- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 27 comments and to comment
வைகோ இல்லாத தேர்தல் பிரசாரம் சைட் டிஷ் இல்லாத சரக்கு பார்ட்டி மாதிரி சப்புன்னு முடிஞ்சிருச்சு.. ஆயிரம் சொல்லு வாத்யாரே...வைகோ இருந்தா ஒரு கெத்துதான்யா..மனுசன இந்த சண்டாள சிறுக்கி என்ன நிலைமைக்கு ஆக்கிபுட்டா. சரி அத விடுங்க..நாம மேட்டருக்கு வருவோம்...! அந்த பொம்பளைய பத்திதான் எல்லாருக்கும் தெரியுமே...!

நாளைக்கு எலெக்சன்..யாருக்கு வோட்டு போட போறீங்கன்னு மொக்கதனமா கருத்து கணிப்பெல்லாம் கேக்கமாட்டேன்..நீ எந்த நாய்க்கு வேணா போடு..ஆனா, நான் உதயசூரியனுக்குதான் போடபோறேன்....!


நீயும் ஒரு நிமிஷம் யோசிச்சு பாரு..குஷ்பு புது ஜாக்கெட் போட்டுக்கிட்டு வந்து சொன்னுச்சு...வண்டுமுருகன் வடிவேலு விஜயகாந்தா நல்லா தமாசா கலாசுனாப்லையா..இதுகெல்லாம் வோட்டு போடாத...யாரு ஆட்சிக்கு வந்தா தமிழ்நாட்ல வளர்ச்சி நல்லாருக்கும்..உடனே கலைஞர் குடும்பத்தோட வளர்ச்சியான்னு பேக்காளிதனமா கேக்காத...எவன்யா குடும்ப அரசியல் பண்ணல..பார்லிமெண்ட்ல கலாவதி கலாவதிங்கற வார்த்தைய தவிர அடுத்த வார்த்தைய குளறாம பேச தெரியாத ராகுல் காந்திய ஏன் தேசிய தலைவரா காங்கிரஸ் கட்சி ஏத்துகிச்சு..சோனியா காந்தி என்ன உப்பு சத்யாகிரகத்துல   உள்ள போனவங்களா...?  ராஜீவ் காந்தி மவனும் பொண்டாட்டியும்கரத தவிர வேற என்ன தகுதி இருக்கு இவங்ககிட்ட...?


ஏன் சென்டருக்கு போற...ஸ்டேட்டுக்கு வா..ஜி கே வாசன் யாரு...? மூப்பனார் மவன்தான..? ராமதாஸ் தான் மவன மாடு மேய்க்கவா அனுப்புனாரு...? மினிஸ்டராதான ஆக்குனாரு..? அவ்ளோ தூரம் ஏன் போற..? ஜெயலலிதா யாரு...? எம்ஜிஆரோட ..சரி அத விடு..,விஜயகாந்த் மட்டும்தான் தனி ஆளா இருக்காருன்னு நெனைக்காத மச்சி..இருக்கற டேஞ்சர்லையே பெரிய டேஞ்சர் இவன்தான்..பிரேமலாதா அக்காவும் சுதீஷ் அத்தானும் தமிழ்நாட்ல ஆட்டம் போடறப்ப புரிஞ்சுபீங்க..வெளியூர்காரன் சொன்னது எவ்ளோ உண்மைன்னு..!


இங்க எல்லா பயலும் நாதாரிங்கதான்..எவனும் நல்லவன் கெடயாது...உனக்கு நல்லவனுக்கு வோட்டு போட சாயிசும் கெடயாது..இருக்குற மொள்ளமாரில ஒரு முடிச்சவிக்குக்கு நீ வோட்ட போடணும்..ஏய் இரு.. ஷாக் ஆவாத மச்சி..மேல படி..!


