- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 6 comments and to comment
நான் கல்யாணம் பண்ணிருந்த்ருக்க வேண்டிய புள்ளைய இன்னிக்கு ஈவினிங் வீட்டுக்கு வந்துட்ட்ருக்கும்போது தெரு முனைல வெச்சு பார்த்தேங்க...ஏழாவது படிக்கும்போது என் பொண்டாட்டி எப்டி இருக்கணும்னு நான் கற்பனை பண்ணி வெச்சுருந்தனோ,அதே மாதிரி முகம்.வளந்ததா இல்ல வரைஞ்சதான்னு சொக்க வெக்கற புருவம்..அதுக்கு கீழ 350 மெகாவாட்ஸ் வெளிச்சத்துல ஒரு ஜோடி மத்தாப்பு,லிப்ச பார்க்க விடாத மூக்கு,மூக்க தோக்கடிச்சு தன்ன பார்க்க வெக்கற லிப்சுன்னு..கொஞ்ச நஞ்ச அழகு இல்லங்க.. ங்கொய்யா அழகு..தேவதையோட பேத்தி மாதிரி இருந்தா..அவள பார்தொன்ன எனக்கு சிறு மூளைல அடிச்ச ஷாக் பரபரன்னு அடுத்த செகண்ட் பெருமூளைக்கு பரவி என் காதல அவகிட்ட சொல்லிடலாம்னு முடிவு பண்ணப்போ..ஒரு சின்ன டிஸ்டர்பின்ஸ்..அவ கூட இருந்த ரெண்டு வயசு பிகரு ஐஸ்கிரீம் வேணும்னு அழ ஆரம்பிச்சது...ஆமாம்க..அந்த புள்ளைக்கு கல்யாணம் ஆய்டுச்சு போலருக்கு..நோ..நோ..இதுக்கெல்லாம் காரி துப்பக்கூடாது...அட சொன்னா கேளுங்க...


என் சோக கதைய விடுங்க..காலம் காலமா அவமானம் மட்டுமே பட்ரதால இது ஒரு பெரிய மேட்டர் இல்ல...நம்ப விமர்சனத்துக்கு போவோம்...


சொரோரிட்டி ரோ..சில பேர பார்த்தா எப்டி எனக்கு ஈவினிங் தோணுன மாதிரி கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணுமோ,அதே மாதிரி சில பொண்ணுங்கள பார்த்தா நமக்கு புடிக்காத பிரண்ட்சுக்கு கல்யாணம் பண்ணி வெச்சு வாழ்த்தனும்னு தோணும்...அந்த மாதிரி அஞ்சு சண்டாள சிருக்கியளோட கதைதான் இந்த சொரோரிட்டி ரோ.அமெரிக்காவோட அசால்ட் பொண்ணுங்க அஞ்சு பேரு..அதுலயும் ஒருத்தி ரொம்ப மோசம்...ஒவ்வொரு தடவையும் கொலைய பண்ணிட்டு ,ஆமாம் சீயக்கா தேச்சு குளிச்சேன் அதுக்கு என்னானு கேக்கற மாதிரி ,கொல பண்ணிட்டேன் அதுக்கு இப்போ என்னன்னு அசால்ட்டா கேக்கர கிராதகி...


இப்டி வாலு முளைச்ச அஞ்சு வெள்ள பணியாரமும் சேர்ந்து நம்ப ப்ரியமுடன் வசந்த் மாதிரி ஒரு அப்பாவி பையன கலாய்க்கரதுக்கு ஒரு சின்ன டிராமா போட்ராளுக..அத உண்மைன்னு நம்பி பயந்து போற அந்த மாங்கா கார் வீல கயட்டற கம்பிய எடுத்து செத்து போன மாதிரி நடிக்கற புள்ளயோட நுரையீரள காண்டுல நோன்டிபுட்றான்... அந்த எழவு பாளையமும் பொசுக்குன்னு  நெஜமாவே செத்து போய்டுது...


அதுக்கப்றம் ஒரு வருஷம் கழிச்சு அந்த அஞ்சு பெரும் ஒவ்வொருத்தரா கொல்லபட்றாங்க..பேய் கொல்லுதா,இல்ல வேற யாரும் செய்றாங்கலானு த்ரில்லிங்கா சொல்லிருக்காங்க.நெறைய மேட்டர் சீன் வருது..அதனால ஆம்பள பசங்கல்லாம் கண்டிப்பா பார்த்து ஜெனரல் நாலேஜ டெவலப் பண்ணிக்கலாம்..அதுலயும் சினேகா மாதிரியே இருக்கற ஒரு புள்ள ஒரு சீன்ல...வேணாம் விடுங்க..இது பொம்பள புள்ளைய வந்து போற இடம்..படம் நல்லா எடுத்துருக்காங்க...நெறைய எடத்துல வையலென்ஸ் பயபட்ற அளவுக்கு வயலென்ஸ் இருக்கு..நம்ப சேரன் சார் பார்த்தாருன்னா யூரின்தான்..ஆனா கிளைமாக்ஸ் என்னமோ எனக்கு புடிக்கலங்க..சப்புன்னு ஆதவன் படம் மாதிரி இருந்துச்சு..இன்னும் நல்லா பண்ணிருக்கலாம்..(நம்பதான் போட்டோ கூட எடுக்க தெரிலனாலும்,அடுத்தவன நல்லா நொட்டாரம் சொல்லுவமே...)


Sorority Row..
அஞ்சு கிராதக குட்டிகளோட ராவான ராத்திரி அட்டகாசம்..(ரானாவுக்கு ரானா..) சரக்கடிச்சா போய் பாருங்க.


சிங்கப்பூர் டாக்கீஸ்க்காக வெளியூர்க்காரன்..


6 Responses so far.

 1. பதிவு முழுவதுமே செம ஜாலி!!!

  //நம்பதான் போட்டோ கூட எடுக்க தெரிலனாலும்,அடுத்தவன நல்லா நொட்டாரம் சொல்லுவமே..//

  விழுந்து விழுந்து கி கி கி கி......

 2. ஹி ஹி ஹி கேள்விபட்டருக்கேன்..அது என்னங்க கி கி கி கி ...வித்யாசமா சிரிக்கறீங்க மணிகண்டன் சார்...

 3. "ஐந்து ராட்ஷஸ கன்னிகள்"...கொஞ்ச நாள்ல மோட்சம் தியேட்டருக்கு வந்துடும்.கரெக்டா..?

 4. அது அப்டி இல்ல மச்சி..."அரக்க கன்னிகளும்,கார் கம்பியும்.."..மோட்சத்துல இந்நேரம் ட்ரைலர் போட்ருபானுக.....

 5. அடப்பாவி..நான் அப்பாவின்னு உங்கிட்ட சொன்னனா?

  இப்பிடி டெம்ப்லேட் மாத்திட்டே இருக்குறதால உன் இடுகை என் முகப்பிற்க்கு வரலை மாப்பு..