டி வறுவல் ட்ரை பண்ணுவமா..ரொம்ப நாள் ஆச்சு...! :)

 46. @வெளி
  //டெரர் சார்...டெரர் சார்...மாரியாத்தவையும் மங்காத்தவையும் மனசுல நெனைச்சிகிட்டு அப்புடிக்கா குமிங்களேன்...ஒரு மேட்டர் சொல்றேன்...! :) //

  சரியாய் புரியல மச்சி ஒரு தப செஞ்சி கட்டேன்...:)

  (இலுமி ரெடியா?? பட்டுன்னு போட்டுடு...)

 47. //இலுமி ரெடியா?? பட்டுன்னு போட்டுடு...//

  ஏலேய்,இந்த பிரிச்சு ஆளுர சூழ்ச்சி எல்லாம் ஆவாதுலே.ஆடு னு வந்துட்டா நாங்க ஒன்னாயிடுவோம்.ஏலே வெளி,சீக்கிரம் போடுல.ஆடு திமிருது இல்ல?

 48. //// யோவ் டெர்ரர் பாண்டி... மிக்ஸில டைப் பண்றியா...இந்த குதறு குதறுற...? //

  அட நீவேற மச்சி... நானே google transliterate ல கஷ்டப்பட்டு டைப்பண்ணிட்டு இருக்கேன்...//

  டேய்,உப்பு கொஞ்சம் கூடுதலா எடுத்து வை...

 49. //ஏலேய்,இந்த பிரிச்சு ஆளுர சூழ்ச்சி எல்லாம் ஆவாதுலே.ஆடு னு வந்துட்டா நாங்க ஒன்னாயிடுவோம்.ஏலே வெளி,சீக்கிரம் போடுல.ஆடு திமிருது இல்ல?//

  ஆட்டுக்கு office டைம் முடிஞ்சிபோச்சி. மறுபடி இன்னும் ஒரு நாள் வரேன்... அப்போ வெட்டுங்க.... (எப்படியும் சாவு உங்க கைலதான் ஆகிபோச்சி...)

 50. அது இல்லை வெளி...ரெண்டு நாளா கார்க் அடைச்சுக்கிச்சு. கடலையை கொறிச்சுக்கிட்டே எவன் கிட்டயாவது இந்த மாதிரி எகத்தாளமா கேள்வி கேட்டுக்கிட்டே இருந்தா ஃப்ரீயா போயிடும்னு டாக்டர் சொன்னாரா...தக்காளி, லூசுங்க எங்க இருக்கும்னு தேடி பார்த்தேன்! சரி நம்ம மாப்ள தான் பிளாகு வச்சிருக்கானே..ட்ரை பண்ணுவோம்னு வந்தேன்...கரெக்டா ஒரு லூசு கேக்கற கேள்விக்கெல்லாம் கடமையா பதில் சொல்லிக்கிட்டு இருந்தது! நமக்கும் உன் பிளாகு புண்ணியத்துல இப்போ கார்க் ரிலீஸ் ஆயிடுச்சு!

 51. @@@@ILLUMINATI said...
  ஏலேய்,இந்த பிரிச்சு ஆளுர சூழ்ச்சி எல்லாம் ஆவாதுலே.ஆடு னு வந்துட்டா நாங்க ஒன்னாயிடுவோம்.ஏலே வெளி,சீக்கிரம் போடுல.ஆடு திமிருது இல்ல?..///

  எலேய் இலுமி..இருடா..நாமெல்லாம் நாகரீகமானவங்கே...ஆடா இருந்தாலும் தப்பிக்க ஒரு வாய்ப்பு குடுக்கணும்..இப்ப பாரு.... ராஜா டெரர் பாண்டி..நீ ரொம்ப வெள்ளந்தியா இருக்க..சொன்னா கேளு..இவனுகள பத்தி உனக்கு தெரியாது...இன்னும் ரெண்டு மூணு பேரு வேற வருவானுக...அப்பறம் பாடி கெடைக்காது..! இவனுகல்லாம் கொலை பண்ணி கொலை பண்ணி டேட் பாடி மேல நின்னு கும்மியடிக்கரவங்கே...வேணாம் போயிரு...! :)

 52. @@TERROR-PANDIYAN(VAS) said...
  ஆட்டுக்கு office டைம் முடிஞ்சிபோச்சி. மறுபடி இன்னும் ஒரு நாள் வரேன்... அப்போ வெட்டுங்க.... (எப்படியும் சாவு உங்க கைலதான் ஆகிபோச்சி...)///

  நாளைக்கு வரும்போது நல்லா சுத்தபத்தமா குளிச்சிட்டு வா ராஜா...நாங்கல்லாம் சுத்த சைவம்...அறுக்கும்போது அழுக்கு இருந்தா மூட் அவுட் ஆய்டுவோம்..! :)

 53. //அது இல்லை வெளி...ரெண்டு நாளா கார்க் அடைச்சுக்கிச்சு. கடலையை கொறிச்சுக்கிட்டே எவன் கிட்டயாவது இந்த மாதிரி எகத்தாளமா கேள்வி கேட்டுக்கிட்டே இருந்தா ஃப்ரீயா போயிடும்னு டாக்டர் சொன்னாரா...தக்காளி, லூசுங்க எங்க இருக்கும்னு தேடி பார்த்தேன்! சரி நம்ம மாப்ள தான் பிளாகு வச்சிருக்கானே..ட்ரை பண்ணுவோம்னு வந்தேன்...கரெக்டா ஒரு லூசு கேக்கற கேள்விக்கெல்லாம் கடமையா பதில் சொல்லிக்கிட்டு இருந்தது!//

  மரண கலாய்... :)

 54. இன்றைய பொழுது இனிதே கழிந்தது! வரட்டுமாடே நக்கல் புடிச்ச நாதாரிகளா?

 55. @@@Rettaival's said...
  இன்றைய பொழுது இனிதே கழிந்தது! வரட்டுமாடே நக்கல் புடிச்ச நாதாரிகளா?//

  நானும் கெளம்பறேன்....!
  கடமை அழைக்கிறது...!
  கடலை போட...!