நான் என்ன சொல்றேன்..இன்னொரு தடவ ஜெயலலிதாவுக்கு வாய்ப்பு குடுத்தா அந்த அம்மா கலைஞர் க்ரூப்ப ஒளிச்சு கட்றதுக்கு ஒரு வருசத்த வேஸ்ட் பண்ணும்..அடுத்த வருஷம் அரசு கடுமையான நிதி நெருக்கடில இருக்கு.. முந்தைய திமுக ஆட்சிதான் இதுக்கு காரணம்னு சொல்லி இருக்கற நலத்திட்டங்கள் எல்லாத்தையும் புடுங்கிரும்..மூணாவது வருசத்துலேர்ந்து இவ்ளோ நாள் காய்ஞ்சதுக்கும் சேர்த்து சம்பாரிக்க ஆரம்பிச்சிரும்..அதுக்குள்ள அடுத்த வருஷம் வந்துரும் மறுபடியும் பழைய குருடி கதவ தொரடிதான்...!

விஜயகாந்த் அண்ணனுக்கு வாய்ப்பு குடுத்தா..அண்ணேன் இப்பதான் அரசியலுக்கு வந்துருக்காப்ள..நெறைய செலவு பண்ணிருக்காப்ள..அதெல்லாம் சேர்த்து சம்பாரிக்கனும்...அவரு கட்சிகாரங்கல்லாம் இனிமேதான் சம்பாரிக்கனும்..அவரு மச்சான் பொண்டாட்டி எல்லாரும் சம்பாரிக்கனும்..தவிர நாப்பது சீட்ட வெச்சுக்கிட்டு இவங்களால பெருசா ஒன்னும் நாக்க வழிச்சிற  முடியாது..ஏப்ரல் பதினாலாம் தேதி இவனுகள அம்மா செருப்பால அடிச்சு வெளில வெரட்டிரும்..அப்பறம் எங்கேந்து ஆட்சில பங்கு வகிக்கறது...இவனுக ஜெய்ச்சாலும் வேஸ்டுதான் ..அதனால இவனுகளுக்கு வோட்ட போட்டு உன் வோட்ட வேஸ்ட் பண்ணாத..!


தி மு க வ பொறுத்த வரைக்கும் வார்டு கவுன்சில்லர்லேர்ந்து மத்திய மந்திரி வரைக்கும் எல்லாரும் சம்பாரிசிட்டாணுக...சம்பாரிச்சதோட மட்டும் இல்ல..எதோ டைம் கெடைக்கறப்ப மக்களுக்கு ஒன்னு ரெண்டு நல்லதும் பண்ணிருக்காணுக... இந்த ஆட்சிலதான் தங்கம் மாதிரி ரோடு போட்ருகாணுக..ஒரு ரூபாய்க்கு அரிசி போட்டு தமிழ்நாட்லேர்ந்து பசிய ஒழிச்சிட்டாணுக.போன தேர்தல் அறிக்கைல சொல்லிருகர பெரும்பான்மையான வாக்குறுதிகள நிறைவேத்திருக்காங்க....!

அது மட்டும் இல்லாம  அடுத்த முதலமைச்சரா ஆகறதுக்கு திரு.ஸ்டாலின் அவர்களுக்கு எல்லா தகுதியும் இருக்கு...திரு.ஸ்டாலின் என்கிற ஒரு அரசியல் தலைவர் மேல ஜெயலலிதாவுக்கு கூட நல்ல மரியாதை இருக்குங்கறது எல்லாருக்குமே தெரியும்...துக்ளக் சோ வுக்கு புடிச்ச அரசியல்வாதி எனக்கு தெரிஞ்சு திரு.ஸ்டாலின் மட்டும்தான்..!


அதனால குஷ்பு வடிவேலு இவங்கலஎல்லாம் லெப்ட்ல விடு..கூத்தாடிங்க சொல்லி நாம் வோட்டு போடற அளவுக்கு நாம இன்னும் முட்டாள் ஆகல..உனக்கு எது கரெக்டுன்னு தோணுதோ அவங்களுக்கு வோட்டு போடு..!

என்னை கேட்டேன்னா  யோசிக்காம திமுகவுக்கு வோட்டு போட்ருனுதான் சொல்லுவேன்..!


ஏன்னா, யோசிச்சீனா உன்னால எவனுக்குமே வோட்டு போட முடியாது..!


ஆகையினால்        "வாக்களிப்பீர் உதயசூரியனுக்கே.."(காங்கிரஸ் நிக்கற தொகுதில காங்கிரசுக்கு வோட்டு போடறதும் போடாததும் உன் இஷ்டம்...)


வெளியூர்க்காரன். 

