- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Showing posts with label Politics. Show all posts
Showing posts with label Politics. Show all posts
Posted by Veliyoorkaran - - 59 comments and to comment


தேர்தல் முடிவுகள் வந்துருச்சு . முந்தா நேத்து கலைஞர் பதவி விலகிட்டாரு .அம்மா நாளைக்கு பதவி ஏத்துக்க போவுது...இன்னிக்கு இருக்கோம் பார்த்தியா...கலைஞரும் இல்லாம ஜெயலலிதாவும் இல்லாம..இதான் ஓய் மக்கள் எதிர்பார்க்கற ஆட்சி.. புது அரசு பதவி ஏத்துக்கறதுக்கு முன்னாடி தமிழக அரசியல் கட்சிகளுக்கும் அப்டியே வோட்டு போட்ட மக்களுக்கும் ஒரு சில வார்த்தைகள்...! 

பாமக

எல்லாம் பிச்ச எடுப்பாணுக..இவனுக பிச்சைக்காரன்கிட்டையே  பிச்சை எடுக்கற பனாதிங்க..ஏண்டா இப்டி சீட்டுக்காக பிச்ச எடுக்கறீங்கன்னு  கேட்டா, கோச்சுகினு அடுத்த கட்சிக்கு போய் நாராசமா பிச்ச எடுப்பாணுக..ரெண்டு சீட் கூட குடுத்தா ராஜபட்சேகிட்ட கூட கூட்டு வெக்கற அரசியல் கோமாளிங்க இந்த டோமருங்க...மத்திய சர்க்கார்ல காங்கிரஸ் முதுகுல சவாரி பண்ணி பதவிய அனுபவிச்சுக்கிட்டு குளிர் காய்ஞ்ச இவனுகள கடந்த நாடாளுமன்ற தேர்தல்ல மக்கள் கழுவி ஊத்தி மாநில கட்சியா ப்ரொமோட் ஆக்கி, இப்போ சட்டமன்ற தேர்தல்ல படுகேவலமா தோக்கடிச்சு பாமக வெத்து ஜாதி கட்சிங்கறத உணர்த்திட்டாங்க...!

திமுககாரனாவது சினிமாக்கு கதை எழுதறேன்...சீரியல் எடுக்கறேன்னு அடுத்த அஞ்சு வருசத்தை ஓட்டிருவான்...காங்கிரஸ்காரன் யார் தலைவர்னு சண்டை போட்டே ஓட்டிருவான்...மரத்த வெட்டி ரோட்டுக்கு குறுக்க போட்டு மறியல் பண்றத தவிர உனக்கு வேற என்னா மயிர  தெரியும்..இனிமே அதையும் பண்ண முடியாது...அம்மா அப்புடியே லாரிய ஏத்தி பூரா பயலையும் கொன்னுட்டு  கேஸே இல்லாம பண்ணிரும்..

உன் தலைவன் ராமதாசுக்கு ஒன்னே ஒன்னு சொல்லிகறேன்...யோவ் ராமு..பேசாம கட்சியா கலைச்சிட்டு போயஸ் கார்டனுக்கு வாட்ச் மேனா போய்யா...ஆனா நீ அதுக்கு கூட லாயக்கு இல்ல..! கொஞ்ச நாள் வேதா இல்லத்துல வேலை பார்த்துட்டு அடுத்த மாசம் பக்கத்து தெருவுல ரஜினி வீட்ல போய் வேலை பார்ப்ப...!

காங்கிரஸ்

தமிழ்நாட்ல நான் காங்கிரஸ்காரன்னு சத்தமா சொல்றது, நான் டி ராஜேந்தர் ரசிகன்னு சத்தமா சொல்லிக்கற மாதிரி...கேக்குறவன் பொசுக்குன்னு அதால சிரிச்சிருவான்...மானம் இல்லாதவன் திமுகல இருப்பான்..சொரணை இல்லாதவன் அதிமுகல இருப்பான்..ஆனா மானம் சூடு சொரணை வெக்கம் இப்டி எந்த கருமாதியும் இல்லாத எடுபட்ட நாய்ங்க தமிழக காங்கிரஸ்ல இருக்கும்..ஸ்ரீலங்காவுக்கு குண்டாடா குடுக்கறீங்க..குண்டு..குந்தானிங்களா..இனிமேதாண்டா இருக்கு உங்களுக்கு...!

விடுதலை சிறுத்தைகள்

ஈழ பிரச்சனைல நீங்க ஆடுன டபுள் கேமுக்கு இந்த தேர்தல்ல தோத்துருவீங்கன்னு தெரியும்...ஆனா இவ்ளோ கேவலமா தோப்பீங்கன்னு  எதிர்பார்க்கல...செத்த பாம்ப என்னத்த அடிக்க..போங்க..போய் மிச்சம் இருக்கற உங்க வாக்கு வங்கிய காப்பாத்திக்கங்க...அதுக்கும் இந்நேரம் தேமுதிக ஸ்கெட்ச் போட்டாலும் போட்ருபாங்கே...!

தேமுதிக

சில வருடங்களுக்கு முன்னாடி திரை உலகத்தினர் கலைங்கருக்கு பாராட்டு விழா எடுத்தப்போ மேடைல பேசகூட தெரியாம நீங்க உலருனத  பார்த்து நக்கலா சிரிச்ச கலைஞர், சத்தியமா அப்போ நெனைச்சு கூட பார்த்துக்க மாட்டாரு...சட்டசபைல எதிர்க்கட்சி அந்தஸ்த கூட உங்ககிட்ட பறிகுடுத்து அனாதையா கடைசி வரிசைல உக்கார போறோம்னு..திராவிட கட்சிகளின் ஆக்ரமிப்புல இருந்த தமிழக அரசியல் வரலாறுல நீங்க பண்ணது ஒரு அதிசயம்...போன தேர்தல்ல தனி மனிதரா சட்டசபைக்கு போனீங்க..இப்போ இருபதில் ஏழு பேரோட எதிர்க்கட்சி தலைவரா...நாளை...? வாழ்த்துக்கள் விஜயகாந்த்..

அதிமுக

சீமான், வைகோ, நெடுமாறன் வகையறாக்கள், இனிமே ஈழ தமிழர்கள பத்தி பாத்ரூம்ல கூட சத்தம் போட்டு பேச முடியாது...பேசலாம்னு நெனைச்சாலே அம்மா ரிவிட் வெச்சிரும்...மக்கள் ஒரு குடும்பத்தோட மன்னராட்சிய முடிவுக்கு கொண்டு வந்து ஒரு சர்வாதிகாரிகிட்ட ஆட்சிய குடுத்துட்டாங்க..இனி ஒரு பய திமுக கரை வெட்டி கட்ட முடியாது தமிழ்நாட்ல...அம்மா வெரட்டி வெரட்டி அடிக்கும்...எல்லா உடன்பிறப்புகளும் கட்சி கரை வேட்டிய சலைவைக்கு  போட்டு,நல்லா அழகா  மடிச்சு பீரோகுள்ள அடிக்கி வெச்சு, பீரோவ பூட்டி சாவிய கடல்ல தூக்கி போட்ருங்க... இப்போ நீங்க தோத்த கேவலத்துக்கு, அனேகமா இனிமே உங்களுக்கு அந்த சாவி தேவையேபடாது...!

மக்கள்

என்னா பார்க்கற...இப்ப என்ன உனக்கு ஒருத்தனே தமிழ்நாட்ல சம்பாரிக்க கூடாது அவ்ளோதான...விடு இப்போ ஊழல் பண்ண வேற ஆள் வந்துருச்சு...நீ போய் உன்னோட இந்த மாச கிரெடிட் கார்ட் பில்லுக்கு எப்புடி பணம் கட்டலாம்னு யோசி...அத விட்டுட்டு இவனுக நல்லது பண்ணுவானுக நாம நல்ல சிறப்பா வாழ்ந்து வரலாறு படைப்போம்னு கனவு கண்டீன்னா திமுக கதிதான் உனக்கும்...,

என்னது என்னாவா...,

குமிஞ்சு முட்டிய  நக்கிகினே போவேண்டியதுதான்..! 

வெளியூர்க்காரன்

Posted by Veliyoorkaran - - 39 comments and to comment


திராவிட முன்னேற்ற கழகத்திற்கு தங்களின் பொன்னான வாக்குகளை அளித்த அனைத்து அன்பு உடன்பிறப்புகளுக்கும் உளமார்ந்த நன்றியும் வாழ்த்தும்..!

உங்க வேலை முடிஞ்சு போச்சு...இனிமே உங்களுக்கு மரியாதை கெடயாது..போங்க போங்க...போய் எல்லா பயலும் அவன் அவன் வேலைய பாருங்க..! வேலை வெட்டி இல்லாதவன் எங்கள திட்டி பதிவு போட்டு வோட்ட வாங்கி பிரபல பதிவராக முயற்ச்சி பண்ணுங்க..!

இனிமே நாங்க எங்க வேலைய பார்த்துக்கறோம்..!
( பின்ன, இன்னும் எவ்ளோ ஊழல் பண்ண வேண்டியிருக்கு...)

