- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 73 comments and to comment


முப்பது வருஷம் ஆச்சுடி முத்திகுட்டி...ஐ லவ் யு பை சைந்தவினு போட்டு உன்கிட்டேர்ந்து  இந்த லெட்டர் வந்து..!


போன வாரம் நடந்த மாதிரி இருக்கு..அப்போ நமக்கு கல்யாணம் ஆகி ஒரு ஏழு எட்டு வருஷம் இருக்கும்னு நெனைக்கறேன்.. அன்னிக்கு அந்த லெட்டெர படிச்சிட்டு சிரிச்சிகிட்டே உன்ன கட்டிபுடிச்சு உன் காதுல ஏண்டி உங்கப்பன் சிரிக்கறப்ப லூஸ் மோகன் மாதிரியே இருக்கான்னு கேட்டு அப்பவும் உன்ன சிரிக்க வெச்சேன்...அன்னிக்கு தோணல...திரும்ப உன்கிட்ட ஐ லவ் யு சொல்லனும்னு...


ஏன் தோணலைன்னு தெரியல..நான் வார்த்தைல சொல்லித்தான் என் காதல் உனக்கு தெரியனுமாங்கர கர்வமா..இல்ல என்கூடவேதான இருக்கபோறா இவங்கர திமிரான்னு தெரில...ஆனா இன்னிக்கு தோணுது...உனக்கு பதில் எழுதனும்னு. அதுவும் உன் போட்டோவ பார்த்துகிட்டே எழுதனும்னு.. ..


மீ டூ சைந்தவி...நானும் உன்ன ரொம்ப லவ் பண்ணேன்...பண்றேன்...பண்ணுவேன்...


எல்லா ட்ரெஸ்ளையும்  என் தங்கக்குட்டி ராசாத்தி மாதிரிதான் இருப்பான்னு நான் உன்கிட்ட சொல்ற எல்லா பொய்க்கும், அது பொய்ன்னு தெரிஞ்சும் வெக்கப்பட்டு சிரிப்பியே ஒரு சிரிப்பு..அதுக்கே உன்ன இன்னொருதடவ கட்டிக்கலாம்டி....


ஆக்சுவலா நாம கல்யாணத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி நான் உங்க வீட்டுக்கு வந்தப்போ உன்ன இறுக்கி கட்டிபுடிச்சு உன் உதட்ட கடிக்கனும்போலதான் இருந்துச்சு...ஆனா நீ என்ன தப்பா நெனைச்சிடுவியோன்னுதான் ஒன்னும் செய்யாம வந்துட்டேன்..இப்ப உள்ள சைந்தவியா இருந்தா எனக்கு கரெக்டா தெரிஞ்சிருக்கும்...நீ மனசுக்குள்ள என்ன நெனைக்கறேன்னு... 


நாம ஹனிமூன் போனப்போ நான் உனக்கு குடுத்த அந்த கிப்ட்...பயந்துகிட்டே குடுத்தேன் தெரியுமா...உனக்கு புடிக்குமோ புடிக்காதோன்னு...அத பிரிச்சு பார்த்துட்டு நீ விழுந்து விழுந்து சிரிச்சப்பதான் எனக்கு உயிரே வந்துச்சு...அப்போ தோனுச்சு..என் மிச்ச வாழ்க்கை சொர்க்கம்னு..லைப  ரசிக்க தெரிஞ்ச பொண்டாட்டி கெடைச்ச எல்லாருக்கும் வாழ்க்கை சொர்க்கம்டி..


ஒருநாள் ராத்திரி ஓவர் மூட்ல நீ என்கிட்டே உலருனத எல்லாம் உனக்கு தெரியாம ரெகார்ட் பண்ணி உன் நம்பருக்கு ரிங் டோனா வெச்சுகிட்டதுக்கு ஏண்டி அன்னிக்கு அவ்ளோ அழுத...உனக்கு புடிக்காமத்தான் அழறபோலன்னு நெனைச்சுகிட்டு அவசரம் அவசரமா நான் அத டெலிட் பண்ணப்பரம் சொன்ன...ஐ லவ் யூன்னு..


பஸ்ல போகும்போது என் தோள்ள சாயிஞ்சிகரதுக்காக தூக்கம் வர்ற மாதிரி நடிக்கறது..டேய் நடிக்காதடி நீ தூங்கலைன்னு எனக்கு தெரியும்னு சொன்னா..அதெல்லாம் இல்ல,நான் தூங்கிக்கிட்டுதான் இருக்கேன்னு சொல்லி  உங்கப்பன் முட்டாள்னு கன்பார்ம் பண்றது... 


என் புருஷன் மீன் குழம்பு எப்டி வெப்பாரு தெரியுமான்னு நீ ஒரு கல்யாணத்துல உன் சொந்தகாரங்ககிட்ட பீத்திகிட்டப்போ மண்டபமே என்ன பார்த்து  சிரிச்சிது...ஆனா நீ அவங்க ஏன் அப்டி சிரிக்கராங்கன்னு கூட தெரியாம பேந்த பேந்த என்ன பார்த்து பாவமா முழிச்சு என் மானத்த வாங்குனியே..ச்சே, ஆனா அன்னிக்கு நைட் உங்கப்பன கொஞ்சம் ஓவராதாண்டி உன்கிட்ட திட்டிட்டேன்..சாரி குட்டி..


எங்கப்பாவ கெட்ட வார்த்தைல திட்டாதடா ப்ளீஸ்னு இதுவரைக்கும் ஒரு முப்பதாயிரம் தடவ என்கிட்டே கெஞ்சிருப்ப..எனக்கே சில சமயம் பாவமாதான் இருக்கும் நீ கெஞ்சறத பார்த்தா...எனக்கும் அவன புடிக்கும்...நல்ல மனுஷன்...பாசமா இருப்பான் எல்லார்கிட்டயும்...ஆனா எனக்கு வேற வழி இல்ல... ஏன்னா  உங்கப்பன திட்ட ஆரம்பிச்சாதான நீ என்ன பேச விடாம பண்றதுக்கு இருக்கமா கட்டிபுடிச்சு முத்தம் குடுத்துகிட்டே இருப்ப... பேசவிடாம உதட்டுலையே...

