- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 33 comments and to comment


பங்காளியலா பாட்டையெல்லாம் கேட்டேன்...அடுத்த ஆட்சி நம்மலோடதுதான்...

சிரிகாதன்னேன்...நெசமாத்தான் சொல்றேன்...அஞ்சு நாலா 396 தடவ பாட்ட கேட்டேன்...கண்டிப்பா நம்ம ஆட்சிய புடிக்கறோம்...பாட்டெல்லாம் அப்டி ஒரு ஹிட்டு...


ஒரு முக்கியமான விஷயம்...புலி உருமுன உருமுல மண்ட கிறுகிறுத்து போய் அவனுகள சிக்குன எடத்லயெல்லாம் வெச்சி செதைச்சு வெச்சிருக்கோம்...(டீ கடைலேர்ந்து ஆர்குட் வரைக்கும்...).பயலுக செம காண்டுல இருக்கானுவோ...வேட்டைக்காரன் மட்டும் ஊத்திகிச்சு நம்மளால மானம் ரோசத்தோட தல நிமிர்ந்து வாழ முடியாது..அவங்கே தல நிமிர்ந்திடும்...அவேங்கள பத்தி உனக்கே தெரியும்...நம்மள மாதிரி சும்மா வீம்புக்கு சலம்பமாட்டாங்கே..நாலு வார்த்தைதான் கேப்பாங்கே..அதுக்கே நாக்கு,சிறுகுடல்,பெருகுடல்,கல்லீரல்,கிட்னி எல்லாத்தையும் புடுங்கிகிட்டு சாவலாமான்னு தோணும்...


இப்டித்தான்,வில்லு படம் ரிலீஸ் ஆன அன்னிக்கு நாங்க பண்ண சலம்பள்ள தேவி தியேட்டரே மேரண்டுச்சு...ஆனா,படம் முடிஞ்சோன்ன அவங்கேள்ள ஒருத்தன் என்ட்ட வந்து படம் சூப்பர் பிரதர்னு சொல்லிட்டு நக்கல சிரிச்சிட்டு போனான்...எனக்கு எவ்ளோ அவமானமா இருந்துருக்கும்னு உனக்கே தெரியும்...ஆனா, நான் அவன விடலையே...கன்னாபின்னானு கத்தி அஞ்சு ஆறு பஞ்ச் டயலாக் அடிச்சிட்டு வீட்டுக்கு ஓடீ..ட்டேன்...வீட்டுக்கு போய் எங்கப்பா மடில படுத்து தேம்பி தேம்பி அழுதப்பரம்தான் என் மனசு சரியானுச்சு...நான் அப்டியே விஜய் மாதிரி பங்காளி..(என்ட்ட நக்கல் விட்டவன் அப்பவே போய்ட்டான்..அத கன்பார்ம் பண்ணிகிட்டுதான் நான் சௌண்டே குடுத்தேன்..)


இது கூட பரவால்ல...ஆதி படம் வந்தப்ப தியேட்டர் வாசல்லையே என்ன முட்டி போட வெச்சு தலைலேயே அடிச்சாங்கே என் பிரண்ட்செல்லாம்...அப்ப கூட நான் விஜய் வாழ்கன்னுதான் கத்துனேன் பார்த்துக்க...ஏன் எனக்கு இவ்ளோ பாசம்னு கேக்கறியா..நீங்கல்லாம் வேலை தேடித்தான் மெட்ராஸ்க்கு வருவீங்க...ஆனா நான் விஜய பார்க்கத்தான் வந்தேன்...விஜய்,மீரா ஜாஸ்மின்,பெப்சி உமா,இவங்க மூணு பேரையும் பார்த்துட்டேன்னு வெச்சுக்க, அடுத்த பஸ்ஸ புடிச்சு ஊருக்கு போய் வெவசாயம் பண்ணி பொளைசுகுவேன்..நாங்கல்லாம் விஜய்க்காக உயிரை குடுக்கற கூட்டம்..


