- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 38 comments and to comment
காலைல மணக்க மணக்க மல்லிப்பூ  இட்லி புதினா சட்னி..ஸ்டாலின் அண்ணன் வீட்லேர்ந்து...மதியத்துக்கு நண்டு கொழம்பும் கத்திரிக்காய் தொக்கும் அழகிரி அண்ணன் வீட்லேர்ந்து...ராத்திரிக்கு கெட்டி தயிர் சாதமும் மாவடும் தயாநிதி அண்ணன் வீட்லேர்ந்து...இப்டி டிசைன் டிசைனா விதவிதமா அறுசுவை உணவுகள் உங்க வீட்டுக்கு வந்து இறங்கும்...ராஜ மரியாதையோட...அதுவும் டெய்லி...பாசத்தோட வரும்...இருங்க மேடம் இதுக்கே வாய போளக்காதீங்க...இன்னும் நெறைய இருக்கு எங்க ஆபர் லெட்டர்ல...அதுக்கு முன்னாடி நான் யாருன்னு சொல்லிக்கறேன்...வணக்கம்..நான் உங்க எதிர்க்கட்சிக்காரன்..ஆனா நீங்களும் என் தலைவரும் மெரினா பீச்ல உக்கார்ந்து குழந்தைகளாட்டம் கிச்சு கிச்சு தாம்பாளம் விளையாடிக்கிட்டே சந்தோசமா சிரிச்சு பேசிக்கனும்னு ஆசைபடற ஒரு எதிர்கட்சிக்காரன்..அந்த நிகழ்வ ஜெயா டிவியும் கலைஞர் டிவியும் ஒரே கேமரால வீடியோ எடுத்து பாதி பாதிய டெலிகாஸ்ட் பண்றத அறிவாலயத்துல உக்காந்து பார்க்கனும்னு ஆசைபடற ஒரு நல்ல மனசுக்காரன்...அதோட முதல் படிதான் உங்களுக்கு இந்த ஆபர் லெட்டர்.... உங்களோட அரசியல் மறுமலர்ச்சிக்கு ஒரு மிகபெரிய வாய்ப்பாவும் திருப்பமாவும் இந்த லெட்டர் அமையப்போகுதுங்கரத வரலாறு சொல்லும்...அதிமுகவுக்கு தமிழ்நாட்லயும் ,பிஜேபிக்கு இந்திய அரசியல்லயும் அரசியல் எதிர்காலம் இல்லைங்கறது தெள்ளதெளிவா என் பக்கத்துக்கு வீட்டு பாப்புக்கு கூட  தெரிஞ்சு போச்சு மேடம்... இதுக்கப்புறமும் நீங்க ஓ. பண்ணீர்செல்வத்த பொதுபணிதுறை அமைச்சராகிட்லாம்னு பகல் கனவு கண்டீங்கன்னா அது வடிகட்ன சசிகலாதனம்..அதனால சாட்சிக்காரன் கால புடிக்கறத விட சண்டைக்காரன் கால புடிக்கறத உத்தமம்னு உங்களுக்கு நான் சொல்ல வேண்டியது இல்ல..நீங்க படிச்சவங்க..மொள்ளமாரி எவனா இருந்தாலும் சரின்னு பாரபட்சம் இல்லாம அந்த உத்தமர் சங்கராச்சார்யாரையே புடிச்சு உள்ள தூக்கி போட்டு மிதிச்ச சூரப்புலி நீங்க...நல்லது கேட்டது உங்களுக்கு தெரியாதது இல்ல...ஒரு திருவாருர்காறன சரிகட்ட இன்னொரு திருவாருர்காரனலதான் மேடம் முடியும்...மன்னார்குடிகாரங்கள லெப்ட்ல விடுங்க...அவங்க கத்துக்குட்டி அரசியல தப்புதப்பா சொல்லி குடுகறாங்கே உங்களுக்கு..அவங்க பேச்சை இனிமேயும் கேட்டீங்கன்னா மசால் வடை கூட சுட்டு வியாபாரம் பண்ண முடியாது தமிழ்நாட்ல...அதனால இன்னும் கொஞ்ச நாள் இந்த வெளியூர்க்காரன் சொல்ற பேச்சை கேளுங்க.... மொதல்ல இந்த வைகோவ கயட்டி விடுங்க.தனிப்பட்ட முறைல நான் நிறைய மரியாதை வெச்சுருக்கற அரசியல்வாதி அவரு...நல்ல பேச்சு தெறமை நல்ல மனிதர்...ஆனா ஒரு கட்சிக்கு தலைவங்கர முறைல அந்த மனுஷனுக்கு நாக்குல சனி...எழவு எத செஞ்சாலும் தரித்திரமா முடியும்..அவரு யாரோட கூட்டணி வெச்சாலும் அவங்க கொடநாட்டுக்கு போக வேண்டியதுதான்...நாங்க அவர எங்க கட்சிய விட்டு அனுப்பறதுக்கு எவ்ளோ தலைகீழ நின்னு தண்ணி குடிச்சோம்கறது எங்களுக்குத்தான் தெரியும்...சொந்த தொகுதிலையே தோத்து போன வெக்கம் கெட்ட மனுசன இன்னும் ஏன் கூட்டணில  வெச்சுருகீங்க..அத்து விடுங்க அவங்கே உறவை...இன்னிக்கே அன்னோன்ச்ஸ் பண்ணுங்க..சகோதரி கிகோதரின்னு எவனாச்சும் போயேஸ் கார்டன் பக்கம் வந்தா பிஞ்ச செருப்பாலேயே அடிப்பேன்னு அறிக்கைல சொல்லுங்க..நாஞ்சில் சம்பத்த மட்டும் கொஞ்சம் ஐஸ் வெச்சுக்கங்க...மதிமுக அவனுகளும் வளர மாட்டானுக..அடுத்தவனையும் வாழவிட மாட்டானுக..அடுத்தது இந்த ராமதாசு..வைகோவாச்சும் மனுஷ கூட்டம்...இந்த ஆள் என்ன டைப்புன்னு இவருக்கே தெரியாது...ரெண்டு மினிஸ்டர் போஸ்ட்டும் ரெண்டு டாட்டா சுமோ காரும் குடுத்தா போதும்...இவரு டி.