- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 69 comments and to comment


இன்னிக்கு நைட் என் வீட்டு லிப்ட்ல ஏறும்போது என்கூட ஒரு பொண்ணும் வந்தாங்க..வெளியூர்காரன் நியாயபடி அவள பன்னுனுதான் சொல்லணும்...அதிகமா போனா 19 வயசுதான் இருக்கும்...ஆனா நான் பார்த்த வரைக்கும் 22  இருக்கும்னு சொல்லுவேன்..ப்ளூ கலர் ஜீன்ஸ், ரெட் கலர்ல கோடு போட்ட காலர் வெச்ச டி.ஷர்ட் போட்டு நச்சுன்னு நதியா கொண்டை போட்ருந்தா...ஹை ஹீல்ஸ்க்கு பதிலா முடிச்சி போட்ட டிசைன்ல ஒரு லெதர் ஷூ அவ காலையும் அழகாகிகிட்டு இருந்துச்சு...கழுத்துல செம கியுட்டான ஒரு செயின் போட்ருந்தா...செம லென்க்துங்க.அந்த செய்னோட டாலர்ல எஸ் னு போட்ருந்துச்சு..சங்கீதா,ஷர்மிலா இப்டி எதாச்சும் ஒரு பேரா இருக்கும் போலருக்கு...நல்ல வாசனை..என்சான்டியர் பவுடர்தான் யூஸ் பண்ணுவா போல...சோப்பு பியர்ஸ்...லிப்ட்ல கூட்டம் அதிகமா இருந்ததால நான் அவ்ளவா  கண்டுக்கல அந்த பொண்ண..தவிர எனக்கு பொண்ணுங்கள கண்ணுகொட்டாம சைட் அடிக்கறது புடிக்காதும்கறதும் ஒரு காரணம்..கிரௌண்ட் ப்ளோர்ல எலாரும் ஏறுனோம்..என் தாத்தா அவரோட கேர்ள் பிரெண்ட் என் ஆத்தாவ ஏமாத்தாம கல்யாணம் பண்ணிகிட்ட புண்ணியம் எல்லாரையும் செகண்ட் ப்ளோர்ல எறக்கி விட்ருச்சு..

இப்போ நானும் அந்த ஜிகுடியும் மட்டும்..நான் எறங்க வேண்டியது 21 வது ப்ளோர்ல..வெளியூர்காரனால குஷி தாங்க முடியல..இந்த கேப்ப யுஸ் பண்ணி எப்டியாச்சும் அந்த பொண்ணுகிட்ட ஐ லவ் யு சொல்றதுன்னு முடிவுக்கு வந்துட்டான்..(நமக்கு ஐ லவ் யு சொல்றதுக்கு ஒரு பொண்ணும், நல்ல சான்சும் கெடைச்சா போதும்..) பட் ஐ லவ் யு சொல்றதுக்கு முன்னாடி எதாச்சும் பேசி பிரெண்ட்ஷிப்ப வளர்த்துகிட்டாதான ஒரு கவுரவமா இருக்கும்..வெளியூர்காரன் நாகரீகமானவங்க...பொண்ணுங்கள நாசுக்கா கையாளுவான்...ஆகையினாலே அந்த மாதிரி சமயங்களில் ஆண்களால் பெண்களிடம் லிப்டில் காலம்காலமாக கேக்கப்படும் கேள்வியை வெளியூர்காரனும் கேட்டான்...எக்ஸ்கியுஸ் மீ ...நீங்க எந்த ப்லோர்னு...அப்போ 21 அப்டீன்னு வீர சிவாஜி பாய்சன் சாப்டுட்டு கட்டபொம்மன் குரல்ல பேசுன மாதிரி ஒரு பதில் வந்துச்சு..!!!

உச்சிமாங்காளி...இது என் பொண்டாட்டிய செல்லமா கூப்ட்ரதுக்கு நான் 6 வது படிக்கும்போது யோசிச்சு வெச்ச செல்ல பேரு..(கல்யாணம் ஆன அண்ணணுக எல்லாம் சரியா நைட் பதினோரு மணிக்கு பல்லுகில்லேல்லாம் சுத்தபத்தமா வெளக்கிட்டு உங்க பொண்டாட்டிமார்கள  செல்லமா உச்சிமாங்காளினு கூப்ட்டா நறுக்குன்னு எச்சில் வாசனையோட ஒரு லிப்ஸ் கிஸ் கருகி போன உங்க உதட்டுக்கு பரிசா கெடைக்கும்னு ஜக்கம்மா மேல சத்தியம் பண்ணி வெத்து பத்திரத்துல எழுதி குடுக்கறான் வெளியூர்காரன்... ) 


அப்டியாகபட்ட வேளையிலே, கற்போட வாழறத மட்டுமே லட்சியமா மேற்கொண்டு ஒரு பதிவிரதனா, ஆஞ்சநேயரோட ஒரிஜினல் பக்தனா, (அதாம்ப்பா...அசல் பக்தன்...அந்த வார்த்தைய கூட பயன்படுத்தமாட்டான் இந்த விஜய் ரசிகன்..) வாழ்க்கை படக சலனமில்லாம ஒட்டிகிட்டு இருந்தான் வெளியூர்காரன்...அந்த போன் கால் வர்ற வரைக்கும்...


ஹலோ ஸ்ருதியான்னு ஒரு குரல்..நானும் பதட்டத்துல பீசு மிஸ் ஆய்ட கூடாதேன்னு ஆமாம்னு சொல்லிட்டேன்...ஸ்ருதிங்கறீங்க..ஆனா ஆம்பள குரல்ல பேசறீங்கன்னு கலகலன்னு சிரிச்சது என் போன்..அவ கூட சேர்ந்து..பொம்பளபுள்ள சிரிச்சா போச்சுன்னு சும்மாவா சொன்னுச்சு என் அவ்வா...அவ்ளோ நாளா கட்டுசிட்டா கற்ப காவல் காத்துகிட்ருந்த வெளியூர்காரன் மனசு படீர்னு பஞ்சர் ஆகி பொசுக்குன்னு படுத்துருச்சு..எது என் அப்டியா...யோவ் குரலாயா அது..அயோயோ எப்டியா புரிய வெப்பேன் உனக்கு அதை..தேன க்ளோப் ஜாமூன்ல ஊற வெச்சு கொஞ்சம் முந்திரி பருப்ப தூவி அதை ஒரு ப்லூட்ல ஊத்தி எஸ்.ஜானகிய விட்டு ஊத சொன்னா வரும்ல ஒரு சவுண்டு...அது அந்த புள்ளயோட குரல்யா...அந்த குரலுக்கு மட்டும் கழுத்து இருந்துச்சுன்னா தக்காலி போன்லயே தாலிய கட்டி புள்ளைய பெத்துருப்பான் இந்த வெளியூர்காரன்..  


ஒரு வாரத்திற்கு பிறகு...


வேறென்ன நடந்துருக்கும்...2039 மெசேஜுகள்...அவுக செலவுல 359 மிஸ் கால்கள்...என் செலவுல விடிய விடிய கடலைகள்..கிளைமாக்ஸ்ல வெளியூர்காரன் காலடில அந்த பொண்ணு...ஆனா எவ்ளவோ கெஞ்சியும் என் உச்சிமாங்காளிய என்னால பார்க்க மட்டும் முடியலைங்க..ஒரு வழியா நான் பிரசன்ட்டா  வாங்கி வெச்சுருக்கற அந்த மொபைல் போன உன்ன பார்க்காம உன்கிட்ட எப்டி குடுக்கறதுன்னு பீலிங்கோட கேட்டோன்ன என் வீட்டு பப்பி மாதிரி தாவி குதிச்சு ஓடோடி வந்தா என் உச்சிமாங்காளி..அடுத்த நாள் பார்க்கறதா முடிவாயருச்சு...