இனி அஞ்சு வருஷம் கழிச்சு மறுபடியும் மீட் பண்ணுவோம் மக்களே..! 

போறதுக்கு முன்னாடி ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிடறேன்...

மட சாம்ப்ரானிலையே கேடுகெட்ட சாம்ப்ராணிடா நீங்கல்லாம்...! ஸ்பெக்ட்ரம்ங்கற ஒரு ஊழல்ல மட்டும் நாங்க எத்தன கோடி அடிச்சொம்கரத ஒரு பேப்பர்ல எழுதி பார்த்தா சைபர் போட்டே புது ரீபிள்ள இங்க்கு தீந்துரும்டா...! இவ்ளோ தப்ப பண்ணிட்டு வந்து வோட்டு கேட்ருக்கோம்..அசராம வோட்ட போட்ட பார்த்தியா நீ..!

என் செல்லமே..!   

உன்ன நம்பி எத்தன ஆயிரம் கோடி வேணாலும் ஊழல் பண்ணலாம்டா என் திராவிட சிங்கமே..!

மறுபடியும் ஊழல பண்ணிட்டு திரும்பவும் வந்து உங்ககிட்ட கூச்சமே இல்லாம வோட்டு கேக்கலாம்...!

நீயும் போடுவ..! உனக்குத்தான் மூளைங்கறதே கொஞ்சம் கூட கெடயாதே என் அறிவுகெட்ட திராவிட கொழுந்தே....! 

அசராமல் சென்று வா என் சிங்கமே...!  நாளை நமதே...! 

நீ போய் டெய்லி சன் டிவில நியூஸ் பாரு..!
இனிமே வேற என்ன பண்ண முடியும் உன்னால...!

அதான் எலெக்சன் முடிஞ்சிருச்சே..!

நன்றி வணக்கம். 

அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் 
திராவிட முன்னேற்ற கழகம்.

இவ்ளோ நாள் கலைஞர் என்ற ஒரு தனிமனிதருக்காக, திமுகவின்  எல்லா கயவாளிதனதையும் மறைத்து  எல்லோரிடமும் வோட்டு கேட்ட பாவத்தை இந்த பதிவின் மூலம் போக்கிய மன திருப்தியுடன்., 

வெளியூர்க்காரன்  

Posted by Veliyoorkaran - - 5 comments and to comment




இன்று தேர்தல் நாள். இன்று தமிழ்நாட்டு மக்கள் நாம் கடந்த ஐந்தாண்டுகளில் ஆற்றிய பணிக்கு மதிப்பெண் அளிக்கின்ற நாள் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். திமுக அரசின் சாதனைகளை எண்ணிப் பார்த்து மார்க் போடுமாறும் அவர் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

இன்று தேர்தல் நாள். இன்று தமிழ்நாட்டு மக்கள் நாம் கடந்த ஐந்தாண்டுகளில் ஆற்றிய பணிக்கு மதிப்பெண் அளிக்கின்ற நாள்.
பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவார்கள், ஆனால் மாணவர்கள் ஆசிரியருக்கு மதிப்பெண் போடுவதில்லை. ஆனால் அரசியலில் தங்களை ஆட்சி செய்தவர்கள் கடந்த ஐந்தாண்டுகளில் முறையாக, ஒழுங்காக, சீராக தேர்வு எழுதினார்களா என்பதைக் கண்ட பொதுமக்கள் அதற்காக மதிப்பெண் அளிக்கின்ற நாள்தான் இன்று.
ஓராண்டு முழுதும் வயலையே சுற்றிச் சுற்றி வந்து, உரமிட்டு, நாற்று நட்டு, களையெடுத்து பயிரை பராமரித்த விவசாயி அதற்கான அறுவடையைச் செய்து “கண்டு முதல்” செய்கின்ற நாள்தான் இன்று.

ஆண்களை மிஞ்சிய பெண்களின் வரவேற்பு

கடந்த ஐந்தாண்டுகளில் நாம் எந்த அளவிற்கு தமிழ்நாட்டு மக்களுக்காக உழைத்திருக்கிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்த்தால் நமக்குப் பெருமையாகத்தான் இருக்கின்றது. ஆட்சியில் இருந்தபோது என்ன செய்து கிழித்தார்கள் என்று நம்மைப் பார்த்து யாரும் கேட்க முடியாது. வாக்குகேட்டுச் சென்று மக்களைப் பார்த்தபோது அவர்கள் யாரும் முகத்தைத் திருப்பிக் கொள்ளவில்லை. ஆண்களை மிஞ்சும் வகையில் இந்த முறை தாய்மார்கள் நம்மை வரவேற்ற காட்சி நினைத்து நினைத்துப் பெருமிதம் கொள்கின்ற அளவிற்குத்தான் இருந்தது.

கடலூரில் திரண்ட மாபெரும் மக்கள் சமுத்திரத்தைச் சந்தித்துவிட்டு, இரவே சிதம்பரம் வந்து தூக்கம் என்ற பெயரால் ஒரு சில மணி நேரம் படுத்துப் புரண்டுவிட்டு, மறுநாள் காலையில் நான் போட்டியிடும் திருவாரூர் நோக்கி எங்கள் “வேன்” புறப்பட்டது. கொள்ளிடத்திற்கும் சீர்காழிக்கும் இடையே ஒரு கிராமத்தில் மக்கள் வழிமறித்து வரவேற்றார்கள். ஒரு சிறுமி! பத்து வயதுதான் இருக்கும். கறு நிறம்! கையிலே ஒரு சால்வை. கூட்டத்திற்குள் புகுந்து வேன் அருகே எப்படி வந்தாள் என்றே தெரியவில்லை.

‘ஆறாவது முறையும் முதல்வராவீர்கள் தாத்தா’

வேனின் கண்ணாடி வழியாக தன் முகத்தை நீட்டி “தாத்தா! ஆறாவது முறையாக நீங்கள் வெற்றி பெற்று இந்த வழியாக வருவீர்கள்! அப்போதும் நான் உங்களுக்கு இதே இடத்தில் சால்வை அணிவிப்பேன்” என்று கணீர் குரலில் கூறியபோது அந்த வண்டியிலே இருந்த எங்கள் அனைவருக்கும் மெய் சிலிர்த்தது. அந்த மழலை இன்னமும் என் கண்களை விட்டு நீங்கவில்லை.
மேலும் பத்து கல் அந்தப் பெண்ணைப் பற்றியே பேசிக்கொண்டு மக்களின் வரவேற்பைப் பெற்றுக்கொண்டே சென்றபோது மயிலாடுதுறை அருகிலே ஒரு கிராமம். சாலையோரத்தில் மீண்டும் வேன் நின்றபோது, அந்தக் கூட்டத்தில் ஒரு பெரியவர் தன் பேரனுடன் நின்று கொண்டிருந்தார். மற்றவர்கள் எல்லாம் போட்டிபோட்டுக் கொண்டு சால்வைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பெரியவர் என்னிடம் “அய்யா, கடந்த ஆண்டு 75 ஆயிரம் ரூபாய் நீங்க கொடுத்த அரசு நிதியாலத்தான் இதோ என் பேரன் ஆப்பரேஷன் செய்யப்பட்டு இன்றளவும் உயிரோட இருக்கான். உங்களையும் பாக்கிறான். நீங்க நன்றாக இருக்கணும்” என்று வாழ்த்திய போது, அதைவிடப் பெரு மகிழ்ச்சிக்குரிய ஒன்று இருக்க முடியுமா?

மக்கள் கடலில் நீந்திச் சென்றேன்

இந்தச் சுற்றுப் பயணத்தின் இதுபோன்ற காட்சிகள் பல! நேற்று தேர்தல் பிரச்சார கடைசி நாள் அல்லவா? தம்பி டி.ஆர்.பாலுவும், திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணனும், திருவாரூரில் எனக்காகத் தேர்தல் பணியாற்றிய தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் செயலாளர் தம்பி சண்முகமும், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதியும் அமர்ந்து நான் மூன்று நாள் பயணம் செய்ய வேண்டியதை ஒரே நாளில் வகுத்துக்கொண்டு என்னை அழைத்துச் சென்றார்கள். அவர்கள் எதிர்பார்த்ததற்கும் மாறாக வழி நெடுக மக்கள் கடலில் நான் நீந்திச் செல்ல வேண்டி நேரிட்டதால் ஒருசில ஊர்களுக்குச் செல்லமுடியாமலே போய்விட்டது.

குறிப்பாக திருவாரூர் தொகுதியிலே உள்ள ஓடாச்சேரி, புத்தூர், ஆமூர், வடகுடி போன்ற கிராமங்களுக்கும், திருவாரூர் நகரிலே உள்ள பல தெருக்களுக்கும் செல்ல முடியாமையால் மாவட்ட செயலாளரை அங்கே சென்று அங்குள்ளவர்களுக்கு சமாதானம் கூறச் சொல்லியிருக்கிறேன்.
இந்த நிலையில் நாம் மதிய உணவுக்காக திருவாரூர் இல்லம் திரும்பி சாப்பிட்டு விட்டு ஓய்வெடுத்துக்கொண்டு பொதுக்கூட்ட மேடைக்குச் செல்ல வேண்டுமென்றால் நேரம் இல்லை. எனவே வழியிலே கொரடாச்சேரியில் மாவட்டச் செயலாளரின் சிறிய அலுவலகம் ஒன்று உள்ளது. அங்கே ஏதாவது மதிய உணவு அருந்திவிட்டு, பயணத்தைத் தொடரலாம் என்று தயங்கித் தயங்கி பூண்டி கலைவாணன் கேட்டார்.