ராஜேந்தரோட லட்சிய திமுகல கூட போய் சந்தோசமா சேருவாறு..இந்த ஆளுக்குன்னு தனியா கொள்கை கோட்பாடு எதுவும் கெடயாது...இவரும் இவரு புள்ளையும் அரசியல் வியாபாரிங்க...தேசிய கட்சியா இருந்து போன எலெக்சன்ல மாநில கட்சியா ப்ரோமோசன் வாங்குன சூரப்புலிங்க..இவங்கேல ஏன் தலைவர் டீல் பண்ற மாதிரி டீல் பண்ணுங்க...அறுத்தும் விடாதீங்க தொடர்பும் வெச்சுகாதீங்க..அரசியல் வார்த்தைல சொல்லனும்னா இப்ப விட்ட மாதிரியே நட்டாத்துல மெய்ண்டைன்  பண்ணுங்க இவங்கேல...இப்போ உங்க கட்சியா நீங்க விட்டீங்கள்ள அந்த மாதிரி.கொழம்பி போய் அரசியல் அனாதை ஆய்டுவாங்கே..கம்யுனிஸ்ட் கட்சிகள பத்தி பத்தி நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்ல..அவுட் ஆப் சிலபஸ் ஆன ஒரு சித்தாந்தத்த வெச்சுகிட்டு இன்னும் மக்களுக்கு நல்லது செஞ்சிரலாம்னு திராவிட கட்சிகள எதிர்த்து போராடிகிட்ருக்க பழைய காலத்து நல்லவங்க..பாட்டாளி வர்க்கம்..போராட பொறந்தவங்க....இந்தா மினிஸ்டர் போஸ்ட்...இத வெச்சுக்கிட்டு மக்களுக்கு எதாச்சும் நல்லது பண்ணுன்னு இவங்ககிட்ட கூப்டு குடுத்தீங்கன்னா...அத ஏத்துக்காம ரோட்ல மறுபடியும் போய் நின்னுகிட்டு நீ செஞ்சு குடு நான் மக்களோட நின்னு போராட்றேன்னு சொல்ற தியாகிங்க...ஏன்னா அவங்களுக்கு போராட மட்டும்தான் தெரியும்...ஆட்சி பண்ண தெரியாது...அவங்கள ஒன்னும் பண்ணாதீங்க ..அப்டியே விட்ருங்க...கத்திட்டு போகட்டும்....டிஎம்டிகே...என் தலைவர் வாழ்க்கைளையே பண்ண ஒரே தப்பு விஜயகாந்தோட கேள்விகளுக்கு முரசொலில பதில் சொன்னது....அதும் அரை பக்கத்துக்கு...எங்கள அறியாம நாங்க வளர்த்து விட்ட கள்ளி செடி இது...இத நாங்க பார்த்துக்கறோம்..இத இப்டியே விட்டா ஒவ்வொரு எலேக்சன்லையும் உள்ள பூந்து வோட்ட பிரிச்சு கொழப்பிகிட்டு இருக்கும்..கூடிய சீக்கிரம் இத முடிச்சிருவோம்...அதனால இத பத்தி நீங்க கவலைபடாதீங்க...ஆப்பு ரெடி பண்ணிகிற்றுக்கோம் கூடிய சீக்கிரம் சொருகிடுவோம்....காங்கிரஸ் பொறுத்த வரைக்கும் சோனியா காந்தி இந்தியர் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை அப்டீன்னு மட்டும் அறிவிங்க...அதுக்கு மேல எந்த பெர்பார்மன்சும் பண்ண முயற்சி பண்ண வேண்டாம்...அதுக்கெல்லாம் நாங்க இருக்கோம்...நீங்க நான் சொல்றத மட்டும் செய்ங்க...கடுகளவு கூட எக்ஸ்ட்ரா பெர்பார்மன்ஸ் பண்ணக்கூடாது...சரத்குமாரோட சமுக, டி.ராஜெந்தரோட லதிமுக அப்பறம் கார்த்திக்கோட கட்சி  இதெல்லாம் பத்தி நான் உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்ல...டாயிலெட் பேப்பர என்ன பண்ணனும்னு உங்களுக்கே தெரியும்...இது எல்லாம் முடிஞ்சோன்ன சசிகலா இனிமே என் சகோதரி இல்லைன்னு மீடியாவ கூப்டு கண்ணீரோட அறிவிச்சுடுங்க..கடைசியா ஒரு புன்னாக்குக்கும்  உதவாத உங்க கட்சியா கலைச்சிட்டு அண்ணா அறிவாலயம் வந்து என் தலைவர் முன்னிலைல மிச்சம் இருக்கற உங்க கட்சிகாரங்களோட திமுகல சேருங்க.....அடுத்த நாளே ஓ பண்ணீர்செல்வத்த ஜே.கே.ரித்திஸ்க்கு துணை மந்திரி ஆக்கறோம்...ஓ எஸ் மணியன ஸ்டாலினோட பயண திட்டங்கள தயார் பண்ற சிறப்பு மேலாளர நியமிக்கறோம்....எஸ் எஸ் சந்திரன மு க அழகிரி அண்ணன் வீட்டுக்கு வாரம் ஒரு தடவை போய் அவரு பேர புள்ளைங்க முன்னாடி நின்னு ஸ்டான்ட் அப் காமெடி பண்ணி சிரிக்க வெக்கற அரசவை விகடகவிங்கற ஒரு புது பதவில உக்கார வெச்சு அழகு பார்க்கறோம்..செம்மலைய   துரைமுருகன் போற எடத்துக்கெல்லாம் கூடவே துண்டு எடுத்துட்டு போற துண்டுதாங்கிங்கற பதவிய அளிக்கறோம்..(உங்க காலுல மட்டும் அந்த ஆள் விழலாம்...எங்களுக்கு துண்டு தூக்க கூடாதா....)..சேகர் பாபுவ,பரிதி இளம்வழுதி அண்ணன்கிட்ட ஜுராசிக் பார்க்ல டைனோசருக்கு சாப்பாடா மாட்ட ஏறக்கர மாதிரி அப்டியே துண்டா ஒப்படைக்கறோம்...