  வணக்கம் அன்பு நெஞ்சங்களே...! :)

 56. //ஆட்டுக்கு office டைம் முடிஞ்சிபோச்சி. மறுபடி இன்னும் ஒரு நாள் வரேன்... அப்போ வெட்டுங்க.... (எப்படியும் சாவு உங்க கைலதான் ஆகிபோச்சி...)//

  நம்ம சரித்துரத்துலையே appointment வாங்கிட்டு ஆடு ஆடுவெட்டுக்கு வர்றது அனேகமா இது தான் முதல் தடவ.. :)

 57. //நானும் கெளம்பறேன்....!
  கடமை அழைக்கிறது...!
  கடலை போட...!
  //

  ஹாஹா,போன கமெண்ட் அப்புடியே ரிப்பீட்டு.. :)

 58. ரெட்டைவால்ஸ், இலுமினாட்டி, பட்டாப்பட்டி, ரோஸ்விக்கு இந்த நாலு நாதாரிங்களும் சேர்ந்து/////


  அந்த பொன்னான வாய்ப்புக்காக நானும் காத்திருக்கிறேன் சாமி

 59. அடப்பாவிகளா , எப்படா இந்த கும்மி அடிச்சிங்க ???

 60. பாவம் பச்சபுள்ள பாக்காம இந்த கும்மு கும்மராங்க.... நல்ல இருங்கடி நக்கல் பிடிச்ச பதிவர்களா... பரவாயில்ல உசுருக்கு சேதாரம் இல்ல.... உடம்பு கொஞ்சம் தேறினதும் மறுபடி வரேன்.... மறுபடி ஊற வச்சி அடிங்க... :-)

  அப்பவே குலசாமி பட்டபட்டி போய்டு போய்டு சொல்லுச்சி....

  (தென்பாண்டி சீமைலே தேர்போல வந்தவனே... யார் அடிச்சாரோ... யார் அடிச்சாரோ.....
  ஹ்ம்ம்.. நாலுபேரு சேர்ந்து அடிச்சாங்க... பாட்ட நிறுத்திட்டு ஆம்புலன்ஸ் கூபிடுடா வெண்ண....)

 61. ன் ஸ்லிப்பர பார்த்துட்டு ஊர்நாட்டான்னு கண்டுபுடிச்சு என்ன தம்பி வெளியூரா
  //


  கக்கூஸுக்கு போடுர செருப்பை..என்ன அழகா ஸ்லிப்பருனு சொல்லுது பாரு...

 62. பதிவுலகத்துல நீ எப்படிபட்டவன்-னு எழுதுடான்னு சொன்னா... அடுத்தவய்ங்க எப்படிபட்டவங்க-ன்னு சொல்லிபுட்டு எஸ்கேப்பாயிட்டியே மச்சி... :-)))

 63. //வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து
  கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை
  என்றால் ஏன்?//

  இன்னும் இந்த பீசு பேரையே சொல்லலை... இது எப்படி மத்த விஷயத்தை சொல்லும்...?? போங்க பாஸ் காமெடி பண்ணாதீங்க... :-)

 64. //ஸ்லிப்பர பார்த்துட்டு ஊர்நாட்டான்னு கண்டுபுடிச்சு என்ன தம்பி வெளியூரா
  //


  கக்கூஸுக்கு போடுர செருப்பை..என்ன அழகா ஸ்லிப்பருனு சொல்லுது பாரு...
  //

  அதுவும் இவனுதில்லை... கல்யாணத்துல ஆட்டையை போட்டது...

 65. //@@@@கோவி.கண்ணன் said...
  பதிவுலகில் நான் எப்பாடு பட்டவன்
  :)////

  அண்ணேன்..என்னையும் பட்டாபட்டியையும் எப்போ சிங்கப்பூர் பதிவர்கள் சங்கத்துல சேர்த்துக்க போறீங்க..! சேர்த்துக்க முடியுமா முடியாதா..! இன்னும் மூணு எண்றதுக்குள்ள நீங்க பதில் சொல்லலைனா கூடிய விரைவில் நாங்க போட்டியா ஒரு சிங்கப்பூர் பதிவர் சங்கம் ஆரம்பிச்சு ஜோசப் செல்வராஜா எங்க பக்கம் இழுத்து உங்க பதிவர் சங்கத்துக்கு கடும் போட்டியா உருவாயடுவோம்..சீக்கிரம் யோசிச்சு சொல்லுங்க...! :) //

  நீங்க ஒளிஞ்சு விளையாடினா நாங்க என்ன செய்ய முடியும், வலைப்பதிவில் எத்தனையோ முறை அலைபேசி எண்களை வெளி இட்டு இருக்கிறோம். நீங்கள் அலைத்திருக்கலாம். தொடர்பே கொள்ளாமல் இப்படிக் கேட்டால் என்ன பதில் சொல்வதுன்னு தெரியல.

 66. @@@@கோவி.கண்ணன் said...
  நீங்க ஒளிஞ்சு விளையாடினா நாங்க என்ன செய்ய முடியும், வலைப்பதிவில் எத்தனையோ முறை அலைபேசி எண்களை வெளி இட்டு இருக்கிறோம். நீங்கள் அலைத்திருக்கலாம். தொடர்பே கொள்ளாமல் இப்படிக் கேட்டால் என்ன பதில் சொல்வதுன்னு தெரியல.///

  அப்போ எங்கள சேர்த்துக்கரதுக்கு "சிங்கப்பூர் பதிவர் சங்கம்" தயாராத்தான் இருக்கா..! இந்த பட்டாப்பட்டி பய வேற மாதிரி சொன்னான் அண்ணேன்...நம்மல எல்லாம் அங்க சேர்த்துக்க மாட்டங்கன்னு...! சரி விடுங்க...கூடிய சீக்கிரம் வந்து ஐக்கியம் ஆய்ட்றோம்..! உங்க தலைமைலையே...! :)

 67. @@@@ரோஸ்விக் said...
  அதுவும் இவனுதில்லை... கல்யாணத்துல ஆட்டையை போட்டது...//////

