- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 57 comments and to comment-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


மாமானாரை தெய்வமாய் மதிப்போர் சங்கம்..வெளியூர்க்காரன் ட்ரெய்லர்

வாழ்க்கைல ரொம்ப அழகான விஷயங்கள் நெறைய இருக்கு பாஸ்..அதுல ஒன்னு மாமனார தெய்வமா நெனைச்சு வணங்கறது..அவனுகள மாமனாருன்னு சொல்றதே தப்பு சார்...அந்த வெண்ணைகள எல்லாம் மாமனார்சார்னுதான் சொல்லணும்...தக்காளி அவ்ளோ மரியாதை குடுக்கணும் அந்த வாழும் தெய்வங்களுக்கு..! நான்லாம் என் மாமனாரமாமனார் சார் ஜி” ன்னுதான் சொல்லுவேன்..பின்ன சும்மாவா...எனக்கும் பொண்ணு குடுத்த மாங்கா சாமி சார் அந்த பீசு...!


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


சைந்தவியின் சாக்லேட் பக்கங்கள் - வெளியூர்க்காரன் டைரி.. ட்ரெய்லர் 


இது சைந்தவி சைந்தவின்னு ஒரு ட்ரீம் கேர்ள உருகி உருகி லவ் பன்னவனோட ஒரிஜினல் சைந்தவிய பத்தின கதை..ஒரிஜினல் வெர்ஷன்..போன மாசம் எனக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சதுலேர்ந்து இந்த பக்கங்கள் ஸ்டார்ட் ஆகுது...இனி வெளியூர்க்காரனோட டைரிய நீங்க சுடசுட ஜாலியா படிக்க போறீங்க..(உங்களுக்குத்தான் அடுத்தவன் டைரிய படிக்கறதுன்னா ரொம்ப புடிக்குமே..).அதனால சைந்தவிய பத்தின என் டைரி குறிப்புகள் இனி வெளியூர்க்காரன்ல நெறைய வரும்.. தொடர்கதை மாதிரி...இந்த தொடர் வரபோறத யாராலையும் தடுக்க முடியாது...(ஏன்னா இது என்னோட ப்லாக்டி வெண்ணைகளா...நான் என்ன வேணா எழுதுவேன்..மூடிகிட்டு படிங்க....) அதில் ஒரு பக்கத்தில் இடையில் வரும் ஒரு சில வரிகள்...இதோ...!


சைந்தவி கதைய போன்ல படிச்சு காமிச்சா போன்ல தேம்பி தேம்பி அழறா...அழாதடின்னு சொல்லகூட தோணல...எனக்கு எதிர்ல  ரோட்ல ஒரு பொண்ணு ரொம்ப அழகா போராடின்னு சொன்னா அவ அங்க எச்சில முழுங்கறது எனக்கு இங்க பத்தாயிரம் வாட்ஸ்ல டிடிஎஸ் எபக்ட்ல கேக்குது...என்னோட ஸ்கூல் லவ்வ பத்தி சொன்னா அமைதியா கேக்கறா...அந்த பொண்ணு சிரிக்கறப்போ அவ கன்னத்துல விழற குழி அவ்ளோ அழகா இருக்கும்டின்னு சொன்னா ப்ளீஸ் என்கிட்டே இதெல்லாம் சொல்லாதீங்கனு கெஞ்சறா...!


என்ன சார் இது...என் வாழ்க்கை திடீர்னு இவ்ளோ அழகாவுது...நான் ரோட்ல எதிர்ல வந்தா ஊர விட்டு ஓடிபோற பட்டாம்பூச்சி எல்லாம் டெய்லி என் காதுல வந்து குட் மார்னிங் சொல்லிட்டு கண்ணடிச்சு சிரிக்குது... எப்போதுமே என்ன கிராஸ் பண்றப்ப உம்முன்னு போற குழந்தைங்க எல்லாம் இப்ப என்ன பார்த்து பாசமா சிரிக்கறாங்க...அதுவும் ஏன்னு தெரியல...பக்கத்து வீட்ல கூண்டுக்குள்ள இருக்கற லவ் பேர்ட்ஸ் ரெண்டும் நான் ஷூ போடும்போதெல்லாம் என்ன பார்த்து பலிப்பு காமிச்சு கீச்சு மூச்சுன்னு கத்தி டீஸ் பண்ணுது...நைட்ல தூங்க போறப்ப ரூம் மேட்டுக்கு குட் மார்னிங் சொல்றேன்..அவனும் சிரிச்சுகிட்டே குட்மார்னிங்...குட்மார்னிங்..நடத்துடி ராஜா நடத்துன்னு சிரிக்கறான்... ! 


சிரிச்சுகிட்டே இருக்கணும்போல தோணுது..திடீர்னு ன்னு அழ தோணுது..இந்த பொண்ணுகிட்ட சொல்றதுக்காக இத்தன வருசமா யோசிச்சு வெச்சிருந்த ஜோக் எதுவுமே ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது.. வாழ்க்கைல பர்ஸ்ட் டைம் ஜோக் அடிக்க தெனர்றேன்..நெறைய நேரம் ரெண்டு பெரும் போன்ல பேசாம அமைதியாவே இருக்கோம்...ஏன்னு தெரியல...அதுக்கப்றம் கொஞ்ச நேரம் சிரிக்கறோம்...அதுவும் ஏன்னு தெரியல...அவகிட்ட பேசணும்னு தோணுது...இத எழுதிகிட்டு இருக்கும்போது கூட...எதாச்சும் பேசணும்னு தோணுது...பேசிகிட்டே இருக்கணும்னு மட்டும்  தோணுது..!

