எல்லாரும் சைந்தவி புருஷன் பதிவ படிச்சு பார்த்துட்டு கமெண்ட்ல கண்ணீர பரிசா குடுத்துட்டு போனீங்க..ஆனா, என் நண்பன் அத படிச்சிட்டு ஒரு கவிதைய பரிசா குடுத்தான்..வெளியூர்க்காரனுக்கு கிடைத்த முதல் பரிசு இது..முதல் முத்தம் மாதிரி...இவன பத்தி சொல்லனும்னா வெளியூர்க்காரனுக்கு இருக்கற கொஞ்சம் நக்கல்ல நெறைய இவனோடது..தியாகு மாதிரியும், தனசேகர் மாதிரியும் ஜாலியா பேசி கலாய்க்க கத்துக்கணும்னு ஸ்கூல் படிக்கும்போது இவன பார்த்து ரொம்ப பொறாமபட்ருக்கேன் ..இன்னும் பட்டுகிட்டுதான் இருக்கேன்..
வெளியூர்க்காரனோட நக்கல் புடிச்ச பிரெண்ட்ஸ்ல இவனும் ஒரு முக்கியமான ஸ்வீட் ராஸ்கல்..ஆனா, பாவம் டென்த்ல என்ன விட எட்டு மார்க் கம்மியாதான் எடுத்தான்..அவனோட கவிதைய கீழ பிரசுரிச்சிருக்கேன்..எப்போதும் ஜாலியா இருக்கறவன்..இங்க கொஞ்சம் சீரியஸ் முகத்த காமிச்சிருக்கான்..கவிதை எழுத தெரிந்த நண்பர்கள் வெளியூர்காரன சிரிச்சு ஏத்துகிட்ட மாதிரி தியாகுவின் கவிதையை ரசிச்சு ஏத்துக்குவீங்கன்னு நம்பறேன்..
இனி தியாகுவின்...
போராட்டம்..!
போராட்டம் இல்லாத வாழ்க்கை
சண்டை இல்லாத போர்க்களம்..!
போராட்டத்தில் வகைகள் உண்டு..
மனப்போராட்டம் மனித போராட்டம்
மனித போராட்டம் அடங்க கூடியது..
மன போராட்டம் அடங்காதது..
சாதகமாகவே யோசிப்பது மனது..
சாத்தியத்தை மட்டுமே யோசிப்பது மூளை..
இப்படி மனதுக்கும் மூளைக்கும் நடக்கும் போராட்டமே மனப்போராட்டம் !
மனித போராட்டத்தில் வெற்றி பெறுபவன் வீரன்..
மன போராட்டத்தில் வெற்றி பெறுபவன் விவேகமானவன்..
இருபது வயது வரை படிப்புக்காக போராட்டம் .,
இருபத்தைந்து வயது வரை வேலைக்காக போராட்டம்.,
முப்பது வயது வரை காதலுக்காக போராட்டம் .,
நாப்பது வயது வரை பொருளுக்காக போராட்டம்.,
ஐம்பது வயது வரை பிள்ளைகளுக்காக போராட்டம் .,
அறுபது வயதில் முதுமையுடன் போராட்டம் .,
போராட்டம் போராட்டம் போராட்டம் .,
இந்த போர்களத்தில் பிறந்ததால் நானும் ஒரு போராளி.
மனபோராளி..
இருபத்தி ஆறு வயது காதல் மனபோராளி..
மனித போராளியாய் இருந்திருந்தால் உயிரை மட்டுமே இழந்திருப்பேன்..
இந்த காதல் மனபோரட்டதில் சிக்கி.,
உயிரை தவிர அனைத்தையும் இழந்தேன்..
இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை.,என்னையும் என் காதலையும் தவிர.,
நீங்காத இந்த சோகங்களோடு இருந்த நான்.,
சத்தம் கேட்டு திரும்பினேன்.,
சத்தமாக சண்டை போட்டது என் மனமும் மூளையும்..
