- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 10 comments and to comment


ச்சில் பியர் மாதிரி சென்னை...நறுக்குன்னு நாலு பிரண்ட்ஸ்...பறக்கறதுக்கு பல்சர்...சினிமா,பீச், ECR ,மாயஜால்னு வெளியூர்காரன் லைப்ல திடீர்னு உள்ள வந்து யு டேர்ன் அடிச்சு திரும்பி போன சாக்லேட் தருணங்கள்...நெனைக்கரப்பவே மனசுக்குள்ள ஜில்லுன்னு ஏசீ போட்ட மாதிரி குளிர வெக்கற அந்த ஐஸ் கிரீம் வினாடிகள்...அந்த ஐஸ் க்ரீமோட செர்ரிஸ்..வெளியூர்காரனோட கேர்ள் பிரண்ட்ஸ்..

ஆமாம்க...எல்லா பசங்களுக்கும் படியளக்கற சென்னை...எனக்கும் அளந்துச்சு...சில ஹைக்கூ கவிதைகள...மௌனராகம் கார்த்திக்கோட சந்திரமௌலி ஸ்டைல்ல கொஞ்சம்,மோகனோட ஓவர் ஆக்டிங்ல கொஞ்சம்னு ஒரு மாதிரியா கலந்து கட்டி பெர்பார்ம் பண்ணி தலைகீழ நின்னு தண்ணிகுடிச்சு குட்டிகரணம் அடிச்சு உஷார் பண்ண ஆண்டவனோட லிமிடெட் எடிசன் அவளுக...

எல்லாத்துக்கும் சிரிச்சிகிட்டே இருப்பா ஒருத்தி...எது சொன்னாலும் சிரிப்பா,ஏண்டி லூசு மாதிரி சிரிக்கிறேன்னு சொன்னா அதுக்கும் சிரிப்பா...அழகா இருக்கேன்னு சொன்னா சிரிப்பா..மழை பெஞ்சா சிரிப்பா..பைக்ல வேகமா போனா பயத்துல சிரிப்பா..அட காபி சூடா இருந்தா சிரிபான்னா பார்துகங்களேன்...மொத்ததுல சிரிப்பா..அவளுக்கு ரொம்ப புடிச்சது சிரிக்கறது..எனக்கு புடிச்சது அவ சிரிக்கறது...அவ சிரிக்கறது நெனச்சு என்ன போர்வைக்குள்ள தனியா சிரிக்க வெச்ச சிரிப்பு பட்டாம்பூச்சி அவ...அதுவும் பூ போட்ட ப்ளூ கலர் சுடிதார்ல அவ சிரிக்கற அழக பார்த்து சிரிச்சிகிட்டே செத்தர்லாம்..பயபுள்ள அவ்ளோ அழகு...

இன்னொருத்தி கண்ணாலேயே கம்பராமாயணம் பேசற பழைய பட்டுபாவடை...புத்திசாளிதனதுனால என்ன ஆச்சர்யப்பட வெச்ச க்யுட்டான பெய்ண்டிங் ..1923 போறந்துருக்க வேண்டியவ...நெறைய பேசுவா..நெறைய அட்வைஸ் பண்ணுவா..அவள பேசவிட்டு கேட்டுகிட்டே இருக்கலாம்..என்ன ஒன்னு..கேட்டுகிட்டு மட்டும்தான் இருக்கலாம்..அவளுக்கு அடுத்தவங்க பேசுன புடிக்காது..அவ்ளோ அகம் புடிச்ச அழகான கழுதை...மூக்குக்கு மேல மட்டும் இல்ல,மூக்குக்கு சைட்ல,மூக்குக்கு பக்கவாட்லனு எல்லா சைட்லயும் கோவம் பொத்துக்கிட்டு வரும்,நான் ரசிச்சு பழகுன திமிர் புடிச்ச ராட்சஷி...அந்த ராட்சசிகிட்ட புடிச்சதே அந்த திமிர்தான்..திடீர்னு ஒரு நாள்,என் ஸ்டேஷன் வந்துடுச்சு நான் ஏறங்கிக்கறேனு சொல்லி விடுவிடுன்னு விட்டுட்டு போய்ட்டா..ஏன் என்ன திடீர்னு புடிக்காம போச்சுன்னு எனக்கு இன்னிக்கு வரைக்கும் தெரியல..

இன்னும் சில பொண்ணுங்க வந்து போனாங்க...சிலர் வந்த வேகத்துல போனாங்க...பார்த்த ரெண்டாவது நாளே ஏன் இன்னும் சாப்டாம இருக்கேன்னு உரிமையா இருக்றதா நெனச்சு நடிச்ச பொண்ணுங்களயெல்லாம் ஏன் புடிக்காம போனுச்சுன்னே தெரில...சட்டுன்னு புடிக்காம போய்டுச்சு...அவளுக பேர் கூட நினைவுல இல்ல..முகமும்தான்....

புடிக்குதோ புடிக்கலையோ...பொண்ணுங்க வேணும்ங்க...வாழ்க்கைய அழகாக்கறது அவங்கதான்..தலைய கோதி விட, சிகரட்ட புடிங்கி எரிய, என்ன வெச்சுகிட்டு இன்னொருத்திய சைட் அடிக்காதடா பொறுக்கின்னு இடுப்புல கிள்ள,எத்தன மணிக்குடா என்ன பார்க்க வருவேன்னு ஏக்கமா கேக்க,பீச்ல வெச்சு காதோரமா மூச்சு விட்டுகிட்டே இன்டர்நேஷனல் பொலிடிக்ஸ் பேசி மனுசன மானாவாரியா குழப்ப,பைக்ல போகும்போது பயத்துல புடிக்கற மாதிரி கட்டிபுடிசிக்க ,செல்லமா குட் நைட் செல்லம்னு மெசேஜ் அனுப்ப,குழந்தத்தனதொட க்யூட்டா ஒரு கேர்ள் பிரென்ட் கண்டிப்பா வேணும்ங்க..