அய்யோ..என்னாச்சு எனக்கு...லவ் சுத்த ஹம்பக்குன்னு ஒரு வருசத்துக்கு முன்னாடி மாயாஜால்ல பீர் அடிச்சிட்டு என் பிரெண்டோட அப்பா மேல சத்தியம் பண்ணவன் சார் நான்.. !

இப்போ நானும்...!

சாவுக்கும் பக்கம் வந்தேன்..இதன் பேரே காதல் என்றேன்...ஹோசான்னா...!
-------------------------------------------------------------------------------------------------------------

இப்டி ரெண்டு பதிவ வெளியூர்க்காரன் எழுதிருக்கான் பாஸ்...அடுத்த பதிவுல எத போஸ்ட் பண்றதுன்னு நீங்களே சொல்லுங்க..மாமனாரை தெய்வமாய் மதிப்போர் சங்கம் படிச்சு பார்த்துட்டு என் பிரெண்ட் நேத்திலேர்ந்து தனியா உக்காந்து விழுந்து விழுந்து சிரிச்சுகிட்ருகான்..நல்லா வந்துருக்குன்னு நெனைக்கறேன்...சைந்தவியின் சாக்லேட் பக்கங்கள் படிச்சு பார்த்துட்டு எனக்கே என் ஆள்கிட்ட உடனே பேசணும் போல தோணுது..!


அதனால எது பர்ஸ்ட் படிகரீங்கன்னு நீங்களே சொல்லுங்க...இன்னும் நாப்பத்தி எட்டு மணி நேரத்துல பதிவ போடலைனா வெளியூர்காரன ஹாக் பண்ணிடுவேன்னு பட்டாப்பட்டி மெரட்னதால இந்த பதிவ போடல...திரு பட்டாபட்டியார் ஹாக் பண்ற அளவுக்கு வெளியூர்க்காரன் ப்ளாகுக்கு வொர்த் இல்லைங்கரதால இந்த பதிவ போடறேன்...!


(@பட்டாப்பட்டி..! எலேய் பட்டாப்பட்டி...தக்காளிமக்க உனக்கு வெயிட் ஏத்தி எழுதிருக்கேன்...உன்னோட அடுத்த பதிவுல எனக்கு வெயிட் ஏத்தி நீ ஒரு வரி எழுதிரு...இல்லாட்டி உன் மரியாதை கெட்டுபோயிரும்..உன் மானத்தை வாங்கிபுடுவேன்...இப்டியெல்லாம் தமிழ்  பதிவுலகத்துல மாத்தி மாத்தி எச்ச்சதனமா  விளம்பரம் பண்ணிக்கலைனா நம்மள அந்த மானம்கெட்ட பிரபல பதிவர்கள் மதிக்கமாட்டாங்கேயா ..ஏன்னா அவேங்களும் இப்புடித்தான்...)


இப்ப நீங்க சொல்லுங்க பாஸ்..மொதோள்ள எத படிக்கறீங்க..?


இப்படிக்கு...


என் மாமனாரின் அன்பு ஆசிர்வாதங்களோடு,


வெளியூர்க்காரன்..

57 Responses so far.

 1. யோவ் பட்டாப்பட்டி.நீ சொன்னாமாதிரியே பதிவ போட்டேன்.....!
  நான் மானஸ்தன்யா...! இப்பவாச்சும் நம்பு...! :)

 2. யோவ் பட்டாபட்டி பாத்தியா?, வெளியூர்க்காரன் மானஸ்தன்பா ,நம்புயா? இல்லைனா மானம் கெட்ட பிரபல பதிவர்கள் மானத்த வாங்கபோறாங்கடி!

 3. யோவ் ,

  நீ வெளியூர்க்காரன் தானே ?எங்க பட்டாபட்டி நீ ப்ளோக மூடிடேன்னு சொல்லிச்சு ? :) அட்ரஸ் ப்ரூப் எதனா இருந்து கொடு :))

 4. கலக்குயா வெளியூரு ...,பட்டா வை நாங்க பார்த்துக்கிறோம் :))

 5. /////அந்தபொண்ணு சிரிக்கறப்போ அவ கன்னத்துல விழற குழி அவ்ளோ அழகா இருக்கும்டின்னுசொன்னா ப்ளீஸ் என்கிட்டே இதெல்லாம் சொல்லாதீங்கனு கெஞ்சறா...!////////

  அண்ணி ,
  இதெல்லாம் நம்பாதீங்க ,சும்மா பீலா பீலா :))))

 6. Jey says:

  வெளியூரு, நீ என்னமா, எழுதுர தெரியுமா?. எப்படியா உன்னால மட்டும் இப்படி ....??!!!., பட்டாபட்டி அப்புறம் இந்த பதிவுலகத்துல இருக்கிர அல்லாரும் உன்னபத்தி சொன்னப்போ , நம்ம்பல. ச்சே நீ பெரிய ஆளுயா.( இன்னும் எவ்வளவு ஏனும்னாலும் எழுதுரேன், வந்து எனக்கு follower ஆயிரு, அப்படியே ரெடையையும் கூட்டிட்டிட்டு வந்துரு, ச்சே என்னா மானக்கெட்ட பொளப்புறா இது...)

