- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 58 comments and to comment

சில டோமருங்க பேசும்போது சிரிக்க வெக்கும்..சிலது அழ வெக்கும்..சில டாபருங்க எரிச்சலாக்கும்..சிலபேர்தான் பேசும்போது ரசிக்க வெப்பாங்க..இந்த நாய் இதுல நாலாவது ரகம்..

சுஜாதா இறந்துட்டாராம்..போய் பார்த்துட்டு வந்துர்லாம் வாடா மச்சின்னு போன் பண்ணி கூப்டப்போ சுஜாதாங்கர ஒருத்தனுக்கு சாவே கெடயாது மச்சி..நீ பார்க்க போகணும்னு சொல்றது ஸ்ரீரங்கம் ரங்கராஜன் ஐயங்கார் உடம்ப...நீ போய் வேலைய பாரு..நான் சுஜாதாவோட குறுநாடகம் படிக்க போறேன்...சுஜாதாவுக்கு நான் அவரோட சாவுக்கு வராம அவர் எழுத்த வாசிக்கறேன்னு தெரிஞ்சா ரொம்ப சந்தொசபடுவாறு...

இவன்தான் சார்...ரெட்டைவால்ஸ்..இவன் கொழப்பவாதி  இல்ல..தெளிவா அடுத்தவங்கள கொழப்பரவாதி...  

கடவுள் இருக்காருன்னு பகவத் கீதைய பத்தி நாலு மணி நேரம் பேசுவான்..திடீர்னு ஒருநாள்  கடவுள்ங்கற சித்தாந்தம் பஞ்சடைச்ச பொய்யுன்னு அஞ்சு மணி நேரம் ஆக்ரோசமா ஆர்கியு பண்ணுவான்..கடவுள்ங்கறது என்னதாண்டான்னு நான் ஒருதடவ இவன்கிட்ட கேட்டதுக்கு ஹா ஹா ஹா ன்னு சத்தம் போட்டு சிரிச்சவன் டக்குன்னு சீரியஸ் ஆகி ஒரு ஜென் கதை சொல்ல ஆரம்பிச்சான்..

ஒரு முனிவர்கிட்ட ஒரு மகாராஜா கடவுள அடையறது எப்டின்னு கேட்டு வந்தானாம்..முனிவர் அவன்கிட்ட ஒரு ஓட்ட பாத்திரத்த குடுத்து பக்கத்துல இருந்த ஒரு பெரிய தொட்டிய கெணத்து தண்ணியால நிறைக்க சொன்னாராம்..அவனும் ஏழு வருஷம் தொடர்ந்து ஊத்திகிட்டே இருந்தான்..தொட்டி நிறையவே இல்ல..திடீர்னு ஒருநாள் அந்த ஓட்டை பாத்திரத்த தூக்கி போட்டுட்டு நான் கடவுள அடைஞ்சிட்டேன்னு ஊருக்குள்ள ஓடுனானாம் அந்த மகாராஜான்னு கதைய முடிச்சான்..

எனக்கு புரியலயேடா நீ சொன்னதுன்னு நான் அவன்கிட்ட சொன்னப்போ,.எனக்கும்தான் புரியல..ஆனா நான் கடவுள பத்தி கேட்டப்போ என்கிட்டயும் இதேதான் சொன்னாங்க..இதான் மச்சி கடவுளா இருக்கணும்..ரொம்ப கொழப்பிக்காத..வா போய் தம் அடிக்கலாம்னு சொல்லி சிரிச்சான்..

ரொம்ப இண்டரெஸ்டிங்கான  ஒரு இடியட்...அடுத்தவன கலாய்ச்சு ட்ரவுசர அவுக்கரதுக்கு பிரெண்ட்ஸ்கூட கூட்டம் கூட்டமா அலைவான்..ஆனா மெட்ராஸ் ஏண்டா உனக்கு புடிக்கலைன்னு கேட்டா எங்க போனாலும் கூட்டமா இருக்கு மச்சி..கடுப்பாகுதுன்னு எரிச்சல்பட்டுக்குவான்..

இவனோட பார்வைல வாழ்க்கைங்கறது இமயமலைல ஏறி சாதனை பண்றது இல்ல...அங்க போய் குளிர்ல உக்காந்து சூடா ஆவி பறக்க இஞ்சி டீ குடிக்கற அனுபவம்தான்னு வாழ்க்கையோட அர்த்தம்னு ஸ்லாகிச்சுகிற பார்ட்டி..ரசனையான மனுஷன்..தான் ஒரு பயணின்னும், தனக்கு பயணம் மட்டுமே சாஸ்வதம்னும் உறுதியா நம்பறவன்..

நல்லா கவிதை எழுதுவான்..ஆனா தான் கையெழுத்த இவனுக்கு சரியா போட தெரியாது..இவன் சைன் போட்ட நெறைய செக் சிக்னேச்சர் மேச் ஆகலைன்னு நெறைய தடவ ஐசிஐசிஐ பேங்க்லேந்து  ரிடர்ன் ஆய்ருக்கு...

திடீர்னு ஒரு இ-புக்க மெயில் அனுப்பிட்டு,மச்சான் இது புதுமைப்பித்தனோட கடவுளும் கந்தசாமி பிள்ளையும் கதைடா ...மனுஷன் சைன்ஸ் பிக்சன அந்த காலத்துலேயே என்னமா எழுதிருக்கான்......நீ படிச்சிட்டு எப்டி இருக்குன்னு சொல்லுனு போன் பண்ணி சொல்லி என்ன தாரே ஜமீன் பர் பையன் மாதிரி ஆக்கிருவான்..(மொதோ பக்கத்துலையே எழுத்தெல்லாம் புரியாம மாறி மாறி தெரியும்..)