மூளை சொன்னது காதலை விடுவது புத்திசாலித்தனம் என்று..
மனது சொன்னது காதலை விடுவது முட்டாள்தனம் என்று..
யார் சரி மூளையா.. மனதா ..நடுவராய் நான்..!
தயங்குகிறேன் காதலோடு..!
தீர்ப்பு தவறாகிவிட்டால்...
நாட்கள் கடக்கின்றன சில மாதங்களும்..,
காத்திருக்கிறேன்...!
நல்லதொரு தீர்ப்பு சொல்லுவேன் நான் என்னும் நம்பிக்கையில்..!
அடுத்த பதிவு “புல்லட்டின் டுமில், கடுப்பை கிளப்பும் பெண்கள் பார்ட் 4”
அது வெளியூர்காரனின் அம்பதாவது பதிவு...
வெளியூர்க்காரன்








கவிதை நன்று.
நண்பர் காதல் பண்ணிட்டு போராடிகிட்டு இருக்காரு ..
நாங்கல்லாம் காதலிக்கவே போராடிகிட்டு இருக்கோம்
(ஒரு பிகர பிக் அப் பண்றது எவ்வளவு பெரிய போராட்டம்னு பட்டாதான் தெரியும் ... )
வெளியூரு.. யாருய்யா அது.. சூப்பராய் எழுதியிருக்கார்..
என்னுடைய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துவிடு நண்பனே..
கலாய்க்க பிறந்தவர்கள் நாம்..
சில சமயங்களில், நல்ல கவிஞனை தூக்கிவிட வேண்டிய
கடமையும் நமக்குண்டு..
நிறைய எழுதச்சொல்லுங்கள்..
வாழ்த்துக்கள்..
( நண்பர்களே..இந்த பதிவுக்கு நோ கலாய்பு.. )..
திறமைசாலிகளை ஊக்குவிப்போம்.. நன்றி...
( நமது கும்மி .. 50 -வது பதிவில் மீண்டும் தொடங்கும்..)
மறக்காமல், உங்கள் , ஓட்டை போடுங்க நண்பர்களே..
கவிதை எல்லோருக்கும் போய் சேரட்டும்..
@@ Thiyagu..//
இருபத்தி ஆறு வயது காதல் மனபோராளி..///
யாரு மச்சான் அந்த பிகரு....? :)
@@ Thiyaagu..//
சாதியை மட்டுமே யோசிப்பது.//
டேய் மாங்கா...ஜாதியெல்லாம் பார்க்காதடா..நம்ப ஜாதில நல்ல பிகருங்க ரொம்ப கம்மி...லூசுதனமா பண்ணிடாத...பீசு நல்லாருந்தா சட்டுபுட்டுன்னு கல்யாணத்த முடிச்சிரு...(இல்லாட்டி என்ன மாதிரி வாழ்க்கை புல்லா பொண்ணு பார்த்துகிட்டே இருக்க வேண்டியதுதான்..!.)
//( நமது கும்மி .. 50 -வது பதிவில் மீண்டும் தொடங்கும்..)//
ஓகே பாஸ்
//யாரு மச்சான் அந்த பிகரு....//
பிரியா மாதிரியா
@@ஜெய்லானி
//யாரு மச்சான் அந்த பிகரு....//
பிரியா மாதிரியா //////////
இல்ல மச்சி..பய ரசனையான ஆளு..நல்ல பிகரா தான் உஷார் பண்ணிருப்பான்..!!
//பட்டாபட்டி..மறக்காமல், உங்கள் , ஓட்டை போடுங்க நண்பர்களே..
கவிதை எல்லோருக்கும் போய் சேரட்டும்.//
தமிழிஷில் இனைத்துவிட்டேன். இப்ப போடுயா ஓட்டை .மன்னர் தூங்கிவிட்டார். ஐயோ பாவம்.
சீரியசான கவிதைதான்... அருமை... அய்யா வெளியூர்காரனே.. உங்க கலாய்ப்ப ஆரம்பிங்க.... அதோட நம்ம நண்பரின் கவிதையும்.... வாழ்க்கையில எல்லாம் வேணும் நண்பா..