 7. @@@ஆண்டாள்மகன்
  யோவ் பட்டாபட்டி பாத்தியா?, வெளியூர்க்காரன் மானஸ்தன்பா ,நம்புயா? இல்லைனா மானம் கெட்ட பிரபல பதிவர்கள் மானத்த வாங்கபோறாங்கடி!////////////

  யோவ் பட்டாபி...பிரபல பதிவர்கள்னாவே மானம் கெட்டவங்கதான...அதென்ன மானம் கெட்ட பிரபல பதிவர்கள்...புதுசா இருக்கு...? :)

 8. வெளியூரு ,

  உன் ப்ளோக நிறைய தடவை படிச்சிருக்கேன் யா ..அதனால உரிமையோட கமெண்ட் போட்டிருக்கேன் ...உனக்கு பிடிக்கலேன்னா delete பண்ணிடு..,எங்க பட்டா சொல்லித்தான் என்னக்கு உன்னை தெரியும்

 9. @@@பனங்காட்டு நரி said...
  வெளியூரு ,உன் ப்ளோக நிறைய தடவை படிச்சிருக்கேன் யா ..அதனால உரிமையோட கமெண்ட் போட்டிருக்கேன் .உனக்கு பிடிக்கலேன்னா delete பண்ணிடு..,எங்க பட்டா சொல்லித்தான் என்னக்கு உன்னை தெரியும்./////

  டேய் ரெட்டை...நீ பனங்காட்டு நரியோட குடல் வறுவல் சாப்ட்ருக்கியா...! மிளகு போட்டு சாப்ட்டா நெகம் நல்லா வளருமாம்டா...!! (இலுமி வேற ரொம்ப நாலா வருத்தபட்றான்..! என்னா ஓகேவா...? :)

 10. @@@Jey said...
  இன்னும் எவ்வளவு ஏனும்னாலும் எழுதுரேன், வந்து எனக்கு follower ஆயிரு, அப்படியே ரெடையையும் கூட்டிட்டிட்டு வந்துரு, ச்சே என்னா மானக்கெட்ட பொளப்புறா இது...)////

  ஜெய் மச்சி..இந்த பொழைப்பு பொழைக்கறதுக்கு நீ போய் அதாகப்பட்ட பிரபல பதிவரோட பதிவுகள படிச்சிட்டு தூக்குல தொங்கலாம்...! ( எலேய் தக்காளி என்னதிது சின்னபுள்ளதனமா...இங்க எவனையும் மதிக்காத மச்சி...இன்னொரு தடவ நீ எங்கயாச்சும் போய் இத சொல்றத பார்த்தேன்..அடுத்த ஆடு நீதாண்டி...! :) )

 11. Jey says:

  வெளியூரு, பொம்பள பசங்ககிட்டே மாடாதையா, பொளப்பு சிரிப்பா சிரிச்சுரும், அனுபவத்துல பொலம்பிகிட்டு திரியுரோம். உந்தலைவிதி எப்படின்னு சோசியக்காரனுககிட்ட எதுக்கும் கேட்டு த்ரெரிஞ்சிக்க:)

 12. Jey says:

  எப்ப பதி எழுதுனோமோ, அப்பவே இந்த மானம் , ரோசம்,வெட்கம் வேலயுதம் எல்லாம் போச்சி. பதிவ போடுயானு, பட்ட, பன்னிகுட்டி, பருப்பு,மங்குனி,முத்து எல்லோரும் ஏத்திவிட்டத, வெள்ளந்தியா நம்பி உள்ள வந்துட்டேன், இனிமே னீங்க போட்ருக்கிற ரோட்ல, புல்டோசர் ஓட்டானும் போல.

 13. @@@@Jey
  வெளியூரு, பொம்பள பசங்ககிட்டே மாடாதையா, பொளப்பு சிரிப்பா சிரிச்சுரும், அனுபவத்துல பொலம்பிகிட்டு திரியுரோம். உந்தலைவிதி எப்படின்னு சோசியக்காரனுககிட்ட எதுக்கும் கேட்டு த்ரெரிஞ்சிக்க:)///////////

  உஆஆவ்...சீரியஸா அட்வைஸ் பண்ணும் பீசுகளிடம் வெறித்தனமாய் கொட்டாவி விட்டு நக்கல் அடிப்போர் சங்கம்..சிங்கப்பூர் மாவட்டம்...:)

 14. @@@@Jey said...
  பதிவ போடுயானு, பட்ட, பன்னிகுட்டி, பருப்பு,மங்குனி,முத்து எல்லோரும் ஏத்திவிட்டத, வெள்ளந்தியா நம்பி உள்ள வந்துட்டேன்,./////

  யோவ் என்னய்யா காமெடி பண்ற...நீ சொல்ற எல்லா பயலும் அக்கியுஸ்டுயா..பூரா பேர் மேலயும் இங்க நெறைய கேசு இருக்கு...எல்லாம் விவாகரம் புடிச்சவங்கே..அப்பாவியா ஒருத்தன் மாட்டுன அவன் குரவளைய கடிச்சு கடிச்சு ஜாலியா வெளையாடற கூட்டம்....இவங்கே பேச்ச கேட்டு உள்ள வந்துருக்க...உள்ள விட்டு வெட்டுறதுக்காக வலை விரிச்சிருகாணுக..சிக்கிட்டியே என் சிங்கமே...தப்பிச்சு ஓடிரு ராஜா...உனக்கு "பட்டாப்பட்டி - வெளியூர்காரன் - ரெட்டைவால்ஸ்" போர்க்களத்தோட வரலாறு தெரியாது...! :)

 15. Jey says:

  //.நீ சொல்ற எல்லா பயலும் அக்கியுஸ்டுயா..பூரா பேர் மேலயும் இங்க நெறைய கேசு இருக்கு...எல்லாம் விவாகரம் புடிச்சவங்கே..அப்பாவியா ஒருத்தன் மாட்டுன அவன் குரவளைய கடிச்சு கடிச்சு ஜாலியா வெளையாடற கூட்டம்....///

  உள்ள வந்தாச்சு, கேட்டயும் முடிட்டனுக, இனி உள்ளுக்குள்ள ஆபத்துவந்த பிறாண்ட வேண்டியதுதான்.