பெண்ணுரிமைங்கறது  எது வரைக்கும்னு கேட்டா சமையல்கட்டுலேர்ந்து பெட்ரூம் வரைக்கும் மச்சி..ஆனா இப்போ காலம் மாறிடிச்சி..ஹால் வரைக்கும் தாராளமா  அனுமதிக்கலாம்னு சொல்லிட்டு சத்தமா சிரிப்பான்..தான் பழமைவாதிங்கறதுல  இவனுக்கு ஆணவம் அதிகம்..

இவனுக்கு அஸ்ட்ராலஜி தெரியும்,சங்க இலக்கியம் தெரியும்,ஷகீலா கல்யாணம் எப்போன்னு தெரியும்,ஷேர் மார்கெட்ல எந்த ஷேர் விழும்,எது ஏறும்னு ஆணி அடிச்சா மாதிரி தெரியும்,பென்ஹர் லேர்ந்து முந்தாநேத்து ரிலீஸ் ஆன ஒரியா மொழி படம் வரைக்கும் எல்லாம் அத்துபடி..அவ்ளோ ஏன், ஜூலியா ராபர்ட்ச்சோட   லேட்டஸ்ட் புருஷன் யாருன்னு ஜூலியாவுக்கே   தெரியாது.. ஆனா இவன் அது  யாருன்னு பேர மறக்காம சொல்லுவான்...ஆனா வண்டிக்கு பெட்ரோல் போட மட்டும் எப்பவுமே மறந்துருவான்...சென்னை ரோடுகள்ள இவன் பைக்ல ஒட்டி பார்த்த விட  பெட்ரோல் இல்லாம தள்ளிகிட்டு போறத பார்த்ததுதான் அதிகம்.பைக் ஒருதடவை தொலைஞ்சு போனப்போ எல்லாருக்கும் சரக்கு வாங்கி குடுத்து ஐ ஜாலி இனிமே பெட்ரோல் செலவு மிச்ச்சம்டா மச்சான்னு சொன்ன கிறுக்கு டோமர் இது...

மச்சி மறுபடியும் ஒரு நாள் வில்லிவாக்கத்துல  உங்க வீட்டு பால்கனில நின்னுகிட்டு ரெண்டு பாக்கெட் கிங்க்ஸ் வாங்கி வெச்சுகிட்டு தம் அடிச்சுகிட்டே  உன் பழைய லவ் ஸ்டோரில ஆரம்பிச்சு, அவள ரொம்ப வருசத்துக்கு அப்பறம்  இடைல சந்திச்சு பேசுனப்போ உனக்கு என்ன தோனுச்சுங்கரத  ஒரு தடவ ஆழமா தம்மை இழுத்துகிட்டே கேட்டுட்டு,அப்டியே ஷேர் மார்கேட்லேர்ந்து சங்க இலக்கியம் வரைக்கும் விடிய விடிய பேசணும்...

அப்ப சில வருசத்துக்கு முன்னாடி அதே எடத்துல நம்மளோட சேர்ந்து  பேசிகிட்ருந்த  பழைய மழையும் புதுசா லேசா தூறனும்...!

வெளியூர்க்காரன்

58 Responses so far.

 1. ஒரு சின்ன வேண்டுகோள்...இந்த பதிவில் பதிவை பற்றி மட்டும் விவாதிக்குமாறும், கும்மியடிக்கும் நண்பர்கள் இதற்க்கு முந்தைய பதிவிற்கு போய் அடிக்குமாறும் தாழ்மையுடன் கேட்டுகொள்ளபடுகிறார்கள்..இந்த பதிவிலே பின்னூட்டமிடும் நண்பர்கள் கலாய்க்கப்பட மாட்டார்கள் எனவும் கருத்துக்களை பதிவு செய்ய விரும்பும் நண்பர்கள் தாரளாமாக சுதந்திரமாக பதிவு செய்யாலாம் எனவும் அறிவிக்கப்படுகிறது... .நன்றி..வெளியூர்க்காரன்..

 2. வெளியூரு... நான் ஒரு நாள் ரெட்டை-கிட்ட பேசுனேன்... அதோட பதிவுகளை படிச்சு சில விஷயங்கள்ல வியந்து போயிருக்கேன்.

  நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து பேசிக்கிட்டு இருக்கும்போது நானும் உங்க கூட இருக்கணும்னு எனக்கும் ஆசையா இருக்கு மக்கா...

  உங்களை பத்தி இதுல எழுதுறத விட... நேர உங்களை சந்திச்சு நேரம் போறது தெரியாம உக்காந்து பேசிக்கிட்டே இருக்கனும்யா...

