- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 32 comments and to commentநீங்களே கேளுங்க சார் இந்த நியாயத்த...நம்ம கஷ்டப்பட்டோம்...படிச்சோம்...வேலைக்கு வந்தோம்...சம்பாரிச்சோம்..நம்ம அம்மா அப்பாவ சந்தோசமா வெச்சு பார்த்துக்கறோம்...ஆனா இந்த ஆள் யாருங்க இடைல...இவருக்கும் நமக்கும் என்னங்க சம்பந்தம்...இவர நம்ம எதுக்குங்க சந்தோசமா வெச்சு பார்த்துக்கணும்...விட கூடாதுங்க...கேள்வி கேக்க ஆளு இல்லைன்னு காலம் காலமா இந்த கொடும நடந்துகிட்ருக்கு...தடுக்க வந்துட்டான் இந்த வெளியூர்காரன்...


மேட்டருக்கு வர்றேன்...வந்தமா பொண்ண கட்டி குடுத்தமா,பீல் பண்ணமா,கண்ண துடைச்சிக்கிட்டு போனமான்னு இருக்கணும்...அதான ஒரு பெரிய மனுஷனுக்கு அழகு...அத விட்டுட்டு வந்து இருந்து தங்கி முணங்கிட்டு போலாம்னு நெனைக்கறது என்னங்க நியாயம்...


எனக்கு இன்னும் பொண்ணே பார்க்கல...ஆனா,பாருங்க அதுக்குள்ளயே எனக்கு என் மாமனார புடிக்கல...ஏன்னு கேளுங்க...எல்லாத்துக்கும் ராவா ஒரு காரணம் வெச்சுருபான் இந்த வெளியூர்க்காரன்..


சிங்கபூர்ல பொண்டாட்டி புள்ளைகளோட ஷாப்பிங் வர்ற ஆம்பள பசங்கள பார்த்துருக்கேன்...அவங்க கூடவே ரெண்டு பழைய பீசுங்க பப்பரக்கானு வேடிக்க பார்த்துகிட்டு பேக்கு மாதிரி வரும்..விசாரிச்சு பார்தீங்கன்னா அது அந்த புள்ளயோட அம்மா அப்பாவா இருக்கும்...கொட்டம்பட்டிலேர்ந்து புளியோதரைய கட்டிக்கிட்டு பொண்ண பார்த்துட்டு போவ வந்துருபாங்கே...அதும் அந்த பய காசுல...இத படிக்கும்போதே உங்களுக்கு எவ்ளோ காண்டாகுது..(ஆகுதுல்ல..ஆகலேன்னா ஆக்கிக்கங்க..என்னா நம்மல்லாம் ஆம்பளைங்க...)நம்ம அப்பனாத்தால மெட்ராஸ் மெரினா பீச்சையே சுத்தி காமிச்சிருக்க மாட்டோம்..இவங்க என்னடான்ன பிளைட் புடிச்சு சிங்கப்பூர் வந்து சுத்தி பார்கறாங்கே..அதுவும் இந்த பய செலவுல...இதுக்கு மூலகாரணம் என்னென்னு யோசிச்சு பார்தீங்கன்னா...அந்த புள்ள மைல்ட் வாய்ஸ்ல நைட் 12.26 க்கு காதுகிட்ட மூச்ச விட்டுகிட்டே ரொமான்டிக்கா கேட்ருக்கும்..என்னங்க என்னங்க...எங்க அப்பா அம்மாவை அழைச்சிகிட்டு வந்து கொஞ்ச நாள் வெச்சுக்கலாமன்னு..நம்ப ஆளும் எதோ பிஸில கான்சென்ட்ட்ரேசன் மிஸ் ஆக கூடாதேன்னு கேள்விய கவனிக்காம ஓகே ஓகேன்னு தலையாட்டிருபான்...


