- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 33 comments and to comment
அம்மா நூறு டெசிபலில் கத்தினாள்.

"சைந்தவீ...ஃபோன் அடிக்குது பாரு..."

சைந்தவி எரிச்சலாக வந்தாள். அப்பாவுக்கான ஃபோனா இருக்கும்.
இன்னும் எல்லார்ட்டையும் லேன்ட்லைன் நம்பர் கொடுக்கற புண்ணியவான்.

'ஹலோ.."
"சைந்தவிஇருக்காங்களா..?"
"நீங்க..?"

"நாங்க ஆர்டிஓ  ஆஃபீஸ்ல இருந்து பேசறோம்..இன்னும் இந்த வருஷம் நீங்க டாக்ஸ் ஃபைல் பண்ணலை.இது சட்டப்படி குற்றம்.இதுக்கு எகனாமிக் அஃபன்ஸ் ஆக்ட் 568 சி படி எவ்வளோ அபராதம் தெரி..."

"ஆர்டிஓ ஆஃபீஸ்ல இருந்து டேக்ஸா...ஹேய் ஹேய்...இரு...!
யார் இது...?
யேய்சிபி..நீதான...!"

"ஹா..ஹா...கண்டுபுடிச்சுட்டியா...எனக்கு குடுக்க வேண்டியதை குடுத்திருந்தா நான் ஏன் உன் வீட்டுக்கு  ஃபோன் பண்ணி கேக்கப்போறேன்"

"அடப் பாவி...அதுக்காக உன்னை யாரு லேண்ட் லைனுக்கு பண்ண சொன்னது?அம்மாவுக்குத் தெரிஞ்சா...!
சரி எங்க வரணும் சொல்லு வந்து குடுத்துத் தொலைக்கிறேன்"

"சரியா அரை மணி நேரத்துல உங்க வீட்டுப் பக்கத்துல இருக்கிற பஸ் ஸ்டாப்ல வந்து நில்லு..நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்...!"

யாருடி அது ஃபோன்ல...?
ரிசீவரைப் பொத்தி..."உனக்குதான்மா...!
ரிசீவரை அம்மா கையில் கொடுத்தாள்.

"ஹலோ யாரு.."

சிபி உஷாரானான்.
"இந்த டியூனை காப்பி பண்ணனும்னா ஸ்டார் மற்றும் ஒன்பதைஅழுத்துங்க.
வேண்டாம்னா வீட்ல டேப் ரிக்கார்டர்ல போட்டு கேளுங்க.." 
ஃபோனை டக்கென வைத்துப் பெருமூச்சு விட்டான்.
ராட்சசி...!

சரியாக அரைமணியில் சைந்தவி பச்சை சல்வாரில் பஸ் ஸ்டாப்பை அடைந்திருந்தாள். கண்ணுக்கெட்டின தூரம் வரையில் யாரும் வரவில்லை ஒரே ஒரு நகர பேருந்தை தவிர. எங்க போய் தொலைஞ்சான் இந்த சிபி என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே பஸ்ஸினுள் இருந்து குரல் கேட்டது...

சைந்தவி..வா ஏறு...!
ராஸ்கலே தான்.
"வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்னு சொன்ன...!" - சைந்தவி.
"ஆமா அதான் பிக்கப் பண்ணிட்டேன்ல..பஸ்லன்னு சொல்ல மறந்துட்டேன்...!"

அடக்கடவுளே இவனோட எப்படி லைஃப் முழுக்க ..என்று யோசித்த படியே சிபியோடு பின் சீட்டில் அமர்ந்தாள்.

சரி இப்பக் குடு - சிபி
"அய்யோ பஸ்லயா...என்ன விளையாடறியா?"

"சரி! அடுத்த ஸ்டாப்ல ஒரு பார்க் வரும்..யாரும் இருக்க மாட்டாங்க!"

சிபி ... உனக்கு விவஸ்தையே கிடையாது!

சரி இறங்கினவுடனே குடு!

சிபி...நீ அடங்க மாட்ட! முதல்ல என்னை வீட்ல கொண்டு போய் விடு. அம்மா தேடுவாங்க!

அடிப்பாவி! நேத்து அப்படி கொஞ்சினே!