 3. நான்தான் பஸ்டுன்னு சொல்ல மாட்டேன்.
  ஆமா இப்படியும் யோசிப்பியா நீ நல்லவன் கெட்டவனா

  //கும்மியடிக்கும் நண்பர்கள் இதற்க்கு முந்தைய பதிவிற்கு போய் அடிக்குமாறும் தாழ்மையுடன் கேட்டுகொள்ளபடுகிறார்கள்..//

  யார் யாருன்னு பேர் போட்டு இருக்கலாம்ல

 4. @Rosewik...///

  He is a fantastic guy with excellent knowledge...I am really lucky to have a friend like him..And I am sure definitely you will like him..If you meet him..////

  @Rettaivaals..//

  மச்சான் உன்கிட்ட சொல்லாம இத போஸ்ட் பண்ணதுக்கு சாரி..உன்ன பத்தி ஒரு பதிவு எழுதனும்கறது என்னோட ரொம்ப நாள் ஆசை...தப்பா ஏதும் எழுதிருந்தா என்ன மன்னிச்சிடுனு புதுசா கேக்கமாட்டேன்... நான் எப்பவும் சொல்றதுதான்...போய் சூசைட் பண்ணிக்க..!! :)

 5. சரி..கொஞ்சம் சீரியஸ்சா பேசுகிறேன்..
  ரெட்டை எழுத்துல , ஒருவிதமான , நீரோட்டம் இருக்குய்யா..
  நல்லா, அழகா , ஒரு கவிதை மாறி , சொல்ல வந்தத , சொல்றாரு...

  என்ன.. ஒரு சான்ஸ் கிடைத்தா , , பல விசயங்களை நேரில பேசிலாம்..
  .. ரெட்டை..
  ரொம்ப எழுதுங்க..

 6. நல்ல பதிவு. உங்க ஃப்ரண்டை எனக்கும் பாக்கணும்போல இருக்கு..

 7. @@@முகிலன்
  நல்ல பதிவு. உங்க ஃப்ரண்டை எனக்கும் பாக்கணும்போல இருக்கு..///

  கண்டிப்பா சந்திக்கலாம் முகிலன்...இந்த பதிவை வாசித்த நண்பர்கள் உங்களுக்கு இந்த மாதிரி இருக்கற மறக்கமுடியாத நண்பர்கள பத்தி இங்க விவாதிக்கலாமே...நீங்க விருப்பபட்டா...இப்போ இங்க நான் பண்ண மாதிரி..இது வெளியூர்க்காரனின் நேயர் விருப்பம்..!

 8. @வெளியூரு..
  கண்டிப்பா சந்திக்கலாம் முகிலன்...இந்த பதிவை வாசித்த நண்பர்கள் உங்களுக்கு இந்த மாதிரி இருக்கற மறக்கமுடியாத நண்பர்கள பத்தி இங்க விவாதிக்கலாமே...நீங்க விருப்பபட்டா...இப்போ இங்க நான் பண்ண மாதிரி..இது வெளியூர்க்காரனின் நேயர் விருப்பம்..!
  //

  உம்மோட விருப்பத்கிணங்கி , நான் வரும் சனிக்கிழமை
  உம்ம , சந்திக்க விருப்பபடுகிறேன்..

  என்னை தொடர்பு கொள்ள
  pattapatti.cbe@gmail.com என்ற முகவரிக்கு
  மின்னஞ்சல் அனுப்பவும்...
  நன்றி...

  ( யோவ்.. கஷ்டப்பட்டு ரொம்ப டீசண்ட எழுதியிருக்கேன்..
  பாத்து .. ஒரு மெயில் அனுப்பையா..ப்ளிஸ்...)

 9. யோவ் பட்டு..நம்ம பசங்க மட்டும் வோட்டு போட்டாலே தமிளிஷ்ளையும் தமிழ் 10ளையும் பத்து வோட்டுக்கும் மேல விழுந்துருக்குமே..இன்னிக்கு ரொம்ப நொண்டி அடிக்குது...ஒரு வேலை பதிவ சரியா எழுதலையோ..பிகர பத்தி எழுதுனா ஹிட் பண்ணி விடறீங்க...பிரெண்ட பத்தி எழுதுனா கண்டுக்கமாட்றீங்க....என்ன நியாயம் சார் இது..??

 10. சே.. நானே போடல...

  இதோ போட்டுட்டு வந்து பேசறேன்.. ( கொஞ்சம் பிஸியா இருந்துட்டய்யா..)

 11. வெளி என்னை நம்பலையா .என் ஓட்டு உமக்கு எப்போதும் உண்டுயா....

 12. யோவ் மாப்ள நல்ல நட்புகூட ரசனையா நகைச்சுவையா எழுதியிருக்கீங்க....

  ரெட்டைவால் சார் வணக்கம் சார்...

 13. @@@ஜெய்லானி
  வெளி என்னை நம்பலையா .என் ஓட்டு உமக்கு எப்போதும் உண்டுயா....//

  தேங்க்ஸ் டியுட்....!


  @@பிரியமுடன்...வசந்த் said...
  யோவ் மாப்ள நல்ல நட்புகூட ரசனையா நகைச்சுவையா எழுதியிருக்கீங்க....
  ரெட்டைவால் சார் வணக்கம் சார்...//

  மாப்பி...எப்டிடா இருக்க....???
  ரொம்ப நாள் மனசுக்குள்ளயே இருந்தது...திடீர்னு நேத்து வந்துடுச்சு...நல்லாருக்குன்னு சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ்..வெளியூர்காரனின் இதயத்தை நெருங்கிய ஒரு சில பதிவுகளில் இதுவும் ஒன்று... !