 16. Jey says:

  என்ன இதுவரையிலும் ரொம்ப ஜெண்டில்மேனாத்தான் ட்ரீட் பண்ரானுக, ஒருவேலை, மரைவுல ஏதும் சதி நடக்குதானு தெரியல....

 17. @@@@Jey
  என்ன இதுவரையிலும் ரொம்ப ஜெண்டில்மேனாத்தான் ட்ரீட் பண்ரானுக, ஒருவேலை, மரைவுல ஏதும் சதி நடக்குதானு தெரியல....///

  தக்காளி பதிவுல ஒரு கேள்வி கேட்ருக்கேன்..அதுக்கு யாராச்சும் பதில் சொல்றானுகலா பாரு..எல்லாம் சம்பந்தம் சம்பந்தம் இல்லாமையே பேசுறாங்கே...ஏன்யா இங்க வந்து சேர்றவங்கேலும் எங்கள மாதிரி லூசாவே இருக்கீங்க...யோவ் பட்டாப்பட்டி காரமடை சோசியர்கிட்ட சொல்லி இதுக்கு ஒரு பரிகாரம் பண்ண சொல்லுயா...! :)
  ( எலேய் எவன்டா அவன் என் செல்லத்த ஜென்டில்மேன் மாதிரி டீசெண்டா ட்ரீட் பண்ணது...நீ வருதபடாதரா செல்லம்...மாமா வந்துட்டேன்..நான் பார்த்துகறேன்... டேய் இலுமி இந்த பீசுக்கு மஞ்ச தண்ணி ரெடி பண்ணு ராசா...! காட்டுமிராண்டிதனமா ட்ரீட் பண்ணி செல்லத்த சந்தொசபடுத்தி உற்சாகபடுத்துவோம்..... ) :)

 18. அடியேய்... நிச்சயதார்த்தம் மட்டும் தான் நடந்திருக்கு. இன்னும் பொண்ணை கட்டிக்குடுக்கல... மாமனாரை இன்னும் மரியாதையா கூப்பிடு...

  நீ மாமனாரை “மாமனார் சார் ஜி”-னு சொல்றதை அவரு கரெக்டா சர்தார்ஜி-னு புரிஞ்சுகிட்டார்னு வையி... மவனே செத்தே...

 19. //அவ அங்க எச்சில முழுங்கறது எனக்கு இங்க பத்தாயிரம் வாட்ஸ்ல டிடிஎஸ் எபக்ட்ல கேக்குது//

  ஏதோ வயிறு கடாமுடாங்குதுன்னு சொன்னியே...கேஸ் ட்ரபுள் சரியாயிடுச்சா மச்சி உனக்கு...

  நீ பேச்சு சுவாரஸ்யத்துல சவுண்டு உங்கிட்ட இருந்துதான் கேக்குதுங்கிறதையே மறந்துட்டே பார்த்தியா...!

 20. //அந்த பொண்ணு சிரிக்கறப்போ அவ கன்னத்துல விழற குழி அவ்ளோ அழகா இருக்கும்டின்னு சொன்னா ப்ளீஸ் என்கிட்டே இதெல்லாம் சொல்லாதீங்கனு கெஞ்சறா...!//

  அந்தப் பொண்ணுக்கு பூச்சிப்பல்லுனு பக்கத்துக்கு நாலா புடுங்குனத சொல்லிடாத மச்சி... அப்படியே பில்டப் குடு...

 21. //நான் ரோட்ல எதிர்ல வந்தா ஊர விட்டு ஓடிபோற பட்டாம்பூச்சி எல்லாம் டெய்லி என் காதுல வந்து குட் மார்னிங் சொல்லிட்டு கண்ணடிச்சு சிரிக்குது.//

  நீ ஃபோனை ஒரே பக்கமா வச்சிகிட்டு பேசிக்கிட்டே இருந்திருப்ப... இன்னொரு பக்கம் அது வந்து கூடு கட்டி குடும்பம் நடத்துறது... உனக்கு குட்மார்னிங் சொல்ற மாதிரி இருக்கா...

 22. //எப்போதுமே என்ன கிராஸ் பண்றப்ப உம்முன்னு போற குழந்தைங்க எல்லாம் இப்ப என்ன பார்த்து பாசமா சிரிக்கறாங்க...//

  வழியை விட்டு விலகி நில்லுயான்னு அதுக சைனீஸ் மொழில சொல்றது... சிரிக்கிற மாதிரி தெரியுதா.. இல்ல அப்படி சொல்லி சமாளிக்கிறீயா??