சத்தமாக சண்டை போட்டது என் மனமும் மூளையும்..//
உடம்புல மூளை எங்க இருக்குன்னு தெரியுது இந்த பாழாப்போன மனசு எங்கப்பே கெடக்கு?
@@பிரியமுடன்...வசந்த்
உடம்புல மூளை எங்க இருக்குன்னு தெரியுது இந்த பாழாப்போன மனசு எங்கப்பே கெடக்கு?////
நான் சொல்லுவேன் மச்சி..உடனே பிகர பத்தியே பேசறான் வெளியூர்க்காரன்னு இவனுக எல்லாம் ஒன்னு சேர்ந்து என்னை கலாய்ப்பானுக..எதுக்கு வம்பு...தியாகு வருவான்..கேட்டு சொல்றேன்..! :)
@@@kanavugal said...
சீரியசான கவிதைதான்... அருமை..//
தேங்க்ஸ் வாத்யாரே....விடுங்க இவனையும் ப்லாக்ல கவிதை எழுத வெச்சு நம்ப கூட்டத்துல சேர்த்தர்லாம்..!! (அந்த பிகர விட்டுட்டு வர்றானான்னுதான் தெரில..)
@@@ யூர்கன் க்ருகியர் said...
நண்பர் காதல் பண்ணிட்டு போராடிகிட்டு இருக்காரு ..
நாங்கல்லாம் காதலிக்கவே போராடிகிட்டு இருக்கோம்.////
ஐயோ அத சொல்லாதடா செல்லம்..எனக்கு அழுகை அழுகையா வருது..(நமக்குன்னு ஒரு பிகர் பொறக்காமயா இருக்கும் ...மனச தேத்திக்க ராசா ...)
@@@யூர்கன் க்ருகியர் said...
ஒரு பிகர பிக் அப் பண்றது எவ்வளவு பெரிய போராட்டம்னு பட்டாதான் தெரியும் ...//
அது ரொம்ப சிம்பிள் மச்சி..அது எப்டீனா..(வெளியூரு அடங்கு..இன்னும் கொஞ்ச நேரத்துல இலுமினாட்டி வருவான்..டோட்டல் டேமேஜ் ஆய்ரும்..)...
@Veliyoorkaran
அது ரொம்ப சிம்பிள் மச்சி..அது எப்டீனா..(வெளியூரு அடங்கு..இன்னும் கொஞ்ச நேரத்துல இலுமினாட்டி வருவான்..டோட்டல் டேமேஜ் ஆய்ரும்..)...
//
யோவ்.நாமதான் நாதாரிகளாயிட்டோம்...
நல்ல கவிஞனை, கொஞ்சம் வளரவிடலாமையா..
அதனால....அதனால.....டுடே.. நோ கலாய்..
ஒழுக்கமா, கவிதைய பற்றி பேசுங்க சாமிகளா..
கலக்கல் நண்பரே !
எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க !
:)-
kavithaiya ezuthiyavarukku vaazthukkaL.
:-)
////இந்த காதல் மனபோரட்டதில் சிக்கி.,
உயிரை தவிர அனைத்தையும் இழந்தேன்..////////////////////
லவ் பண்ணாதீங்கன்னு சொன்னா கேக்கணும்..இல்லைனா இப்டிதான்..!!
Love will kill you..!!
//சாதியை மட்டுமே யோசிப்பது//
தியாகு நல்லாத்தான்யா எழுதி இருக்கான்...
சாதிய யோசிக்காம... சாதிப்பதை யோசி மக்கா (பிகர உஷார் பன்றதா இருந்தாலும் சரி) :-)
வாழ்த்துகளை சொல்லீரு வெளியூரு...
