- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 13 comments and to comment

எனக்கும் வந்துச்சுங்க அது...ஆமாம்...அதேதான்...


நான் காலேஜ் படிக்கும்போது...அந்த புள்ளைக்கு இன்டர்நெட் கண்டுபுடிச்சது இன்னும் 30 வருஷம் கழிச்சுதான் தெரியும்ங்கற நம்பிக்கைல (அப்டி ஒரு குக்ராமத்துல கட்டி குடுத்துருகாங்க...)எனக்குள்ள புதைஞ்சு கெடக்கற அந்த உண்மைய வெக்கமில்லாம உங்ககிட்ட சொல்ல போறேங்க...


அந்த புள்ள என்கூடதான் காலேஜ்ல ஒன்னா படிச்சா...இல்லல்ல...நான் போயிட்டு வந்துகிட்ருந்த காலேஜ்ல அவ படிச்சா...அவ சிரிச்சா ரூம் ப்ரெஷ்னர் அடிச்சா மாதிரி ரூமே பிரெஷ் ஆய்டும்...என் மனசு டபுள் பிரெஷ் ஆய்டும்...ரொம்ப அழகுன்னு சொல்ல முடியாது...ஆனா,அளவான அழகு...அவ சிரிக்கறத பார்த்துதான் நான் லவ் பண்ணவே ஆரம்பிச்சேன்...ஆனா பாருங்க,நான் லவ் பண்ணத பார்த்து ஊரே சிரிச்சிது...அவளும்தான்...


ஒல்லி உடம்பு,கள்ளி பார்வை,சொன்ன நம்பமாடீங்க,மஞ்ச கரு வெள்ளையா தெரியும் அவ பக்கத்துல வெச்சு பார்தீங்கன்னா.,அப்டி ஒரு மஞ்ச கலர்..அவ பக்கத்துல நிக்கும்போது அவ பிரென்ட் அந்த மொக்க சத்யா கூட என் கண்ணுக்கு அழகா தெரிவா.நம்ப பீஸ் அவ்ளோ அழகு...


அவ நடைய பத்தி சொல்லலையே..ச்சே.அம்சமா இருக்கும்.நடக்க விட்டு பார்த்துகிட்டே இருக்கலாம்.(நடக்கறத...)


சிரிக்காமையே இருப்பா...ஆனா அவ்ளோ அழகா இருப்பா...சிரிச்சா...அட போங்க சாமி...பழைய சினிமா நடிகை காஞ்சனாவுக்கு முகம் கழுவி கனகாம்பரம் வெச்ச மாதிரி மின்னுவோ...அத நெனைக்கும்போதே, மனசு கெடந்து படபடன்னு அடிச்சிக்குது...சாகடிச்சாங்க...மனுசன சாகவே அடிச்சா...அவ என்ன பார்க்கராலா,இல்ல நான் ஒருத்தன் இருக்கறதாவது அவளுக்கு தெரியுமா...எதுவுமே தெரியாம நான் பட்ட பாடு...அப்பப்பா...சாம் ஆண்டெர்சன் க்கு கூட அந்த நெலம வரக்கூடாதுங்க...


அந்த புனிதமான காதல்,என் ஹேர் ஸ்டைல மாத்துனுச்சு.பயமா இருந்தாலும் பரவால்லன்னு கண்ணாடிய பார்த்துகிட்டே இருக்க வெச்சுது,எங்கப்பா மூஞ்சிய பார்த்தா மூட் அவுட் ஆக வெச்சுது,நைட் மூணு மணி வரைக்கும் லவ் சாங்க்சா கேக்க வெச்சுது...அதும் ரொமான்ஸ் பீலிங்கோட..தலைய சுத்தி ஒரு மஞ்ச கலர் பட்டர்பிளை கூட்டம், ஷிப்ட் மாத்தி மாத்தி கிளுகிளுப்பா பறந்துகிட்டே இருக்க வெச்சுது...


டெய்லி கனவுல அவ கூட செஸ் வெளையாண்டுட்டுதான் தூங்கவே போவன்ன பார்த்துக்கங்களேன்,,,(அந்த புள்ள ஸ்டேட் சாம்பியன்...செஸ்ல...) ஆனா,என் கூட வெளயாடும்போது நான் ஜெய்க்கனும்ங்கறதுக்காக அவ தோப்பா...அதுல அவ சந்தோசப்படனும்ங்கறதுக்காக நானும் ஜெயிப்பேன்...(இம்புட்டு பீளிங்க்சும் கனவுலதேன்..)


ஆனா பாருங்க,நெஜத்துல என்ன அவ மனுஷனா இல்ல...ஒரு மயிரா கூட மதிக்க மாட்டா...அப்ப எனக்கு என்ன தோனுச்சு...ச்சே,நம்ப செல்லத்துக்கு திமிர் கூட அழகுன்னு...என்ன நமக்கு அப்போ அப்டி ஒரு ஜிம்பலக்கா லவ் பீளிங்க்சு...