பரிதி அண்ணனுக்கு என்ன புடிக்குதோ  அத அவரு செஞ்சிக்கட்டும்...பயபடாதீங்க வீட்டு வேலையெல்லாம் குடுக்க மாட்டாரு..என்ன டென்சன் ஆனா பொளேர் பொளேர்னு அடிச்சு தான் கோவத்த தீத்துக்குவாறு அவ்ளோதான்...(வெளிநடப்பாடா   பண்றீங்க சட்டமன்றத்துல .என் தலைவன் பேசும்போது...எதிர்த்து சவுண்ட் குடுத்த அன்னிக்கே உங்க வாய கிழிச்சு  விட்ருக்கனும்டா....)அது மட்டும் இல்லாம அதிமுகவோட அடிமட்ட தொண்டர்களுக்கு ஒரு சிறப்பு பரிசு காத்துகிட்ருக்கு .நீங்க எங்க கழகத்துல இணைஞ்ச அடுத்த நாள் தமிழகம் பூரா இருக்கற அனைத்து ரெத்தத்தின் ரெத்தங்களையும் அந்தந்த பகுதில இருக்கற திமுக அமைப்பு செயலாளர்களோட வீட்டுக்கு போய் ரேசன் கார்ட சரண்டர் பண்ணிட்டு வெத்து பத்திரத்துல கையெழுத்து போட்டு கொடுத்துட்டு ஆளுக்கொரு வேஷ்டியும் துண்டும் இலவசமா வாங்கிட்டு போக சொல்லுங்க...இதுக்கு மேல என்ன மரியாதை வேணும் உங்க தொண்டர்களுக்கு..அப்பறம் ஜெயா டிவில இருக்கற எல்லா கேமரா லொட்டு லொசுக்கு எல்லாத்தையும் கத்திபாரா பாலத்துக்கு கீழ போட்டு கேரசீன் ஊத்தி கொளுத்திட்டு  ரபி பெர்னார்ட் தலைமைல அறிவாலயத்துக்கு டெய்லி விடியகாலைல வந்து வயத்துல ஈர துணிய கட்டிக்கிட்டு பாவமா நிக்க சொல்லுங்க...கூடிய சீக்கிரம் பணி வழங்க ஆவண செய்றோம்... கடைசியா மிச்சம் இருக்கறது நீங்க மட்டும்தான்...இந்திய அளவுல புகழ் பெற்ற ஒரு தேசிய தலைவர்ங்கரத விட்டு தள்ளுங்க...ஒரு வயசானவர  நாகரீகமா எப்டி நடத்தனும்கறது கூட தெரியாம அடிச்சு இழுத்துட்டு போய் ஜெயில்ல அடைச்சு அநாகரீகமா அரசியல் பண்ண ஒரே அரசியல் தலைவர் நீங்க மட்டும்தாங்கறது உலகத்துக்கே தெரியும்...வருசமான மறக்கறதுக்கு இதென்ன கேர்ள் பிரெண்டோட மொபைல் நம்பரா மேடம்..ரணம் .எல்லா திமுககாரன் மனசுலயும் ஆழமா பதிஞ்சிருக்கற ரணம்.ஜூன் 30 அன்னிக்கு எத்தன பேர் வீட்ல டிவி உடைஞ்சதுன்னு உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லைதான்.....எங்களுக்கு இத மனசுலையே வெச்சுகிட்டு நேரம் அமையரப்ப பழிவாங்கற பழக்கமெல்லாம் கெடயாது...நாங்க அண்ணாவோட வாரிசுங்க...ஆனா பாருங்க இப்பன்னு பார்த்து உங்களுக்கு குடுக்கறதுக்கு எந்த பதவியும் காலியா இல்ல மேடம்...ஏன்னா இது பாரம்பரியம் மிக்க பெரிய கட்சி..யாரையும் ஏமாத்தி புடுங்குன கட்சி இல்ல..கலைஞரும் அண்ணாவும் ரெத்தம் சிந்தி வளர்த்த கட்சி.இங்க இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைவர்களே எக்கச்சக்கம் பேரு இருக்காங்க...முதலமைச்சர் வேட்பாளர்களே மூணு பேர் இருக்காங்க...அது மட்டும் இல்லாம கட்சில சேர்ந்த உடனே பெரிய பதவி கெடைக்கறதுக்கு இது உங்க கட்சி மாதிரி கெடயாது...கேப்ல போஸ்டிங் வாங்க முடியாது...அதனால சீர்காழி பக்கத்துல ஒரு கிராமத்துல பஞ்சாயத் போர்டு தலைவி பதவி நிரப்பபடாம இருக்கு..அத வேணா நான் வாங்கி தரேன்...நீங்க நிரப்புங்க..அவ்ளோ பெரிய பொறுப்ப உங்களுக்கு குடுக்க கட்சி பொதுக்குழு ஒத்துகாதுதான்..ஆனா நான் எப்டியாச்சும் பேசி உங்க முன் அனுபவத்த எல்லாம் சொல்லி போராடி வாங்கி குடுக்கறேன்...மக்களுக்காக களப்பணி ஆற்றுங்க...என்ன சொல்றீங்க...தலைவர்கிட்ட பேசவா....?(இந்த லெட்டர எந்த அட்ரசுக்கு அனுப்பறதுன்னு தெரில மேடம்..ஏன்னா நீங்க இப்போ எங்க இருக்கீங்கன்னு உங்க ரெத்தத்தின் ரெத்தங்களுக்கே தெரில. .... அதனால இத நகலெடுத்து கோடநாடுக்கு ஒன்னு..தோட்டத்துக்கு ஒன்னு,ராயபேட்டா ஆபிஸ்க்கு ஒன்னு,ஹைதராபாத்க்கு ஒன்னு,உங்க சொந்த ஊருக்கு ஒன்னுன்னு அனுப்பி வெக்கறேன்..எங்க இருக்கீங்களோ அங்க பிரிச்சு படிச்சு பாருங்க...பட்,சீக்கிரம் பதில சொல்லுங்க..எலெக்சன் வர போகுது எங்களுக்கு நிறைய வேலை கெடக்கு...இன்னும் ரெண்டு மூணு கட்சியா வேற கலைக்கனும்....)வெளியூர்க்காரன்


