- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 27 comments and to comment


அம்மாவும் அப்பாவும் இன்விடேசன் குடுக்க ஊருக்கு போயிருக்காங்க...திரும்ப வர்றதுக்கு நைட் எட்டு மணி ஆகும்...இவன் காலைல ஒம்பது மணிகெல்லாம் வீட்டுக்கு வந்துடறேன்னு சொன்னவன், இப்போ டைம் எட்டர ஆகுது..இன்னும் காணோம்..இப்டிதான் ஒவ்வொருதடவையும் லேட் பண்ணுவான் இடியட்..!

என்ன பண்ணலாம் சிபிக்கு ,என்னடா  சமைச்சு வெக்க என் தங்ககுட்டிக்குன்னு கேட்டா, கோழி சுக்காவும் ஆட்டு கால் பாயாவும்னு முனியாண்டி விலாஸ்ல ஆர்டர் பண்ற மாதிரி சொல்லுவான் வாலு...


கல்யாணத்துக்கு முன்னாடி லவ்வர்சா தனியா மீட் பண்றதுல ஒரு த்ரில் இருக்கதாங்க செய்யுது...வாழ்க்கைல யாருமே மிஸ் பண்ண கூடாத ஒரு த்ரில் அது..தப்பே இல்லாத ஒரு தப்பு அது..!


சிபியோட இன்னிக்கு புல்லா தனியா இருக்கபோறேன்..மனசு அப்டியே ஜிவ்வுன்னு இருந்துச்சு...இவன் வாலாச்சே..ஒழுங்கா இருப்பானா..? இல்லைனா கூட பரவால்ல..வாலா இல்லைனாதான் பிரச்சனை.என் சிபிகிட்ட எனக்கென்ன பயம்..!


அவன் போன வாரம் எடுத்து குடுத்த சாக்லேட் கலர் சுடிதார்ல, லேசா மேக் அப் போட்டுட்டு முப்பத்தி ஆறாவது தடவையா டிரெஸ்ஸிங் டேபிள் முன்னாடி நின்னப்ப தோணுச்சு...ஷால் வேணாம்னு...!


மேடம் கொரியர்...காலிங் பெல்..சிவபூஜைல கரடியான்னு கதவ தொறந்தவளுக்கு ஷாக்..!


வெளில சிபி கைல ஒரு ரோஜாபூவ வெச்சுகிட்டு அழகா சிரிச்சிட்ருந்தான்  ...அந்த ரோஜா பூ மாதிரியே...!வீட்ல யாரும் இல்ல...போயிட்டு...., சொல்லி முடிக்கறதுக்குள்ள போய் சோபால உக்காந்து டிவிய ஆன் பண்ணிட்ருந்தான்..  


அப்பறம்., இந்த மீசைய கழுத்து வரைக்கும் ஒழுக விட்ருப்பானே...அந்த ஆள் எங்க..?.வீட்ல இல்ல.?.எங்க அந்த ஆளோட பிகரு...? வரு...எங்கடி இருக்க ...?


பொருக்கி...எங்க அம்மாவ வாடி போடின்னு  சொல்லி கூப்ட்ட தொலைச்சிருவேன்..அப்பாவ நேர்ல பார்த்தா மட்டும் உளறி கொட்றது..வீட்ல இல்லைன்னு தெரிஞ்சா பெரிய ரௌடி மாதிரி கலாய்க்கறது...இருடா உன்ன ஒரு நாள் வசமா மாட்டிவிட்றேன்...!


ஏய் சிபி நீ எடுத்து குடுத்த டிரஸ் எப்டி இருக்குன்னு சொல்லேன்...?

அவன் முன்னாடி போய் நின்னு சுத்தி சுத்தி காமிச்சேன்..


சுப்பரா இருக்கு குண்டூஸ்..உனக்கு என்னடி என் ராஜாத்தி...!


ஏய்..நான் ஒன்னும் குண்டு இல்ல..ஜஸ்ட் பிப்டி த்ரீதான்...!


அடிபாவி..இப்டி பொய் சொல்ற..உன் நெஞ்ச தொட்டு சொல்லு நீ குண்டு இல்லைன்னு...!