வலியின் கொடுமையை மறைத்துக் கொண்டு..!

அவர் தயக்கத்திற்குக் காரணம் என்னுடைய உடல் நிலைதான். கடந்த ஆண்டுதான் என்னுடைய முதுகிலே மிகப்பெரிய அறுவை சிகிச்சை நடைபெற்றது என்பதை நீ அறிவாய். என்னுடைய வயது 87 என்பதும் உனக்குத் தெரியும். அந்த அறுவை சிகிச்சை செய்து கொண்ட இடத்தில் அவ்வப்போது எனக்கு எப்படிப்பட்ட வலி எடுக்கிறது என்பதை என்னுடன் இருப்பவர்கள்தான் அறிவார்கள். சில நேரங்களில் வாய்விட்டே கத்தி விடுகிறேன்.

இந்த உடம்போடு அந்த தள்ளு வண்டியிலே பயணம். அந்த வண்டியிலே நீ உட்கார்ந்து பார்த்தால்தான் தெரியும்! உடலை அப்படி இப்படி அசைக்க முடியாது. அதிலே பயணம் செய்யும்போது, எனது வலியின் கொடுமையை மறைத்துக் கொண்டு, மகிழ்ச்சியோடு குரல் கொடுக்கின்ற மக்கள் முன்னால் சிரித்துக் கொண்டே கையை காட்டவேண்டும். ஒரு சிறிய கிராமத்தில் மக்கள் நின்று கொண்டிருப்பார்கள். உடனே என்னோடு பயணம் செய்த முரசொலி செல்வம், என் மகள் செல்வியும் கையைக் காட்டுங்கள் என்று குரல் கொடுப்பார்கள்.

கையோ தூக்க வேண்டுமா என்று பரிதாபமாக என்னைப் பார்த்துக் கேட்கும். இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் கையைத் தூக்கி காட்டும்போது அந்த மக்கள் காட்டுகின்ற அன்புப் பொழிவில் அந்த வலி குறையும். அதற்குள் என் பின்னால் அமர்ந்திருக்கும் மனைவி தயாளு “என்னங்க, இந்தப் பக்கம் பாருங்க, எவ்வளவுபேரு கையை காட்டுறாங்க!” என்று கூற – நான் இரண்டு புறமும் மாறி மாறி கையை ஆட்டும்போது தெரியாத வலி, இப்போதுதான் தெரிகிறது!

இந்த நிலையில் கொரடாச்சேரியில் உள்ள மாவட்ட செயலாளரின் சிறிய அலுவலகத்திற்கு நுழைந்து, சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு, கண்கொடுத்த வனிதம், எருக்காட்டூர், கமலாபுரம், குளிக்கரை, அம்மை யப்பன், தண்டலை, விளமல் கிராமங்களில் வாக்குகளைக் கேட்டுவிட்டு, நேராக மேடைக்கு வரவே 4.15 மணி ஆகிவிட்டது.

ஓய்வெடுக்கப் பிறந்தவன் அல்ல

இந்த அளவிற்கு சிரமத்தைத் தாங்கிக் கொள்ளும் எனக்கு ஹெலிகாப்டரிலோ, விமானத்திலோ பறந்துவந்து, ஆங்காங்கு எழுதிக் கொடுத்த பேச்சினை ஒருசில நிமிடங்கள் பார்த்துவிட்டு ஓய்வெடுத்துக் கொள்ள சென்னை சென்றுவிடலாம் என்ற நிலையில்லையே என் செய்வது?

எப்போதுமே மக்களுக்காக உழைக்கின்ற நேரத்தில் நான் என்னுடைய துன்பங்களைப் பெரிதாக கருதியதில்லை. ஏனென்றால் நான் ஓய்வெடுப்பதற்காக பிறந்தவன் அல்லவே! வாக்குகளைக் கேட்பதற்காக மட்டுமே மக்களைச் சந்திப்பவனும் இல்லையே! கடனுக்காக – பதவிக்கு வந்தே ஆக வேண்டுமென்ற வெறியில் மக்களைச் சந்திப்பவர்கள் வேண்டுமானால் – சகலவிதமான ஆடம்பரங்களோடு ஹெலிகாப்டரிலும், விமானத்திலும் வந்து கூட்டத்திலே மட்டுமே மக்களைச் சந்திக்கலாம்.
ஆனால் சாலையோரத்தில் உள்ள மக்களைச் சந்திப்பதையே கடமையாகக்கொண்ட எனக்கு எப்போதும் ஓய்வெடுக்கத் தெரிந்ததில்லையே! என்னுடைய மனைவியரும், பிள்ளைகளும், பெண்களும் ஒருநாள் பயணத்தைக் குறைத்துக்கொண்டு கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டு பயணம் புறப்படுங்களேன் என்று கேட்பார்கள்.
ஆனால் எனது நிகழ்ச்சி நிரலை வகுத்தவர்களிடம், நான் என்ன, ஒருசில மணி நேரங்களை வீணடித்து விட்டீர்களே, அந்த நேரத்திலும் என்னைப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாமே என்றுதான் கேட்டிருப்பேனே தவிர – நான் ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டுமென்று நினைத்ததில்லை. அதனால்தான் அனைவரும் ஆறாவது முறையாக நான் முதல்வராக வரவேண்டுமென்று கூறுகின்றபோது, அது எனக்குப் பதவி அளிப்பதற்காக அல்ல, மக்களுக்கு பணிவிடை செய்ய தகுந்த வேலைக்காரன் நான்தான் என்ற அளவிலே தான் எடுத்துக்கொள்கிறேன் என்று கோவை கூட்டத்திலே தெரிவித்தேன்.

சீர்தூக்கிப் பார்த்து வாக்களியுங்கள்

எதற்கோ ஆரம்பித்து, கடிதம் எப்படி யெப்படியோ நீண்டு கொண்டிருக்கின்றது. இந்த நாள் இரு தரப்பினரும் கடந்த காலத்தில் எப்படியெப்படி நடந்து கொண்டார்கள் என்பதை அனுபவபூர்வமாக எண்ணிப் பாருங்கள். மக்களுக்கு நன்மைகளை, சாதனைகளை, சலுகைகளை செய்த ஆட்சி எது? அதே நேரத்தில் கொடுமைகளை, சித்திரவதைகளை, துன்பங்களைத் தந்த ஆட்சி எது? இரண்டையும் சீர்தூக்கிப் பாருங்கள்! வாக்களிக்கும் முன் ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்.

மக்களுக்கு செய்யப்பட்ட சாதனைகளுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் செயல்பட்ட ஆட்சி எது? அவ்வாறு நிறுத்தப்பட்ட சாதனைகளை மக்களுக்கு மீண்டும் அளித்த ஆட்சி எது? 2006-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலே சொன்ன எந்த உறுதி மொழியையும் நிறைவேற்றாத ஆட்சி எது? தேர்தல் அறிக்கையிலே சொன்ன அத்தனை சாதனைகளையும் செய்ததோடு, மேலும் மக்களுக்காக புதிய புதிய சாதனைகளைக் குவித்த ஆட்சி எது? தேர்தல் அறிக்கையிலே ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு வழங்குவோம் என்று அறிவித்தோம். அதனை நடத்த முடியாத காரியம் என்று அப்போது ஜெயலலிதா அறிவித்தார்.
ஆனால் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்குவோம் என்று கூறி அதனை இன்றளவும் தந்துவரும் ஆட்சி தி.மு.க. ஆட்சி அல்லவா? கொரடாச்சேரியில் நான் பத்து நிமிடம் தங்கியிருந்தபோது, அந்த நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் எஸ்.எம்.வி. நடராசன் என்பவர் என்னைச் சந்தித்து நன்றி கூறினார். எதற்கு நன்றி என்றபோது சட்டையைத் திறந்து காட்டினார்.

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அறுவை சிகிச்சை செய்துகொண்டு மார்பிலே போடப்பட்ட கட்டுக்களுடன் வந்திருந்தார். நீங்கள் இந்தத் திட்டத்தை அறிவித்திருக்கா விட்டால் இன்றைக்கு நான் இல்லை அய்யா என்று கூறினார். இப்படி ஒவ்வொரு ஊரிலும் உங்களால் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்று ஒவ்வொருவரும் கூறியபோது எனக்கு நானே மதிப்பெண் போட்டுக்கொண்டேன். ஆனால் நீங்கள் மதிப்பெண் வழங்க வேண்டிய நாள் இன்று அல்லவா? எங்கே புறப்பட்டு விட்டீர்கள்? மதிப்பெண் வழங்கவா? நன்றி, நன்றி,” என்று கூறியுள்ளார் முதல்வர்.