  எலேய்...நீ எப்படா உள்ள வந்த.? ராஸ்கல்..வந்த வேகத்துல பொளேர் பொளேர்னு பொறடில போட்டுட்டு புயல் மாதிரி வெளில கெளம்பி போயிருக்கான்....! இவன்கிட்ட கொஞ்சம் சாக்கிரதயாவே இருக்கணும் பட்டாபி..! :)

 68. @@@@மங்குனி அமைசர் said...
  அடப்பாவிகளா , எப்படா இந்த கும்மி அடிச்சிங்க ???/////


  மங்குனி செல்லம்..எப்டிடா கண்ணு இருக்க..ச்சே உன்ன அடிச்சு அடிச்சு வேலாண்டப்ப இருந்தப்ப இருந்த "ஜாப் சேட்டிஸ்பெக்சன்" இப்போ இருக்கற பீசுங்ககிட்ட இல்லடா செல்லம்...! எல்லாம் ராவா இருக்காங்கே...வெட்றதுக்கு ஆசையே வர மாட்டேங்குது...! :)

 69. அப்போ எங்கள சேர்த்துக்கரதுக்கு "சிங்கப்பூர் பதிவர் சங்கம்" தயாராத்தான் இருக்கா..! இந்த பட்டாப்பட்டி பய வேற மாதிரி சொன்னான் அண்ணேன்...நம்மல எல்லாம் அங்க சேர்த்துக்க மாட்டங்கன்னு...! சரி விடுங்க...கூடிய சீக்கிரம் வந்து ஐக்கியம் ஆய்ட்றோம்..! உங்க தலைமைலையே...! :)
  //

  வெள்ளிக்கிழமை மட்டும் தண்ணி அடிப்பதில்லைனு சத்தியம் பண்ணியிருக்கேன்.. மற்ற நாள் எல்லாமே..எனக்கு இனிய நாள்தான்..

  சீக்கிரம் போய் சேர்ந்திடலாம்..
  ( யோவ்..வெண்ணை..அவங்க இலக்கியம்..கவிதைனு எழுதரவங்க.. நாம போன சரியா வருமா.. எதுக்கும் பூவா தலையா போட்டு பார்த்துக்க...)

 70. வர வர மங்குனி சரியில்லப்பா..
  சோத்துல உப்பு போட்டு சாப்பிடரானு நினைக்கிறேன்...

 71. @veli...

  மச்சி,நீ என்ன தான் சொல்லு,சுருதி தப்பாம வந்து தலைய நீட்டுறதுல மங்குனிய மிஞ்ச முடியாது. :)(யாரு சுருதி னு யோசிக்கிது பாரு மூதேவி...நீ திருந்தவே மாட்டடா...)

 72. //வர வர மங்குனி சரியில்லப்பா..
  சோத்துல உப்பு போட்டு சாப்பிடரானு நினைக்கிறேன்...//

  அப்ப,பிரியாணிக்கு உப்பு போட வேண்டியதில்ல.. :)

 73. @@@பட்டாபட்டி.. said...
  ( யோவ்..வெண்ணை..அவங்க இலக்கியம்..கவிதைனு எழுதரவங்க.. நாம போன சரியா வருமா.. எதுக்கும் பூவா தலையா போட்டு பார்த்துக்க...)////


  என்னய்யா சொல்ல வர...கறி கடை பாயிக்கு பிள்ளையார் கோவில்ல என்ன வேலைனா...? :)

  (நெஜமாவே பதிவர் சங்கத்துல கவிதை இலக்கியம் இத பத்திதான் பேசுவாங்களா பட்டாப்பட்டி...! நமக்கு புதுகவிதை மட்டும்தான எழுத வரும்..என்னய்யா பண்றது இப்போ....! :) )

 74. @@@ILLUMINATI said...
  மச்சி,நீ என்ன தான் சொல்லு,சுருதி தப்பாம வந்து தலைய நீட்டுறதுல மங்குனிய மிஞ்ச முடியாது. :)(யாரு சுருதி னு யோசிக்கிது பாரு மூதேவி...நீ திருந்தவே மாட்டடா...)////

  நான் திருந்தறது இருக்கட்டும்..நீ மொதல்ல காமிக்ஸ் படிச்சுகிட்டு கமேர்கட் திங்கற பழக்கத விடு...! தக்காளி பொடி பசங்க கூட ஏண்டா சகாவாசம் வெச்சுகறேன்னு என் பக்கத்துக்கு வீட்டு சின்ன பொண்ணு என்னை ரொம்ப கேவலமா திட்டுறா...! :)

 75. பதிவு நல்லாயிருக்குன்னு சொன்னாலும் திட்டுவீங்க போல. அதுனால.. பதிவு சுமார் தான். இன்னும் இம்ரூவ் பண்ணுங்கன்னு பொய் சொல்லிட்டு கிளம்புறேன்.

 76. Veliyoorkaran said...
  @@@ILLUMINATI said...
  மச்சி,நீ என்ன தான் சொல்லு,சுருதி தப்பாம வந்து தலைய நீட்டுறதுல மங்குனிய மிஞ்ச முடியாது. :)(யாரு சுருதி னு யோசிக்கிது பாரு மூதேவி...நீ திருந்தவே மாட்டடா...)////

  நான் திருந்தறது இருக்கட்டும்..நீ மொதல்ல காமிக்ஸ் படிச்சுகிட்டு கமேர்கட் திங்கற பழக்கத விடு...! தக்காளி பொடி பசங்க கூட ஏண்டா சகாவாசம் வெச்சுகறேன்னு என் பக்கத்துக்கு வீட்டு சின்ன பொண்ணு என்னை ரொம்ப கேவலமா திட்டுறா...! :)
  ***********************************

  இது பரவாயில்லை...இவன் போடற விமர்சனம் இருக்கே ..யப்பா...பக்கத்து வீட்டு எண்பத்தோரு வயசு தாத்தா இவன் பிளாகை பார்த்துட்டு என்னப்பா எங்க தாத்தா காலத்து படத்துக்கெல்லாம் விமர்சனம் பண்றாரே இந்த பெருசு யாருன்னு கேட்டு சிரிக்குது மச்சி....!