ஏய் ச்சீ..அசிங்கமா பேசாத...! - சைந்தவி 


அடிப்பாவி..இப்போ அசிங்கமா பேசறது நீனா நானா...இப்டிதாண்டி அப்பாவி ஆம்பளைங்கள வில்லனாக்கறீங்க...!


அப்போ சிரிக்க ஆரம்பிச்சேன்..அதுக்கப்றம், சிரிச்சிக்கிட்டு மட்டும்தான் இருந்தேன்..


நெறைய பேசுனான்...அழகா பேசுனான்..பேசிட்டே இருந்தான்..என் அப்பா மாதிரியே பேசி மிமிக்ரி பண்ணி காமிச்சான்...என்ன ஹால்ல உக்கார வெச்சுட்டு அவனே காபி போட்டு கொண்டு வந்தான்...காதுகிட்ட ஐ லவ் யு சொன்னான்...என் புருவம் எவ்ளோ அழகா இருக்குன்னு அவ்ளோ அழகா சொன்னான்..இன்னொரு தடவ சொல்ல மாட்டானான்னு இருந்துச்சு...ரெண்டு தடவ பின்னாடிலேர்ந்து கட்டிபுடிச்சான்...


இவனோட இருக்கும்போது மட்டும் ஏன் என் வாழ்க்கை இவ்ளோ அழகா இருக்கு..?


சிரிக்க சிரிக்க உப்பு மூட்டை தூக்குனான்..தூக்கிட்டு முதுகுல என்னமோ குத்துதுடி என்னன்னு பாருன்னு சொல்லிட்டு சிரிச்சான்...பொருக்கி..!


ஆறு மாசத்துக்கு முன்னாடி சிபின்னு ஒருத்தன் இந்த உலகத்துல இருக்கறதே எனக்கு தெரியாது...இப்போ இவன தவிர என் உலகத்துல வேற யாரும் இருக்கறதா எனக்கு தோணல...பொம்மைய தொலைச்ச கொழந்த மாதிரி இவன் இல்லைனா எனக்கு அழுக வருது...நான் எப்ப குழந்தையானேன்...எனக்கு என்னாச்சு..என்னை என்ன பண்ணிட்ருக்கான் இவன்..?


இதுக்கு என்னை பேர்னு கூட எனக்கு தெரில..,என்னை பேர் வேணா இருந்துட்டு போகட்டும்...!


சிபி எனக்கு வேணும்..என்கூடவே இருக்கணும் .அவ்ளோதான்..


எப்பவும் சிபிதான் என்கிட்டே கேட்டு கெஞ்சுவான்..


இன்னிக்கு நான்..,


"ஏய் சிபி...வந்து..வந்து...எனக்கு...எனக்கு...,"நான் சொல்லி முடிக்கறதுக்கு.....!


A Veliyoorkaran Article.

27 Responses so far.

 1. சனிக்கிழமை பியர் மாதிரி ச்சும்மா ஜில்லுன்னு இருக்கு வாத்யாரே!

 2. படிச்சிகிட்டே இருக்கணும் போல இருக்கு

 3. Anonymous says:

  க்ளாஸ்!!!!!!!!!!!!! இத படிச்சிட்டு எத்தன பிகருங்க பீலிங்க்ல அழபோறாளுங்க பாரு .,மச்சி !!!

 4. Anonymous says:

  ///// பொம்மைய தொலைச்ச கொழந்த மாதிரி இவன் இல்லைனா எனக்கு அழுக வருது...நான் எப்ப குழந்தையானேன்...எனக்கு என்னாச்சு..என்னை என்ன பண்ணிட்ருக்கான் இவன்..?
  ////////

  Excellent lines

 5. ஹா.ஹா .. ஜொள்ளியிருக்க மச்சி..
  கலக்கல்...

 6. சிபியோட இன்னிக்கு புல்லா தனியா இருக்கபோறேன்
  //

  அடச்சே.. சனிக்கிழமை.. சும்மா இருந்தாலும் ...இப்படி எழுதி ...ஆங்...

  சொறிஞ்சுவிட்டுட்டியே மச்சி!!
  நல்லாயிரு..!!!