 14. ///..இந்த பதிவிலே பின்னூட்டமிடும் நண்பர்கள் கலாய்க்கப்பட மாட்டார்கள்////
  அப்பாடா.. இதான் என்ட்ரி கொடுக்க சரியான நேரம் .
  நல்ல நண்பர்கள் ... நல்ல ரசனை ... நல்ல நினைவூட்டல் வெளியூரு.
  (எப்புடியோ எழுதியாச்சு ... )

 15. Anonymous says:

  ஆகா.. பேஸ்.. பேஸ்..
  சூப்பர்..
  நல்ல பதிவு..
  நல்லாயிருக்கு..
  தொடர்ந்து எழுதுங்க...
  அப்படியா?
  வாழ்த்துக்கள்..
  :-)
  :-)))
  :-)))))
  :-))))))))

  எது நல்லாயிருக்கோ , அதை எடுத்துக்கொள்ளுங்கள்..

 16. இருவருக்கும் வாழ்த்துக்கள். அந்த ரெண்டு பாக்கெட் கிங்ஸ்ல எனக்கு ரெண்டு கெடைக்கும வெளியூரு...?
  யோவ் ரெட்டை.., வெளியூரு ரொம்ப நெஞ்ச நக்கிட்டாருப்பா. முடியல..! அதனால நானும் சீரியஸா ஒரு கமென்ட் போட்டுடுறேன்.

  "கண்ணா வெளியூரு, நட்புங்குறது..............., வ்வாஆ...!!!!! இன்னொரு குவாட்டர் சொல்லு மச்சி...!"
  - அவ்ளோதான் கண்ணு.... :)

 17. மக்கா,கொஞ்ச நாள் ஊரு பக்கம் போயிட்டேன்.இனிமே இங்க தான்.ரெகுலர் attendance போட்டுடலாம்.

  //இலுமினாட்டி ( ஆங்கில நாயகன்..சொல்லிச்சொல்லி தமிழ்ல ஏழுதுகிறார்)//

  யோவ்!என்னத்த சொல்லி சொல்லி தமிழ்ல எழுதுறது?நீங்க எங்கய்யா சொன்னிங்க? இங்கிலிஸ்ல எழுதுனா விஜய் படத்த போட்டு காட்டுவேன்னு என்ன கொடுமப்படுத்தி இல்ல என்ன எழுத வெச்சீங்க.அட இதுவாவது பரவா இல்ல,ஏதோ ஒரு பக்கி ‘இனிமே இங்கிலிஸ்ல எழுதுன, மவனே, அப்றோம் ரித்திஷ் படத்த டெய்லி வீட்டுக்கு பார்சல்ல அனுபிடுவேன்னு ராவா பயமுறுத்துறான்.என்ன கொடும சார் இது.ஒரு பயல நிம்மதியா இங்கிலிஸ்ல எழுத விடாம ரப்சர் பண்ணிக்கிட்டு.......(ஆனா,ஆங்கில ‘நாயகன்’ன்னு சொல்றத பாத்தா நம்ம பட்டு தான் இந்த பக்கி வேலைய பாக்குற மாதிரி தெரியுதே... )

  பயபுள்ளைக எதுக்கு ஒண்ணு செர்ரனுன்களோ இல்லையோ,தக்காளி இதுக்கு சேர்ரானுங்க....

  //மன்னர் பெல்ட் குண்டு பாத்ததே இல்லைய்யா...தயவு செஞ்சு வெளியூருக்கு அதை மாட்டிவிட்டு ஆட விடுங்கையா....ஜாலியா இருக்கும்! பட்டு நீயும் கெஸ்ட் ரோல் ல ஆடு..(அப்டியே ரெண்டு பேரியும் அனுப்பிட்டா...ஒரு வேலை முடிஞ்சிடும்!)//

  யோவ்,தக்காளி நீ எல்லாம் என்னையா மன்னன்?போய் கெஞ்சிகிட்டு இருக்கீரே .....
  கழுதைய ரெண்டு பேருகிட்டயம் ஸ்ரீலங்காவுக்கு ப்ரீ டூர்ன்னு சொல்லி டிக்கெட் எடுத்து குடுத்து போட்டு தள்ளுவியா,அத விட்டுட்டு கெஞ்சிகிட்டு இருக்க.உம்ம கவுக்க வெளியூர் பிளான் போடறதுல தப்பே கிடையாதுயா மன்னா.

  பின் குறிப்பு: கொஞ்சம் காசு மட்டும் கொடுத்தீர்(இது கொஞ்சம் கஷ்டம் தான்.கஜானவே கடன்ல தான் ஓடுதுன்னும்,மன்னர் டெய்லி நைட் பிச்சைக்காரன் வேஷம் போட்டுக்கிட்டு,நகர உலா போற சாக்குல போய் பிச்ச எடுக்குறார்ணும் கேள்விபட்டேன். ) என்றால் இவனுங்க ரெண்டு பேருக்கும் ஒன் வே ‘டிக்கெட்’ நானே எடுத்து ஸ்ரீலங்கா அனுப்பிடறேன்.வெளியுறவுத்துறை அமைச்சரா இருந்து இது கூட செய்யலைன்னா எப்டி....

  வெளி said:

  //எங்களுக்கு மலையாள படம் புடிக்கும்தான்..ஆனா இந்த மாதிரி பேசிக்கிட்டுருக்கற படம் இல்ல..//
  அடங்கொன்னியா.....இப்டியா உண்மைய பப்ளிக்ல சொல்லுவ...பின்ன எப்டியா உமக்கு கல்யாணம் நடக்கும்?போற போக்க பாத்தா நீரு வாழ்கை முழுசும் கன்னிப்பையனாவே இருந்து செத்துப் போயடுவீறு போல இருக்குதே...(அந்த செத்து போறதுக்கு நான் கேரண்டி.பயலுக கிட்ட சொன்னா போதும்.neraya peru umma pottu thalla waiting la irukainga makka...) :)

  //அடப்பாவி பட்டா நீ எப்பவும் காசு கொடுத்துதான் சரகடிபியா ??//
  மங்குனி.எங்க பட்டு போட்டு இருக்குற பட்டாபட்டியே அவருக்கு சொந்தமானது கெடயாது.நீரு அவர்கிட்ட போய் இப்டி எல்லாம் கேக்குரீரே?

