- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 40 comments and to comment


திராவிட முன்னேற்ற கழகத்திற்கு தங்களின் பொன்னான வாக்குகளை அளித்த அனைத்து அன்பு உடன்பிறப்புகளுக்கும் உளமார்ந்த நன்றியும் வாழ்த்தும்..!

உங்க வேலை முடிஞ்சு போச்சு...இனிமே உங்களுக்கு மரியாதை கெடயாது..போங்க போங்க...போய் எல்லா பயலும் அவன் அவன் வேலைய பாருங்க..! வேலை வெட்டி இல்லாதவன் எங்கள திட்டி பதிவு போட்டு வோட்ட வாங்கி பிரபல பதிவராக முயற்ச்சி பண்ணுங்க..!

இனிமே நாங்க எங்க வேலைய பார்த்துக்கறோம்..!
( பின்ன, இன்னும் எவ்ளோ ஊழல் பண்ண வேண்டியிருக்கு...)

இனி அஞ்சு வருஷம் கழிச்சு மறுபடியும் மீட் பண்ணுவோம் மக்களே..! 

போறதுக்கு முன்னாடி ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிடறேன்...

மட சாம்ப்ரானிலையே கேடுகெட்ட சாம்ப்ராணிடா நீங்கல்லாம்...! ஸ்பெக்ட்ரம்ங்கற ஒரு ஊழல்ல மட்டும் நாங்க எத்தன கோடி அடிச்சொம்கரத ஒரு பேப்பர்ல எழுதி பார்த்தா சைபர் போட்டே புது ரீபிள்ள இங்க்கு தீந்துரும்டா...! இவ்ளோ தப்ப பண்ணிட்டு வந்து வோட்டு கேட்ருக்கோம்..அசராம வோட்ட போட்ட பார்த்தியா நீ..!

என் செல்லமே..!   

உன்ன நம்பி எத்தன ஆயிரம் கோடி வேணாலும் ஊழல் பண்ணலாம்டா என் திராவிட சிங்கமே..!

மறுபடியும் ஊழல பண்ணிட்டு திரும்பவும் வந்து உங்ககிட்ட கூச்சமே இல்லாம வோட்டு கேக்கலாம்...!

நீயும் போடுவ..! உனக்குத்தான் மூளைங்கறதே கொஞ்சம் கூட கெடயாதே என் அறிவுகெட்ட திராவிட கொழுந்தே....! 

அசராமல் சென்று வா என் சிங்கமே...!  நாளை நமதே...! 

நீ போய் டெய்லி சன் டிவில நியூஸ் பாரு..!
இனிமே வேற என்ன பண்ண முடியும் உன்னால...!

அதான் எலெக்சன் முடிஞ்சிருச்சே..!

நன்றி வணக்கம். 

அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் 
திராவிட முன்னேற்ற கழகம்.

இவ்ளோ நாள் கலைஞர் என்ற ஒரு தனிமனிதருக்காக, திமுகவின்  எல்லா கயவாளிதனதையும் மறைத்து  எல்லோரிடமும் வோட்டு கேட்ட பாவத்தை இந்த பதிவின் மூலம் போக்கிய மன திருப்தியுடன்., 

வெளியூர்க்காரன்  

40 Responses so far.

 1. பாருடா! எல்லாருக்கும் கல்யாணமாச்சினா சூடு, சொரனை, வெக்க வெளக்கெணனை எல்லாம் போய்டும் இவனுக்கு இப்போ தான் வருது... :)

 2. அய்யே...இனிதான் கதையே வரும்.  
  ஆமா  யாருக்கு மச்சி ஓட்டுப்போட்டே?  ஹிஹி,  ஜெனரல் நாலேட்ஸ்க்கு கேக்கிறேன்!!

 3. Yov, pandi. உன்னத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்.  பறந்துட்டியோனு(?) நினச்சேன்

 4. @ வெளியூர் ... போன போஸ்ட்ல நீங்க ரொம்ப பொறுப்பா எல்லோர் கமென்சுக்கும் ரிப்ளை கொடுக்கும்போதே எதோ டீலிங் ராங்கா போகுதேன்னு நெனச்சேன்... என்னடா யாராவது சிக்குனா கும்மியடிச்சு கொலை பண்ற ஆளு இப்போ பொறுப்பா கமென்ட் போட்ராறேன்னு பார்த்தேன்....ஹா ஹா... இப்போ தெரிஞ்சிபோச்சு....:))

 5. karthikkumar said...