 77. இந்த மாதிரியும் பதிவு போட முடியும்ன்னு முதன் முறையாக உங்க பதிவை படிச்சு தெரிஞ்சுகிட்டேன், சிரிச்சு சிரிச்சு வாயும் வயிறும் வலியெடுக்க ஆரம்பிச்சிடுச்சி...அதனால பின்னூட்டம் போடறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.( நான் பொதுவாக யாருக்கும் பின்னூட்டம் போடும் வழக்கம் கிடையாது).

 78. @ரத்னா
  //இந்த மாதிரியும் பதிவு போட முடியும்ன்னு முதன் முறையாக உங்க பதிவை படிச்சு தெரிஞ்சுகிட்டேன், சிரிச்சு சிரிச்சு வாயும் வயிறும் வலியெடுக்க ஆரம்பிச்சிடுச்சி...//

  பாத்த நல்லவங்களா தெரியரிங்க... நல்ல எண்ணத்துல சொல்றேன்.... சிக்கிரம் விட்டுக்கு போய்டுங்க தாயீ....

 79. @பின்னோக்கி said...
  பதிவு நல்லாயிருக்குன்னு சொன்னாலும் திட்டுவீங்க போல. அதுனால.. பதிவு சுமார் தான். இன்னும் இம்ரூவ் பண்ணுங்கன்னு பொய் சொல்லிட்டு கிளம்புறேன்.
  //

  இது செல்லாது...
  சார்.. உம்னு சொல்லுங்க..இவனுகள போட்டுத்தள்ள நானாச்சு..

  ( ஆனா ஸ்விஸ் பேங்குல பணம் நுழையனும்..அப்புறம்தான் டீல்..)

 80. //தக்காளி பொடி பசங்க கூட ஏண்டா சகாவாசம் வெச்சுகறேன்னு என் பக்கத்துக்கு வீட்டு சின்ன பொண்ணு என்னை ரொம்ப கேவலமா திட்டுறா...! :) //

  ஏலேய்,நாதாரி.சின்னப் புள்ள கூட உன்னை திட்டுது.அதை வெக்கமில்லாம வெளிய சொல்லிக்கிட்டு இருக்க.பொட்டப் புள்ளைங்களுக்கும் உனக்கும் ஏதோ பூர்வ ஜென்ம தொடர்பு இருக்குயா.நண்டு சிண்டு ல இருந்து,கெழவி வரைக்கும் உன்னை திட்டுராளுவ,செருப்பால அடிக்கிராளுவ... :)

  ஆமா,அன்னிக்கு அஜீத ரசிகன் ஒருத்தன் உன்னைய திட்டுனானே அதை விடயா கேவலமா திட்டுச்சு?அதையே சால்ட் பேப்பர் ல துடைச்சு தூரப் போட்ட மானங்கெட்ட பயலாச்சே நீயி....

  //பாத்த நல்லவங்களா தெரியரிங்க... நல்ல எண்ணத்துல சொல்றேன்.... சிக்கிரம் விட்டுக்கு போய்டுங்க தாயீ.... //

  ஹாஹா....cool...

 81. ILLUMINATI said...////

  என்னா வெளியூரு , நாம கூசாம தொடசெரிசிட்டு போய்கிட்டே இருப்போம்ன்னு இல்லுக்கு தெரியாது போல

 82. @Swetha
  //உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு//

  யாரு இந்த பீஸ்? ரத்தபூமில லாலிபாப் விற்கறது.... எலேய் மக்கா ஏதோ வழிப்போக்கன் போல.. ஆடு நினச்சி வெட்டிபோடதிங்க....

 83. Jey says:

  ///பதிவுலகம்னு ஒன்னு இருக்கு...அங்க போய் நீ நாலு மொக்கை பதிவர்களா பாராட்னா,அவனுக திரும்பி வந்து நீ போடற மொக்கைய பாராட்டி பார்மாலிட்டி பண்ணுவானுகன்னு..வோட்டெல்லாம் போட்டு உன்ன பெரிய ஆளாக்கி பிரபல பதிவராக்கிருவாங்க.///

  நானும் நீரு போடுர மொக்கையயெல்லாம், ஆஹா ஓஹோனு பாராட்டி பின்னூட்டம் போட்டுதான் பாக்குறேன், திரும்பி என் ”நல்ல” எழுத்துகளுக்கு வந்து பாராட்டினா மாறி தெரியலையே..., சரி ஓட்டாவது போடுரீயானு பாத்தா அதுவும் இல்லை...,

  தப்பு தப்பா ஐடியா குடுத்த வெளியூருக்கு என் கண்டனங்கல சொல்லிக்கிறேன்...(தக்காளி இதுக்கு என்னா நக்கல் பன்னப்போரான்னு தெரியல , பாப்போம்)

 84. Jey says:

  மங்குனி அமைசர் said...
  ILLUMINATI said...////

  என்னா வெளியூரு , நாம கூசாம தொடசெரிசிட்டு போய்கிட்டே இருப்போம்ன்னு இல்லுக்கு தெரியாது போல///

  யோவ் மங்கு, தொடசெரைச்சிட்டா இல்ல தொடைச்சிட்டாயா தெளிவ சொல்லி தொலை பக்கி....

 85. Jey says:

  பட்டாபட்டி.. said...
  ஆகா...அருமை..
  இந்த திறமையை..இவ்வளவு நாட்களால..எங்கு வைத்திருந்தீர்கள்?...///

  ஒரு லெக்பீசுக்கு சேட்கிட்ட அடமானம் வச்சிருக்கு வெளி, கூடவே இருக்கே இதுகூட தெரியலையே பட்டா..

 86. யாரு இந்த வெளியூர்காரன் அப்படீன்னு பார்த்தா நம்ம ஊரு!

  சிரிச்சி மாளல தம்பி.... கலக்கல்...