 18. வாங்க லுள்ளுமிநாட்டி ச்ச, இல்ளுமிநாட்டி, நீங்க தான் வெளியுறவுத்துறையா..? எனக்கு இப்ப தான் ரெண்டு நாள் முன்னாடி 'உளவுத்துறை தலைவர்' பதவி குடுத்தாங்க. நானும் 'உளவுத்துறை' விஜயகாந்த் மாதிரி கடல்ல எறங்கிட்டேன். இத்தன நாளா எந்த நாட்டுக்கு போயிருந்தீரு....? ஏதாவது தேருச்சா..?

 19. வெளியூர்காரன்!
  இவனை என் நண்பர்கள் லிஸ்ட் ல எந்த வகை ல சேக்கறதுன்னே எனக்குத் தெரியல. உலகத்துல நாம ரொம்ப அபத்தமா வாழறோமோன்னு நினைச்சப்போ ஆச்சரியப் பட்டு நானும் அப்படிதான்டான்னு என்னோட பயணிக்க ஆரம்பிச்சவன்! இவனுக்கு அந்தந்த நிமிஷங்கள் தான் முக்கியம்! இந்த நிமிஷத்தை தவற விட்டுட்டா அது திரும்ப கிடைக்காதுன்னு தெரிஞ்சு வாழற கம்னாட்டி! சில விஷயங்கள் ல டெரர் சைக்கோ..பழகினா தெரியும்! விஜய் , ஃபிகருன்னு எழுதறான்னு ரொம்ப சாதாரணமா எடை போட்றாதீங்க! பய ரசனையானவன். சென்னையை திட்டிக்கிட்டே வாழற கூட்டத்தில் இருந்த என்னை கொஞ்சம் சென்னையோட அழகை ரசிக்க வச்சவன்! இப்போ சிங்கப்பூரையும் அப்படி அழகா பார்த்துட்டுருப்பான்னு நினைக்கிறேன்! எங்களை பத்தியே சொல்லிட்டு இருந்தா போரடிக்கும்! உங்கள் நண்பர்களை பற்றியும் அவர்களுடனான தருணங்களையும் எழுதுங்க நண்பர்களே!எல்லாரையும் ரசிப்போம்!

  படுவா! ஃப்ளாஷ் பேக் எழுதுவன்னு நினைச்சா செக் ரிட்டர்ன் மேட்டரை கோர்த்து விட்டுட்டியேடா! Thanks all our Blog friends!

 20. @Thathupithu,Iluminati,ArivuGV,and the great Anonymous,///

  Thanks chellamngala.

  @Rettaivals///

  :)

  (இதுக்கு இந்த ஸ்மைலிய தவிர வேற என்ன பதில் போடறதுன்னு எனக்கு தெரில..நன்றி நண்பா..நீ நல்ல சக பயணிடா...சேர்ந்து பயணிப்போம்...இன்னும் கொஞ்சம் தூரம்...!!!)

 21. I m very proud to say " yah........ I am also one of the fan for Veliyoorkaran ....!!! ". Because, i also started to write a blog inspired by U...!!! I would like to be a friend of you and rettaival. I want to hear the speech with you and Rettaivaal................!!! Plese keep writing... Keep on writing...!!!

 22. Anonymous says:

  வெளியூரு தொண்டை வலி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருப்பதால்,
  இப்போது பெச முடியாத நிலையில் இருக்கிறார்..
  மேலும் தகவலுக்கு, இன்றிரவு சூரியன் FM யை கேட்கவும்..

 23. Anonymous says:

  "சு"வாமி நித்யானந்தா - ர(கு)ஞ்சிதா - முழு நீல(ள) "நக்கல்" வீடியோ -

  http://www.millionitechnology.net/webtv/nithyanantha.wmv

 24. ஹாய் வசந்த் சார்! வணக்கம். எப்படி இருக்கீங்க! கேஷுவலான ஆள் சார் நீங்க. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி வசந்த் அவர்களே...!

 25. @@Asal Oorkaran
  I m very proud to say " yah........ I am also one of the fan for Veliyoorkaran ....!!! ". Because, i also started to write a blog inspired by U...!!!/////

  Paarraa...Ithu veraya...agattum aagattum...vaalthukkal vaathyare...! :)

 26. chandra says:

  நல்லா எழுதுறீங்க.. வாழ்க்கை மிக எளிமையானது என்று தோன்றுகிறது உங்கள் எழுத்தை படிக்கும் போது.வாழ்த்துக்கள்

 27. @@@chandra said...
  நல்லா எழுதுறீங்க.. வாழ்க்கை மிக எளிமையானது என்று தோன்றுகிறது உங்கள் எழுத்தை படிக்கும் போது.


  இதுல தோன்றதுக்கு என்னங்க இருக்கு..வாழ்க்கை ரொம்ப எளிமையானதுதான்..எனக்கு அது தெரியுது..அதனால ரசிக்கறேன்...எளிமையா...! :)

 28. @பட்டாபட்டி..
  when is your next post?