 7. பட்டாபட்டி.... says:
  Jul 30, 2011 4:49:00 PM
  சிபியோட இன்னிக்கு புல்லா தனியா இருக்கபோறேன்
  //

  அடச்சே.. சனிக்கிழமை.. சும்மா இருந்தாலும் ...இப்படி எழுதி ...ஆங்...

  சொறிஞ்சுவிட்டுட்டியே மச்சி!!
  நல்லாயிரு..!!!

  ***********************************
  இரும்புப் பாறைக்குள்ள இருந்து கூட என்னமா ஒரு ஃபீலிங்ஸ்...! பட்டாபட்டி உன் லங்கோட்டியை மறைச்சு வேட்டியை இறக்கிக் கட்ட நேரம் வந்துடுச்சு...

 8. தொட்டுத்தொடரும்---காதல்
  தொடாமல் தொடர்வது ----காமம்

 9. @பட்டாபட்டி

  //சிபியோட இன்னிக்கு புல்லா தனியா இருக்கபோறேன்
  //

  என்னாது புல்ல தனியா அடிக்க போறியா!! அடிபாவி புள்ள... :))

  பனங்காட்டு நரி போல வாழ்வில் என்றுமே கல்யாணம் பண்ண முடியாத கன்னி பையன்கள வயித்தெரிச்சலை கிளப்பியதற்க்கு என் கண்டனங்கள்...

 10. //பனங்காட்டு நரி போல வாழ்வில் என்றுமே கல்யாணம் பண்ண முடியாத கன்னி பையன்கள வயித்தெரிச்சலை கிளப்பியதற்க்கு என் கண்டனங்கள்...//

  அவர்தான் இத excellent னு பாராட்டிருக்கார்னா :-)

 11. @செல்வா

  //அவர்தான் இத excellent னு பாராட்டிருக்கார்னா :-) //

  அவ(ள்)ல் கிடைக்காம வெறும் வாய மெல்ராண்டா கண்டுக்காத.. :)

 12. vinu says:

  ////இன்னிக்கு புல்லா////

  மச்சி அப்புடியே சைந்தவிகிட்டே சொல்லி எனக்கு ஒரு குவாடேராவது ரெடி பண்ணி குடு மச்சி

 13. vinu says:

  மச்சி அப்புடியே சைந்தவிகிட்டே சொல்லி எனக்கு ஒரு குவாடர்ராவது ரெடி பண்ணி குடு மச்சி

 14. // vinu said...
  மச்சி அப்புடியே சைந்தவிகிட்டே சொல்லி எனக்கு ஒரு குவாடர்ராவது ரெடி பண்ணி குடு மச்சி
  /

  அடச்சே , எங்கண்ணன் எவ்ளோ பீல பண்ணி எழுதிருக்காரு இங்க வந்து டாஸ்மார்க் கடை ஓப்பன் பண்ணுறாங்களே :-)

 15. vinu says:

  மாப்ளை செல்வா நாங்களும் ரொம்ப பீல் பன்னுனனாலதான் கேக்குறோம் ஹி ஹி ஹி ஹி ஹி

 16. // vinu said...
  மாப்ளை செல்வா நாங்களும் ரொம்ப பீல் பன்னுனனாலதான் கேக்குறோம் ஹி ஹி ஹி ஹி ஹி//

  ஓ, அப்படி ஒன்னு இருக்குதோ ? சரி வாங்க வெளியூர் அண்ணன் வரதுக்குள்ள ஓடிரலாம், இல்லனா காரித்துப்புவாரு!

 17. vinu says:

  ///கோமாளி செல்வா said...
  //ஓ, அப்படி ஒன்னு இருக்குதோ ? சரி வாங்க வெளியூர் அண்ணன் வரதுக்குள்ள ஓடிரலாம், இல்லனா காரித்துப்புவாரு!////


  கண்ணு செல்வா நீ பதிவை ஒழுங்கா படிக்கலைன்னு நினைக்குறேன் இந்த சைந்தவிப்ப் பொண்ணு என்ன சொல்லி இர்ருகுன்னு பார்த்தியா? உங்க அன்ன வெளியூர் அவங்க வூட்டுக்குப் போய் இருகுராராம்....

