- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 7 comments and to comment






வெளிநாட்ல வாழற வெளியூர்காரங்களுக்கு வணக்கம்...நான் உங்கள மாதிரி வெளிநாட்டுக்கு பொழைக்க வந்தவங்கள்ள ஒருத்தன்...தொழில்நுட்பம் வளர்ந்து போச்சுசாமியோவ்...
ஸ்கைப்ங்கறாங்க,யாஹூங்கறாங்க,ஜிடாக்ங்கறாங்க..இன்னும் என்னெனமோ சொல்றாங்க...கால்குலேடர் எப்டி வேலை செய்துங்கரத்தையே வெகு ஆச்சர்யமா சிலாகிச்சு பேசிகிற்றுந்த என் அப்பா,யாஹூ சரியில்ல தம்பி,நீ ஸ்கைப்ல வான்னு சொல்ற அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து போச்சு...முகம் பார்த்து பேசிக்கலாம்,என்னடா தம்பி எளைச்சு போன மாதிரி இருக்கேன்னு பாசத்த பரிமாறிக்கலாம்,தங்கச்சி வளைகாப்புக்கு எடுத்த போட்டோவ உடனே பார்த்துக்கலாம்,அட என்ன வேணா பண்ணலாம் போங்க...தூரம் குறைஞ்சு போச்சு சாமி...ஆனா நீலமும் செகப்புமா சைடுல டிசைன் பண்ணிருக்கற ஏர்மெயில் கவர்ல சமீபத்துல யாராச்சும் லெட்டர் எழுதி போட்ருகீங்கலா..அன்புள்ள அப்பாவுக்கு,நாந்தாம்பா எழுதறேன்,எப்டி இருக்கியே..அம்மா எப்டி இருக்கு...போன வாரம் கால் பண்ணப்போ உடம்பு சரியில்லைனு சொன்னிங்க..இப்போ தேவலையா..உடம்ப பார்த்துகங்க...அடுத்த வாரம் பணம் அனுப்பி வைக்கறேன்...அப்பறம் அந்த,...


இப்டி யாராச்சும் வார்த்தைகள வார்த்தைகளா அனுப்பி வெச்சுருகீங்களா..அனுப்பிருக்க மாட்டீங்க...ஏன்னா,நமக்கு டைம் இல்ல...எழுதற அளவுக்கு பொறுமையும் இல்ல...எலெக்ட்ரானிக் சாதனங்களுக்குள்ள குடுத்து,வார்த்தைகளோட   பரிபூர்ணத்துவத்த  குறைச்சு,எழுத்துக்கள் வெளிபடுத்தர உணர்வுகள கொல்ல பழகிட்டோம்...ஸ்கைப்,யாஹூ இதையெல்லாம்,யாருக்கும் தெரியாம நைட்ல படிச்சு பார்க்க முடியாது..ஆனா,இந்த பய லெட்டர யாருக்கும் தெரியாம நைட்ல முழுசா ஒரு தடவ சிரிச்சுகிட்டே,புடிச்ச வரிய ரெண்டாவது தடவ மூணாவது தடவைன்னு படிச்சு சந்தொசபட்டுக்கலாம்...உங்கப்பா அம்மா கலெக்டரா இருந்தாலும்,உங்க லெட்டர் அவங்களுக்கு முக்கியம்தான் சாமி...ஏன்னா,அவங்க அப்பா அம்மா...அப்பா அம்மாவுக்கு இப்டீனா,பொண்டாட்டிக்கு போடற லெட்டர யோசிச்சு பாருங்க சாமி...தங்ககுட்டினு ஆரம்பிச்சு இப்படிக்கு உன் ஜின்ஜிலிகுட்டினு முடியர உங்க லெட்டர்ல எப்டிங்க உருகாம இருப்பாங்க..அட இதுவும் ரோமன்ஸ்தானுங்களே...


அந்த காலத்துல வெளிநாட்லேர்ந்து வர்ற கடிதங்கள்ள பாதி வார்த்தைகள் கண்ணீர் பட்டு அழிஞ்சு போய்ருகுமாம்..கேள்விபட்ருக்கேன்..அட ட்ரை பண்ணிதான் பார்க்கலாமேன்னு போன வாரம் போட்டேன்க..பயபுள்லையே உருகித்தான் போய்டாங்கே..நல்லாருக்கு சாமி..வாய்ப்பிருந்தா ஒரு தடவ ட்ரை பண்ணிதான் பாருங்களேன்...சீக்கிரம் போனுமேன்னு கொரியெர்ல அனுப்பாதீங்க...ஸ்டாம்ப் ஒட்டி தபால்ல அனுப்புங்க...வீட்டுக்கு தபால்காரரோட பெல் சத்ததோட போகணும்..அதான் பினிஷிங் டச்...வீட்டுல யார்கிட்டயும் சொல்லாம அனுப்புங்க...சஸ்பென்ஸ் சில சமயம் அந்தரா அசால்ட் பண்ணும்.. 


வெளியூர்க்காரன்..



7 Responses so far.

  1. சார் நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள். உங்களுக்கு எங்கள் தளத்திற்காக எழுத விருப்பம் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்

    website :- http://central.axleration.com

    contact us at :- http://central.axleration.com/contact.php

    you should first register to contact us

    take this oppurtunity to join one of the most experienced team in the web

  2. Its a honour of mine..Sure I will do that...Thanks sweet heart..Thanks for inviting me...

  3. அட பாவியளா...பொம்பள புள்ளயல பத்தி எழுதுனா கூட்டம் கூட்டமா வந்து கமெண்ட் போட்ரீக...ஆனா,அப்பனாத்தால பத்தி எழுதுன ஒரு பய மதிக்க மாட்டேன்க்ரீக....Very bad society..... Bad donkey...small wall...

  4. This comment has been removed by the author.
  5. Pokkisame Odala Sir.....Ithu Ma.....m...

  6. புரியுது சார்..புரியுது சார்...ரொம்ப நன்றி சார்...பொதுமக்களுக்கு புரியாத மாதிரி டீசென்ட்டா சொன்னதுக்கு...

  7. angel says:

    i m wit my parents i too must write letterssssss????