  தெரில பட்டாபி சார்..இப்போதைக்கு ஒன்னும் மேட்டர் இல்ல...!

 29. சூப்பருருருரு.................

 30. Muthu says:

  ரொம்ப அருமையான எழுத்து நடை. (எப்படி எல்லாம் பொய் சொல்ல வேண்டியிருக்கு சாரி மங்கு நீ சொன்னதை இங்கு சொல்லிவிட்டேன்) யோவ் ரெட்டை நீ கொடுத்து வைத்தவன்டா இது போல் ஒரு நண்பன் அமைவதற்கு.

 31. வெளியூரு மன்னிச்சுக்கோ... மங்குனியின் பதிவில் பின்னூட்டமிட முடியவில்லை... இது தான் நமது தலைமை செயலகம்... எனவே இங்கு குறிப்பிட வேண்டியிருக்கிறது... :-)

  மங்கு அண்ணா... சிலரால் தற்போதுள்ள உங்கள் கமெண்ட் செட்டிங்கின் படி உங்களுக்கு பின்னூட்டமிட முடியாது. எனவே கீழ்காணும் பதிவில் உள்ளது போல உங்கள் செட்டிங்கை மாற்றிவிட்டால் வசதிப்படும்... உங்க வசதி எப்புடி??

  உங்க பதிவுல பின்னூட்டம் போடுவதுல சிக்கலு-ங்கோ......


  இலுமு-வுக்கும் இதே பிரச்சனை உள்ளது... அவர் மாற்றுவது போல தெரியவில்லை. :-)

 32. எது அண்ணன் மங்குவுக்கு எனது பதிவில் நான் இட்ட பின்னூட்டம்.


  மங்குனி அமைச்சர் - வாங்க அண்ணே! நீங்களும் நம்ம ஜோதில ஐக்கியமா ஆகிட்டிங்க போல... நடக்கட்டும்.. நடக்கட்டும்.. சூதானமா இருங்க... இல்ல உங்க சூ தானமா போயிரும். :-)

 33. Muthu says:

  Veliyoorkaran said...
  இதுல தோன்றதுக்கு என்னங்க இருக்கு..வாழ்க்கை ரொம்ப எளிமையானதுதான்..எனக்கு அது தெரியுது..அதனால ரசிக்கறேன்...எளிமையா...! :)///


  நண்பா உன் கருத்தில் நான் உடன் படவில்லை. ஏன் எனில் வாழ்வில் எதுவும் எளிது இல்லை என்பதே நான் உணர்ந்தது.உதாரணம் நீ போடுற மொக்கையை ரெட்டையும்,ரெட்டை போடுற அறுவையை நீயும் பொறுத்துகொள்வது அவ்வளவு எளிதா.
  (கன்றாவி இந்த பட்டாபட்டியுடன் சேர்ந்து நானும் மொக்கை போட ஆரம்பிச்சுட்டேன் )

 34. ஆனந்த் says:

  //@பட்டாபட்டி..
  when is your next post?

  தெரில பட்டாபி சார்..இப்போதைக்கு ஒன்னும் மேட்டர் இல்ல...!//

  எவ்வளவு பெரிய மேட்டர் சிக்கிருக்கு (படவா நித்தியாநந்தன் பத்தி சொல்றேன்). சீக்கரம் ஒரு போஸ்ட் எதிர் பார்கிறேன். :)

 35. @@@@@ஆனந்த்
  எவ்வளவு பெரிய மேட்டர் சிக்கிருக்கு (படவா நித்தியாநந்தன் பத்தி சொல்றேன்). சீக்கரம் ஒரு போஸ்ட் எதிர் பார்கிறேன். :)////

  சாமியே தப்பு...சாமியாரா இருக்கறது அத விட தப்பு..சாமியாரா கும்புடறது அதுக்கு மேல தப்பு...அந்த சாமியார் தப்பு பண்ணிடார்னு பொலம்பறது கையாலாகததனம்...அட போங்க ஆனந்த் சார்...இந்த மாதிரி மேட்டர்லாம் நமக்கு அவ்ளவா வராது..என் தலைவன் பட்டாப்பட்டி அடிச்சு கிழிப்பான் இன்னும் ஒரு வாரத்துக்கு...படிச்சு என்ஜாய் பண்ணுங்க...!!

 36. @@@சேரா.ப்ரியா said...
  சூப்பருருருரு..///

  பார்ரா....:)
  //////////////////////////////////

  @@@ Muthu said...
  யோவ் ரெட்டை நீ கொடுத்து வைத்தவன்டா இது போல் ஒரு நண்பன் அமைவதற்கு.///

  தம்பி பீலிங்க குறைப்பு...ரொம்ப டென்சன் ஆகி மூளை செப்டிக் (டேன்க்) ஆய்டபோகுது...!

 37. @@@ரோஸ்விக் said...
  கீழ்காணும் பதிவில் உள்ளது போல உங்கள் செட்டிங்கை மாற்றிவிட்டால் வசதிப்படும்.. :-)///

  எல்லார் ப்ளாகில் உள்ள குறைகளையும் சரி செய்யும் நீர் இனி "வலைப்பூ டாக்டர்" என அன்போடு அழைக்கபடுவாய்...!..

