- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 36 comments and to comment


உலகத்துலேயே பொண்ணுங்க சொன்னா மட்டுமே அழகா இருக்கற ஒரே வார்த்தை இது மட்டும்தாம்ங்க..ஆண்கள் நாம என்னதான் பொண்ணுங்கள விட அழகுலையும் திறமைலையும் படிப்புலையும் பண்புலையும் இன்னும் இங்கு விட்டு போன மற்றும் சில இத்யாதிகள்ளையும் பெண்களால தொடவே முடியாத அளவுக்கு உயரத்துல இருந்தாலும் இந்த வேவேவேவே விசயத்துல நாம பொண்ணுங்ககிட்ட தோத்து போறோம்ங்கரத ஈகோ இல்லாம ஒத்துகிட்டுதாங்க ஆகணும்... ஆமாம்க...ஒரு பொண்ணு உதட்ட சுளிச்சு வேவேவேவே சொல்லும்போது...ப்ச்.அதாங்க..அது மட்டும்தாங்க...ஆனா பாருங்க இதே வார்த்தைய நான் தனியா கண்ணாடி முன்னாடி நின்னு சொல்லி பார்த்தேன்...வண்டலூர் ஜூ ல ஆண் கொரில்லா குரங்கு, பெண் குரங்க செக்சுக்கு கூப்டுற மாதிரி இருந்துச்சு...அதனால இது பெண்களுக்கு மட்டுமே சொந்தமான வார்த்தைன்னு வெளியூர்காரன் அங்கீகரிசிட்டான்.இது பெண்கள் சாம்ராஜியத்தோட ஆட்சி மொழி...ஒரு பொண்ணு வேவேவேவே சொல்லும்போது எந்த ஒரு ஆணா இருந்தாலும் அவன் மனசு தடுமாருவாங்கறது வெளியூர்க்காரன் சைகாலஜில ப்ரூவ் பண்ணப்பட்ட உண்மை... இப்ப பதிவுக்கு போவோம்..

ஆனா இந்த வெவேவேவால வெளியூர்காரன் பட்ட பாட்டதாங்க உங்களால தாங்கிக்கவே முடியாது..உங்களுக்கே தெரியும் வெளியூர்க்காரன் இளைய தளபதி  விஜயோட அதிதீவிர ரசிகன்னு..எந்த விஜய் படம் பார்த்தாலும் அந்த படத்துல வர்ற விஜய் கேரக்டர் மாதிரியே கொஞ்ச காலம் வாழ்ந்து வருவான் வெளியூர்க்காரன்கரதையும்  நாடறியும்..நான் சொல்லபோற சம்பவம் நடந்தது சச்சின் ரிலீஸ் ஆன காலகட்டம்..அப்பல்லாம் எந்த அழக யாருகிட்ட பார்த்தாலும் உடனே ஓடி போய் பாராட்டி சொல்லிடறது வழக்கம் ..பக்கத்துக்கு வீட்ல குனிஞ்சி கோலம் போடற ஆண்ட்டி,ஷால் போடாம சுடி போட்டுகிட்டு மிடுக்கா வர்ற கூட படிக்கற ஷீலா,ஜீன்ஸ் பேன்ட்ட டைட்டா போட்டுக்கிட்டு லேடீஸ் பேக ஆட்டிகிட்டே வர்ற சரளா இவங்க எல்லார்கிட்டயும் போய் முறையே கோலம் நல்லாருக்கு,சுடிதார் நல்லாருக்கு,லேடீஸ் பேக் நல்லாருக்குன்னு பாராட்டி சொல்லி அலப்பறைய குடுத்து அப்லாசுகள அள்ளிகிற்றுந்த காலகட்டம்..கட் பண்ணீங்கன்னா...   