38 Responses so far.

 1. @விவசாயி said...///
  ஜெயலலிதாவும்,கருணாநிதியும் பக்கத்துல இருக்கும் போது, உம்ம பதிவுகளை யாராவது சத்தமா படிச்சு காட்டின..ரெண்டு பெரும் ஒருத்தர் மேல ஒருத்தர் விழுந்து சிரிச்சு, பகைய மறந்து நண்பர்கள் மாறிருவாங்க....இதுக்குமேல என்ன நடக்கும்ன்னு நீரே ஒரு பதிவு போடும்...நேயர் விருப்பம்...///
  ------------------------------------------------
  @ விவசாயி நீங்க சொன்னா மாதிரியே நான் இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வெக்கற மாதிரி ஒரு பதிவ போட்டுட்டேன்...இத யாராச்சும் சத்தமா அவங்களுக்கு படிச்சு காட்டுங்க...ரெண்டு பெரும் ஒருத்தர் மேல ஒருத்தர் விழுந்து சிரிச்சு பகைய மறந்து நண்பர்கள் ஆகறாங்கலான்னு பார்ப்போம்... :)

 2. me the firsttttttttttttttttttuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu

 3. J.K.Rithis says:

  பதிவு ரொம்ப தாமாசாத்தான் இருக்கு..