நீங்க பெரிய மனுஷன்...நல்லா நேர்மைய நடுநிலைமையா யோசிச்சு பாருங்க..அவங்கேலுக்கும் நமக்கும் என்னங்க சம்பந்தம்..அவர் பெத்த பொண்ணோட நாம வாழ போறோம்..அவ்ளோதானா...இதுக்கு என் நம்ம இந்த ஆளுக்கு காலம் புல்லா மரியாத கொடுத்துகிட்டு,பார்க்கும்போதெல்லாம் பம்மிகிட்டு...ச்சே...


எங்கப்பா அவர் மாமனார் கால் உடைஞ்சதுக்கு தெருவுல உள்ள எல்லாருக்கும் மெது வடையும் மசாலா பாலும் வாங்கி குடுத்து அந்தர் பண்ணாருன்னா  பார்த்துக்கங்க...எவ்ளோ காண்டுன்னு...நம்பல்ல நெறைய பேர் வெளில சொல்லிக்க முடியாம இருக்காங்கே...இனிமே யாரும் வருத்தபடாதீங்க...வெளியூர்க்காரன் வந்துட்டான்...மாமனாரை சட்னியாகி மெண்டலாய் மாற்றுவோர் சங்கம்னு ஆரம்பிக்கறோம்...உலக அளவுல மாமனரால பாதிக்கப்பட்ட தமிழர்கள ஒன்னு திரட்றோம்..அவங்கே இல்லாத ஒரு புது உலகத்த படைக்கறோம்...


இப்ப என்ன எடுத்துக்கங்க..நான்லாம் ரெண்டே ரெண்டு தடவதான் என் மாமனார பத்தி பேசுவேன்..அது கூட அந்த ஆள்ட்ட இல்ல..என் பொண்டாட்டிக்கிட்ட...மொதோ வாட்டி,கல்யாணம் முடிஞ்சு அடுத்த நாள் "ஏய் நான் கேளம்பறேன்னு ஒப்பண்ட சொல்லிடு..",,,ரெண்டாவது வாட்டி. ஒரு பத்து வருஷம் கழிச்சு....."நல்ல மனுசண்டி.பாவம்..போய் சேர்ந்துட்டாரு" ...அவ்ளோதான்...இதுக்கு மேல அவர பத்தி பேச என்னங்க இருக்கு...


நான் பரவால்லைங்க...என் பொண்டாட்டி ரெண்டு நாள் சோறு போடாம செருப்பால அடிச்சான்னா கண்ணா பின்னானு கோவம் வந்து என் மாமனாருக்கு கால் அமுக்க ஆரம்பிச்சுடுவேன்...ஆனா என் மாப்ள ரியாத் ரிவால்வர் ப்ரியமுடன் வசந்த் அப்டி இல்ல..மானஸ்தன்..போன வாரம் போதைல எனக்கு போன் போட்டு சொன்னான்..அவன் மாமனார் யார இருந்தாலும்...ஒரு நாள் தண்ணி வாங்கி குடுத்து முட்டி போட வெச்சு தலைல ஏறி உக்கார்ந்து நங்கு நங்குன்னு ரெத்தம் வர்ற வரைக்கும் குட்டி சொட்ட மண்டைய உடைக்காம விட மாட்டேன் மச்சின்னு...இது கண்டிப்பா நடக்கும்னு அங்காளம்மன் மேல சத்தியம் வேற பண்ணிருகான்..என் மாப்ள சிங்கம்...சொன்னா செய்வான்..ஆமாம் மச்சி..உனக்கு எதோ பொண்ணு பார்க்கறதா சொன்னியே என்னாச்சுடா.....


மாமனார கூட பரவால்ல சார்..அழகான மச்சினிச்சிக்காக  மன்னிச்சு விட்ரலாம்..ஆனா இந்த மச்சானுவோ பண்ற தொந்தரவு இருக்கு பாருங்க...ச்சே ச்சே ச்சே ...வேலை தேடறேன்னு பேர்வழினு நம்ம வீட்ல வந்து தங்கி டேரா போட்டு ஊற சுத்தரதுலேர்ந்து இவனுக டோட்டல் டார்ச்சர்...2098ல விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தோன்ன இந்த மச்சானுவள நம்ம நாட்ட விட்டு ஒழிக்க சொல்லணும்...அவர் மச்சான்கிட்ட சொல்லி... 