  அன்புடன்,
  -ரவிச்சந்திரன்

 87. பதிவு அருமை. இந்தப் பதிவு கீழ்கண்ட வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
  மேலும் இதுபோன்ற பதிவுகளை படிக்க..

  http://senthilathiban.blogspot.com/2010/07/blog-post_31.html

 88. //
  விரைகணை வெற்றியாளர்கள் மற்றும் போட்டியில் கலந்து கொண்டோருக்கான பரிசுகள் வழங்காமல் மணற்கேணி 2009 நிகழ்வு நிறைவடையாது. போட்டியில் கலந்து கொண்டவர்கள் ஒவ்வொருவருக்கும் முகவரி வேண்டி தனி அஞ்சல் அனுப்பி இருக்கிறோம். சிலர் அஞ்சல் அனுப்பி இருக்கிறார்கள். இன்னும் பலரிடம் இருந்து அஞ்சல் வரவேண்டும்.
  //


  http://sgtamilbloggers.blogspot.com/2010/07/2009-2010.html

  //


  சொன்னா நம்பனும்.. எனக்கு இலக்கியம் வராதுனு சொன்னேன் .. கேட்டியா?...


  சரி..சரி..

  விரைகணை-னா என்னாய்யா?.. சீக்கிரம் சொல்லு..

 89. @@@பின்னோக்கி said...
  பதிவு நல்லாயிருக்குன்னு சொன்னாலும் திட்டுவீங்க போல. அதுனால.. பதிவு சுமார் தான். இன்னும் இம்ரூவ் பண்ணுங்கன்னு பொய் சொல்லிட்டு கிளம்புறேன்..///

  பின்னோக்கிக்கு வாழ்த்துக்கள்...! (நீங்கல்லாம் ஓல்ட் கஸ்டமர் வாத்யாரே...! உங்களையெல்லாம் ஒன்னியும் பண்ணமாட்டோம்...) :)

 90. @@@ரத்னா said...
  சிரிச்சு சிரிச்சு வாயும் வயிறும் வலியெடுக்க ஆரம்பிச்சிடுச்சி...அதனால பின்னூட்டம் போடறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.( நான் பொதுவாக யாருக்கும் பின்னூட்டம் போடும் வழக்கம் கிடையாது).///

  நல்ல முடிவு நல்ல முடிவு... ! :)

 91. @@@Jey said...
  என் ”நல்ல” எழுத்துகளுக்கு வந்து பாராட்டினா மாறி தெரியலையே..., சரி ஓட்டாவது போடுரீயானு பாத்தா அதுவும் இல்லை...,////

  இருடி மாப்ள கூடிய சீக்கிரம் வர்றேன்..(ஒரே பதிவுல ஒரு பதிவரோட டோட்டல் இமேஜையும் காலியாக்குன ஹிஸ்டரி எனக்கும் பட்டாபட்டிக்கும் இருக்கு...என்ன போய் கூப்டற...சரி விடு..உன் தலை எழுத்து ..) :)

 92. @@@ரவிச்சந்திரன் said...
  யாரு இந்த வெளியூர்காரன் அப்படீன்னு பார்த்தா நம்ம ஊரு!
  சிரிச்சி மாளல தம்பி.... கலக்கல்...
  அன்புடன்,
  -ரவிச்சந்திரன்./////

  வாங்க அண்ணேன்..பூரா நம்ம ஊரு நக்கலு...இவேங்களுக்குதான் இதெல்லாம் புதுசா தெரியுது...உங்களுக்குமா....! :)

 93. @@@ரவிச்சந்திரன் said...
  யாரு இந்த வெளியூர்காரன் அப்படீன்னு பார்த்தா நம்ம ஊரு!
  அன்புடன்,
  -ரவிச்சந்திரன்.///

  எனக்கு பார்த்துருக்கற பொண்ணு உங்க ஊருதான்னேன்..ஜனவரி மாசம் கல்யாணம்...வெளியூர்காரன் உங்க ஊரு மாப்ள...! பார்த்து செய்ய வேண்டிய மரியாத எல்லாம் செஞ்சிருங்க...இல்லாங்காட்டி கோச்சுகிடுவோம்...! :)

 94. @@@@பட்டாபட்டி.. said...
  சொன்னா நம்பனும்.. எனக்கு இலக்கியம் வராதுனு சொன்னேன் .. கேட்டியா?...
  சரி..சரி..விரைகணை-னா என்னாய்யா?.. சீக்கிரம் சொல்லு..///

  அது ஒரு மாதிரியான வியாதியா...மருந்து சாப்ட்டு குப்பற படுத்து தூங்குனா சரியாய்டும்...! :)

 95. சலங்கைய கட்டிகிட்டு ஆடறான்யா... யப்பா நான் போறேண்டா சாமி

 96. பட்டா பட்டி யோவ் வயிறுவலி வந்து செத்துடுவேன் போல நிறுத்துமய்யா...
  மாப்ள ஜொன்ன மாரி உம்ம கமெண்ட் மட்டும் தனியா உட்கார்ந்து படிச்சாக்கா பாஞ்சு நாளைக்கு ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆக வேண்டியதுதான்...பாக்கி

  தக்காளி கலக்குங்க மச்சிகளா

 97. azhahu says:

  ungakalukku thalaippu kidaikkavillai enral''KALAVANI', padthill ''PANCHAYaTHU'' CARACTER pathi koncham elluthngalen ,,,,,ahtu en friend caracter mathiri irrukku

 98. Sri says:

  hello,
  idhai appadiye copy adichu irukkar orutthar. http://arunprasathgs.blogspot.com/

 99. @sri
  // hello,
  idhai appadiye copy adichu irukkar orutthar. http://arunprasathgs.blogspot.com/ //

  புத்திசாலி. கண்ணுபட்டுட போகுது.... என்ன ஒரு கண்டுபிடிப்பு...

 100. தல நேரம் கிடச்ச வீட்டுப்பக்கம் வந்து போங்க.... http://terror-pandian.blogspot.com/2010/08/blog-post.html

 101. vinu says:

  konnuteeeeeeeeeeeeeenga but i felt this contains tooo much of "thakkali" is this is an alternative word used for a some badword by actor Rajkiran

 102. vinu says:

  konnuteeeeeeeeeeeeeenga but i felt this contains tooo much of "thakkali" is this is an alternative word used for a some badword by actor Rajkiran

 103. vinu said...

  konnuteeeeeeeeeeeeeenga but i felt this contains tooo much of "thakkali" is this is an alternative word used for a some badword by actor Rajkiran
  //

  சே..சே.. அதுவேற தக்காளி.. இது வேற தக்காளி பாஸ்...