ஒரு பொண்ண பார்த்தேங்க...அவ ரெண்டு கண்ண பார்த்தேங்க..அயோயோ.அயோயோயோயோ..அதே அதே அதே அதேதாங்க....அப்போதான் அதையும் பார்த்தேங்க..எது..? எதையா..இருயா சொல்றேன்..தோழிகள் புடை சூழ சிரிச்சு பேசிகிட்டே வந்த அந்த தேவதை பீசு திடீர்னு அவ பிரெண்டு அந்த குள்ளச்சிய பார்த்து வேவேவேன்னு பலிப்பு காமிச்சா..ச்சே,என் சித்தப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்தப்போ அவருக்கு எப்டி வலிசிருக்கும்னு எனக்கு அப்போதாங்க தெரிஞ்சுது...ஒரு ஸ்மால் கட்டிங் பலிப்புல,பயபுள்ள என்ன இழுத்துபோட்டு அவ காலடில கவுத்தீட்டாங்க...விட்டனா..நம்மதான் சச்சின் ஆச்சே...நேர அந்த புள்ளைகிட்ட போனேன்..எக்ஸ்கியூஸ் மீ..எனக்கு எதாச்சும் அழகா தெரிஞ்சா உடனே போய் பாரட்டிருவேன்.நீங்க இப்போ வேவேவேணு சொன்னது உங்கள விட ரொம்ப அழகா இருந்துச்சுன்னு சொல்லிட்டேன்..நாம யாரு...சச்சின்ல.... 

அந்த மாதிரி சீனுக்கு எல்லா படத்துலயும் கூட நிக்கற பிரெண்ட்ஸ் வாய கையாள மூடிட்டு சிரிச்சுகிட்டே ஷாக்கிங்கா   ஒரு எபக்ட் குடுப்பாங்க..ஆன அன்னிக்கு விதயாசமா நடந்துச்சு..எல்லாம் பேயடிச்ச மாதிரி நின்னாலுக .நாம்தான் ரொமான்ஸ் காமெடி மூட்ல இருந்தமா...அவளுக ரியாக்சன் ஒரு பெரிய விஷயமா தெரியல .அப்பதாங்க நானே எதிர்பார்க்காத மாதிரி ஒரு விஷயம் நடந்துச்சு...சட்டுன்னு திரும்பி அந்த வேவேவே பலிப்புக்காரி என் மொபைல் நம்பர கேட்டா..தக்காளி அந்த செகண்ட் இருக்கே..மறுபடியும் வாழ்க்கைல வரவே வராதுயா..காலுல விழுந்தாலும் பிகர் மடியாத நமக்கு தானா வந்து காலடியில ஒரு பிகர் விழுதேன்னு அங்காலம்மனுக்கு நன்றி சொல்லிட்டு என்னோட ஆபீஸ் விசிட்டிங் கார்ட எடுத்து நீட்னேன்..(காதல்ல விளம்பரம் ரொம்ப முக்கியம் பிரதர்..) 

அன்னிக்கு ஈவினிங் வரைக்கும் மொபைல கைல வெச்சுகிட்டே வெயிட் பண்ணிகிட்டே இருந்தேன்..நாதாரி பயலுக அன்னிக்குன்னு பார்த்து எந்த நாயும் எனக்கு கால் பண்ணவே இல்ல..கரெக்டா மணி 7.48pm...ஜெர்மனியின் செந்தேன்மலரே....(என்னோட ரிங்க்டோன்..)..அட்டென்ட் பண்ணேன்.....................!

யாருன்னே தெரிலங்க...ஒருத்தன் போன் பண்ணி எங்கப்பாவே பச்சை பச்சையா திட்டுனான்...நான் அப்பவும் சொன்னேன்...நீங்க என் அப்பாவ திட்றத பத்தி எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல பிரதர்...பட் நீங்க யாருன்னு சொல்லிட்டு திட்டுங்கன்னு..சண்டாளப்பாவி..கோவக்காரன் போலருக்கு...என்னையும் திட்ட ஆரம்பிச்சிட்டான்...உங்களுக்குத்தான் என்ன பத்தி தெரியுமே..கன்னாபின்னான்னு கோவம் வந்தா போன கட் பண்ணிட்டு நேரா பாத்ரூம் போய் பேன்ட்லையே  யூரின் இருந்து பயத்த கண்ட்ரோல் பண்ணிடுவேன்னு..அன்னிக்கும் அப்டிதான் பண்ணேன்..ஆன என் கேட்ட நேரம்..!