ஒரு நிமிஷம்...எதோ புகையற வாசன வருது...ஒ...எனதருமை தாய்க்குல மேடம்ங்களா...


தாய்க்குலங்களே இருங்க இருங்க அவசரபடாதீங்க...இந்தோ வந்துட்டான் பெண்களின் காவலன் வெளியூர்க்காரன்...
உங்களுக்காக ராத்திரி பகல் பார்க்காம உழைச்சு ஓடா தேஞ்சி ரெத்தத்த சோறாக்கி,வளையல் வாங்கி குடுத்து,சுடிதார் வாங்கி குடுத்து,நம்ம புள்ளயாசும் நம்மள மாதிரி இல்லாம அழகா இருக்கட்டுமேன்னு லிப்ஸ்டிக் எல்லாம் வாங்கி குடுத்த உங்க அப்பாவ..இவங்க மதிக்க மாட்டாங்கெலாம்.சோறு போடா மாட்டாங்கெலாம்...இது கூட பரவால்ல..தலைலே ஏறி சொட்ட மண்டைல நங்கு நங்குன்னு கொட்டுவாங்கேலாம்..அதுவும் ரெத்தம் வர்ற வரைக்கும்...இத கேட்டு எனக்கே கண்ணெல்லாம் கலங்குது...உங்களுக்கு எவ்ளோ கோவம் வரும்...விடாதீங்க...தாய்க்குலம் எல்லாரும் சேர்ந்து மாமனார் வீட்டை மசுரா மதிப்போர் சங்கம்னு ஒன்னு ஆரம்பிங்க...உங்க மாமனார் தூங்கும்போது மூக்குக்குள்ள மூஞ்சுருவ புடிச்சு விடுங்க..மாமியார் கண்னசரும்போது காத கரண்டி வெச்சுடுங்க..மச்சினன் மாமான்னு அவங்க சைடு சொந்தகாரங்க வந்த சொத்துல உப்பை அள்ளி கொட்டுங்க...அவங்க உஸ் பண்ற டூத் பேஸ்ட்ல இச் கார்ட பில் பண்ணி வைங்க..சீப்புல பேன் புடிச்சு விடுங்க.. மண்டயனுக சொரிஞ்சே சாவட்டும்..ஒரு பயல அண்ட விடாதீங்க...அது எப்டிங்க உங்க அப்பாவ அவங்க இப்டி பேசலாம்..உங்க அப்பா யாரு..தெய்வத்துக்கு சமமான உங்கப்பவ அசிங்கபடுதுவங்கே குடும்பத்த எப்டிங்க உங்களால வீட்டுக்குள்ள விட முடியும்...உங்களுக்கும் சூடு சொரன எல்லாம் இருக்குன்னு நீங்க காட்ட வேணாமா...அத்து விடுங்க எல்லா பயலுகளையும்..
அப்பாடா வந்த வேலை முடிஞ்சிடுச்சு...
ங்கொய்யா...நான் மட்டும் தலவானிய கட்டிபுடிசிகிட்டு தனியா தூங்கறேன்..நீங்கல்லாம் மட்டும் எப்டி புருஷன் பொண்டாட்டிய சந்தோசமா இருக்கலாம்..ஒரு பய சந்தோசமா வாழக்கூடாது....ஒன்னு எல்லாம் சேர்ந்து நல்ல தேவர் வீட்டு பொண்ணா பார்த்து எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க...இல்ல புருஷன் பொண்டாட்டி  எல்லாம் தனி தனியா படுத்து தூங்குங்க...அது வரைக்கும் இந்த சமுதாய சீர்திருத்த பணிய வெறித்தனமா தொடருவான் இந்த வெளியூர்க்காரன்...


