- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 11 comments and to comment

கொடுமைலையே கொடுமையான கொடுமை,இந்த பிரிவு மச்சி...


என் கதைய கேளேன்...இந்த கொடும என்ன எப்டியெல்லாம் கொடுமைபடுத்திருக்குன்னு.

எங்கம்மா...எனக்கு அவங்கள அவ்ளோ புடிக்கும் மச்சி...
அஞ்சு வயசுல படிக்க போன்னு சொல்லி என்னை எங்கம்மாகிட்டேர்ந்து பிரிச்சிது...
எட்டு வயசுல,விளையாண்டது போதும் போய் படின்னு விளையாட்டா சொல்லி,விளையாட்டை பிரிச்சிது.

உனக்கு விஜிய தெரியுமா..ப்ச்..உனகேப்டி தெரியும்..நானே சொல்றேன்..
அவ்ளோ நல்ல பொண்ணு மச்சி அவ..என் பக்கத்துக்கு வீட்டு குட்டி தேவதை.
ஹோம் வொர்க்லாம் பண்ணி குடுப்பா.என்ன கல்யாணம் பண்ணிகறேன்னு சத்தியம் கூட பண்ணிருக்கா.பதினோரு  வயசுல வயசுக்கு வந்துட்டான்னு சொல்லி அவளையும் பிரிச்சிடுச்சு.வயசுக்கு வர்றதுன்னான்னு கேட்டதுக்கு தலைல தட்டி மொத்தமா பொண்ணுங்ககிட்டேர்ந்தே பிரிச்சிது.மனசுக்குள்ள இருந்த குழந்தைபயல பெரியவன் ஆய்ட்டேன்னு சொல்லி என்ன விட்டு பிரிச்சிது.பிளஸ் டூல தம் அடிக்கறது தப்புன்னு சொல்லி சிகரட் பயலையும் பிரிச்சிது.மீச முளைச்சப்போ ஜாதி பேர சொல்லி என் காதல காதலிச்சவளையும் என்கிடேர்ந்து பிரிச்சது.

காலேஜ்ல கூட படிச்ச நண்பனயெல்லாம் ஒரு நாள் ஆட்டோகிராப் போட வெச்சு அழ வெச்சுது..
ஏன்னா,காலேஜ் முடிஞ்சிடுச்சு பிரிஞ்சு போங்கடான்னு சொல்லி,மறுபடியும் தேம்ப  வெச்சுது.

அப்ப கூட நான் அழல மச்சி..எனக்கு அழரதெல்லாம் பிடிக்கவே பிடிக்காது..
ஆனா,அன்னிக்கு எனக்கே தெரியாம என் கண்லேர்ந்து தண்ணி வந்துட்ருந்துச்சு..

இப்டி ஒரு நாள் படிச்சது போதும்னு சொல்லி படிப்புகிட்டேர்ந்தும் பிரிச்சது..
வேலைக்கு போறதுதான் போற..வெளிநாட்டுக்கு வேலைக்கு போன்னு சொல்லி என் நாட்ட விட்டும் பிரிச்சது..இன்னும்  நாலு வரில உன்னையும் என்கிடேர்ந்து பிரிச்சிடும்..