 38. வெளியூரு..பட்டாபி..ரோஸ்விக்கு...ஜெய்லானி ( ஜெயில்ல ஆணி புடிங்கினயா...பேரை பாரு), முத்து, மங்கு , அறிவு ஜீவி...அப்புறம் இன்னும் யாரு... ம்ம்ம்ம்...என் பதிவுகளை படிக்கும் பாரீஸ் ஹில்டன், ப்ரிட்னி ஸ்பியர்ஸ் , பிரயன் லாரா...பிரணாப் முகர்ஜி...எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன்... மன்னர் அரசாங்க விஷயமா மும்பைக்கு பயணப் படுகிறார். ஒரு வாரத்துக்கு ஆள் எஸ்கேப்! எவனாவது வீடியோக்கு ஆசைப்பட்டு அரசாங்கத்தை வித்துடாதீங்க...( அந்தப் புரம் ஃப்ரீயா இருக்கும்னு நினைச்சு உள்ள வந்தா ஏமாந்து போவீங்க! ஆல்ரெடி அழகிங்களை பதுக்கியாச்சு)

 39. @Veliyoorkaran
  சாமியே தப்பு...சாமியாரா இருக்கறது அத விட தப்பு..சாமியாரா கும்புடறது அதுக்கு மேல தப்பு...அந்த சாமியார் தப்பு பண்ணிடார்னு பொலம்பறது கையாலாகததனம்...அட போங்க ஆனந்த் சார்...இந்த மாதிரி மேட்டர்லாம் நமக்கு அவ்ளவா வராது..என் தலைவன் பட்டாப்பட்டி அடிச்சு கிழிப்பான் இன்னும் ஒரு வாரத்துக்கு...படிச்சு என்ஜாய் பண்ணுங்க...!!
  //

  ஏன்...எதுனாலும் பேசி தீர்த்துக்கலாம்..
  யோவ்.. தூக்கத்தில கூட, நீ கேமராவை வெச்சுக்கிட்டு வரமாறி, கனவா வருதுயா..

  இன்னைக்கு மங்குனி ப்ளாக், வீட்டுக்குப் போறேன்..எப்படியும் பெரிய சண்டை
  வரப்போகுது.. தூங்கி எந்திருச்சதும்..பல்லு வெளக்காமா,ராணுவத்த கூட்டிட்டு அங்க வந்து சேரு..
  சண்ட நடக்கும்போது , தலைவனுக நாம சும்மாத்தான் இருக்கப்போறோம்.
  அப்ப நம்ம பிரச்சனைய பேசிக்கலாம்.. வரட்டா..

 40. Veli,sorry for adding this comment here.
  Hi rosewick.
  Friend, I have changed the comments settings as you said.I've lifted up the moderation. :)

 41. //I've lifted up the moderation. :)//
  நக்கீரனையே கிழிச்சாச்சு..
  இலுமி ஏதோ.. கெட்ட வார்த்தையில சொல்லியிருக்கு..

  ( Lifted... or...........uncheck )

  பட்டாபட்டியிடம் வார்த்தை விளையாட்டு வேண்டாம்...

 42. //தூங்கி எந்திருச்சதும்..பல்லு வெளக்காமா,ராணுவத்த கூட்டிட்டு அங்க வந்து சேரு..
  சண்ட நடக்கும்போது , தலைவனுக நாம சும்மாத்தான் இருக்கப்போறோம்.//

  பாஸ்,நம்ம வெளி என்னைக்கு சண்டை போட்டு இருக்கு?நாம எல்லாம் வழிகாட்டி விளக்கெண்ணன்னுட்டு சண்டை போடாம சூதானமா வட்டா வட்டம் எஸ்கேப் ஆயிடுது.எப்டியாவது இந்த மன்னன் கிட்ட சொல்லி இது தலமையில பாகிஸ்தான் மேல படை எடுக்க சொல்லணும்.
  ஆமா,வெளி வாழ்க்கைல பல்லு விளக்குரதுன்னு ஒரு சம்பவம் நடந்து இருக்கா என்ன?

 43. Muthu says:

  ILLUMINATI said...
  நம்ம வெளி என்னைக்கு சண்டை போட்டு இருக்கு?நாம எல்லாம் வழிகாட்டி விளக்கெண்ணன்னுட்டு சண்டை போடாம சூதானமா வட்டா வட்டம் எஸ்கேப் ஆயிடுது.எப்டியாவது இந்த மன்னன் கிட்ட சொல்லி இது தலமையில பாகிஸ்தான் மேல படை எடுக்க சொல்லணும்.///


  இதை நான் வழி மொழிகின்றேன்.தவறும் பட்சத்தில் ILLUMINATI பத்து நாட்கள் சிங்கத்துக்கு பல் தேய்த்து விடவேண்டும் என்று அரசானை தெரிவிக்கின்றது

 44. Muthu says:

  பட்டாபட்டி.. said...
  பட்டாபட்டியிடம் வார்த்தை விளையாட்டு வேண்டாம்..///


  ஆமாம் அவர் அந்தபுற கிழவிகள் சாரி அழகிகளுடன் தான் விளையாடுவார்

 45. Muthu says:

  ILLUMINATI said...

  Veli,sorry for adding this comment here.
  Hi rosewick.
  Friend, I have changed the comments settings as you said.I've lifted up the moderation. :)///


  போடுறதையும் போட்டு விட்டு அப்புறம் என்ன நொண்ண சாரி.அரசாங்க விதிகளை மீறிய குற்றத்திற்கு 20 நாட்கள் கொரில்லாவுக்கு முதுகு தேய்த்து விடுமாறு மன்னரின் சார்பில் அறிவிக்கபடுகிறது

 46. Muthu says:

  ரெட்டைவால் ' ஸ் said...