நீ நெறைய தடவ கேட்ருக்க...கல்யாணத்துக்கு முன்னாடி நீ யாரையும் நெஜமாவே லவ் பண்ணலையான்னு..பண்ணேன்..ஆனா அப்பவும் உன்னதான்டின்னு நான் சொன்ன உண்மைய நீ ஒருதடவ கூட நம்புனதே இல்ல..ப்ளீஸ் இப்பவாச்சும் நம்பு..நீ யாருன்னு தெரியறதுக்கு முன்னாடியே நான் உன்ன காதலிக்க ஆரம்பிச்சுட்டேன்...


நமக்கு குழந்த பொறந்தப்போ நான் அழக்கூடாதுன்னுதாண்டி நின்னுட்ருந்தேன்..ஆனா எங்கம்மாவ பார்த்தோன்ன அழுகை வந்துடுச்சு..ஏன்னே தெரில..


அன்னிக்கு நீ கஷ்டப்பட்டத பார்த்தப்போ தோணுச்சு..நீ இனிமே அழுகவே கூடாதுன்னு..சிரிச்சிகிட்டு மட்டுமே இருக்கணும்னு...இப்ப கூட நீ தூக்கத்துல சிரிக்கற..கனவுல கூட நாந்தான் வர்றேன் போல....


குழந்த பொறந்து மூணு மாசத்துல நான் ரூமுக்குள்ள வரும்போதெல்லாம் டேய் வேணாம்டா..ப்ளீஸ்டா...பாப்பு பாவம்டானு நீ கெஞ்சுனாலும் உன் கண்ணு கதவ சாத்த சொன்னது...


செக்ஸ்ல நான் உனக்கு கத்துகுடுத்தது, எனக்கு நீ கத்து குடுத்தது, நம்ம ரெண்டு பெரும் சேர்ந்து கத்துகிட்டது. எனக்கு புடிச்ச அந்த குட்டி மச்சம்..உன் வேர்வை வாசம்..சொருகி கெடக்குற உன் அழகு கண்ணு...எத சொல்ல.....யு ஆர் செக்ஸிடி.


உனக்கு குடுக்க வேண்டிய முத்தத்த எல்லாம் சேர்த்து நான் என் பொண்ணுக்கே குடுக்கறேன்னு நீ கம்ப்ளைன்ட் பண்ணிட்ருந்தப்போ நான் மறுபடியும் பாப்புக்கே முத்தம் குடுத்தத பார்த்து கடுப்பாகி அவகிட்ட எரிஞ்சு எரிஞ்சு விழுந்தத பார்த்து எனக்கு சிரிப்புதாண்டி வந்துது..நான்னா உனக்கு அவ்ளோ இஷ்டமா...


நீ என்ன கொஞ்சற செல்லபேர்லாம் சொல்லி நான் பாப்புவ கொஞ்சுனப்போ டேய் சொந்தமா யோசிடா..நான் உங்கிட்ட சொன்னத காப்பி அடிக்காதடானு சத்தமா சொல்லி என் அம்மா முன்னாடி என் மானத்த வாங்கினது...மாங்காபய மவடி நீ...


பாப்புவுக்கு ரெண்டு வயசு இருக்கும்போது அவகிட்ட சொல்லிக்குடுத்து உனக்கு ஐ லவ் யு சொல்லசொன்னப்போ உனக்கு சந்தோசமா இருந்தாலும் ஏன் நீனே சொன்னா என்னாவாம்னு கோவமா கேக்கற மாதிரி கெஞ்சுனது...


புக்ஸ் படிக்க புடிக்குமான்னு நான் கேட்டதுக்கு , உன்ன லவ் பண்ணவே எனக்கு டைம் பத்தல..இதுல நான் எங்கேந்துடா புக்ஸ் படிக்கனு நீ சொன்னப்போ முடிவு பண்ணேன்..நான் ப்ளாக் எழுதறத உன்கிட்ட சொல்லவே கூடாதுன்னு..


என்கிட்டே நீ சொன்ன ஏ ஜோக்ஸ்..வீம்புக்கு போட்டி போட்டு பீர் அடிச்சிட்டு பச்சை பச்சையா கெட்ட வார்த்தை பேசி உளறோ உளருனு விடிய விடிய உளறி என்ன விழுந்து விழுந்து சிரிக்க வெச்சது..


ஒரு நாள் நான் நெறைய  தண்ணியடிச்சிட்டு வந்ததுக்கு கன்னாபின்னான்னு திட்டிட்டு நடு ராத்திரி எந்திரிச்சு எனக்கு முத்தம் குடுத்துட்டு என்னையே பார்த்துட்டு படுத்துருந்தியே ஏண்டி..செல்லத்த திட்டிட்டமேன்னா..உனக்கு ஒன்னு தெரியுமா நான் அப்போ முழிச்சிட்டுதான் இருந்தேன்..நாங்கல்லாம் ஒரு புல் அடிச்சிட்டு அசராம ஆத்திச்சூடி சொல்றவங்கேடி..அன்னிக்கு நான் அடிச்சிருந்தது வெறும் பீரு..ஆனா அடுத்த நாள் காலைல நீ வெரைப்பாவே கோவமா காமிச்சிகிட்டப்போ எனக்கு சிரிப்புதான் வந்துச்சு...நீ உங்கப்பன மாதிரியே கூமாங்குடி ....


எண்டா சாமி கும்புடமாட்டேங்கரன்னு நீ கேட்டப்போ நான் சாமியோடதான குடும்பம் நடத்தறேன்னு நான் சொன்ன பதிலுக்கு ஆரம்பிச்சிட்டான்டா  ஜொள்ளு விடன்னு சொல்லிட்டு நீ சிரிச்சிட்டே போய்ட்ட..ஆனா, எனக்கு மட்டும்தான் தெரியும்..அந்த வார்த்தை எவ்ளோ உண்மைன்னு..


உங்கப்பா இறந்தப்போ நீ உங்கம்மா உன் தங்கச்சி எல்லாரையும் விட்டுட்டு என் மடில படுத்து எங்கப்பா இறந்துட்டாருடா...இனிமே நீ யார கிண்டல் பண்ணுவேன்னு கதறுனப்போ நான் கொஞ்சம்  கலங்கிதாண்டி போயிட்டேன்..