மச்சான் நான் ஒன்னு சொல்லுவேன் என்ன தப்பா எடுத்துக்காத..
எனக்கு இப்போ விஜிக்குட்டி கைய புடிச்சிகிட்டு ஊசி தட்டான் புடிச்சு குடுத்து சைக்கிள் கூட இல்லாத அவ அப்பாவோட கப்பல் நடுகடல்ல கவுர போற கதைய, பயந்து போன அவ கண்ண பார்த்துகிட்டே சொல்லணும் போல இருக்குடா...வயசு போச்சு மச்சி...எல்லாமே போச்சு...
எனக்கு புடிக்கரதயெல்லாம் என்கிடேர்ந்து பிரிக்கற அந்த பிரிவ பார்த்தா..நீயாவது சொல்லுடா...
எனக்கு இதெல்லாம் ரொம்ப பிடிச்சிருக்குன்னு..காசுக்காக எதோ ஒரு மூலைல எனக்கு பிடிச்சதையெல்லாம் தொலைச்சிட்டு பிரிவோட மிச்சமா நிக்கறேன்..
இப்போ  என்கிட்ட இருக்கறதெல்லாம் நான் மட்டும்தான்...
அம்மா கைல வாங்குன குட்டு,விஜிகுட்டிக்கு புடிச்ச ஊசி தட்டான்,அப்பா குடுத்த படிப்புபொம்மை,
பிரிஞ்சிட்லாம்னு சொன்னப்போ நான் வாங்குன அறை..நினைவுகள் மட்டும்தான் மச்சான் மிச்சம் இருக்கு...
இத மட்டுமாவது என்கிட்டயே விட்டுட சொல்லு...ப்ளீஸ் சொன்னேன்னு சொல்லு...


ஏன்னா,பிரிவு கொடுமையான கொடும.
எங்க வலிக்குதுன்னே தெரியாம வலிக்கற,உயிர் போற வலி.
அழறது எனக்கு சுத்தமா புடிக்கவே புடிக்காது...ஆனா ஏன்னு தெரில இப்போ...

வெளியூர்காரன்...

 

11 Responses so far.

 1. Saravanan says:

  Piriva vida kodumayana onnu namma ulagathulla irukku machi.....Ennanu Kellen....Night Thokam Varama Valrathu....Pirivin Kuzantha machy thokkam...Piruvu Kodummai...

 2. Anonymous says:

  எலேய் தஞ்சாவூரு.. வெளியூர்க்காரனுக்கு கேரக்டர் ரோல் செட் ஆகலை ...வேணாம் விட்ரு...!

 3. அப்போ இந்த படம் அவுட்டா...ச்சே...வட போச்சே..(எழுதும்போதே தோனுச்சு ஒய் எனக்கு...)

 4. malar says:

  என்னடா ஊர்நாடு...என்னாதிது...பொலம்பி வெச்சுருக்க...போதைல எழுதுனியா....!

 5. ஓகே..ஓகே...போதும்..போதும்..இனிமே இந்த மாதிரில்லாம் எழுதி மொக்க போட மாட்டேன்...ப்ரீயா விடுங்க...மன்னிப்பு...!யாரும் கமெண்ட் அடிச்சு அசிங்கப்படுத்த வேணாமுன்னு வெளியூர்க்காரன் கெஞ்சி கேட்டுகறான்...!

 6. Anonymous says:

  Apdiyellam vitramudiyathu...mokkayoda akka ithu..(un stylea..)

 7. sivanesan says:

  namba rendu perum onna ninna, unnai thambi nu sollvanga, venumna unnai naan annan enre koopidukiren ithupol ezhutha, righta en cellamla ,(anna paru antha thalila kuttu vanganathum, thalaila thattunathum enkku suvarsyama irunthu thu enna nye therla , athu eenn? )

 8. ஒரு மிகபெரிய ஹீரோ அடி வாங்கறது உங்களுக்கெல்லாம் காமெடியா தெரியுது....நல்லா இருங்கயா..(நான் ஒரு மொக்க பதிவு போட்டதுக்கா இவ்ளோ கொந்தளிப்பு.. .....!இனிமே சீரியஸ் மேட்டர் எழுதுனா என்ன கல்ல கொண்டு அடிங்கயா..)

 9. Anonymous says:

  ada ada ada . . . . ennama koovureenga ponga...

  really nice. juz nw i've a great chance 2 c ur Blogs. simply suuuuuuuuuuperrb....

  Keep't up-ungoi

 10. Jj says:

  தல,ரவுண்டு கட்டி கலக்கறீங்க . . .

 11. Anonymous says:

  It isn't hard at all to start making money online in the underground world of [URL=http://www.www.blackhatmoneymaker.com]blackhat script[/URL], You are far from alone if you have no clue about blackhat marketing. Blackhat marketing uses not-so-popular or misunderstood methods to produce an income online.