அவ என்ன பார்க்க ஒத்துகிட்ட அடுத்த செகென்ட் நான் பண்ண விஷயம் எங்கம்மாவுக்கு போன் போட்டதுதான்...போன போட்டு சொல்லிட்டேன்..நான் கல்யாணம்னு ஒன்னு பண்ணா அது அந்த பொண்ணதான்னு ..அதுக்கு எந்த பொண்ணடான்னு  கேட்டாங்க...அதுக்கு காதல்ல ஜெயிச்சு  காட்ட போற ஆணவத்தோட நான் சொன்னேன்.. இன்னிக்கு நான் மொதொ மொதொள்ள பார்க்க போறனே..அந்த பொண்ணதான்னு ..அதுக்கு எங்கம்மா அப்பன மாதிரியே லூசா வந்து பொறந்துருக்கான் பாரு மூதேவின்னு கேசுவலா சொல்லிட்டு போன வெச்சிட்டு வெங்காயம் அரிய போய்ட்டாங்க...மனம் தளராத வெளியூர்காரன் கால் கிலோ பௌடரை பேப்பரில் மடித்து கொண்டு புறபட்டான் அந்த தேனிசை தென்றலை சந்திக்க...


கரெக்டா மூணு மணிக்கு கிண்டி ஒலிம்பியா டெக்னோ பார்க் என்ட்ரன்ஸ்ல வந்து வெயிட் பண்ணு...நான் ஒன் அவர் பெர்மிசன் போட்டுட்டு வந்து உன்ன பார்க்கறேன்னு மொபைல் மேல இருந்த ஆசைல என்கிட்டே கூவிருந்தா என் பச்சக்கிளி...அந்த உச்சிமாங்காளி..எப்போதும் ஒன்பது மணி ஆபிஸ்க்கு பத்து முப்பதுக்கெல்லாம் போய் நின்னு கடிகாரத்த வெக்கப்பட வெக்கற நான்,அன்னிக்கு எதோ டென்சன்ல மூணு மணிக்கு வர்றேன்னு சொல்லிட்டு லேட்டா ஒரு மணிக்குதான் போனேன்... அந்த பில்டிங்க்கு சைட்ல உள்ள இளனி கடைல ரெண்டு இளனி வாங்குனேன்.ஒன்னு குடிக்க இன்னொன்னு பேஷ பிரெஷ் ஆக்க...ஆமாம்ங்க..இளனில  மூஞ்சி கழுவுனா முகம் அழகா தெரியும்னு ஜெயலலிதான்னு ஒரு சினிமா கவர்ச்சி நடிகை (தக்காலி, கேப் கெடைக்கும்போதெல்லாம் போடுவோம்ல...) 1976 ல ஆனந்த விகடனுக்கு பேட்டி குடுத்தத மறக்காம இருந்து கப்புன்னு யுஸ் பண்ணிகிட்டான்  வெளியூர்க்காரன்.ஆனா ,ஒன்னும் பெருசா வித்யாசம் இல்லாம பழைய மாதிரியே எங்கப்பா முகச்சாடைல அசிங்கமாத்தான் தெரிஞ்சுது என் மூஞ்சி..ஒரு இளனி வாங்கி வண்டி கண்ணாடிய கூட கழுவி பார்த்தேன்..ம்ஹும்...உடனே என் அண்ணன் இப்டின்னு இளனிக்கார அண்ணன கேட்டேன்...அதுக்கு அவன் இளனிய காய வெச்சு தேங்கா நார எடுத்து செங்காமட்டைல தொட்டு பரபரன்னு மூஞ்சில தொலுரிய தேய்...அழகாயடுவன்னான் .நாரப்பய...எங்க ஊர்காரன் போலருக்கு..


கரெக்டா மூணு மணி...கண்ணுல “உச்சிமாங்காளி காலிங்.”..காதுல "வந்தால் மகாலக்ஷ்மியே..."..(என் ரிங் டோன்..)..அட்டன் பண்ணேன் ..எங்கட  செல்லம்  இருக்க  ...இது அவுக...உன்  இதயத்துல ...இது நான்..ச்சீ  பொருக்கி ..இது அவுக...ஆமாம் ..உன்  இதய பொருக்கி...இது நான்..டேய் டைம் ஆச்சுடா சொல்லுடா எங்க இருக்க நீ...என் உச்சிமாங்காளி சஸ்பென்ஸ் தாங்க மாட்டாளேன்னு சொல்லிட்டேன்...ஒலிம்பியா டெக் பார்க்கோட ப்ரண்ட் என்ட்ரன்ஸ்ல நிக்கறேன் வாடின்னு..வந்தா...


கந்தசாமில விக்ரம் சேவல் கோழி வேஷம் போட்டுட்டு வர்றத நீங்கல்லாம் பார்த்துருபீங்க..ஆனா ஒரு போந்தாகோழி விக்ரம் வேஷம் போட்டுக்கிட்டு சுடிதார்ல வர்றத நீங்க பார்த்துருகீங்களா..வேணாம்...கற்பனைல கூட  நெனைச்சு பார்த்துடாதீங்க...தாங்க மாட்டீங்க...பல அவமானங்களையும் காதல் தோல்விகளையும் டம்மி பீசுகளின் கொடூர பார்வைகளையும் துச்சமென தாங்கி வந்த வெளியூர்காரனாலையே அந்த பீசொட அழக தாங்கிக்க  முடியல..குண்டுங்கர வார்த்தையோட அக்காங்க அவ....அவ எனக்கு  லிப்ஸ் கிஸ் குடுக்கனும்ங்கர ஆசைல என்னதான் இறுக்கி கட்டி புடிச்சாலும் என் லிப்ஸும் அவ லிப்ஸும் கிட்டக்கவே போகாதுங்க...ஒரு மீட்டர் தூரத்துல அந்தரத்துலையே ஸ்டாப் ஆய்டும்..அவ்ளோ குண்டு..(இதுக்கு மேல விளக்கமா  சொன்னா மஜா மல்லிகா மாதிரி செக்சியா எழுதறான் வெளியூர்காரன்னு பதிவு வெளியிட்ருவான்   பட்டாப்பட்டி ...)மொத்ததுல வெளியூர்க்கரனுக்கே புடிக்கலைனா அது எவ்ளோ பெரிய டம்மியோட அக்கா பீசுங்கரத நீங்களே புரிஞ்சுக்கங்க..    

உலகத்துலேயே ஈசியான விஷயம் ஒரு பிகர உஷார் பண்றது..நல்லா நாலு ஜோக்க நறுக்குன்னு தட்டி விட்டா படக்குன்னு மடில விழுந்துடுவாலுக..ஆனா அதே மாதிரி உலகத்துலேயே ரொம்ப கஷ்டமான விஷயம் உஷார் பண்ண ஜிகுடிய கயட்டி விடறது..நீங்கல்லாம் இத படிக்கும்போது தலைய ஆட்டும்போதே தெரியுது..அது எவ்ளோ பெரிய கஷ்டம்னு...

ஆனா வெளியூர்காரனுக்கு ரெண்டுமே அசால்ட்டு பத்திரி ரைடுங்க...சிம்பிளா ஒரு கேள்வி கேட்டேன்..பயந்து போய் மொபைல விட்டுட்டு  தலை தெறிக்க ஓடிட்டா. அது என்ன கேள்வின்னு கேக்கறீங்களா... ..


என்ன கல்யாணம் பண்ணிக்கிறியாடி உச்சிமாங்காளின்னு...