சில வருடங்களுக்கு பின் வெளியூர்க்காரன்...
புஜ்ஜுமா உங்க அப்பா வாய் கொப்புளிக்க ஆலிவ் ஆயில் கேட்டதா சொன்னீல்ல..பிரான்ஸ் லேர்ந்து இம்போர்ட் பண்ணி வாங்கி வெச்சுருக்கேன்..நாளைக்கு மாமாகிட்ட குடுத்துரு....பாவம் அது இல்லாம ரொம்ப கஷ்டபடுவாறு..அவர் மனசு கஷ்டபட்டா என்னால தாங்கிக்க முடியாது...(ஆமாம் சார்...எனக்கும் கல்யாணம் ஆய்டுச்சு..)


வெளியூர்க்காரன்.

32 Responses so far.

 1. //நல்ல தேவர் வீட்டு பொண்ணா பார்த்து எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க...//

  சசிகலா சொந்தத்துல பாக்கவா!

  சிவாஜி வகையறாவுல பாக்கவா !

 2. அவங்க கள்ளர் ஒய்.!..நான் பொண்ணு கேட்டது தேவர்ல...!

 3. ம்ம்...அந்த பயம் இருக்கட்டும். பதிவின் கடைசி 5 வரிகளை படிச்சோன்னதான் எங்க வீரம் தான் உங்களுக்கும்னு புரிஞ்சுது.

 4. pondakita enna oi veeram vendi kedakku....!

 5. Thambi enna kilainu sollidunga thirunelveli/rajapalayathula namma sonthathula paathuruvoom....

 6. அச்சம் என்பது மடமையடா said///
  Thambi enna kilainu sollidunga thirunelveli/rajapalayathula namma sonthathula paathuruvoom....///

  Oruvelai kalaaikaraangelo....???...

 7. //நிஜமா நல்லவன் said...

  :)
  //

  சோழமண்டலத்துலேர்ந்து ஒருத்தங்க பதிவுலகுக்கு துள்ளி குதிச்சு வராங்கன்னா ஸ்மைலி மட்டும் போட்டு
  வரவேற்பு கொடுத்தா என்னய்யா??? ஒ நீங்க டிருவாரூர் டிஸ்டிரிக்கா?

 8. //இந்த சமுதாய சீர்திருத்த பணிய வெறித்தனமா தொடருவான்//

  அதே ! அது மட்டும் மனசுல எப்பவும் கொயிந்து வுட்டு எரியற மாதிரி பார்த்துக்கோங்க :)

 9. ஜெகதீசன் said...///
  :)///
  நிஜமா நல்லவன் said...///
  :)///
  நாங்களும் போடுவோமுள்ள...எங்கிட்டயும் இருக்கு...
  :)//:)//:)//:)///:)///:)///:)///:)///:)///:)///.

  வருகைக்கு நன்றி மொதலாளி...

 10. ஆயில்யன் சார்..சோழ மண்டலமனா சும்மாவா...தமிழ்நாட்டுக்கு அரசியல் கத்து குடுத்தவங்கே நாங்கதான்..சங்க தமிழ் எழுதுனதும் நாங்கதேன்...(திருவாரூர் டிஸ்ட்ரிக்ட் தான் வாத்யாரே நான்...நீங்க...?)

 11. அதே ! அது மட்டும் மனசுல எப்பவும் கொயிந்து வுட்டு எரியற மாதிரி பார்த்துக்கோங்க..///

  கொழுந்து விட்டு எரியறது மனசுல இல்ல..கொஞ்சம் கீழ...(வைத்தெரிச்சல் பங்காளி அது..)

 12. /ஆயில்யன் சார்..சோழ மண்டலமனா சும்மாவா...தமிழ்நாட்டுக்கு அரசியல் கத்து குடுத்தவங்கே நாங்கதான்..சங்க தமிழ் எழுதுனதும் நாங்கதேன்...(திருவாரூர் டிஸ்ட்ரிக்ட் தான் வாத்யாரே நான்...நீங்க...?)/


  திருவாரூர்ல எங்க?