பாப்புவ நீ அடிச்சிட்டேன்னு ஒருதடவ  உன்கூட நான் ரெண்டு நாள் பேசாம இருந்தப்போ அன்னிக்கு நைட் என்ன கட்டிபுடிச்சு தேம்புனது..ஏண்டி அழறேன்னு கேட்டப்போ ஒண்ணுமே சொல்லாம தேம்பிகிட்டே இருந்தது...


பாப்பு கல்யாணம் ஆகி பாரின் போனப்போ ஏர்போர்ட்ல பாப்பு புருஷன் என்ன எதோ கிண்டல் பண்ணி பாப்புகிட்ட வம்பு பண்ணி சிரிச்சிற்றுந்தப்போ, நீ குழந்தயாட்டமா பலிப்பு காமிச்சு உங்களுக்கு நல்லா வேணும்..எங்கப்பாவ எவ்ளோ கிண்டல் பண்ணீங்கன்னு சிரிச்சப்போ..ஏன்னு தெரில..எனக்கும் சிரிப்புதான் வந்துச்சு..


அப்பா அப்பான்னு என்னையே சுத்திகிட்ருப்பா..இன்னையோட என்கிட்டே போன்ல பேசி நாலு நாள் ஆகுது..நீ உங்கப்பாவ மறந்தப்போ அவருக்கும் இப்டிதான வலிச்சிருக்கும்..பாவம்டி உங்கப்பா..பொம்பள புள்ளைங்ககிட்ட மட்டும் ரொம்ப பாசமே வெக்ககூடாதுடி...


உன்ன தவிர வேற யாரு இருந்திருந்தாலும் நானும் பாப்புவும்  இவ்ளோ சந்தோசமா இருந்துருக்கமாட்டோம் குட்டி..


அடுத்த ஜென்மத்துலயும் நான் நானாவே பொறக்கணும்...சைந்தவிக்கு புருஷனா...நீ என் சைந்தவியாவே பொறக்கணும்...நான் மறுபடியும் உன்ன பொண்ணு பார்க்க வரணும்...மறுபடியும் நாம சந்தோசமா வாழனும்...இதுல எதுவும் மாறிடக்கூடாது...ஏன்னா சைந்தவியா பொறந்து தான் புருஷன சந்தோசமா மட்டுமே வெச்சுக்கறது எப்டீன்னு என் சைந்தவிக்கு மட்டும்தான் தெரியும்..


உங்கிட்ட ஒரு விசயத்த மறைச்சிட்டேன்...காலைலேர்ந்து எனக்கு லேசா நெஞ்சு வலிக்கற மாதிரியே இருக்குடி குட்டி..உன்கிட்ட சொன்னா பயப்படுவேன்னு சொல்லல..நான் போய் படுக்கறேன்..காலைல இந்த லெட்டெர படிச்சு பாரு...நீ எவ்ளவோ கெஞ்சி கேட்டும் நான் உங்கிட்ட இதுவரைக்கும் சண்டை போட்டதே இல்ல..ஆனா நாளைக்கு நீ ஆசைப்பட்ட மாதிரியே என்கிட்டே  சண்டை போடுவேன்னு தோணுது..


என்ன எழுந்திரிக்க சொல்லி...!!


ஐ லவ் யு சைந்தவி...


சைந்தவி புருஷன்..இந்த பதிவின் தொடர்ச்சி ரெட்டைவால்ஸின் - இப்படிக்கு சைந்தவி 

வெளியூர்க்காரன்.

73 Responses so far.

 1. எழுதி முடிச்சிட்டு ஒரு வாசகன படிச்சு பார்த்தப்போ, என் இதயத்தை தொட்ட பதிவுகள்ள இதுவும் ஒன்னு..இத படிச்சிட்டு உங்கள்ள யாராச்சும் ஒருத்தவங்க உங்க கணவருக்கோ இல்ல மனைவிக்கோ போன் பண்ணி ஐ லவ் யு சொன்னீங்கன்னா எனக்கு அது போதும்..சந்தோசமும் சிரிப்பும் சேர்ந்து இருக்கற ரோமன்ஸ்தானுங்களே வாழ்க்கை..!...வெளியூர்க்காரன்.

 2. நெஞ்ச நக்கிட்ட வெளியூரு..
  யோவ்.. நீ இப்படியெல்லாம் எழுதுவியா?..

  சூப்பர் அப்பு...

 3. அட்டகாசம்!!! இதுக்காகவே சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணுது. கிரேட்டுங்க..

 4. சொல்லி வேலல்ல பாஸ்... மறுபடியும் பேஸ்புக் பிச்சிக்கப்போகுது..

 5. @@@லோகு
  அட்டகாசம்!!! இதுக்காகவே சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணுது/

  சீக்கிரம் பண்ணிக்கோங்க..அப்பத்தான் இங்க நான் எழுதிருக்கரதேல்லாம் எவ்ளோ பெரிய பொய்யுன்னு தெரியும்...! :)

  (நானும் சீக்கிரம் பண்ணிக்கணும்..சைந்தவியதான் எங்கம்மா திருவாரூர்ல தேடிற்றுக்காங்க...எங்க இருக்காளோ தெரியல...!..)

 6. @@ பட்டாபட்டி.. said...
  நெஞ்ச நக்கிட்ட வெளியூரு..
  யோவ்.. நீ இப்படியெல்லாம் எழுதுவியா?..///

  பட்டு செல்லம்..அப்டியெல்லாம் பீல் ஆகி என்ன கூட்டணிலேர்ந்து ஒதுக்கிராதையா...வெளியூர்க்காரன் என்னிக்குமே பட்டாபட்டியோட காமெடி தர்பாரோட போர்வால்தான்.இதுல எந்த மாற்றமும் இல்ல...இது சும்மா உல்லலாயி...கல்யாணம் ஆகாத காண்டுல உளறி வெக்கறது...அவ்ளோதான்..!

 7. அவ்வ்வ்வ்வ்வ்....

  இந்தப் பதிவ உணர்ந்து படிச்சிற்று அத வெளிக்காட்டுறதுக்கு எனக்கு யாருமே இல்லயே....