 23. //பக்கத்து வீட்ல கூண்டுக்குள்ள இருக்கற லவ் பேர்ட்ஸ் ரெண்டும் நான் ஷூ போடும்போதெல்லாம் என்ன பார்த்து பலிப்பு காமிச்சு கீச்சு மூச்சுன்னு கத்தி டீஸ் பண்ணுது..//

  பக்கத்துல கீழ இருக்குற அரிசி டப்பாவை எடுத்து கூண்டுக்குள்ள வையி பசிக்குதுன்னு அதுக சொல்றது உனக்கு ஏன் ராசா அப்படி கேக்குது...?

 24. @@@@ரோஸ்விக்
  நீ ஃபோனை ஒரே பக்கமா வச்சிகிட்டு பேசிக்கிட்டே இருந்திருப்ப... இன்னொரு பக்கம் அது வந்து கூடு கட்டி குடும்பம் நடத்துறது... உனக்கு குட்மார்னிங் சொல்ற மாதிரி இருக்கா...///

  ஆகா கேப்ல மூச்சுவிடாம கலாசுராங்கேலே...விடாதரா வெளியூர்க்காரா..சமாளிடா..உனக்கு இந்தமாதிரி அவமானங்கள் புதுசா என்ன...மெய்ண்டெயின் பண்றா...! வாய்யா ரோஸ்விக்கு...எப்புடியா இருக்க..? (ஏன்யா இந்த ரெத்தவெறி...கொஞ்சம் கேப் விட்டு கேப் விட்டு உதைங்கையா...மூச்சு தெனருது..) :)

 25. //நைட்ல தூங்க போறப்ப ரூம் மேட்டுக்கு குட் மார்னிங் சொல்றேன்..அவனும் சிரிச்சுகிட்டே குட்மார்னிங்...குட்மார்னிங்..நடத்துடி ராஜா நடத்துன்னு சிரிக்கறான்... !//

  ஆஃபீஸ்-ல போயி தூங்குறது அவனுக்கும் தெரிஞ்சிருக்கு...ம்ம்ம்ம்

 26. //நெறைய நேரம் ரெண்டு பெரும் போன்ல பேசாம அமைதியாவே இருக்கோம்...ஏன்னு தெரியல...//

  இப்ப கொஞ்ச நாளா சிக்னல் சரியில்லாம அடிக்கடி கனெக்‌ஷன் கட்டாயிருது மச்சி.. ஒழுங்கா செக் பண்ணிக்க...

 27. //உன்னோட அடுத்த பதிவுல எனக்கு வெயிட் ஏத்தி நீ ஒரு வரி எழுதிரு...இல்லாட்டி உன் மரியாதை கெட்டுபோயிரும்..உன் மானத்தை வாங்கிபுடுவேன்... ///

  ஏய் ஏய்... என்னையும் ஆட்டையில சேர்த்துக்கங்கப்பா... நானும் வாரேன்... ப்ளீஸ் பா...
  கல்கோணா, தேன்முட்டாய் எல்லாம் வாங்கித்தாரேன். ப்ளீஸ் பா...

 28. @@@@ரோஸ்விக் said...
  ஆஃபீஸ்-ல போயி தூங்குறது அவனுக்கும் தெரிஞ்சிருக்கு...ம்ம்ம்ம்////

  ச்சே என்னோட காதல் காவியத்த ரஜினிகாந்த் மாதிரி பில்ட் அப்போட சொல்ல வந்தேன்...தக்காளி அடிச்சு துவைச்சு நாறடிச்சு நாசமாக்கிபுட்டியேயா அஞ்சே கமெண்ட்ல...! யோவ் பட்டாப்பட்டி...சட்டத்துக்கு என்னாச்சு திடீர்னு...புல் பார்ம்ல இருக்கு...வெறி கொண்டு கலாய்க்குது...சமாதானமா போனாலும் விடமாட்டேங்குது...! வந்து காப்பாத்துயா...:)

 29. Appart from jokes... its very nice writing machi. வழக்கம்போல் கலக்கல்... I Love it.

  நீ எத வேணும்னாலும் எழுது... எல்லாமே ரசிக்கும்படியா இருக்கு...
  ஆனா, மாமனாரு மேட்டர்ல மட்டும் கொஞ்சம் உஷாரா இரு... (உனக்கெல்லாம் பொண்ணு குடுக்குறாரு... அந்த பெரிய மனசுக்கே நீ அவருக்கு மரியாதை கொடுக்கலாம்.)

 30. @@@@ரோஸ்விக் said...
  நீ எத வேணும்னாலும் எழுது... எல்லாமே ரசிக்கும்படியா இருக்கு...
  ஆனா, மாமனாரு மேட்டர்ல மட்டும் கொஞ்சம் உஷாரா இரு.../////

  நாங்கல்லாம் ஓடுற புலிய குறுக்க போய் நின்னு சண்டைக்கு இழுக்கரவங்கே.பாம்ப புடிச்சு காது குடையரவங்கே.கடுப்புல இருக்கற காண்டாமிருகத்துகிட்ட வத்திபெட்டி கேக்கரவங்கே...எதுக்கும் பயப்பட மாட்டோம்... என் மாமனாரேல்லாம் எனக்கு உட்டாலக்கடி கிரிகிரியா யோவ்...! :)

 31. ஆ.... வாய்யா..
  இப்பத்தான் பழைய பார்ம்-ல வந்திருக்க..

  கலக்கு..

 32. //பக்கத்து வீட்ல கூண்டுக்குள்ள இருக்கற லவ் பேர்ட்ஸ் ரெண்டும் நான் ஷூ போடும்போதெல்லாம் என்ன பார்த்து பலிப்பு காமிச்சு கீச்சு மூச்சுன்னு கத்தி டீஸ் பண்ணுது..//


  ஓ..அதுவா.. சாக்ஸ்-ச துவச்சு போடுயா..கப்பு அடிக்குது சொல்லுதோ..என்னமோ?..