Posted by Veliyoorkaran - - 27 comments and to comment




வைகோ இல்லாத தேர்தல் பிரசாரம் சைட் டிஷ் இல்லாத சரக்கு பார்ட்டி மாதிரி சப்புன்னு முடிஞ்சிருச்சு.. ஆயிரம் சொல்லு வாத்யாரே...வைகோ இருந்தா ஒரு கெத்துதான்யா..மனுசன இந்த சண்டாள சிறுக்கி என்ன நிலைமைக்கு ஆக்கிபுட்டா. சரி அத விடுங்க..நாம மேட்டருக்கு வருவோம்...! அந்த பொம்பளைய பத்திதான் எல்லாருக்கும் தெரியுமே...!

நாளைக்கு எலெக்சன்..யாருக்கு வோட்டு போட போறீங்கன்னு மொக்கதனமா கருத்து கணிப்பெல்லாம் கேக்கமாட்டேன்..நீ எந்த நாய்க்கு வேணா போடு..ஆனா, நான் உதயசூரியனுக்குதான் போடபோறேன்....!


நீயும் ஒரு நிமிஷம் யோசிச்சு பாரு..குஷ்பு புது ஜாக்கெட் போட்டுக்கிட்டு வந்து சொன்னுச்சு...வண்டுமுருகன் வடிவேலு விஜயகாந்தா நல்லா தமாசா கலாசுனாப்லையா..இதுகெல்லாம் வோட்டு போடாத...யாரு ஆட்சிக்கு வந்தா தமிழ்நாட்ல வளர்ச்சி நல்லாருக்கும்..உடனே கலைஞர் குடும்பத்தோட வளர்ச்சியான்னு பேக்காளிதனமா கேக்காத...எவன்யா குடும்ப அரசியல் பண்ணல..பார்லிமெண்ட்ல கலாவதி கலாவதிங்கற வார்த்தைய தவிர அடுத்த வார்த்தைய குளறாம பேச தெரியாத ராகுல் காந்திய ஏன் தேசிய தலைவரா காங்கிரஸ் கட்சி ஏத்துகிச்சு..சோனியா காந்தி என்ன உப்பு சத்யாகிரகத்துல   உள்ள போனவங்களா...?  ராஜீவ் காந்தி மவனும் பொண்டாட்டியும்கரத தவிர வேற என்ன தகுதி இருக்கு இவங்ககிட்ட...?


ஏன் சென்டருக்கு போற...ஸ்டேட்டுக்கு வா..ஜி கே வாசன் யாரு...? மூப்பனார் மவன்தான..? ராமதாஸ் தான் மவன மாடு மேய்க்கவா அனுப்புனாரு...? மினிஸ்டராதான ஆக்குனாரு..? அவ்ளோ தூரம் ஏன் போற..? ஜெயலலிதா யாரு...? எம்ஜிஆரோட ..சரி அத விடு..,விஜயகாந்த் மட்டும்தான் தனி ஆளா இருக்காருன்னு நெனைக்காத மச்சி..இருக்கற டேஞ்சர்லையே பெரிய டேஞ்சர் இவன்தான்..பிரேமலாதா அக்காவும் சுதீஷ் அத்தானும் தமிழ்நாட்ல ஆட்டம் போடறப்ப புரிஞ்சுபீங்க..வெளியூர்காரன் சொன்னது எவ்ளோ உண்மைன்னு..!


இங்க எல்லா பயலும் நாதாரிங்கதான்..எவனும் நல்லவன் கெடயாது...உனக்கு நல்லவனுக்கு வோட்டு போட சாயிசும் கெடயாது..இருக்குற மொள்ளமாரில ஒரு முடிச்சவிக்குக்கு நீ வோட்ட போடணும்..ஏய் இரு.. ஷாக் ஆவாத மச்சி..மேல படி..!


நான் என்ன சொல்றேன்..இன்னொரு தடவ ஜெயலலிதாவுக்கு வாய்ப்பு குடுத்தா அந்த அம்மா கலைஞர் க்ரூப்ப ஒளிச்சு கட்றதுக்கு ஒரு வருசத்த வேஸ்ட் பண்ணும்..அடுத்த வருஷம் அரசு கடுமையான நிதி நெருக்கடில இருக்கு.. முந்தைய திமுக ஆட்சிதான் இதுக்கு காரணம்னு சொல்லி இருக்கற நலத்திட்டங்கள் எல்லாத்தையும் புடுங்கிரும்..மூணாவது வருசத்துலேர்ந்து இவ்ளோ நாள் காய்ஞ்சதுக்கும் சேர்த்து சம்பாரிக்க ஆரம்பிச்சிரும்..அதுக்குள்ள அடுத்த வருஷம் வந்துரும் மறுபடியும் பழைய குருடி கதவ தொரடிதான்...!

விஜயகாந்த் அண்ணனுக்கு வாய்ப்பு குடுத்தா..அண்ணேன் இப்பதான் அரசியலுக்கு வந்துருக்காப்ள..நெறைய செலவு பண்ணிருக்காப்ள..அதெல்லாம் சேர்த்து சம்பாரிக்கனும்...அவரு கட்சிகாரங்கல்லாம் இனிமேதான் சம்பாரிக்கனும்..அவரு மச்சான் பொண்டாட்டி எல்லாரும் சம்பாரிக்கனும்..தவிர நாப்பது சீட்ட வெச்சுக்கிட்டு இவங்களால பெருசா ஒன்னும் நாக்க வழிச்சிற  முடியாது..ஏப்ரல் பதினாலாம் தேதி இவனுகள அம்மா செருப்பால அடிச்சு வெளில வெரட்டிரும்..அப்பறம் எங்கேந்து ஆட்சில பங்கு வகிக்கறது...இவனுக ஜெய்ச்சாலும் வேஸ்டுதான் ..அதனால இவனுகளுக்கு வோட்ட போட்டு உன் வோட்ட வேஸ்ட் பண்ணாத..!


தி மு க வ பொறுத்த வரைக்கும் வார்டு கவுன்சில்லர்லேர்ந்து மத்திய மந்திரி வரைக்கும் எல்லாரும் சம்பாரிசிட்டாணுக...சம்பாரிச்சதோட மட்டும் இல்ல..எதோ டைம் கெடைக்கறப்ப மக்களுக்கு ஒன்னு ரெண்டு நல்லதும் பண்ணிருக்காணுக... இந்த ஆட்சிலதான் தங்கம் மாதிரி ரோடு போட்ருகாணுக..ஒரு ரூபாய்க்கு அரிசி போட்டு தமிழ்நாட்லேர்ந்து பசிய ஒழிச்சிட்டாணுக.போன தேர்தல் அறிக்கைல சொல்லிருகர பெரும்பான்மையான வாக்குறுதிகள நிறைவேத்திருக்காங்க....!

அது மட்டும் இல்லாம  அடுத்த முதலமைச்சரா ஆகறதுக்கு திரு.ஸ்டாலின் அவர்களுக்கு எல்லா தகுதியும் இருக்கு...திரு.ஸ்டாலின் என்கிற ஒரு அரசியல் தலைவர் மேல ஜெயலலிதாவுக்கு கூட நல்ல மரியாதை இருக்குங்கறது எல்லாருக்குமே தெரியும்...துக்ளக் சோ வுக்கு புடிச்ச அரசியல்வாதி எனக்கு தெரிஞ்சு திரு.ஸ்டாலின் மட்டும்தான்..!


அதனால குஷ்பு வடிவேலு இவங்கலஎல்லாம் லெப்ட்ல விடு..கூத்தாடிங்க சொல்லி நாம் வோட்டு போடற அளவுக்கு நாம இன்னும் முட்டாள் ஆகல..உனக்கு எது கரெக்டுன்னு தோணுதோ அவங்களுக்கு வோட்டு போடு..!

என்னை கேட்டேன்னா  யோசிக்காம திமுகவுக்கு வோட்டு போட்ருனுதான் சொல்லுவேன்..!


ஏன்னா, யோசிச்சீனா உன்னால எவனுக்குமே வோட்டு போட முடியாது..!


ஆகையினால்        "வாக்களிப்பீர் உதயசூரியனுக்கே.."



(காங்கிரஸ் நிக்கற தொகுதில காங்கிரசுக்கு வோட்டு போடறதும் போடாததும் உன் இஷ்டம்...)


வெளியூர்க்காரன். 

Posted by Veliyoorkaran - - 35 comments and to comment


யானை தன் தலைல தானே மண்ணை வாரி போட்டுக்கும்னு கேள்விபட்ருக்கேன் ..ஆனா, மண்ணை மட்டும்ல இப்ப இருக்கற ஒரு யானை கல்லறையவே தனக்குதானே கட்டிக்கும்ங்கரத நேர்ல பார்த்துட்டேன்...வணக்கம் ஜெயலலிதா..நீங்க பன்னத பைத்தியகாரதனம்னு சொல்லி பைத்தியகாரங்கள கேவலபடுத்த நான் விரும்பல...அவங்க சில சமயமாச்சும் புத்திசாலித்தனமா நடந்துக்குவாங்க...! இப்டி லட்டு மாதிரி அமைஞ்ச கூட்டணிய கலைய விட்டுட்டு வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க மாட்டாங்க.. !