வெளியூர்க்காரன்.. 

69 Responses so far.

 1. அட.. வெளியூரு..
  ரொம்ப நாளா சத்தமே காணேமே..
  ஒரு வேளை , ராணுவத்தளபதியா , துப்பாக்கிய துடச்சுட்டு ,
  அடுத்த போருக்கு ஆயத்தம் பண்ணீட்டு இருப்பனு நெனச்சா..........

  இந்த கண்றாவிதான் நடந்துட்டு இருக்கா?..
  அப்புறம்... சொல்லறதுக்கு மறந்துட்டேன்..

  அந்த பீஸு, நம்ம மகளிர் அணியில இருந்து போன வாரம்தான்,
  டிஸ்மிஸ் பண்ணுன மட்டமான பீஸு.
  ( இன்னும் இதுபோல சில பிஸுகளை அடுத்த வாரம்
  டிஸ்மிஸ் பண்ணலாமுனு, "பேர் லிஸ்ட" மன்னருக்கு அனுப்பியாச்சு...
  இன்னும் அப்ரூவ் ஆகவில்லை..)

  போறப்போ , ஒரு சாபமுட்டுட்டு போனா அந்த பிகரு..
  என்னான..?
  தளபதிய வெச்சே உன்னைய முடிக்கிறேனு.. நானும் நம்ம துணை முதல்வர்தானே..
  அவரு செயல்படுத்தரதுக்கே 6 வருசமாகுமுன்னு அசால்ட்டா உட்டுட்டேன்..

  ஆனா.. பாவிமக , உன்னைய வளைக்கறதுக்கு, மாஸ்டர் பிளான் பண்ணியிருக்கானு
  இப்பதான் தெரியுது..

  நல்லவேளை தப்பிச்ச சாமி..
  என்னமோ மஞ்சக் சட்டையெல்லாம் சும்மா ,
  அப்பிடீனு பகுத்தறிவு பேசினீரு..
  இப்ப உங்கள காப்பாத்தினது எது? .
  பேசாம "உளியின் ஓசை"ய எடுத்து கண்ணுல ஒத்திட்டு ,
  நெற்றியில திரு நீரு பூசிட்டு படுங்க..
  நாளக்குப் பார்க்கலாம்..

 2. யோவ் பட்டு...வெளியூர்காரன் பக்கா திமுககாரண்டி மாப்ள...என் தலைவனுக்கோ இல்ல என் தளபதிக்கோ எதாச்சும் ஒரு கலங்கம்னா எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு பழைய வெளியூர்காரனைடுவான் இந்த ராணுவ தளபதி..கேப்ல தலைவர போட்ட,ங்கொய்யா உமக்கு சங்குதான்... நீ ஆட்சில இல்லைங்கரத நினைவுல வெச்சுக்க...ரெட்டைகிட்ட கலகம் பண்ண பிளான் பண்றன்னு உன்ன போட்டுகுடுத்தேன், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மாதிரி கடைசி வரைக்கும் பாடி கெடைக்காத அளவுக்கு தொழில் நேக்கா போட்ருவான் அந்த மொள்ளமாரி... ரெட்டைவால்ஸ்...மனசுல வெச்சுக்க...

 3. உன்னிய காப்பாத்தாலாமுனு வந்த என்னைய போட்டுக் குடுத்துட்டயில்ல..
  ங்கொய்யா...
  சனிஸ்வரன் புக்குல உம் பேரை , அப்புறம்..ஆங்க்.. உங்க தலவன்( மஞ்ச துண்டு ) பேர சன்னமா
  சேர்த்து உட்டுடண்டி..
  வெயிட்டு...
  பட்டாபட்டி கவுண்ட் ஸ்டார்ட்....

 4. பட்டாபட்டி.. said...///
  தன் தங்க தலைவனின் தன்மானம் காக்க தனது ராணுவ தளபதி பதவியை துச்சமென மதித்து ராஜினாமா செய்கிறான் வெளியூர்காரன்..ங்கோயாள..வாடி. வாடி...சோடி போட்டு பார்ப்போம்டி வாடி..உன்ன ஓட விட்டு வெட்ரண்டி...என் தலைவன பத்தி எதாச்சும் எழுதுன அடுத்த செகேன்ட் நீ காலி மச்சி...(ஏன்யா பட்டு...என்னய்யா ஆப் பாயில ஆறி போய் குடுக்காராணுக செரங்கூன் பார்ல..இதெல்லாம் நீ கேக்க கூடாதா...)

 5. அப்பாவி says:

  தோல்வி கண்டு துவளாதே..
  வெற்றி வென்றிடும் தூரம்தான்
  அட்டு பிகர் கடச்சாளும் அற நாள் ஒட்டிடு
  அட்டு பிகர் தான் வெற்றியின் முதல் படி
  ஏ மானிடா... உனக்கு நல்ல பிகர் வசப்படும்....
  அதற்குதான் எதையும் தாங்கும் இதயம் உனக்கு அண்ணா கொடுத்திற்கார்.
  வாழ நீ பல பிகருடன் .......

 6. @அப்பாவி said.//
  Twinkle Twinkle Little Star..How I wonder what you are... :)
  (அப்பாவி அண்ணன் மன்னிக்கணும்..எனக்கு உங்கள மாதிரி அழகா அருமையா முத்து முத்தா கவிதை எழுத வரதுங்கன்னா..அதான் எனக்கு தெரிஞ்சத எழுதிருக்கேன்.அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க .. )

 7. //Twinkle Twinkle Little Star..How I wonder what you are... :)
  //
  வெளியூரு.. என்னா அருமையா கவிதை எழுதியிருக்க..?
  எங்கய்யா வெச்சிருந்த இந்த திறமையா...?
  அடுத்த வாரம் ஒரு பாராட்டு விழா எடுத்து உமக்கு ஒரு
  அவார்ட் கொடுக்கனுமுனு துடிக்கிறான்
  இந்த பட்டாபட்டி ( தற்காலிய மகளிர் அணித்த்லைவர்..மற்றும்
  வருங்கால ராணுவத் தளபதி)

 8. நாளை வெளியூர்காரனின் "அசல் -டொட்டோடொயின் "..திரை விமர்சனம் வெளியூர்காரனின் வலைப்பூவில் ரிலீஸ் ஆகிறது..வேட்டைகாரனை அடித்து துவைத்த அண்ணன் "சுருட்டு அஜித்"தின் மானசீக ரசிக பெருமக்கள் நாளை கண்டிப்பாக வந்து இந்த விஜய் ரசிகனின் கொடூர தாண்டவத்தை தரிசித்து செல்லுமாறு கொலைவெறியுடன் கேட்டுகொள்ளபடுகிறார்கள்...(இன்னிக்கு ஈவினிங் "அசல் " பார்க்க போறான் வெளியூர்க்காரன்...ங்கோயாள..வேட்டைகாரனை ஏன்னா பாடு படுத்துனீங்க..உங்களுக்கு நாங்க (விஜய் ரசிகர்கள் ) ஊதுறோம்டா சங்கு நாளைக்கு.).தவிர இது வெளியூர்காரன் திரைவிமர்சனம் எழுதும் முதல் அஜித் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது..மெல்லிய மனம் படைத்தோர் பெண்கள்,குழந்தைகள் இதை படிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ள படுகிறார்கள்.படம் ஒரு வேலை நல்லா இருந்தாலும், கொலைவெறியுடன் தாக்க படும் என்பதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை என விஜய் ரசிகர் மன்றம் அறிவித்துள்ளது... ...காண தவறாதீர்கள்..வெளியூர்காரனின் "அசல் -..டொட்டோடொயின்."