"ம்ம்..அது ஃபோன்ல..போர்வையை ஃபுல்லா போர்த்திட்டு ஒரு தைரியத்துல சொல்லிட்டேன்.அதுக்காக இப்படியா பப்ளிக்ல..! உன்னை ரெண்டு நாள் காயப்போட்டாதான் சரிப்படுவ!"

"அப்போ இன்னைக்கு கிடையாதா?"

"இன்னிக்கு அதுக்கு சண்டேடா செல்லம்....இப்போ சமர்த்தா என்னை வீட்ல கொண்டு போய் விடுவியாம்..இல்லைன்னா...இந்த வாரம் முழுக்க சண்டே தான்..!"

சே..என்றிருந்தது சிபிக்கு. எவ்வளவு ஆசையாக வந்தோம். -ஜஸ்ட் ஒன்னு கூட கிடைக்கலையே என வெறுப்பு உச்சந்தலையில் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தது.

ம்ஹ்ம்...ஓகே! வா உங்க வீட்டுக்குப் போகலாம்!

"வீட்டுக்கு உன் கூடவா...அவ்வளோதான் அம்மா தலைலயே ரெண்டு வைப்பா... இதே பஸ்ல ரிடர்ன் போயிக்கலாம்...ஸ்டாப்ல இறங்கி என் வீட்டுக்குப் போக எனக்குத் தெரியும். சார் கவலைப்படாதீங்க...!"

"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்! வா " என்று முதலில் சைந்தவியை அனுப்பி வைத்து விட்டு சற்று நேரம் கழித்து சிபி சைந்தவி வீட்டுக்கு வந்தான்.

"வாங்க மாப்ப்ள...அப்பா எதுவும் தகவல் சொல்லி விட்டாரா! திடு திப்புன்னு வந்துருக்கீங்க...ம்மா சைந்தவி... அம்மாட்ட சொல்லி காஃபி போட சொல்லு!"

"இல்லை மாமா வந்து, அப்பா அட்வான்சுக்கு மண்டபம் குடுத்துடீங்கலான்னு கேக்க சொன்னார்...இல்லை இல்லை.. மண்டபத்துக்கு அட்வான்ஸ்......."

சைந்தவி அப்பாவோட மீசையை பார்த்து, சிபி நாக்கு பயத்துல உளறி கொட்ட ஆரம்பித்தது... ஆறாங்கிளாஸ் பயாலஜி டீச்சரைத் தவிர சிபி இப்படி தடுமாறி அவனே பார்த்ததில்லை.

" ஹா ஹா புரியுது மாப்ள  ..நீங்க சைந்தவிட்ட பேசிட்டு இருங்க..நான் இதோ வந்துடறேன்!"

மீசை வைத்த கதர் துண்டு பார்ட்டியானாலும் மேன்மக்கள் மேன்மக்களே.

ஹாலில் யாருமில்லை. சைந்தவி அம்மா வர அம்பது  வினாடிகளாவது ஆகும். சடாரென சைந்தவியை இடுப்போடு அணைத்து சத்தமே இல்லாமல்  சைந்தவிக்கு காது மூக்கு கண் எல்லாம் சிவக்க ரெண்டு முத்தங்கள் கொடுத்தான் சிபி.சைந்தவியால் திமிறக்கூட முடியவில்லை...அட்ரினலின் உச்சத்தில் இருந்தது.

ராட்சஸன்...சாதிச்சுட்டான் என நினைத்து உதட்டை துடைத்து கொள்ளவும், அம்மா  காஃபி கொண்டு வரவும் சரியாக இருந்தது.

"என்னடி பேந்த பேந்த முழிச்சுட்டு இருக்க...மாப்ளக்கு காஃபியை கொடு...

சைந்தவீ....மாப்ளைக்கு ஸ்வீட் கொடுத்தியா"

ரெண்டு ஸ்வீட் அவனே..ஸாரி! அவரே எடுத்துக்கிட்டாரும்மா ...!

என்னடி உளர்ற...?

உள்ளே இருந்து சவுண்ட் வந்தது... சைந்தவி அப்பாதான்...