  @ வெளியூர் ... போன போஸ்ட்ல நீங்க ரொம்ப
  //

  ஹி.ஹி..அந்த பொறுப்பான நாதாரி..இன்னும் 5 வருசம் கழிச்சு வருவான் பாருங்க...

  Split பெர்சனாலிட்டி ஹி..ஹி

 6. //பாருடா! எல்லாருக்கும் கல்யாணமாச்சினா சூடு, சொரனை, வெக்க வெளக்கெணனை எல்லாம் போய்டும் இவனுக்கு இப்போ தான் வருது... :)
  //\

  இப்பவாவது வந்ததே

 7. வாக்களிப்பீர்ன்னு கொஞ்சுற போதே இதுல ஏதோ வில்லங்கத்தனம் இருக்குதுன்னு நினைச்சேன்:)

 8. Blogger சி.பி.செந்தில்குமார் said...

  ஹி ஹி ஹி
  //

  வெளியூரு.. ஒரு டெம்ப்ளேட் கமெண்ட் மாட்டியிருக்கு.. அருவாளை எடுத்துட்டு ஓடி வா...

  ஹி..ஹி..
  ( நான் சொல்லும் ஹி..ஹி வேற.. நடுவுல ரெண்டு புல்ளி வெச்சிருக்கேன்..)

 9. வில்லங்கமான ஆளுகையா உஙக குருப்பூ:)

 10. Jabar says:

  நண்பா... சூப்பர்... இப்புடிதான நம்ம பொழப்பே ஓடுது... எல்லா உடன்பிறப்பும் எல்லாத்தையும் மூடிக்கிங்க... அடுத்த தேர்தல் வரைக்கும்...

 11. ஹி......ஹி...

  யோவ் பட்டா, முதல் பதிலில் புள்ளியே இல்லை வெறும் ஹிஹி மட்டுமே, இரண்டாவது பதிலில் ஒரு புள்ளி ஹி.ஹி.., மூணாவதில் மட்டும் ரெண்டு புள்ளி.

  நான் எத்தனை புள்ளி வைத்துள்ளேன்?

  அத்தனை பாட்டில் சரக்கு வந்தாகனும்!

 12. சவுக்குல அடிச்சுட்டீங்க போங்க .........

 13. Anonymous says:

  என் கழக உடன்பிறப்பே ..,ஜாபர் ..,போன பதிவில் இந்த வெளியூர்காரனை பத்தி அறியாமல் உணர்ச்சி மேலோங்க பின்னூட்டி விட்டாயே ...,ஹா ஹா ஹா ஹா...,தக்காளி வெளியூர்கரான !! கொக்கா !!! ilove you machi

 14. Anonymous says:

  இத லக்கி லுக் அண்ணன் பஸ் ல விளம்பரம் செய்வாரா !! PATTAPATTI ..,

 15. //இவ்ளோ தப்ப பண்ணிட்டு வந்து வோட்டு கேட்ருக்கோம்..அசராம வோட்ட போட்ட பார்த்தியா நீ..!
  என் செல்லமே..!
  உன்ன நம்பி எத்தன ஆயிரம் கோடி வேணாலும் ஊழல் பண்ணலாம்டா என் திராவிட சிங்கமே..!
  மறுபடியும் ஊழல பண்ணிட்டு திரும்பவும் வந்து உங்ககிட்ட கூச்சமே இல்லாம வோட்டு கேக்கலாம்...!
  நீயும் போடுவ..! உனக்குத்தான் மூளைங்கறதே கொஞ்சம் கூட கெடயாதே என் அறிவுகெட்ட திராவிட கொழுந்தே....!
  அசராமல் சென்று வா என் சிங்கமே...! நாளை நமதே...!//  எவ்ளோ அடிச்சாலும் தாங்கறான், இவன் ரொம்ப நல்லவ....................ன்னு சொல்றாரு போல!