  ஆனாலும் உங்களுக்கு ரொம்பதான் ஆசைங்க.. ஆனா இன்னும் கொஞ்ச நாள்ல அஞ்சாநெஞ்சானால் விரட்டப்பட்டு உங்க தளபதி கொடநாட்டுல போய் தோட்ட வேலை பார்க்க போறாருன்னு ரத்தத்தின் ரத்தங்கள் பேசிக்கறாங்களே...

 4. Anonymous says:

  Offer letter kuduthu Rendu Kalavaniyayum onnu sekareegalo. Kollaikariyum Kollaikaraum kootu serntha naadu urupadum. Mothalla MK Mandaya pottathukappuram DMK irukkumanu yosi. Appuram matha katchiyellam kalaikalam.

 5. அப்பு...
  லெட்டரப் படிச்சு ஷாக் ஆயிட்டேன்..ஏம்பா ? ஏன் ?
  இது "Too Much " அதாவது ரொம்ப ஓவர்-னு மேஜர் சுந்தர்ராஜன் மாறி
  சொல்லமாட்டேன்....( இல்ல தல மாறி பேஸ்மாட்டேன்)

  எல்லாம் சரிதான்..ஆனா ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன்..
  உங்க தாத்தவ நம்பி , அம்மா எப்படி வருவாங்க..
  அவரு Legal-ல மூணு குதிரைய ஓட்டினவரு..( கடுகு , காரம் -னு கதையெல்லாம் சொல்லவேண்டாம்)


  உங்க போஸ்ட்-டுகல .கொஞ்சம் பெரிய "Font " ல எழுதினா ,
  நான் அம்மாகிட்ட பேஸ்முடியும்..
  ஹி..ஹி... ஹி...

 6. அப்பு...
  சும்மா இருக்கும் போது, நம்ம கடைக்கு வரலாமில்ல..
  ஏன்னா உங்க கடை லிங்க என்னொட கடையில விளம்பரம் செய்துள்ளேன்..
  http://pattapatti.blogspot.com/

 7. @Zero to Infinity said...//me the firsttttttttttttttttttuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu///
  பார்மாலிட்டி வேணாமே...ப்ளீஸ்....விமர்சனம்ங்கர பேர்ல செருப்பால அடிச்சா கூட மகிழ்ச்சி... :)///
  @J.K.Rithis said...///உங்க தளபதி கொடநாட்டுல போய் தோட்ட வேலை பார்க்க போறாருன்னு ரத்தத்தின் ரத்தங்கள் பேசிக்கறாங்களே...///
  பாத்திமா பாபு சாபம் சும்மா விடாதுன்னேன்... :)

 8. @Anonymous said...///MK Mandaya pottathukappuram DMK irukkumanu yosi...///
  தலைவர் போய்ட்டா அதுக்கப்றம் எப்டி அண்ணன் கட்சி இருக்கும்...யாரு இருக்கா கட்சிய பார்த்துக்க...ஸ்டாலின் அழகிரி எல்லாம் கட்சிய கலைச்சிட்டு கொய்யாக்கா விக்க போய்டுவாங்க....///
  -----------
  @pattapatti said...///
  அவரு Legal-ல மூணு குதிரைய ஓட்டினவரு...///
  தலைவருக்கு பல்லு இருக்கு பக்கோடா சாப்டுறாரு..உனக்கு என் ஓய் வைத்தெரிச்சல்.... :)

 9. Anonymous says:

  dei thamasu! ngoyyala! retire aanathukkapuram ammaku ethukku da offer letter?
  unakkellam auto kidayathu magane,,,JCP THAN

 10. udanpirappe'ithu offer letter illa sariyana aappu letteru
  ithai kalaignar padithhal rasippar. jaya aavi kuda ungalai summa vudathu.
  namma thozhargalai pathi sonnathu ethartham.
  matravai swaarasyamana karpanai.

 11. @Anonymous said...dei thamasu! ngoyyala! retire aanathukkapuram ammaku ethukku da offer letter?
  unakkellam auto kidayathu magane,,,JCP THAN///
  நீங்க அனுப்புனா ஜேசிபி முன்னாடி கூட சந்தோசமா படுப்பேன்னேன்....தலைவருக்காக என்னெனவோ செய்றோம்...இந்த உயிரை குடுக்க மாட்டமா...!