 33. ஓய்.. மாமனரா பற்றி.. நக்கலா எழுதினே..

  அப்புறம் Life Long ஹஸ்பெண்ட்தான்..
  ஒரு ஓரத்தில வெச்சுக்க..

  மாமனார் பற்றி கொஞ்சம் அடக்கி வாசி மாம்ஸ்...

 34. வெளியூரு..

  பதிவ ரெம்ப நாள் கழிச்சு அழகா ஆரம்பிச்சுருக்கே..அப்படியே கண்டின்யூ பன்ணு..

  திரும்பவும் கையில வேப்பிலை எடுக்க வெச்சுடாதே...

 35. மாமானாரை தெய்வமாய் மதிப்போர் சங்கம்..வெளியூர்க்காரன் ட்ரெய்லர்/////

  பார்த்து இப்பவே மெயின் பிக்சரை காட்டிடாதே அப்புறம் இந்த மாங்காவும் ஓடிடுசுன்னா நீ வாழ்நாள் முழுவதும் பூரி கட்டை,வெளக்கமாத்து அடி எதுவும் வாங்க முடியாமல் போகிடும்

 36. என்னோட ஸ்கூல் லவ்வ பத்தி சொன்னா அமைதியா கேக்கறா...///////////////


  சனியை நீயே சேர் போட்டு உட்கார வைசுட்டேயே பரட்ட,இப்போ அமைதியாய் கேட்டுகிறதே பின்னால் உனக்கு ஆப்பு வைக்குறதுக்கு தான்

 37. .நைட்ல தூங்க போறப்ப ரூம் மேட்டுக்கு குட் மார்னிங் சொல்றேன்..அவனும் சிரிச்சுகிட்டே குட்மார்னிங்...குட்மார்னிங்..நடத்துடி ராஜா நடத்துன்னு சிரிக்கறான்... ! ////////

  உங்க ரூம் மேட்டுக்கு தெரியும் இன்னும் எவ்வளவு நாளுக்கு இவன் தாங்க போறான் அதான் இப்பவே உன்னை பார்த்து சிரிச்சு வைக்கிறார்


  விதி வலியது

 38. சிரிச்சுகிட்டே இருக்கணும்போல தோணுது.//////////

  இப்பவே முடிஞ்ச வரை சிரிச்சு முடிச்சுடு பிறகு நீ நினைத்தாலும் முடியாது

 39. Jey says:

  மயக்கத்துல இருக்குரவங்களுக்கு ஏது சொன்னாலும் கேக்காது முத்து...

 40. இத்தன வருசமா யோசிச்சு வெச்சிருந்த ஜோக் எதுவுமே ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது..///////////

  சொல்லி கில்லி தொலைக்காதே அப்புறம் இப்பவே அவங்க கச்சேரியை ஆரம்பிச்சுடுவாங்க

 41. Jey said...

  மயக்கத்துல இருக்குரவங்களுக்கு ஏது சொன்னாலும் கேக்காது முத்து.../////////////

  கல்யாணம் ஆகி கொஞ்ச நாளில் வாங்குற வாங்கில் மயக்கம் தன்னால் தெளிஞ்சுடும்

 42. Jey says:

  முத்து said...
  சிரிச்சுகிட்டே இருக்கணும்போல தோணுது.//////////

  இப்பவே முடிஞ்ச வரை சிரிச்சு முடிச்சுடு பிறகு நீ நினைத்தாலும் முடியாது//

  அப்புறம் அழுவுரதுக்கு கூட பெர்மிசன் வேணும்டியோவ்வ்வ்வ்....

 43. அதனால எது பர்ஸ்ட் படிகரீங்கன்னு நீங்களே சொல்லுங்க../////


  முதலில் மாமனாரை பற்றியே போடு,அப்போ தானே தெரியும் உனக்கு பின்னாளில் உள்காயம் மட்டுமா இல்லை ரத்த காயமும் உண்டான்னு தெரியும்

 44. Jey said...


  அப்புறம் அழுவுரதுக்கு கூட பெர்மிசன் வேணும்டியோவ்வ்வ்வ்....////

  வெளி கேட்டுக்கோ அனுபவஸ்தர் சொல்லுறாரு கேட்டுகிட்டு உஷாரா இரு

 45. Jey says:

  முத்து said...
  Jey said...

  மயக்கத்துல இருக்குரவங்களுக்கு ஏது சொன்னாலும் கேக்காது முத்து.../////////////

  கல்யாணம் ஆகி கொஞ்ச நாளில் வாங்குற வாங்கில் மயக்கம் தன்னால் தெளிஞ்சுடும்//

  சரி விடு முத்து நம்ம கூட்டத்துல வந்து சேரனும்னு துடியாத்துடிக்குது, தக்காளி, வந்து சேரட்டுமே.

 46. //என்னோட ஸ்கூல் லவ்வ பத்தி சொன்னா அமைதியா கேக்கறா//

  ஆங்!நோட்ஸ் எடுக்குறப்ப எல்லாம் அதுக அமைதியா தான் மச்சி இருக்குங்க.எடுத்துக் காட்டுறப்ப தானடி இருக்கு உனக்கு கச்சேரி...