அந்த புள்ளைக்கு அஞ்சு அண்ணனுகளாம்...உலகத்துலேயே கொடுமையான விஷயம் அழகான ஜிகுடிகளுக்கு முரட்டு அண்ணணுக இருக்கறதுதான்..ஏன்டா செகண்ட் லைன் ஆக்டிவேட் பண்ணோம்னு அன்னிக்குதாங்க பீல் பண்ணேன்.ஒருத்தன் திட்டிகிட்டு இருக்கான்..இன்னொருத்தன் செகண்ட் லைன்ல வெயிட் பண்ணிகிற்றுகான்..ஒரு நிமிஷம் இருங்கன்னேன் உங்க தம்பி வெயிட் பண்றாருன்னு 2 வது அண்ணன் சார்கிட்ட(இன்னும் பயம் போகல.) அனுமதி வாங்கிட்டு 3 வது அண்ணன்கிட்ட போனேன்..ஆன சும்மா சொல்லகூடாது...அவர் ரொம்ப டீசெண்டுங்க..அந்த குடும்பத்துலயே நல்ல வேலைல இருக்கறது அவரு மட்டும்தானாம்..(வெல்டிங் பட்டறை வெச்சுருகாராம்..).திட்றதுக்கு முன்னாடி இன்ட்ரோ பண்ணிகிட்டாறு.ஆன கெட்ட வார்த்தைல திட்றதுல அவரு எந்த கம்ப்ரமைசும் பண்ணிக்கல...தொழில் நேக்கா திட்னாறு..எனக்கெல்லாம் திட்டு வாங்கறது புதுசிள்ளதான்..ஆன அன்னிக்கு திட்டு வாங்கினது ரொம்ப புதுசா இருந்துச்சு...புதுசு புதுசா திட்னாங்கே...வேவேவே நல்லாருக்குன்னு சொன்னியாம்ல..உனக்கு தாடையே இல்லாம பேத்து எடுதுருவேன்னு 4 வது அண்ணன் ரொம்ப அன்போட எச்சரிச்சாறு..அப்போ ரெண்டாவது  அண்ணன் மறுபடியும் லைன்ல வந்தாரு.. 

நீ நாளைக்கு உன் ஆபீஸ் வாடி அங்க வெச்சுக்குவோம் கச்சேரியன்னு மிரட்டல் விடுத்தாறு....நானும் வழக்கம் போல வாய் சும்மா இல்லாம உங்களுக்கு எப்டின்னேன் என் ஆபீஸ் தெரியும்னு கேட்டுபுட்டேன்...அதுக்கு ரொம்ப அழகா பாசத்தோட ஒரு பதில் சொன்னாரு...நீதானடா விசிட்டிங் கார்ட என் தங்கச்சிக்கு குடுத்த எருமைமாட்டு உலக்கைன்னு... 

இப்பவும் கூட அந்த அஞ்சு அண்ணனுங்களுக்கும் குடும்பத்துல எதாச்சும் பிரச்சனைனா கூட எனக்குதான் போன் பண்ணி திட்டுவாங்கன்னா பார்த்துகோங்க..அவ்ளோ பழகிட்டோம்..அந்த மூணாவது அண்ணன் இந்த பொங்கலுக்கு கூட கால் பண்ணி உன் கால வெட்டி காக்கைக்கு போட்ருவண்டா நாயேன்னு திட்னாறு..ஏதோ அன்னிக்கு பொங்கல் சரியா பொங்கல போலருக்கு..ஆன அதோட விட்டுடேங்க...விஜய பார்த்து விஜயா வாழற வழக்கத்த...

இப்பல்லாம் பொண்ணுங்க வேவேவேன்னு பலிப்பு காமிச்சா ரொமான்ஸ் மூடே வரமாட்டேன்குதுங்க...

பயத்துல யுரின்தான் வருது..கருமம் அதுவும் பேன்ட்லையே ..