  வெளியூரு..பட்டாபி..ரோஸ்விக்கு...ஜெய்லானி ( ஜெயில்ல ஆணி புடிங்கினயா...பேரை பாரு), முத்து, மங்கு , அறிவு ஜீவி...அப்புறம் இன்னும் யாரு... ம்ம்ம்ம்...என் பதிவுகளை படிக்கும் பாரீஸ் ஹில்டன், ப்ரிட்னி ஸ்பியர்ஸ் , பிரயன் லாரா...பிரணாப் முகர்ஜி...எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன்... மன்னர் அரசாங்க விஷயமா மும்பைக்கு பயணப் படுகிறார். ஒரு வாரத்துக்கு ஆள் எஸ்கேப்! எவனாவது வீடியோக்கு ஆசைப்பட்டு அரசாங்கத்தை வித்துடாதீங்க...( அந்தப் புரம் ஃப்ரீயா இருக்கும்னு நினைச்சு உள்ள வந்தா ஏமாந்து போவீங்க! ஆல்ரெடி அழகிங்களை பதுக்கியாச்சு)///

  ஆல்ரெடி மங்குனி அங்கே தான் இருக்கிறார்.

 47. Muthu says:

  Veliyoorkaran said...
  எல்லார் ப்ளாகில் உள்ள குறைகளையும் சரி செய்யும் நீர் இனி "வலைப்பூ டாக்டர்" என அன்போடு அழைக்கபடுவாய்...!..////


  ரோஸ்விக் உன்னை போட்டு தள்ளுவதற்கு வெளியூறு முடிவு பண்ணிடுச்சு பார்த்து சூதானமா இரு அப்பு .

 48. //Veliyoorkaran

  @@@சேரா.ப்ரியா said...
  சூப்பருருருரு..///

  பார்ரா....:)
  //////////////////////////////////


  பேரைப்பாத்து ஏமாந்துடாதப்பு.... :-)

 49. //Muthu - ரோஸ்விக் உன்னை போட்டு தள்ளுவதற்கு வெளியூறு முடிவு பண்ணிடுச்சு பார்த்து சூதானமா இரு அப்பு . //

  வெளியூரு எங்க உள்ளூருக்குள்ள தான் இருக்கு... போட்டுத்தள்ளனும்னு நினைச்சா... அது இந்தோனேசியாவின் படாம் தீவுக்கு கிழவிகளுடன் நாடு கடத்தப்படும்.

 50. Muthu says:

  ரோஸ்விக் said...
  வெளியூரு எங்க உள்ளூருக்குள்ள தான் இருக்கு... போட்டுத்தள்ளனும்னு நினைச்சா... அது இந்தோனேசியாவின் படாம் தீவுக்கு கிழவிகளுடன் நாடு கடத்தப்படும்.///


  முதலில் அதை செய்யுங்கள் கூடவே பட்டு,மங்குனி,ரெட்டை மூணுத்தையும் சேர்த்து அனுப்பிவையுங்கள்

 51. அப்பு, புது போஸ்ட் போட்டு இருக்கேன் .உமக்கு நிச்சயம் பிடிக்கும்.ஏன்னு வந்து பாரு அப்பு.வந்து குமுறிட்டு போ.


  http://illuminati8.blogspot.com/2010/03/my-little-bride-review.html

 52. //வெளியூரு எங்க உள்ளூருக்குள்ள தான் இருக்கு... போட்டுத்தள்ளனும்னு நினைச்சா... அது இந்தோனேசியாவின் படாம் தீவுக்கு கிழவிகளுடன் நாடு கடத்தப்படும்.//

  you mean, மகளிர் அணி????

 53. என்ன பண்றது மக்கா,இங்கிலிஸ்ல எழுதிகிட்டு இருந்த பயல தமிழ்ல எழுத விட்டா கொஞ்சம் ஸ்டார்டிங் டிரபிள் இருக்கத்தான் செய்யும்.கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க.போக போக சரி பண்ணிடலாம். :)

 54. மக்கா,உங்க ஈமெயில் id ய எனக்கு அனுப்ப முடியுமா ?

  illuminati.blog.in@gmail.com

 55. ஆமா,என்ன அங்கன கொஞ்சம் சுதி கம்மியா தெரியுது?நமக்கெல்லாம் அழகே அலம்பலு தான பாஸ்.வந்து ரகள பன்னுவீருன்னு பாத்தா,இப்டி பண்ணிடீரே?இந்த மங்குனி கூட சேந்து நீரு மண்ணு மாதிரி ஆயிட்டீறு.இது சரி இல்ல.பட்ட விட்டு உம்ம கவனிக்க சொல்ல வேண்டியது தான். :)

 56. This comment has been removed by the author.
 57. வெளியூரு.., பின்னிட்டப்பா. என்னமா எழுதியிருக்க...! Hats Off...!
  ஆபீஸ்ல கொஞ்சம் பிரச்சனைப்பா, அதான் கும்மி அடிக்க கூட வரமுடியல...! இனிமே சபைல ஒழுங்கா ஆஜர் ஆயிடுறேன்..!
  'உளவுத்துறை' பதவி என் கிட்ட தான் இருக்கா, இல்லா வேற யாருக்காவது புடுங்கி குடுத்துடீங்களா..? சீக்கிரம் சொல்லுங்கப்பு, சட்டுப்புட்டுன்னு வேலைய ஆரம்பிக்கணும்...!