  //பக்கத்து வீட்ல கூண்டுக்குள்ள இருக்கற லவ் பேர்ட்ஸ் ரெண்டும் நான் ஷூ போடும்போதெல்லாம் என்ன பார்த்து பலிப்பு காமிச்சு கீச்சு மூச்சுன்னு கத்தி டீஸ் பண்ணுது...//

  யோவ்,அடிச்ச கப்புல அதுங்க கதறுனது உனக்கு டீஸ் பண்ற மாதிரி இருக்கா?

  //நைட்ல தூங்க போறப்ப ரூம் மேட்டுக்கு குட் மார்னிங் சொல்றேன்..அவனும் சிரிச்சுகிட்டே குட்மார்னிங்...குட்மார்னிங்..நடத்துடி ராஜா நடத்துன்னு சிரிக்கறான்... ! //

  எங்க ஊர்ல சொல்லுவானுங்க,'பைத்தியக்காரப் பயலுவ எது சொன்னாலும் ஒத்துக்க.இல்லன்னா சட்டைய கிழிச்சு விட்டுட்டு கடிசுருவாணுவ னு...'

  இல்ல,சும்மா சொன்னேன்...

  //சிரிச்சுகிட்டே இருக்கணும்போல தோணுது..திடீர்னு ஓ ன்னு அழ தோணுது..//

  இது ஆரம்ப stage மச்சி..இப்பயே போய் அட்மிட் ஆயிட்டன்னா உசுரும்,மசுரும் மிஞ்சும்...

  //எனக்கே என் ஆள்கிட்ட உடனே பேசணும் போல தோணுது..!//

  பேசுடி,பேசு! எம்புட்டு நாளைக்கு நீ பேசிடப் போற?

  //தப்பிச்சு ஓடிரு ராஜா...உனக்கு "பட்டாப்பட்டி - வெளியூர்காரன் - ரெட்டைவால்ஸ்" போர்க்களத்தோட வரலாறு தெரியாது...! :)//

  இரு மச்சி,பீசு புதுசு இல்ல.நானு சொல்றேன்.
  அஜித் ரசிகன் ஒருத்தன் கெட்ட வார்த்தைல வஞ்சது,வெளி அதை delete பண்ணிட்டு வெக்கமில்லாம சலம்புனது,வர்ரபோற பாட்டி கிட்ட கூட வழிஞ்சது,அதுங்க கூட reject பண்ணின பின்ன வெக்கமே இல்லாம அடுத்த கிழவிய தேடித் போனது,ப்ரோப்ரோஸ் பண்ணின பின்ன அந்தப் பீசுக்கு குழந்தையே இருக்குன்னு தெரிஞ்சு அசடு வழிஞ்சது,தளபதியா இருந்துகிட்டு போர்னாலே மூச்சா போறது,நாலு பேரு சேந்து மிதிச்சாலும் வெக்கமே இல்லாம சலம்புறது,பொறை வாங்க காசு இல்லாம வேல் கம்ப வித்தது....

  இப்படி நெறைய இருக்குயா.உமக்கு என்ன வேணும்னு சொல்லும்.detailed ஆ போட்டுரலாம்.இவன் அழிச்சா பரவா இல்ல.என் ப்ளாக் ல போஸ்ட் போடலாம் மச்சி.... :)


  //டேய் இலுமி இந்த பீசுக்கு மஞ்ச தண்ணி ரெடி பண்ணு ராசா...!//

  அதெல்லாம் எப்பயோ ரெடி.நீ பூஜைய ஆரம்பி விளக்கெண்ண... :)

  ஜெய் செல்லம்.என்னடா டபக்குன்னு நம்மள குறி வக்கானேனு குழம்புதா? எப்பயும் அலெர்ட்டா இருக்கணும்.எந்த ஆடு மாட்டுதோ அதை பொலி போட்டுட்டு போய்கிட்டே இருக்கணும்.இப்ப வெளி மாட்டுனா அவன வெட்டுவேன்,இல்ல நீரு... :)

 47. @பனங்காட்டு நரி
  உன் ப்ளோக நிறைய தடவை படிச்சிருக்கேன் யா ..அதனால உரிமையோட கமெண்ட் போட்டிருக்கேன் ...உனக்கு பிடிக்கலேன்னா delete பண்ணிடு..,எங்க பட்டா சொல்லித்தான் என்னக்கு உன்னை தெரியும்
  //

  பிரதர்..
  இங்க பார்மாலிட்டு பண்ணாதீங்க..

  ( சூப்பர்..வாழ்த்துக்கள் ..இதுமாறி கமென்ஸ்..இங்கு வன்முறைய தூண்டுவதாக எடுத்துக்கொள்ளப்படும்)

  அதனால, ராவா இறங்கி அடிச்சு ஆடுங்க..

 48. Jey says:

  ILLUMINATI said...

  இரு மச்சி,பீசு புதுசு இல்ல.நானு சொல்றேன்.
  அஜித் ரசிகன் ஒருத்தன் கெட்ட வார்த்தைல வஞ்சது,வெளி அதை delete பண்ணிட்டு வெக்கமில்லாம சலம்புனது,வர்ரபோற பாட்டி கிட்ட கூட வழிஞ்சது,அதுங்க கூட reject பண்ணின பின்ன வெக்கமே இல்லாம அடுத்த கிழவிய தேடித் போனது,ப்ரோப்ரோஸ் பண்ணின பின்ன அந்தப் பீசுக்கு குழந்தையே இருக்குன்னு தெரிஞ்சு அசடு வழிஞ்சது,தளபதியா இருந்துகிட்டு போர்னாலே மூச்சா போறது,நாலு பேரு சேந்து மிதிச்சாலும் வெக்கமே இல்லாம சலம்புறது,பொறை வாங்க காசு இல்லாம வேல் கம்ப வித்தது....