  அருமை....

  அருமையான பதிவு. உணர்வுகளை அழகாகக் கொட்டியுள்ளீர்கள்....

 8. @@@புல்லட் said...
  சொல்லி வேலல்ல பாஸ்... மறுபடியும் பேஸ்புக் பிச்சிக்கப்போகுது..//

  எல்லாம் உங்க ஆசிர்வாதம்..உங்க பதிவ படிச்சோன்னதான், அந்த பதிவு ஹிட்டுங்கர விசயமே எனக்கு தெரியும்..பிரபலப்படுத்தியமைக்கு நன்றி...!

 9. @@@கன்கொன் || Kangon said...
  இந்தப் பதிவ உணர்ந்து படிச்சிற்று அத வெளிக்காட்டுறதுக்கு எனக்கு யாருமே இல்லயே....//

  நீ என் ஜாதிடா ராசா..ஒரு பதிவு எழுதிருக்கேன் படிச்சிட்டு எப்டி இருக்குன்னு சொல்லுடின்னு போன் பண்ணி சொல்ல கூட எனக்கும் ஒரு பிகர் இல்ல வாத்யாரே...என் சைந்தவி எங்க இருக்கான்னு காட்டாம இந்த ஆண்டவ பய என்ன ரொம்ப போட்டு பார்க்கறான்...!!

 10. Anonymous says:

  super chance a illa.. nice way of writing..

 11. rooto says:

  நாங்கல்லாம் ஒரு புல் அடிச்சிட்டு அசராம ஆத்திச்சூடி சொல்றவங்கேடி!!! haaa haaaa i just loved it!!!!!

 12. இந்த வருடம் பதிவுகளை படித்துவிட்டு பின்னூட்டம் இட நேரம் இல்லாமல் இருந்தேன். ஆனால் இந்தப் பதிவை படித்திட்டு உங்களை பாராட்டாம இருக்க முடியல்லை. ஓவ்வொரு இடத்திலும் எங்கேயோ தொடுகிற மாதிரி இருக்கு. சூப்பர் பதிவு . வாழ்த்துக்கள்

 13. Subankan says:

  கலங்க வச்சுட்டீங்க, அருமை. நானும் கங்கோன் ஜாதிதானுங்கோ

 14. இதற்கு சைந்தவியின் பதிலும் இருக்கா பாஸ்...

 15. @@@@ஆதிரை
  இதற்கு சைந்தவியின் பதிலும் இருக்கா பாஸ்...///

  எனகென்னமோ சைந்தவி இந்த கடிதத்த படிச்சு முடிக்கும்போதே அவ புருசன்கிட்ட போயிருபான்னுதான் தோணுது..அவ புருஷன் இல்லாம தனியா அவளால வாழ முடியாது...அதனால சிபிக்கும் சைந்தவிக்கும் நடந்த காதல்கடித பரிமாற்றம் இத்துடன் நிறைவுற்றது..!! (வேணா அடுத்தது பாப்பு எழுதற மாதிரி ஒன்னு வரலாம்..) :)

 16. //நான் ப்ளாக் எழுதறத உன்கிட்ட சொல்லவே கூடாதுன்னு..//

  ஏன்,ஏற்கனவே இப்டி உதார் காட்டி வாங்குன அடி எல்லாம் நெனவுக்கு வந்துச்சாக்கும்.....

  //சீக்கிரம் பண்ணிக்கோங்க..அப்பத்தான் இங்க நான் எழுதிருக்கரதேல்லாம் எவ்ளோ பெரிய பொய்யுன்னு தெரியும்...!//

  ஆமாம்யா.சிக்குனா செதச்சுருவானுங்க.பாத்து சூதானமா இருந்துக்கங்க.....

  //நானும் சீக்கிரம் பண்ணிக்கணும்..சைந்தவியதான் எங்கம்மா திருவாரூர்ல தேடிற்றுக்காங்க...எங்க இருக்காளோ தெரியல...!..//

  யம்மா,யாரோ பெத்த மகராசி.....பையன் எழுதுரதப் பார்த்து பால் மாதிரி மனசுன்னு தப்பா நெனைச்சு பாழுங்கெணத்துல விளுந்துராத.பூரா பாலிடாயில்மா.வேணும்னா ரெட்டயோட அரசாங்கத்துல வந்து கேட்டுப் பாரு.
  அப்பிடியே எகிறி குதிச்சு இப்பவே ஓடிட்டன்னா ஒரு பெரிய கண்டத்துல இருந்து தப்புச்சுகிட்டேன்னு அர்த்தம் .....

  //என்னிக்குமே பட்டாபட்டியோட காமெடி தர்பாரோட போர்வால்தான்//

  ஏன் பாஸ், ’வால்‘ தெரிஞ்சு அடிச்சதா,இல்ல தெரியாம அடிச்சதா?எது எப்படியோ,நமக்கு இது ரொம்ப சூட் ஆகுது. :)

  // கல்யாணம் ஆகாத காண்டுல உளறி வெக்கறது...அவ்ளோதான்..!//

  அது தெளிவாவே தெரியுது பங்காளி.ஏன்னா,கல்யாணம் ஆச்சுன்னா இப்டி எல்லாம் உம்மால உளற முடியாது பாரும்.அதுக்கப்புறம் எங்ஙன பேசுறது?எல்லாம் one sided தான்.இந்நேரம் பாத்து நான் முன்னாடி படிச்ச ஒரு பழமொழி நெனவுக்கு வந்து பயமுருத்துதுயா...

  “Marriage is a relationship where one person is always right......
  and the other is the husband.”