 12. @enthilkumar said...
  udanpirappe'ithu offer letter illa sariyana aappu letteru
  ithai kalaignar padithhal rasippar. jaya aavi kuda ungalai summa vudathu.
  namma thozhargalai pathi sonnathu ethartham.
  matravai swaarasyamana karpanai.////
  நம்மதாங்க இன்னும் முப்பது வருசத்துக்கு தமிழ்நாட்ல தொடர்ந்து ஆட்சில இருப்போம்...இந்த மிச்சம் இருக்கற அழுக்கெலாம் கூடிய சீக்கிரம் தடம் இல்லாம போட்டு தள்ளிறனும்...தளபதி நிம்மதியா ஆட்சி நடத்தறதுக்கு ஏதுவா.. :) கருத்துக்கு நன்றி உடன்பிறப்பே.... :)

 13. @...ஒரு ரூவாய்க்கு அரிசி இது வரைக்கும் எவண்டா குடுத்துருக்கான் தமிழ்நாட்ல..என் தலைவனோட ஆட்சில ஏழைகளோட பசிய ஒழிச்சிட்டான் ..எல்லாரும் சந்தோசமா சாப்டுராங்கேடா..இதுக்கு மேல என்னடா வேணும் உங்களுக்கு...சும்மா எவனாச்சும் வந்து தலைவனுக்கு எதிரா கருத்த பதிவு பண்ணா மரியாத இருக்காது அப்பறம்..தைரியம் இருந்தா பேரோட பண்ணுங்கடா.... !..நீ எதிர்கட்சிகாரன்னு போட்டு என் தலைவன திட்டு நான் டெலிட் பண்ணாம விடறேன்...அது அரசியல்...அனோனியா வந்து ஏதும் சொல்லாதீங்க....எரிச்சல் ஆகுது....(இது அனானியால் அநாகரீகமா பதிவு செய்யப்பட்டு டெலிட் செய்யப்பட்ட ஒரு பின்னூட்டத்திற்கு என் பதில்...)

 14. Anonymous says:

  dei evan da oru roova arisi saapiduran...ration kadai la arisiya pathukki market la rate a yethi vittathu than da unga thalaivar sathanai.!amma apdiyillai da...strait ave makkal vayithula adippanga..apdi adikka mudiyuma unga thalaivarala...?

  p.s: mela comment potta athe anony thanda naanu!
  anonygal sangam vaazhga!

 15. @ration kadai la arisiya pathukki market la rate a yethi vittathu than da unga thalaivar sathanai.!amma apdiyillai da...strait ave makkal vayithula adippanga..apdi adikka mudiyuma unga thalaivarala...?.///
  -------------------------------------
  ஹா ஹா பங்காளி...பெரிய அரசியல்வாதியா நீ..எங்க கழகத்தோட இணைசுக்க மாமேய்..உனக்கு பெரிய அரசியல் எதிர்காலம் இருக்கு..கேப்ல என் தலைவனையும் போட்டு அவங்கேளுக்கும் ஒரு ஆப்பு வெச்ச பாரு...எதிர்கால வெற்றிகொண்டான் மச்சான் நீ ... :)

 16. Anonymous says:

  dei paradesi...ayanavaram mahesh chettinad la account vachuttu escape aanavan thaanada nee.. singapore pona vittruvanungala... nee madras varuva illa...anonygal vaazhga

 17. @Anonymous said...
  dei paradesi...ayanavaram mahesh chettinad la account vachuttu escape aanavan thaanada nee.. singapore pona vittruvanungala... nee madras varuva illa...anonygal vaazhga.////
  ஹா...ஹா...யாருப்பா அது...கம்பெனி சீக்ரட்ட பொதுவுல சொல்றது....ராஸ்கல்..என்ன இது சின்னபுள்ள தனமா...(உனக்கு எப்டி வாத்தியாரே தெரியும் இந்த மேட்டரு ...)

 18. மிக அருமை...
  //அதுவும் டெய்லி...பாசத்தோட வரும்...இருங்க மேடம் இதுக்கே வாய போளக்காதீங்க...//
  இந்த கடிதம் படிக்கும் பொது, எதோ நீங்க பக்கத்துல இருக்கற மாதிரியே ஒரு அனுபவத்தோட எழுதிருக்கறது மிக நேர்த்தி...

  //அப்பறம் ஜெயா டிவில இருக்கற எல்லா கேமரா லொட்டு லொசுக்கு எல்லாத்தையும் கத்திபாரா பாலத்துக்கு கீழ போட்டு கேரசீன் ஊத்தி கொளுத்திட்டு ரபி பெர்னார்ட் தலைமைல அறிவாலயத்துக்கு டெய்லி விடியகாலைல வந்து வயத்துல ஈர துணிய கட்டிக்கிட்டு பாவமா நிக்க சொல்லுங்க//
  வயத்துல ஈர துணிய கட்டிக்கிட்டு நிக்கறதே பாவமா இருக்கும், இதுல பாவமாவேற ஒரு எபக்ட் கொடுக்கம்னுமா..? :-))
  மிக்க நன்றி...

