- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 19 comments and to comment“தமிழக முதலமைச்சர் விஜய்..”
நேத்து பாத்ரூம்ல குளிக்கும்போது சொல்லி பார்த்தேன்...சும்மா ஜிவ்வுன்னு சோக்கா கீதுனா...எனக்குன்னாசும் நீ எப்டியாச்சும் முதலமைச்சர் ஆய்டு..என்ன தகுதி இல்லன்ன உனக்கு...நல்ல டான்ஸ் ஆடுற,நல்ல பைட் போடற,நல்லா நக்கல் பண்ற,இரும்பு சட்டற கூட அசால்ட்டா உடைச்சுகிட்டு வெளில வர்ற..இதுக்கு மேல என்ன வேணும் முதலமைச்சர் ஆகறதுக்கு...ரெண்டே ரெண்டுதான் உன்கிட்ட இல்ல..ஒரு படத்துக்கு கதை வசனம் எழுதிட்டு,கொடநாட்ள ஒரு எஸ்டேட் வாங்கி போட்டீன்ன அதுவும் ஓவர்..புல் எலிஜிபிலிட்டி உள்ள காண்டிடடேனா நீ..தேர்தல்ல நீ நிக்கற..நாம ஜெயக்கறோம்..

எது கூட்டணியா..என்ன பேசற நீ..இல்ல கேக்கேன்..நீ என்ன பேசற....நீ ஒருத்தனே ஒரு தேசிய கட்சிக்கு சமம்...உனக்கெதுக்கு கூட்டணி..உன் கெத்துக்கெல்லாம் நீ ஏன் அண்ணா ராகுல போய் பார்க்கற...அவரு வருவாரு பாரு...நம்பல தேடி...உன் வீட்டுக்கு வந்து பார்ப்பாரு பாரு...

நானும் 3 நாளா யோசிச்சிட்டேன் உன்ன எந்த தொகுதில நிப்பாட்டலாம்னு...நீ எந்த தொகுதில நின்னாலும் அன்னபோஸ்ட்டா ஜெயப்பங்கறது வரலாறு சொல்லும்...ஆனா,நம்ம ச.மு.க கெத்த தமிழ்நாட்டுக்கு காட்டணுமா இல்லையா...(.நம்ம கட்சி பேரு ச.மு.க ன்னேன்..சந்து முன்னேற்ற கழகம்...சந்து உங்கப்பா பேர்னா...)

நீ மத்திய சென்னைல நில்லு...ஏன்னு கேளு,மதுரைல நின்னேன்னா அவங்கே சோத்துல வெசம் வெச்சுடுவாஙகே...அது நம்ம உயிருக்கு ஆபத்து..நமக்கு சேப்டி மத்திய சென்னைதான். ஏதும் பிரச்சனைனா வீட்டுக்கு ஓடி வந்துடலாம்..புலி உறுமுது பாட்ட தெருவுக்கு தெரு லவுட் ஸ்பீகர் வெச்சு போட்டம்னு வெச்சுக்க,பாட்ட கேட்டு மெரண்டு போய் ஓட்ட போட்ருவாங்கே..கண்ண மூடிகிட்டு ஜெய்ச்சிட்லாம்..உங்கப்பா பிரசாரத்துக்கு வரணும்னு கூட அவசியம் கெடயாது...ஒரு பிரச்சனை முடிஞ்சிது...இப்போ தமிழ்நாட்டோட மத்த தொகுதிகள பத்தி பேசுவோம்....நாமக்கல்ல பேரரச நிப்பாட்றோம்..ரமனாவ பாபனாசத்துல,விக்ரமன உடுமளைபேட்டைல,என்னது கௌதம் மேனன்க்கா..என்ன பேசற நீ..அவர்லாம் ஒரு டைரக்டர்..ஆதி மாதிரி ஒரு நல்ல படம் எடுதுருக்காரா...வேணா வெயிட் பண்ண சொல்லு அடுத்த எலெக்சன்ல பார்க்கலாம்..இப்போதைக்கு இந்த லிஸ்ட அன்னௌன்ஸ் பண்ணு...மிச்சத்த அப்பறம் ஷோபா அம்மாகிட்ட  ஆசிர்வாதம் வாங்கிட்டு முடிவெடுப்போம்...