  ராஜ்கிரன் தக்காளி கொஞ்சம் சிறுசா இருக்கும்..இவன் சொல்லும் பெரிய தக்காளி....( ஆமா சார்.. உரிச்சா கண்ணுல வருமே..அதுதான்..) ஹி..ஹி

  அண்ணே..இங்கிலீசுல சொல்லியிருக்கீங்க.. பாவம்..வெளியூர்காரன் பிரெஞ்சு பேசும் தஞ்சாவூர்காரன்.. அதனால..அவனுக்கு பதில் நான் பதில் சொல்லியிருக்கேன்..
  கோபம் மட்டும் படக்கூடாது..சொல்லிப்புட்டேன்...

 104. Blogger TERROR-PANDIYAN(VAS) said...

  தல நேரம் கிடச்ச வீட்டுப்பக்கம் வந்து போங்க.... http://terror-pandian.blogspot.com/2010/08/blog-post.html
  //

  எதுக்கு.. வந்து ஆப் பாயில் போடவா?...

  வெளியூர்.. இத ஓரமா மைண்ட்ல வெச்சுக்க..
  நாம ஆப் பாயில் ஸ்பெலிஸ்ட்னு தெரியாம.. என்னவோ டொல்லிட்டு போயிருக்கு..

 105. டொல்லிட்டு
  //

  புது வார்த்தை.. அடுத்த செம்மொழி மாநாட்டுல..டொல்லி ..இதை ”பேட்டண்”
  பண்றோம்.. ஓ.கே-வா?..

 106. @பட்டு
  //வெளியூர்.. இத ஓரமா மைண்ட்ல வெச்சுக்க..
  நாம ஆப் பாயில் ஸ்பெலிஸ்ட்னு தெரியாம.. என்னவோ டொல்லிட்டு போயிருக்கு.. //

  யோ பட்டு... இதே ஒரு இரண்டு நாள் முன்னாடி சொல்லி இருந்தா.... அட வா தல எல்லாம் நம்ப வீடுதான் சொல்லி இருப்பேன்... but நேத்து ராத்திரிதான் நீங்க 3 பேரும் (பட்டு, ரெட்டை, வெளியூர்) சலங்க கட்டி ஆடி இருக்க ஆட்டத்த பாத்தேன்... பாவம்ய வெண்ணிற இரவுகள் & டோண்டு..... நான் சரண்டர்.....

 107. ////பதிவு எழுதி கோடிகணக்குல சம்பாரிச்சு அதுல தங்கத்துல நாக்கு சுத்தம் செய்யற கருவி ஒன்னு வெளிநாட்லேர்ந்து வாங்கி நல்ல நாராசமா வழிக்கணும்..///
  அதுக்கு கோடிக்கணக்குல செலவு ஆகுமா ..?

 108. This comment has been removed by the author.
 109. //நீ நாலு மொக்கை பதிவர்களா பாராட்னா,அவனுக திரும்பி வந்து நீ போடற மொக்கைய பாராட்டி பார்மாலிட்டி பண்ணுவானுகன்னு..வோட்டெல்லாம் போட்டு உன்ன பெரிய ஆளாக்கி பிரபல பதிவராக்கிருவாங்க..நீ ஜாலியா நாலு பதிவர்கள வன்புணர்ச்சி பண்ணலாம்...உன்னை திட்டி கண்டனம் தெரிவிச்சு நாலு பிரபல பதிவர்கள் பதிவு எழுதி அவங்க ஹிட்ஸ் வாங்கி எண்ணி பார்த்துட்டு உன்ன மனசார வாழ்த்துவாங்க...உடனே பதிவுலகம் உன்ன பிரபலமான எழுத்தாளர்னு ஒத்துக்கும்னு...//

  யப்பா.. இதான் ரகசியமா?! இனி ஆரமிக்கிறேன் கவுச்சிய... சேச்சே... கச்சேரிய

 110. Jey says:

  பிரபல பதிவர் வெளியூர்க்காரன் அவர்களே நலமாக உள்ளீர்களா?.
  ஆருயிர் அண்ணன் பட்டாபட்டியாரை விசாரித்ததாக சொல்லவும்

 111. யோவ் சத்தியமா நான் மனசுவிட்டு சிரிச்சி ரெண்டுமாசம் ஆகுதுய்யா! இன்னிக்குதான் உம்ம ப்ளாக் பக்கம் வந்து அநியாயத்துக்கு கெக்கே பிக்கேக்கிட்டே இருந்தேன். நல்லா இரும்!

 112. @ஜெய்
  //பிரபல பதிவர் வெளியூர்க்காரன் அவர்களே நலமாக உள்ளீர்களா?.
  ஆருயிர் அண்ணன் பட்டாபட்டியாரை விசாரித்ததாக சொல்லவும் //

  என்ன காலைலே ஆடு கசப்பு கடை முன்னாடி வந்து டான்ஸ் ஆடுது??

 113. //
  என்ன காலைலே ஆடு கசப்பு கடை முன்னாடி வந்து டான்ஸ் ஆடுது?? //

  இது sunday special யா.. :)

 114. @இலுமி
  //இது sunday special யா.. :) //

  ரெட்டை ப்ளாக்ல போய் பாருலே ரெண்டு ஆடு மேயுது... (மங்குனி & ஜெய்) ...

 115. : பிரபல பதிவர் வெளியூர்க்காரன் அவர்கள்
  //


  இது எப்போ?...

  யோவ்.. ஓவருயா...

  இரு இரு.. ”நாலு பாஷை தெரிஞ்ச நல்லவனுகளை” கிட்டிக்கிட்டு வரேன்.. பஞ்சாயத்த வெச்சு..அப்பால முடிவு பண்ணலாம்..