 19. @விவசாயி said...///மிக்க நன்றி...///
  தங்களின் நன்றி ஏற்றுகொள்ளப்பட்டது... :)

 20. அப்பு.. உங்க நக்கல் எனது மனச மாத்திடுச்சு...
  உங்களுக்காக ஒரு நல்ல பதிவைப்போட்டுள்ளேன்..
  http://pattapatti.blogspot.com/2009/12/1.html

 21. மாப்ள உனக்கு தூரப்பாரவை யிருக்குன்றதுக்காக பதிவுல இருக்குற எழுத்தெல்லாம் இம்புட்டு சிறிசாவா போடுவ நாங்க எப்பிடிடா படிக்கிறது வென்று? மெயில் ஐடி குடு மாப்ள...பயப்படாம குடுடி..

  தமிழ் மணம்.அப்புறம் உங்க சிங்கப்பூர்ல ஃபேமஸா இருக்குற தமிழ் வெளி இதுல எல்லாம் சேத்துவிடுடா ஃபாலோவர் விட்ஜெட்டும் சேத்துவிடு நல்லா எழுதுற குண்டாஞ்சட்டிக்குள்ளயே குதிர ஓட்டிட்டு இருந்தா எப்டி மாப்ள வெளியில வா...

 22. @பிரியமுடன்...வசந்த் said...///
  எலேய் அயோக்ய வடுவா...அதுக்குள்ளே தெளிஞ்சிருசாலே உனக்கு...எனக்கு இன்னும் தலைய சுத்துற மாதிரியே இருக்குலே... !///
  லெட்டர் சைச மாத்திடறேன் மச்சி..:)....

 23. Saravanan says:

  நான் வாய்ல சனி பாத்துருக்கேன் இது என்ன கைல சனி,உங்க தலைவர் மெகா கிருமினல்னு உங்க தலைவருக்கே தெரியும் ,நீங்க ஏன் சார் பயணத்துக்கு ரெடியா இருக்க கூடிய ஒரு பீசுக்காக இவ்ளோ பில்டப் பண்றீங்க,தப்பு பண்ணுனவன் தண்டிக்க படனும் சார் ,உங்க அயயா தப்பு பண்ணுனறு அரெஸ்ட் பண்ணங்க,நீங்க ஏன் டிவி ய ஒடகனும் ,கூப்ட்டா வரணும் இல்லன அப்புடித்தான் ....சார் நீங்க பீல் பண்ற அளவுக்கு அவரு ஒரு நாள் பீல் பன்னிருந்த நீங்க ஏன் சார் (இதுல நாங்களும்) இப்புடி அந்நிய நாட்டுல பாசம் இல்லாத சோற தின்னு வாழனும்,அவரு நிலவுல மனைவியோடும்,துணைவியோடும் வாழ யோசிச்சுகிட்டு இருக்காரு சார் ...அவரெல்லாம் வாழ்ந்து முடுசுட்டார் சார்..அவரு எக்ஸ்பயரி ஆய் மூணு வருஷம் ஆச்சு சார்...பயண பட சொல்லி லெட்டர் அனுப்புங்க ...2010 ல யாவது தமிழ் நாடு நல்லா இருக்கட்டும் ...(நான் எந்த கட்சியும் சார்ந்தவன் அல்ல ...வாழ்க சிங்கை முதல்வர்...

 24. சரவணன்,
  எப்படியா உண்மைகளை, பட்டவர்தனமா
  சொல்றீங்க..
  எங்க தலைவருக்கு இடுப்புக்குமேலதான் வயசாச்சு..

 25. Saravanan says:

  உண்மைதான் சார்,ஆனா அது எப்டி உங்களுக்கு தெரியும்,இந்த தகவல கலா அக்காவோ இல்ல நம்ம நமீதா ஆண்டியோ ,குஷ்புவோ சொல்லி இருந்தா அது நியாயம் ,அவுங்களுக்கு தெரிஞ்ச தகவல சொல்லி இருக்காங்க ன்னு எடுத்துக்கலாம் இல்ல காந்திமதி ,வடிவுக்கரசி வகையறாக்கள் சொல்லி இருந்தா கூட அதுலயும் ஒரு நியாயம் இருக்கும் உமக்கு எப்டி ஒய் தெரியும் ....இந்த கிழவன நம்பவே முடியலப்பா ....

 26. DEAR Veliyoorkaran..

  WISH YOU A VERY HAPPY NEW YEAR.

  REGARDS

  RAJKUMAR

 27. ஏன் ? ஏன் ? ஏன் ? ஏன் ? ஏன் ?
  ஏன் ? ஏன் ? ஏன் ? ஏன் ?
  ஏன் ? ஏன் ? ஏன் ?
  ஏன் ? ஏன் ?
  ஏன் ?
  இன்னும் ஒரு நாளிலே புது பதிவைப்
  போடலேனா...........
  ஆட்டோ வரும்.. கடைசிசிசிசிசிசிசிசிசிசிசிசிசிசிசி எச்சரிக்கை..

 28. waiting for new posts..rasichu sirichu padichu romba naal aachu...

 29. தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

 30. அப்பு.. ரொம்ப பிஸியா?..நீங்க அடுத்த பதிவைப் போடுரதுக்குள்ளே, கனிமொழி மகன்
  முதலை அமைச்சர் ஆகிவிடுவாரோ??????