 13. neengalum vijayapuramthaannu sollidaatheenga please.....

 14. vijayapuram theriyum....Aanaa neenga yaarunnu theriyathu....anga civil engineer ravi theriyuma?

 15. அடப்பாவி என்னைய ரொம்பவே டேமேஜ் பண்ணிட்டியே மாப்ள ரியாத் இல்ல கத்தாரு இன்னும் மேர்ரேஜ் ஆவலடியோவ்...

 16. Rajkumar says:

  Boss...are you really bachelor? After reading "I love you-by Sainthavi" and மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம். I am getting doubt.

  Each and every words reflects experience of married persons.

  The previous post was soo romantic.

  Hope you will get a letter similar to your imagination in future from your spouse.

  My sincere request...kindly increase the font size. I think I am straining little bit to read.

 17. Rajkumar says:

  I forgot to say....

  Usually writers will finish story with punch. But your article started with a punch...

  I am talking about Mr. Poornam Vishvanathan's photo.....that is the punch for மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் article.

  I like your creativity.

 18. Rajkumar says:

  ஆனா இதுவரைக்கும் யாரையும் நான் லவ் பண்ணதில்லன்னு நீ சொல்றததான் என்னால நம்பவே முடிலடா...நீ பேசுற பேச்சுக்கு கண்டிப்பா மாட்டிருபாளுகளே....

  Hmmmmmm....these days girls will laugh and enjoy your character. But for marriage they want some one serious about life, who can achieve her dream. In college days you are the idle person to be as friend.

 19. நிஜமா நல்லவன் said...///
  இல்ல சார்.நான் வெளில வந்து ஆறு வருஷம் ஆய்டுச்சு...அதனால அவ்ளவா காண்டக்ட் இல்ல...கலைஞர் ஸ்டாலின் இவங்கள தவிர நம்ம ஊரு ஆளுக யாருகிட்டையும் பேசறதில்ல..////
  பிரியமுடன்...வசந்த் said...///
  விடு மச்சி...அப்போ இனிமே "கத்தார் கன் ப்ரியமுடன் வசந்த்" என்று உலக தமிழர்களால் அன்போடு அழைக்கபடுவாய்...(மறுபடியும் சொல்றேன் மச்சி..உன் மாமனார் யாரா இருந்தாலும் சொட்ட மண்டைய உடைக்காம விடாத..உனக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகணும் ராஜா..அதான் என் ஆசை..... )

 20. Rajkumar said...///
  ராஜ்குமார்...நான் கமெண்ட்ஸ் பகுதில எப்போவுமே எதிர்பார்க்கற ஒரு பெயர்..வருகைக்கு நன்றி...மீண்டும் வருகன்னு சொல்லி விட்ற மாட்டேன்..நீங்க ரொம்ப ஸ்பெஷல் சார் எனக்கு...படிச்சதுல எந்த வரி புடிச்சதுன்னு தனிய எடுத்து காமிச்சு இது நல்லாருந்துச்சு வாத்யாரேனு சொல்ல நல்ல மனசு வேணும்..நெறைய டைம்மும்...புத்தகங்கள்ல வரிகள அடிக்கொடிட்டு வாசிக்கற வாசகன், எழுத்தாளன கௌரவிக்கறான்...ஒரு நல்ல எழுத்தாளனோட பெருமை ஒரு நல்ல வாசகனுக்குதான் தெரியும்...நான் நல்ல எழுத்தாலனான்னு எனக்கு இப்போ தெரில...ஆனா,நீங்க தரமான வாசகன்..உங்கள ரசிக்க வெச்சது எனக்கு மிக பெரிய வெற்றி...அடிக்கடி வாங்க...