தேர்தலுக்கு முன்னாடி  நீ ஒரு விஷயம் பண்ணனும்...ஒரு மோதிரத்த காட்டிஇது MGR என்னோட போன வருஷ பொறந்த நாளைக்கு என் வீட்டுக்கு வந்து எனக்கு போட்டு விட்டு நீதாண்டா என்னோட அரசியல் வாரிசுன்னு சொல்லி கட்டிபுடிச்சு முத்தம் குடுத்துட்டு போனாருன்னு ஜூனியர் விகடன்க்கு ஒரு பேட்டி குடு...அதுகப்ரம் பாரு,தமிழ்நாட்ல இருக்கற 187 ADMK வோட்டும் நமக்குத்தான்...ரெண்டாவது MDMK..அடுத்த படம் உங்களுக்கு பண்ணி தரேன்னு கலைபுலி தானுகிட்ட சொல்லி அவர நம்ம கட்சில சேத்துடு...டீ செலவுக்கு காசு இல்லாம MDMKவ மூடிருவாங்க...DMDK பத்தி நான் இன்னும் யோசிக்கல..அத அப்பறம் பார்த்துக்குவோம்...இப்ப என்னோட பெரிய பயம் என்னன்ன லட்சிய திமுக வ என்ன பன்றதுனுதான்..நமக்கு மிக பெரிய போட்டிய நான் அவங்ககிடேர்ந்து எதிர்பார்கறேன்...ஒரு வோட்டுதான் வேசுருகாங்கன்னு நம்ம அலட்சியமா விட்ற கூடாது..அந்த கிறுக்கன் மேடைக்கு மேடை அடுக்கு மொழில பேசி உன் இமேஜ டேமேஜ் பண்ணிடுவான்.. ஆக கடைசி பிரச்சனை  திமுக….நம்மல்லாம் போறந்துட்டதுனால அரசியலுக்கு வந்துருக்கோம்..ஆனா,அவங்கே அரசியல் பன்றதுகுன்னே போரந்தவங்கே...அவங்ககிட்ட சின்னபுள்ள தனமா மொதுனோம்ன தடம் தெரியாம போட்ருவாங்கே...அதனால அத மட்டும் அறிவு பேராசான் திரு.சந்து அவர்கள்ட்ட அறிவுரை கேட்டுக்குவோம்...

அப்பறம் ஒரு முக்கியமான விஷயம்..நம்ம ஆட்சிக்கு வந்தோன்ன அந்த சொம்பு பய வந்து நம்மளோட சேர பார்ப்பான்...ஆனா அவன சேத்துக்காத.. உன்ட்ட சொல்ல மறந்துட்டேன்.அவன் போன படத்துல உன்ன கலாசிட்டான் அண்ணா...நான் குருவி இல்ல..பில்லான்னு சொல்லிட்டான்...அது சத்துக்கு அது எப்டின்னா உன்ன கலாய்க்கலாம்..விடலாமா அத...நசுக்கறோம்...அவன் மட்டும்தான்னா நமக்கு காண்டு...மத்த எல்லாரும் நல்ல பசங்க...இவன மட்டும் பாண்டி பஜார்ல கஞ்சா வித்தான்னு சொல்லி உள்ள தூக்கி போட்டு முட்டிய உடைச்சு விட்டறலாம்..(அதேப்டினா அந்த நாதாரி உன்ன கலாய்க்கலாம்...நெனைக்க நெனைக்க வெறி ஆகுது... )

அண்ணோவ் நீ பார்லிமென்ட் கதவ வெல்டிங் மெஷின் வெச்சு உடைச்சு காலால எட்டி உதைச்சு கதவ தொறந்து உள்ள போய் லாலுவ நக்கல் பண்ணிகிட்டே பாக்கு மெல்ரத பார்த்து இந்தியாவே மெரள போற நாள்க்காக காத்திருக்கேன்னா...

(அண்ணா...விஜய் அண்ணோவ்..
பாட்டெல்லாம் ஹிட் ஆனோன்ன ஆணவத்துல கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்....

.............................வேட்டைக்காரன் ஓடிரும்ள...!)

வெளியூர்க்காரன்

19 Responses so far.

 1. sivanesan says:

  entha oorukkda oodidum mokkarasu, dont sent it here .

 2. //.(.நம்ம கட்சி பேரு ச.மு.க ன்னேன்..சந்து முன்னேற்ற கழகம்...சந்து உங்கப்பா பேர்னா...)//

  ஹ ஹ ஹா

 3. மாப்ள நேர்ல கண்டேன் உன்ன பருப்பெடுத்துடுவேன்..ஜாக்கிரதைடி

 4. This comment has been removed by the author.
 5. hotv says:

  ஏன் இவ்வளவு கொலைவெறி??????

 6. Anonymous says:

  படித்து விட்டு காலைல சிரிக்க ஆரம்பிச்சி ............ நைட் வரைக்கும் போகும் போல ......
  நீங்களே அவரின் கொள்கை(?) பரப்பு செயலர் ஆகலாம் .......

 7. Anonymous says:

  superrrrrrrr.all the best

 8. Anonymous says:

  anne magalir ani thalaiviya trisha va appoint pannalama?

 9. செல்லாது...செல்லாது...நான் நயன்தாராவுக்கு வாக்கு குடுத்துட்டேன்...வேணா த்ரிஷாவுக்கு
  உள்துறை செயலாளர் பதவிய வாங்கி குடுக்கலாம்...

 10. Hilarious

  :))))))))))))

 11. என்னப்பா சிம்புவ இவ்ளோ கொத்திருக்கேன்...ரெஸ்பான்ஸ் சுத்தமா இல்ல....அவன நீங்களும் போட்டாதான கட்டெறும்பு கடிச்ச மாதிரி நறுக்குன்னு இருக்கும்....