27 Responses so far.

 1. வந்தேன் வாக்களித்து சென்றேன்

  கேட்கக்கூடாத கேள்விகள்... ஏடாகூடமான பதில்கள் பாகம்-1

  http://speedsays.blogspot.com/2011/04/1.html

 2. @@@Speed Master says:
  வந்தேன் வாக்களித்து சென்றேன்.///

  போ...அப்டியே போய் தண்ணி லாரில விழுந்து செத்துப் போயிரு..!

 3. எல்லாவகையிலும் என் எண்ண ஓட்டங்களை நீங்களும் பிரதிபலிப்பதில் மகிழ்ச்சி.
  உதய சூரியனுக்கு ஒட்டு போடுவது ,இதுதான் இப்போது புத்திசாலிகள் செய்யும் ஒரு செயலாக இருக்க முடியும்.

 4. @@@கக்கு - மாணிக்கம்
  எல்லாவகையிலும் என் எண்ண ஓட்டங்களை நீங்களும் பிரதிபலிப்பதில் மகிழ்ச்சி.
  உதய சூரியனுக்கு ஒட்டு போடுவது ,இதுதான் இப்போது புத்திசாலிகள் செய்யும் ஒரு செயலாக இருக்க முடியும்.///


  தங்கள் வார்த்தைகளில் சாதுர்யம் மிளிர கண்டேன் உடன்பிறப்பே..! :)
  தங்கள் என்ன ஓட்டங்களை பிரதிபலித்ததில் எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சி... வெற்றி நமதே...! :)

 5. உன்னோட நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு மச்சி.


  சிலவிசயங்களில் உன்னை கன்னாபின்னானு ஆதரிக்கிறேன்.

 6. 1. காங்கிரஸ்காரனுக்கு ஆப்படினு சொன்னது

  :-)

 7. 2. ஸ்டாலின் நல்லவரு.. அவரு மூஞ்சிக்கு ஓட்டுப்போடுனு சொன்னபாரு...அதுக்கும் என் ஆதரவு

  (என்ன... உங்க தலீவரு..ஸ்டாலிந்தான் அடுத்த முதல்வர்னு சொல்லியிருந்தா.. சூப்பரா இருந்திருக்கும்..)

 8. ஈழப்பிரச்சனையில் பெரியவரு பண்ணியது மட்டும் ஒத்துக்கொள்ளமுடியவில்லை..

 9. மின்சாரப்பிரச்சனைக்கு காரணம் எதிர்கட்சீனு சொல்லி.. எங்க காதுல பூ சுத்தாம.. எதார்தமா பதிவு எழுதியதற்க்கு.. என் பாராட்டுக்கள்..

  ஆனா. பதிவுலகில் உள்ள உடம்பிறப்புகள்.. அவனுக அறிவாளினு நினச்சு..ஒளரிக்கொட்டி.... வரும் ஓட்டையும் விலக்கப்பார்க்குறானுகளே..
  அவங்க மட்டும் மூடிக்கிட்டு இருந்தா.. இன்னும் ஆதரவு கூடும்...

 10. ஜெயா வந்தாலும் ஒன்ணும் புடுங்கப்போவது இல்லை.. அதுவும் நிதர்சனமான உண்மை..

  பெரியவரு மட்டும் இன்னக்கு நைட்டு அறிக்கை விடட்டும்..
  இனிமேல ஸ்டாலின்தான் முதல்வர்னு.. கண்டிப்பா ஓட்டு மாறும்...

 11. AnyWay.. உண்மைய சொல்லி..நெஞ்ச நிமிர்த்தி நிற்பதற்க்கு என் வாழ்த்துக்கள்..

  அதுக்காவே உனக்கு + ஓட்டு போடறான் இந்த பட்டாபட்டி...

 12. நீ அடிச்சு ஆடு மாமே..

 13. @@பட்டாபட்டி.... says:
  AnyWay.. உண்மைய சொல்லி..நெஞ்ச நிமிர்த்தி நிற்பதற்க்கு என் வாழ்த்துக்கள்..//


  அன்பு உடன்பிறப்பே..ஆதரவு நல்கியமைக்கு நன்றி..! தங்களின் சிந்தனை ஓட்டங்கள் வாக்குகளாக மாறட்டும்..! அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கலங்கி போகட்டும்...! தேமுதிக காணாமல் போகட்டும்...! திராவிட முன்னேற்ற கழகத்தின் சாதனைகள் சரித்திரமாக மாறும்..!