"ஏய்...அவங்க மாத்தி மாத்தி உளறிக்கட்டும்...நீ விட்ரு!"

A article by Rettaivals.

33 Responses so far.

 1. @@For new readers..//

  Please read the previous article for the continuation of this story.

  http://veliyoorkaran.blogspot.com/2011/07/blog-post.html

  Because, இத எழுதற எங்களுக்கே இந்த கதை அவ்ளவா தெரியாது...சோ, பெட்டர் போய் படிச்சிட்டு வந்துருங்க...! :)

 2. Anonymous says:

  மாப்ள !!! அருமைனு சொன்னா திட்டுவே ..,நான் இப்போ என்ன பண்ணட்டும் ?

 3. // பனங்காட்டு நரி said...
  மாப்ள !!! அருமைனு சொன்னா திட்டுவே ..,நான் இப்போ என்ன பண்ணட்டும் ?///

  கொஞ்சம் வெயிட் பண்ணு மாமு, என்ன பண்ணனும்னு தல பட்டா வந்து சொல்லுவாரு... :)

 4. @@@பனங்காட்டு நரி says:
  நான் இப்போ என்ன பண்ணட்டும் ?///

  கொஞ்சூண்டு பாலிடாயில குடிச்சிட்டு, வெக்கபோர்ல போய் படுத்து பத்த வெச்சுக்க மச்சி . .! :)

 5. @@@மாணவன் said...
  என்ன பண்ணனும்னு தல பட்டா வந்து சொல்லுவாரு... ///

  @Pattabi.//
  யோவ் பட்டாபி...என்னய்யா இவன் உன்ன ஒரு பெரிய ஆக்சன் ஹீரோ ரேஞ்சுக்கு வெயிட் ஏத்துறான்...அந்த அளவுக்கு வொர்த் இல்லையே ராஜா நீ...? :)

  @மாணவன்///

  ராஜா இங்க யாருக்கும் யாரும் வெயிட் ஏத்த கூடாது...! இங்க எவனும் ஹீரோ கெடயாது...பார்மாளிடீஸ்லாம் வெளிலதான்...! :)

 6. @ரெட்டை

  சூப்பர் மீண்டும் சைந்தவி கலக்கிட்டாங்க...
  வாழ்த்துக்கள் தல,

  தொடரட்டும் ச்சாக்லெட் பக்கங்கள்....
  :)

 7. திகட்டாத எதிர்பார்ப்பாக நீள்கிறது படைப்பு தொடருங்கள் மீண்டும் வருவேன்

 8. Anonymous says:

  க்வாட்டர் ஓல்ட் மாங்க ராவா அடிச்சா மாதிரி இருக்கு மாப்ள :))))))

 9. Anonymous says:

  ///// யோவ் பட்டாபி...என்னய்யா இவன் உன்ன ஒரு பெரிய ஆக்சன் ஹீரோ ரேஞ்சுக்கு வெயிட் ஏத்துறான்...அந்த அளவுக்கு வொர்த் இல்லையே ராஜா நீ...? :) ////

  பட்டாபி எங்களுக்கு ஹீரோ தான் இப்ப எப்ப எப்பவும் ?

  இப்படிக்கு
  பட்டாபட்டி ரசிகர் பேரவை
  பெரம்பூர் கிளை

 10. Anonymous says:

  //////// கொஞ்சூண்டு பாலிடாயில குடிச்சிட்டு, வெக்கபோர்ல போய் படுத்து பத்த வெச்சுக்க மச்சி . .! :)/////////

  paalitaail ennaku pidikkaathu machi .,venumna un baygon spray kudichitu padukkurane :))))))

 11. Anonymous says:

  @ வெளி :

  பட்டாபட்டி : பத்து விஜய் ,நாப்பது விஜயகாந்த் ,முப்பது சாம் ஆண்டர்சன் ,அம்பது மங்குனி க்கு சமம்


  இப்படிக்கு
  பட்டாபட்டி ரசிகர் பேரவை
  பெரம்பூர் கிளை

 12. பட்டாபி எங்களுக்கு ஹீரோ தான் இப்ப எப்ப எப்பவும் ?
  ////////////

  உங்க கிளைல என்ன பண்றீங்க...சாட் பூட் த்ரீன்னு சொல்லிக்கிட்டே எல்லாப் பயலும் அந்த பெரம்பூர் பாலத்துல இருந்து குதிச்சுருங்க.... சரியா ஒரு வருசம் கழிச்சு பட்டாபி வந்து மாலை மரியாதை பண்ணுவார்!