 31. சார்.. உங்க சிலை ரெடியாயிடிச்சுங்க..

  கம்பெனிக்கே எடுத்துட்டு வரட்டுங்களா?... இல்ல city Hall MRT Station- க்கு கொண்டு வரட்டுங்களா?..
  .
  .
  எதுக்கா?.
  .
  .
  உங்க பாஸ் , நேற்று ஒரே அழுகை..
  வெளியுர்காரன் வீட்டுக்கே போகாம ஆபிஸ் வேலையாவே செய்துகிட்டு இருக்கீங்களாம்..
  இப்படியே செய்தா, அவரு சீக்கிரமா ஆஸ்திரேலியாவுல வீடு வாங்கி செட்டிலாயிடுவாராம்...
  பதிவப் போடுவதற்க்கு கூட நேரமில்லாமல் , கடமையில் மூழ்கிவிட்டீராம்..

  அதனால நல்ல சிலையா ( உங்க) செய்து, கம்பெனி முன்னாடி வைக்கவேண்டுமென
  வேண்டியிருக்காராம் உங்க பாஸு...

  சரி.. திரும்பவும் மேலிருந்து படிங்க...
  அன்புடன் பட்டாபட்டி

 32. கம்பெனிக்கே எடுத்துட்டு வரட்டுங்களா?... இல்ல city Hall MRT Station- க்கு கொண்டு வரட்டுங்களா?..////ஹா ஹா...சிட்டி ஹால் இல்ல மொதலாளி...தஞ்சோங் பகார்...எடுத்துட்டு வாங்க...வெச்சுடுவோம்...(யோவ்..என்னைய நீங்க..தொடர்ந்து பதிவ போட்டாலும் கலாய்க்கறீங்க...போடலைனாலும் கலாய்க்கறீங்க..பேசாம நான் பழைய மாதிரி என் சொந்த ஊரு அமெரிக்காலேயே போய் செட்டில் ஆய்டலாம்னு இருக்கேன்....)

 33. உங் சொந்த ஊர் ஆயிரத்தில் ஒருவன் படத்துல வர்ற தீவுன்னு இங்க ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்களே! படுவா!

 34. கடைசியா சொந்த ஊரச்சொல்லீட்டிங்க..

  சரி.. சரி.. போகும்போது நம்ம பையனுக்கு...
  ( அதுதாங்க ஓபாமா ), கொஞ்சம் இட்லியும்
  கெட்டி சட்னியும் தரேன்..

  சட்னி கெடுவதுக்குள் , Door Delivery
  பண்ணீடுங்க சாமி...

 35. Veliyoorkaran said...
  ரெட்டைவால் ' ஸ் said...
  பட்டாபட்டி.. said...

  said... said... னு வருதுங்களே..
  அது என்ன செட் தோசைங்களா...

  ( அடுத்த பதிவ போடும் வரை இப்படித்தான்..)

  ஏன் அப்பு.. " A " தொடங்கி " Z "வரை ஏதாவது எழுதுங்க சாமி..
  நானும் டெய்லி உங்க கடைக்கு வந்துட்டு இருக்கேன்.. இது சரியில்ல.. சொல்லீட்டேன்
  இது சரியில்ல.. சொல்லீட்டேன்
  இது சரியில்ல.. சொல்லீட்டேன்
  இது சரியில்ல.. சொல்லீட்டேன்
  இது சரியில்ல.. சொல்லீட்டேன்
  இது சரியில்ல.. சொல்லீட்டேன்
  இது சரியில்ல.. சொல்லீட்டேன்
  இது சரியில்ல.. சொல்லீட்டேன்
  இது சரியில்ல.. சொல்லீட்டேன்
  இது சரியில்ல.. சொல்லீட்டேன்
  இது சரியில்ல.. சொல்லீட்டேன்
  இது சரியில்ல.. சொல்லீட்டேன்
  இது சரியில்ல.. சொல்லீட்டேன்
  இது சரியில்ல.. சொல்லீட்டேன்

 36. யோவ் பட்டாபட்டி...வெச்சுகிட்டாயா வஞ்சகம்...எத எழுதறதுன்னு தெரிலையா...நான் என்ன உம்ம மாதிரி ப்ரோபாசனால் ரைட்டரா....இருங்க ஒய்...கொஞ்சம் டைம் குடுங்க...இந்த வாரத்துல எதையாச்சும் எழுதி போஸ்ட் பண்ணிடறேன்..ஐயே சாமி...முடிலபா..என்ன ஒரு உலக புகழ் பெற்ற எழுத்தாலானாக்கிட்டு நீ போய்ட்ட...இந்த ரசிகர்கள் தொந்தரவு அடடடடடா...(இதான் ப்ரதர் வெத்து வேட்டு...)

 37. எலெய் வென்று ஏண்டா ஒரு மாசமா ஒண்ணும் எழுதாம கடைய காய போட்ருக்க?