 9. //ஏன்யா பட்டு...என்னய்யா ஆப் பாயில ஆறி போய் குடுக்காராணுக செரங்கூன் பார்ல..இதெல்லாம் நீ கேக்க கூடாதா...)
  //

  மகளிர் அணிய அனுப்பட்டுமா தளபதி..
  போயி " செரங்கூன் பார்ல." வாந்தியெடுத்துட்டு வரட்டும்..

  10 நாளைக்கு நாற்ற மாறி பண்ணிடலாம்..உத்தரவுக்கு வெயிட் பண்ணும் பட்டாபட்டி ( தற்காலிய மகளிர் அணித்த்லைவர்..மற்றும்
  வருங்கால ராணுவத் தளபதி)

 10. //(இன்னிக்கு ஈவினிங் "அசல் " பார்க்க போறான் வெளியூர்க்காரன்...ங்கோயாள..வேட்டைகாரனை ஏன்னா பாடு படுத்துனீங்க..உங்களுக்கு நாங்க (விஜய் ரசிகர்கள் ) ஊதுறோம்டா சங்கு நாளைக்கு.)
  //

  வெளியூரு...
  இதுக்கு மட்டும் என்னோட முழு சப்போர்டையா..( 100% அதாவது நூறு சதவீதம்)
  ங்கொய்யாலே .. யாரு வந்தாலும் போட்டுத் தள்ளிடலாம்....

 11. @பட்டாபட்டி.. said...//மகளிர் அணிய அனுப்பட்டுமா தளபதி.போயி"செரங்கூன் பார்ல." வாந்தியெடுத்துட்டு வரட்டும்..//
  ஆகா பொண்ணுங்க வாந்தி எடுக்கறது எவ்ளோ அழகான மேட்டரு..அந்த அழகா பார்க்க ரெண்டு கண்ணு பத்தாதேயா பட்டாப்பட்டி.உம்..ஆகட்டும்..உடனே அனுப்பு உன் படையை...(இப்டி என்ன குஷிபடுத்திகிட்டே இருந்தீனா ,ரெட்டைவால்ச போட்டு தள்ள உனக்கு உதவியா இருப்பான் இந்த ராணுவ தளபதி...)

 12. @பட்டாபட்டி.. said...//இதுக்கு மட்டும் என்னோட முழு சப்போர்டையா..( 100% அதாவது நூறு சதவீதம்)
  ங்கொய்யாலே .. யாரு வந்தாலும் போட்டுத் தள்ளிடலாம்...//
  செல்லம்..நாளைக்கு பாருடி வெளயாட்ட...த்தா...சாவரானுக அஜித் ரசிகன் எல்லாரும்..இதோட அழிக்கிறோம் அவனுகள...என்னா ஆட்டம் போட்ருகாணுக...சும்மா விடறதாவது...!!!

 13. திருவாரூர் தேரே!

  வெளியூருக்கு வந்தாலும் வெளியில அதிகம் தெரியாம பல பேரு டவுசர வெளுத்து வாங்கும் குசும்பனே!

  நானும் உங்க ஊர்ல தான்யா இருக்கேன். மெயில் அனுப்புயா....

  thisaikaati@gmail.com

 14. என்னுடைய ஆட்சில ராணுவத் தளபதியா இருக்கறது தவிர எல்லாக் கருமத்தையும் நீங்க பண்ணுவீங்க என்று அன்றே என் ஆஸ்தான ஜோசியர் சொன்னார். அசல் படமாடி பார்க்கப் போற...(தக்காளி அப்படியே தியேட்டரை சுத்தி வளைச்சுர வேண்டியது தான்..இந்த பட்டாபட்டி எங்க இருப்பான்?...ஹ்ம்ம்ம்..எதுனா பப் ல புள்ளைங்களோட கூத்தடிச்சுட்டு இருப்பான். அவனை இன்னொரு நாள் வச்சுக்கணும்)

 15. மேலே போட்டோவிலிருக்கும் ஃபிகரை மன்னருக்கு ரொம்ப பிடித்து விட்டதாகவும்..இன்றே அந்த ஃபிகரின் அட்ரஸ் எங்கே என்று தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவதாகவும் அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

 16. @ரோஸ்விக் said...///வெளியூருக்கு வந்தாலும் வெளியில அதிகம் தெரியாம பல பேரு டவுசர வெளுத்து வாங்கும் குசும்பனே!///
  யோவ் பட்டாபி இந்த பீச நாம அரசவை கவிஞரா அப்பாயின்ட் பண்றத பத்தி நீ என்ன நெனைக்கற...நல்ல ரைமிங்கா பேசறாப்ல.நம்ப ஊர்ல வேற இருக்காப்லாயாம்....அந்த நாதாரி பய மன்னர்கிட்ட நீயே கேட்டு சொல்லு..நான் போன் பண்ணா போன மாசத்துக்கு மிலிடரி ரிப்போர்ட் கேப்பான்...!! :) Thanks Buddy...We will meet soon... :)

 17. @ரெட்டைவால் ' ஸ் said...//
  மன்னா...அந்த அழகி பட்டாபட்டியின் மகளிர் அணி செயலாளரா இருகிறாராம்..தகவல் வந்துள்ளது..அந்த டோமர் கேட்டா குடுக்க மாட்டான்னு உங்களுக்கே தெரியும்..இப்ப நான் என்ன செய்யட்டும்..பொண்ணு கற்புக்கரசியாம்..40 ரூவைக்கு ஒரு ரூவா குறைஞ்சாலும் டீலுக்கு ஒத்துகாதாம்..விசாரணையில் தெரிந்தது.... (உனக்கு தளபதியாகி நான் எவ்ளோ மானம் கேட்ட வேலையெல்லாம் செய்ய வேண்டியாத இருக்கு..ச்சை...)

 18. நீ மட்டும் அந்த ஃபிகரை கூட்டி வந்தேன்னா உனக்கே மகளிர் அணி தலைவர் பதவி....பட்டாபட்டிக்கு விலங்குகள் சரணாலயத்துறை.(புலிக்குப்.. ....) என்ன ஓ.கே வா? ( இவன் இதுல எதாவது உள்குத்து பண்ணுவானோ)

 19. ரெட்டைவால் ' ஸ் said.நீ மட்டும் அந்த ஃபிகரை கூட்டி வந்தேன்னா உனக்கே மகளிர் அணி தலைவர் பதவி..///
  சோக்கு பிகர நீ வெச்சுக்கிட்டு, அட்டு பீசுகள எனக்கு தள்ளி விடலாம்னு பார்க்ரியா..யார ஏமாத்தலாம்னு பார்க்கற...வந்தன்னா தூக்கி போட்டு மிதிச்சிபுடுவேன்..!!.சாரி மன்னா.கொஞ்சம் எமோசன் ஆய்ட்டேன்..தங்கள் உத்தரவுப்படியே பட்டாபட்டிக்கு வனவிலங்கு மற்றும் விலங்குகள் சரணாலய துறையை அளிக்க ஆவன செய்கிறேன்...(எத்தன மானும் புலியும் வந்து இவன் மேல கற்பழிப்பு கேஸ் குடுக்க போகுதோ..முருகா..இந்த வாயில்லா விலங்குகள பட்டாபட்டிகிடேர்ந்து காப்பாத்துப்பா...)