  ஆனாலும் உமக்கு சீக்கிரமா கல்யாணம் ஆகணும்னு வேண்டிக்கிறேன்யா.ஏன்னா,சந்தோசம் மட்டுமே வாழ்க்கை இல்ல பாரும். :)
  By the by,பதிவு நல்லா இருக்கு பங்காளி. :)

 17. LK says:

  super story

  LK
  http://vezham.co.cc

 18. VARO says:

  எல்லா ட்ரெஸ்ளையும் என் தங்கக்குட்டி ராசாத்தி மாதிரிதான் இருப்பான்னு நான் உன்கிட்ட சொல்ற எல்லா பொய்க்கும், அது பொய்ன்னு தெரிஞ்சும் வெக்கப்பட்டு சிரிப்பியே ஒரு சிரிப்பு..அதுக்கே உன்ன இன்னொருதடவ கட்டிக்கலாம்டி...//

  யோவ்! என்ன ஆளுய்யை நீர்… இப்பிடி அசராம அடிக்கிறீர்.. நாங்கள் என்ன சிரிக்கிறதா? சிந்திக்கிறதா… கலக்கிட்டீங்க பாஸ்…

  எல்லாக் கணவன் மனையியும் இப்பிடியிருந்தா… எப்பிடியிருக்கும்… ம்ம்…

 19. கடைசி வரிகள் டச்சிங்....

  ரொமான்ஸ விட உண்மையான அன்பு / காதல் ஒளிந்திருந்ததையே உணர்கிறேன்....

  "சாவிற்கும் பக்கம் வந்தேன், ஏன் என்றால் காதல் என்பேன் ஹோசனா" வரிகள் ஏனோ நினைவுக்கு வருகிறது....

 20. DREAMER says:

  சூப்பர்... கலக்கல்...

  //ப்ளீஸ் இப்பவாச்சும் நம்பு..நீ யாருன்னு தெரியறதுக்கு முன்னாடியே நான் உன்ன காதலிக்க ஆரம்பிச்சுட்டேன்...//

  //அடுத்த ஜென்மத்துல... நான் மறுபடியும் உன்ன பொண்ணு பார்க்க வரணும்...//

  //நான் சாமியோடதான குடும்பம் நடத்தறேன்னு நான் சொன்ன பதிலுக்கு, நீ சிரிச்சிட்டே போய்ட்ட..ஆனா, எனக்கு மட்டும்தான் தெரியும்..அந்த வார்த்தை எவ்ளோ உண்மைன்னு..//

  இந்த மூணு இடமும் படிக்கும்போது என்னமோ பண்ணுது. அந்த 'என்னமோ'வுக்கு பேரு என்னன்னு தெரியல...

  அருமையா எழுதியிருக்கீங்க. உலகத்துல ஏதாவது ஒரு மூலையிலிருந்து உங்கள் வருங்கால சைந்தவி இதைப் படிச்சிருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்...

  கலக்கல்...

  -
  DREAMER

 21. kanavugal says:

  அருமையான, ஆர்ப்பாட்டம் இல்லாத பதிவு., மனதை நெகிழ வைத்த எழுத்து... கண் கலங்க வைத்த, என் மனைவியின் மேல் பாசத்தை அதிகரித்த எழுத்து நண்பரே ... நன்றி.. வாழ்த்துக்கள்....

 22. சைந்தவி மாதிரி பொண்ணு கெடைப்பாளா பாஸ் ?

 23. Anonymous says:

  After reading this fully,
  I felt the below lines are TRUE and SUIT for you very much.


  //நீ யாருன்னு தெரியறதுக்கு முன்னாடியே நான் உன்ன காதலிக்க ஆரம்பிச்சுட்டேன்...


  Each line showers love and affection.
  Good one. Keep it up.All the best.

  Thanks.
  - Big fan of yours.

 24. archchana says:

  நல்ல பதிவு . இதில் வரும் பீர், தண்ணி இவற்றை தவிர்த்து பார்த்தால் எனது 7 வருட life ஐ 90 % திரும்பி பார்த்த மாதிரி இருந்தது. இப்படி தான் நாமும் இருந்தோம். இத்துடன் சின்ன சின்ன கோபமும் இருந்தால் தான் life intrest ஆக இருக்கும்
  // நான் எழுதிருக்கரதேல்லாம் எவ்ளோ பெரிய பொய்யுன்னு தெரியும்...! :)// ஈகோ இல்லாது ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் எல்லோருடைய life உம் இப்படிதான் இருக்கும்.

 25. வெளியூர்காரா, நான் உன்னுடைய எழுத்துக்களுக்கு எப்போதுமே ரசிகன்யா... வழக்கமா படிச்சிட்டு, சிரிச்சிட்டு / ரசிச்சுட்டு... தக்காளி எப்புடி எல்லாம் எழுதுறான்னு ஒரு பெரு மூச்சு விட்டுட்டு போவேன்.

  ஆனா, இன்னைக்கு இதை படிச்சிட்டு, என்னுடன் இதை படித்த எனது நண்பருடைய desk- க்கு போயி உனக்கு கைதட்டி என் மகிழ்ச்சியையும், உனக்கு பாராட்டையும் வெளிப்படுத்திக்கிடேன்.

  நான் வேலைப்பளு காரணமா... என்னுடைய நண்பர் வெங்கட் கிட்ட இந்த பதிவை படிக்க சொன்னேன்... அவரும் உன்னுடைய ரசிகர் தான்... அவர் படிச்சிட்டு எனக்கு chat- ல சொன்னத கீழ குடுத்துருக்கேன் பாரு...

  **
  20:50 Ayyadurai, Venkatesh : Chanceless writing.... veyry very much appreciated... read it when free... **

 26. எனக்கு ஒட்டு போடுங்கன்னு கேக்குறது வெளியூர்காரனுக்கு புடிக்காது...

  இருந்தாலும் நான் கேக்குறேன் நண்பர்களே.... இந்த பதிவு ஒட்டு வாங்குவதற்கு தகுதியான பதிவு தான். தயவு செய்து ஒட்டு போடுங்கள்.

  மன்னிச்சுக்க வெளியூரு...

  I am so impressed again. :-)

 27. அருமை....! தபூசங்கரின் காதல் கவிதைகள் வாசித்த திருப்தி, விண்ணைத்தாண்டி வருவாயா படம் பார்த்த திருப்தி, உங்கள் இரண்டு காதல் ஒழுகும் பதிவுகளையும் வாசித்த போது இருந்தது...! தொடரட்டும் வாழ்த்துக்கள்...!! உங்கள் பதிவால் மேலே புல்லட் சொன்னது போல முகப்புத்தகம் கதறுது...!!!