 13. @@@பனங்காட்டு நரி says:
  க்வாட்டர் ஓல்ட் மாங்க ராவா அடிச்சா மாதிரி இருக்கு மாப்ள.///

  எலேய் அயோக்ய பயபுள்ள...நாங்க இங்க ப்ளாக் நடத்தரமா இல்ல டாஸ்மாக் பார் நடத்தரமா...? ஒவ்வொரு தடவையும் வந்து சரக்க பத்தியே பேசிட்டுபோது இந்த ராஸ்கல்..!

  டேய் ரெட்டை ஓல்ட் மன்குக்கு காச வாங்கிட்டு விட்ரா இவன...! :)

 14. vinu says:

  appudikkaaaa orey shotla naaalu takeeelaaa ulley vittathu maathiri irruku maapulaiiii

 15. @@@vinu says:
  appudikkaaaa orey shotla naaalu takeeelaaa ulley vittathu maathiri irruku maapulaiiii///

  எலேய் குடிகார பயலுகளா..ஏண்டா இப்டி மானத்த வாங்குறீங்க...!:)

  வர்றவன் பூரா சரக்க பத்தியே பேசி கை வேற நடுக்க ஆரம்பிச்சிருச்சு...! யோவ் பட்டாப்பட்டி செராங்கூன் பார் இப்போ தொறந்துருக்குமாயா...? :)

 16. vinu says:

  @sibi----->>appppaaliccaaa puthu maapilai treat eathuvum kidaiiyyaathaaaa???

 17. vinu says:

  machi veliyooor & rettaivaal ... ennoda sainthavi peru confirm aagiduchchu...."divya"
  Aug18th engagement....

  he he he he sollanum pola thonuchchu

 18. @@@vinu says:
  machi veliyooor & rettaivaal ... ennoda sainthavi peru confirm aagiduchchu...."divya"
  Aug18th engagement....////

  Great news dude..Congrats..! :)
  Dont forget to give some surprise gift to her on the engagement day. :)
  //////
  he he he he sollanum pola thonuchchu../////

  Unaku thonuchu parthiyaa...
  Athaan machi veliyoorkaran..! :)

 19. vinu says:

  Thanks machiiiiiiii..... sure already planed for it!!!!!....

  thinking abt gold or something... real problem is... ammaavukkuth theriyaama kudukkanum.....

  he he he he athuthaan periya kustam...

  amounttum theththanum....

 20. Anonymous says:

  ///சரியா ஒரு வருசம் கழிச்சு பட்டாபி வந்து மாலை மரியாதை பண்ணுவார்!///

  @ ரெட்டை

  நாங்க எல் .ஐ .சி .மேல இருந்ததும் குதிப்போம் .,இது தல பட்டாபட்டி மேல ஆணை

 21. @@vinu says:
  athuthaan periya kustam...///

  எலேய் பேப்பலே...அது குஷ்டம் இல்லடா..கஷ்டம்...! இதையே ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட அடிக்கிறியே...நீ எங்க கிப்ட கரெக்டா குடுக்கப்போற...?
  (பார்த்து மச்சி..மச்சினிச்சிகிட்ட மாத்தி குடுத்து மாட்டிக்காத..என்ன மாதிரி... ! :)

 22. @@@பனங்காட்டு நரி said...
  நாங்க எல் .ஐ .சி .மேல இருந்ததும் குதிப்போம் .,இது தல பட்டாபட்டி மேல ஆணை.///

  பட்டாபட்டிய தலைவனா ஏத்துகிட்டதுக்கு, நீ எல்ஐசி பில்டிங்லேர்ந்தே குதிச்சிருக்கலாம்..! :)

 23. Anonymous says:

  தமிழகத்தில் கணிசமாக DMK இணையத்து வாக்கு வங்கிய குறைச்சது எங்க பட்டா பட்டி அவர்களையே சேரும் ..,அதுக்காக நாங்க பால்டாயில் கூட ராவா குடிப்போம் (இத நீ அவர் பயோ டெட்ட ல போட்டு இருக்கே மாம்ஸ் ..,)