 116. vinu says:

  பிரபல பதிவர் திருதிரு திருட்டு கிழியாத பனியன் வெளியூர்க்காரன் அவர்கள்...


  appaappa enna kastamda ovooru elluthaa copy panni paste panni intha sentence phrase knduvaru vathukku...........

  but its worth full for our velliyoor pa its. specially for you...................

 117. //-சார் இங்குன பொழைக்கரதுக்கு ஒசரம் வந்துருக்கார்-//

  ஒசரமா? எம்புட்டு ஒசரம்?ஒரு 'ஏழரை' அடி இருக்குமா?

 118. //
  World Famous Veliyoorkaran
  //


  //"பதிவுலகில் நான்..அய்யோ எப்பா முடிலடா சாமி..! //


  கோவி கண்ணன் சார்.. என்னானு பாருங்க....

 119. vinu says:

  World Famous Veliyoorkaran


  ithu eppalairrunthuuuuuuuuu

 120. Anonymous says:

  naan mattum than vettiya blog pannitu iruken-nu nenaicha inga oru kootame irukuthu... veliyoorkarare, ippa than ungaluthu padika aarambichi irukuen... nalla comedy-a iruku.. actual-a unga blog-oda comments romba comedy-a iruku...

 121. world famous வெளியூர்கரானின் இருநூறாவது follower ஆகி அவனுக்கு பெருமை சேர்த்து அழியா புகழை தந்து உள்ளான் இந்த பனங்காட்டு நரி

 122. @நரி
  //world famous வெளியூர்கரானின் இருநூறாவது follower ஆகி அவனுக்கு பெருமை சேர்த்து அழியா புகழை தந்து உள்ளான் இந்த பனங்காட்டு நரி //

  நல்ல பாருடா நோன்ன... நீ 200 இல்ல...

 123. கண்டதுக்கும் மொக்கை போடுவான்... உமாசங்கர் பத்தி எழுத ஆள காணோம்...நண்டு, சிண்டு எல்லாம் எழுதி இருக்கு... World Famous எங்க போனாரு தெரியல.....

  (அவ்வ்வ்வ்வ்வ் இதுக்கு என்ன சொல்வானோ)

 124. ஆஹ்ஹா ..வாய்யா TERROR ...அடுத்த ஆடு நீதாண்டி..........,சும்மா இருக்கும் போதே கிழிச்சு வீசுவான் ..நீ வேற இப்படி போட்டுட அய் ஜாலி ஜாலி :))))

 125. அய்யா.. நலமா இருக்கீர்களா?..
  ஏன் சில பல் நாட்களாக..பதிவுலகப்பக்கம் வருவதில்லை?

  பரிகாரம் ஏதாவது வேண்டுமா?..

  யாரு.. பேரு.. ஊரு..மட்டும் சொல்லு...

  கொண்டுவந்து காலடில சேர்ப்போம்..
  ஊ..ஊ

 126. @பட்டா
  //அய்யா.. நலமா இருக்கீர்களா?..
  ஏன் சில பல் நாட்களாக..பதிவுலகப்பக்கம் வருவதில்லை?//

  இது வேலைகு ஆகது பட்டா.... நீ திரும்ப இந்த ப்ளாக் விற்க பதிவு போடு.....

 127. Congratulation....VELIYOOR! HE got married by 19th Aug. Wish you a very happy married life VELIYOORU.

  Best Wishes from Raj, Sharjah

 128. Veliyoorkaran said...

  வெளியூர்காரன்ல வந்து நீ பதிவு நல்லாருக்குன்னு பாராட்டவே வேணாம்..இங்க வர்றவங்கள நல்லா ஜாலியா கலாய்...அது போதும் மச்சி...! என் பதிவு நல்லாத்தான் இருக்கும்னு எனக்கு தெரியும்...! :) (யோவ் பட்டாப்பட்டி., இதுக்கு பேரு தன்னம்பிக்கை...) :)/////

  என்ன கமெண்ட்ஸ் போடலாமுன்னு நினைச்சேன் நீ தான் கலாய்க்க சொல்லிட்டியே ஏதாவது ஆடு மாட்டினால் இன்னைக்கு காலி

 129. abhi says:

  am waiting for ur next blog man....u are simply superb!!!!!!!!!!

 130. Nandha says:

  Annae neenga periya aalu nae... oru tadava intha pavapulla blogku vanthutu poninga na... enaku oru publicity kedaikum....
  (nandhas-i-corner.blogspot.com)

  ipadiku...
  ungal tamiluku naan adimai- nandha...

 131. 100% free--Friends Please paste CHATTING BOX code to your website to get more active for -TAMIL FRIENDS CHATTING,

  Please Visit the following & get the free chat code
  http://tamilfriends-network.blogspot.com/

  powered by www.tamilhappy.com

 132. //
  யோவ்..வெண்ணை..அவங்க இலக்கியம்..கவிதைனு எழுதரவங்க.. நாம போன சரியா வருமா.. எதுக்கும் பூவா தலையா போட்டு பார்த்துக்க..
  //
  பட்டா... இதென்ன அபாண்டமான குற்றச்சாட்டு.... அவிங்க எழுதுறதெல்லாம் இதிகாசம், காவியத்துல சேருமாம்...

 133. Ananth says:

  @வெளியூர், நான் உங்கள் பதிவின் ரசிகன். நானும் சிங்கப்பூரில் , Raffles place தான்தான். முடிந்தால் சந்திப்போம்

 134. Ananth says:

  காந்தக்கண்ணி நடிகை காந்திமதி கூட, உங்களை, என்ன மரியாதி வேண்டிக்கிடக்கு, உன்னை, (இங்க 2 ஆச்சர்ய குறி போடுறோம், no double meaning) ரிஜக்ட் செய்துவிட்டதாக கேள்வி. இதுல Australia figure கூப்பிட்டாக, அவங்க அக்காவுக் கூப்பிட்டாகன்னு பதிவு வேற. இதெல்லாம் உங்க சைந்தவிக்கு தெரியுமா boss? பாவம்ல அந்த புள்ளை.