எனக்கு இந்த பொண்ணுங்க மேல இருந்தது காதலா இல்ல நட்பான்னு சொல்ல தெரில...ஆனா,அவங்களுக்கு கல்யாணம்னு கேள்விப்படும்போது ஏன்னே தெரியாம அவங்கள கட்டிகப்போர பசங்க மேல கொஞ்சமா பொறாம வருது...வரக்கூடாதுதான் ஆனாலும் வருது...குடுத்து வேச்சவண்டான்னு மனசு மைல்டா பொலம்புது...

காலம் என்ன அவங்ககிடேர்ந்து பிரிக்கல...பிச்சு போட்டுடுச்சு...ரொம்ப தூரம் போய்டாங்க...இனி பார்ப்பனானு கூட தெரில...எப்பவாவது சென்னை போகும்போது எங்கயாவது பார்துடமாட்டமான்னு மனசு ஏங்கி கண்ணு கண்டிப்பா தேடும்...அடையார் சிக்னல்ல,சத்யம் தியேட்டர்ல,ஸ்பென்செர் பிளாசா சிக்னல்ல,இல்ல ஹாட் சிப்ஸ்ல...இப்டி எங்கயாவது....
கண்டிப்பா பார்க்கணும்...நான் பார்க்கறதா அவங்க பார்க்காம..

அட சொந்த கதைல சொல்ல வந்த மேட்டர சொல்ல விட்டுட்டேன் பாருங்க...லைப்ல நடந்த ஒரு சந்தோசத்த இன்னொரு சந்தோசம் மறக்கடிக்கணும்... அதான் வாழ்க்கை....

அதானால,கல்யாண மூடுக்கு வந்துட்டான் வெளியூர்க்காரன்...

டேய் சொந்தகாரனுகளா...சட்டுபுட்டுன்னு பொண்ண பாருங்கடா டேய்....

வெளியூர்காரன்..
  

10 Responses so far.

 1. சூப்பர் மாமு...

  ரொம்ப ரசிச்சுருக்க போல...

 2. BONIFACE says:

  ம்ம்ம் ரொம்ப feel பன்னிருகிங்க பாஸ்,,,

 3. 23 வது மாடிலேர்ந்து, பிரெஷா குளிச்சு முடிச்சு போட்டு வேசுருகர பொண்ணு கணக்கா,மழைல நெனஞ்ச சிங்கப்பூர பார்க்கும்போது பீலிங்க்ஸ் கொட்டுது மாமோய்....வாழ்க்கை அழகுடீய்...!.

 4. Anonymous says:

  unga sondha kaarangala kenji ketukuren...seekiram ponnu paarungo...ivan tholla thaangala :) nice post man

 5. இருடி..!உங்கப்பன் கிட்ட சொல்றேன்..சுடு தண்ணியைப் பிடிச்சு மூஞ்சில ஊத்தறேம்பார்!

 6. கலக்கல் வெளியூர்க்காரன்.

 7. ரொம்ப தேங்க்ஸ்பா..ஆனா,"தஞ்சாவூரின் தபு சங்கர் வெளியூர்க்காரன்.","ப்ளாக் உலகத்தின் கெளதம் மேனன் வெளியூர்க்காரன்..",..இப்டியெல்லாம் என்ன யாரும் புகழாதீங்க...ப்ளீஸ்..என்னா,எனக்கு கூச்சம் கூச்சமா வரும்....."இதுக்கு மேல எறங்கி எப்டியா கெஞ்சறது...வெளியூர்காரனுக்கு எதாச்சும் அடைமொழி குடுங்கப்பா..".

 8. saju says:

  //புடிக்குதோ புடிக்கலையோ...பொண்ணுங்க வேணும்ங்க...வாழ்க்கைய அழகாக்கறது அவங்கதான்..தலைய கோதி விட, சிகரட்ட புடிங்கி எரிய, என்ன வெச்சுகிட்டு இன்னொருத்திய சைட் அடிக்காதடா பொறுக்கின்னு இடுப்புல கிள்ள,எத்தன மணிக்குடா என்ன பார்க்க வருவேன்னு ஏக்கமா கேக்க,பீச்ல வெச்சு காதோரமா மூச்சு விட்டுகிட்டே இன்டர்நேஷனல் பொலிடிக்ஸ் பேசி மனுசன மானாவாரியா குழப்ப,பைக்ல போகும்போது பயத்துல புடிக்கற மாதிரி கட்டிபுடிசிக்க ,செல்லமா குட் நைட் செல்லம்னு மெசேஜ் அனுப்ப,குழந்தத்தனதொட க்யூட்டா ஒரு கேர்ள் பிரென்ட் கண்டிப்பா வேணும்ங்க..//

  wat a line bass ... mudiyela

 9. வெளியூர்க்காரா

  சொந்தக்காரணுங்க ஆறே மாசத்துல பொண்ணு பாத்துட்டாங்க போல - வாழ்த்துகள்

  நட்புடன் சீனா

 10. ரொம்ப ரசனை யோட எழுதிருக்கீங்க வெளியூர்க்காரரே !! நானும் ரசிச்சு படிச்சேன்..நான் இந்த ஏரியாவுக்கு புதுசு..உங்களோட ரசிகர் மன்றத்துல நம்மளையும் சேத்துக்கோங்க பாஸ்..