 20. @வெளியூர்க்காரன் said...
  யோவ் பட்டாபி இந்த பீச நாம அரசவை கவிஞரா அப்பாயின்ட் பண்றத பத்தி நீ என்ன நெனைக்கற...நல்ல ரைமிங்கா பேசறாப்ல.நம்ப ஊர்ல வேற இருக்காப்லாயாம்....அந்த நாதாரி பய மன்னர்கிட்ட நீயே கேட்டு சொல்லு..நான் போன் பண்ணா போன மாசத்துக்கு மிலிடரி ரிப்போர்ட் கேப்பான்...!! :)
  //
  வெளியூரு...
  பய நம்ம பயதான்..நீ எங்க வேணா அப்பாயின்ட் பண்ணிக்க.. ஆனா மகளிர் அணிக்கு மட்டும் அனுப்பாதே..

 21. @ரெட்டைவால் ' ஸ் said...
  நீ மட்டும் அந்த ஃபிகரை கூட்டி வந்தேன்னா உனக்கே மகளிர் அணி தலைவர் பதவி....பட்டாபட்டிக்கு விலங்குகள் சரணாலயத்துறை.(புலிக்குப்.. ....) என்ன ஓ.கே வா? ( இவன் இதுல எதாவது உள்குத்து பண்ணுவானோ)//

  ரெட்டைவால் மன்னா.. "ராணுவ அதிகாரியை" , ங்கொய்யாலே ரெண்டே நாளல, மாமா ஆக்கியதுக்கு நன்றி..
  மன்னர் வாழ்க..( இது மாமா ஆக்கியதுக்கு )..


  மன்னர் ஒழிக ( இது என்னைய மகளிர் அணியிலிருந்து தூக்க ப்ளான் பண்ணினதக்கு...)

 22. @பட்டாபட்டி.. said..//வெளியூரு...ரோஸ்விக்
  பய நம்ம பயதான்..நீ எங்க வேணா அப்பாயின்ட் பண்ணிக்க.. ஆனா மகளிர் அணிக்கு மட்டும் அனுப்பாதே.///
  அப்டியா சொல்ற..சரி விடு ஆபர் லேட்டர அனுப்பி விட்டர்றேன்...எப்பா ரோச்விக்கு..நாளைக்கு அரண்மனைக்கு வந்து மன்னருக்கு குட் மார்னிங் சொல்லிட்டு ஆபர் லேட்டர வாங்கி டியுடில ஜாயின் பண்ணிக்கப்பா..(ஏம்ம்பா பட்டாப்பட்டி..இப்டி கண்ணுமண்ணு தெரியாம எல்லாரையும் கலாய்க்கிரமே...ஒரு வேலை நம்ம மேல காண்டா ஆய்டாங்கேனா என்னையா பண்றது...)

 23. "ரோஸ்விக்"....இந்தப் பெயரைத் தமிழ்படுத்தச் சொல்லுங்கள்..பிறகு நான் அரசவையில் சேர்த்துக் கொள்கிறேன்...!

 24. @வெளியூர்க்காரன் said...
  //

  (ஏம்ம்பா பட்டாப்பட்டி..இப்டி கண்ணுமண்ணு தெரியாம எல்லாரையும் கலாய்க்கிரமே...ஒரு வேலை நம்ம மேல காண்டா ஆய்டாங்கேனா என்னையா பண்றது...)

  அட..ரோஸ்விக் ..நம்மளமாறி ( பாதி ) தான்..
  சரி உடு தளபதி..ரோஸ்விக் , நேரா துணை மன்னராக்கிடு..பிரச்சனை முடிஞ்சது..

 25. @ரெட்டைவால் ' ஸ் said..."ரோஸ்விக்"....இந்தப் பெயரைத் தமிழ்படுத்தச் சொல்லுங்கள்..பிறகு நான் அரசவையில் சேர்த்துக் கொள்கிறேன்...!///
  எப்பா ரோச்விக்கு அதான் மன்னர் சொல்றாருல்ல..போப்பா போய் பேர "ரோஜாபொய்முடி"ன்னு மாத்திக்கிட்டு வந்து வேலைல ஜாயின் பண்ற வழிய பாரு..பொசிசன ரொம்ப நாள்ளாம் ஹோல்ட் பண்ணமுடியாது எங்களால.ரிசிசன் டைம்ல ரொம்ப ஸ்லோவா இருகியேப்பா நீ...!!!

 26. வெளியூரு..
  இப்பதான் போன் வந்தது..என்னோட மச்சான் ( யோவ்.. கேப்டன் மச்சான் சதிஸ் இல்ல)
  3 கோலை , 4 கற்பழிப்பு பண்ணிட்டு கோயம்பேட்-ல இருக்கானையா..
  அவனை ,துணை மன்னரா,க்கிட்டு , ரோஸ்விக்க, 'இணை துணை மன்னரா'க்கிடு..
  மகனே.. வேற யாருக்காவது குடுத்த , மகளிரணி வந்துடும்

 27. பட்டாபட்டி.. said.அவனை ,துணை மன்னரா,க்கிட்டு , ரோஸ்விக்க, 'இணை துணை மன்னரா'க்கிடு....///
  ஏய் லூசு..இத போய் மன்னர்ட்ட சொல்லு..நான் தளபதி...(தக்காளி இதே தெரில...இவன்லாம் மகளிரணிய வெச்சு மயிரா புடுங்க போறான்..)

 28. யோவ் .. எனக்கும் அதே பிரச்சனைதாயா..
  புதுசா 10 அழகிகள் மகளிர் அணியில சேர்ந்திருக்குது..

  போன, நொய்.. நொய் -னு நோண்டியெடுக்கும் இந்த மன்னரு..

 29. பட்டாபட்டி.. said...///
  மகளிரணிய வெச்சு என்ன பிரயோஜனம்..இந்நேரம் ஒரு பிகர மன்னரோட அனுப்பி ஒரு வீடியோவ திருட்டுதனமா எடுத்து வெச்சிருன்தீன்னா சி டி போட்டு வித்தாச்சும் காசு பார்த்துருக்கலாம்..நீயும் இருக்கியே...!

 30. அதெல்லாம் சொல்லவே வேண்டியது இல்லை..
  எடுத்தசச்சு.. ( கிளிண்டன் பாத்துட்டு இருக்கான்..
  கீக்கிரம் ஹாலிவுட்-ல ரிலிஸ் பண்ணனும்.. அப்புறம் சொல்ல மறந்துட்டேனே...)

  கடைசியா கிடைத்த தகவல்படி , உம்ம சீ.டீ நல்ல ரேட்டுக்கு போகும் போல..
  (அனுப்புனமில்ல.. சிங்கைக்கு ஒரு டைரக்டரையும் , சென்னைக்கு இன்னொருத்தனையும் )

 31. பட்டாபட்டி.. said...///கடைசியா கிடைத்த தகவல்படி , உம்ம சீ.டீ நல்ல ரேட்டுக்கு போகும் போல..///
  யோவ் ஏன்யா வைதெரிச்சல கெளப்பற..என்ன அந்த மாதிரி போஸ்ல நானே பார்த்ததில்லையா....நானே கல்யாணம் ஆகாத கடுப்புல இருக்கேன்..இவன் என்ன வெச்சு சி டி எடுத்தானாம்..வர்ற கடுப்புக்கு எந்திரிச்சு வந்தன்ன உன்ன கொன்னே போட்ருவேன் பட்டாப்பட்டி..

 32. அடப்பாவி.. அப்படியா?

  அப்ப யாரு நடிச்சது அந்த சீடீல..சரி.. சரி..
  கோவிச்சுக்காதே அப்பு.. மேல இருக்கற மஞ்ச தாவணியவே கல்யாணம்
  பண்ணிக்க.. ஆனா , உங்க தலைவனை மஞ்சத் துண்ட போட்டுட்டு வரச்சொல்லு..