வெளியூர்க்காரன் 

36 Responses so far.

 1. அப்பாவி says:

  ஏனுங்க உங்க போன் நம்பர் என்னங்க ... சும்மா .. நம்ம கார்ட்ல போடத்தான் ........

 2. ஐயோ.. ஐயோ.. சச்சினுக்கே இப்படின்னா.. பிரண்ட்ஸ் (ல்தகா சைஆ) வந்தப்போ, உங்க நிலைமை எப்படி இருந்திருக்கும்ன்னு நெனச்சு கூட பார்க்க முடியல சகா.. எப்படி உங்க கூடராதுல தலைவரு மொதக்கொண்டு எல்லோருமே காமெடி பீசாவே இருக்கீங்க..

 3. ரொம்ப சூப்பர்ங்க.. அட்டகாசமான பதிவு.. அமர்க்களமா இருந்துச்சு.. இது மாதிரி வில்லன் கிட்ட அடிவாங்குன அசல் அனுபவங்களை எழுதுங்க. படிக்க ரொம்ப ஆசையா இருக்கு. :)

 4. யோவ்... கலக்கிட்ட போ..

  படிச்சு , சிரிச்சு , பேண்ட்-லயே யூரின் போற நிலைமைக்குத் தள்ளிட்ட அப்பு..

  சே.. உங்ககூட போயி சண்ட போட்டுகிட்டு..

  இந்தப் பதிவுக்குக்காக ' ப.மு.க வை ' பரிசாக் கொடுக்கிறான் இந்தப் பட்டாபட்டி..
  ப.மு.க இனிமேல் உங்க தலைமுறைக்கே சொந்தமய்யா...

  அன்புடன் பட்டாபட்டி

 5. @ரெட்டைவால் ' ஸ் said...//
  Thanks Machaan... :)
  லோகு said...///
  வில்லன் கிட்ட அடிவாங்குன அசல் அனுபவங்களை எழுதுங்க. ///
  இந்த வில்லனுககிட்ட (விஜய் ரசிகர்கள் ) , அசல் (அஜித் படம் ) அடிவாங்க போற அனுபவத்த வேணா எழுதறேன்..படிச்சு என்ஜாய் பண்ணுங்க... :)

 6. அப்ப மொத்தம் எத்தன பேண்டு வச்சிருக்கீங்க? (அட... பேண்ட் கேட்டேங்க..)

 7. @பட்டாபட்டி.. said...///
  யோவ் பட்டாப்பட்டி..என்ன கேப்ல கெடா வெட்ற...யாரோட கட்சிய யாரு யாருக்கு குடுக்கறது...பமுக வெல்லாம் என் பேருக்கு மாத்தி எழுதி ரொம்ப நாள் ஆச்சு பங்காளி...போன வாரம் சரக்கடிச்சிட்டு ஒரு வெள்ளை பேப்பர்ல கையெழுத்து போட்டியே அது என்னான்னு நேனைசிட்ருக்க...சீக்கிரம் ரெடி ஆகு மச்சி..உமக்கு அர்ரெஸ்ட் வாரன்ட் பிறப்பிக்க போறார் மன்னர் ரெட்டைவால்ஸ்..ஊ ஊ தான்....

 8. @அண்ணாமலையான் said.அப்ப மொத்தம் எத்தன பேண்டு வச்சிருக்கீங்க? (அட... பேண்ட் கேட்டேங்க..)..///
  நேனைஞ்சது மூணு..காஞ்சிருக்கறது நாலு...(மூணு பேன்ட்ட துவைச்சு போட்ருக்கேன்...அத சொன்னேன் மொதலாளி ...) :)

 9. யோவ்.வெளியூரு ...
  .ஒரு கெத்துக்கு நான் குடுத்த மாறி இருக்கட்டுமய்யா....
  இல்லாட்டி நாளைக்கு ஒரு பய பள்ளைக மதிக்க மாட்டாங்கையா...