சரி நான் மேட்டர்க்கு வர்றேன்...உனக்கு தெரியாததுள்ள...அவேங்களுக்கு அடுத்தது அசல் வருது...சரண் படம் எப்டி இருக்கும்னு உனக்கே தெரியும்...கண்டிப்பா ஓடிரும்...வேட்டைக்காரன் மட்டும் ஊத்திகிச்சுன்னு வெச்சுக்க,அவங்கே நம்மள நச்சிடுவாங்கே...அதனால வழக்கம் போல படத்த நம்மலே ஓட்டிரலாம்...எங்க ஊர்ல டெய்லி அம்பது டிக்கெட் எடுத்து ஏழைங்களுக்கு இலவசமா குடுக்க சொல்லி பசங்களுக்கு பணம் அனுப்பிட்டேன்...அது இல்லாம இந்த படம் நல்லா ஓடிச்சுன்னா காளியம்மன் கோவில்ல எங்கப்பாவுக்கு மொட்ட அடிக்கறேன்னு வேற வேண்டிருக்கேன்...ஏன்னு கேளு,படம் மட்டும் நல்லால்ல...,விஜய உன்னாலயும் என்னாலையும் ஒன்னியும் பண்ண முடியாது...ஆனா, நம்ம இவனுகள்ட்ட வாழனுமா இல்லையா...அதும் எங்க ஊர்ல ரொம்ப பேசுவாங்கேண்ணன்...உருமுன புலிக்கு,ரிலீஸ்க்கு அப்பறம் ஜுரம் வராம இருக்கணும்...
என்ன பண்ணி வெச்சுருகாங்கேன்னு பார்ப்போம்...


வெளியூர்க்காரன்

33 Responses so far.

 1. //.விஜய்,மீரா ஜாஸ்மின்,பெப்சி உமா,இவங்க மூணு பேரையும் பார்த்துட்டேன்னு வெச்சுக்க, அடுத்த பஸ்ஸ புடிச்சு ஊருக்கு போய் வெவசாயம் பண்ணி பொளைசுகுவேன்.//

  மாப்ள இவ்ளோ காமெடி தாங்காதுய்யா பதிவுலகம்...

 2. //அது இல்லாம இந்த படம் நல்லா ஓடிச்சுன்னா காளியம்மன் கோவில்ல எங்கப்பாவுக்கு மொட்ட அடிக்கறேன்னு வேற வேண்டிருக்கேன்//

  தலைவா உங்கப்பா முடி நிச்சயம் தப்பிச்சிரும்........பயப்படாதீங்க....

 3. கலக்குங்க தலைவா...........!

 4. பிரியமுடன் வசந்த்//,புலவன் புலிகேசி..//..ஊடகன்//

  யோவ்..என்னையா எல்லாரும் காமெடி பண்றீங்க..!..படம் அவுட் ஆனா சங்கு ஊதிடிவாங்கேடி...!நானே பயந்து போய் கெடக்கேன்...பிரச்சனை புரியாம...ச.மு.க எதிர்காலமே வேட்டைகாரன்கிட்டதாண்டி இருக்கு...!

 5. உங்கப்பா முடி தப்ப வாழ்த்துக்கள்

 6. என்னங்க நீங்க...நாங்க விஜய்க்காக எங்க உயிரையே குடுப்போம்...இத்துனூண்டு மயிர குடுக்க மாட்டமா..போனா போயட்டுபோகுதுங்க...எங்கப்பா முடிதான...(சின்ன வயசுல என்ன கேக்காம எத்தன தடவ எனக்கு மொட்ட அடிசிருகாங்கே,கோவில் பேர சொல்லி..இப்போ குடுக்கட்டும் என் தலைவனுக்காக....)

 7. மச்சி...வேட்டைக்காரன் பன்ச் டயலாக் என்ன தெரியுமா..." நான் ஒரு தடவ கட்சி ஆரம்பிச்சுட்டேன்னா என் கட்சிக்கு நானே ஓட்டுப் போட மாட்டேன்."

 8. மச்சி ரேட்டைவால்சுக்கு அடுத்த டாபிக் கேடைசிடுச்சு...த்தா... விஜய் சிக்கி செதயராண்டா....சாவடிச்சர்லாம் வா நீ....இன்னிக்கு நைட் எழுதறோம்....