 135. Ananth says:

  ஏற்கனவே இந்த பிரபல பதிவர்கள் தொல்லை தாங்கலை. Why you also want to call your self so.

  Just be yourself. nowadays, its good to not to use that tag like our hero's six pack body(கஞ்சா கருப்பும் கருனாஸும் தவிர).

  your blogs are comedy and pure comedy. Very hilarious and I had recommended to many of my friends. Continue and have a happy married life. If possible,invite us for the reception in Singapore(நாங்கள்ளாம் ஓசில டீ கிடைக்குதுன்னாலே ஒரு வாரம் விரதம் இருப்போம். இதுல விருந்து சாப்படுன்னா கூப்பிடலாம்னு நினக்கும்போதுல இருந்தே விரதம் தான்..
  .

  ஊரில் நாங்களும் ஆடு வெட்டுறதை பார்த்து இருக்கோம்டி. அதுனால உடனே ஆடு சிக்கிரிச்சு, பீசு சிக்கிரிச்சுன்னு வந்தீங்க, கொலை தான்,

 136. @Ananth
  //Just be yourself. nowadays, its good to not to use that tag like our hero's six pack body(கஞ்சா கருப்பும் கருனாஸும் தவிர).//

  என்ன அப்பு ஆடு வெட்டு எல்லாம் பாத்து இருக்கேன் சொல்றிங்க... அப்புறம் இந்த நக்கல் பிடிச்ச நாதாரிக்கு அட்வைஸ் பண்றீங்க.. இந்த World Famous ellam நக்கலு.. இவன் தும்மினா கூட நக்கிதான் தும்முவன்..

 137. @Ananth
  //your blogs are comedy and pure comedy..//

  என்ன பட்டுன்னு பயபுள்ளைய ஜோக்கர் சொல்லிடிங்க?? சைந்தவி பக்கங்கள் அப்படின்னு ஒன்னு எழுதுவான் பாருங்க... நேரம் இருந்த படிங்க.. அப்போ அப்போ அருமைய எழுதுவான்... கமெண்ட் ஏரியா பக்கம் மட்டும் கொஞ்சம் கோட்டர் அடிச்சா கொரங்கு மாதிரி குதிப்பான்...

 138. Ananth says:

  அப்ப சைந்தவியின் பக்கங்கள் எழுதுனது ரெட்டைவால்ஸ் இல்லையா. அப்படித்தானெ சொன்னுச்சு பய புள்ளை. (ரெண்டு பேர் சண்டை போட்டா நமக்கு சந்தோஷம் தானே டெர்ரர் பாண்டியன் சார்). நீங்க சொன்னது மாதிரியே எழுதிட்டேன் பட்டாபடி அண்ணேன்..

 139. @Anand
  // அப்ப சைந்தவியின் பக்கங்கள் எழுதுனது ரெட்டைவால்ஸ் இல்லையா. அப்படித்தானெ சொன்னுச்சு பய புள்ளை. (ரெண்டு பேர் சண்டை போட்டா நமக்கு சந்தோஷம் தானே டெர்ரர் பாண்டியன் சார்). நீங்க சொன்னது மாதிரியே எழுதிட்டேன் பட்டாபடி அண்ணேன்.. //

  அப்போ ரெட்டை, பட்டாபட்டி, வெளியூர் வேற வேற ஆளா?? சொல்லவே இல்ல..


  (மக்கா just slip... நான் சொன்னது இந்த போஸ்ட் http://veliyoorkaran.blogspot.com/2010/03/blog-post_81.html மறுபடி சிக்கிடன வந்து கொலையா கொல்லுவனுங்க..)

 140. Ananth says:

  நல்லா மாட்டினீங்களா டெர்ரர் சார்.சும்மா டெர்ரரா இருங்க. இல்லைன்னா இன்னைக்கு உங்களை போட்ட்ருருவானுங்க. நாங்கள்ளாம் எரிமலையில barbacue செஞ்சு சாப்பிடுறவனுங்க... To be frank, I had read all his including the one mention.

 141. //நாங்கள்ளாம் எரிமலையில barbacue செஞ்சு சாப்பிடுறவனுங்க... To be frank, I had read all his including the one mention.//

  enna pirichi pesitinga.. naama ellam sollunga.... neenga hoom sollunga vara velli kizhamai pottudalam... (appo dhan enakku leave... he he..)

 142. hello..yaaraavathu iruykkingkalaa????

 143. அட.. வெளியூரு .. கல்யாணம் ஆயிடுச்சா... சொல்லவேயில்ல....

 144. புது போழிவுடன் உங்கள் தமிழ் ஹாப்பி! www.tamilhappy.com

  நல்ல நண்பர்கள் சாட்டிங்! & games

  தமிழ் எப் எம்!

  தமிழ் டிவி!

  தமிழ் கவிதை!

  தமிழ் ஜோக்ஸ்!

  தியானம்!

  ஜோதிடம்!

  அனைத்தும் ஒரே இடத்தில உங்களுக்காக ..... நாம் அனைவரும் ஒரே இடத்தில கூடுவோம் நண்பர்களே.... தமிழர்களுக்கான இணைய தளம்...

  உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள் நண்பர்களே

  உங்களுக்காக ....உங்களுக்காக மட்டுமே....

  www.tamilhappy.com

  anbudan

  Tamilhappy nanbarkal!

 145. புது போழிவுடன் உங்கள் தமிழ் ஹாப்பி! www.tamilhappy.com

  நல்ல நண்பர்கள் சாட்டிங்! & games

  தமிழ் எப் எம்!

  தமிழ் டிவி!

  தமிழ் கவிதை!

  தமிழ் ஜோக்ஸ்!

  தியானம்!

  ஜோதிடம்!

  அனைத்தும் ஒரே இடத்தில உங்களுக்காக ..... நாம் அனைவரும் ஒரே இடத்தில கூடுவோம் நண்பர்களே.... தமிழர்களுக்கான இணைய தளம்...

  உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள் நண்பர்களே

  உங்களுக்காக ....உங்களுக்காக மட்டுமே....

  www.tamilhappy.com

  anbudan

  Tamilhappy nanbarkal!