துக்ளக் சோ ராமசாமியோ , மைத்ரேயனோ, இல்ல நீங்க அன்னவுன்ஸ் பண்ணுங்க.கிரகம் நல்லாருக்கு...எல்லா தொகுதிலயும் அதிமுக கண்டிப்பா ஜெயக்குதுன்னு உங்களுக்கு அரசியல் ஆருடம் சொன்ன ஜோசியக்காரனோ வோட்டு போட போறதில்ல மேடம் உங்களுக்கு..மக்களும் உங்களையே நம்பிகிட்ருக்கற  தொண்டனும்தான்.. நேத்து வெச்சு அடிச்சீங்க பார்த்தீங்களா செருப்பால..தமிழ்நாட்ல இருக்கற ஒவ்வொரு அதிமுககாரனும் இப்ப என்ன பண்றதுன்னு தெரியாம மனசுக்குள்ள புளுங்கிகிட்டு செத்து போய் கெடக்குறான்.. அட விடுங்க..நீங்க என்னிக்கு தொன்டன பத்தியெல்லாம் கவலைபட்ருகீங்க..!

கூட்டணி கட்சிகளை நீங்க செருப்பால அடிக்கறதும் அவனுக கோச்சுகிட்டு போறதும், அடுத்த எலெக்சன்ல மறுபடியும் வந்து உங்க காலுல விழுகறதும் தமிழக அரசியல்ல மிக சாதாரணமான ஒரு நிகழ்வு..உங்க கோண புத்தி அதாங்கறது இங்க இருக்கற எல்லாருக்குமே தெரியும்..ஒரு கூட்டணிய கூட ஒழுங்கா நிர்வகிக்க தெரியாத ஒரு பொம்பள எப்புடி அரசாங்கத்த நிர்வகிக்க போறாங்கற கேள்விய கூட விட்டு தள்ளுங்க..,

உங்களையே நம்பி ஒரு மனுஷன் நீங்க செரமபடரபல்லாம் பக்கபலமா கூடவே இருந்தாரே..மேடைக்கு மேடை அன்பு சகோதரி அன்பு சகோதரின்னு உருகுனாரே...திரு வை.கோ...அவர மதிச்சிருக்க வேணாம்..மத்த கட்சிகள் எலேக்சனுக்காக மட்டும்தான் உங்களோட கூட்டு வெச்சுது...அவரு அப்டியா பண்ணாரு..,இதுதான் உங்களுக்கு தெரிஞ்ச அரசியல் நாகரீகமா...அவர் கேட்ட தொகுதிகள்ல பாதியாச்சும் குடுத்துருக்க வேணாம்..இதுதான் அஞ்சு வருஷம் உங்கள நம்பி தன்னோட அரசியல் வாழ்கைய தியாகம் பண்ணவருக்கு செய்ற நன்றி கடனா...?

உங்கள நம்புன அவருக்கே இந்த கதின்னா..உங்கள நம்புனா எங்க கதி...?

கேக்றேன்னு தப்பா நெனைச்சுகாதீங்க..,

பொம்பளையா நீ...?

வெளியூர்க்காரன்

Posted by Veliyoorkaran - - 16 comments and to comment




வெளியூர்க்காரனின் தன்னிகரில்லா தங்க தலைவர் திரு.கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் வெளியூர்க்காரனின் சொந்த ஊரான திருவாரூர் தொகுதியில் போட்டியிட போவதை அறிந்த திரு வெளியூர்க்காரன் அவர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போய் தன் பெயரை திருவாரூர்க்காரன் என மாற்றி அறிவித்துள்ளார்..தலைவருக்கு நேரடியாய் வாக்களிக்கபோவதை தன் பிறவிப் பயனாக கருதும் திருவாரூர்க்காரன் திமுகவை எதிர்த்து இத்தேர்தலை சந்திக்கும் எதிர்கட்சிகளுக்கு ஒரு பகிரங்க எச்சரிக்கை கடிதத்தை எழுதியுள்ளார்...அது பின்வருமாறு...,

@எல்லா எதிர்க்கட்சி பயலுக்கும்,

எலேய் எலெக்சன் ரிசல்ட் சொல்றேன் எழுதி வெச்சுக்க..திராவிட முன்னேற்ற  கழகம்  போட்டியிடற  நூத்தி பத்தொம்போது தொகுதில நூத்தி இருவது தொகுதில பெருவாரியான வாக்கு வித்யாசத்துல அமோகமா ஜெய்க்குது..இந்த தேர்தல்ல தமிழகத்தின் ஸ்டார் தொகுதிகளான திருவாரூர் (மாண்புமிகு தமிழக முதல்வரின் தொகுதி..) மற்றும் ஸ்ரீரங்கம் ( அதிமுக வை சேர்ந்த ஜெயலலிதா என்ற முன்னாள் கவர்ச்சி நடிகையின் தொகுதி..) இந்த இரண்டு தொகுதிகள்ளையும் அதிமுக டெபாசிட் வாங்கிட்டா வெளியூர்க்காரன் மொட்டை அடிச்சுக்கறான்...! அதிமுகங்கற கட்சி இந்த தேர்தலோட அழியுது..!

@விஜய்.

ஏண்டா அறிவு கெட்ட கெம்னாட்டி நாயே..யாரடா எதிர்த்து நிக்கற..எங்கள எதிர்த்து நின்னா என்ன ஆகும்னு காவலன் ரிலீஸ்லையே காமிச்சோம்ல.. மூடிகிட்டு இருக்க வேண்டியதுதான...என்னா தெனாவெட்டு இருந்தா என் தலைவனையே எதிர்த்து அதிமுகவோட கூட்டு சேருவ..இப்ப எழுதி வெச்சுக்கடி..மே பதிமூணு எலெக்சன் ரிசல்ட் வருது..நீ என்ன பண்ற மே பதினாலு கருக்கல்ல கெளம்பி சன் பிக்சர்ஸ் ஆபீஸ்க்கு வர்ற..வந்து போண்டா மணிய ஹீரோவா போட்டு கலைஞர் கதை வசனம் எழுத போற படத்துல நான் முழு மனதொட காமெடியன் ரோல் பண்றேன்னு எழுதி கையெழுத்து போட்டு குடுத்துட்டு போற..அந்த படத்துல நீ போண்டா மணிக்கு கால அமுக்கர மாதிரி சீன நெறைய வெச்சு நாங்க  எடுப்போம்..நீ நடிச்சு குடுக்கற.. அது மட்டும்ல..,

இன்னும் பத்து வருசத்துக்கு உன்ன எந்த ப்ரோடியுசரும் புக் பண்ண வரமாட்டான்..அப்டியே புக் பண்ணாலும் எந்த டைரக்டரும் உன்ன ஹீரோவா வெச்சு படத்த டைரக்ட் பண்ண மாட்டான்..உங்கப்பன வெச்சு நீனே உன் காசுல படம் எடுத்து முடிச்சாலும் அத ரிலீஸ் பண்ண தமிழ்நாட்ல ஒரு தியேட்டர் கூட கெடைக்காது..உனக்கும் உங்கப்பன் அந்த லோட்டா தலையனுக்கும் ஆப்பு எப்புடி எப்புடியெல்லாம் வெக்கரோம்னு எலெக்சன் முடிஞ்சோன்ன பாருடி..அந்த சாணி வாயன் எஸ்.ஏ.சந்து இனிமே படம் இல்ல..போட்டோ கூட தமிழ்நாட்ல எடுக்க கூடாது..எடுத்தா பொடா சட்டத்துல உள்ள தூக்கி போட்டு வாயிலையே மெதிப்போம்..ஏன் பேசிகிட்டு..எலெக்சன் முடியட்டும்..அப்பறம் இருக்குடி உனக்கு..!

@மதிமுக

வைகோ அண்ணேன்..என்ன அண்ணேன் இப்புடி ஆய்டுச்சு உங்க நிலைமை..ரொம்ப வருத்தமா இருக்குன்னேன்..ஒரு நேர்மையான அரசியல் தலைவருக்கு இந்த நிலைமை வந்துருக்க கூடாதுன்னேன்..உங்களுக்கு மிக பிரகாசமான அரசியல் எதிர்காலம் நம்ம கழகத்துல இருக்குன்னேன்..எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் நாஞ்சில் சம்பத்த கூட்டிகிட்டு  வந்துருங்க..! உங்களுக்காக திமுகவோட கொள்கை பரப்பு செயலாளர் பதவி காத்துகிட்ருக்கு..!     