 9. சாமி..தாங்கல..சிரிச்சு...:))

 10. இதற்குப் பெயர் தான் நவீன வஞ்சப் புகழ்ச்சியோ ?..........


  இன்னா தல பேசற எத்தன படத்த ஓட்டுறோம் இத ஓட்ட மாட்டோமா ?...வருங்கால அமெரிக்க ஜனாதிபதி டாக்டர் விஜய் வாழ்க ....

 11. vivek says:

  nee nallavanaa???kettavanaa???

 12. vivek says:

  "Dr.Ayya"(VIJAY THANN) will meet obama next week after completing a 'kutthu' dance with anuska in america.He will be the nxt president of USA...

 13. உங்கள் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட , உங்கள் தளத்துக்கு வரும் வாசகர்களுக்கு நீங்கள் கடைசியாக எழுதிய ஐந்து பதிவுகளை சிறு படங்களாக வலது அல்லது இடது பக்கத்தில் இடம்பெறச் செய்ய இந்த gadaget ஐ இணையுங்கள்
  gadget ஐ பெற இங்கே செல்லவும்

  tamil10 .com சார்பாக
  தமிழினி
  நன்றி

 14. Anonymous says:

  hehehe, sirichu vairu nokuthaiya, rettaivaals punch dialog super hahaha, keep it up guys. vijay cinema parkiratha vida inka comments read panurathee nalla iruku hehe

 15. இவன்//பின்னோக்கி//அப்பாவி தமிழன்//vivek//Anonymous///
  என்ன மச்சி இதுக்கே இவ்ளோ குஷி ஆகரீங்க....அடுத்தது பாருங்க....ஒரு மூட்டபூச்சிக்கு மருந்தடிக்க போறோம்..என்ஜாய்.....!

 16. தமிழினி///
  யாருப்பா இந்த பிகர் தமிழினி...கண்ணு சோக்கா கீதுப்பா...நம்பல லவ் பண்ணுதுன்னு நெனைக்கறேன்...அடிக்கடி வந்து மெசேஜ் குடுத்து நூல் விட்ராப்டி...

 17. vivek said...
  nee nallavanaa???kettavanaa???
  Oct 8, 2009 1:31:00 AM//
  விவேக் சார்..
  நான் "அசல்" நல்லவன்...சத்தியமா "கெட்டவன்" கெடயாது..

 18. ilaya thollaipathi nadigar thilagam vijay valga

 19. உங்களுக்கெல்லாம் உண்மையிலேயே மானம், ரோசம், சூடு, சொரணை இருந்திருந்தா, ஆதி வந்த அன்னைக்கே நாண்டுக்கிட்ட செத்துருக்கணும். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கிற நீங்க (தளபதியோட விசிறிங்க) உண்மையிலேயே ரொம்ப நல்லவிங்ககககககககககககக...

 20. வான்முகிலன்... எங்களுக்கு மானம் சூடு சொரண இதெல்லாம் இல்லைதான்...உலக மெண்டல்னு கூட வெச்சுக்கலாம்.ஆனா அத நாங்கதான் சொல்லணும்..நீங்க சொல்லக்கூடாது..ஏன்னா நாங்க விஜய் ரசிகர்கள்....விஜய் வாழ்க...விஜய் ரசிகர்கள் வாழ்க.....(டேய் என்னடா ஒருத்தனும் சண்டைக்கு வரமட்டேன்கறீங்க....விஜய் ரசிகர்கள் ஒருத்தன் கூடவாடா இல்ல..."தலை"ய பத்தி ஒரு வரி எழுதி பாருங்கடா...ங்கொய்யால ...சங்க அருத்துருவோம்.....)

 21. Anonymous says:

  magane sethadaa nee.....pasanga ellartayum solli unna gaali panran iru....