 10. @பட்டாபட்டி.. said...//
  அப்போ உடனே ஒரு பதிவை போட்டு ப மு க வுக்கு தலைவர என்ன அறிவிச்சிடு...மகளிர் அணிய மட்டும் நீ பார்த்துக்கோ..ரெட்டைவால்ச மன்னரா ஏத்துக்கிட்டதா முழுமனதோட அறிவிசிடும் ஒய்...உன்ன மரண தண்டனைலேந்து நான் காப்பத்தறேன்..நீ இப்போ ஹாஸ்பிடல்ல உஷார் பண்ணி வேசுருகர நர்சொட குஜாலா வாழ்க்கைய என்ஜாய் பண்ணு மாமோய்...இந்த கருமம் புடிச்ச ஆட்சிய நான் பார்த்துக்கறேன்..(எப்டியும் இன்னும் ஒரு வருசத்துல ரெட்டைய போடற மாதிரி இருக்கும்...அப்பறம் கட்சி உனக்கு..ஆட்சி எனக்கு...என்னா சொல்ற...)

 11. அறிவிப்பு : பட்டாபட்டி வெளியூர்காரன் கூட்டு துரோகத்தை கண்டித்து மரீனா பீச்சில் நாளை மாமன்னர் ரெட்டைவால்ஸ் உண்ணாவிரதம்
  அனைவரும் வருக...லெமன் ஜூஸ் தருக!

 12. ரெட்டைவால் ' ஸ் said.அனைவரும் வருக...லெமன் ஜூஸ் தருக!..@//
  டேய் நாயே...நீ இப்போ மன்னர்டா..பழைய நெனப்புல இன்னும் லெமன் ஜூசுக்கு அலையாதடா...மக்களுக்கு உண்மை தெரிஞ்சிடபோகுது...

 13. யோவ்.. நான் பெரிய மனுஷனய்யா.. தலைமைய.... ஒரு பதிவுக்காக விட்டுக்கொடுத்த பொன்மனச் செம்மல் என நாளை சரித்திரம் சொல்லும்.. http://pattapatti.blogspot.com/2010/02/blog-post_1939.html

 14. அப்பு.. ராணுவத் தளபதியானதும் புலிப் பாலை குடித்துவிட்டு படுத்துவிட்டீரோ?
  பட்டாபட்டி - மகளிர் அணித் தலைவர்..( வேறு எங்கும் கிளைகள் இல்லை)..

 15. மக்கா பட்டய கெளப்பி புட்ட. matter எ விட comments classic பா. நெறைய எழுதுங்க. மக்களை விட்டு தனியா இருக்கோமே! அப்படிங்கற உணர்வே மறந்து போச்சு ஒங்க எழுத பாத்து. பட்டாப்பட்டி சீக்கிரமா எறங்கி வந்துட்டாரேன்னு கொஞ்சம் கவலையா இருக்கு. இல்லனா இன்னும் கொஞ்ச நாள் நல்லா ஓடும்னு பாத்தேன். மன்னருக்கு வாழ்த்துக்கள்.

 16. //நீதானடா விசிட்டிங் கார்ட என் தங்கச்சிக்கு குடுத்த எருமைமாட்டு உலக்கைன்னு... //

  அசத்துடா மாப்ள காமெடியா எழுதுறது கைவந்த கலையா இருக்கு உனக்கு..

  //.உங்களுக்குத்தான் என்ன பத்தி தெரியுமே..கன்னாபின்னான்னு கோவம் வந்தா போன கட் பண்ணிட்டு நேரா பாத்ரூம் போய் பேன்ட்லையே யூரின் இருந்து பயத்த கண்ட்ரோல் பண்ணிடுவேன்//  மானங்கெட்டவனே..... ஜெண்ட்ஸ் யூஸ்பண்ணுற மாதிரி நாப்கின் எதுனாலும் இருந்தா இவனுக்கு கொடுங்க சாமிகளா...