  இப்படி நெறைய இருக்குயா.உமக்கு என்ன வேணும்னு சொல்லும்.detailed ஆ போட்டுரலாம்.இவன் அழிச்சா பரவா இல்ல.என் ப்ளாக் ல போஸ்ட் போடலாம் மச்சி.... :)////

  ச்சே...ச்சே.. இத நான் எதிர்பாக்கல, என்னா மொள்ளமாறித்தனம்... முடுச்சவிக்கிதனம்...

  இலுமி, அனாலும் உன்னோட நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு:)

 49. நமக்கு புரியாத விஷயம் நடக்குது .
  நடத்துங்க பாஸ் !!

 50. வினையை விலை குடுத்து வான்கீட்டிங்க...

  ஒன்னும் பண்ண முடியாது.. மேட்டர் ஓவர்....

 51. //இலுமி, அனாலும் உன்னோட நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு:)//

  எந்த நேர்மை மச்சி?இதுவா?

  //
  ஜெய் செல்லம்.என்னடா டபக்குன்னு நம்மள குறி வக்கானேனு குழம்புதா? எப்பயும் அலெர்ட்டா இருக்கணும்.எந்த ஆடு மாட்டுதோ அதை பொலி போட்டுட்டு போய்கிட்டே இருக்கணும்.இப்ப வெளி மாட்டுனா அவன வெட்டுவேன்,இல்ல நீரு... :)///

  ஆடு வெட்டுல எல்லாம் நானு வஞ்சகமே வைக்குறது கிடையாது.

 52. @@@@ILLUMINATI
  ஆடு வெட்டுல எல்லாம் நானு வஞ்சகமே வைக்குறது கிடையாது.///

  இவரு பெரிய இவரு...ஏண்டா லொட்டை..பஞ்ச் டயலாகா அடிக்கற நீ..இருடி...என்னைக்கோ சிக்கர ராசா..அன்னிக்கு வெச்சு கொளுத்தறேன் இரு உன்னை...! :)

 53. @@@பட்டாபட்டி.. said...
  பிரதர்..இங்க பார்மாலிட்டு பண்ணாதீங்க..!
  சூப்பர்..வாழ்த்துக்கள் ..இதுமாறி கமென்ஸ்..இங்கு வன்முறைய தூண்டுவதாக எடுத்துக்கொள்ளப்படும்.///


  யோவ் இதெல்லாம் சொல்லி குடுத்து இங்க அனுப்புயா...பொருள் பீசு மேல பட்ரபோகுது...! இது கந்தக பூமி..! (என்னையவே எத்தன தரவ இங்குண வெச்சு வெட்டிருகாணுக...) :)

 54. //இவரு பெரிய இவரு...ஏண்டா லொட்டை..பஞ்ச் டயலாகா அடிக்கற நீ..இருடி...என்னைக்கோ சிக்கர ராசா..அன்னிக்கு வெச்சு கொளுத்தறேன் இரு உன்னை...! :)//

  யோவ்,வர்ற போறவன் கிட்ட எல்லாம் அடி வாங்க நான் என்ன வெளியூர்காரனா? போய்யா வெண்ண.போயி அடுத்த கால அட்டென்ட் பண்ணு போ! :P

 55. ///(உங்களுக்குத்தான் அடுத்தவன் டைரியபடிக்கறதுன்னா ரொம்ப புடிக்குமே..).////
  எனக்கு பிடிக்காதுங்க ..
  ///ஏன்னா இது என்னோட ப்லாக்டிவெண்ணைகளா...நான் என்ன வேணா எழுதுவேன்..மூடிகிட்டு படிங்க..///
  மூடிட்ட எப்படி படிக்கறதுங்க ..

  அப்புறமா ஒரு சந்தேகம்க .. (நீங்க உள்ளூர்ல இருந்த ப்ளாக் எழுத மாட்டிங்களா ..??)

 56. sathish says:

  யோவ் வெளியூர் இவ்வளோ நாள் எங்கயா இருந்த, இத்தனை நாள் உன் bloga மிஸ் பண்ணதுக்கு ரொம்ப பீல் பண்றேன், இன்னும் உங்ககிட்ட நிறைய எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் அடிமை, சைந்தவியின் சாக்லேட் பக்கங்கள் தான் ரொம்ப அழகா இருக்கு, அதனால நாளைக்கு மூணு வேலை எழுதுனாலும் படிக்க நாங்க ரெடி.

 57. @@@@Sathish
  யோவ் வெளியூர் இவ்வளோ நாள் எங்கயா இருந்த, இத்தனை நாள் உன் bloga மிஸ் பண்ணதுக்கு ரொம்ப பீல் பண்றேன், இன்னும் உங்ககிட்ட நிறைய எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் அடிமை,/////

  யோவ் பட்டாப்பட்டி..யாரு இது...நீனா..இல்ல நானே வந்து போதைல டூப்ளிகேட் ஐ டி ல கமெண்ட் போட்டுட்டேனா...ஏன் இம்புட்டு பீலிங்கு.என்னாச்சு இந்த பீசுக்கு..! :)

  இதுல இன்னும் நெறைய வேற எதிர்பார்க்குதாமே...! :)