 16. //இவ்ளோ நாள் கலைஞர் என்ற ஒரு தனிமனிதருக்காக, திமுகவின் எல்லா கயவாளிதனதையும் மறைத்து எல்லோரிடமும் வோட்டு கேட்ட பாவத்தை இந்த பதிவின் மூலம் போக்கிய மன திருப்தியுடன்.,
  வெளியூர்க்காரன்
  //

  யோவ், வெளியூரு, உன் பாவத்தை பதிவு போட்டு போக்கிகிட்ட, சரி!
  ஆனா, நீ சொன்னத நம்பி வோட்டு போட்ட மக்களுக்கு என்னய்யா விமோசனம்?
  (அது சரி, நீ சொன்னதையும் நம்பறதுக்கு ஜனங்க அவ்ளோ தெளிவாவா இருக்காங்க?)

 17. //இனி அஞ்சு வருஷம் கழிச்சு மறுபடியும் மீட் பண்ணுவோம் மக்களே..! //

  நடுவுல 2014-ல நாடாளுமன்றத் தேர்தல் ஒண்ணு இருக்கே, அப்ப வந்தாகனுமில்ல?

 18. பெயர் சொல்ல விருப்பமில்லை has left a new comment on your post "மூளைகெட்ட உடன்பிறப்பே...!":


  //இனி அஞ்சு வருஷம் கழிச்சு மறுபடியும் மீட் பண்ணுவோம் மக்களே..! //

  நடுவுல 2014-ல நாடாளுமன்றத் தேர்தல் ஒண்ணு இருக்கே, அப்ப வந்தாகனுமில்ல?
  **********************************************************************
  யோவ் 2014 எலெக்ஷனை தான் ஏற்கெனெவே வாங்கிட்டானுகள்ல...சும்மா சும்மா ஓட்டு போட்டுட்டே இருப்பியா!

  தம்பி...2021 வரைக்கும் புக் பண்ணியாச்சு!கெளம்பு கெளம்பு ....காத்து...உஷ்.,...யப்பா...!

 19. அப்பாடி இதுக்குதான் நான் கண்ணு முழிச்சு காத்துகிட்டு இருந்தேன் வெளியூரு . .

  இரு ஓட்டு போட்டுட்டு வரேன் . . .

 20. இன்டலி ல ஓட்டு போட்டுட்டேன் வெளியூரு . . . ஹி ஹி ஹி

 21. //// @ karthikkumar said...

  @ வெளியூர் ... போன போஸ்ட்ல நீங்க ரொம்ப பொறுப்பா எல்லோர் கமென்சுக்கும் ரிப்ளை கொடுக்கும்போதே எதோ டீலிங் ராங்கா போகுதேன்னு நெனச்சேன்... என்னடா யாராவது சிக்குனா கும்மியடிச்சு கொலை பண்ற ஆளு இப்போ பொறுப்பா கமென்ட் போட்ராறேன்னு பார்த்தேன்....ஹா ஹா... இப்போ தெரிஞ்சிபோச்சு....:)) ////

  very late . . .

  வெளியூர்காரனோட இத்தனை பதிவுகள படிச்சுட்டு வந்துட்டு இன்னுமா வெளியூரா? நம்புரிங்க?
  ஹி ஹி . . .
  வெளியூரு என்னைக்குயா ஒருதர புகழ்ந்துகாரு?
  இந்த புகழ்ச்சிக்கு வேற பேரு இருக்கு , அதுக்கு நான் தனிய பதிவு போடா போறேன் . . ஹி ஹி ஹி . . .

 22. @@Rettaival's said...///
  பெயர் சொல்ல விருப்பமில்லை////
  நடுவுல 2014-ல நாடாளுமன்றத் தேர்தல் ஒண்ணு இருக்கே, அப்ப வந்தாகனுமில்ல?
  **********************************************************************
  யோவ் சும்மா சும்மா ஓட்டு போட்டுட்டே இருப்பியா! ////

  அதான..விட்டா இந்த சப்ஜெக்டு பீசு வாரம் வாரம் எலெக்சன் பூத்துக்கு போய் வோட்டு போட நிக்கும் போலவே...? :)

  மறுபடியும் ஆட்சிக்கு வந்தோன்ன மொதொள்ள ஒரு சட்டத்த கொண்டு வரணும்...! திமுககாரனுக்கு மட்டும் வாக்குரிமை இருக்கற மாதிரி..!