@தேமுதிக 

ஹி ஹி ஹி ஹி ....கொள்கை கொள்கைன்னு வீர வசனம் பேசுனீங்க...அந்த பொம்பள காரிதுப்புனோன்ன வெளில வந்து மூணாவது அணின்னு போஜா காட்றீங்க..போங்க கருப்பு எம்சிஆரு சார்..நீங்க சரியான தமாசு...எப்போதும் போல நீங்க வோட்ட பிரிச்சிருங்க...மிச்சத்த நாங்க பார்த்துக்கறோம்..! அப்பறம் கேக்க மறந்துட்டேன்...இவ்ளோ நஞ்சு  போன  மூஞ்ச வெச்சுருக்கற  உங்கள யாரு சார் அரசியல்ல குதிக்க சொன்னா...ஹி ஹி ...பிரேமலதா அக்காவா...! பாவம் சார் அவங்க..!

@கம்மியூனிஸ்ட்

திருத்துறைபூண்டி வழக்கம் போல உங்களுக்குத்தான்...வேறென்னத்த சொல்ல..? போங்க போய் உண்டியல வெளக்கி எடுத்து வெச்சுக்கங்க..தேர்தல் வரபோகுது...!

@அதிமுக

அண்ணேன் நான் உன்ன ஒன்னும் சொல்லபோறதில்லன்னேன்..தமிழ்நாட்ல நான் பார்த்து பரிதாபபட்ற ஒரே கட்சி தொண்டன் நீ மட்டும்தான்னேன்...உன்ன என்ன சொல்லி தேத்தரதுன்னு கூட எனக்கு தெரியல அண்ணேன்.. உன் தொகுதி கேண்டிடேட்கிட்ட ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லு..பணத்த இந்த எலேக்சனுக்காக ரொம்ப செலவு பண்ணிற வேண்டாம்னு...இருக்கறத சேர்த்து வெச்சுகிட்டு நெலம் நகை நட்டு எதுனா வாங்கி போட சொல்லு..அவன் குடும்பமாச்சும் நல்லா இருக்கும்..நடக்க போற எலெக்சன்ல எப்டியாச்சும் ஜெய்ச்சிர்லாம்னு காச செலவு பண்ற அதிமுக வேட்பாளர விட ஒரு அடிமுட்டாள் உலகத்துலேயே இருக்க முடியாது..தமிழ்நாட்ல எலெக்சன் கமிசனும் போலிசும் லாரி லாரியா  புடிக்கற பணம் எல்லாம்  உங்க பணம்தான்னேன்..எங்க கட்சிகாரங்க அனுப்பற பணம் எல்லாம் போலிஸ் பாதுகாப்போட பத்திரமா போய்க்கிட்டுதான் இருக்கு..அதனால மனச போட்டு கொழப்பிக்காம போய் தயவு செஞ்சு தற்கொலை பண்ணிக்கன்னேன்..!

@மாண்புமிகு கலைஞர் மு கருணாநிதி

தலைவா நீ ஜெயிக்கிற தலைவா..திமுக வரபோற தேர்தல்ல எல்லா தொகுதிகள்ளையும் வரலாறு காணாத அளவுக்கு வெற்றி பெற போகுது ஆனா, உன்கிட்ட ஒரே ஒரு விஷயம் சொல்லணும்...,

காங்கிரஸ் அறுபத்தி மூணு எடத்துலயும் தோக்கனும் ..! 

“திருவாரூர்க்காரன்” 

Posted by Veliyoorkaran - - 38 comments and to comment




காலைல மணக்க மணக்க மல்லிப்பூ  இட்லி புதினா சட்னி..ஸ்டாலின் அண்ணன் வீட்லேர்ந்து...மதியத்துக்கு நண்டு கொழம்பும் கத்திரிக்காய் தொக்கும் அழகிரி அண்ணன் வீட்லேர்ந்து...ராத்திரிக்கு கெட்டி தயிர் சாதமும் மாவடும் தயாநிதி அண்ணன் வீட்லேர்ந்து...இப்டி டிசைன் டிசைனா விதவிதமா அறுசுவை உணவுகள் உங்க வீட்டுக்கு வந்து இறங்கும்...ராஜ மரியாதையோட...அதுவும் டெய்லி...பாசத்தோட வரும்...இருங்க மேடம் இதுக்கே வாய போளக்காதீங்க...இன்னும் நெறைய இருக்கு எங்க ஆபர் லெட்டர்ல...



அதுக்கு முன்னாடி நான் யாருன்னு சொல்லிக்கறேன்...வணக்கம்..நான் உங்க எதிர்க்கட்சிக்காரன்..ஆனா நீங்களும் என் தலைவரும் மெரினா பீச்ல உக்கார்ந்து குழந்தைகளாட்டம் கிச்சு கிச்சு தாம்பாளம் விளையாடிக்கிட்டே சந்தோசமா சிரிச்சு பேசிக்கனும்னு ஆசைபடற ஒரு எதிர்கட்சிக்காரன்..அந்த நிகழ்வ ஜெயா டிவியும் கலைஞர் டிவியும் ஒரே கேமரால வீடியோ எடுத்து பாதி பாதிய டெலிகாஸ்ட் பண்றத அறிவாலயத்துல உக்காந்து பார்க்கனும்னு ஆசைபடற ஒரு நல்ல மனசுக்காரன்...



அதோட முதல் படிதான் உங்களுக்கு இந்த ஆபர் லெட்டர்.... உங்களோட அரசியல் மறுமலர்ச்சிக்கு ஒரு மிகபெரிய வாய்ப்பாவும் திருப்பமாவும் இந்த லெட்டர் அமையப்போகுதுங்கரத வரலாறு சொல்லும்...



அதிமுகவுக்கு தமிழ்நாட்லயும் ,பிஜேபிக்கு இந்திய அரசியல்லயும் அரசியல் எதிர்காலம் இல்லைங்கறது தெள்ளதெளிவா என் பக்கத்துக்கு வீட்டு பாப்புக்கு கூட  தெரிஞ்சு போச்சு மேடம்... இதுக்கப்புறமும் நீங்க ஓ. பண்ணீர்செல்வத்த பொதுபணிதுறை அமைச்சராகிட்லாம்னு பகல் கனவு கண்டீங்கன்னா அது வடிகட்ன சசிகலாதனம்..அதனால சாட்சிக்காரன் கால புடிக்கறத விட சண்டைக்காரன் கால புடிக்கறத உத்தமம்னு உங்களுக்கு நான் சொல்ல வேண்டியது இல்ல..நீங்க படிச்சவங்க..மொள்ளமாரி எவனா இருந்தாலும் சரின்னு பாரபட்சம் இல்லாம அந்த உத்தமர் சங்கராச்சார்யாரையே புடிச்சு உள்ள தூக்கி போட்டு மிதிச்ச சூரப்புலி நீங்க...நல்லது கேட்டது உங்களுக்கு தெரியாதது இல்ல...



ஒரு திருவாருர்காறன சரிகட்ட இன்னொரு திருவாருர்காரனலதான் மேடம் முடியும்...மன்னார்குடிகாரங்கள லெப்ட்ல விடுங்க...அவங்க கத்துக்குட்டி அரசியல தப்புதப்பா சொல்லி குடுகறாங்கே உங்களுக்கு..அவங்க பேச்சை இனிமேயும் கேட்டீங்கன்னா மசால் வடை கூட சுட்டு வியாபாரம் பண்ண முடியாது தமிழ்நாட்ல...அதனால இன்னும் கொஞ்ச நாள் இந்த வெளியூர்க்காரன் சொல்ற பேச்சை கேளுங்க.... 



மொதல்ல இந்த வைகோவ கயட்டி விடுங்க.தனிப்பட்ட முறைல நான் நிறைய மரியாதை வெச்சுருக்கற அரசியல்வாதி அவரு...நல்ல பேச்சு தெறமை நல்ல மனிதர்...ஆனா ஒரு கட்சிக்கு தலைவங்கர முறைல அந்த மனுஷனுக்கு நாக்குல சனி...எழவு எத செஞ்சாலும் தரித்திரமா முடியும்..அவரு யாரோட கூட்டணி வெச்சாலும் அவங்க கொடநாட்டுக்கு போக வேண்டியதுதான்...நாங்க அவர எங்க கட்சிய விட்டு அனுப்பறதுக்கு எவ்ளோ தலைகீழ நின்னு தண்ணி குடிச்சோம்கறது எங்களுக்குத்தான் தெரியும்...சொந்த தொகுதிலையே தோத்து போன வெக்கம் கெட்ட மனுசன இன்னும் ஏன் கூட்டணில  வெச்சுருகீங்க..அத்து விடுங்க அவங்கே உறவை...இன்னிக்கே அன்னோன்ச்ஸ் பண்ணுங்க..சகோதரி கிகோதரின்னு எவனாச்சும் போயேஸ் கார்டன் பக்கம் வந்தா பிஞ்ச செருப்பாலேயே அடிப்பேன்னு அறிக்கைல சொல்லுங்க..நாஞ்சில் சம்பத்த மட்டும் கொஞ்சம் ஐஸ் வெச்சுக்கங்க...மதிமுக அவனுகளும் வளர மாட்டானுக..அடுத்தவனையும் வாழவிட மாட்டானுக..