இப்படியாக பட்ட வேளையிலே, ஒரு வெள்ளிகிழமை அன்னிக்கு முருகன வேண்டிக்கிட்டு காலேஜ் போகும்போது பஸ்ல வெச்சு ரோஜா பூவ குடுத்து சொல்லிட்டங்க...I love youன்னு....


வெளியூர்க்காரன்...

13 Responses so far.

 1. என்னத்தையா தேடறீங்க...க்ளைமாக்ஸா....N0,நான் அவமானப்பட்டது என்னோட போகட்டும்...
  போங்க...போய் எதையாச்சும் கமெண்ட அடிச்சிட்டு அடுத்த பதிவ போய் பாருங்க...
  (வேனாம்யா..ரொம்ப கேவலமா இருக்கும்....)

 2. யோவ் இன்னும் எத்தனை பேருயா எங்கிட்ட காப்பிரைட்ஸ் வாங்காம என் ஆளு போட்டோவ பப்ளிஷ் பண்ணுவீங்க?

  நான் கேஸ் போடப்போறேன்....

 3. பங்காளி...இது என் ஆள் இல்ல..என் ஆளோட பிரென்ட் அந்த மொக்க பிகர் சத்யா....(இந்த புள்ள லேசா அர மென்டலா திரிஞ்சப்பவே நெனச்சேன் இது வசந்த் பிகராதான் இருக்கணும்னு...)

 4. malar says:

  அவ நடைய பத்தி சொல்லலையே..ச்சே.அம்சமா இருக்கும்.நடக்க விட்டு பார்த்துகிட்டே இருக்கலாம்.(நடக்கறத...)///

  டபுள் மீனிங் மாதிரி தெரியிது...நடக்க விட்டு பார்த்துகிட்டே இருக்கலாம்னு நீ சொல்றது நடையவா,இல்ல வேற எதயவதா...பிராடு மேன் நீ....அதான் டவுட்டா இருக்கு...

 5. என்னது வந்துடுச்சா? கிளம்பு.. கிளம்பு.. காத்து வரட்டும்.
  சும்மா.. சும்மா... நல்லாயிருக்கு பாஸ்!!

 6. சகலை..நாங்கல்லாம் கமெண்ட் அடிச்சே பல பேர கூட்டம் கூட்டமா கொன்னவங்கே...எங்களுக்கேவா..!(இந்தா வந்துட்டண்டி உங்க வடலூரான பார்க்க....)

 7. malar said...
  டபுள் மீனிங் மாதிரி தெரியிது...நடக்க விட்டு பார்த்துகிட்டே இருக்கலாம்னு நீ சொல்றது நடையவா,இல்ல வேற எதயவதா...பிராடு மேன் நீ....அதான் டவுட்டா இருக்கு...
  Oct 5, 2009 11:13:00 AM.///
  மலர்..நீங்க என்ன சொல்லறேல்னே நேக்கு புரியல..சித்த புரியரா மாதிரி சொல்றேளா....
  (இதுல டவுட் வேறயா உமக்கு..
  நோன்ன...அதத்தான் ஒய் சொன்னேன்...)

 8. I mean நடக்கற அழக பார்க்கறது...(ச்சே,பெண்கள் ஆதரவுக்காக, எவ்ளோ காம்ப்ரமைஸ் பண்ண வேண்டியதா இருக்கு...)

 9. azhahu says:

  neengal ithellam ungalukku nadantirukkavedum enra karpanai sampavame ivalavu santhosathai koduthirukarathu ennraal......

  ungalai mathiri sodaputti ellam ponnunga antha vaysula pakka mattenga,....

  polapa parumya....
  (sahothari enru azhithal asingapadama irukkalam enra ninaippu vendam nanbare)

 10. azhahu said...
  (sahothari enru azhithal asingapadama irukkalam enra ninaippu vendam nanbare)..///

  ம்...அப்பறம்...!

 11. அழகு ஆத்தோவ்...மோசக்குட்டில நீங்க கேட்ட கேள்வி சீரியஸ் அண்ட் சென்சிடிவ் மேட்டர்...Thats y I want to give some respect and importance to your feelings....இங்க அப்டி கெடயாது எக்கோவ்..இது நம்ப ஏரியா.....உட்டாலக்கடி கிரிகிரிதான்....நாங்கல்லாம் சகோதாரின்னு கூப்டரத்துக்கு நீங்க குடுத்து வெச்சுருக்கணும் அப்பத்தா ..எதோ ஒரு பீலிங்க்ஸ்க்காக சகோதரின்னு சொன்னா ரொம்பதான் ... !

 12. உங்கள் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட , உங்கள் தளத்துக்கு வரும் வாசகர்களுக்கு நீங்கள் கடைசியாக எழுதிய ஐந்து பதிவுகளை சிறு படங்களாக வலது அல்லது இடது பக்கத்தில் இடம்பெறச் செய்ய இந்த gadaget ஐ இணையுங்கள்
  gadget ஐ பெற இங்கே செல்லவும்

  tamil10 .com சார்பாக
  தமிழினி
  நன்றி

 13. Saravanan says:

  Nalla Vela Nan antha collegela padikkala....(Ivana enakku collegela mattum than theriumngarathu vera)