 33. ங்கொய்யா.... நம்ம பெற இங்கயும் தாளிச்சுட்டாய்ங்களா? :-))
  யோவ், அதான் ராணுவத் தளபதி சொல்லிட்டருல்லையா "ரோஜாபொய்முடி"ன்னு... எங்கய்யா வந்து குட் மார்னிங் சொல்லிட்டு ஆபர் லேட்டர வாங்குறது...(பாவி பயலுகளா... குட் மார்னிங்கும், ஆபர் லெட்டரும் தமிழா??) :-) ரெட்டை வாலு தளபதினா வேற நியாயமா இருக்கு.... இலங்கையில நடத்துற மாதிரி நடத்துயா... தமிழ்நாடு மாதிரில இருக்கு இங்க...

  பட்டாபட்டி... நல்ல இடத்துல தாயா நீங்க இருக்கீரு... மகளிர் அணி.. நடத்துங்க...

  அசலக்கு போறவன் மொசலோட (மொசக்குட்டியோட) போறதா... அங்க அங்க அரசல் புரசலா தகவல் வருதேய்யா?? உஷாரு இருங்கோ மக்கா...

 34. ரோஸ்விக் அநாவசியமாக தலைமையையே எதிர்த்துப் பேசுவதால் அவருக்கு எந்த ஆஃபரும் கிடையாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் விரும்பினால் பட்டாபட்டி போகும் படகில் வேலை தருவதாக உத்தேசித்துள்ளேன்..(அதான் அந்த படகு நின்னுச்சுன்னா தள்ளுற வேலைதான்) இதற்கே ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர் லைனில் நிற்பதாக வேலை வாய்ப்பு அலுவலகம் தெரிவிக்கிறது( எல்லாம் ரீமாவும் ஆண்ட்ரியாவும் பண்ற வேலை).

 35. @ரோஸ்விக் said.அசலக்கு போறவன் மொசலோட (மொசக்குட்டியோட) போறதா... அங்க அங்க அரசல் புரசலா தகவல் வருதேய்யா?? ..//
  ஆகா பிகரோட படத்துக்கு போற மேட்டர் தெரிஞ்சா நாளைக்கு என்ன இந்தியா டுடேல கிழி கிழின்னு கிழிச்சிடுவானுகளே .இத உடனே அமுக்கியாகனுமே....ஏம்ப்பு ரோசா...ராசாகிட்ட சொல்லி நான் லேட்டர மெயில் பண்ண சொல்றேன் நீ வீட்லயே இருந்து வாங்கிக்கப்பு..வெளில கிலியில வந்துற வேணாம்..என் மேட்டர் நாறிடும்...

 36. ரெட்டைவால் ' ஸ் said...///
  இந்த பய இவ்ளோ அராஜக பண்றான்..எவனாச்சும் எதிர்த்து கேகுரானுகள பாரு..இங்க ஆம்பளைங்க யாருமே இல்லையா....!!!

 37. ஹ ஹ ஹா...யாரங்கே! மன்னர் ரெட்டைவால்ஸை ஒன்று இரண்டு மூன்று என வரிசைப் படுத்திப் பாடு!

 38. அப்பு... ராசான்னு சொன்னது தமிழ் நாட்டுல இருந்து டெல்லிக்கு போனவர சொல்லைலைல...

  ரெட்டை வாலு... எனக்குத் தண்ணின்னா ஒத்துக்காதுய்யா... பெரியமனசு பண்ணி... படகு தள்ளுற வேலைய ரீமாவுக்கும், ஆண்ட்ரியாவுக்கும் கொடுத்துட்டு... அவங்கள தள்ளுற வேலைய எனக்கு குடுய்யா...
  நீ ராசாவா இருக்கவன் மகா ராசாவா ஆயிடுவ...

 39. ரெட்டைவால் ' ஸ் said.ஹ ஹ ஹா...யாரங்கே! மன்னர் ரெட்டைவால்ஸை ஒன்று இரண்டு மூன்று என வரிசைப் படுத்திப் பாடு!
  ..//...இவனுகேல்லாம் ஜார்ஜ் பெர்னாண்டச்க்கு வந்த மாதிரி மறதி நோய் வரமாட்டேன்குதே...இருக்குடி உனக்கு... வெப்பான் பாரு பட்டாப்பட்டி வெட்டு..எலேய் பட்டு...உனக்காக பில்ட் அப்பெல்லாம் குடுத்துருக்கேன்..நீ வழக்கம் போல அம்புஜம் மாமியோட சினிமாவுக்கு போய்டாத..வந்து ரெட்டையோட கொட்டத்த அடக்கு...(இவனுக ரெண்டு பேருக்கும் மூட்டிவிட்டுட்டு நாம சீக்கிரம் செட்டில் ஆகணும்...)

 40. ரோஸ்விக் said.. படகு தள்ளுற வேலைய ரீமாவுக்கும், ஆண்ட்ரியாவுக்கும் கொடுத்துட்டு... அவங்கள தள்ளுற வேலைய எனக்கு குடுய்யா... .///
  ரீமாவையும் அன்ட்ரியாவையும் தள்ற வேலை வேணுமா... ஆகா பூரா பேரும் மகளிர் அணிக்கே அடிச்சுகரான்களே..அப்டி அந்த பொம்பள புள்ளைக்கிட்ட என்னதான்யா இருக்கு..இப்ப நான்லாம் கண்ட்ரோலா இல்ல...(மன்னா பையன் மூளைகாறன தெரியிறான்...சட்டுன்னு புடிச்சு ஒரு போஸ்டிங்க குடுத்து பக்கத்துலையே வெச்சுக்க..பட்டாபட்டிக்கு தெரிஞ்சா உங்களுக்கு முன்னாடி அவன் உஷார் பண்ணிடுவான்..அப்றம் பியுச்சர்ல நமக்குதான் கஷ்டம்..)

 41. கண்ணே ரோஸ்விக் ! சட்டத் துறையை எடுத்துக் கொள்...உனக்கு வேணும்ங்கற சட்டத்தை இயற்றிக்கொள். அடா புடா தடா பொடான்னு எதை வேண்ணா போட்டுக்க...(நான் சொல்ற டைம்ல இந்த வெளியூர்காரனையும் பட்டாபட்டியயும் உள்ள தூக்கிப் போடற மாதிரி பார்த்துக்க ராஜா...!)

 42. சட்ட மற்றும் சமுதாய நலத்துறை அமைச்சர் திரு ரோஸ்விக் அவர்களுக்கு மரியாதை நிமித்தம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறான் ராணுவ தளபதி வெளியூர்க்காரன்...(கண்ணு மன்னர் சொன்னா நீரு பதவி ஏத்துக்கிட்டுதான் ஆகனும்.வேணாம்னு சொன்னா நாளைக்கு நீங்கதான் ஒய் மெயின் பிக்சர்.பட்டு சொல்லுயா நம்மள பத்தி....).வெளியூர்க்காரன்..ராணுவ தளபதி..இந்திய ராணுவம்..

 43. ரெட்டை வாலு வெவரமான மன்னருயா நீரு... எதாவது ஒரு சட்டத்தைப் போட்டு... மகளிர் அணித்தலைவர் உள்ள தூக்கிபோடும்போது... மகளிர்களையும் சேர்த்து உள்ள தூக்கிப்போட்டு ... பட்ட பாட்டியோட கொட்டத்தை அடக்கலாம்னு பாக்குரீறு... :-))

  தளபதி... என்னையும் அசலுக்கு, வட்டிக்கு வாங்கியாவது கூட்டிட்டு போங்கையா... நான் விசிலு நல்லா அடிப்பேன்...(ஓ நீங்க தளபதி ஆளோ?... அதை மறந்த்துட்டன்யா...)