 17. //@ariyaluraan said...
  மக்கா பட்டய கெளப்பி புட்ட. matter எ விட comments classic பா. நெறைய எழுதுங்க. மக்களை விட்டு தனியா இருக்கோமே! அப்படிங்கற உணர்வே மறந்து போச்சு ஒங்க எழுத பாத்து. பட்டாப்பட்டி சீக்கிரமா எறங்கி வந்துட்டாரேன்னு கொஞ்சம் கவலையா இருக்கு. இல்லனா இன்னும் கொஞ்ச நாள் நல்லா ஓடும்னு பாத்தேன். மன்னருக்கு வாழ்த்துக்கள்.
  //

  அய்யா அரியலூரான் அவர்களே..
  இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..
  உண்மைய சொல்லுங்க .. ஒத்துக்கொள்கிறேன்..

  ஆனா தவறான கருத்தை சபையினில் கூற வேண்டாம் என் எச்சரிக்கிறேன்...


  நான் எங்கையா சீக்கிரமா எறங்கி வந்தேன்.. சதி பண்ணி இறக்கி உட்டுடாங்க...

 18. negamam says:

  ரொம்ப அருமையா இருந்ததுங்க.யூரினாக இருந்தாலும் நல்லா ஊரவெச்சு சொன்னீங்க போங்க...

 19. பட்டாபட்டி.. said...//யோவ் பட்டு...சதி பண்ணி புடிங்கி திங்கறதுல உள்ள சுகம், வாங்கி திங்கறதுல இல்லையா...கொஞ்ச நாள் மகளிரணிய மட்டும் வெறித்தனமா பார்த்துக்க...வளர்ச்சில கவனம் செலுத்து...இந்த ரெட்டைய பத்தி எனக்கு தெரியும்..எப்டியும் இன்னும் கொஞ்ச நாள்ல என்ன போட்ருவான்..மூளைக்காரன்..அதனால,கூடிய சீக்கிரம் அவன கவுத்து ஆட்சிய புடிக்க சதி பண்ணுவோம்..கூடிய சீக்கிரம் ராணுவத்த என் கட்டுப்பாட்டுல கொண்டு வந்துடறேன்..அதுக்குள்ள நீ போய் ஒரு ஐட்டம் சாங் முடிச்சிட்டு வந்துடு.. :)

 20. ariyaluraan said...///மக்களை விட்டு தனியா இருக்கோமே! அப்படிங்கற உணர்வே மறந்து போச்சு ஒங்க எழுத பாத்து..///
  தேங்க்ஸ் வாத்யாரே..நான் இருக்கண்டி செல்லம் உமக்கு...அடிக்கடி வாங்க..சேர்ந்து சிரிக்கலாம்.. :)

 21. பிரியமுடன்...வசந்த் said...//ஜெண்ட்ஸ் யூஸ்பண்ணுற மாதிரி நாப்கின் எதுனாலும் இருந்தா இவனுக்கு கொடுங்க சாமிகளா...///
  ஜென்ட்ஸ் யுஸ் பண்ற நாப்கினா.!... டேய் நாப்கினா உஸ் பண்ற...கருமம் வந்துச்சுன்னா கழிஞ்சி விட்டு போ வேண்டியதுதானடா...அதுக்கு எண்டா நாப்கின யுஸ் பண்ற..அத சேர்த்து வெச்சு என்னடா பண்ண போற... :)

 22. negamam said...@///யூரினாக இருந்தாலும் நல்லா ஊரவெச்சு சொன்னீங்க போங்க.///
  யுரினா இருந்தாலும் ஊற வெச்சு சொன்னனா...என்னையா இது புதுசா இருக்கு..எந்த ஊரு ஒய் நீறு...?

 23. நான் திட்டு வாங்க காரனம இருந்த அந்த பிகருக்கு இன்று திருமணம் என்பதை தாழ்மையுடன் அறிவித்து கொள்கிறேன்...(4.02.2010).. இந்த பதிவை அவளின் நினைவாய் எழுதிய விஷயம் அவளோட அண்ணன் சார்களுக்கு தெரிய வேண்டாம் எனவும் பணிவன்புடன் உலக பதிவர்களை கேட்டுக்கொள்கிறேன்..(யோவ் பட்டாபி...இந்த விசயத்துல எதாச்சும் உள்குத்து வேலை பார்த்த ரெட்டைகிட்ட சொல்லி கொ(ட்)...ன்னுடுவேன்..)