 22. சைலென்ஸ்...பெசிற்றுகேன்ள...!.(இப்ப தல முடிய கோதிக்கறேன்..) வாடி வாடி சோடி போட்டு பார்ப்போம்..சோடி...."கில்லியா","தலையா",ன்னு பார்த்துடுவோம் வா...மச்சி, இது என்ன பிரஸ் மீட்டா பஞ்ச் டயலாக் அடிக்க...உன் பிரண்ட்ஸ் எல்லாத்தையும் கூட்டிட்டு வாடி செல்லம்...இது சும்மா ட்ரைலர்தான்.வேட்டைக்காரன் விமர்சனம்லாம் எழுதி வெச்சாச்சு.படம் எப்டி இருந்தாலும் போஸ்ட் மார்டம்தாண்டி.இதோட கொல்ரோம் ..ராகுல் காந்திய பார்த்தா பேசறீங்க...இனிமே ரித்திஷ் கூட மதிக்காத அளவுக்கு பண்றோம் வெயிட் செய்யண்டி...

 23. vasu says:

  appa enna da vijay patti entht messagu illa yenu patthe.

 24. vasu says:

  ASSAL sarano padam..

  Sarana patti namaku ellarukum theriyum

  Alli arguna-- super hit (Even AR is music director)

  JJ -- Mega hit.

  vattaram.. and Mothi vilaiyadu-- still running in theatre.

  so definetly Aasal will be very big..


  so dont worry about vettaikaran.. it willbe better than aasal..

 25. வாசு மச்சி...நீ ரொம்ப லாஜிக்கா பேசற.....என் அவனுக சைடுல இருக்க...தல சைடு வந்துடு மாமேய்..உன் சேவை எங்களுக்கு தேவை....உன்ன ராஜா மாதிரி நாங்க பார்த்துக்கறோம்...!(நாங்க ஹிஸ்டரி தெரிஞ்ச புத்திசாலிங்கள எதிர்கட்சில விடமாட்டோம்..)

 26. amalan says:

  thala pavam thoppaiya valthuttu erukkar. saran padam mothivilaiyadu oothiduchu theriyumla?
  agen pada still asala vida alaga than vanthuchu, vantha vegathula oodi pogala? kavalapadatha naama kalakkurom...

 27. Rajkumar says:

  Dear Mr.வெளியூர்க்காரன்

  Just now I finished reading all your two month's posts. All are very much entertaining. The way you expressing the disappointments...vijay...karunanithi...tamil film..ect are beautiful. Also the posts regarding marriage...dream girl(s) are very touching (heart.ta thaan)
  I appreciate the simple way of writing (I am not seeing PISTHU type wordings....After http://www.boochandi.com/...http://jackiesekar.blogspot.com/...I enjoyed your blog very much.
  Keep writing so that we keep laughing.

 28. Rajkumar said...///
  ஏன்னே தெரில உங்கள எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு ராஜ்குமார்...ரொம்ப நன்றிங்க...எல்லாத்துக்கும்...அடிக்கடி பார்ப்போம்..வணக்கம்..

 29. eela mangai!!! says:

  you bunch of dogs!! why you guys are so crazy about movie stars? what did they do to you people? all they're doing is acting in a movie to earn money. They're just doing their jobs to provide their family. they don't care about you or your family. I can't understand why some ppl are praising them like they're gods and goddess. come on guys they're just a human being just like me and you. STOP WASTING YOUR TIME AND MONEY ON THEM!!! think about your future and your family...

 30. eela mangai!!! said..////
  மாங்கா மேடம்...நீங்க மாங்கான்னு நிருபிச்சிடீங்க மாங்கா மேடம்..நீங்க சொன்ன அதே நோன்னையத்தான் நாங்களும் சொல்லிருக்கோம்..போங்க...போய் மறுபடியும் படிச்சு பாருங்க....அட்வைஸ் பண்றது தப்பில்ல ஒய்...பார்த்து பதறாம பண்ணனும்..

 31. மங்கைய மாங்கான்னு தப்பா படிச்சிட்டேன் மங்கை மேடம்...(இதுக்கு பேருதான் அரசியல்..நல்லா சொல்லவேண்டியதெல்லாம் சொல்லிட்டு ஜகா வாங்கறது.....)

 32. "சரண் படம் எப்டி இருக்கும்னு உனக்கே தெரியும்...கண்டிப்பா ஓடிரும்.."  தியேட்டரை விட்டு தியேட்டர் தானே

 33. மச்சி அடுத்தது அஜித்தா...அப்போ பாரபட்சம் இல்லாம போடரமா...பாவம்டா அவன்...!