 21. Satish says:

  i use to read your blog, infact added in favourites, but this is the first time iam adding a comment, u'r blog is so humours, i love to write like this, but inthalavu ezutha mudiyathu. gr8

 22. Satish said...///
  Thanks vathyaare...thodarnthu padinga...sernthu siripom...

 23. //நான் பரவால்லைங்க...என் பொண்டாட்டி ரெண்டு நாள் சோறு போடாம செருப்பால அடிச்சான்னா கண்ணா பின்னானு கோவம் வந்து என் மாமனாருக்கு கால் அமுக்க ஆரம்பிச்சுடுவேன்...//

  பரவாஇல்லைங்கற வார்த்தைக்கு..அர்த்தம் ரொம்ப சூப்பர்-ஆ இருக்கு...

  // இனிமே யாரும் வருத்தபடாதீங்க...வெளியூர்க்காரன் வந்துட்டான்...மாமனாரை சட்னியாகி மெண்டலாய் மாற்றுவோர் சங்கம்னு ஆரம்பிக்கறோம்...//
  //தாய்க்குலம் எல்லாரும் சேர்ந்து மாமனார் வீட்டை மசுரா மதிப்போர் சங்கம்னு ஒன்னு ஆரம்பிங்க...உங்க மாமனார் தூங்கும்போது மூக்குக்குள்ள மூஞ்சுருவ புடிச்சு விடுங்க..//
  //புஜ்ஜுமா உங்க அப்பா வாய் கொப்புளிக்க ஆலிவ் ஆயில் கேட்டதா சொன்னீல்ல //

  கடைசி பத்திய படிக்கற வரைக்கும் நீரு எங்கேயோ போயடீருன்னு நெனச்சேன்..
  பாத்தா பொண்டாட்டிக்கும் மாமனாருக்கும் நடுல உட்காந்து குரூப் போட்டோ எடுத்துகிட்டு இருக்கீரு...
  அதும் சிரிச்சுகிட்டு.. இந்த சந்தோசம் தொடர வாழ்துக்கள்..
  பதிவு சூப்பர்-ஓ-சூப்பர்....

 24. director says:

  Hello brother, romba comedy.ya, super.a ezhutharinga, unmaiyilaye unga writting style nalla irukku. keep it up.
  saravanan,
  singapore.

 25. //ஒன்னு எல்லாம் சேர்ந்து நல்ல தேவர் வீட்டு பொண்ணா பார்த்து எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க...இல்ல புருஷன் பொண்டாட்டி எல்லாம் தனி தனியா படுத்து தூங்குங்க...அது வரைக்கும் இந்த சமுதாய சீர்திருத்த பணிய வெறித்தனமா தொடருவான்.... //

  ஹா ஹா, இந்தப் பிரச்சனைக்கு தீர்வே இல்லயா,புஜ்ஜுமா! எங்கம்மா இருக்கே நீ?

 26. நன்றி தலைவா...
  இது தான் நான் பதிவுலகில் படித்த சிரித்த முதல் இடுகை...

  என்னை பதிவுலத்திர்க்கு வரவழைத்ததும் இந்த இடுகை தான் ..

 27. @@@வெறும்பய
  நன்றி தலைவா...
  இது தான் நான் பதிவுலகில் படித்த சிரித்த முதல் இடுகை...
  என்னை பதிவுலத்திர்க்கு வரவழைத்ததும் இந்த இடுகை தான் ..///

  அய்யோ போங்க...எனக்கு கூச்சத்துல "ஷை" "ஷை"யா வருது..! :)

  (வெறும்பய ப்ளாக் பேரு நல்லாருக்குங்க...)

 28. வெளியூர்கரரே,
  பதிவு அபாரம். ஆனா "வூட் பீ " சொன்னங்க என்று.. அட போங்க

 29. வெளியூர்காரரே!!! நாயகன் ஸ்டைல்ல ஒரு கேள்வி.. நீங்க நல்லவரா கெட்டவரா ? எப்டிப்பூ இப்படிலாம் எழுத தோணுது உங்களுக்கு?