 44. மன்னா வெளியூர்காரனும் ரெட்டைவால்சும் பின்னூட்டம் போடற எல்லாருக்கும் ஒரு பதவிய கொடுத்து கொடுமபடுதரானுகன்னு வெளில மக்கள் பரவலா பேசிக்காறாங்க.அந்த பதவிய எத்துக்லைனா அடுத்த நாள் சம்பந்தபட்டவரோட லிங்க போட்டு ஓபனா கலாய்பானுகன்னும் ஒரு பேச்சு அடிபடுது...இந்த விஷயம் பட்டாபட்டிக்கு தெரிஞ்சா நாளைக்கு பதிவுல நாம ஆள் புடிக்கரோம்னு போட்டு நாரடிசிறுவான்..இதுக்கு எதாச்சும் ஒரு வழி பண்ணுங்க...

 45. அசல் படத்துக்கு விசிலா..யோவ் ராணுவ அமைச்சரை..உம்மை எச்சரிக்கிறேன்..மறுக்கா இப்டி சொன்னா அப்றம் மேர்சலைடுவான் வெளியூர்காரன்..நான் மொதொள்ள விஜய் ரசிகன்..அதுக்கப்றம்தான் ராணுவ தளபதி..(ஆமாம் மன்னா,,சட்ட அமைச்சர்னா இவர் சொல்றதையும் நான் இனிமே தளபதிங்கற முறைல கேக்கணுமா...?...ஐயகோ..பறிபோனதே என் சுதந்திரம்...)

 46. யோவ்.. நல்ல பயபுள்ள ரோஸ்விக் ..
  உங்க நாதாரிக் கூட்டத்துல சேர்த்து நாற வெச்சுடிங்களே..

  இப்பவும் சொல்றேன்.. யசராவது , மகளிர் அணினு வந்தா, தக்காளி போட்டுத் தள்ளிட்டு போயிடேயிருப்பேன்...

 47. மகளிர் அணியில, இவனுக்கு வணக்கம் சொல்றதுக்கு "கட்டிபுடிசிக்கோ, முட்டிஇடிசிக்கொ"ன்னு ஒரு முறை வெச்சிருக்கான் பட்டாப்பட்டி..அத மட்டும் எப்டியாச்சும் தடுத்து நிறுத்த சட்டம் கொண்டு வருமாறு சட்ட அமைச்சரை பணிவன்போடு கேட்டு கொள்கிறேன்..-ராணுவ தளபதி...

 48. யோவ் ரோஸ்விக்கு...டைம் வந்துருச்சுயா...இன்னிக்கு வெள்ளிகிழமை..நல்ல நாளு..பட்டாபட்டிக்கு லாடம் கட்டிறலாம்..என்ன சொல்ற? முக்கிய அறிவிப்பு: மகளிர் அணி இன்றோடு கூண்டாக கலைப்பு..அனைத்து மகளிர் அணியும் இனி மன்னர் மேற்பார்வையிலேயே இயங்கும் என அரசுக் குறிப்பு தெரிவிக்கிறது

 49. @ரெட்டைவால் ' ஸ் said...///ஹா ஹா ...வெச்சானுகையா ஆப்பு...சட்ட அமைச்சரும் மன்னரும் சேர்ந்து பட்டாபிக்கு....மன்னா இதை பட்டாப்பட்டி பதறி போய் எதிர்ப்பான் என ராணுவம் எதிர்பார்ப்பதால் கழகத்தில் ஈடுபடும் அனைவரயும் கைது செய்து அசல் படத்தை போட்டு காமித்து மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு எதுவாக ஒரு சட்டம் இயற்றினால் நன்றாக இருக்கும்..ஆவன செய்யுமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்...!!

 50. "கட்டிபுடிசிக்கோ, முட்டிஇடிசிக்கொ"முறை,இனி பதவியில் இருக்கும் எல்லோருக்கும் விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்படும் என்று நமது சட்டம் 48 D-ன் உட்பிரிவு "G" -யில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  சட்ட அமைச்சரின் சொல்லு மீறுவோர் 5 முறை வில்லு படத்திற்கு அனுப்பிவைக்கப்படுவர் என்பதும் நினைவுபடுத்தப்படுகிறது.

 51. பட்டாபட்டிய சினிமா நடிகைகள் பாதுகாப்பு வாரியத்தோட தலைவரா அறிவிச்சிடுங்க...அப்பதான் கொஞ்சம் அமைதியாவான்..கொஞ்ச நாள் கழிச்சு அந்த வாரியத்த ராணுவத்தோட நேரடி கண்காணிப்புல கொண்டு வந்தரலாம்..பட்டாபட்டிய விலங்குகள் நலத்துறைய மட்டும் வழிநடத்த சொல்லிரலாம்.நடிகைகள நான் பத்திரமா பார்த்துக்கறேன்...(ஹி..ஹி...ப்ளீஸ் மன்னா...பார்த்து எதாச்சும் செய் மன்னா..நான் நமிதாவ பார்த்ததே இல்ல..)

 52. @ரோஸ்விக் said...//
  அந்த விகிதாசார முறை அவனுக்கே டெய்லி வர்ற மாதிரி ரெட்டை எதாச்சும் கூதல் பண்ணுவான்..பார்த்து உஷாரா இருந்துக்க சட்டம்...!!.(யோவ் ஏன்யா இன்னும் வில்ல போடறீங்க..நாங்கதான் ஒத்துகிட்டோம்ல..படம் நல்லா இல்லைன்னு..அப்றம் ஏன்யா இன்னும்..)

 53. ஆகா.. 10 நிமிசம் மீட்டிங்க் போயிட்டு வரதுகுள்ளே..
  நம்ம இலாகாவ ஆட்டயப் போடறிங்களே மக்கா..
  இது நல்லாயில்லை..

  இதை ஆராய்ந்து பார்த்ததிலே,
  ரெட்டை வால் , வெளியூர் மற்றும் உள்ளூர் ரோசாவிக்
  கூட்டாளிகள் எனத் திரிகிறது..

  என்னுடன் படித்த எந்த நாதாரியும் , 3-வகுப்புக்குமேல்
  தாண்டாததால் , பட்டாபட்டி தனிமனிதனாக
  இவர்களுடன் போராட வேண்டியுள்ளது...

  ஆகவே பட்டாபட்டி நடிகர் கார்த்திக் ( ஆமா, அந்த நாதாரிதான்)
  கட்சிக்கு தாவலாமா என் மகளிர் அணியுடன் கலந்து உங்களுக்கு
  விரைவில் ஒரு முடிவை தெரிவிப்பார் என் நம்புகிறோம்..

 54. கடைசியாக ஒண்றை சொல்லிக் கொள்ள ஆசைபடுகிறேன்..
  ங்கொய்யாலே..
  போகும் போது , கிளவரணிய, விட்டுட்டு, மகளிரணியுடன் தாவிவிடுவேன் என்பதையும் இந்த நேரத்திலெ சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்...ஆகவே மன்னா.. முடிவெடுப்பது உங்கள் கையில்..

  வெளியூரானிடம் உங்கள் சீ.டீ(சலாமியா அழகிகளுடன் உல்லாசமாக ) இருப்பதால்தான் இவ்வளவு ஆட்டம்
  போடுகிறான் என் உளவுதுறை சொல்கிறது..

 55. //சினிமா நடிகைகள் பாதுகாப்பு வாரியத்தோட தலைவரா அறிவிச்சிடுங்க..//

  இதையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன்....( யோவ்..என்ன வெளிய தூக்க , கூடப் படிச்ச நாதாரிகள் எவனுமே இல்லையா..)

