- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 398 comments and to comment

உயர்திரு மரியாதைக்குரிய மணிஷர்மா அவர்களுக்கு..

எப்பா சாமி மணிஷர்மா..நீ யாரோ யாரு பெத்த புள்ளையோ..எந்த ஊரோ..ஆனா உங்க பொண்டாட்டி புள்ளைங்க  எல்லாம் நல்லா இருக்கனும்டேய்..அசல் படத்துல எங்ககிட்ட மாட்டடி வாங்குன காண்டுல சுறா வரட்டும் வறுத்து குழம்பு வெச்சு சுறா புட்டு செய்யணும்னு கங்கணம் கட்டிகிட்ருந்த பயலுக வாய் மொதொகொண்டு எல்லாத்தையும் அடைச்சு எங்க வயத்துல பால வார்த்துபுட்டலே..சுறா சாங்க்ஸ் எல்லாம் சூப்பர் ஹிட் வாத்யாரே..இதுக்கே உனக்கு அஜித்தோட ரசிகர்கள் அஞ்சு பேரோட தலைய பழைய ப்ளேடால வெட்டி உங்க காலடில பலிகுடுக்கறதுக்கு நாங்கல்லாம் கடமைபட்ருக்கோம் . .. 

என் பங்காளிங்க விஜய் ரசிகர்களுக்கு 

மாப்ளைங்களா பாட்டெல்லாம் கேட்ருபீங்கன்னு நெனைக்கறேன்..வேட்டைக்காரன் படம் ஹிட் ஆனதுக்கு காரணம்  மூணு வி..மொதொள்ள விஜய்,ரெண்டாவது விஜய் ஆண்டனி,மூணாவது வெளியூர்க்காரன் அப்டீங்கறது பதிவுலகத்துல இருக்கற எல்லா புத்திசாலி முட்டாளுங்களுக்கும் தெரியும்..இப்ப மறுபடியும் சுராவுக்காக களம் இறங்குறான்  வெளியூர்க்காரன்..ச்சே..ச்சே...இதுக்கெலாம் ஆனந்தகண்ணீர் வடிக்ககூடாது.. இது வெளியூர்காரனோட கடமையடா செல்லங்களா..

நீங்கல்லாம் நேத்து காலைல எந்திரிச்சு வழக்கம் போல பல்லு வெளக்க மறந்து குளிச்சிட்டு வேலைக்கு போயிட்டு திரும்ப வந்து சாப்டுட்டு தூங்கிருப்பீங்க..ஆனா,வெளியூர்க்காரன் நேத்து காலைல எந்திரிச்சதுலேர்ந்து சுறா பாட்ட மட்டும்தான் கேட்டுகிட்ருந்தான்..பாட்டெல்லாம் பட்டாசா இருக்கு மச்சி..செம மாஸ்..கண்ணுமண்ணு தெரியாத அளவுக்கு ஹிட் ஆக போகுது... 
சுறா படமும் இதே மாதிரி ஹிட் ஆய்டுச்சின்னு வெச்சுக்கோ தக்காளி அதுக்கப்றம் இந்த அஜக்கு கூட்டத்தால நம்மள ஒன்னியும் பண்ண முடியாது...அவ்ளவு ஏன்..நம்மலாலேயே நம்மள ஒன்னும் பண்ணமுடியாது..கண்டுக்காத மச்சி..இடைல இடைல இந்த மாதிரி யாருக்குமே புரியாம பஞ்ச் டயலாக் அடிப்பேன்..ப்ரீயா விட்டுட்டு அடுத்த வரிக்கு போயிரு..(விஜய் யாருக்குமே புரியாம  பஞ்ச் டயலாக் அடிச்சா மட்டும் கைதட்டுவாணுக..நான் ஒரே ஒரு தடவ ட்ரை பண்ணா நொட்டிகிட்டு கோவம் வந்துடும் வெண்ணைங்களுக்கு...)டேய் டேய் உன்ன சொல்லலடா ராசா..நீ அடுத்த வரிக்கு போ..உனக்காக செம மேட்டர் வெச்சிருக்கேன்..

தளபதியோட உள்மனசு ஆசை..

முப்பத்தாறு தடவ வேலை வெட்டி இல்லாம "வங்க கடல் எல்லை" பாட்ட கேட்டதுல நம்ம இளையதளபதி மனசுல புதைஞ்சு கெடக்குற ஒரு மிகபெரிய ஆசைய கண்டுபுடிச்சிடான் வெளியூர்க்காரன்.. சொல்றேன் கேட்டுக்கோ..வங்க கடல் எல்லை அப்டீனா என்ன அர்த்தம்..நம்ம தளபதிக்கு பங்களாதேஷ் மேல ஒரு கண்ணு இருக்கு..அதனால 2011 நம்ம "சந்து முன்னேற்ற கழகம்" முரட்டுத்தனமா ஜெய்ச்சு ஆட்சிய புடிக்கறோம்...எது எங்கையா..ங்கொய்யால..தமிழ்நாட்லதாண்டா..2015 இந்திய அரசாங்கம் நம்ம தளபதியோட காலடியில..அதே வெறியோட எலெக்சன் வேலை பார்த்து மறுபடியும் முரட்டுத்தனமா ஜெய்ச்சு  2016 மே மாசம் பங்களாதேஷ் நாட்ட நம்ம தளபதிக்கு பரிசா குடுக்கறோம்.. இதுக்காக உங்கள்ள எத்தன பேர் உயிர் போனாலும் சரி..நம்மளுக்கு தளபதியோட ஆசைதான் முக்கியம்..

கடைசியா ஒரு எச்சரிக்கை..

சுராவோட அந்த குள்ள பய படமும் வருது...சென்னைல மட்டும் தளபதி படத்துக்கு பதினெட்டு தியேட்டரும் குள்ளனுக்கு பன்னெண்டு தியேட்டரும் குடுத்துருக்காங்க..அது பாட்டுக்கும் வழக்கம்போல நல்லா நடிச்சு படத்த ஹிட் ஆக்கிடுச்சின்னு வெச்சுக்க...அப்பறம் நமக்கு ஆப்பாயிரும்..அதனால நம்ம குலதெய்வம் சந்துவ மனசுல வேண்டிகிட்டு போட்டு தள்ளுங்க அந்த குள்ளபயல..ஏற்கனவே நமக்கு இருந்த ஒரு எதிரி ஒரு ஸ்டண்ட் மாஸ்டர் சவுண்ட் விட்டதுக்கே பயந்து போய் சினிமால நடிக்கரத விட்டுட்டு கார் டிரைவர் வேலைக்கு போய்ட்டதால நம்மலாம் கவன குறைவா இருந்துடகூடாது..இனிமே எந்த ஒரு எதிரியும் நம்ம தளபதிக்கு போட்டியா வந்துடாம நாமதான் கவனமா பார்த்துக்கணும்...அரசியல்லயும் சினிமாளையும் எதிரிங்கள விட்டு வெக்க கூடாது ராசா..அது எதிர்காலத்துக்கு நமக்கு நாமே வெச்சுக்கற ஆப்பு...

கடைசியா சன் டிவிக்கு ஒரு வரி..

சுறா எங்களுக்கு அம்பதாவது படம்...அடுத்தவங்ககிட்ட போய் கெஞ்சறது என் தளபதிக்கு புடிக்காதுங்கரதால டீசெண்டா கேக்குறேன்...

அம்மா தாயே...

உங்கள கெஞ்சி கேட்டுகறேன்மா...

தயவு செஞ்சு சுறா ட்ரைலர போட ஆரம்பிங்கம்மா..

வெளியூர்க்காரன்..There was an error in this gadget