  இப்படிக்கு
  பட்டாபட்டி ரசிகர் பேரவை
  பெரம்பூர் கிளை

 24. @@@பனங்காட்டு நரி says:
  நாங்க பால்டாயில் கூட ராவா குடிப்போம்..///

  பாலிடாயில ராவா குடிக்கறதுக்கு உனக்கு ஒரு காரணம் வேணும்..அதுக்கு நீ பட்டாபட்டிய காரணம் சொல்ற...! :)

  (மச்சான் அவ்ளோ நல்லாவா இருக்கும் ராவான பாலிடால்..! வக்காளி குடிச்சு பர்க்கனும்டேய் ஒரு தடவை...) :)

 25. Anonymous says:

  // மச்சான் அவ்ளோ நல்லாவா இருக்கும் ராவான பாலிடால்..! வக்காளி குடிச்சு பர்க்கனும்டேய் ஒரு தடவை...//

  ஆமாம் மச்சி .....,ராவா குடிச்சிட்டு கோழி தல இல்ல அத மொரு மொறுன்னு வறுத்து சைட் டிஷ் ஆ கடிச்சி பாரு ஜிவுன்னு ஏறும் ..,அதே போதைல .,திருவனந்தபுரம் மெயில் வரும் போது தண்டவாளத்துல படுத்துடு : ( ஹையையோ ஓவெரா பேசிட்டோமா )

 26. அலைகள் ஒய்வதில்லை-மீண்டும்மா ???

 27. Anonymous says:

  //// NAAI-NAKKS said...
  அலைகள் ஒய்வதில்லை-மீண்டும்மா ??? //////

  ஆமாங்க நாய் நக்ஸ் ..,இங்க பூணுல அறுக்கரதுக்கு முன்னால எல்லாத்தையும் அறுத்துடுவாங்க ,,,பார்த்து சூதானாம இருங்க .,:)))))

 28. அயோக்ய ராஸ்கல்ஸ்!!! என்னாங்கடா கதை படிக்கவிடாம இங்க சத்தம்? எல்லாரும் வெளிய போங்கடா... யாருடா அது ரெட்டை? என் ப்ளாக்ல கதை எழுதி இருக்கான். அவன் யாருடா வெளியூரு எல்லாருக்கும் பதில் சொல்றான்... :)

 29. வந்துட்டாரு டெரர் எல்லோரும் சொம்ப எடுத்து பின்னாடி மறைச்சு வைங்க ...

 30. hey very nice and short story. its really very good

 31. கதை எழுதறீங்களாக்கும்?..
  ஹி..ஹி..ரைட்...

  இதன் அடுத்தபகுதி...பட்டாபட்டி மைதானத்தில் வெளியாகுமா?
  வாசகர் ஆர்ர்ர்ர்ர்வம்..ஹி..ஹி

  யோவ்.. எனக்கு ஒரு சான்ஸ் கொடுய்யா வெண்ண... எழுதிக்ப்பாக்கேன்... ஹி.ஹி

 32. @@@பட்டாபட்டி.... says:
  யோவ்.. எனக்கு ஒரு சான்ஸ் கொடுய்யா வெண்ண... எழுதிக்ப்பாக்கேன்...///

  யோவ் பட்டாப்பட்டி இந்த தலைப்புல நீ ஒரு கதை எழுது...

  "பட்டாபட்டியும் முப்பத்தாறு மூதேவிகளும்",

  இந்த கதை மட்டும் வெளியாகட்டும்...அதுகப்ரம் அலிபாபாவும் நாப்பது திருடர்களும் கதைய உன் கதை காலி பண்ணுதுயா...! :)

 33. // vinu said...
  machi veliyooor & rettaivaal ... ennoda sainthavi peru confirm aagiduchchu...."divya"
  Aug18th engagement....

  he he he he sollanum pola thonuchchu//

  வாழ்த்துகள் அண்ணா :-) இத படிச்சா எல்லோருக்குமே சொல்லனும்னுதான் தோனும்!