  நைட்டுதான் வருவாரு....அவங்க செல்லப் பூச்சாண்டி "மாமனார்" வந்தப் பின்னாடிதான் வூட்டை விட்டுக் கிளம்பவே மனசு வரும் மச்சி

 18. //நைட்டுதான் வருவாரு....அவங்க செல்லப் பூச்சாண்டி "மாமனார்" வந்தப் பின்னாடிதான் வூட்டை விட்டுக் கிளம்பவே மனசு வரும் மச்சி//

  இல்லனா, உங்களுக்கும் வேற கல்யாணம் நிச்சயம் ஆகிருக்கு. அதான் நீங்களும் எதாச்சும் சாக்கு, போக்கு சொல்லிட்டு ஓடிருவீங்க நான் மட்டும் மாட்டிக்குவேன். டெரர் அண்ணன வேற காணோம் அதான் பயமா இருக்கு!:-)

 19. vinu says:

  /////டெரர் அண்ணன வேற காணோம் அதான் பயமா இருக்கு!:-)///


  மாப்ளை என்னமா சொல்லுறே... டேர்ரர்ரைக் காணோமா... யாரங்கே கூட்டுங்கள்... இப்பொழுதே அரசவையை...டேர்ரர் இல்லாத இடத்தில் கும்மியடிப்பா.... அய்யகோ.... இந்தக் கொடுமையை கேட்க்க யாருமே இல்லையா????

 20. Anonymous says:

  சிபி மேலுள்ள காதல் வரிகளிலெல்லாம் வழிகிறது.... கதை நடை நன்றாக உள்ளது

 21. மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் காதல் கனி ரசம கலந்த பதிவினைத் தந்திருக்கிறீங்கல்

 22. எத்தனதடவை படிச்சாலும் சலிப்பே இல்ல... படிச்சிகிட்டே இருக்கலாம் போலருக்கு பாஸ்...

  சிபி & சைந்தவி ராக்ஸ்!!

  அடுத்த பாகம் எதிர்ப்பார்ப்புடன்...

  :)

 23. மாணவன் said...
  எத்தனதடவை படிச்சாலும் சலிப்பே இல்ல... படிச்சிகிட்டே இருக்கலாம் போலருக்கு பாஸ்...

  சிபி & சைந்தவி ராக்ஸ்!!

  அடுத்த பாகம் எதிர்ப்பார்ப்புடன்...//

  அது எப்பிட்றா? நீ மட்டும் படிச்சவன் மாதிரியே கமென்ட் போடற?

 24. அப்பறம்., இந்த மீசைய கழுத்து வரைக்கும் ஒழுக விட்ருப்பானே...அந்த ஆள் எங்க..?.வீட்ல இல்ல.?.//


  இந்த மாமனாருகளே இப்பிடித்தான் மச்சி..பொண்ண அழகா பெத்துட்டோம்னு பெரும அவனுகளுக்கு... :))

 25. ..தூக்கிட்டு முதுகுல என்னமோ குத்துதுடி என்னன்னு பாருன்னு சொல்லிட்டு சிரிச்சான்...பொருக்கி//


  பயபுள்ள வாய மூடிகிட்டு இருந்திருந்தா இன்னொரு வாட்டி குத்திருக்கும்!

 26. // வைகை said...
  மாணவன் said...
  எத்தனதடவை படிச்சாலும் சலிப்பே இல்ல... படிச்சிகிட்டே இருக்கலாம் போலருக்கு பாஸ்...

  சிபி & சைந்தவி ராக்ஸ்!!

  அடுத்த பாகம் எதிர்ப்பார்ப்புடன்...//

  அது எப்பிட்றா? நீ மட்டும் படிச்சவன் மாதிரியே கமென்ட் போடற?///

  என்னன்ணே இப்படி சொல்லீட்டீங்க...
  படிக்காம கமெண்ட் போடறதுக்கு இது என்னா ரமேஷ் பிளாக்கா?? படிச்சுட்டு கமெண்ட் போட்டாலே வெளியூரூ தூக்கிபோட்டு மிதிப்பாரு.... :)

  நாங்கலாம் சைந்தவி ஃபேன்ஸ் கிளப் தெரியும்ல அதுவும் சிங்கப்பூர் கிளைக்கு நம்ம பட்டாபட்டிதான் தலைவரு சீக்கிரம் நீங்களும் வந்து சேர்ந்துகுங்க.... :)