 12. gopal says:

  வேவேக், வடிவேலு விட தமிழ் சினிமாவில அதிகமா காமிடி படத்துல நடிக்கறது நம்ம அண்ணன் தான். ல.தி.மு.க மேட்டர் சூப்பர். உங்கள் கட்சி பணி தொடர வாழ்த்துக்கள்.

 13. /என்னது கௌதம் மேனன்க்கா..என்ன பேசற நீ..அவர்லாம் ஒரு டைரக்டர்..ஆதி மாதிரி ஒரு நல்ல படம் எடுதுருக்காரா...வேணா வெயிட் பண்ண சொல்லு அடுத்த எலெக்சன்ல பார்க்கலாம்./
  சிரிப்ப அடக்க முடியல

 14. இரா.சுரேஷ் பாபு said...///
  ஐயோயோ...அதையெல்லாம் அடக்க கூடாதுங்க...கருமத்த சிரிச்சு விட்ருங்க....

 15. Anonymous says:

  வெளியூரு

  இந்த லின்க்ல போய் பாரு, ஒரு அதிர்ச்சி / ஆனந்தம் உனக்காக காத்துக்கிட்டு இருக்கு...

  http://tamilcinema.com/CINENEWS/Hotnews/2009/November/101109d.asp

  ங்கொய்ய செம பதிவு, பய் தி பய் நான் அகில உலக தல பக்தர்கள் & வெறியர்கள் குழுத் தலைவர் , கத்தார் கிளை

 16. @@Anonymous
  ங்கொய்ய செம பதிவு, பய் தி பய் நான் அகில உலக தல பக்தர்கள் & வெறியர்கள் குழுத் தலைவர் , கத்தார் கிளை////

  மாப்ள சுறா வரட்டும்டி...தக்காளி ஆட்சிய புடிக்றமா இல்லையான்னு பாரு..!! (யாரு போட்ருக்கா அதுல...நான் அனுப்பலையே மச்சி..நெறைய எடிட் வேற பண்ணிருக்காங்க...ராவாவே இல்ல...!! )

 17. Anonymous says:

  மாப்ள வெளியூரு,
  நான் அந்த அ.உ.த.ப&வெ. குழு கத்தார் கிளை தலைவர் "பருப்பு" எழுதுறேன்

  இந்த போஸ்ட 2009 ல தமிழ்சினிமா.காம் ல படிச்சதில இருந்து இது வரை ஒரு 3000 பேருக்கு லிங்க் அனுப்பிருப்பேன், உள்நாடு, வெளிநாடு, அயல்நாடு, இவ்ளோ ஏன் நம்ம கோயி மில் கயா குட்டி சாத்தன்னுக்கு கூட அனுப்பிட்டேன், அப்போ இருந்தே தேடிட்டு இருந்தேன் எவண்டா இத எழுதுனதுன்னு, இந்த தமிழ்சினிமா. காம் நாய்ங்க லண்டன் நாளிதழ் நு வேற போட்டன், பன்னாட

  தக்காளி கலக்கிட்ட போ..அப்புறம் நீ என்ன உன் ப்ளோக்குக்கு வரவேற்கவே இல்ல, மரியாதைய கேட்டு வாங்குறதுல நான் கொஞ்ச கூட வெக்க பட மாட்டேன்

  இதுக்கு பதில் போடும் பொது ஒழுங்கா என்ன வரவேற்று ஒரு ரெண்டு வரி போடுன்னு கட்டுதனாமா உன் கால புடிச்சு கதறி கேட்டுக்கிறேன்...

  அப்புறம் ஒரு குட் நியூஸ் நேத்துல இருந்து நானும் பதிவு போடலாம்னு முடிவு பண்ணி ப்ளாக் ஆரம்பிச்சு முதல் பதிவ செதுக்கிட்டு இருக்கேன், முடிஞ்சதும் invitation அனுப்புறேன் வந்து கும்மியடிங்க...

  அப்புறம் ரொம்ப நாள் கழிச்சு ரொம்ப சத்தமா வாய் விட்டு சிரிச்சேன் உன் பதிவுகள படிச்சு...அதுக்காக நன்றி சொல்லுவேன்னு கனா காணத...நீ விஜய் நான் தல, மன் மோகனும் சர்தாரியும் முஸ்தபா முஸ்தபா பாட்டு பாடினாலும், புஷ்ஷு சதாம் சிலைக்கு மால போட்டாலும், அம்மாவும் மஞ்ச துண்டும் ஓடி புடிச்சு விளையாண்டலும் நீயும் நானும் ஜென்ம எதிரி சொல்லிப்புட்டேன் ஆமா

 18. @@@@Anonymous
  மாப்ள வெளியூரு,நீ என்ன உன் ப்ளோக்குக்கு வரவேற்கவே இல்ல,///


  உள்ள வாடா டேய்...!! (நமக்குள்ள என்னா மச்சி பார்மாலிடிஸ்லாம்...!! நீ என் செல்லம்டா...!!!)