// தியாகுவின்...//
கவிஞரே ஏன் இந்த சோகம் , ஆள் யாருன்னு சொல்லுங்க வர்ற வெள்ளிகிழமை (நாளையகு தான் ) காலைல 6 :30 டு 7 :30 ராணி மெய்யம்மை ஹால்ல கல்யாணம். நம்மா ரெட்டை தலைமை, ராணுவம் பாதுகாப்பு (நாங்கல்லாம் சரக்கடிப்போம் ).
பட்டா வேற கவிஞர கலாயிக்க வேணாம்னு சொல்லிருக்கான், சட்டு புட்டுன்னு குடும்பஸ்தனா ஆகுறத விட்டுட்டு கவித எழுத வச்சு வெடிக்க பாகுரிங்க .
கவிதை அருமையா இருக்கு வெளியூரு...என்ன..வரிகளை குறைச்சு வார்த்தைகளில் வீரியம் கூட்டியிருக்கலாம்! தியாகுவை விட்டுடாத..நிறைய எழுத சொல்லு... நேரடியா களத்தில இறங்கினா நேரடியாவே விமர்சிப்போம்ல.. சட் புட்டுனு ஒரு பிளாகை ஆரம்பிக்க சொல்லு...!
புல்லட் said...
நல்லாருக்கே.. அவருக்கு எனது வாழ்த்துக்கள்.. அப்புறம் உங்க கடுப்பை ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கென்.. பட்டாசெல்லாம் வாங்கியாச்சு.. பதிவு வரவேண்டியதுதான் பாக்கி..
ஊருக்குள்ள எவன் கவிதை எழுதினாலும் எனக்குன்னு எழுதின மாதிரியே இருக்கே...! சொக்கா.., சொக்கா..!
கவிதை மிக அருமைனு சொல்றத விட அவருடைய காதல் மிக அருமைனு சொல்லணும். அப்ப தான் இப்படியெல்லாம் தோணும்(வலிக்கும்) :(
வெளியூரு, இது தியாகுவிற்கான என் பரிசு. அவராண்ட குடுத்துடு. http://arivugv.blogspot.com/2009/12/blog-post_1102.html
காதல் கை கூட வாழ்த்துக்கள் தியாகு. இன்னும் நிறைய எழுதுங்க. அதில் மட்டுமே வாழ்கிறது நம் போன்றவர்களின் காதல்...!
வெளியூரு, சீக்கிரம் அரை சதம் போடுயா. பிரிச்சு மேஞ்சுரலாம். ரொம்ப ஆவலோட வெய்ட் பண்றோம்..!
அண்ணாச்சி. வந்தாச்சி. அட்டண்டன்ஸ் போட்டுக்கிறேன். பல்லு மேல நாக்கப் போட்டு பளிச்சுன்னு கேடுப்புட்டியேண்ணே! ஏன் வரதில்லைன்னு.
தம்பி கவிதை நல்லாருக்கு. கொஞ்சம் கவனமெடுத்தா அழகா எழுதுவாரு. சொல்லுங்க.:) வர்ட்டா
@வானம்பாடிகள் said...
அண்ணாச்சி. வந்தாச்சி. அட்டண்டன்ஸ் போட்டுக்கிறேன். பல்லு மேல நாக்கப் போட்டு பளிச்சுன்னு கேடுப்புட்டியேண்ணே! ஏன் வரதில்லைன்னு.
தம்பி கவிதை நல்லாருக்கு. கொஞ்சம் கவனமெடுத்தா அழகா எழுதுவாரு. சொல்லுங்க.:) வர்ட்டா
//
அண்ணே.. வாங்கண்ணே..
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிணே..
கேபிள் சங்கர் அண்ணனை பார்த்தீங்களா..( அவரு சிங்கையில் இருந்து திரும்பியதும்..)
Hi Friends,
Thanks for your comments. But this kavithai is not because of my experience. Yenna naammellaam ungala maathirithaan love pandra jaathi illa.I wrote this kavithai as because of my friends experience.
Once again thanks for your comments.
hi...mr.veliyoorkaran sir....ur way of writing very nice...i really enjoyed....continue the good work.....