அடுத்தது இந்த ராமதாசு..வைகோவாச்சும் மனுஷ கூட்டம்...இந்த ஆள் என்ன டைப்புன்னு இவருக்கே தெரியாது...ரெண்டு மினிஸ்டர் போஸ்ட்டும் ரெண்டு டாட்டா சுமோ காரும் குடுத்தா போதும்...இவரு டி.ராஜேந்தரோட லட்சிய திமுகல கூட போய் சந்தோசமா சேருவாறு..இந்த ஆளுக்குன்னு தனியா கொள்கை கோட்பாடு எதுவும் கெடயாது...இவரும் இவரு புள்ளையும் அரசியல் வியாபாரிங்க...தேசிய கட்சியா இருந்து போன எலெக்சன்ல மாநில கட்சியா ப்ரோமோசன் வாங்குன சூரப்புலிங்க..இவங்கேல ஏன் தலைவர் டீல் பண்ற மாதிரி டீல் பண்ணுங்க...அறுத்தும் விடாதீங்க தொடர்பும் வெச்சுகாதீங்க..அரசியல் வார்த்தைல சொல்லனும்னா இப்ப விட்ட மாதிரியே நட்டாத்துல மெய்ண்டைன்  பண்ணுங்க இவங்கேல...இப்போ உங்க கட்சியா நீங்க விட்டீங்கள்ள அந்த மாதிரி.கொழம்பி போய் அரசியல் அனாதை ஆய்டுவாங்கே..



கம்யுனிஸ்ட் கட்சிகள பத்தி பத்தி நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்ல..அவுட் ஆப் சிலபஸ் ஆன ஒரு சித்தாந்தத்த வெச்சுகிட்டு இன்னும் மக்களுக்கு நல்லது செஞ்சிரலாம்னு திராவிட கட்சிகள எதிர்த்து போராடிகிட்ருக்க பழைய காலத்து நல்லவங்க..பாட்டாளி வர்க்கம்..போராட பொறந்தவங்க....இந்தா மினிஸ்டர் போஸ்ட்...இத வெச்சுக்கிட்டு மக்களுக்கு எதாச்சும் நல்லது பண்ணுன்னு இவங்ககிட்ட கூப்டு குடுத்தீங்கன்னா...அத ஏத்துக்காம ரோட்ல மறுபடியும் போய் நின்னுகிட்டு நீ செஞ்சு குடு நான் மக்களோட நின்னு போராட்றேன்னு சொல்ற தியாகிங்க...ஏன்னா அவங்களுக்கு போராட மட்டும்தான் தெரியும்...ஆட்சி பண்ண தெரியாது...அவங்கள ஒன்னும் பண்ணாதீங்க ..அப்டியே விட்ருங்க...கத்திட்டு போகட்டும்....



டிஎம்டிகே...என் தலைவர் வாழ்க்கைளையே பண்ண ஒரே தப்பு விஜயகாந்தோட கேள்விகளுக்கு முரசொலில பதில் சொன்னது....அதும் அரை பக்கத்துக்கு...எங்கள அறியாம நாங்க வளர்த்து விட்ட கள்ளி செடி இது...இத நாங்க பார்த்துக்கறோம்..இத இப்டியே விட்டா ஒவ்வொரு எலேக்சன்லையும் உள்ள பூந்து வோட்ட பிரிச்சு கொழப்பிகிட்டு இருக்கும்..கூடிய சீக்கிரம் இத முடிச்சிருவோம்...அதனால இத பத்தி நீங்க கவலைபடாதீங்க...ஆப்பு ரெடி பண்ணிகிற்றுக்கோம் கூடிய சீக்கிரம் சொருகிடுவோம்....



காங்கிரஸ் பொறுத்த வரைக்கும் சோனியா காந்தி இந்தியர் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை அப்டீன்னு மட்டும் அறிவிங்க...அதுக்கு மேல எந்த பெர்பார்மன்சும் பண்ண முயற்சி பண்ண வேண்டாம்...அதுக்கெல்லாம் நாங்க இருக்கோம்...நீங்க நான் சொல்றத மட்டும் செய்ங்க...கடுகளவு கூட எக்ஸ்ட்ரா பெர்பார்மன்ஸ் பண்ணக்கூடாது...



சரத்குமாரோட சமுக, டி.ராஜெந்தரோட லதிமுக அப்பறம் கார்த்திக்கோட கட்சி  இதெல்லாம் பத்தி நான் உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்ல...டாயிலெட் பேப்பர என்ன பண்ணனும்னு உங்களுக்கே தெரியும்...



இது எல்லாம் முடிஞ்சோன்ன சசிகலா இனிமே என் சகோதரி இல்லைன்னு மீடியாவ கூப்டு கண்ணீரோட அறிவிச்சுடுங்க..கடைசியா ஒரு புன்னாக்குக்கும்  உதவாத உங்க கட்சியா கலைச்சிட்டு அண்ணா அறிவாலயம் வந்து என் தலைவர் முன்னிலைல மிச்சம் இருக்கற உங்க கட்சிகாரங்களோட திமுகல சேருங்க.....



அடுத்த நாளே ஓ பண்ணீர்செல்வத்த ஜே.கே.ரித்திஸ்க்கு துணை மந்திரி ஆக்கறோம்...ஓ எஸ் மணியன ஸ்டாலினோட பயண திட்டங்கள தயார் பண்ற சிறப்பு மேலாளர நியமிக்கறோம்....எஸ் எஸ் சந்திரன மு க அழகிரி அண்ணன் வீட்டுக்கு வாரம் ஒரு தடவை போய் அவரு பேர புள்ளைங்க முன்னாடி நின்னு ஸ்டான்ட் அப் காமெடி பண்ணி சிரிக்க வெக்கற அரசவை விகடகவிங்கற ஒரு புது பதவில உக்கார வெச்சு அழகு பார்க்கறோம்..செம்மலைய   துரைமுருகன் போற எடத்துக்கெல்லாம் கூடவே துண்டு எடுத்துட்டு போற துண்டுதாங்கிங்கற பதவிய அளிக்கறோம்..(உங்க காலுல மட்டும் அந்த ஆள் விழலாம்...எங்களுக்கு துண்டு தூக்க கூடாதா....)..சேகர் பாபுவ,பரிதி இளம்வழுதி அண்ணன்கிட்ட ஜுராசிக் பார்க்ல டைனோசருக்கு சாப்பாடா மாட்ட ஏறக்கர மாதிரி அப்டியே துண்டா ஒப்படைக்கறோம்...பரிதி அண்ணனுக்கு என்ன புடிக்குதோ  அத அவரு செஞ்சிக்கட்டும்...பயபடாதீங்க வீட்டு வேலையெல்லாம் குடுக்க மாட்டாரு..என்ன டென்சன் ஆனா பொளேர் பொளேர்னு அடிச்சு தான் கோவத்த தீத்துக்குவாறு அவ்ளோதான்...(வெளிநடப்பாடா   பண்றீங்க சட்டமன்றத்துல .என் தலைவன் பேசும்போது...எதிர்த்து சவுண்ட் குடுத்த அன்னிக்கே உங்க வாய கிழிச்சு  விட்ருக்கனும்டா....)



அது மட்டும் இல்லாம அதிமுகவோட அடிமட்ட தொண்டர்களுக்கு ஒரு சிறப்பு பரிசு காத்துகிட்ருக்கு .நீங்க எங்க கழகத்துல இணைஞ்ச அடுத்த நாள் தமிழகம் பூரா இருக்கற அனைத்து ரெத்தத்தின் ரெத்தங்களையும் அந்தந்த பகுதில இருக்கற திமுக அமைப்பு செயலாளர்களோட வீட்டுக்கு போய் ரேசன் கார்ட சரண்டர் பண்ணிட்டு வெத்து பத்திரத்துல கையெழுத்து போட்டு கொடுத்துட்டு ஆளுக்கொரு வேஷ்டியும் துண்டும் இலவசமா வாங்கிட்டு போக சொல்லுங்க...இதுக்கு மேல என்ன மரியாதை வேணும் உங்க தொண்டர்களுக்கு..



அப்பறம் ஜெயா டிவில இருக்கற எல்லா கேமரா லொட்டு லொசுக்கு எல்லாத்தையும் கத்திபாரா பாலத்துக்கு கீழ போட்டு கேரசீன் ஊத்தி கொளுத்திட்டு  ரபி பெர்னார்ட் தலைமைல அறிவாலயத்துக்கு டெய்லி விடியகாலைல வந்து வயத்துல ஈர துணிய கட்டிக்கிட்டு பாவமா நிக்க சொல்லுங்க...கூடிய சீக்கிரம் பணி வழங்க ஆவண செய்றோம்... 