  ( உஸ்ஸ்..அப்பா...டேய் ரெட்டை..முடியலடா டேய்..! ) :)

 14. Jabar says:

  நிச்சயம் தி மு க வெல்லும்.... யோசிக்காம உதய சூரியனுக்கே என் வாக்கு..

 15. யோவ்.. வென்று.. தமிழ்மணத்தில பதிவை இணய்யா .. இங்க ஓட்டுப்போட்டுத்தானே நாளக்கு அங்கே ஓட்டு போடுவாங்க..

 16. @@@Jabar says:
  நிச்சயம் தி மு க வெல்லும்.... யோசிக்காம உதய சூரியனுக்கே என் வாக்கு..//

  உன் வார்த்தை கண்டு மெய்சிலிர்த்தேன் உடன்பிறப்பே...!

  வீழ்வது யாராக இருந்தாலும், வாழ்வது நாமா இருக்கட்டும்...! திமுக வெற்றி பெறுவது சத்தியம்...!:)

 17. @@@பட்டாபட்டி.... says:

  உண்மைய சொல்லி..நெஞ்ச நிமிர்த்தி நிற்பதற்க்கு என் வாழ்த்துக்கள்..

  உனக்கு + ஓட்டு போடறான் இந்த பட்டாபட்டி...! ///


  அன்பு உடன்பிறப்பு பட்டாபட்டியின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி கோட்டை அசுரவேகத்தில் நெருங்குகிறது திராவிட முன்னேற்ற கழகம்...!

  அன்பு கழக கண்மணிகளே...! வாரீர்...வந்து ஆதரவு தாரீர்..! வெற்றி நமதே...! :)

 18. Anonymous says:

  என் கருத்து இது தான் என்று அப்பட்டமாக சொல்லியதற்கு பாராட்டுக்கள்.

 19. @@@@கொக்கரகோ... said...
  என் கருத்து இது தான் என்று அப்பட்டமாக சொல்லியதற்கு பாராட்டுக்கள்.///

  கொக்கரகோ...கொக்கரகோ....! :)

 20. வாரிசு அரசியலை பத்தி விலாவரியா சொல்லிட்டீங்க நண்பரே....நச் பதிவு

 21. @@ரஹீம் கஸாலி said...
  வாரிசு அரசியலை பத்தி விலாவரியா சொல்லிட்டீங்க நண்பரே....நச் பதிவு//

  நன்றி உடன்பிறப்பே.. உங்கள் பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் பதித்து திமுகவை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுகொள்கிறேன்...!:)

 22. எல்லாமே நல்ல பாயிண்ட் தான்.

  ஆனால்...இந்த முறை திமுகவுக்கு என் ஓட்டு இல்லை.

  கடந்தமுறை,பிக்பாக்கெட்னு நெனைச்சு தான் திமுக வுக்கு ஓட்டு போட்டேன்..ஆனால் கொள்ளைக்காரனா ப்ரமோட் ஆனாங்க...கொலைகாரனா ப்ரமோட் ஆகி எல்லாரையும் போட்டு தள்ளுற கும்பல்....

  இப்போதைக்கு திமுகவை எதிர்த்து குதிரை கழுதை நின்றால் கூட என் ஓட்டு அந்த பிராணிகளுக்குத் தான்...திமுகவுக்கு இல்ல....அவ்ளோ கோவம் : )

 23. @@@ கபிலன் said...
  இப்போதைக்கு திமுகவை எதிர்த்து குதிரை கழுதை நின்றால் கூட என் ஓட்டு அந்த பிராணிகளுக்குத் தான்...திமுகவுக்கு இல்ல....அவ்ளோ கோவம் : ) //


  தம்பி அப்டியே ஜகா வாங்கிக்க...கெளம்பு கெளம்பு..இந்த நொன்னை பேச்சையெல்லாம் இங்க வந்து பேச கூடாது..! காலைலேர்ந்து ஒருத்தன் சோறு தண்ணி இல்லாம வோட்டு கேட்டுகிட்டு இருக்கேன்...குறுக்க வந்து கம்முயுனிசம் பேசிகிட்டு..! கெளம்பு ராஜா..! இனிமே உன்ன நான் இந்த ஏரியால பார்க்க கூடாது...! :)