 28. //"உங்கிட்ட ஒரு விசயத்த மறைச்சிட்டேன்...காலைலேர்ந்து எனக்கு லேசா நெஞ்சு வலிக்கற மாதிரியே இருக்குடி குட்டி..உன்கிட்ட சொன்னா பயப்படுவேன்னு சொல்லல..நான் போய் படுக்கறேன்..காலைல இந்த லெட்டெர படிச்சு பாரு...நீ எவ்ளவோ கெஞ்சி கேட்டும் நான் உங்கிட்ட இதுவரைக்கும் சண்டை போட்டதே இல்ல..ஆனா நாளைக்கு நீ ஆசைப்பட்ட மாதிரியே என்கிட்டே சண்டை போடுவேன்னு தோணுது..

  என்ன எழுந்திரிக்க சொல்லி...!!

  "//
  வாசித்த பின் கண்வழியே வழிந்த கண்ணீரை தடுக்க முடியவில்லை.
  வாழ்த்துக்கள்.

  தொடர்ந்து பாப்புவின் ஒரு கடித்தத்தை எதிர்பார்க்கின்றேன் :)

 29. Saravanan says:

  உங்கிட்ட ஒரு விசயத்த மறைச்சிட்டேன்...காலைலேர்ந்து எனக்கு லேசா நெஞ்சு வலிக்கற மாதிரியே இருக்குடி குட்டி..உன்கிட்ட சொன்னா பயப்படுவேன்னு சொல்லல..நான் போய் படுக்கறேன்..காலைல இந்த லெட்டெர படிச்சு பாரு...நீ எவ்ளவோ கெஞ்சி கேட்டும் நான் உங்கிட்ட இதுவரைக்கும் சண்டை போட்டதே இல்ல..ஆனா நாளைக்கு நீ ஆசைப்பட்ட மாதிரியே என்கிட்டே சண்டை போடுவேன்னு தோணுது..

  என்ன எழுந்திரிக்க சொல்லி...!!

  மாப்ள விஷுவல பாத்து பல தடவ யோசிச்சு அழுக வர அரை மணி நேரம் புடிக்கும் டா எனக்கு அவ்ளோ இரவான பிசு மச்சி நான், வார்த்தை இல் வலி .......நீ எழுத்தாளன் மச்சி ........கீப் ராக் ....(காதல்,7G ,Alahi ,சேது ,மௌன ராகம் ,இந்த பட கிளைமாக்ஸ் எல்லாத்தையும் நாலு வரில கொண்டு வந்துட்ட மச்சி..வாழ்த்துக்கள் சைந்தவி கிடைக்க .......)

 30. கலங்க வைக்கும் பதிவு..ரொம்ப டச்சிங்கா எழுதிருக்கீங்க !

 31. :-((( அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

 32. Really nice......
  i m commenting to a blog after 3years jus bcos of your writing...

 33. Anonymous says:

  அருமைமாயா இருக்கு.சூப்பர்

 34. மாப்ள இப்படி செம்மயா எழுதுறவன எப்படிடா ஆனந்தவிகடன் வெளியில விட்டுச்சு?

  சூப்பர்டா...

  ஆனந்தவிகடனுக்கு பேட்லக்தான்...

 35. அழகான காதல்! சுகமான கற்பனை... எல்லாஞ் சரி அந்த மாமனார் கேரக்டர் .... வரிக்கு வரி பாவம் ..!

 36. //எழுதி முடிச்சிட்டு ஒரு வாசகன படிச்சு பார்த்தப்போ, என் இதயத்தை தொட்ட பதிவுகள்ள இதுவும் ஒன்னு..இத படிச்சிட்டு உங்கள்ள யாராச்சும் ஒருத்தவங்க உங்க கணவருக்கோ இல்ல மனைவிக்கோ போன் பண்ணி ஐ லவ் யு சொன்னீங்கன்னா எனக்கு அது போதும்..சந்தோசமும் சிரிப்பும் சேர்ந்து இருக்கற ரோமன்ஸ்தானுங்களே வாழ்க்கை..!...வெளியூர்க்காரன்.//
  இதுவும் புனைவு என்பது அறிந்து
  மனதை சோகம் கவ்வுகிறது நண்பா.

  அப்படி ஐ லவ் யு சொல்ல முடிந்த தம்பதிகளுக்கு என் வந்தனம்.

  எனக்குத் தெரிந்தவரை இந்தக் கதைதான்: "In case I forget later on in the evening, the answer is no"

 37. Anonymous says:

  Nathan,
  Really its marvellous, after read this, i like to get married now and want to feel as it is u wrote.
  Konnutteenga!

 38. very touching....and it could be possible..

 39. மச்சி ... நீ எழுதுவேன்னு தெரியும் ..இவ்வளவு சூப்பரா எழுதுவேன்னு தெரியாது.
  பதிவை படிச்சதும் உனக்கு பரம ரசிகன் ஆயிட்டேன்..
  ஆனாலும் சும்மா சொல்ல கூடாது படிச்சி முடிச்சதும் ரொம்பவே பீல் பண்ணிட்டேன் தெரியுமா?

 40. @@@அமிர்
  சைந்தவி மாதிரி பொண்ணு கெடைப்பாளா பாஸ் ?///

  சிபி மாதிரி கணவன் கிடைச்சா அருக்காணி கூட சைந்தவிதான்..அதனால சைந்தவிகள தேடாதீங்க...எல்லா பெண்களுகுள்ளையும் சைந்தவிங்க இருக்காங்க...நீங்க சிபியா மாறுங்க...சிபியே உங்கள பார்த்து பொறாமபடர மாதிரி...சைந்தவிக்கள் தானா அதிகமாயடுவாங்க..எந்த பொண்டாடிக்குங்க நல்ல புருசன புடிக்காம இருக்கும்...பெண்கள் தான் அன்பால ஆக்ரமிக்கபடரத ரசிக்கற விரும்பற ஆத்மாக்கள்...இங்க சிபிக்களுக்குதான் பஞ்சம்..!