கடைசியா மிச்சம் இருக்கறது நீங்க மட்டும்தான்...இந்திய அளவுல புகழ் பெற்ற ஒரு தேசிய தலைவர்ங்கரத விட்டு தள்ளுங்க...ஒரு வயசானவர  நாகரீகமா எப்டி நடத்தனும்கறது கூட தெரியாம அடிச்சு இழுத்துட்டு போய் ஜெயில்ல அடைச்சு அநாகரீகமா அரசியல் பண்ண ஒரே அரசியல் தலைவர் நீங்க மட்டும்தாங்கறது உலகத்துக்கே தெரியும்...வருசமான மறக்கறதுக்கு இதென்ன கேர்ள் பிரெண்டோட மொபைல் நம்பரா மேடம்..ரணம் .எல்லா திமுககாரன் மனசுலயும் ஆழமா பதிஞ்சிருக்கற ரணம்.ஜூன் 30 அன்னிக்கு எத்தன பேர் வீட்ல டிவி உடைஞ்சதுன்னு உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லைதான்.....எங்களுக்கு இத மனசுலையே வெச்சுகிட்டு நேரம் அமையரப்ப பழிவாங்கற பழக்கமெல்லாம் கெடயாது...நாங்க அண்ணாவோட வாரிசுங்க...



ஆனா பாருங்க இப்பன்னு பார்த்து உங்களுக்கு குடுக்கறதுக்கு எந்த பதவியும் காலியா இல்ல மேடம்...ஏன்னா இது பாரம்பரியம் மிக்க பெரிய கட்சி..யாரையும் ஏமாத்தி புடுங்குன கட்சி இல்ல..கலைஞரும் அண்ணாவும் ரெத்தம் சிந்தி வளர்த்த கட்சி.இங்க இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைவர்களே எக்கச்சக்கம் பேரு இருக்காங்க...முதலமைச்சர் வேட்பாளர்களே மூணு பேர் இருக்காங்க...அது மட்டும் இல்லாம கட்சில சேர்ந்த உடனே பெரிய பதவி கெடைக்கறதுக்கு இது உங்க கட்சி மாதிரி கெடயாது...கேப்ல போஸ்டிங் வாங்க முடியாது...அதனால சீர்காழி பக்கத்துல ஒரு கிராமத்துல பஞ்சாயத் போர்டு தலைவி பதவி நிரப்பபடாம இருக்கு..அத வேணா நான் வாங்கி தரேன்...நீங்க நிரப்புங்க..அவ்ளோ பெரிய பொறுப்ப உங்களுக்கு குடுக்க கட்சி பொதுக்குழு ஒத்துகாதுதான்..ஆனா நான் எப்டியாச்சும் பேசி உங்க முன் அனுபவத்த எல்லாம் சொல்லி போராடி வாங்கி குடுக்கறேன்...மக்களுக்காக களப்பணி ஆற்றுங்க...என்ன சொல்றீங்க...தலைவர்கிட்ட பேசவா....?



(இந்த லெட்டர எந்த அட்ரசுக்கு அனுப்பறதுன்னு தெரில மேடம்..ஏன்னா நீங்க இப்போ எங்க இருக்கீங்கன்னு உங்க ரெத்தத்தின் ரெத்தங்களுக்கே தெரில. .... அதனால இத நகலெடுத்து கோடநாடுக்கு ஒன்னு..தோட்டத்துக்கு ஒன்னு,ராயபேட்டா ஆபிஸ்க்கு ஒன்னு,ஹைதராபாத்க்கு ஒன்னு,உங்க சொந்த ஊருக்கு ஒன்னுன்னு அனுப்பி வெக்கறேன்..எங்க இருக்கீங்களோ அங்க பிரிச்சு படிச்சு பாருங்க...பட்,சீக்கிரம் பதில சொல்லுங்க..எலெக்சன் வர போகுது எங்களுக்கு நிறைய வேலை கெடக்கு...இன்னும் ரெண்டு மூணு கட்சியா வேற கலைக்கனும்....)



வெளியூர்க்காரன்


Posted by Veliyoorkaran - - 32 comments and to comment


பங்காளியலா பாட்டையெல்லாம் கேட்டேன்...அடுத்த ஆட்சி நம்மலோடதுதான்...

சிரிகாதன்னேன்...நெசமாத்தான் சொல்றேன்...அஞ்சு நாலா 396 தடவ பாட்ட கேட்டேன்...கண்டிப்பா நம்ம ஆட்சிய புடிக்கறோம்...பாட்டெல்லாம் அப்டி ஒரு ஹிட்டு...


ஒரு முக்கியமான விஷயம்...புலி உருமுன உருமுல மண்ட கிறுகிறுத்து போய் அவனுகள சிக்குன எடத்லயெல்லாம் வெச்சி செதைச்சு வெச்சிருக்கோம்...(டீ கடைலேர்ந்து ஆர்குட் வரைக்கும்...).பயலுக செம காண்டுல இருக்கானுவோ...வேட்டைக்காரன் மட்டும் ஊத்திகிச்சு நம்மளால மானம் ரோசத்தோட தல நிமிர்ந்து வாழ முடியாது..அவங்கே தல நிமிர்ந்திடும்...அவேங்கள பத்தி உனக்கே தெரியும்...நம்மள மாதிரி சும்மா வீம்புக்கு சலம்பமாட்டாங்கே..நாலு வார்த்தைதான் கேப்பாங்கே..அதுக்கே நாக்கு,சிறுகுடல்,பெருகுடல்,கல்லீரல்,கிட்னி எல்லாத்தையும் புடுங்கிகிட்டு சாவலாமான்னு தோணும்...


இப்டித்தான்,வில்லு படம் ரிலீஸ் ஆன அன்னிக்கு நாங்க பண்ண சலம்பள்ள தேவி தியேட்டரே மேரண்டுச்சு...ஆனா,படம் முடிஞ்சோன்ன அவங்கேள்ள ஒருத்தன் என்ட்ட வந்து படம் சூப்பர் பிரதர்னு சொல்லிட்டு நக்கல சிரிச்சிட்டு போனான்...எனக்கு எவ்ளோ அவமானமா இருந்துருக்கும்னு உனக்கே தெரியும்...ஆனா, நான் அவன விடலையே...கன்னாபின்னானு கத்தி அஞ்சு ஆறு பஞ்ச் டயலாக் அடிச்சிட்டு வீட்டுக்கு ஓடீ..ட்டேன்...வீட்டுக்கு போய் எங்கப்பா மடில படுத்து தேம்பி தேம்பி அழுதப்பரம்தான் என் மனசு சரியானுச்சு...நான் அப்டியே விஜய் மாதிரி பங்காளி..(என்ட்ட நக்கல் விட்டவன் அப்பவே போய்ட்டான்..அத கன்பார்ம் பண்ணிகிட்டுதான் நான் சௌண்டே குடுத்தேன்..)


இது கூட பரவால்ல...ஆதி படம் வந்தப்ப தியேட்டர் வாசல்லையே என்ன முட்டி போட வெச்சு தலைலேயே அடிச்சாங்கே என் பிரண்ட்செல்லாம்...அப்ப கூட நான் விஜய் வாழ்கன்னுதான் கத்துனேன் பார்த்துக்க...ஏன் எனக்கு இவ்ளோ பாசம்னு கேக்கறியா..நீங்கல்லாம் வேலை தேடித்தான் மெட்ராஸ்க்கு வருவீங்க...ஆனா நான் விஜய பார்க்கத்தான் வந்தேன்...விஜய்,மீரா ஜாஸ்மின்,பெப்சி உமா,இவங்க மூணு பேரையும் பார்த்துட்டேன்னு வெச்சுக்க, அடுத்த பஸ்ஸ புடிச்சு ஊருக்கு போய் வெவசாயம் பண்ணி பொளைசுகுவேன்..நாங்கல்லாம் விஜய்க்காக உயிரை குடுக்கற கூட்டம்..


சரி நான் மேட்டர்க்கு வர்றேன்...உனக்கு தெரியாததுள்ள...அவேங்களுக்கு அடுத்தது அசல் வருது...சரண் படம் எப்டி இருக்கும்னு உனக்கே தெரியும்...கண்டிப்பா ஓடிரும்...வேட்டைக்காரன் மட்டும் ஊத்திகிச்சுன்னு வெச்சுக்க,அவங்கே நம்மள நச்சிடுவாங்கே...அதனால வழக்கம் போல படத்த நம்மலே ஓட்டிரலாம்...எங்க ஊர்ல டெய்லி அம்பது டிக்கெட் எடுத்து ஏழைங்களுக்கு இலவசமா குடுக்க சொல்லி பசங்களுக்கு பணம் அனுப்பிட்டேன்...அது இல்லாம இந்த படம் நல்லா ஓடிச்சுன்னா காளியம்மன் கோவில்ல எங்கப்பாவுக்கு மொட்ட அடிக்கறேன்னு வேற வேண்டிருக்கேன்...ஏன்னு கேளு,படம் மட்டும் நல்லால்ல...,விஜய உன்னாலயும் என்னாலையும் ஒன்னியும் பண்ண முடியாது...ஆனா, நம்ம இவனுகள்ட்ட வாழனுமா இல்லையா...அதும் எங்க ஊர்ல ரொம்ப பேசுவாங்கேண்ணன்...



உருமுன புலிக்கு,ரிலீஸ்க்கு அப்பறம் ஜுரம் வராம இருக்கணும்...
என்ன பண்ணி வெச்சுருகாங்கேன்னு பார்ப்போம்...


வெளியூர்க்காரன்