 23. @@@பெயர் சொல்ல விருப்பமில்லை///
  அது சரி, நீ சொன்னதையும் நம்பறதுக்கு ஜனங்க அவ்ளோ தெளிவாவா இருக்காங்க?.////

  வேலை வெட்டிய விட்டுட்டு நான் எழுதுனத நீ இப்போ உக்காந்து படிக்கல..! அந்த மாதிரிதான் மச்சி..! குஷ்பு கம்மொகட்டைக்கும் வடிவேலு தமாஸ் பண்றதுக்குமே வோட்டு போடற மக்கள்யா நம்ம ஆளுக...! எவன் எத சொன்னாலும் நம்புவாங்கே...! அவேங்கள ரொம்பநாளா அப்டிதான் பழக்கி வெச்சிருக்கோம்...! :)

 24. @@@jaisankar jaganathan said...
  சொரனை இவனுக்கு இப்போ தான் வருது... :)
  //இப்பவாவது வந்ததே..///

  எனக்கு சொரணை வந்துடுச்சுன்னு நான் எப்பையா சொன்னேன்..! கலைஞர் அத செஞ்சார் இத செஞ்சார் அதனால வோட்ட போடுங்கன்னு சொம்படிக்கறான் பாரு...அவனுக்குதான் சொரணை வந்து திருந்தனும்.அவன்தான் அல்லக்கை...நான் தலைவர் கலைஞர்க்காக மக்களை ஏமாத்தி வோட்ட வாங்கற அரசியல்வாதியா...! எனக்கு நான் என்ன செய்றேன்னு தெரியும்..! என் கட்ச்சி பிராடு கட்சின்னும் தெரியும் .. மக்களை ஏமாத்திட்டு வோட்ட வாங்கிட்டு போய்கிட்டே இருப்பேன்..! வெல்க திமுக ..வாழ்க கலைஞர்..! :)

 25. @@@Jabar said...
  நண்பா... சூப்பர்... இப்புடிதான நம்ம பொழப்பே ஓடுது... எல்லா உடன்பிறப்பும் எல்லாத்தையும் மூடிக்கிங்க... அடுத்த தேர்தல் வரைக்கும்...///


  உடன்பிறப்பே.. நான் அரசியல்ல எந்த கருமத்த எழுதுனாலும் வந்து கூச்சம் நாச்சம் இல்லாம சொம்படிக்கற பார்த்தியா...! நீர் வாழ்க..உம் கொற்றம் வாழ்க..! நீ ஏமாளி இல்லயா...! பக்கா திமுககாரன்...! நீ வாடா செல்லம்..! தி மு க எலெக்சன் ரிசல்ட்ல ஜெயக்கிற அன்னிக்கு நாம ரெண்டு பேர் மட்டும்தான்யா கொண்டாடறோம்..!:)

 26. @@@பனங்காட்டு நரி said...
  தக்காளி வெளியூர்கரான !! கொக்கா !!! ilove you machi..//


  முன்னாடி ஊர்ல உள்ள பொம்பள புள்ளைக எல்லாம் இந்த கருமத்த சொல்லிக்கிட்டு திரிஞ்சாலுக..! ஐ லவ் யு..ஐ லவ் யு ன்னு...! இப்ப நீனுமா...!

  (சமீரா ரெட்டி சாமி...இந்த கமெண்ட்ட என் பொண்டாட்டி படிச்சிராம இருக்கணும்..!) :)

 27. @@@ ♔ℜockzs ℜajesℌ♔™ said...
  ஹி ஹி . . .
  வெளியூரு என்னைக்குயா ஒருதர புகழ்ந்துகாரு?.///

  யோவ் பட்டாப்பட்டி..வட்டமா பல்பு வாங்குனத எப்புடி சமாளிக்கறான் பாரு இவன்..! :)

 28. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

 29. @Raja=Theking said...//
  இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

  தலைவர் கலைஞர் தமிழ் புத்தாண்டை தை ஒன்றாம் தேதிக்கு மாற்றிய காரணத்தால் தங்களின் தமிழ் வாழ்த்தை முழுதும் ருசிக்க முடியாத அபாக்ய சூழ்நிலையில் நான்..!

  எனினும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் உளப்பூர்வமான தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..! :)

 30. யோவ் பட்டாப்பட்டி..வட்டமா பல்பு வாங்குனத எப்புடி சமாளிக்கறான் பாரு இவன்..! :)
  //

  இதை கன்னாபின்னானு கண்டித்து.. நான் தங்கபாலுகூடவே பரதேசம் போகப்போறேன்.