 24. யோவ்.. அந்த சப்ப பிகர மறக்கர மாறி மகளிர் அணி 'Singapore Lion Dance '
  கத்துட்டு வராங்க..

  உனக்கு முன்னாடிதாண்டி அரங்கேற்றம்..

 25. அன்னைக்கு கேப்பலே.. இன்னொரு வாட்டி ஆடஸ் சொல்லுங்கனு..
  அப்ப இருக்குடி உனக்கு...

 26. //(யோவ் பட்டாபி...இந்த விசயத்துல எதாச்சும் உள்குத்து வேலை பார்த்த ரெட்டைகிட்ட சொல்லி கொ(ட்)...ன்னுடுவேன்..)
  //

  யோவ்.. இப்ப ரெட்ட மன்னரா?.. இல்ல நீரு மன்னரா?..
  ராணுவத் தளவிதியா அடக்க ஒடுக்க பேசு தளபதி அவர்களே....

 27. director says:

  Yappa veliyooru kallakarayya, unmaiyilaye unga blog padichithaan romba neram sirichirukken.keep it up.
  saravanan,
  singapore.

 28. //அந்த புள்ளைக்கு அஞ்சு அண்ணனுகளாம்...உலகத்துலேயே கொடுமையான விஷயம் அழகான ஜிகுடிகளுக்கு முரட்டு அண்ணணுக இருக்கறதுதான்..ஏன்டா செகண்ட் லைன் ஆக்டிவேட் பண்ணோம்னு அன்னிக்குதாங்க பீல் பண்ணேன்.ஒருத்தன் திட்டிகிட்டு இருக்கான்..இன்னொருத்தன் செகண்ட் லைன்ல வெயிட் பண்ணிகிற்றுகான்..ஒரு நிமிஷம் இருங்கன்னேன் உங்க தம்பி வெயிட் பண்றாருன்னு 2 வது அண்ணன் சார்கிட்ட(இன்னும் பயம் போகல.) அனுமதி வாங்கிட்டு 3 வது அண்ணன்கிட்ட போனேன்.// அண்ணன் சார் நீங்க ரொம்ப கலக்கிட்டீங்க... நானும் ஒரு விசிடிங் கார்ட் அடிச்சு எனக்கு பிடிக்காதவன் நம்பரை அதுல போட்டு பார்குற பொண்ணுங்க கிட்டே எல்லாம் தரலாம்ன்னு இருக்கேன்.. கொசுறு: நானும் திருவாரூர்காரன் தான்

 29. றொம்ப அழகா எழுதியிருக்கிறீங்க ஃப்ரதர்.

  //"வ்வேவேவேவே...." உலகத்துலேயே பொண்ணுங்க சொன்னா மட்டுமே அழகா இருக்கற ஒரே வார்த்தை இது மட்டும்தாம்ங்க..// றொம்பவே ரசித்தேன்.

  ப.அருள்நேசன்.

 30. Ramesh says:

  படிக்க ஜாலியா இருந்தது...மெய்யாலுமே இப்படி நடந்ததா. இப்படியெல்லாம் கூட திட்டுவான்களோ.

 31. hello naNbA ithu mAthiri pathivu podurathai niruththalainna kaalu kaiyya edukka vendi varum jaakkirathai(naan ennai sonnen).

  pinna ennangka naan padicchuttu thAnka mudiyaama siricchu tholancchittean en manager pakkaththula irunthatha maRanthuttu.. mavane

 32. siva says:

  meeeeeeeeee
  the first............

  neenga nama orru raasava..emputu naala therima pochey.....

 33. என் ரிங்டன் 'செந்தூரப்பூவே ....செந்தூரப்பூவே ...." இளையராஜாவின் "16 வயதினிலே" பாடலின் முதல் இனிசியல் இசை மட்டும் ....கேட்டுப்பார்த்தால் தெரியும் என் என்னிடம் சில ஆட்கள் அதை மட்டும் MMS செய்ய சொன்னார்கள் என்று