 24. sammil says:

  அய்யகோ, போன மாசம் எல்லாம் எங்கே போயி தொலைந்தீர் .. இந்த அ.தி.மு.க சொம்பு தூக்கி பிளாக்கர்கள் செய்யும் கொடுமை,, அய்யகோ அதிலும் நம்ம நல்ல நேரம் வழிப்பறி ஜோதிட பேர்வழி சதீஷ் குமாரின் கொடுமையை கண்டு மனம் கொதித்தேன்.. எங்கே நமக்கு ஒரு திருவாருர்காரன் வர மாட்டானா என்று மனம் வெதும்பினேன்.. உம் கருத்துக்களை பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டுமைய்யா. கொஞ்சம் முன்னாடியே இதை சொல்லி இருந்தால் வைகை புயலிடம் அச்சடித்து கொடுத்து ஊருக்கெல்லாம் கொடுத்டுருக்கலாமே. வட போச்சே

 25. @@@sammil said...
  எங்கே நமக்கு ஒரு திருவாருர்காரன் வர மாட்டானா என்று மனம் வெதும்பினேன்.. உம் கருத்துக்களை பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டுமைய்யா.///

  வந்துவிட்டேனடா என் செல்வமே...! அதிமுகவினரின் வால் தன் வாழ்நாளின் இறுதிகனங்களில் துடிக்கிறது பாவம்..நீ மனம் வருந்தாதே...அது நாளை இந்நேரம் அடங்கி விடும்...!

  தமிழின தலைவன் கலைஞர் மு கருணாநிதி முதலைமச்சராக பதவியேற்கும் கோலாகல விழாவை நீ கூடிய விரைவில் காண்பாய்..! :)

  சந்தோசமாக செல்லடா என் திராவிட சிங்கமே...!

 26. உலகத்திலேயே பெரிய காமெடி எது தெரியுமா...ஈழத் தமிழருக்கு காங்கிரஸும் கருணாநிதி ஒண்ணும் செய்யலைன்னு ஜெயலலிதாக்கு ஓட்டுப் போடறது தான். எந்த மடையனாவது முதுகுப் பக்கம் அரிக்குதுன்னு சவுக்கெடுத்து தன்னை தானே விளாசிப்பானா?

  இப்போவாவது கருணாநிதியையும் சோனியாவையும் எதிர்த்து ஏதாவது எழுதுற ..பேசற சுதந்திரமாவது இருக்கு, அதிமுக ஆட்சிக்கு வந்துதுன்னா எல்லோரும் உள்ள போயிடுவீங்களேடா...அப்புரம் புழல் ல உக்காந்து பல்லாங்குழி விளையாடிட்டே அரசியல் பேச வேண்டியது தான்.(வைகோ- வாலிபால்).

  தமிழ் ஜனங்க என்னிக்கும் பயங்கர தெளிவா இருப்பானுங்க...தான் சோத்துக்கு பங்கம் வராத வரைக்கும் எவனுக்கும் எவனைப் பத்தியும் இங்க அக்கறை கிடையாது.

  உங்க பேச்சுக்கு காங்கிரஸ் தோத்துப் போகுதுன்னே வச்சுக்குவோம்...என்னா இப்போ...அவனுகளுக்கு இழக்கறதுக்கு ஒன்னுமே கிடையாது.உனக்கு ஒரு மாநிலம்..அவனுக்கு எத்தனை மாநிலம்...!ஆனா தற்செயலா ஜெயிச்சுட்டா யோசிச்சுப் பாரு...கூட்டணி ஆட்சி மாமே!67 ல விட்டதை கொல்லைப்புறம் இல்ல...ஓடு பிரிச்சு இறங்கி நடு கூடத்துல உக்காரும் கதை தான்,.,,சட்டசபை சத்தியமூர்த்தி பவன் ஆனா என்ன ஆகும்?!!!

  தமிழனைப் பொறுத்தவரைக்கும் அரிசி தான் ஜெயிக்கும்!அது 1967 ஆனாலும் சரி..2006 ஆனாலும் சரி 2051 ஆனாலும் சரி...! ரத்தம் சூடு இல்லாத ஜனக்கூட்டத்தை எவன் ஆண்டா என்ன?