 41. @@@ஆரபி said...
  வாசித்த பின் கண்வழியே வழிந்த கண்ணீரை தடுக்க முடியவில்லை.
  வாழ்த்துக்கள்.////

  நான் இந்த பதிவ எழுதுனது உங்களுக்காக மட்டும்தான் ஆரபி...நான் சொல்ல வந்த விஷயம் உங்களுக்கு மட்டும்தான் புல்லா போய் சேந்திருக்கு...ரொம்ப மகிழ்ச்சி...உங்க கண்ணீர் என்ன நல்ல எழுத்தாளனா அங்கீகரிச்சிருச்சு..அந்த கண்ணீர் துளிகளுக்கு நான் கடமைபட்ருக்கேன் ..ஆம்பளைங்க அழுதத வெளில சொல்ல கூடாது...ஆனா, உங்ககிட்ட சொல்றதுல எனக்கு எந்த கூச்சமும் இல்ல..எழுதிட்டு படிச்சு பார்த்தப்ப கடைசி வரிகள்ள நானும் அழுதேன்...பாவம்ங்க சைந்தவி...!

 42. @@@Saravanan said...
  மாப்ள விஷுவல பாத்து பல தடவ யோசிச்சு அழுக வர அரை மணி நேரம் புடிக்கும் டா எனக்கு அவ்ளோ இரவான பிசு மச்சி நான், வார்த்தை இல் வலி .......நீ எழுத்தாளன் மச்சி.////

  வசிஷ்டர் வாயால மகரிஷி பட்டம்...நன்றி நண்பா...இப்ப ஷீலா என்னடா பண்ணிக்கிட்ருபா....?

 43. @@ to all....///

  அனைவரின் பாராட்டுக்கும் நன்றி...உங்கள் அனைவரின் பாராட்டையும் இந்த பதிவை எழுத உறுதுணையாய் நின்று எனக்கு ஊக்கம் அளித்த என் குடும்ப நண்பர் மரியாதைக்கும் அன்புக்கும் உரிய மகான் திரு.கிங்க்பிஷர் அவர்களுக்கு பணிவுடன் சமர்பிக்கிறேன்...உலேலே லேலே லே லே லே ...சியர்ஸ்...! (பீலிங்லாம் போதும் வாத்யாருங்களா..வெளியூர்காரானுக்கு சிரிக்கத்தான் புடிக்கும்.இங்க எல்லாம் இப்டி பீல் பண்றீங்க...உள்ள வரவே பயமாருக்கு..ஒரே பீலிங்க்ஸ் வாசனை....உவ்வே....)

 44. அற்புதமான பதிவு..மனைவி மீது உள்ள காதலை இதனைவிட அற்புதமாக விவரிக்க இயலாது..கடைசி வரிகள் உங்கள் எழுத்தின் வீச்சை புரியவைத்து என்னை உங்கள் ரசிகனாக்கியது.. கலக்குங்க பாஸ்...

 45. cho......... sweet

  cho......... sweet


  very nice

 46. thala(?)!!!!!

  unga theramaikku oru alavey illayah!!!!

  enna arumaya anubavichu ezhuthureenga

  seekiram ungalukku kalyanam agi unga thala(?)imurai selikkatum


  konjam overthan
  any way nice

 47. தம்பி...உண்மையாகவே அழுதுட்டேன்...அழகான கடிதம்...

 48. கடைசீல ஏதாவது காமெடி டுவிஸ்டு இருக்கும்னு நினைச்சேன் , ஆனா .............................?
  வெளியூரு டச் பண்ணிட்ட (சொந்த சரக்கு தான ? ஏன்னா உன் சுபாபத்துக்கும் இதுக்கும் கொஞ்சம் தூஊரமா இருக்கேன்னு பாத்தேன் )

 49. Anonymous says:

  அருமையான கடிதம்!

 50. டேய்...என்னடா ஆச்சு உனக்கு...? திடீர்னு புல்லரிக்க வச்சிக்கிட்டு இருக்க... ரொம்ப நல்லாயிருந்தது மச்சி...ஐ லவ் யூ சைந்தவியை விட இது Beautiful da... Real Classic from my Real Psycho!

 51. pooonga boss....so far your blog made me laugh...now you blog made me to cry...touching article...the finishing is amazing

 52. saju says:

  //லைப ரசிக்க தெரிஞ்ச பொண்டாட்டி கெடைச்ச எல்லாருக்கும் வாழ்க்கை சொர்க்கம்டி..//

  ரொம்ப பீல் பன்னவசிட்டிங்க பாஸ்

 53. அட.... என்ன மனுசன்யா நீ.....
  சத்தியமா சொல்லுறேன்.... உன் ப்ளாக் படிச்சபிறகுதான் நானே ப்ளாக் எழுத ஆரம்பிச்சேன்....
  சைந்தவியாவும் நீயே எழுதுற... அவ புருசனாவும் நீயே எழுதுற..... சான்சேஇல்லப்பா.... திரும்பவும் நீ என்ன கல்யாண ஆசைகுள்ள தள்ளிட்ட....
  உன்ன கட்டிக்கபோரவ ரொம்ப ரொம்ப கொடுத்துவைச்சவ.....
  நானும் உன்னமாதிரியே ஒரு சைந்தவிய தேடுறேன்.....
  ஆனா சத்தியமா உன் மாதிரி அன்பு காட்ட முடியுமாங்குறது சந்தேகம்தான்.
  திரும்பவும் என் எல்லா நண்பர்களுக்கும் இந்த ப்ளாக் லிங்க் அணுப்பிஒரு நல்ல சைந்தவிய தேட போறேன்.... நான் உன்மையிலேய உன்ன என் நண்பனும், என் ப்ளோக்கின் ரோல் மாதேல்னும் சொல்லிக்க பெருமை படுறேன்..... தொடர்ந்து எழுதுபா.....

 54. நல்ல கதை, ஆரம்பத்தில் மெல்ல காதாலாய் நகர்ந்து, பின் கனமாய் முடிகின்றது. யதார்த்தமா சொல்வதில் இருக்கு கதையின் வெற்றி. நல்ல இடுகை. இதை ஆனந்த விகடன் அல்லது குமுதத்திற்கு அனுப்பவும். மிக அருமையாக இருக்கின்றது. நன்றி.

 55. வரிகளில் காதல் பிச்சு உதறுது... நல்ல கற்பனை வளம் உங்களுக்கு.. பிரமாதமா வந்திருக்கு..