 56. தி.கு.ஜ.மு.க.(http://paamaranpakkangal.blogspot.com)... யோவ் பட்டு இந்த கட்சியோட கூட்டணி சேர முடியுமான்னு விசாரிச்சு பாருயா..அந்த சலாமியா சிடி தொலைஞ்சு போச்சு..அந்த மேட்டர் ரெட்டைக்கு தெரிஞ்சா என்ன போட்ருவான்..அதுக்குள்ளே நாம எதாச்சும் உள்குத்து பண்ணி ஆட்டைய கலைச்சு ஆட்சிய புடிக்க பார்ப்போம்..

 57. வெளியூரு..அசல் படம் பார்த்துட்டு வந்து, கமென்ஸ் போட்டடைனா ,
  தப்பிச்சுட்டேனு நினச்சுக்கிறேன்.. இல்ல

  ங்கொய்யா.. வீரமரணம்
  அடைந்துவிட்டார் ...அப்படினு சொல்லிட்டு ரெட்டைவாலயும் போட்டு தள்ளிடறேன்...ஓகேவா

 58. pillaival says:

  sir A class blog sir ungaladhu.first time ipathan vanthen athana post-aum patichutan.super sir.yaroda blog-aum ipti patichadhulla sir nan.

 59. கலக்குரே வெளியூரு... சிரிச்சு சிரிச்சு எனக்கு கலக்குது ஒய்....

  மொத நாளு உச்சா போனதப் பத்தி எழுதீட்டு... அடுத்த நாளு உச்சிமாங்காளியைப் பத்தி எழுதி... ங்கொய்யால...

  ரெட்டைவாலு... நம்ம ஆட்சி காலத்துலையே எல்லா நாட்டையும் அபகரிச்சுடுவோம்யா... அதுக்கு தகுந்த மாதிரி நம்ம சட்டம் திருத்தி எழுதப்படும்...

  மூணுபேரும் நான் குடுத்த மெயில் id க்கு மெயில் போடல.... ங்கொக்கா மக்கா... சட்டம்... சட்டைய கழட்டிட்டு கன்னாபின்னான்னு பாயும்.

  பட்டாப்பட்டி மகளிரணி உனக்குத்தான்யா... யாராவது புதுசா போட்டியிட்டா அவன பொது வேட்பாளரா நிப்பாட்டி... ஒண்ணுமில்லாம விரட்டிவிட்டுருவோம். நீ கவலைப்படாதே...

 60. @ரோஸ்விக் said...
  வாய்யா சோக்காளி ரோசுவிக்..
  நீருதான் நம்ம ஆளூ..
  மெயில் ஐடி என்னய்யா?.. உயிரயே கொடுப்பான் இந்த பட்டாபட்டி..
  ID : pattapatti.cbe@gmail.com

  @வெளியூர்க்காரன் said...
  ஆமா.. (http://paamaranpakkangal.blogspot.com).

  இவரப் பார்த்த கொஞ்சம் பெரியவராயிருக்காரு..
  இவரையும் போட்டு தாக்கவா?...
  பாவமையா.. கொஞ்ச நாள் பார்க்கலாம்..

  கட்சி பிக் அப் ஆனா , உள்ள பூந்து , கலகம் பண்ணி
  கைப்பற்றலாம்.. ( எதுக்கும் ராணுவத்தை ரெடியா வை.. வெளியூரு)
  இல்ல.. காச வாங்கிட்டு தாய் கழகத்தோட இணைச்சுடலாம்
  ஓ.கே வா?..

  ஆனா.. இப்பவே சொல்லிறேன்.. அந்த கட்சி மகளிர்
  அணி எனக்கு வேண்டாமய்யா...

 61. அரசாங்க அறிவிப்பு : எல்லோரும் சேர்ந்து கூட்டு சதி செய்தால் உங்கள் வீட்டுக்கு ஜக்குபாய் சி.டி வந்து சேரும் என்றும், அதை மீறும் பட்சத்தில் சரத்குமார் அன்ட் கோவே உங்கள் வீட்டில் ஒரு நாடகத்தை நடித்துக் காட்டுவார்கள் என்றும் அரசாங்க செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

 62. மன்னா ...மன்னித்து விடுங்கள்...
  என்னை தூக்கில் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளுங்கள்..

  அந்த நாதாரி படம் மட்டும் வேண்டாம்...

  ( முடிந்தால் தேவ நாதாரி சீ.டீ அனுப்பி வைக்கவும்..என்னமோ
  65 ஆவது கலை பற்றி பாடம் எடுத்துள்ளதாக , வெளியூரு
  SMS அனுப்பியிருக்கிறார்..)

 63. @pillaival said...
  //

  ரெட்டைவாலோட பிரதரோ?...
  அய்யா.. வெளியூரு , அசல் படம் பார்க்க போயிடுச்சுனு
  நினைக்கிறேன்...
  எதுக்கும் நாளைக்கு வாங்க சார்...

  நான் யாரா சார்...?
  இந்த பய புள்ள எழுத்துக்கு , என்னோட கழகத்தையே விட்டுக்
  கொடுத்த பொன்மனச் செம்மல் சார்..

 64. @pillaival said...sir A class blog sir ungaladhu.first time ipathan vanthen athana post-aum patichutan.super sir.yaroda blog-aum ipti patichadhulla sir nan..///
  ஹி..ஹி... போன வாரம் த்ரிஷா கூட என் ப்ளாக படிச்சி பார்த்துட்டு இதே மாதிரிதான் சார் சொன்னா...ரொம்ப நன்றி சார்..அடிக்கடி வாங்க...

 65. LK says:

  goyyala 3 peru pinnootam ppotte savadikareenga

 66. director says:

  Romba nallaa ezhutharinga sir, timing comedy superb,continue and best of luck.
  saravanan,
  singapore.

 67. saju says:

  //அதுக்கு எங்கம்மா அப்பன மாதிரியே லூசா வந்து பொறந்துருக்கான் பாரு மூதேவின்னு கேசுவலா சொல்லிட்டு போன வெச்சிட்டு வெங்காயம் அரிய போய்ட்டாங்க...மனம் தளராத வெளியூர்காரன் கால் கிலோ பௌடரை பேப்பரில் மடித்து கொண்டு புறபட்டான் அந்த தேனிசை தென்றலை சந்திக்க...//

  ohh god

 68. //உச்சிமாங்காளி...இது என் பொண்டாட்டிய செல்லமா கூப்ட்ரதுக்கு நான் 6 வது படிக்கும்போது யோசிச்சு வெச்ச செல்ல பேரு..// ஹா ஹா

  என்னமா எழுதிறீங்கப்பா. we really enjoyed it.

  //அதுக்கு எங்கம்மா அப்பன மாதிரியே லூசா வந்து பொறந்துருக்கான் பாரு மூதேவின்னு கேசுவலா சொல்லிட்டு போன வெச்சிட்டு வெங்காயம் அரிய போய்ட்டாங்க...// சிரிச்சே வயிறு வலிக்குதப்பா.

  வழ்த்துக்கள்
  ப. அருள்நேசன்

 69. //கல்யாணம் ஆன அண்ணணுக எல்லாம் சரியா நைட் பதினோரு மணிக்கு பல்லுகில்லேல்லாம் சுத்தபத்தமா வெளக்கிட்டு உங்க பொண்டாட்டிமார்கள செல்லமா உச்சிமாங்காளினு கூப்ட்டா நறுக்குன்னு எச்சில் வாசனையோட ஒரு லிப்ஸ் கிஸ் கருகி போன உங்க உதட்டுக்கு பரிசா கெடைக்கும்னு ஜக்கம்மா மேல சத்தியம் பண்ணி வெத்து பத்திரத்துல எழுதி குடுக்கறான் வெளியூர்காரன்...


  உக்காந்து யோசிக்கிரானுங்கயா...