  :-)

 31. தலைவர் கலைஞர் தமிழ் புத்தாண்டை தை ஒன்றாம் தேதிக்கு மாற்றிய காரணத்தால் தங்களின் தமிழ் வாழ்த்தை முழுதும் ருசிக்க முடியாத அபாக்ய சூழ்நிலையில் நான்..!
  //

  தலீவரு ரெண்டு மெயிண்டெயின் பண்றாரு.... நீ ஒன்னுதானே


  யோவ்.. நீ செருப்படி வாங்குவதை ...பார்க்கனுமுனு.. ஆசை ஆசையா இருக்குயா..
  :-)

 32. @@@பட்டாபட்டி.... said...
  யோவ்.. நீ செருப்படி வாங்குவதை .பார்க்கனுமுனு.. ஆசை ஆசையா இருக்குயா..:-) ////

  மானம் ரோசம் உள்ளவந்தான்யா செருப்படிய கண்டு அஞ்சுவான்...! நாங்கல்லாம் நடு வாய்ல செருப்பால அடி வாங்கிகிட்டே, முரட்டுத்தனமா மாதுளம்பழம் சூசு குடிப்போம்..! எடைல சூசுல சக்கர கம்மியா இருக்குன்னு கோச்சுக்க வேற செய்வோம்..! செருப்படி எல்லாம் ஒரு சப்ஜெக்டே இல்ல ப்ரதர்..! நீங்க செருப்படி வாங்கனும்னு ஆசபட்றது ஒரு குண்டாந்தடியன...! :)

 33. தி மு க எலெக்சன் ரிசல்ட்ல ஜெயக்கிற அன்னிக்கு நாம ரெண்டு பேர் மட்டும்தான்யா கொண்டாடறோம்..!:)
  **********************************************************************

  ரொம்ப இளிக்காத மச்சி...ஒரு ரூவா அரிசி ஓட்டுப் போட்டவனுங்க...ஆட்டுக்கும் மாட்டுக்கும் ஓட்டுப் போட மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்?

  ஆனா என் அபார்ட்மென்ட்ல ஆடு மாடை கட்ட விட மாட்டானுங்களே...அதான் இப்போ ஒரே கவலை!

 34. ஆனா என் அபார்ட்மென்ட்ல ஆடு மாடை கட்ட விட மாட்டானுங்களே...அதான் இப்போ ஒரே கவலை!
  //

  இப்ப இருக்கும் பிரச்சனையில ஆடு கட்ட இடம் இல்லேனு பொலம்புறீயே..

  அதான் 2 ஏக்கரு நிலம் தலீவரு கொடுத்திருக்காரே.!! அங்க கட்டு மச்சி...

 35. Blogger பட்டாபட்டி.... said...

  ஆனா என் அபார்ட்மென்ட்ல ஆடு மாடை கட்ட விட மாட்டானுங்களே...அதான் இப்போ ஒரே கவலை!
  //

  எவன் வந்தாலும் கஞ்சி ஊத்தப்போறதில்லை..

  எப்படியும் கட்சிக்காரனுக.. ப்ழைய பேப்பர் வாங்குற தொழிலுக்கு வரப்போறானுக.. 10 % தள்ளுபடி பன்ணி வித்துப்புடுவோம்.. ஹி..ஹி

  ( ங்கொய்யாலே ஸ்மைலி போட்டு முடிக்கலேனே.. காண்டு ஆகி... வெட்டுனாலும் வெட்டுவானுக..எதுக்கு வம்பு)

 36. அன்னிக்கே சொன்னேன்யா...ராஜ் டி.வி ல ஒரு பீசு வருமே..இந்திய ஜனநாயக கட்சிக்கு ஓட்டுப் போட்டு நாட்டை முன்னேத்துவோம்னு...எவன் கேட்டான்?

 37. கருணாநிதி எத பேசுனாலும் மெய்சிலிர்க்கும் அரசாங்க ஊழியனியன் மகன்கள் திருந்தும் நாள் .... தமிழனின் பொன்னாள். நாலறிவு ஜென்மங்கள் எப்போது திருந்தும் ?