 56. உள்ளூர்க்காரன்,இந்தோனேசியா says:

  பயபுள்ளைக்கு லவ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சு போல..அதான் ஓவரா பீல் பண்ணுது...யோவ் யாருயா அங்க,சீக்கிரம் ஒரு பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணி வைங்கயா...அப்பத்தாண்டி தெரியும்..மவனே சிக்குன சிதைச்சுருவாளுக...
  ஆனா உண்மையாவே நல்லா இருக்கு,அடுத்த வாரம் என் பிரண்டுக்கு டேமேஜ் சாரி மேரேஜ்...முதல் வேலைய இந்த பதிவ அவனுக்கு மெயில் பண்ணினேன்..கீப் இட் அப்...உள்ளூர்க்காரன்,இந்தோனேசியா

 57. Ivan says:

  மனச தொட்டுடீங்க அண்ணே, இத வாசிச்சப்புறம் எனக்கும் வாழ்ந்தா சைந்தவி husband போல வாழனும் எண்டு ஆசையை வரவச்சுடீங்கள். கடைசி வரிகள் சூப்பர் அண்ணே, கட்டாயம் சைந்தவிண்ட பதில் கடிததைதை பொடுங்க. லேச கண்கள்ள தண்ணி வருது :)

 58. NSK Kuwait says:

  பதில் கடிதம் இப்பத்தான் படிச்சேன். நிறைய யோசிக்க வைத்தது , கொஞ்சம் வலித்தது. நல்ல பதிவு வாழ்த்துக்கள்

 59. thiagooo says:

  //ஒரு பதிவு எழுதிருக்கேன் படிச்சிட்டு எப்டி இருக்குன்னு சொல்லுடின்னு போன் பண்ணி சொல்ல கூட எனக்கும் ஒரு பிகர் இல்ல வாத்யாரே...//

  Ippadi maylae sonnathu pol unakku oru figure illaiyendraalum..yennidam sonnaayae...un natppai mathikkiren...As usual u r rocking machan..yeppavumey yevvalavu humour raa irundhaalum climax touching gaa irundhuthunaa..then it will defenately hit...naan iruvaraikkum yen kavithai gala veliyil post pannathu illa...But i will send one my kavithai to ur gmail id...thats "Un thiramaikku intha nanbanin Parisu"....

 60. potkody says:

  கண்ணை நிறைச்சுது உங்க எழுத்து. என் அப்பா எண்டா எனக்கு உசிரு. ஆனால் இந்த வெளியூர்காரானை அறிமுகபடுத்தினது என் காதலன். எப்போ அவனை இணைந்து ஒரு சைந்தவியா வாழுவேன் என ஏங்க வச்சிட்டீங்க போங்க ..superb ..

 61. superb!! உங்க வரிகளிலை தாஜ்மகாலை வடிச்சிருக்கிறீங்க !!!

 62. உங்கள் எழுத்துக்களில் வைரம் பாய்ந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.ரெட்டை வால்ஸின் இப்படிக்கு சைந்தவி படிச்சுட்டுத்தான் இங்கே வந்தேன். ஒரே மூச்சில் படித்து விட்டேன். உங்கள் இருவரின் எழுத்துக்களும் மனதை நெகிழ வைக்கிறன. ஒரு சின்ன வேண்டுகோள், முடிந்த அளவு எழுத்துப்பிழைகளைத் தவிர்க்கவும். விரைவில் அடுத்த தளத்திற்குச் செல்வீர்கள். வாழ்த்துக்கள்!

 63. //அதெல்லாம் இல்ல,நான் தூங்கிக்கிட்டுதான் இருக்கேன்னு சொல்லி உங்கப்பன் முட்டாள்னு கன்பார்ம் பண்றது...///
  :-)
  //நீ யார கிண்டல் பண்ணுவேன்னு கதறுனப்போ நான் கொஞ்சம் கலங்கிதாண்டி போயிட்டேன்.///
  சிலிர்க்குதுங்க ..!!
  //ஆனா நாளைக்கு நீ ஆசைப்பட்ட மாதிரியே என்கிட்டே சண்டை போடுவேன்னு தோணுது..
  ///
  உண்மையாவே அவ்ளோ நகைச்சுவையா கொண்டுவந்து கடைசில கண்ணீர் விட வச்சுட்டீங்க ...!!

 64. தல கடசில என்ன ஆண்ட்டி (அய்யோ அந்த ஆண்ட்டி இல்ல சாமி anti)டிவிஸ்ட் நிச்சயம் உங்களோட இதயத்த தொட்ட பதிவு மட்டும் இல்ல எல்லாரோட இதயத்தயும் தொட்டது தான்......மிஸஸ் ரொம்ப தான் கொடுத்து வச்சவங்க போங்க...........சூப்பர் அப்பு..

 65. நண்பரே, உண்மையில் மிக அருமையான படைப்பு இது. இதை நான் சிரித்துக் கொண்டும், அழுது கொண்டும் தான் படித்தேன். உண்மையில் வாழ்ந்தால் இவர்களைப் போல் அன்னியோன்யமாக வாழவேண்டும், இல்லையேல் இதை 10 லட்சம் தடவையாவது தம்பதிகளாகப் படிக்க வேண்டும், இதற்கு மேல் என்னால் எழுத முடியவில்லை அழுகாச்சி அழுகாச்சியா வருது!!!

 66. ரொம்ப பீல் பன்னவசிட்டிங்க பாஸ் super very impressed....

  www.vtthuvarakan.blogspot.com

 67. இந்தப் பதிவைப் படிச்சுட்டு திரும்பவும் சைந்தவியோட லெட்டரைப் படிச்சேன்..

  ஒன்னுக்கு ஒன்னு மிஞ்சுதுங்க.. எவ்வளவு ஆழமான ஃபீல்..

  ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர்..

 68. அருமையான பதிவு...அப்ரம் அந்த முதலிரவுப் பரிசு என்னனு சொல்லுங்க .....

 69. Sudharsan says:

  I havent posted any comments in the last two years to any blogger.. but after reading this blog i couldnt control myself from doing so...
  Nejamalume kalakkittinga !!!